சவுல் என்பவன்
இன்னுங் கர்த்தருடைய சீஷரைப்
பயமுறுத்திக் கொலைசெய்யும்படி சீறிப்
பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்; (அப்போஸ்தலர் 9:1)
savul enbavan innung karththarudaiya seesharaip bayamu’ruththik kolaiseyyumpadi see’rip pirathaana aasaariyaridaththi’rkup poay; (appoasthalar
9:1)
இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டுபிடித்தால், அவர்களைக்
கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள
ஜெபஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு
வாங்கினான். (அப்போஸ்தலர் 9:2)
intha maarkkaththaaraagiya purusharaiyaagilum sthireega'laiyaagilum thaan ka'ndupidiththaal, avarga'laik katti erusaleamukkuk ko'nduvarumpadi, thamaskuvilu'l'la jebaaalayangga'lukku nirubangga'laik keattu vaangginaan. (appoasthalar
9:2)
அவன் பிரயாணமாய்ப்
போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது,
சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச்
சுற்றிப் பிரகாசித்தது; (அப்போஸ்தலர்
9:3)
avan pirayaa'namaayp poay, thamaskuvukkuch sameebiththapoathu, sadithiyilea vaanaththilirunthu oru o'li avanaich sut’rip piragaasiththathu; (appoasthalar
9:3)
அவன் தரையிலே
விழுந்தான். அப்பொழுது: சவுலே,
சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற
ஒரு சத்தத்தைக் கேட்டான்.
(அப்போஸ்தலர் 9:4)
avan tharaiyilea
vizhunthaan. appozhuthu: savulea, savulea, nee ennai ean thunbappaduththugi’raay en’ru thannudanea
sollugi’ra oru saththaththaik keattaan. (appoasthalar 9:4)
அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான்.
அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில்
உதைக்கிறது உனக்குக் கடினமாம்
என்றார். (அப்போஸ்தலர் 9:5)
atha’rku avan: aa'ndavarea,
neer yaar, en’raan. atha’rkuk karththar:
nee thunbappaduththugi’ra iyeasu naanea; mu'l'lil
uthaikki’rathu unakkuk
kadinamaam en’raar. (appoasthalar 9:5)
அவன் நடுங்கித்
திகைத்து: ஆண்டவரே, நான் என்ன செய்யச்
சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக்
கர்த்தர்: நீ எழுந்து,
பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும்
என்றார். (அப்போஸ்தலர் 9:6)
avan nadunggith thigaiththu: aa'ndavarea,
naan enna seyyach siththamaayirukki’reer en’raan. atha’rkuk karththar:
nee ezhunthu, patta'naththukku'l'lea poa, nee seyyavea'ndiyathu anggea unakkuch sollappadum en’raar. (appoasthalar
9:6)
அவனுடனேகூடப் பிரயாணம்பண்ணின மனுஷர்கள்
சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங்
காணாமல் பிரமித்து நின்றார்கள்.
(அப்போஸ்தலர் 9:7)
avanudaneakoodap pirayaa'nampa'n'nina manusharga'l saththaththaik keattum oruvaraiyung
kaa'naamal piramiththu nin’raarga'l. (appoasthalar 9:7)
சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்தபோது
ஒருவரையுங் காணவில்லை. அப்பொழுது
கைலாகு கொடுத்து, அவனைத்
தமஸ்குவுக்குக் கூட்டிக்கொண்டுபோனார்கள். (அப்போஸ்தலர்
9:8)
savul tharaiyilirunthezhunthu, than ka'nga'laith thi’ranthapoathu oruvaraiyung kaa'navillai.
appozhuthu kailaagu koduththu, avanaith
thamaskuvukkuk koottikko'ndupoanaarga'l. (appoasthalar
9:8)
அவன் மூன்று
நாள் பார்வையில்லாதவனாய்ப் புசியாமலும்
குடியாமலும் இருந்தான். (அப்போஸ்தலர்
9:9)
avan moon’ru naa'l paarvaiyillaathavanaayp pusiyaamalum kudiyaamalum
irunthaan. (appoasthalar 9:9)
தமஸ்குவிலே அனனியா
என்னும் பேருள்ள ஒரு சீஷன் இருந்தான்.
அவனுக்குக் கர்த்தர் தரிசனமாகி:
அனனியாவே, என்றார். அவன்: ஆண்டவரே, இதோ, அடியேன் என்றான்.
(அப்போஸ்தலர் 9:10)
thamaskuvilea ananiyaa
ennum pearu'l'la oru seeshan irunthaan. avanukkuk
karththar tharisanamaagi: ananiyaavea,
en’raar.
avan: aa'ndavarea, ithoa,
adiyean en’raan. (appoasthalar 9:10)
அப்பொழுது கர்த்தர்:
நீ எழுந்து நேர்த்தெருவு
என்னப்பட்ட தெருவுக்குப்போய், யூதாவின்
வீட்டிலே தர்சுபட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள
ஒருவனைத் தேடு; அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்; (அப்போஸ்தலர்
9:11)
appozhuthu karththar:
nee ezhunthu nearththeruvu
ennappatta theruvukkuppoay, yoothaavin
veettilea
tharsupatta'naththaanaagiya savul ennum pearu'l'la
oruvanaith theadu; avan ippozhuthu jebampa'n'nugi’raan; (appoasthalar 9:11)
அனனியா என்னும்
பேருள்ள ஒரு மனுஷன்
தன்னிடத்தில் வரவும், தான் பார்வையடையும்படி தன்மேல்
கைவைக்கவும் தரிசனங்கண்டான் என்றார்.
(அப்போஸ்தலர் 9:12)
ananiyaa ennum pearu'l'la oru manushan thannidaththil varavum,
thaan paarvaiyadaiyumpadi thanmeal
kaivaikkavum tharisanangka'ndaan en’raar. (appoasthalar 9:12)
அதற்கு அனனியா:
ஆண்டவரே, இந்த மனுஷன்
எருசலேமிலுள்ள உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ
பொல்லாங்குகளைச் செய்தானென்று அவனைக்குறித்து அநேகரால்
கேள்விப்பட்டிருக்கிறேன். (அப்போஸ்தலர் 9:13)
atha’rku ananiyaa: aa'ndavarea,
intha manushan erusaleamilu'l'la ummudaiya
parisuththavaanga'lukku eththanaiyoa
pollaangguga'laich seythaanen’ru avanaikku’riththu aneagaraal kea'lvippattirukki’rean. (appoasthalar
9:13)
இங்கேயும் உம்முடைய
நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற யாவரையுங்
கட்டும்படி அவன் பிரதான
ஆசாரியர்களால் அதிகாரம் பெற்றிருக்கிறானே என்றான்.
(அப்போஸ்தலர் 9:14)
inggeayum ummudaiya naamaththaith
thozhuthuko'l'lugi’ra yaavaraiyung
kattumpadi avan pirathaana aasaariyarga'laal athigaaram pet’rirukki’raanea en’raan. (appoasthalar
9:14)
அதற்குக் கர்த்தர்:
நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல்
புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை
அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட
பாத்திரமாயிருக்கிறான். (அப்போஸ்தலர் 9:15)
atha’rkuk karththar: nee poa; avan pu’rajaathiga'lukkum raajaakka'lukkum israveal
puththirarukkum ennudaiya naamaththai
a’rivikki’ratha’rkaaga naan therinthuko'nda paaththiramaayirukki’raan. (appoasthalar
9:15)
அவன் என்னுடைய
நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன்
என்றார். (அப்போஸ்தலர் 9:16)
avan ennudaiya
naamaththinimiththam evva'lavaayp paadupadavea'ndumenbathai naan avanukkuk kaa'nbippean en’raar. (appoasthalar
9:16)
அப்பொழுது அனனியா
போய், வீட்டுக்குள் பிரவேசித்து,
அவன்மேல் கையை வைத்து:
சகோதரனாகிய சவுலே, நீ வந்தவழியிலே உனக்குத்
தரிசனமான இயேசுவாகிய கர்த்தர்,
நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான்.
(அப்போஸ்தலர் 9:17)
appozhuthu ananiyaa
poay, veettukku'l piraveasiththu, avanmeal
kaiyai vaiththu: sagoatharanaagiya savulea, nee vanthavazhiyilea unakkuth
tharisanamaana iyeasuvaagiya karththar, nee paarvaiyadaiyumpadikkum parisuththaaaviyinaalea nirappappadumpadikkum ennai anuppinaar en’raan. (appoasthalar
9:17)
உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதிள்கள் போன்றவைகள்
விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம்
பெற்றான். (அப்போஸ்தலர் 9:18)
udanea avan ka'nga'lilirunthu meen sethi'lga'l poan’ravaiga'l vizhunthathu.
avan paarvaiyadainthu, ezhunthirunthu, gnaanasnaanam
pet’raan.
(appoasthalar 9:18)
பின்பு அவன் போஜனம்பண்ணிப் பலப்பட்டான்.
சவுல் தமஸ்குவிலுள்ள சீஷருடனே
சிலநாள் இருந்து, (அப்போஸ்தலர்
9:19)
pinbu avan poajanampa'n'nip balappattaan. savul thamaskuvilu'l'la seesharudanea silanaa'l irunthu,
(appoasthalar 9:19)
தாமதமின்றி, கிறிஸ்து
தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே
பிரசங்கித்தான். (அப்போஸ்தலர் 9:20)
thaamathamin’ri, ki’risthu theavanudaiya kumaaranen’ru aalayangga'lilea pirasanggiththaan. (appoasthalar 9:20)
கேட்டவர்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: எருசலேமில்
இந்த நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவர்களை நாசமாக்கி,
இங்கேயும் அப்படிப்பட்டவர்களைக் கட்டிப்
பிரதான ஆசாரியர்களிடத்திற்குக் கொண்டுபோகும்படி வந்தவன்
இவனல்லவா என்றார்கள். (அப்போஸ்தலர்
9:21)
keattavarga'lellaarum aachchariyappattu: erusaleamil intha naamaththaith
thozhuthuko'l'lugi’ravarga'lai naasamaakki, inggeayum appadippattavarga'laik kattip pirathaana
aasaariyarga'lidaththi’rkuk ko'ndupoagumpadi vanthavan ivanallavaa
en’raarga'l. (appoasthalar
9:21)
சவுல் அதிகமாகத்
திடன்கொண்டு, இவரே கிறிஸ்துவென்று திருஷ்டாந்தப்படுத்தி, தமஸ்குவில்
குடியிருக்கிற யூதர்களைக் கலங்கப்பண்ணினான். (அப்போஸ்தலர்
9:22)
savul athigamaagath thidanko'ndu,
ivarea ki’risthuven’ru thirushdaanthappaduththi, thamaskuvil
kudiyirukki’ra yootharga'laik kalanggappa'n'ninaan. (appoasthalar
9:22)
அநேகநாள் சென்றபின்பு,
யூதர்கள் அவனைக் கொலைசெய்யும்படி ஆலோசனை
பண்ணினார்கள். (அப்போஸ்தலர் 9:23)
aneaganaa'l sen’rapinbu, yootharga'l avanaik kolaiseyyumpadi aaloasanai pa'n'ninaarga'l. (appoasthalar
9:23)
அவர்களுடைய யோசனை சவுலுக்குத் தெரியவந்தது.
அவனைக் கொலைசெய்யும்படி அவர்கள்
இரவும் பகலும் கோட்டைவாசல்களைக் காத்துக்கொண்டிருந்தார்கள். (அப்போஸ்தலர்
9:24)
avarga'ludaiya yoasanai savulukkuth theriyavanthathu. avanaik
kolaiseyyumpadi avarga'l iravum
pagalum
koattaivaasalga'laik kaaththukko'ndirunthaarga'l. (appoasthalar 9:24)
சீஷர்கள் இராத்திரியிலே
அவனைக் கூட்டிக்கொண்டுபோய், ஒரு கூடையிலே வைத்து,
மதில்வழியாய் இறக்கிவிட்டார்கள். (அப்போஸ்தலர்
9:25)
seesharga'l iraaththiriyilea avanaik
koottikko'ndupoay, oru koodaiyilea vaiththu,
mathilvazhiyaay i’rakkivittaarga'l. (appoasthalar 9:25)
சவுல் எருசலேமுக்கு
வந்து, சீஷருடனே சேர்ந்துகொள்ளப் பார்த்தான்;
அவர்கள் அவனைச் சீஷனென்று
நம்பாமல் எல்லாரும் அவனுக்குப்
பயந்திருந்தார்கள். (அப்போஸ்தலர் 9:26)
savul erusaleamukku vanthu, seesharudanea searnthuko'l'lap paarththaan;
avarga'l
avanaich
seeshanen’ru nambaamal ellaarum
avanukkup bayanthirunthaarga'l. (appoasthalar
9:26)
அப்பொழுது பர்னபா
என்பவன் அவனைச் சேர்த்துக்கொண்டு, அப்போஸ்தலரிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், வழியிலே
அவன் கர்த்தரைக் கண்ட விதத்தையும், அவர் அவனுடனே பேசினதையும்,
தமஸ்குவில் அவன் இயேசுவின்
நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்ததையும் அவர்களுக்கு
விவரித்துச் சொன்னான். (அப்போஸ்தலர்
9:27)
appozhuthu barnabaa enbavan avanaich searththukko'ndu,
appoasthalaridaththil azhaiththukko'ndupoay, vazhiyilea
avan karththaraik ka'nda
vithaththaiyum, avar avanudanea
peasinathaiyum, thamaskuvil
avan iyeasuvin naamaththinaalea thairiyamaayp
pirasanggiththathaiyum avarga'lukku vivariththuch sonnaan. (appoasthalar
9:27)
அதன்பின்பு அவன் எருசலேமிலே அவர்களிடத்தில் போக்கும்
வரத்துமாயிருந்து; (அப்போஸ்தலர் 9:28)
athanpinbu avan erusaleamilea avarga'lidaththil poakkum
varaththumaayirunthu; (appoasthalar 9:28)
கர்த்தராகிய இயேசுவின்
நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்து,
கிரேக்கருடனே பேசித் தர்க்கித்தான்; அவர்களோ
அவனைக் கொலைசெய்ய எத்தனம்பண்ணினார்கள். (அப்போஸ்தலர்
9:29)
karththaraagiya iyeasuvin naamaththinaalea thairiyamaayp
pirasanggiththu, kireakkarudanea peasith tharkkiththaan; avarga'loa avanaik
kolaiseyya eththanampa'n'ninaarga'l. (appoasthalar
9:29)
சகோதரர் அதை அறிந்து, அவனைச்
செசரியாவுக்கு அழைத்துக்கொண்டுபோய், தர்சுவுக்கு
அனுப்பிவிட்டார்கள். (அப்போஸ்தலர் 9:30)
sagoatharar athai a’rinthu, avanaich sesariyaavukku azhaiththukko'ndupoay, tharsuvukku anuppivittaarga'l. (appoasthalar 9:30)
அப்பொழுது யூதேயா
கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள்
சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற
பயத்தோடும், பரிசுத்தஆவியின் ஆறுதலோடும்
நடந்து பெருகின. (அப்போஸ்தலர்
9:31)
appozhuthu yootheayaa
kalileayaa samaariyaa naaduga'lilenggum sabaiga'l samaathaanam pet’ru, bakthiviruththiyadainthu, karththarukkup bayappadugi’ra bayaththoadum, parisuththaaaviyin aa’ruthaloadum nadanthu perugina. (appoasthalar
9:31)
பேதுரு போய் எல்லாரையும் சந்தித்துவருகையில், அவன் லித்தா ஊரிலே குடியிருக்கிற பரிசுத்தவான்களிடத்திற்கும் போனான்.
(அப்போஸ்தலர் 9:32)
peathuru poay ellaaraiyum santhiththuvarugaiyil, avan liththaa
oorilea kudiyirukki’ra parisuththavaanga'lidaththi’rkum poanaan. (appoasthalar
9:32)
அங்கே எட்டு வருஷமாய்க் கட்டிலின்மேல்
திமிர்வாதமுள்ளவனாய்க் கிடந்த ஐனேயா என்னும் பேருள்ள
ஒரு மனுஷனைக் கண்டான்.
(அப்போஸ்தலர் 9:33)
anggea ettu varushamaayk kattilinmeal thimirvaathamu'l'lavanaayk kidantha
aineayaa ennum pearu'l'la
oru manushanaik ka'ndaan.
(appoasthalar 9:33)
பேதுரு அவனைப்
பார்த்து: ஐனேயாவே, இயேசுகிறிஸ்து
உன்னைக் குணமாக்குகிறார்; நீ எழுந்து, உன் படுக்கையை நீயே போட்டுக்கொள் என்றான்.
உடனே அவன் எழுந்திருந்தான். (அப்போஸ்தலர்
9:34)
peathuru avanaip
paarththu: aineayaavea, iyeasuki’risthu unnaik ku'namaakkugi’raar; nee ezhunthu, un padukkaiyai neeyea
poattukko'l en’raan. udanea
avan ezhunthirunthaan. (appoasthalar
9:34)
லித்தாவிலும் சாரோனிலும்
குடியிருந்தவர்களெல்லாரும் அவனைக் கண்டு,
கர்த்தரிடத்தில் திரும்பினார்கள். (அப்போஸ்தலர்
9:35)
liththaavilum saaroanilum kudiyirunthavarga'lellaarum avanaik
ka'ndu, karththaridaththil thirumbinaarga'l. (appoasthalar 9:35)
யோப்பா பட்டணத்தில்
கிரேக்குப்பாஷையிலே தொற்காள் என்று அர்த்தங்கொள்ளும் தபீத்தாள்
என்னும் பேருடைய ஒரு சீஷி இருந்தாள்;
அவள் நற்கிரியைகளையும் தருமங்களையும்
மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தாள். (அப்போஸ்தலர்
9:36)
yoappaa patta'naththil kireakkupbaashaiyilea tho’rkaa'l en’ru arththangko'l'lum thabeeththaa'l ennum pearudaiya oru seeshi irunthaa'l; ava'l na’rkiriyaiga'laiyum tharumangga'laiyum miguthiyaaych seythuko'nduvanthaa'l.
(appoasthalar 9:36)
அந்நாட்களில் அவள் வியாதிப்பட்டு மரணமடைந்தாள்.
அவளைக் குளிப்பாட்டி, மேல்வீட்டிலே
கிடத்திவைத்தார்கள். (அப்போஸ்தலர் 9:37)
annaadka'lil ava'l viyaathippattu mara'namadainthaa'l. ava'laik
ku'lippaatti, mealveettilea kidaththivaiththaarga'l. (appoasthalar
9:37)
யோப்பா பட்டணம்
லித்தா ஊருக்குச் சமீபமானபடியினாலே, பேதுரு
அவ்விடத்தில் இருக்கிறானென்று சீஷர்கள்
கேள்விப்பட்டு, தாமதமில்லாமல் தங்களிடத்தில்
வரவேண்டுமென்று சொல்லும்படி இரண்டு
மனுஷரை அவனிடத்திற்கு அனுப்பினார்கள். (அப்போஸ்தலர்
9:38)
yoappaa patta'nam liththaa
oorukkuch
sameebamaanapadiyinaalea, peathuru
avvidaththil irukki’raanen’ru seesharga'l kea'lvippattu, thaamathamillaamal thangga'lidaththil varavea'ndumen’ru sollumpadi ira'ndu
manusharai avanidaththi’rku anuppinaarga'l. (appoasthalar 9:38)
பேதுரு எழுந்து,
அவர்களுடனே கூடப்போனான். அவன் போய்ச் சேர்ந்தபொழுது, அவர்கள்
அவனை மேல்வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனார்கள்.
அப்பொழுது விதவைகளெல்லாரும் அழுது,
தொற்காள் தங்களுடனேகூட இருக்கையில்
செய்திருந்த அங்கிகளையும் வஸ்திரங்களையும் காண்பித்து,
அவனைச் சூழ்ந்துநின்றார்கள். (அப்போஸ்தலர்
9:39)
peathuru ezhunthu,
avarga'ludanea koodappoanaan. avan poaych searnthapozhuthu,
avarga'l
avanai mealveettukku azhaiththukko'ndu poanaarga'l. appozhuthu
vithavaiga'lellaarum azhuthu,
tho’rkaa'l thangga'ludaneakooda irukkaiyil
seythiruntha anggiga'laiyum vasthirangga'laiyum kaa'nbiththu, avanaich soozhnthunin’raarga'l. (appoasthalar
9:39)
பேதுரு எல்லாரையும்
வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி,
பிரேதத்தின் புறமாய்த் திரும்பி:
தபீத்தாளே, எழுந்திரு என்றான்.
அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து,
பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள். (அப்போஸ்தலர்
9:40)
peathuru ellaaraiyum
ve'liyea poagachseythu, muzhanggaa’rpadiyittu jebampa'n'ni, pireathaththin pu’ramaayth thirumbi: thabeeththaa'lea, ezhunthiru
en’raan.
appozhuthu ava'l than ka'nga'laith thi’ranthu, peathuruvaip paarththu
udkaarnthaa'l. (appoasthalar 9:40)
அவன் அவளுக்குக்
கைகொடுத்து, அவளை எழுந்திருக்கப்பண்ணி, பரிசுத்தவான்களையும் விதவைகளையும்
அழைத்து, அவளை உயிருள்ளவளாக
அவர்களுக்கு முன் நிறுத்தினான்.
(அப்போஸ்தலர் 9:41)
avan ava'lukkuk
kaikoduththu, ava'lai ezhunthirukkappa'n'ni, parisuththavaanga'laiyum vithavaiga'laiyum azhaiththu, ava'lai
uyiru'l'lava'laaga avarga'lukku mun ni’ruththinaan. (appoasthalar 9:41)
இது யோப்பா
பட்டணம் எங்கும் தெரியவந்தது.
அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள். (அப்போஸ்தலர்
9:42)
ithu yoappaa
patta'nam
enggum
theriyavanthathu. appozhuthu aneagar karththaridaththil visuvaasamu'l'lavarga'laanaarga'l. (appoasthalar 9:42)
பின்பு அவன் யோப்பா பட்டணத்திலே
தோல் பதனிடுகிறவனாகிய சீமோன்
என்னும் ஒருவனிடத்தில் அநேகநாள்
தங்கியிருந்தான். (அப்போஸ்தலர் 9:43)
pinbu avan yoappaa
patta'naththilea thoal pathanidugi’ravanaagiya seemoan ennum oruvanidaththil aneaganaa'l thanggiyirunthaan. (appoasthalar
9:43)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!