Wednesday, May 18, 2016

Appoasthalar 5 | அப்போஸ்தலருடைய நடபடிகள் 5 | Acts 5

அனனியா  என்னும்  பேருள்ள  ஒருவனும்,  அவனுடைய  மனைவியாகிய  சப்பீராளும்  தங்கள்  காணியாட்சியை  விற்றார்கள்.  (அப்போஸ்தலர்  5:1)

ananiyaa  ennum  pearu'l'la  oruvanum,  avanudaiya  manaiviyaagiya  sappeeraa'lum  thangga'l  kaa'niyaadchiyai  vit’raarga'l.  (appoasthalar  5:1)

தன்  மனைவி  அறிய  அவன்  கிரயத்திலே  ஒரு  பங்கை  வஞ்சித்துவைத்து,  ஒரு  பங்கைக்  கொண்டுவந்து,  அப்போஸ்தலருடைய  பாதத்திலே  வைத்தான்.  (அப்போஸ்தலர்  5:2)

than  manaivi  a’riya  avan  kirayaththilea  oru  panggai  vagnchiththuvaiththu,  oru  panggaik  ko'nduvanthu,  appoasthalarudaiya  paathaththilea  vaiththaan.  (appoasthalar  5:2)

பேதுரு  அவனை  நோக்கி:  அனனியாவே,  நிலத்தின்  கிரயத்தில்  ஒரு  பங்கை  வஞ்சித்துவைத்து,  பரிசுத்தஆவியினிடத்தில்  பொய்சொல்லும்படி,  சாத்தான்  உன்  இருதயத்தை  நிரப்பினதென்ன?  (அப்போஸ்தலர்  5:3)

peathuru  avanai  noakki:  ananiyaavea,  nilaththin  kirayaththil  oru  panggai  vagnchiththuvaiththu,  parisuththaaaviyinidaththil  poysollumpadi,  saaththaan  un  iruthayaththai  nirappinathenna?  (appoasthalar  5:3)

அதை  விற்கும்  முன்னே  அது  உன்னுடையதாயிருக்கவில்லையோ?  அதை  விற்றபின்பும்  அதின்  கிரயம்  உன்  வசத்திலிருக்கவில்லையோ?  நீ  உன்  இருதயத்திலே  இப்படிப்பட்ட  எண்ணங்கொண்டதென்ன?  நீ  மனுஷரிடத்தில்  அல்ல,  தேவனிடத்தில்  பொய்சொன்னாய்  என்றான்.  (அப்போஸ்தலர்  5:4)

athai  vi’rkum  munnea  athu  unnudaiyathaayirukkavillaiyoa?  athai  vit’rapinbum  athin  kirayam  un  vasaththilirukkavillaiyoa?  nee  un  iruthayaththilea  ippadippatta  e'n'nangko'ndathenna?  nee  manusharidaththil  alla,  theavanidaththil  poysonnaay  en’raan.  (appoasthalar  5:4)

அனனியா  இந்த  வார்த்தைகளைக்  கேட்கவே,  விழுந்து  ஜீவனை  விட்டான்.  இவைகளைக்  கேள்விப்பட்ட  யாவருக்கும்  மிகுந்த  பயமுண்டாயிற்று.  (அப்போஸ்தலர்  5:5)

ananiyaa  intha  vaarththaiga'laik  keadkavea,  vizhunthu  jeevanai  vittaan.  ivaiga'laik  kea'lvippatta  yaavarukkum  miguntha  bayamu'ndaayit’ru.  (appoasthalar  5:5)

வாலிபர்  எழுந்து,  அவனைச்  சீலையில்  சுற்றி,  வெளியே  எடுத்துக்கொண்டுபோய்,  அடக்கம்பண்ணினார்கள்.  (அப்போஸ்தலர்  5:6)

vaalibar  ezhunthu,  avanaich  seelaiyil  sut’ri,  ve'liyea  eduththukko'ndupoay,  adakkampa'n'ninaarga'l.  (appoasthalar  5:6)

ஏறக்குறைய  மூன்று  மணி  நேரத்துக்குப்பின்பு,  அவனுடைய  மனைவி  நடந்ததை  அறியாமல்,  உள்ளே  வந்தாள்.  (அப்போஸ்தலர்  5:7)

ea’rakku’raiya  moon’ru  ma'ni  nearaththukkuppinbu,  avanudaiya  manaivi  nadanthathai  a’riyaamal,  u'l'lea  vanthaa'l.  (appoasthalar  5:7)

பேதுரு  அவளை  நோக்கி:  நிலத்தை  இவ்வளவுக்குத்தானா  விற்றீர்கள்,  எனக்குச்  சொல்  என்றான்.  அவள்:  ஆம்,  இவ்வளவுக்குத்தான்  என்றாள்.  (அப்போஸ்தலர்  5:8)

peathuru  ava'lai  noakki:  nilaththai  ivva'lavukkuththaanaa  vit’reerga'l,  enakkuch  sol  en’raan.  ava'l:  aam,  ivva'lavukkuththaan  en’raa'l.  (appoasthalar  5:8)

பேதுரு  அவளை  நோக்கி:  கர்த்தருடைய  ஆவியைச்  சோதிக்கிறதற்கு  நீங்கள்  ஒருமனப்பட்டதென்ன?  இதோ,  உன்  புருஷனை  அடக்கம்பண்ணினவர்களுடைய  கால்கள்  வாசற்படியிலே  வந்திருக்கிறது,  உன்னையும்  வெளியே  கொண்டுபோவார்கள்  என்றான்.  (அப்போஸ்தலர்  5:9)

peathuru  ava'lai  noakki:  karththarudaiya  aaviyaich  soathikki’ratha’rku  neengga'l  orumanappattathenna?  ithoa,  un  purushanai  adakkampa'n'ninavarga'ludaiya  kaalga'l  vaasa’rpadiyilea  vanthirukki’rathu,  unnaiyum  ve'liyea  ko'ndupoavaarga'l  en’raan.  (appoasthalar  5:9)

உடனே  அவள்  அவனுடைய  பாதத்தில்  விழுந்து  ஜீவனை  விட்டாள்.  வாலிபர்  உள்ளே  வந்து,  அவள்  மரித்துப்போனதைக்  கண்டு,  அவளை  வெளியே  எடுத்துக்கொண்டுபோய்,  அவளுடைய  புருஷனண்டையிலே  அடக்கம்பண்ணினார்கள்.  (அப்போஸ்தலர்  5:10)

udanea  ava'l  avanudaiya  paathaththil  vizhunthu  jeevanai  vittaa'l.  vaalibar  u'l'lea  vanthu,  ava'l  mariththuppoanathaik  ka'ndu,  ava'lai  ve'liyea  eduththukko'ndupoay,  ava'ludaiya  purushana'ndaiyilea  adakkampa'n'ninaarga'l.  (appoasthalar  5:10)

சபையாரெல்லாருக்கும்,  இவைகளைக்  கேள்விப்பட்ட  மற்ற  யாவருக்கும்,  மிகுந்த  பயமுண்டாயிற்று.  (அப்போஸ்தலர்  5:11)

sabaiyaarellaarukkum,  ivaiga'laik  kea'lvippatta  mat’ra  yaavarukkum,  miguntha  bayamu'ndaayit’ru.  (appoasthalar  5:11)

அப்போஸ்தலருடைய  கைகளினாலே  அநேக  அடையாளங்களும்  அற்புதங்களும்  ஜனங்களுக்குள்ளே  செய்யப்பட்டது.  எல்லாரும்  ஒருமனப்பட்டுச்  சாலொமோனுடைய  மண்டபத்தில்  இருந்தார்கள்.  (அப்போஸ்தலர்  5:12)

appoasthalarudaiya  kaiga'linaalea  aneaga  adaiyaa'langga'lum  a’rputhangga'lum  janangga'lukku'l'lea  seyyappattathu.  ellaarum  orumanappattuch  saalomoanudaiya  ma'ndabaththil  irunthaarga'l.  (appoasthalar  5:12)

மற்றவர்களில்  ஒருவரும்  அவர்களுடனே  சேரத்  துணியவில்லை.  ஆகிலும்  ஜனங்கள்  அவர்களை  மேன்மைப்படுத்தினார்கள்.  (அப்போஸ்தலர்  5:13)

mat’ravarga'lil  oruvarum  avarga'ludanea  searath  thu'niyavillai.  aagilum  janangga'l  avarga'lai  meanmaippaduththinaarga'l.  (appoasthalar  5:13)

திரளான  புருஷர்களும்  ஸ்திரீகளும்  விசுவாசமுள்ளவர்களாகிக்  கர்த்தரிடமாக  அதிகமதிகமாய்ச்  சேர்க்கப்பட்டார்கள்.  (அப்போஸ்தலர்  5:14)

thira'laana  purusharga'lum  sthireega'lum  visuvaasamu'l'lavarga'laagik  karththaridamaaga  athigamathigamaaych  searkkappattaarga'l.  (appoasthalar  5:14)

பிணியாளிகளைப்  படுக்கைகளின்  மேலும்  கட்டில்களின்மேலும்  கிடத்தி,  பேதுரு  நடந்துபோகையில்  அவனுடைய  நிழலாகிலும்  அவர்களில்  சிலர்மேல்  படும்படிக்கு,  அவர்களை  வெளியே  வீதிகளில்  கொண்டுவந்து  வைத்தார்கள்.  (அப்போஸ்தலர்  5:15)

pi'niyaa'liga'laip  padukkaiga'lin  mealum  kattilga'linmealum  kidaththi,  peathuru  nadanthupoagaiyil  avanudaiya  nizhalaagilum  avarga'lil  silarmeal  padumpadikku,  avarga'lai  ve'liyea  veethiga'lil  ko'nduvanthu  vaiththaarga'l.  (appoasthalar  5:15)

சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து  திரளான  ஜனங்கள்  பிணியாளிகளையும்  அசுத்த  ஆவிகளால்  வாதிக்கப்பட்டவர்களையும்  எருசலேமுக்குக்  கொண்டுவந்தார்கள்;  அவர்களெல்லாரும்  குணமாக்கப்பட்டார்கள்.  (அப்போஸ்தலர்  5:16)

sut’ruppatta'nangga'lilumirunthu  thira'laana  janangga'l  pi'niyaa'liga'laiyum  asuththa  aaviga'laal  vaathikkappattavarga'laiyum  erusaleamukkuk  ko'nduvanthaarga'l;  avarga'lellaarum  ku'namaakkappattaarga'l.  (appoasthalar  5:16)

அப்பொழுது  பிரதான  ஆசாரியனும்  அவனுடனேகூட  இருந்த  சதுசேய  சமயத்தாரனைவரும்  எழும்பி,  பொறாமையினால்  நிறைந்து,  (அப்போஸ்தலர்  5:17)

appozhuthu  pirathaana  aasaariyanum  avanudaneakooda  iruntha  sathuseaya  samayaththaaranaivarum  ezhumbi,  po’raamaiyinaal  ni’rainthu,  (appoasthalar  5:17)

அப்போஸ்தலர்களைப்  பிடித்து,  பொதுவான  சிறைச்சாலையிலே  வைத்தார்கள்.  (அப்போஸ்தலர்  5:18)

appoasthalarga'laip  pidiththu,  pothuvaana  si’raichsaalaiyilea  vaiththaarga'l.  (appoasthalar  5:18)

கர்த்தருடைய  தூதன்  இராத்திரியிலே  சிறைச்சாலையின்  கதவுகளைத்  திறந்து,  அவர்களை  வெளியே  கொண்டுவந்து:  (அப்போஸ்தலர்  5:19)

karththarudaiya  thoothan  iraaththiriyilea  si’raichsaalaiyin  kathavuga'laith  thi’ranthu,  avarga'lai  ve'liyea  ko'nduvanthu:  (appoasthalar  5:19)

நீங்கள்  போய்,  தேவாலயத்திலே  நின்று,  இந்த  ஜீவவார்த்தைகள்  எல்லாவற்றையும்  ஜனங்களுக்குச்  சொல்லுங்கள்  என்றான்.  (அப்போஸ்தலர்  5:20)

neengga'l  poay,  theavaalayaththilea  nin’ru,  intha  jeevavaarththaiga'l  ellaavat’raiyum  janangga'lukkuch  sollungga'l  en’raan.  (appoasthalar  5:20)

அவர்கள்  அதைக்கேட்டு,  அதிகாலமே  தேவாலயத்தில்  பிரவேசித்துப்  போதகம்பண்ணினார்கள்.  பிரதான  ஆசாரியனும்  அவனுடனேகூட  இருந்தவர்களும்  வந்து,  ஆலோசனைச்  சங்கத்தாரையும்  இஸ்ரவேல்  புத்திரரின்  மூப்பரெல்லாரையும்  வரவழைத்து,  அப்போஸ்தலர்களைக்  கொண்டுவரும்படி  சிறைச்சாலைக்குச்  சேவகரை  அனுப்பினார்கள்.  (அப்போஸ்தலர்  5:21)

avarga'l  athaikkeattu,  athikaalamea  theavaalayaththil  piraveasiththup  poathagampa'n'ninaarga'l.  pirathaana  aasaariyanum  avanudaneakooda  irunthavarga'lum  vanthu,  aaloasanaich  sanggaththaaraiyum  israveal  puththirarin  moopparellaaraiyum  varavazhaiththu,  appoasthalarga'laik  ko'nduvarumpadi  si’raichsaalaikkuch  seavagarai  anuppinaarga'l.  (appoasthalar  5:21)

சேவகர்  போய்,  சிறைச்சாலையிலே  அவர்களைக்  காணாமல்,  திரும்பிவந்து:  (அப்போஸ்தலர்  5:22)

seavagar  poay,  si’raichsaalaiyilea  avarga'laik  kaa'naamal,  thirumbivanthu:  (appoasthalar  5:22)

சிறைச்சாலை  மிகுந்த  பத்திரமாய்ப்  பூட்டப்பட்டிருக்கவும்,  காவற்காரர்  வெளியே  கதவுகளுக்குமுன்  நிற்கவும்  கண்டோம்;  திறந்தபொழுதோ  உள்ளே  ஒருவரையும்  காணோம்  என்று  அறிவித்தார்கள்.  (அப்போஸ்தலர்  5:23)

si’raichsaalai  miguntha  paththiramaayp  poottappattirukkavum,  kaava’rkaarar  ve'liyea  kathavuga'lukkumun  ni’rkavum  ka'ndoam;  thi’ranthapozhuthoa  u'l'lea  oruvaraiyum  kaa'noam  en’ru  a’riviththaarga'l.  (appoasthalar  5:23)

இந்தச்  செய்தியை  ஆசாரியனும்  தேவாலயத்தைக்  காக்கிற  சேனைத்தலைவனும்  பிரதான  ஆசாரியர்களும்  கேட்டபொழுது,  இதென்னமாய்  முடியுமோ  என்று,  அவர்களைக்குறித்துக்  கலக்கமடைந்தார்கள்.  (அப்போஸ்தலர்  5:24)

inthach  seythiyai  aasaariyanum  theavaalayaththaik  kaakki’ra  seanaiththalaivanum  pirathaana  aasaariyarga'lum  keattapozhuthu,  ithennamaay  mudiyumoa  en’ru,  avarga'laikku’riththuk  kalakkamadainthaarga'l.  (appoasthalar  5:24)

அப்பொழுது  ஒருவன்  வந்து:  இதோ,  நீங்கள்  காவலில்  வைத்த  மனுஷர்  தேவாலயத்திலே  நின்று  ஜனங்களுக்குப்  போதகம்பண்ணுகிறார்கள்  என்று  அவர்களுக்கு  அறிவித்தான்.  (அப்போஸ்தலர்  5:25)

appozhuthu  oruvan  vanthu:  ithoa,  neengga'l  kaavalil  vaiththa  manushar  theavaalayaththilea  nin’ru  janangga'lukkup  poathagampa'n'nugi’raarga'l  en’ru  avarga'lukku  a’riviththaan.  (appoasthalar  5:25)

உடனே  சேனைத்தலைவன்  சேவகரோடேகூடப்  போய்,  ஜனங்கள்  கல்லெறிவார்களென்று  பயந்ததினால்,  பலவந்தம்பண்ணாமல்  அவர்களை  அழைத்துக்கொண்டுவந்தான்.  (அப்போஸ்தலர்  5:26)

udanea  seanaiththalaivan  seavagaroadeakoodap  poay,  janangga'l  kalle’rivaarga'len’ru  bayanthathinaal,  balavanthampa'n'naamal  avarga'lai  azhaiththukko'nduvanthaan.  (appoasthalar  5:26)

அப்படி  அவர்களை  அழைத்துக்கொண்டுவந்து,  ஆலோசனைச்  சங்கத்துக்கு  முன்பாக  நிறுத்தினார்கள்.  அப்பொழுது  பிரதான  ஆசாரியன்  அவர்களை  நோக்கி:  (அப்போஸ்தலர்  5:27)

appadi  avarga'lai  azhaiththukko'nduvanthu,  aaloasanaich  sanggaththukku  munbaaga  ni’ruththinaarga'l.  appozhuthu  pirathaana  aasaariyan  avarga'lai  noakki:  (appoasthalar  5:27)

நீங்கள்  அந்த  நாமத்தைக்குறித்துப்  போதகம்பண்ணக்கூடாதென்று  நாங்கள்  உங்களுக்கு  உறுதியாய்க்  கட்டளையிடவில்லையா?  அப்படியிருந்தும்,  இதோ,  எருசலேமை  உங்கள்  போதகத்தினாலே  நிரப்பி,  அந்த  மனுஷனுடைய  இரத்தப்பழியை  எங்கள்மேல்  சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள்  என்று  சொன்னான்.  (அப்போஸ்தலர்  5:28)

neengga'l  antha  naamaththaikku’riththup  poathagampa'n'nakkoodaathen’ru  naangga'l  ungga'lukku  u’ruthiyaayk  katta'laiyidavillaiyaa?  appadiyirunthum,  ithoa,  erusaleamai  ungga'l  poathagaththinaalea  nirappi,  antha  manushanudaiya  iraththappazhiyai  engga'lmeal  sumaththavea'ndumen’rirukki’reerga'l  en’ru  sonnaan.  (appoasthalar  5:28)

அதற்குப்  பேதுருவும்  மற்ற  அப்போஸ்தலரும்:  மனுஷருக்குக்  கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும்  தேவனுக்குக்  கீழ்ப்படிகிறதே  அவசியமாயிருக்கிறது.  (அப்போஸ்தலர்  5:29)

atha’rkup  peathuruvum  mat’ra  appoasthalarum:  manusharukkuk  keezhppadigi’rathaippaarkkilum  theavanukkuk  keezhppadigi’rathea  avasiyamaayirukki’rathu.  (appoasthalar  5:29)

நீங்கள்  மரத்திலே  தூக்கிக்  கொலைசெய்த  இயேசுவை  நம்முடைய  பிதாக்களின்  தேவன்  எழுப்பி,  (அப்போஸ்தலர்  5:30)

neengga'l  maraththilea  thookkik  kolaiseytha  iyeasuvai  nammudaiya  pithaakka'lin  theavan  ezhuppi,  (appoasthalar  5:30)

இஸ்ரவேலுக்கு  மனந்திரும்புதலையும்  பாவமன்னிப்பையும்  அருளுகிறதற்காக,  அவரை  அதிபதியாகவும்  இரட்சகராகவும்  தமது  வலதுகரத்தினாலே  உயர்த்தினார்.  (அப்போஸ்தலர்  5:31)

isravealukku  mananthirumbuthalaiyum  paavamannippaiyum  aru'lugi’ratha’rkaaga,  avarai  athibathiyaagavum  iradchagaraagavum  thamathu  valathukaraththinaalea  uyarththinaar.  (appoasthalar  5:31)

இந்தச்  சங்கதிகளைக்குறித்து  நாங்கள்  அவருக்குச்  சாட்சிகளாயிருக்கிறோம்;  தேவன்  தமக்குக்  கீழ்ப்படிகிறவர்களுக்குத்  தந்தருளின  பரிசுத்தஆவியும்  சாட்சி  என்றார்கள்.  (அப்போஸ்தலர்  5:32)

inthach  sanggathiga'laikku’riththu  naangga'l  avarukkuch  saadchiga'laayirukki’roam;  theavan  thamakkuk  keezhppadigi’ravarga'lukkuth  thantharu'lina  parisuththaaaviyum  saadchi  en’raarga'l.  (appoasthalar  5:32)

அதை  அவர்கள்  கேட்டபொழுது,  மூர்க்கமடைந்து,  அவர்களைக்  கொலைசெய்யும்படிக்கு  யோசனைபண்ணினார்கள்.  (அப்போஸ்தலர்  5:33)

athai  avarga'l  keattapozhuthu,  moorkkamadainthu,  avarga'laik  kolaiseyyumpadikku  yoasanaipa'n'ninaarga'l.  (appoasthalar  5:33)

அப்பொழுது  சகல  ஜனங்களாலும்  கனம்பெற்ற  நியாயசாஸ்திரியாகிய  கமாலியேல்  என்னும்  பேர்கொண்ட  ஒரு  பரிசேயன்  ஆலோசனைச்  சங்கத்தில்  எழுந்திருந்து,  அப்போஸ்தலரைச்  சற்றுநேரம்  வெளியே  கொண்டுபோகச்சொல்லி,  (அப்போஸ்தலர்  5:34)

appozhuthu  sagala  janangga'laalum  kanampet’ra  niyaayasaasthiriyaagiya  kamaaliyeal  ennum  pearko'nda  oru  pariseayan  aaloasanaich  sanggaththil  ezhunthirunthu,  appoasthalaraich  sat’runearam  ve'liyea  ko'ndupoagachsolli,  (appoasthalar  5:34)

சங்கத்தாரை  நோக்கி:  இஸ்ரவேலரே,  இந்த  மனுஷருக்கு  நீங்கள்  செய்யப்போகிறதைக்குறித்து  எச்சரிக்கையாயிருங்கள்.  (அப்போஸ்தலர்  5:35)

sanggaththaarai  noakki:  isravealarea,  intha  manusharukku  neengga'l  seyyappoagi’rathaikku’riththu  echcharikkaiyaayirungga'l.  (appoasthalar  5:35)

ஏனென்றால்  இந்நாட்களுக்கு  முன்னே  தெயுதாஸ்  என்பவன்  எழும்பி,  தன்னை  ஒரு  பெரியவனாகப்  பாராட்டினான்;  ஏறக்குறைய  நானூறுபேர்  அவனைச்  சேர்ந்தார்கள்;  அவன்  மடிந்துபோனான்;  அவனை  நம்பின  அனைவரும்  சிதறி,  அவமாய்ப்போனார்கள்.  (அப்போஸ்தலர்  5:36)

eanen’raal  innaadka'lukku  munnea  theyuthaas  enbavan  ezhumbi,  thannai  oru  periyavanaagap  paaraattinaan;  ea’rakku’raiya  naanoo’rupear  avanaich  searnthaarga'l;  avan  madinthupoanaan;  avanai  nambina  anaivarum  sitha’ri,  avamaayppoanaarga'l.  (appoasthalar  5:36)

அவனுக்குப்பின்பு,  குடிமதிப்பின்  நாட்களிலே,  கலிலேயனாகிய  யூதாஸ்  என்பவன்  எழும்பி,  தன்னைப்  பின்பற்றும்படி  அநேக  ஜனங்களை  இழுத்தான்;  அவனும்  அழிந்துபோனான்;  அவனை  நம்பியிருந்த  அனைவரும்  சிதறடிக்கப்பட்டார்கள்.  (அப்போஸ்தலர்  5:37)

avanukkuppinbu,  kudimathippin  naadka'lilea,  kalileayanaagiya  yoothaas  enbavan  ezhumbi,  thannaip  pinpat’rumpadi  aneaga  janangga'lai  izhuththaan;  avanum  azhinthupoanaan;  avanai  nambiyiruntha  anaivarum  sitha’radikkappattaarga'l.  (appoasthalar  5:37)

இப்பொழுது  நான்  உங்களுக்குச்  சொல்லுகிறதென்னவென்றால்,  இந்த  மனுஷருக்கு  ஒன்றுஞ்செய்யாமல்  இவர்களை  விட்டுவிடுங்கள்.  இந்த  யோசனையும்  இந்தக்  கிரியையும்  மனுஷரால்  உண்டாயிருந்ததானால்  ஒழிந்துபோம்;  (அப்போஸ்தலர்  5:38)

ippozhuthu  naan  ungga'lukkuch  sollugi’rathennaven’raal,  intha  manusharukku  on’rugnseyyaamal  ivarga'lai  vittuvidungga'l.  intha  yoasanaiyum  inthak  kiriyaiyum  manusharaal  u'ndaayirunthathaanaal  ozhinthupoam;  (appoasthalar  5:38)

தேவனால்  உண்டாயிருந்ததேயானால்,  அதை  ஒழித்துவிட  உங்களால்  கூடாது;  தேவனோடே  போர்செய்கிறவர்களாய்க்  காணப்படாதபடிக்குப்  பாருங்கள்  என்றான்.  (அப்போஸ்தலர்  5:39)

theavanaal  u'ndaayirunthatheayaanaal,  athai  ozhiththuvida  ungga'laal  koodaathu;  theavanoadea  poarseygi’ravarga'laayk  kaa'nappadaathapadikkup  paarungga'l  en’raan.  (appoasthalar  5:39)

அப்பொழுது  அவர்கள்  அவனுடைய  யோசனைக்கு  உடன்பட்டு,  அப்போஸ்தலரை  வரவழைத்து,  அடித்து,  இயேசுவின்  நாமத்தைக்குறித்துப்  பேசக்கூடாதென்று  கட்டளையிட்டு,  அவர்களை  விடுதலையாக்கினார்கள்.  (அப்போஸ்தலர்  5:40)

appozhuthu  avarga'l  avanudaiya  yoasanaikku  udanpattu,  appoasthalarai  varavazhaiththu,  adiththu,  iyeasuvin  naamaththaikku’riththup  peasakkoodaathen’ru  katta'laiyittu,  avarga'lai  viduthalaiyaakkinaarga'l.  (appoasthalar  5:40)

அவருடைய  நாமத்துக்காகத்  தாங்கள்  அவமானமடைவதற்குப்  பாத்திரராக  எண்ணப்பட்டபடியினால்,  சந்தோஷமாய்  ஆலோசனைச்  சங்கத்தைவிட்டுப்  புறப்பட்டுப்போய்,  (அப்போஸ்தலர்  5:41)

avarudaiya  naamaththukkaagath  thaangga'l  avamaanamadaivatha’rkup  paaththiraraaga  e'n'nappattapadiyinaal,  santhoashamaay  aaloasanaich  sanggaththaivittup  pu’rappattuppoay,  (appoasthalar  5:41)

தினந்தோறும்  தேவாலயத்திலேயும்  வீடுகளிலேயும்  இடைவிடாமல்  உபதேசம்பண்ணி,  இயேசுவே  கிறிஸ்துவென்று  பிரசங்கித்தார்கள்.  (அப்போஸ்தலர்  5:42)

thinanthoa’rum  theavaalayaththileayum  veeduga'lileayum  idaividaamal  ubatheasampa'n'ni,  iyeasuvea  ki’risthuven’ru  pirasanggiththaarga'l.  (appoasthalar  5:42)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!