Thursday, May 19, 2016

Appoasthalar 8 | அப்போஸ்தலருடைய நடபடிகள் 8 | Acts 8

அவனைக்  கொலைசெய்கிறதற்குச்  சவுலும்  சம்மதித்திருந்தான்.  அக்காலத்திலே  எருசலேமிலுள்ள  சபைக்கு  மிகுந்த  துன்பம்  உண்டாயிற்று.  அப்போஸ்தலர்தவிர,  மற்ற  யாவரும்  யூதேயா  சமாரியா  தேசங்களில்  சிதறப்பட்டுப்போனார்கள்.  (அப்போஸ்தலர்  8:1)

avanaik  kolaiseygi’ratha’rkuch  savulum  sammathiththirunthaan.  akkaalaththilea  erusaleamilu'l'la  sabaikku  miguntha  thunbam  u'ndaayit’ru.  appoasthalarthavira,  mat’ra  yaavarum  yootheayaa  samaariyaa  theasangga'lil  sitha’rappattuppoanaarga'l.  (appoasthalar  8:1)

தேவபக்தியுள்ள  மனுஷர்  ஸ்தேவானை  எடுத்து  அடக்கம்பண்ணி,  அவனுக்காக  மிகவும்  துக்கங்கொண்டாடினார்கள்.  (அப்போஸ்தலர்  8:2)

theavabakthiyu'l'la  manushar  stheavaanai  eduththu  adakkampa'n'ni,  avanukkaaga  migavum  thukkangko'ndaadinaarga'l.  (appoasthalar  8:2)

சவுல்  வீடுகள்தோறும்  நுழைந்து,  புருஷரையும்  ஸ்திரீகளையும்  இழுத்துக்கொண்டுபோய்,  காவலில்  போடுவித்து,  சபையைப்  பாழாக்கிக்கொண்டிருந்தான்.  (அப்போஸ்தலர்  8:3)

savul  veeduga'lthoa’rum  nuzhainthu,  purusharaiyum  sthireega'laiyum  izhuththukko'ndupoay,  kaavalil  poaduviththu,  sabaiyaip  paazhaakkikko'ndirunthaan.  (appoasthalar  8:3)

சிதறிப்போனவர்கள்  எங்குந்திரிந்து,  சுவிசேஷவசனத்தைப்  பிரசங்கித்தார்கள்.  (அப்போஸ்தலர்  8:4)

sitha’rippoanavarga'l  enggunthirinthu,  suviseashavasanaththaip  pirasanggiththaarga'l.  (appoasthalar  8:4)

அப்பொழுது  பிலிப்பென்பவன்  சமாரியாவிலுள்ள  ஒரு  பட்டணத்திற்குப்  போய்,  அங்குள்ளவர்களுக்குக்  கிறிஸ்துவைக்குறித்துப்  பிரசங்கித்தான்.  (அப்போஸ்தலர்  8:5)

appozhuthu  pilippenbavan  samaariyaavilu'l'la  oru  patta'naththi’rkup  poay,  anggu'l'lavarga'lukkuk  ki’risthuvaikku’riththup  pirasanggiththaan.  (appoasthalar  8:5)

பிலிப்பு  செய்த  அதிசயங்களை  ஜனங்கள்  கேள்விப்பட்டுக்  கண்டு,  அவனால்  சொல்லப்பட்டவைகளை  ஒருமனப்பட்டுக்  கவனித்தார்கள்.  (அப்போஸ்தலர்  8:6)

pilippu  seytha  athisayangga'lai  janangga'l  kea'lvippattuk  ka'ndu,  avanaal  sollappattavaiga'lai  orumanappattuk  kavaniththaarga'l.  (appoasthalar  8:6)

அநேகரிலிருந்த  அசுத்தஆவிகள்  மிகுந்த  சத்தத்தோடே  கூப்பிட்டு  அவர்களை  விட்டுப்  புறப்பட்டது.  அநேகந்  திமிர்வாதக்காரரும்  சப்பாணிகளும்  குணமாக்கப்பட்டார்கள்.  (அப்போஸ்தலர்  8:7)

aneagariliruntha  asuththaaaviga'l  miguntha  saththaththoadea  kooppittu  avarga'lai  vittup  pu’rappattathu.  aneagan  thimirvaathakkaararum  sappaa'niga'lum  ku'namaakkappattaarga'l.  (appoasthalar  8:7)

அந்தப்  பட்டணத்திலே  மிகுந்த  சந்தோஷம்  உண்டாயிற்று.  (அப்போஸ்தலர்  8:8)

anthap  patta'naththilea  miguntha  santhoasham  u'ndaayit’ru.  (appoasthalar  8:8)

சீமோன்  என்று  பேர்கொண்ட  ஒரு  மனுஷன்  அந்தப்  பட்டணத்திலே  மாயவித்தைக்காரனாயிருந்து,  தன்னை  ஒரு  பெரியவனென்று  சொல்லி,  சமாரியாநாட்டு  ஜனங்களைப்  பிரமிக்கப்பண்ணிக்கொண்டிருந்தான்.  (அப்போஸ்தலர்  8:9)

seemoan  en’ru  pearko'nda  oru  manushan  anthap  patta'naththilea  maayaviththaikkaaranaayirunthu,  thannai  oru  periyavanen’ru  solli,  samaariyaanaattu  janangga'laip  piramikkappa'n'nikko'ndirunthaan.  (appoasthalar  8:9)

தேவனுடைய  பெரிதான  சக்தி  இவன்தான்  என்று  எண்ணி,  சிறியோர்  பெரியோர்  யாவரும்  அவனுக்குச்  செவிகொடுத்துவந்தார்கள்.  (அப்போஸ்தலர்  8:10)

theavanudaiya  perithaana  sakthi  ivanthaan  en’ru  e'n'ni,  si’riyoar  periyoar  yaavarum  avanukkuch  sevikoduththuvanthaarga'l.  (appoasthalar  8:10)

அவன்  அநேக  காலமாய்த்  தன்னுடைய  மாயவித்தைகளினாலே  அவர்களைப்  பிரமிக்கப்பண்ணினதினால்  அவனை  மதித்துவந்தார்கள்.  (அப்போஸ்தலர்  8:11)

avan  aneaga  kaalamaayth  thannudaiya  maayaviththaiga'linaalea  avarga'laip  piramikkappa'n'ninathinaal  avanai  mathiththuvanthaarga'l.  (appoasthalar  8:11)

தேவனுடைய  ராஜ்யத்துக்கும்  இயேசுகிறிஸ்துவினுடைய  நாமத்துக்கும்  ஏற்றவைகளைக்குறித்து,  பிலிப்பு  பிரசங்கித்ததை  அவர்கள்  விசுவாசித்தபோது,  புருஷரும்  ஸ்திரீகளும்  ஞானஸ்நானம்  பெற்றார்கள்.  (அப்போஸ்தலர்  8:12)

theavanudaiya  raajyaththukkum  iyeasuki’risthuvinudaiya  naamaththukkum  eat’ravaiga'laikku’riththu,  pilippu  pirasanggiththathai  avarga'l  visuvaasiththapoathu,  purusharum  sthireega'lum  gnaanasnaanam  pet’raarga'l.  (appoasthalar  8:12)

அப்பொழுது  சீமோனும்  விசுவாசித்து  ஞானஸ்நானம்  பெற்று,  பிலிப்பைப்  பற்றிக்கொண்டு,  அவனால்  நடந்த  அடையாளங்களையும்  பெரிய  அற்புதங்களையும்  கண்டு  பிரமித்தான்.  (அப்போஸ்தலர்  8:13)

appozhuthu  seemoanum  visuvaasiththu  gnaanasnaanam  pet’ru,  pilippaip  pat’rikko'ndu,  avanaal  nadantha  adaiyaa'langga'laiyum  periya  a’rputhangga'laiyum  ka'ndu  piramiththaan.  (appoasthalar  8:13)

சமாரியர்  தேவவசனத்தை  ஏற்றுக்கொண்டதை  எருசலேமிலுள்ள  அப்போஸ்தலர்கள்  கேள்விப்பட்டு,  பேதுருவையும்  யோவானையும்  அவர்களிடத்திற்கு  அனுப்பினார்கள்.  (அப்போஸ்தலர்  8:14)

samaariyar  theavavasanaththai  eat’rukko'ndathai  erusaleamilu'l'la  appoasthalarga'l  kea'lvippattu,  peathuruvaiyum  yoavaanaiyum  avarga'lidaththi’rku  anuppinaarga'l.  (appoasthalar  8:14)

இவர்கள்  வந்தபொழுது  அவர்களில்  ஒருவனும்  பரிசுத்தஆவியைப்  பெறாமல்  கர்த்தராகிய  இயேசுவின்  நாமத்தினாலே  ஞானஸ்நானத்தை  மாத்திரம்  பெற்றிருந்தவர்களாகக்  கண்டு,  (அப்போஸ்தலர்  8:15)

ivarga'l  vanthapozhuthu  avarga'lil  oruvanum  parisuththaaaviyaip  pe’raamal  karththaraagiya  iyeasuvin  naamaththinaalea  gnaanasnaanaththai  maaththiram  pet’rirunthavarga'laagak  ka'ndu,  (appoasthalar  8:15)

அவர்கள்  பரிசுத்தஆவியைப்  பெற்றுக்கொள்ளும்படி  அவர்களுக்காக  ஜெபம்பண்ணி,  (அப்போஸ்தலர்  8:16)

avarga'l  parisuththaaaviyaip  pet’rukko'l'lumpadi  avarga'lukkaaga  jebampa'n'ni,  (appoasthalar  8:16)

அவர்கள்மேல்  கைகளை  வைத்தார்கள்,  அப்பொழுது  அவர்கள்  பரிசுத்தஆவியைப்  பெற்றார்கள்.  (அப்போஸ்தலர்  8:17)

avarga'lmeal  kaiga'lai  vaiththaarga'l,  appozhuthu  avarga'l  parisuththaaaviyaip  pet’raarga'l.  (appoasthalar  8:17)

அப்போஸ்தலர்  தங்கள்  கைகளை  அவர்கள்மேல்  வைத்ததினால்  பரிசுத்தஆவி  தந்தருளப்படுகிறதைச்  சீமோன்  கண்டபோது,  அவர்களிடத்தில்  பணத்தைக்  கொண்டுவந்து:  (அப்போஸ்தலர்  8:18)

appoasthalar  thangga'l  kaiga'lai  avarga'lmeal  vaiththathinaal  parisuththaaavi  thantharu'lappadugi’rathaich  seemoan  ka'ndapoathu,  avarga'lidaththil  pa'naththaik  ko'nduvanthu:  (appoasthalar  8:18)

நான்  எவன்மேல்  என்  கைகளை  வைக்கிறேனோ,  அவன்  பரிசுத்தஆவியைப்  பெறத்தக்கதாக  எனக்கும்  இந்த  அதிகாரத்தைக்  கொடுக்கவேண்டும்  என்றான்.  (அப்போஸ்தலர்  8:19)

naan  evanmeal  en  kaiga'lai  vaikki’reanoa,  avan  parisuththaaaviyaip  pe’raththakkathaaga  enakkum  intha  athigaaraththaik  kodukkavea'ndum  en’raan.  (appoasthalar  8:19)

பேதுரு  அவனை  நோக்கி:  தேவனுடைய  வரத்தைப்  பணத்தினாலே  சம்பாதித்துக்கொள்ளலாமென்று  நீ  நினைத்தபடியால்  உன்  பணம்  உன்னோடேகூட  நாசமாய்ப்  போகக்கடவது.  (அப்போஸ்தலர்  8:20)

peathuru  avanai  noakki:  theavanudaiya  varaththaip  pa'naththinaalea  sambaathiththukko'l'lalaamen’ru  nee  ninaiththapadiyaal  un  pa'nam  unnoadeakooda  naasamaayp  poagakkadavathu.  (appoasthalar  8:20)

உன்  இருதயம்  தேவனுக்குமுன்பாகச்  செம்மையாயிராதபடியால்,  இந்த  விஷயத்திலே  உனக்குப்  பங்குமில்லை  பாகமுமில்லை.  (அப்போஸ்தலர்  8:21)

un  iruthayam  theavanukkumunbaagach  semmaiyaayiraathapadiyaal,  intha  vishayaththilea  unakkup  panggumillai  paagamumillai.  (appoasthalar  8:21)

ஆகையால்  நீ  உன்  துர்க்குணத்தை  விட்டு  மனந்திரும்பி,  தேவனை  நோக்கி  வேண்டிக்கொள்;  ஒருவேளை  உன்  இருதயத்தின்  எண்ணம்  உனக்கு  மன்னிக்கப்படலாம்.  (அப்போஸ்தலர்  8:22)

aagaiyaal  nee  un  thurkku'naththai  vittu  mananthirumbi,  theavanai  noakki  vea'ndikko'l;  oruvea'lai  un  iruthayaththin  e'n'nam  unakku  mannikkappadalaam.  (appoasthalar  8:22)

நீ  கசப்பான  பிச்சிலும்  பாவக்கட்டிலும்  அகப்பட்டிருக்கிறதாகக்  காண்கிறேன்  என்றான்.  (அப்போஸ்தலர்  8:23)

nee  kasappaana  pichchilum  paavakkattilum  agappattirukki’rathaagak  kaa'ngi’rean  en’raan.  (appoasthalar  8:23)

அதற்குச்  சீமோன்:  நீங்கள்  சொன்ன  காரியங்களில்  ஒன்றும்  எனக்கு  நேரிடாதபடிக்கு,  எனக்காகக்  கர்த்தரை  வேண்டிக்கொள்ளுங்கள்  என்றான்.  (அப்போஸ்தலர்  8:24)

atha’rkuch  seemoan:  neengga'l  sonna  kaariyangga'lil  on’rum  enakku  nearidaathapadikku,  enakkaagak  karththarai  vea'ndikko'l'lungga'l  en’raan.  (appoasthalar  8:24)

இவ்விதமாய்  அவர்கள்  கர்த்தருடைய  வசனத்தைச்  சாட்சியாய்  அறிவித்துச்  சொன்னபின்பு,  சமாரியருடைய  அநேக  கிராமங்களில்  சுவிசேஷத்தைப்  பிரசங்கித்து,  எருசலேமுக்குத்  திரும்பி  வந்தார்கள்.  (அப்போஸ்தலர்  8:25)

ivvithamaay  avarga'l  karththarudaiya  vasanaththaich  saadchiyaay  a’riviththuch  sonnapinbu,  samaariyarudaiya  aneaga  kiraamangga'lil  suviseashaththaip  pirasanggiththu,  erusaleamukkuth  thirumbi  vanthaarga'l.  (appoasthalar  8:25)

பின்பு  கர்த்தருடைய  தூதன்  பிலிப்பை  நோக்கி:  நீ  எழுந்து,  தெற்குமுகமாய்  எருசலேமிலிருந்து  காசா  பட்டணத்துக்குப்  போகிற  வனாந்தரமார்க்கமாய்ப்  போ  என்றான்.  (அப்போஸ்தலர்  8:26)

pinbu  karththarudaiya  thoothan  pilippai  noakki:  nee  ezhunthu,  the’rkumugamaay  erusaleamilirunthu  kaasaa  patta'naththukkup  poagi’ra  vanaantharamaarkkamaayp  poa  en’raan.  (appoasthalar  8:26)

அந்தப்படி  அவன்  எழுந்துபோனான்.  அப்பொழுது  எத்தியோப்பியருடைய  ராஜஸ்திரீயாகிய  கந்தாகே  என்பவளுக்கு  மந்திரியும்  அவளுடைய  பொக்கிஷமெல்லாவற்றிற்கும்  தலைவனுமாயிருந்த  எத்தியோப்பியனாகிய  ஒருவன்  பணிந்துகொள்ளும்படி  எருசலேமுக்கு  வந்திருந்து;  (அப்போஸ்தலர்  8:27)

anthappadi  avan  ezhunthupoanaan.  appozhuthu  eththiyoappiyarudaiya  raajasthireeyaagiya  kanthaakea  enbava'lukku  manthiriyum  ava'ludaiya  pokkishamellaavat’ri’rkum  thalaivanumaayiruntha  eththiyoappiyanaagiya  oruvan  pa'ninthuko'l'lumpadi  erusaleamukku  vanthirunthu;  (appoasthalar  8:27)

ஊருக்குத்  திரும்பிப்போகும்போது,  தன்  இரதத்திலே  உட்கார்ந்து,  ஏசாயா  தீர்க்கதரிசியின்  ஆகமத்தை  வாசித்துக்கொண்டிருந்தான்.  (அப்போஸ்தலர்  8:28)

oorukkuth  thirumbippoagumpoathu,  than  irathaththilea  udkaarnthu,  easaayaa  theerkkatharisiyin  aagamaththai  vaasiththukko'ndirunthaan.  (appoasthalar  8:28)

ஆவியானவர்:  நீ  போய்,  அந்த  இரதத்துடனே  சேர்ந்துகொள்  என்று  பிலிப்புடனே  சொன்னார்.  (அப்போஸ்தலர்  8:29)

aaviyaanavar:  nee  poay,  antha  irathaththudanea  searnthuko'l  en’ru  pilippudanea  sonnaar.  (appoasthalar  8:29)

அப்பொழுது  பிலிப்பு  ஓடிப்போய்ச்சேர்ந்து,  அவன்  ஏசாயா  தீர்க்கதரிசியின்  ஆகமத்தை  வாசிக்கிறதைக்  கேட்டு:  நீர்  வாசிக்கிறவைகளின்  கருத்து  உமக்குத்  தெரியுமா  என்றான்.  (அப்போஸ்தலர்  8:30)

appozhuthu  pilippu  oadippoaychsearnthu,  avan  easaayaa  theerkkatharisiyin  aagamaththai  vaasikki’rathaik  keattu:  neer  vaasikki’ravaiga'lin  karuththu  umakkuth  theriyumaa  en’raan.  (appoasthalar  8:30)

அதற்கு  அவன்:  ஒருவன்  எனக்குத்  தெரிவிக்காவிட்டால்  அது  எனக்கு  எப்படித்  தெரியும்  என்று  சொல்லி;  பிலிப்பு  ஏறி,  தன்னோடே  உட்காரும்படி  அவனை  வேண்டிக்கொண்டான்.  (அப்போஸ்தலர்  8:31)

atha’rku  avan:  oruvan  enakkuth  therivikkaavittaal  athu  enakku  eppadith  theriyum  en’ru  solli;  pilippu  ea’ri,  thannoadea  udkaarumpadi  avanai  vea'ndikko'ndaan.  (appoasthalar  8:31)

அவன்  வாசித்த  வேதவாக்கியம்  என்னவென்றால்:  அவர்  ஒரு  ஆட்டைப்போல  அடிக்கப்படுவதற்குக்  கொண்டு  போகப்பட்டார்;  மயிர்கத்தரிக்கிறவனுக்கு  முன்பாகச்  சத்தமிடாதிருக்கிற  ஆட்டுக்குட்டியைப்போல  அவர்  தமது  வாயைத்  திறவாதிருந்தார்.  (அப்போஸ்தலர்  8:32)

avan  vaasiththa  veathavaakkiyam  ennaven’raal:  avar  oru  aattaippoala  adikkappaduvatha’rkuk  ko'ndu  poagappattaar;  mayirkaththarikki’ravanukku  munbaagach  saththamidaathirukki’ra  aattukkuttiyaippoala  avar  thamathu  vaayaith  thi’ravaathirunthaar.  (appoasthalar  8:32)

அவர்  தம்மைத்  தாழ்த்தினபோது  அவருடைய  நியாயம்  எடுத்துப்போடப்பட்டது;  அவருடைய  ஜீவன்  பூமியிலிருந்து  எடுபட்டுப்போயிற்று;  அவருடைய  வம்சத்தை  யாராலே  சொல்லிமுடியும்  என்பதே.  (அப்போஸ்தலர்  8:33)

avar  thammaith  thaazhththinapoathu  avarudaiya  niyaayam  eduththuppoadappattathu;  avarudaiya  jeevan  boomiyilirunthu  edupattuppoayit’ru;  avarudaiya  vamsaththai  yaaraalea  sollimudiyum  enbathea.  (appoasthalar  8:33)

மந்திரி  பிலிப்பை  நோக்கி:  தீர்க்கதரிசி  யாரைக்குறித்து  இதைச்  சொல்லுகிறார்?  தம்மைக்குறித்தோ,  வேறொருவரைக்குறித்தோ?  எனக்குச்  சொல்லவேண்டும்  என்று  கேட்டுக்கொண்டான்.  (அப்போஸ்தலர்  8:34)

manthiri  pilippai  noakki:  theerkkatharisi  yaaraikku’riththu  ithaich  sollugi’raar?  thammaikku’riththoa,  vea’roruvaraikku’riththoa?  enakkuch  sollavea'ndum  en’ru  keattukko'ndaan.  (appoasthalar  8:34)

அப்பொழுது  பிலிப்பு  பேசத்தொடங்கி,  இந்த  வேதவாக்கியத்தை  முன்னிட்டு  இயேசுவைக்குறித்து  அவனுக்குப்  பிரசங்கித்தான்.  (அப்போஸ்தலர்  8:35)

appozhuthu  pilippu  peasaththodanggi,  intha  veathavaakkiyaththai  munnittu  iyeasuvaikku’riththu  avanukkup  pirasanggiththaan.  (appoasthalar  8:35)

இவ்விதமாய்  அவர்கள்  வழிநடந்துபோகையில்,  தண்ணீருள்ள  ஓரிடத்திற்கு  வந்தார்கள்.  அப்பொழுது  மந்திரி:  இதோ,  தண்ணீர்  இருக்கிறதே,  நான்  ஞானஸ்நானம்  பெறுகிறதற்குத்  தடையென்ன  என்றான்.  (அப்போஸ்தலர்  8:36)

ivvithamaay  avarga'l  vazhinadanthupoagaiyil,  tha'n'neeru'l'la  oaridaththi’rku  vanthaarga'l.  appozhuthu  manthiri:  ithoa,  tha'n'neer  irukki’rathea,  naan  gnaanasnaanam  pe’rugi’ratha’rkuth  thadaiyenna  en’raan.  (appoasthalar  8:36)

அதற்குப்  பிலிப்பு:  நீர்  முழு  இருதயத்தோடும்  விசுவாசித்தால்  தடையில்லையென்றான்.  அப்பொழுது  அவன்:  இயேசுகிறிஸ்துவைத்  தேவனுடைய  குமாரனென்று  விசுவாசிக்கிறேன்  என்று  சொல்லி;  (அப்போஸ்தலர்  8:37)

atha’rkup  pilippu:  neer  muzhu  iruthayaththoadum  visuvaasiththaal  thadaiyillaiyen’raan.  appozhuthu  avan:  iyeasuki’risthuvaith  theavanudaiya  kumaaranen’ru  visuvaasikki’rean  en’ru  solli;  (appoasthalar  8:37)

இரதத்தை  நிறுத்தச்சொன்னான்.  அப்பொழுது  பிலிப்பும்  மந்திரியும்  ஆகிய  இருவரும்  தண்ணீரில்  இறங்கினார்கள்;  பிலிப்பு  அவனுக்கு  ஞானஸ்நானங்  கொடுத்தான்.  (அப்போஸ்தலர்  8:38)

irathaththai  ni’ruththachsonnaan.  appozhuthu  pilippum  manthiriyum  aagiya  iruvarum  tha'n'neeril  i’rangginaarga'l;  pilippu  avanukku  gnaanasnaanang  koduththaan.  (appoasthalar  8:38)

அவர்கள்  தண்ணீரிலிருந்து  கரையேறினபொழுது,  கர்த்தருடைய  ஆவியானவர்  பிலிப்பைக்  கொண்டுபோய்விட்டார்.  மந்திரி  அப்புறம்  அவனைக்  காணாமல்,  சந்தோஷத்தோடே  தன்  வழியே  போனான்.  (அப்போஸ்தலர்  8:39)

avarga'l  tha'n'neerilirunthu  karaiyea’rinapozhuthu,  karththarudaiya  aaviyaanavar  pilippaik  ko'ndupoayvittaar.  manthiri  appu’ram  avanaik  kaa'naamal,  santhoashaththoadea  than  vazhiyea  poanaan.  (appoasthalar  8:39)

பிலிப்பு  ஆசோத்திலே  காணப்பட்டு,  அவ்விடத்திலிருந்து  பிரயாணம்பண்ணி,  செசரியாவுக்கு  வருகிறவரையில்  சகல  பட்டணங்களிலும்  சுவிசேஷத்தைப்  பிரசங்கித்துக்கொண்டுவந்தான்.  (அப்போஸ்தலர்  8:40)

pilippu  aasoaththilea  kaa'nappattu,  avvidaththilirunthu  pirayaa'nampa'n'ni,  sesariyaavukku  varugi’ravaraiyil  sagala  patta'nangga'lilum  suviseashaththaip  pirasanggiththukko'nduvanthaan.  (appoasthalar  8:40)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!