பிரதான ஆசாரியன்
அவனை நோக்கி: காரியம்
இப்படியாயிருக்கிறது என்று கேட்டான்.
(அப்போஸ்தலர் 7:1)
pirathaana aasaariyan avanai
noakki: kaariyam ippadiyaayirukki’rathu en’ru keattaan. (appoasthalar
7:1)
அதற்கு அவன்: சகோதரரே, பிதாக்களே,
கேளுங்கள். நம்முடைய பிதாவாகிய
ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்னமே
மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது
மகிமையின் தேவன் அவனுக்குத்
தரிசனமாகி: (அப்போஸ்தலர் 7:2)
atha’rku avan: sagoathararea, pithaakka'lea, kea'lungga'l. nammudaiya
pithaavaagiya aabirahaam kaaraanoorilea kudiyirukki’ratha’rku munnamea mesoppoththaamiyaa naattilea irukkumpoathu
magimaiyin theavan
avanukkuth tharisanamaagi: (appoasthalar
7:2)
நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப்
புறப்பட்டு, நான் உனக்குக்
காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார். (அப்போஸ்தலர்
7:3)
nee un theasaththaiyum un inaththaiyum
vittup
pu’rappattu, naan unakkuk kaa'nbikkum theasaththukku vaa en’raar. (appoasthalar 7:3)
அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு,
காரானூரிலே வாசம்பண்ணினான். அவனுடைய
தகப்பன் மரித்தபின்பு, அவ்விடத்தை
விட்டு நீங்கள் இப்பொழுது
குடியிருக்கிற இத்தேசத்திற்கு அவனை அழைத்துக்கொண்டுவந்து குடியிருக்கும்படி செய்தார்.
(அப்போஸ்தலர் 7:4)
appozhuthu avan kaltheayar theasaththaivittup pu’rappattu, kaaraanoorilea vaasampa'n'ninaan. avanudaiya
thagappan
mariththapinbu, avvidaththai
vittu
neengga'l
ippozhuthu kudiyirukki’ra iththeasaththi’rku avanai
azhaiththukko'nduvanthu kudiyirukkumpadi seythaar. (appoasthalar
7:4)
இதிலே ஒரு அடி நிலத்தையாகிலும் அவனுடைய
கையாட்சிக்குக் கொடாமலிருக்கையில், அவனுக்குப்
பிள்ளையில்லாதிருக்கும்போது: உனக்கும் உனக்குப்
பின்வரும் உன் சந்ததிக்கும்
இதைச் சுதந்தரமாகத் தருவேன்
என்று அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணினார். (அப்போஸ்தலர்
7:5)
ithilea oru adi nilaththaiyaagilum avanudaiya
kaiyaadchikkuk kodaamalirukkaiyil, avanukkup
pi'l'laiyillaathirukkumpoathu: unakkum unakkup
pinvarum un santhathikkum ithaich suthantharamaagath tharuvean en’ru avanukku
vaakkuththaththampa'n'ninaar. (appoasthalar 7:5)
அந்தப்படி தேவன் அவனை நோக்கி:
உன் சந்ததியார் அந்நிய
தேசத்தில் சஞ்சரிப்பார்கள்; அத்தேசத்தார்
அவர்களை அடிமைகளாக்கி, நானூறு
வருஷம் துன்பப்படுத்துவார்கள். (அப்போஸ்தலர்
7:6)
anthappadi theavan
avanai noakki: un santhathiyaar anniya theasaththil sagncharippaarga'l; aththeasaththaar avarga'lai adimaiga'laakki, naanoo’ru varusham
thunbappaduththuvaarga'l. (appoasthalar 7:6)
அவர்களை அடிமைப்படுத்தும் ஜனத்தையோ
நான் ஆக்கினைக்குட்படுத்துவேன். அதற்குப்பின்பு அவர்கள்
புறப்பட்டுவந்து இவ்விடத்திலே எனக்கு
ஆராதனை செய்வார்கள் என்றார்.
(அப்போஸ்தலர் 7:7)
avarga'lai adimaippaduththum janaththaiyoa
naan aakkinaikkudpaduththuvean. atha’rkuppinbu avarga'l pu’rappattuvanthu ivvidaththilea enakku
aaraathanai seyvaarga'l en’raar. (appoasthalar
7:7)
மேலும் விருத்தசேதன
உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார். அந்தப்படியே
அவன் ஈசாக்கைப் பெற்றபோது,
எட்டாம் நாளிலே அவனை விருத்தசேதனம்பண்ணினான். ஈசாக்கு
யாக்கோபையும், யாக்கோபு பன்னிரண்டு
கோத்திரப்பிதாக்களையும் பெற்றார்கள். (அப்போஸ்தலர்
7:8)
mealum viruththaseathana udanpadikkaiyaiyum avanukku
ea’rpaduththinaar. anthappadiyea
avan eesaakkaip pet’rapoathu, ettaam naa'lilea
avanai viruththaseathanampa'n'ninaan.
eesaakku
yaakkoabaiyum, yaakkoabu pannira'ndu
koaththirappithaakka'laiyum pet’raarga'l. (appoasthalar
7:8)
அந்தக் கோத்திரப்பிதாக்கள் பொறாமைகொண்டு
யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோகும்படியாக விற்றுப்போட்டார்கள். (அப்போஸ்தலர்
7:9)
anthak koaththirappithaakka'l po’raamaiko'ndu yoaseappai egipthukkuk ko'ndupoagumpadiyaaga vit’ruppoattaarga'l. (appoasthalar 7:9)
தேவனோ அவனுடனேகூட
இருந்து, எல்லா உபத்திரவங்களினின்றும் அவனை விடுவித்து, எகிப்தின்
ராஜாவாகிய பார்வோன் சமுகத்திலே
அவனுக்குக் கிருபையையும் ஞானத்தையும்
அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீடனைத்திற்கும் அதிகாரியாக
ஏற்படுத்தினான். (அப்போஸ்தலர் 7:10)
theavanoa avanudaneakooda irunthu,
ellaa ubaththiravangga'linin’rum avanai
viduviththu, egipthin raajaavaagiya paarvoan samugaththilea avanukkuk kirubaiyaiyum gnaanaththaiyum aru'linaar;
antha raajaa avanai
egipthutheasaththi’rkum than veedanaiththi’rkum athigaariyaaga ea’rpaduththinaan.
(appoasthalar 7:10)
பின்பு எகிப்து
கானான் என்னும் தேசங்களிலெங்கும் பஞ்சமும்
மிகுந்த வருத்தமும் உண்டாகி,
நம்முடைய பிதாக்களுக்கு ஆகாரம்
கிடையாமற்போயிற்று. (அப்போஸ்தலர் 7:11)
pinbu egipthu kaanaan ennum theasangga'lilenggum pagnchamum miguntha varuththamum u'ndaagi, nammudaiya
pithaakka'lukku aagaaram kidaiyaama’rpoayit’ru. (appoasthalar
7:11)
அப்பொழுது எகிப்திலே
தானியம் உண்டென்று யாக்கோபு
கேள்விப்பட்டு, நம்முடைய பிதாக்களை
முதலாந்தரம் அனுப்பினான். (அப்போஸ்தலர்
7:12)
appozhuthu egipthilea thaaniyam
u'nden’ru
yaakkoabu
kea'lvippattu, nammudaiya
pithaakka'lai muthalaantharam anuppinaan.
(appoasthalar 7:12)
இரண்டாந்தரம் யோசேப்பு
தன்னுடைய சகோதரருக்குத் தன்னைத்
தெரியப்படுத்தினான். யோசேப்புடைய வம்சமும்
பார்வோனுக்குத் தெரியவந்தது. (அப்போஸ்தலர்
7:13)
ira'ndaantharam yoaseappu thannudaiya
sagoathararukkuth thannaith
theriyappaduththinaan. yoaseappudaiya vamsamum paarvoanukkuth theriyavanthathu. (appoasthalar
7:13)
பின்பு யோசேப்பு,
தன்னுடைய தகப்பன் யாக்கோபும்
தன்னுடைய இனத்தார் யாவருமாகிய,
எழுபத்தைந்துபேரை அழைக்க அனுப்பினான்.
(அப்போஸ்தலர் 7:14)
pinbu yoaseappu, thannudaiya thagappan yaakkoabum thannudaiya
inaththaar yaavarumaagiya, ezhubaththainthupearai
azhaikka anuppinaan. (appoasthalar
7:14)
அந்தப்படி யாக்கோபு
எகிப்துக்குப் போனான். அவனும்
நம்முடைய பிதாக்களும் மரித்து,
(அப்போஸ்தலர் 7:15)
anthappadi yaakkoabu egipthukkup poanaan.
avanum nammudaiya pithaakka'lum
mariththu, (appoasthalar 7:15)
அங்கேயிருந்து சீகேமுக்குக்
கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின்
தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் ரொக்கக்கிரயத்துக்கு வாங்கியிருந்த
கல்லறையில் வைக்கப்பட்டார்கள். (அப்போஸ்தலர்
7:16)
anggeayirunthu seekeamukkuk ko'nduvarappattu, aabirahaam seekeamin thagappanaagiya eamoarudaiya santhathiyaaridaththil rokkakkirayaththukku vaanggiyiruntha kalla’raiyil vaikkappattaarga'l. (appoasthalar 7:16)
ஆபிரகாமுக்குத் தேவன் ஆணையிட்டு அருளின
வாக்குத்தத்தம் நிறைவேறுங்காலம் சமீபித்தபோது,
(அப்போஸ்தலர் 7:17)
aabirahaamukkuth theavan
aa'naiyittu aru'lina
vaakkuththaththam ni’raivea’rungkaalam sameebiththapoathu, (appoasthalar 7:17)
யோசேப்பை அறியாத
வேறொரு ராஜா தோன்றின
காலமளவும், ஜனங்கள் எகிப்திலே
பலுகிப் பெருகினார்கள். (அப்போஸ்தலர்
7:18)
yoaseappai a’riyaatha vea’roru raajaa thoan’rina kaalama'lavum, janangga'l egipthilea palugip peruginaarga'l. (appoasthalar 7:18)
அவன் நம்முடைய
ஜனங்களை வஞ்சனையாய் நடப்பித்து,
நம்முடைய பிதாக்களின் குழந்தைகள்
உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை
வெளியே போட்டுவிடும்படி செய்து,
அவர்களை உபத்திரவப்படுத்தினான். (அப்போஸ்தலர்
7:19)
avan nammudaiya
janangga'lai vagnchanaiyaay nadappiththu,
nammudaiya pithaakka'lin kuzhanthaiga'l uyiroadiraathapadikku avarga'l avaiga'lai ve'liyea
poattuvidumpadi seythu, avarga'lai ubaththiravappaduththinaan. (appoasthalar
7:19)
அக்காலத்திலே மோசே பிறந்து, திவ்விய
சவுந்தரியமுள்ளவனாயிருந்து, மூன்று மாதமளவும்
தன் தகப்பன் வீட்டிலே
வளர்க்கப்பட்டான். (அப்போஸ்தலர் 7:20)
akkaalaththilea moasea pi’ranthu, thivviya
savunthariyamu'l'lavanaayirunthu, moon’ru maathama'lavum than thagappan veettilea va'larkkappattaan. (appoasthalar 7:20)
அவன் வெளியே
போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய குமாரத்தி
அவனை எடுத்துத் தனக்குப்
பிள்ளையாக வளர்த்தாள். (அப்போஸ்தலர்
7:21)
avan ve'liyea
poattuvidappattapoathu, paarvoanudaiya kumaaraththi
avanai eduththuth thanakkup
pi'l'laiyaaga va'larththaa'l. (appoasthalar
7:21)
மோசே எகிப்தியருடைய
சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும்
செய்கையிலும் வல்லவனானான். (அப்போஸ்தலர்
7:22)
moasea egipthiyarudaiya
sagala
saasthirangga'lilum ka’rpikkappattu, vaakkilum seygaiyilum vallavanaanaan. (appoasthalar
7:22)
அவனுக்கு நாற்பது
வயதானபோது, இஸ்ரவேல் புத்திரராகிய
தன்னுடைய சகோதரரைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய
இருதயத்தில் எண்ணமுண்டாயிற்று. (அப்போஸ்தலர்
7:23)
avanukku naa’rpathu vayathaanapoathu, israveal
puththiraraagiya thannudaiya
sagoathararaik ka'ndu
santhikkumpadi avanudaiya
iruthayaththil e'n'namu'ndaayit’ru. (appoasthalar 7:23)
அப்பொழுது அவர்களில்
ஒருவன் அநியாயமாய் நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத்
துணைநின்று, எகிப்தியனை வெட்டி,
துன்பப்பட்டவனுக்கு நியாயஞ்செய்தான். (அப்போஸ்தலர்
7:24)
appozhuthu avarga'lil oruvan
aniyaayamaay nadaththappadugi’rathai avan ka'ndu,
avanukkuth thu'nainin’ru, egipthiyanai vetti, thunbappattavanukku niyaayagnseythaan. (appoasthalar
7:24)
தன்னுடைய கையினாலே
தேவன் தங்களுக்கு இரட்சிப்பைத்
தருவாரென்பதைத் தன்னுடைய சகோதரர்
அறிந்துகொள்வார்களென்று அவன் நினைத்தான்;
அவர்களோ அதை அறியவில்லை.
(அப்போஸ்தலர் 7:25)
thannudaiya kaiyinaalea
theavan thangga'lukku iradchippaith tharuvaarenbathaith thannudaiya sagoatharar a’rinthuko'lvaarga'len’ru avan ninaiththaan; avarga'loa athai a’riyavillai. (appoasthalar 7:25)
மறுநாளிலே சண்டைபண்ணிகொண்டிருக்கிற இரண்டுபேருக்கு அவன் எதிர்ப்பட்டு: மனுஷரே,
நீங்கள் சகோதரராயிருக்கிறீர்கள்: ஒருவருக்கொருவர் அநியாயஞ்செய்கிறதென்ன என்று,
அவர்களைச் சமாதானப்படுத்தும்படி பேசினான்.
(அப்போஸ்தலர் 7:26)
ma’runaa'lilea sa'ndaipa'n'niko'ndirukki’ra ira'ndupearukku avan ethirppattu: manusharea, neengga'l sagoathararaayirukki’reerga'l: oruvarukkoruvar aniyaayagnseygi’rathenna en’ru, avarga'laich samaathaanappaduththumpadi peasinaan. (appoasthalar
7:26)
பிறனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப்
பிடித்துத் தள்ளி: எங்கள்மேல்
அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் உன்னை ஏற்படுத்தினவன் யார்? (அப்போஸ்தலர் 7:27)
pi’ranukku aniyaayagnseythavan avanaip pidiththuth
tha'l'li: engga'lmeal athigaariyaagavum niyaayaathibathiyaagavum unnai ea’rpaduththinavan yaar? (appoasthalar 7:27)
நேற்று நீ அந்த எகிப்தியனைக்
கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட
மனதாயிருக்கிறாயோ என்றான். (அப்போஸ்தலர்
7:28)
neat’ru nee antha egipthiyanaik kon’rathupoala ennaiyum kon’rupoada manathaayirukki’raayoa en’raan. (appoasthalar
7:28)
இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான்
தேசத்திலே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு
இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்.
(அப்போஸ்தலர் 7:29)
intha vaarththaiyinimiththam moasea oadippoay,
meethiyaan theasaththilea sagnchariththukko'ndirunthaan; anggea irukkumpoathu
avanukku ira'ndu kumaararga'l pi’ranthaarga'l. (appoasthalar 7:29)
நாற்பது வருஷம்
சென்றபின்பு, சீனாய்மலையின் வனாந்தரத்திலே
கர்த்தருடைய தூதனானவர் முட்செடி
எரிகிற அக்கினிஜுவாலையிலே அவனுக்குத்
தரிசனமானார். (அப்போஸ்தலர் 7:30)
naa’rpathu varusham sen’rapinbu, seenaaymalaiyin vanaantharaththilea karththarudaiya thoothanaanavar mudchedi erigi’ra akkinijuvaalaiyilea avanukkuth
tharisanamaanaar. (appoasthalar
7:30)
மோசே அந்தத்
தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு,
அதை உற்றுப்பார்க்கும்படி சமீபித்துவருகையில்: (அப்போஸ்தலர்
7:31)
moasea anthath tharisanaththaik ka'ndu,
athisayappattu, athai ut’ruppaarkkumpadi
sameebiththuvarugaiyil: (appoasthalar 7:31)
நான் ஆபிரகாமின்
தேவனும் ஈசாக்கின் தேவனும்
யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்று கர்த்தர் திருவுளம்பற்றின சத்தம்
அவனுக்கு உண்டாயிற்று. அப்பொழுது
மோசே நடுக்கமடைந்து, உற்றுப்பார்க்கத் துணியாமலிருந்தான். (அப்போஸ்தலர்
7:32)
naan aabirahaamin theavanum eesaakkin theavanum
yaakkoabin theavanumaagiya un pithaakka'ludaiya theavanaayirukki’rean en’ru karththar
thiruvu'lampat’rina saththam avanukku
u'ndaayit’ru. appozhuthu
moasea
nadukkamadainthu, ut’ruppaarkkath thu'niyaamalirunthaan. (appoasthalar
7:32)
பின்னும் கர்த்தர்
அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற பாதரட்சைகளைக்
கழற்றிப்போடு; நீ நிற்கிற
இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது. (அப்போஸ்தலர்
7:33)
pinnum karththar
avanai noakki: un paathangga'lilirukki’ra paatharadchaiga'laik kazhat’rippoadu; nee ni’rki’ra idam parisuththa boomiyaayirukki’rathu. (appoasthalar
7:33)
எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை
நான் பார்க்கவே பார்த்து,
அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை
விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகையால்,
நீ வா, நான் உன்னை எகிப்திற்கு
அனுப்புவேன் என்றார். (அப்போஸ்தலர்
7:34)
egipthilirukki’ra en janaththin ubaththiravaththai naan paarkkavea paarththu,
avarga'l
perumoochchaikkeattu, avarga'lai viduvikkumpadi i’rangginean; aagaiyaal, nee vaa, naan unnai egipthi’rku anuppuvean
en’raar.
(appoasthalar 7:34)
உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார் என்று சொல்லி
அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயைத்தானே தேவன்,
முட்செடியில் அவனுக்குத் தரிசனமான
தூதனாலே, தலைவனாகவும் மீட்பனாகவும்
அனுப்பினார். (அப்போஸ்தலர் 7:35)
unnai athigaariyaagavum niyaayaathibathiyaagavum ea’rpaduththinavan yaar en’ru solli avarga'l ma’ruthaliththiruntha
intha moaseayaiththaanea theavan,
mudchediyil avanukkuth
tharisanamaana thoothanaalea, thalaivanaagavum meedpanaagavum anuppinaar.
(appoasthalar 7:35)
இவனே அவர்களை
அங்கேயிருந்து அழைத்துக்கொண்டுவந்து, எகிப்து
தேசத்திலேயும் சிவந்த சமுத்திரத்திலேயும், நாற்பது
வருஷகாலமாய் வனாந்தரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
(அப்போஸ்தலர் 7:36)
ivanea avarga'lai anggeayirunthu azhaiththukko'nduvanthu, egipthu theasaththileayum sivantha samuththiraththileayum, naa’rpathu varushakaalamaay vanaantharaththileayum, a’rputhangga'laiyum adaiyaa'langga'laiyum seythaan. (appoasthalar 7:36)
இஸ்ரவேல் புத்திரரை
நோக்கி: உங்கள் தேவனாகிய
கர்த்தர் உங்கள் சகோதரரிலிருந்து என்னைப்போல
ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக
எழும்பப்பண்ணுவார், அவருக்குச் செவிகொடுப்பீர்களாக என்று சொன்னவன் இந்த மோசேயே. (அப்போஸ்தலர்
7:37)
israveal puththirarai
noakki: ungga'l theavanaagiya karththar ungga'l sagoathararilirunthu ennaippoala
oru theerkkatharisiyai ungga'lukkaaga ezhumbappa'n'nuvaar, avarukkuch sevikoduppeerga'laaga en’ru sonnavan intha moaseayea. (appoasthalar 7:37)
சீனாய்மலையில் தன்னுடனே
பேசின தூதனோடும் நம்முடைய
பிதாக்களோடுங்கூட வனாந்தரத்திலே சபைக்குள்ளிருந்தவனும், நமக்குக்
கொடுக்கும்படி ஜீவவாக்கியங்களைப் பெற்றவனும்
இவனே. (அப்போஸ்தலர் 7:38)
seenaaymalaiyil thannudanea peasina thoothanoadum
nammudaiya pithaakka'loadungkooda vanaantharaththilea sabaikku'l'lirunthavanum, namakkuk
kodukkumpadi jeevavaakkiyangga'laip pet’ravanum ivanea. (appoasthalar
7:38)
இவனுக்கு நம்முடைய
பிதாக்கள் கீழ்ப்படிய மனதாயிராமல்,
இவனைத் தள்ளிவிட்டு, தங்கள்
இருதயங்களில் எகிப்துக்குத் திரும்பி,
(அப்போஸ்தலர் 7:39)
ivanukku nammudaiya
pithaakka'l keezhppadiya manathaayiraamal, ivanaith
tha'l'livittu, thangga'l iruthayangga'lil egipthukkuth thirumbi, (appoasthalar
7:39)
ஆரோனை நோக்கி:
எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்;
ஆதலால் எங்களுக்கு முன்செல்லும்
தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும்
என்று சொல்லி; (அப்போஸ்தலர்
7:40)
aaroanai noakki:
egipthutheasaththilirunthu engga'lai azhaiththukko'nduvantha antha moaseakku enna sambaviththathoa a’riyoam; aathalaal engga'lukku munsellum theyvangga'lai engga'lukku u'ndupa'n'num
en’ru
solli;
(appoasthalar 7:40)
அந்நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி,
அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு,
தங்கள் கையின் கிரியைகளில்
களிகூர்ந்தார்கள். (அப்போஸ்தலர் 7:41)
annaadka'lil oru kan’rukkuttiyai u'ndupa'n'ni,
antha vikkiragaththi’rkup baliyittu, thangga'l kaiyin kiriyaiga'lil ka'likoornthaarga'l. (appoasthalar
7:41)
அப்பொழுது தேவன் அவர்களை விட்டு
விலகி, வானசேனைக்கு ஆராதனைசெய்ய
அவர்களை ஒப்புக்கொடுத்தார். அதைக்குறித்து: இஸ்ரவேல்
வம்சத்தாரே, நீங்கள் வனாந்தரத்திலிருந்த நாற்பது
வருஷம்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும்
எனக்குச் செலுத்தினீர்களோ என்றும்,
(அப்போஸ்தலர் 7:42)
appozhuthu theavan
avarga'lai vittu vilagi, vaanaseanaikku aaraathanaiseyya avarga'lai oppukkoduththaar. athaikku’riththu: israveal
vamsaththaarea, neengga'l vanaantharaththiliruntha naa’rpathu varushamvaraiyil kaa'nikkaiga'laiyum baliga'laiyum enakkuch seluththineerga'loa en’rum, (appoasthalar
7:42)
பணிந்துகொள்ளும்படி நீங்கள்
உண்டாக்கின சொரூபங்களாகிய மோளோகினுடைய
கூடாரத்தையும், உங்கள் தேவனாகிய
ரெம்பான் என்னும் நட்சத்திர
சொரூபத்தையும் சுமந்தீர்களே; ஆகையால்
உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே
குடிபோகப்பண்ணுவேன் என்றும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்தில்
எழுதியிருக்கிறதே. (அப்போஸ்தலர் 7:43)
pa'ninthuko'l'lumpadi neengga'l u'ndaakkina
soroobangga'laagiya moa'loakinudaiya koodaaraththaiyum, ungga'l theavanaagiya rempaan
ennum nadchaththira soroobaththaiyum sumantheerga'lea; aagaiyaal ungga'laip baabiloanukku appu’raththilea kudipoagappa'n'nuvean en’rum, theerkkatharisiga'lin pusthagaththil ezhuthiyirukki’rathea. (appoasthalar
7:43)
மேலும் நீ பார்த்த மாதிரியின்படியே சாட்சியின்
கூடாரத்தை உண்டுபண்ணுவாயாக என்று மோசேயுடனே பேசினவர்
கட்டளையிட்ட பிரகாரமாக, அந்தக்
கூடாரம் வனாந்தரத்திலே நம்முடைய
பிதாக்களோடு இருந்தது. (அப்போஸ்தலர்
7:44)
mealum nee paarththa maathiriyinpadiyea saadchiyin koodaaraththai u'ndupa'n'nuvaayaaga en’ru moaseayudanea peasinavar katta'laiyitta piragaaramaaga, anthak
koodaaram vanaantharaththilea nammudaiya
pithaakka'loadu irunthathu. (appoasthalar
7:44)
மேலும், யோசுவாவுடனேகூட நம்முடைய
பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத்
துரத்திவிட்ட புறஜாதிகளுடைய தேசத்தை
அவர்கள் கட்டிக்கொள்ளுகையில், அதை அந்தத் தேசத்தில்
கொண்டுவந்து, தாவீதின் நாள்வரைக்கும்
வைத்திருந்தார்கள். (அப்போஸ்தலர் 7:45)
mealum, yoasuvaavudaneakooda nammudaiya
pithaakka'l athaip pet’rukko'ndu, theavan
avarga'lukku munbaagath thuraththivitta pu’rajaathiga'ludaiya theasaththai avarga'l kattikko'l'lugaiyil, athai anthath theasaththil ko'nduvanthu,
thaaveethin naa'lvaraikkum vaiththirunthaarga'l. (appoasthalar
7:45)
இவன் தேவனிடத்தில்
தயவு பெற்றபடியினால், யாக்கோபின்
தேவனுக்கு ஒரு வாசஸ்தலத்தைத்
தான் கட்டவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணினான். (அப்போஸ்தலர்
7:46)
ivan theavanidaththil thayavu
pet’rapadiyinaal, yaakkoabin theavanukku
oru vaasasthalaththaith thaan kattavea'ndumen’ru vi'n'nappampa'n'ninaan. (appoasthalar
7:46)
சாலொமோனோ அவருக்கு
ஆலயத்தைக் கட்டினான். (அப்போஸ்தலர்
7:47)
saalomoanoa avarukku aalayaththaik
kattinaan. (appoasthalar
7:47)
ஆகிலும் உன்னதமானவர்
கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில்
வாசமாயிரார். (அப்போஸ்தலர் 7:48)
aagilum unnathamaanavar kaiga'linaal seyyappatta aalayangga'lil vaasamaayiraar. (appoasthalar 7:48)
வானம் எனக்குச்
சிங்காசனமும் பூமி எனக்குப்
பாதபடியுமாயிருக்கிறது; எனக்காக நீங்கள்
எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்;
நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம்
எது; (அப்போஸ்தலர் 7:49)
vaanam enakkuch singgaasanamum boomi enakkup paathapadiyumaayirukki’rathu; enakkaaga neengga'l eppadippatta veettaik kattuveerga'l; naan thanggiyirukkaththakka
sthalam ethu; (appoasthalar
7:49)
இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய
கரம் உண்டாக்கவில்லையா என்று கர்த்தர் உரைக்கிறார்
என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. (அப்போஸ்தலர்
7:50)
ivaiga'l ellaavat’raiyum ennudaiya karam u'ndaakkavillaiyaa en’ru karththar
uraikki’raar en’ru theerkkatharisi solliyirukki’raanea. (appoasthalar 7:50)
வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும்
செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே,
உங்கள் பிதாக்களைப்போல நீங்களும்
பரிசுத்தஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள். (அப்போஸ்தலர்
7:51)
va'nanggaak kazhuththu'l'lavarga'lea, iruthayaththilum seviga'lilum viruththaseathanam pe’raathavarga'lea, ungga'l pithaakka'laippoala neengga'lum parisuththaaavikku eppozhuthum
ethirththuni’rki’reerga'l. (appoasthalar 7:51)
தீர்க்கதரிசிகளில் யாரை உங்கள் பிதாக்கள்
துன்பப்படுத்தாமலிருந்தார்கள்? நீதிபரருடைய வருகையை
முன்னறிவித்தவர்களையும் அவர்கள் கொலைசெய்தார்கள். இப்பொழுது
நீங்கள் அவருக்குத் துரோகிகளும்
அவரைக் கொலைசெய்த பாதகருமாயிருக்கிறீர்கள். (அப்போஸ்தலர்
7:52)
theerkkatharisiga'lil yaarai ungga'l pithaakka'l
thunbappaduththaamalirunthaarga'l? neethipararudaiya varugaiyai munna’riviththavarga'laiyum avarga'l kolaiseythaarga'l. ippozhuthu
neengga'l
avarukkuth thuroagiga'lum avaraik kolaiseytha paathagarumaayirukki’reerga'l. (appoasthalar
7:52)
தேவதூதரைக்கொண்டு நீங்கள்
நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கைக்கொள்ளாமற்போனீர்கள் என்றான்.
(அப்போஸ்தலர் 7:53)
theavathootharaikko'ndu neengga'l niyaayappiramaa'naththaip pet’rirunthum, athaik
kaikko'l'laama’rpoaneerga'l en’raan. (appoasthalar 7:53)
இவைகளை அவர்கள்
கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவனைப்
பார்த்துப் பல்லைக் கடித்தார்கள்.
(அப்போஸ்தலர் 7:54)
ivaiga'lai avarga'l keattapozhuthu, moorkkamadainthu, avanaip
paarththup pallaik kadiththaarga'l. (appoasthalar
7:54)
அவன் பரிசுத்தஆவியினாலே நிறைந்தவனாய்,
வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய
மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர்
நிற்கிறதையும் கண்டு: (அப்போஸ்தலர்
7:55)
avan parisuththaaaviyinaalea ni’rainthavanaay, vaanaththai
a'n'naanthupaarththu, theavanudaiya magimaiyaiyum, theavanudaiya
valathupaarisaththil iyeasuvaanavar ni’rki’rathaiyum ka'ndu: (appoasthalar
7:55)
அதோ வானங்கள்
திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய
வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன்
என்றான். (அப்போஸ்தலர் 7:56)
athoa vaanangga'l thi’ranthirukki’rathaiyum, manushakumaaran theavanudaiya
valathupaarisaththil ni’rki’rathaiyum kaa'ngi’rean en’raan. (appoasthalar 7:56)
அப்பொழுது அவர்கள்
உரத்தசத்தமாய்க் கூக்குரலிட்டுத் தங்கள்
காதுகளை அடைத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு
அவன்மேல் பாய்ந்து, (அப்போஸ்தலர்
7:57)
appozhuthu avarga'l uraththasaththamaayk kookkuralittuth thangga'l kaathuga'lai adaiththukko'ndu, orumanappattu avanmeal
paaynthu, (appoasthalar 7:57)
அவனை நகரத்துக்குப்
புறம்பே தள்ளி, அவனைக்
கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர் தங்கள்
வஸ்திரங்களைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தினருகே
வைத்தார்கள். (அப்போஸ்தலர் 7:58)
avanai nagaraththukkup pu’rambea tha'l'li, avanaik
kalle’rinthaarga'l. saadchikkaarar thangga'l vasthirangga'laik kazhat’ri, savul ennappatta oru vaalibanudaiya paathaththinarugea vaiththaarga'l. (appoasthalar
7:58)
அப்பொழுது: கர்த்தராகிய
இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக்
கல்லெறிந்தார்கள். (அப்போஸ்தலர் 7:59)
appozhuthu: karththaraagiya iyeasuvea, en aaviyai eat’rukko'l'lum en’ru stheavaan
thozhuthuko'l'lugaiyil, avanaik
kalle’rinthaarga'l. (appoasthalar
7:59)
அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே,
இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச்
சுமத்தாதிரும் என்று மிகுந்த
சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச்
சொல்லி, நித்திரையடைந்தான். (அப்போஸ்தலர்
7:60)
avanoa, muzhanggaa’rpadiyittu: aa'ndavarea, ivarga'lmeal inthap
paavaththaich sumaththaathirum en’ru miguntha saththamittuch sonnaan. ippadich solli, niththiraiyadainthaan. (appoasthalar
7:60)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!