இத்தாலியா பட்டாளம்
என்னப்பட்ட பட்டாளத்திலே நூற்றுக்கு
அதிபதியாகிய கொர்நேலியு என்னும்
பேர்கொண்ட ஒரு மனுஷன்
செசரியா பட்டணத்திலே இருந்தான்.
(அப்போஸ்தலர் 10:1)
iththaaliyaa pattaa'lam ennappatta pattaa'laththilea noot’rukku athibathiyaagiya kornealiyu ennum pearko'nda oru manushan sesariyaa patta'naththilea irunthaan.
(appoasthalar 10:1)
அவன் தேவபக்தியுள்ளவனும் தன்வீட்டாரனைவரோடும் தேவனுக்குப்
பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த
தருமங்களைச் செய்து, எப்பொழுதும்
தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான். (அப்போஸ்தலர்
10:2)
avan theavabakthiyu'l'lavanum thanveettaaranaivaroadum theavanukkup
bayanthavanumaayirunthu, janangga'lukku miguntha tharumangga'laich seythu, eppozhuthum theavanai
noakki jebampa'n'nikko'ndirunthaan. (appoasthalar
10:2)
பகலில் ஏறக்குறைய
ஒன்பதாம்மணி நேரத்திலே தேவனுடைய
தூதன் தன்னிடத்தில் வரவும்,
கொர்நேலியுவே, என்று அழைக்கவும்
பிரத்தியட்சமாய்த் தரிசனங்கண்டு, (அப்போஸ்தலர்
10:3)
pagalil ea’rakku’raiya onbathaamma'ni nearaththilea
theavanudaiya thoothan thannidaththil varavum,
kornealiyuvea, en’ru azhaikkavum piraththiyadchamaayth tharisanangka'ndu, (appoasthalar
10:3)
அவனை உற்றுப்பார்த்து, பயந்து:
ஆண்டவரே, என்ன என்றான்.
அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு
நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில்
வந்தெட்டியிருக்கிறது. (அப்போஸ்தலர் 10:4)
avanai ut’ruppaarththu, bayanthu: aa'ndavarea,
enna en’raan. appozhuthu
avan: un jebangga'lum un tharumangga'lum theavanukku
ninaippoottuthalaaga avar sannithiyil vanthettiyirukki’rathu. (appoasthalar 10:4)
இப்பொழுது நீ யோப்பா பட்டணத்துக்கு
மனுஷரை அனுப்பி, பேதுரு
என்று மறுபேர்கொண்ட சீமோனை
அழைப்பி. (அப்போஸ்தலர் 10:5)
ippozhuthu nee yoappaa patta'naththukku manusharai
anuppi, peathuru en’ru ma’rupearko'nda seemoanai azhaippi.
(appoasthalar 10:5)
அவன் தோல் பதனிடுகிறவனாகிய சீமோன்
என்னும் ஒருவனிடத்திலே தங்கியிருக்கிறான்; அவனுடைய
வீடு கடலோரத்திலிருக்கிறது. நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான்
என்றான். (அப்போஸ்தலர் 10:6)
avan thoal pathanidugi’ravanaagiya seemoan ennum oruvanidaththilea thanggiyirukki’raan; avanudaiya veedu kadaloaraththilirukki’rathu. nee seyyavea'ndiyathai avan unakkuch solluvaan en’raan. (appoasthalar 10:6)
கொர்நேலியு தன்னுடனே
பேசின தேவதூதன் போனபின்பு,
தன் வீட்டு மனுஷரில்
இரண்டுபேரையும் தன்னிடத்தில் சேவிக்கிற
போர்ச்சேவகரில் தேவபக்தியுள்ள ஒருவனையும்
அழைத்து, (அப்போஸ்தலர் 10:7)
kornealiyu thannudanea
peasina
theavathoothan poanapinbu, than veettu manusharil
ira'ndupearaiyum thannidaththil seavikki’ra poarchseavagaril theavabakthiyu'l'la oruvanaiyum
azhaiththu, (appoasthalar 10:7)
எல்லாவற்றையும் அவர்களுக்கு
விவரித்துச் சொல்லி, அவர்களை
யோப்பா பட்டணத்துக்கு அனுப்பினான்.
(அப்போஸ்தலர் 10:8)
ellaavat’raiyum avarga'lukku vivariththuch solli, avarga'lai yoappaa patta'naththukku anuppinaan.
(appoasthalar 10:8)
மறுநாளிலே அவர்கள்
பிரயாணப்பட்டு, அந்தப் பட்டணத்துக்குச் சமீபித்து
வருகையில், பேதுரு ஆறாம்மணி
நேரத்திலே ஜெபம்பண்ணும்படி மேல்வீட்டில்
ஏறினான். (அப்போஸ்தலர் 10:9)
ma’runaa'lilea avarga'l pirayaa'nappattu, anthap patta'naththukkuch sameebiththu varugaiyil, peathuru
aa’raamma'ni nearaththilea
jebampa'n'numpadi mealveettil ea’rinaan. (appoasthalar
10:9)
அவன் மிகுந்த
பசியடைந்து சாப்பிட மனதாயிருந்தான்; அதற்கு
அவர்கள் ஆயத்தம்பண்ணுகையில், அவன் ஞானதிருஷ்டியடைந்து, (அப்போஸ்தலர்
10:10)
avan miguntha pasiyadainthu saappida manathaayirunthaan; atha’rku avarga'l aayaththampa'n'nugaiyil, avan gnaanathirushdiyadainthu, (appoasthalar
10:10)
வானம் திறந்திருக்கிறதாகவும், நாலுமுனைகளும்
கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒருவிதமான
கூடு தன்னிடத்தில் இறங்கித்
தரையில் விடப்பட்டிருக்கிறதாகவும், (அப்போஸ்தலர்
10:11)
vaanam thi’ranthirukki’rathaagavum, naalumunaiga'lum kattappatta periya thuppattiyaippoala oruvithamaana
koodu thannidaththil i’ranggith tharaiyil vidappattirukki’rathaagavum, (appoasthalar
10:11)
அதிலே பூமியிலுள்ள
சகலவிதமான நாலுகால் ஜீவன்களும்,
காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும்,
ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகவும் கண்டான்.
(அப்போஸ்தலர் 10:12)
athilea boomiyilu'l'la sagalavithamaana naalukaal
jeevanga'lum, kaattumirugangga'lum, oorum piraa'niga'lum, aagaayaththup pa’ravaiga'lum irukki’rathaagavum ka'ndaan. (appoasthalar
10:12)
அல்லாமலும்: பேதுருவே,
எழுந்திரு, அடித்துப் புசி என்று அவனுக்குச்
சொல்லும் ஒரு சத்தம்
உண்டாயிற்று. (அப்போஸ்தலர் 10:13)
allaamalum: peathuruvea,
ezhunthiru, adiththup pusi en’ru avanukkuch sollum oru saththam u'ndaayit’ru. (appoasthalar 10:13)
அதற்குப் பேதுரு:
அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும்
அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை
என்றான். (அப்போஸ்தலர் 10:14)
atha’rkup peathuru: appadiyalla,
aa'ndavarea, theettum asuththamumaayirukki’ra yaathon’raiyum naan orukkaalum pusiththathillai en’raan. (appoasthalar
10:14)
அப்பொழுது: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே
என்று இரண்டாந்தரமும் சத்தம்
அவனுக்கு உண்டாயிற்று. (அப்போஸ்தலர்
10:15)
appozhuthu: theavan
suththamaakkinavaiga'lai nee theettaaga e'n'naathea
en’ru
ira'ndaantharamum saththam avanukku u'ndaayit’ru. (appoasthalar
10:15)
மூன்றாந்தரமும் அப்படியே
உண்டாயிற்று. பின்பு அந்தக்
கூடு திரும்ப வானத்துக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டது. (அப்போஸ்தலர் 10:16)
moon’raantharamum appadiyea u'ndaayit’ru. pinbu anthak
koodu thirumba vaanaththukku eduththukko'l'lappattathu. (appoasthalar
10:16)
அப்பொழுது பேதுரு,
தான் கண்ட தரிசனத்தைக்குறித்துத் தனக்குள்ளே
சந்தேகப்படுகையில், இதோ, கொர்நேலியுவினால் அனுப்பப்பட்ட
மனுஷர்கள் சீமோனுடைய வீட்டை
விசாரித்துக்கொண்டு வாசற்படியிலே வந்து நின்று: (அப்போஸ்தலர்
10:17)
appozhuthu peathuru,
thaan ka'nda tharisanaththaikku’riththuth thanakku'l'lea santheagappadugaiyil, ithoa,
kornealiyuvinaal anuppappatta manusharga'l seemoanudaiya veettai visaariththukko'ndu
vaasa’rpadiyilea vanthu
nin’ru:
(appoasthalar 10:17)
பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோன்
இங்கே தங்கியிருக்கிறாரா என்று கேட்டார்கள். (அப்போஸ்தலர்
10:18)
peathuru en’ru ma’rupearko'nda seemoan inggea thanggiyirukki’raaraa en’ru keattaarga'l. (appoasthalar
10:18)
பேதுரு அந்தத்
தரிசனத்தைக் குறித்துச் சிந்தனை
பண்ணிக்கொண்டிருக்கையில், ஆவியானவர்: இதோ, மூன்று மனுஷர்
உன்னைத் தேடுகிறார்கள். (அப்போஸ்தலர்
10:19)
peathuru anthath
tharisanaththaik ku’riththuch sinthanai pa'n'nikko'ndirukkaiyil, aaviyaanavar:
ithoa, moon’ru manushar unnaith
theadugi’raarga'l. (appoasthalar
10:19)
நீ எழுந்து,
இறங்கி, ஒன்றுக்குஞ் சந்தேகப்படாமல், அவர்களுடனே
கூடப்போ; நானே அவர்களை
அனுப்பினேன் என்று அவனுக்குச்
சொன்னார். (அப்போஸ்தலர் 10:20)
nee ezhunthu,
i’ranggi, on’rukkugn santheagappadaamal, avarga'ludanea koodappoa; naanea
avarga'lai anuppinean
en’ru
avanukkuch sonnaar. (appoasthalar
10:20)
அப்பொழுது பேதுரு
கொர்நேலியுவினால் தன்னிடத்தில் அனுப்பப்பட்ட
மனுஷரிடத்திற்கு இறங்கிப்போய்: இதோ, நீங்கள் தேடுகிறவன்
நான்தான், நீங்கள் வந்திருக்கிற
காரியம் என்ன என்றான்.
(அப்போஸ்தலர் 10:21)
appozhuthu peathuru
kornealiyuvinaal thannidaththil anuppappatta manusharidaththi’rku i’ranggippoay: ithoa, neengga'l theadugi’ravan naanthaan,
neengga'l
vanthirukki’ra kaariyam
enna en’raan. (appoasthalar
10:21)
அதற்கு அவர்கள்:
நீதிமானும், தேவனுக்குப் பயப்படுகிறவரும், யூதஜனங்களெல்லாராலும் நல்லவரென்று
சாட்சி பெற்றவருமாகிய கொர்நேலியு
என்னும் நூற்றுக்கு அதிபதி
உம்மைத் தம்முடைய வீட்டுக்கு
அழைப்பித்து, உம்மால் சொல்லப்படும்
வார்த்தைகளைக் கேட்கும்படி பரிசுத்த
தூதனாலே தேவயத்தனமாய்க் கட்டளைபெற்றார் என்றார்கள்.
(அப்போஸ்தலர் 10:22)
atha’rku avarga'l: neethimaanum, theavanukkup
bayappadugi’ravarum, yoothajanangga'lellaaraalum nallavaren’ru saadchi pet’ravarumaagiya kornealiyu
ennum noot’rukku athibathi ummaith
thammudaiya veettukku azhaippiththu, ummaal
sollappadum vaarththaiga'laik keadkumpadi
parisuththa thoothanaalea
theavayaththanamaayk katta'laipet’raar en’raarga'l. (appoasthalar 10:22)
அப்பொழுது பேதுரு
அவர்களை உள்ளே அழைத்து,
அவர்களுக்கு உபசாரஞ்செய்து, மறுநாளிலே
அவர்களுடனேகூடப் புறப்பட்டான்; யோப்பா
பட்டணத்தாராகிய சகோதரரில் சிலரும்
அவனுடனேகூடப் போனார்கள். (அப்போஸ்தலர்
10:23)
appozhuthu peathuru
avarga'lai u'l'lea
azhaiththu, avarga'lukku ubasaaragnseythu, ma’runaa'lilea avarga'ludaneakoodap pu’rappattaan; yoappaa patta'naththaaraagiya sagoathararil silarum avanudaneakoodap poanaarga'l. (appoasthalar
10:23)
மறுநாளிலே செசரியா
பட்டணத்தில் பிரவேசித்தார்கள். கொர்நேலியு
தன் உறவின்முறையாரையும் தன்னுடைய
விசேஷித்த சிநேகிதரையும் கூடவரவழைத்து,
அவர்களுக்காகக் காத்திருந்தான். (அப்போஸ்தலர்
10:24)
ma’runaa'lilea sesariyaa patta'naththil piraveasiththaarga'l. kornealiyu
than u’ravinmu’raiyaaraiyum thannudaiya viseashiththa sineagitharaiyum koodavaravazhaiththu, avarga'lukkaagak kaaththirunthaan. (appoasthalar
10:24)
பேதுரு உள்ளே பிரவேசிக்கிறபொழுது, கொர்நேலியு
அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவன் பாதத்தில் விழுந்து,
பணிந்துகொண்டான். (அப்போஸ்தலர் 10:25)
peathuru u'l'lea
piraveasikki’rapozhuthu, kornealiyu
avanukku ethirko'ndupoay, avan paathaththil vizhunthu,
pa'ninthuko'ndaan. (appoasthalar 10:25)
பேதுரு அவனைத்
தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும்
ஒரு மனுஷன்தான் என்றான்.
(அப்போஸ்தலர் 10:26)
peathuru avanaith
thookkiyeduththu: ezhunthirum, naanum
oru manushanthaan en’raan. (appoasthalar
10:26)
அவனுடனே பேசிக்கொண்டு,
உள்ளே போய், அநேகர்
கூடிவந்திருக்கிறதைக் கண்டு, (அப்போஸ்தலர்
10:27)
avanudanea peasikko'ndu, u'l'lea
poay, aneagar koodivanthirukki’rathaik ka'ndu, (appoasthalar
10:27)
அவர்களை நோக்கி:
அந்நிய ஜாதியானோடே கலந்து
அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு
விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார். (அப்போஸ்தலர்
10:28)
avarga'lai noakki: anniya
jaathiyaanoadea kalanthu avanidaththil
poakkuvaravaayiruppathu yoothanaanavanukku vilakkappattirukki’rathen’ru neengga'l a’rinthirukki’reerga'l; appadiyirunthum, entha manushanaiyum theettu'l'lavanen’rum asuththanen’rum naan sollaathapadikku
theavan enakkuk kaa'nbiththirukki’raar. (appoasthalar 10:28)
ஆகையால் நீங்கள்
என்னை அழைப்பித்தபோது நான் எதிர்பேசாமல் வந்தேன்.
இப்போதும் என்ன காரியத்துக்காக என்னை அழைப்பித்தீர்கள் என்று கேட்கிறேன் என்றான்.
(அப்போஸ்தலர் 10:29)
aagaiyaal neengga'l ennai azhaippiththapoathu naan ethirpeasaamal vanthean. ippoathum
enna kaariyaththukkaaga ennai azhaippiththeerga'l en’ru keadki’rean en’raan. (appoasthalar
10:29)
அதற்குக் கொர்நேலியு:
நாலு நாளைக்கு முன்னே
இந்நேரத்திலே நான் உபவாசித்து,
ஒன்பதாம்மணி நேரத்தில் என் வீட்டிலே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது
பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த மனுஷன்
ஒருவன் எனக்கு முன்பாக
நின்று: (அப்போஸ்தலர் 10:30)
atha’rkuk kornealiyu: naalu naa'laikku munnea
innearaththilea naan ubavaasiththu, onbathaamma'ni nearaththil en veettilea jebampa'n'nikko'ndirunthean; appozhuthu
piragaasamu'l'la vasthiranthariththa manushan
oruvan enakku munbaaga nin’ru: (appoasthalar
10:30)
கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது. (அப்போஸ்தலர்
10:31)
kornealiyuvea, un jebam keadkappattathu, un thaanatharumangga'l theavasannithiyil ninaiththaru'lappattathu. (appoasthalar
10:31)
யோப்பா பட்டணத்துக்கு
ஆள் அனுப்பி, பேதுரு
என்று மறுபேர்கொண்ட சீமோனை
வரவழைப்பாயாக, அவன் கடலோரத்திலே
தோல்பதனிடுகிறவனாகிய சீமோனுடைய வீட்டிலே
தங்கியிருக்கிறான்; அவன் வந்து உன்னிடத்தில் பேசுவான்
என்றார். (அப்போஸ்தலர் 10:32)
yoappaa patta'naththukku aa'l anuppi, peathuru
en’ru
ma’rupearko'nda seemoanai varavazhaippaayaaga, avan kadaloaraththilea thoalpathanidugi’ravanaagiya seemoanudaiya veettilea thanggiyirukki’raan; avan vanthu
unnidaththil peasuvaan en’raar. (appoasthalar 10:32)
அந்தப்படியே நான் உடனே உம்மிடத்திற்கு ஆள் அனுப்பினேன்; நீர் வந்தது நல்ல காரியம்; தேவனாலே
உமக்குக் கட்டளையிடப்பட்ட யாவையும்
கேட்கும்படிக்கு நாங்கள் எல்லாரும்
இப்பொழுது இங்கே தேவசமுகத்தில்
கூடியிருக்கிறோம் என்றான். (அப்போஸ்தலர்
10:33)
anthappadiyea naan udanea ummidaththi’rku aa'l anuppinean; neer vanthathu nalla kaariyam; theavanaalea
umakkuk katta'laiyidappatta yaavaiyum
keadkumpadikku naangga'l ellaarum ippozhuthu
inggea
theavasamugaththil koodiyirukki’roam en’raan. (appoasthalar
10:33)
அப்பொழுது பேதுரு
பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும்,
(அப்போஸ்தலர் 10:34)
appozhuthu peathuru
peasaththodanggi: theavan
padchapaathamu'l'lavaralla en’rum, (appoasthalar
10:34)
எந்த ஜனத்திலாயினும் அவருக்குப்
பயந்திருந்து நீதியைச் செய்கிறவன்
எவனோ அவனே அவருக்கு
உகந்தவன் என்றும் நிச்சயமாய்
அறிந்திருக்கிறேன். (அப்போஸ்தலர் 10:35)
entha janaththilaayinum avarukkup
bayanthirunthu neethiyaich seygi’ravan evanoa avanea
avarukku uganthavan en’rum nichchayamaay a’rinthirukki’rean. (appoasthalar
10:35)
எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் சமாதானத்தைச் சுவிசேஷமாய்க்
கூறி, இஸ்ரவேல் புத்திரருக்கு
அனுப்பின வார்த்தையை அறிந்திருக்கிறீர்களே. (அப்போஸ்தலர்
10:36)
ellaarukkum karththaraayirukki’ra iyeasuki’risthuvaikko'ndu
avar samaathaanaththaich suviseashamaayk koo’ri, israveal
puththirarukku anuppina vaarththaiyai
a’rinthirukki’reerga'lea. (appoasthalar 10:36)
யோவான் ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தபின்பு, கலிலேயா
நாடு முதற்கொண்டு யூதேயா
தேசமெங்கும் நடந்த சங்கதி
இதுவே. (அப்போஸ்தலர் 10:37)
yoavaan gnaanasnaanaththaikku’riththup pirasanggiththapinbu, kalileayaa
naadu mutha’rko'ndu yootheayaa theasamenggum nadantha sanggathi ithuvea. (appoasthalar
10:37)
நசரேயனாகிய இயேசுவைத்
தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின்
வல்லமையில் அகப்பட்ட யாவரையும்
குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார். (அப்போஸ்தலர்
10:38)
nasareayanaagiya iyeasuvaith theavan
parisuththaaaviyinaalum vallamaiyinaalum abisheagampa'n'ninaar;
theavan avarudaneakooda irunthapadiyinaalea avar nanmaiseygi’ravaraayum pisaasin vallamaiyil
agappatta yaavaraiyum
ku'namaakkugi’ravaraayum sut’riththirinthaar. (appoasthalar
10:38)
யூதருடைய தேசத்திலும்
எருசலேமிலும் அவர் செய்தவைகளெல்லாவற்றிற்கும் நாங்கள்
சாட்சிகளாயிருக்கிறோம். அவரை மரத்திலே
தூக்கிக் கொலைசெய்தார்கள். (அப்போஸ்தலர்
10:39)
yootharudaiya theasaththilum erusaleamilum avar seythavaiga'lellaavat’ri’rkum naangga'l saadchiga'laayirukki’roam. avarai maraththilea
thookkik kolaiseythaarga'l. (appoasthalar
10:39)
மூன்றாம் நாளிலே
தேவன் அவரை எழுப்பிப்
பிரத்தியட்சமாய்க் காணும்படி செய்தார்.
(அப்போஸ்தலர் 10:40)
moon’raam naa'lilea theavan
avarai ezhuppip piraththiyadchamaayk kaa'numpadi
seythaar.
(appoasthalar 10:40)
ஆயினும் எல்லா ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகும்படி செய்யாமல்,
அவர் மரித்தோரிலிருந்து எழுந்தபின்பு
அவரோடே புசித்துக் குடித்தவர்களும் தேவனால்
முன்பு நியமிக்கப்பட்ட சாட்சிகளுமாகிய எங்களுக்கே
பிரத்தியட்சமாகும்படி செய்தார். (அப்போஸ்தலர்
10:41)
aayinum ellaa janangga'lukkum piraththiyadchamaagumpadi seyyaamal, avar mariththoarilirunthu ezhunthapinbu avaroadea
pusiththuk kudiththavarga'lum theavanaal
munbu
niyamikkappatta saadchiga'lumaagiya engga'lukkea piraththiyadchamaagumpadi seythaar. (appoasthalar 10:41)
அன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால்
ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதியென்று ஜனங்களுக்குப்
பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். (அப்போஸ்தலர்
10:42)
an’riyum avarea uyiroadirukki’ravarga'lukkum mariththoarga'lukkum theavanaal ea’rpaduththappatta niyaayaathibathiyen’ru janangga'lukkup pirasanggikkavum, saadchiyaaga oppuvikkavum, avar engga'lukkuk katta'laiyittaar. (appoasthalar
10:42)
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய
நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று
தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.
(அப்போஸ்தலர் 10:43)
avarai visuvaasikki’ravan evanoa
avan avarudaiya naamaththinaalea paavamannippaip pe’ruvaanen’ru theerkkatharisiga'lellaarum avaraikku’riththea saadchikodukki’raarga'l en’raan. (appoasthalar
10:43)
இந்த வார்த்தைகளைப்
பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும்
பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.
(அப்போஸ்தலர் 10:44)
intha vaarththaiga'laip peathuru
peasikko'ndirukkaiyil vasanaththaikkeattavarga'l yaavarmealum
parisuththa aaviyaanavar
i’rangginaar. (appoasthalar
10:44)
அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப்
புகழுகிறதையும், (அப்போஸ்தலர் 10:45)
avarga'l pala baashaiga'laip peasugi’rathaiyum,
theavanaip pugazhugi’rathaiyum, (appoasthalar
10:45)
பேதுருவோடேகூட வந்திருந்த
விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது,
பரிசுத்தஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள். (அப்போஸ்தலர்
10:46)
peathuruvoadeakooda vanthiruntha
viruththaseathanamu'l'la visuvaasiga'l keadkumpoathu, parisuththaaaviyin varam pu’rajaathiga'lmealum pozhintharu'lappattathaikku’riththup piramiththaarga'l. (appoasthalar 10:46)
அப்பொழுது பேதுரு:
நம்மைப்போலப் பரிசுத்தஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம்
பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை
விலக்கலாமா என்று சொல்லி,
(அப்போஸ்தலர் 10:47)
appozhuthu peathuru:
nammaippoalap parisuththaaaviyaip
pet’ra
ivarga'lum gnaanasnaanam
pe’raathapadikku evanaagilum tha'n'neerai
vilakkalaamaa en’ru solli, (appoasthalar 10:47)
கர்த்தருடைய நாமத்தினாலே
அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது
சிலநாள் அங்கே தங்கும்படி
அவனை வேண்டிக்கொண்டார்கள். (அப்போஸ்தலர்
10:48)
karththarudaiya naamaththinaalea avarga'lukku gnaanasnaanangkodukkumpadi katta'laiyittaan. appozhuthu silanaa'l anggea thanggumpadi avanai
vea'ndikko'ndaarga'l. (appoasthalar
10:48)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!