அந்நாட்களிலே, சீஷர்கள்
பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள்
விதவைகள் அன்றாடக விசாரணையில்
திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு
விரோதமாய் முறுமுறுத்தார்கள். (அப்போஸ்தலர்
6:1)
annaadka'lilea, seesharga'l peruginapoathu, kireakkaraanavarga'l, thangga'l vithavaiga'l an’raadaga visaara'naiyil thittamaay visaarikkappadavillaiyen’ru, ebireyarukku viroathamaay mu’rumu’ruththaarga'l. (appoasthalar
6:1)
அப்பொழுது பன்னிருவரும்
சீஷர் கூட்டத்தை வரவழைத்து:
நாங்கள் தேவவசனத்தைப் போதியாமல்,
பந்திவிசாரணைசெய்வது தகுதியல்ல. (அப்போஸ்தலர்
6:2)
appozhuthu panniruvarum
seeshar
koottaththai varavazhaiththu: naangga'l theavavasanaththaip poathiyaamal,
panthivisaara'naiseyvathu thaguthiyalla. (appoasthalar
6:2)
ஆதலால் சகோதரரே,
பரிசுத்தஆவியும் ஞானமும் நிறைந்து,
நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை
உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை
இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம். (அப்போஸ்தலர்
6:3)
aathalaal sagoathararea, parisuththaaaviyum gnaanamum
ni’rainthu, na’rsaadchi pet’rirukki’ra eazhupearai
ungga'lil
therinthuko'l'lungga'l; avarga'lai intha vealaikkaaga ea’rpaduththuvoam.
(appoasthalar 6:3)
நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப்
போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல்
தரித்திருப்போம் என்றார்கள். (அப்போஸ்தலர்
6:4)
naangga'loa jebampa'n'nuvathilum
theavavasanaththaip poathikki’ra oozhiyaththilum idaividaamal
thariththiruppoam en’raarga'l. (appoasthalar
6:4)
இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது
விசுவாசமும் பரிசுத்தஆவியும் நிறைந்தவனாகிய
ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும்,
நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா
பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு, (அப்போஸ்தலர்
6:5)
intha yoasanai sabaiyaarellaarukkum piriyamaayirunthathu. appozhuthu
visuvaasamum parisuththaaaviyum ni’rainthavanaagiya stheavaanaiyum, pilippaiyum,
pirokoaraiyum, nikkaanoaraiyum, theemoanaiyum, parmenaavaiyum, yoothamaarkkaththamainthavanaana anthiyoakiyaa patta'naththaanaagiya nikkolaavaiyum therinthuko'ndu, (appoasthalar
6:5)
அவர்களை அப்போஸ்தலருக்குமுன்பாக நிறுத்தினார்கள். இவர்கள்
ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள். (அப்போஸ்தலர்
6:6)
avarga'lai appoasthalarukkumunbaaga ni’ruththinaarga'l. ivarga'l jebampa'n'ni, avarga'lmeal kaiga'lai vaiththaarga'l. (appoasthalar
6:6)
தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய
தொகை எருசலேமில் மிகவும்
பெருகிற்று; ஆசாரியர்களில் அநேகரும்
விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள். (அப்போஸ்தலர்
6:7)
theavavasanam viruththiyadainthathu; seesharudaiya thogai erusaleamil migavum perugit’ru; aasaariyarga'lil aneagarum visuvaasaththukkuk keezhppadinthaarga'l. (appoasthalar
6:7)
ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய்
ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
(அப்போஸ்தலர் 6:8)
stheavaan visuvaasaththinaalum vallamaiyinaalum ni’rainthavanaay janangga'lukku'l'lea periya
a’rputhangga'laiyum adaiyaa'langga'laiyum seythaan. (appoasthalar
6:8)
அப்பொழுது லிபர்த்தீனர்
என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே
பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா
நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும்
சிலர் எழும்பி, ஸ்தேவானுடனே
தர்க்கம்பண்ணினார்கள். (அப்போஸ்தலர் 6:9)
appozhuthu libarththeenar ennappattavarga'lin aalayaththaich searnthavarga'lilum, sireanea patta'naththaarilum, aleksanthiriyaa patta'naththaarilum, silisiyaa naattaarilum, aasiyaa theasaththaarilum silar ezhumbi, stheavaanudanea tharkkampa'n'ninaarga'l. (appoasthalar
6:9)
அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும்
எதிர்த்துநிற்க அவர்களால் கூடாமற்போயிற்று. (அப்போஸ்தலர்
6:10)
avan peasina gnaanaththaiyum aaviyaiyum
ethirththuni’rka avarga'laal koodaama’rpoayit’ru. (appoasthalar 6:10)
அப்பொழுது அவர்கள்:
மோசேக்கும் தேவனுக்கும் விரோதமாக
இவன் தூஷண வார்த்தைகளைப்
பேசக்கேட்டோம் என்று சொல்லும்படியாக மனுஷரை
ஏற்படுத்தி; (அப்போஸ்தலர் 6:11)
appozhuthu avarga'l: moaseakkum theavanukkum
viroathamaaga ivan thoosha'na vaarththaiga'laip peasakkeattoam en’ru sollumpadiyaaga manusharai
ea’rpaduththi; (appoasthalar
6:11)
ஜனங்களையும் மூப்பரையும்
வேதபாரகரையும் எழுப்பிவிட்டு; அவன்மேல்
பாய்ந்து, அவனைப் பிடித்து,
ஆலோசனைச் சங்கத்தாருக்கு முன்பாக
இழுத்துக்கொண்டுபோய்; (அப்போஸ்தலர் 6:12)
janangga'laiyum moopparaiyum veathapaaragaraiyum ezhuppivittu; avanmeal
paaynthu, avanaip pidiththu,
aaloasanaich sanggaththaarukku munbaaga izhuththukko'ndupoay; (appoasthalar
6:12)
பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்:
இந்த மனுஷன் இந்தப்
பரிசுத்த ஸ்தலத்துக்கும் வேதப்பிரமாணத்துக்கும் விரோதமாகத்
தூஷண வார்த்தைகளை ஓயாமற்
பேசுகிறான்; (அப்போஸ்தலர் 6:13)
poychsaadchiga'laiyum ni’ruththinaarga'l. ivarga'l: intha manushan
inthap parisuththa sthalaththukkum veathappiramaa'naththukkum viroathamaagath thoosha'na
vaarththaiga'lai oayaama’r peasugi’raan; (appoasthalar
6:13)
எப்படியென்றால், நசரேயனாகிய
அந்த இயேசு இந்த ஸ்தலத்தை அழித்துப்போட்டு, மோசே நமக்குக் கொடுத்த
முறைமைகளை மாற்றுவானென்று இவன் சொல்லக்கேட்டோம் என்றார்கள்.
(அப்போஸ்தலர் 6:14)
eppadiyen’raal, nasareayanaagiya antha iyeasu intha sthalaththai
azhiththuppoattu, moasea namakkuk
koduththa mu’raimaiga'lai maat’ruvaanen’ru ivan sollakkeattoam en’raarga'l. (appoasthalar
6:14)
ஆலோசனைச் சங்கத்தில்
உட்கார்ந்திருந்த அனைவரும் அவன்மேல்
கண்ணோக்கமாயிருந்து, அவன் முகம் தேவதூதன் முகம்போலிருக்கக் கண்டார்கள்.
(அப்போஸ்தலர் 6:15)
aaloasanaich sanggaththil udkaarnthiruntha anaivarum
avanmeal ka'n'noakkamaayirunthu, avan mugam theavathoothan mugampoalirukkak ka'ndaarga'l. (appoasthalar
6:15)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!