அவர்கள் ஜனங்களுடனே
பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும் தேவாலயத்துச்
சேனைத்தலைவனும் சதுசேயரும் அவர்களிடத்தில் வந்து,
(அப்போஸ்தலர் 4:1)
avarga'l janangga'ludanea peasikko'ndirukkaiyil,
aasaariyarga'lum theavaalayaththuch seanaiththalaivanum sathuseayarum avarga'lidaththil vanthu, (appoasthalar
4:1)
அவர்கள் ஜனங்களுக்கு
உபதேசிக்கிறதினாலும், இயேசுவை முன்னிட்டு,
மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும், சினங்கொண்டு,
(அப்போஸ்தலர் 4:2)
avarga'l janangga'lukku ubatheasikki’rathinaalum, iyeasuvai munnittu, mariththoarilirunthu uyirththezhuthalaip pirasanggikki’rathinaalum, sinangko'ndu, (appoasthalar
4:2)
அவர்களைப் பிடித்து,
சாயங்காலமாயிருந்தபடியினால், மறுநாள்வரைக்கும் காவலில்
வைத்தார்கள். (அப்போஸ்தலர் 4:3)
avarga'laip pidiththu, saayanggaalamaayirunthapadiyinaal, ma’runaa'lvaraikkum kaavalil
vaiththaarga'l. (appoasthalar
4:3)
வசனத்தைக் கேட்டவர்களில்
அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்கள்
தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது. (அப்போஸ்தலர்
4:4)
vasanaththaik keattavarga'lil aneagar visuvaasiththaarga'l; avarga'l thogai ea’rakku’raiya aiyaayiramaayirunthathu. (appoasthalar
4:4)
மறுநாளிலே ஜனங்களுடைய
அதிகாரிகளும் மூப்பரும் வேதபாரகரும்,
(அப்போஸ்தலர் 4:5)
ma’runaa'lilea janangga'ludaiya athigaariga'lum moopparum
veathapaaragarum, (appoasthalar
4:5)
பிரதான ஆசாரியனாகிய
அன்னாவும், காய்பாவும், யோவானும்,
அலெக்சந்தரும், பிரதான ஆசாரியருடைய
குடும்பத்தார் யாவரும் எருசலேமிலே
கூட்டங்கூடி, (அப்போஸ்தலர் 4:6)
pirathaana aasaariyanaagiya annaavum, kaaypaavum, yoavaanum, aleksantharum, pirathaana
aasaariyarudaiya kudumbaththaar yaavarum
erusaleamilea koottangkoodi, (appoasthalar
4:6)
அவர்களை நடுவே நிறுத்தி: நீங்கள்
எந்த வல்லமையினாலே, எந்த நாமத்தினாலே, இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள். (அப்போஸ்தலர்
4:7)
avarga'lai naduvea ni’ruththi: neengga'l entha vallamaiyinaalea, entha naamaththinaalea, ithaich seytheerga'l en’ru keattaarga'l. (appoasthalar
4:7)
அப்பொழுது பேதுரு
பரிசுத்தஆவியினாலே நிறைந்து, அவர்களை
நோக்கி: ஜனத்தின் அதிகாரிகளே,
இஸ்ரவேலின் மூப்பர்களே, (அப்போஸ்தலர்
4:8)
appozhuthu peathuru
parisuththaaaviyinaalea ni’rainthu, avarga'lai noakki:
janaththin athigaariga'lea, isravealin
moopparga'lea, (appoasthalar
4:8)
பிணியாளியாயிருந்த இந்த மனுஷனுக்குச் செய்யப்பட்ட
உபகாரத்தைக்குறித்து எதினாலே இவன் ஆரோக்கியமானானென்று நீங்கள்
இன்று எங்களிடத்தில் விசாரித்துக்கேட்டால், (அப்போஸ்தலர்
4:9)
pi'niyaa'liyaayiruntha intha manushanukkuch seyyappatta ubagaaraththaikku’riththu ethinaalea ivan aaroakkiyamaanaanen’ru neengga'l in’ru engga'lidaththil visaariththukkeattaal, (appoasthalar
4:9)
உங்களால் சிலுவையில்
அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவருமாயிருக்கிற நசரேயனாகிய
இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச்
சொஸ்தமாய் நிற்கிறானென்று உங்களெல்லாருக்கும், இஸ்ரவேல்
ஜனங்களெல்லாருக்கும் தெரிந்திருக்கக்கடவது. (அப்போஸ்தலர்
4:10)
ungga'laal siluvaiyil a’raiyappattavarum, theavanaal
mariththoarilirunthu ezhuppappattavarumaayirukki’ra nasareayanaagiya iyeasuki’risthuvin naamaththinaaleayea ivan ungga'lukku munbaagach sosthamaay ni’rki’raanen’ru ungga'lellaarukkum,
israveal janangga'lellaarukkum
therinthirukkakkadavathu. (appoasthalar 4:10)
வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால்
அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர். (அப்போஸ்தலர்
4:11)
veedukattugi’ravarga'laagiya ungga'laal a’rpamaay e'n'nappatta avarea moolaikkuth
thalaikkallaanavar. (appoasthalar 4:11)
அவராலேயன்றி வேறொருவராலும்
இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின்
கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய
நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான். (அப்போஸ்தலர்
4:12)
avaraaleayan’ri vea’roruvaraalum iradchippu illai; naam iradchikkappadumpadikku
vaanaththin keezhenggum, manusharga'lukku'l'lea avarudaiya naamameayallaamal vea’roru naamam
katta'laiyidappadavum illai en’raan. (appoasthalar 4:12)
பேதுருவும் யோவானும்
பேசுகிற தைரியத்தை அவர்கள்
கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள்
இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள். (அப்போஸ்தலர்
4:13)
peathuruvum yoavaanum
peasugi’ra thairiyaththai avarga'l ka'ndu,
avarga'l
padippa’riyaathavarga'len’rum peathaimaiyu'l'lavarga'len’rum a’rinthapadiyinaal
aachchariyappattu, avarga'l iyeasuvudaneakooda irunthavarga'len’rum a’rinthuko'ndaarga'l. (appoasthalar
4:13)
சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன்
அவர்கள் அருகே நிற்கிறதைக்
கண்டபடியால், எதிர்பேச அவர்களுக்கு
இடமில்லாதிருந்தது. (அப்போஸ்தலர் 4:14)
sosthamaakkappatta manushan
avarga'l
arugea
ni’rki’rathaik ka'ndapadiyaal, ethirpeasa avarga'lukku idamillaathirunthathu. (appoasthalar
4:14)
அப்பொழுது அவர்களை
ஆலோசனைச் சங்கத்தைவிட்டு வெளியே
போகும்படி கட்டளையிட்டு, தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டு: (அப்போஸ்தலர்
4:15)
appozhuthu avarga'lai aaloasanaich sanggaththaivittu ve'liyea poagumpadi katta'laiyittu, thangga'lukku'l'lea yoasanaipa'n'nikko'ndu:
(appoasthalar 4:15)
இந்த மனுஷரை
நாம் என்ன செய்யலாம்?
எருசலேமில் வாசம்பண்ணுகிற எல்லாருக்கும்
தெரிந்திருக்கிறபடி வெளியரங்கமான அற்புதம்
இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று
சொல்லக்கூடாது. (அப்போஸ்தலர் 4:16)
intha manusharai
naam enna seyyalaam? erusaleamil vaasampa'n'nugi’ra ellaarukkum therinthirukki’rapadi ve'liyaranggamaana a’rputham ivarga'laal seyyappattathea, athai naam illaiyen’ru sollakkoodaathu.
(appoasthalar 4:16)
ஆகிலும் இது அதிகமாய் ஜனத்துக்குள்ளே பரம்பாதபடிக்கு, இதுமுதல்
ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று, அவர்களை
உறுதியாய்ப் பயமுறுத்தவேண்டுமென்று சொல்லிக்கொண்டு, (அப்போஸ்தலர்
4:17)
aagilum ithu athigamaay janaththukku'l'lea parambaathapadikku, ithumuthal
oruvaroadum intha naamaththaikku’riththup peasakkoodaathen’ru, avarga'lai u’ruthiyaayp bayamu’ruththavea'ndumen’ru sollikko'ndu, (appoasthalar 4:17)
அவர்களை அழைத்து:
இயேசுவின் நாமத்தைக்குறித்து எவ்வளவும்
பேசவும் போதிக்கவும் கூடாதென்று
அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். (அப்போஸ்தலர்
4:18)
avarga'lai azhaiththu: iyeasuvin naamaththaikku’riththu evva'lavum
peasavum
poathikkavum koodaathen’ru avarga'lukkuk katta'laiyittaarga'l. (appoasthalar 4:18)
பேதுருவும் யோவானும்
அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச்
செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு
முன்பாக நியாயமாயிருக்குமோ என்று நீங்களே நிதானித்துப்பாருங்கள். (அப்போஸ்தலர்
4:19)
peathuruvum yoavaanum
avarga'lukkup pirathiyuththaramaaga: theavanukkuch sevikodukki’rathaippaarkkilum
ungga'lukkuch sevikodukki’rathu theavanukku munbaaga niyaayamaayirukkumoa en’ru neengga'lea nithaaniththuppaarungga'l. (appoasthalar
4:19)
நாங்கள் கண்டவைகளையும்
கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்.
(அப்போஸ்தலர் 4:20)
naangga'l ka'ndavaiga'laiyum keattavaiga'laiyum peasaamalirukkakkoodaathea en’raarga'l. (appoasthalar 4:20)
நடந்த சங்கதிகளைக்குறித்து எல்லாரும்
தேவனை மகிமைப்படுத்தினபடியால், ஜனங்களுக்குப்
பயந்து அவர்களைத் தண்டிக்க
வகையொன்றுங்காணாமல், அவர்களைப் பயமுறுத்தி
விட்டுவிட்டார்கள். (அப்போஸ்தலர் 4:21)
nadantha sanggathiga'laikku’riththu ellaarum theavanai
magimaippaduththinapadiyaal, janangga'lukkup bayanthu avarga'laith tha'ndikka
vagaiyon’rungkaa'naamal, avarga'laip bayamu’ruththi vittuvittaarga'l. (appoasthalar 4:21)
அற்புதமாய்ச் சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன்
நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாயிருந்தான். (அப்போஸ்தலர்
4:22)
a’rputhamaaych sosthamaakkappatta manushan naa’rpathu vayathukku
mea’rpattavanaayirunthaan. (appoasthalar
4:22)
அவர்கள் விடுதலையாக்கப்பட்டபின்பு, தங்களைச்
சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான
ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச்
சொன்ன யாவையும் அறிவித்தார்கள். (அப்போஸ்தலர்
4:23)
avarga'l viduthalaiyaakkappattapinbu, thangga'laich searnthavarga'lidaththil vanthu,
pirathaana aasaariyarga'lum moopparga'lum thangga'lukkuch sonna yaavaiyum a’riviththaarga'l. (appoasthalar 4:23)
அவர்கள் அதைக் கேட்டு, ஒருமனப்பட்டுத் தேவனை நோக்கிச் சத்தமிட்டு:
கர்த்தாவே, நீர் வானத்தையும்
பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள
யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர். (அப்போஸ்தலர்
4:24)
avarga'l athaik keattu, orumanappattuth theavanai
noakkich
saththamittu: karththaavea,
neer vaanaththaiyum boomiyaiyum samuththiraththaiyum avaiga'lilu'l'la yaavat’raiyum u'ndaakkina
theavanaayirukki’reer. (appoasthalar
4:24)
புறஜாதிகள் கொந்தளித்து,
ஜனங்கள் விருதா காரியங்களைச்
சிந்திப்பானேன் என்றும், (அப்போஸ்தலர்
4:25)
pu’rajaathiga'l kontha'liththu, janangga'l viruthaa
kaariyangga'laich sinthippaanean en’rum, (appoasthalar
4:25)
கர்த்தருக்கு விரோதமாகவும்
அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும்
பூமியின் ராஜாக்கள் எழும்பி
நின்று, அதிகாரிகள் ஏகமாய்க்
கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர்
உம்முடைய தாசனாகிய தாவீதின்
வாக்கினால் உரைத்தீரே. (அப்போஸ்தலர்
4:26)
karththarukku viroathamaagavum avarudaiya
ki’risthuvukku viroathamaagavum boomiyin raajaakka'l
ezhumbi
nin’ru,
athigaariga'l eagamaayk koottangkoodinaarga'l en’rum theavareer ummudaiya
thaasanaagiya thaaveethin
vaakkinaal uraiththeerea. (appoasthalar
4:26)
அந்தப்படி உம்முடைய
கரமும் உம்முடைய ஆலோசனையும்
முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி,
(அப்போஸ்தலர் 4:27)
anthappadi ummudaiya
karamum ummudaiya aaloasanaiyum munku’riththavaiga'l yaavaiyum seyyumpadi, (appoasthalar
4:27)
ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல்
ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய
பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு
விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள். (அப்போஸ்தலர்
4:28)
earoathum ponthiyupilaaththum, pu’rajaathiga'loadum israveal janangga'loadungkooda, neer abisheagampa'n'nina ummudaiya
parisuththa pi'l'laiyaagiya iyeasuvukku viroathamaay,
meyyaagavea koottangkoodinaarga'l. (appoasthalar 4:28)
இப்பொழுதும், கர்த்தாவே,
அவர்கள் பயமுறுத்தல்களைத் தேவரீர்
கவனித்து, (அப்போஸ்தலர் 4:29)
ippozhuthum, karththaavea,
avarga'l
bayamu’ruththalga'laith theavareer kavaniththu,
(appoasthalar 4:29)
உம்முடைய பரிசுத்த
பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே
அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி
செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய
கரத்தை நீட்டி, உம்முடைய
ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை
முழு தைரியத்தோடும் சொல்லும்படி
அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள்.
(அப்போஸ்தலர் 4:30)
ummudaiya parisuththa pi'l'laiyaagiya iyeasuvin naamaththinaalea adaiyaa'langga'lum a’rputhangga'lum nadakkumpadi seythu, pi'niyaa'liga'laik ku'namaakkumpadi ummudaiya
karaththai neetti, ummudaiya oozhiyakkaarar ummudaiya
vasanaththai muzhu thairiyaththoadum sollumpadi avarga'lukku anukkiragagnseytharu'lum en’raarga'l. (appoasthalar
4:30)
அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள்
கூடியிருந்த இடம் அசைந்தது.
அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத்
தைரியமாய்ச் சொன்னார்கள். (அப்போஸ்தலர்
4:31)
avarga'l jebampa'n'ninapoathu,
avarga'l
koodiyiruntha idam asainthathu. avarga'lellaarum parisuththaaaviyinaal nirappappattu, theavavasanaththaith thairiyamaaych sonnaarga'l. (appoasthalar 4:31)
விசுவாசிகளாகிய திரளான
கூட்டத்தார் ஒரே இருதயமும்
ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும்
தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை;
சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது. (அப்போஸ்தலர்
4:32)
visuvaasiga'laagiya thira'laana koottaththaar orea iruthayamum orea manamumu'l'lavarga'laayirunthaarga'l. oruvanaagilum thanakku'l'lavaiga'lil on’raiyum thannudaiyathen’ru sollavillai; sagalamum avarga'lukkup pothuvaayirunthathu. (appoasthalar
4:32)
கர்த்தராகிய இயேசுவின்
உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த
பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது. (அப்போஸ்தலர்
4:33)
karththaraagiya iyeasuvin uyirththezhuthalaikku’riththu appoasthalarga'l miguntha balamaaych saadchikoduththaarga'l; avarga'lellaarmealum poora'na
kirubai
u'ndaayirunthathu. (appoasthalar 4:33)
நிலங்களையும் வீடுகளையும்
உடையவர்கள் அவைகளை விற்று,
விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து,
(அப்போஸ்தலர் 4:34)
nilangga'laiyum veeduga'laiyum udaiyavarga'l avaiga'lai vit’ru, vi’rkappattavaiga'lin kirayaththaik ko'nduvanthu,
(appoasthalar 4:34)
அப்போஸ்தலருடைய பாதத்திலே
வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில்
ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை. (அப்போஸ்தலர்
4:35)
appoasthalarudaiya paathaththilea vaiththaarga'l. avanavanukkuth theavaiyaanatha’rkuththakkathaayp pagirnthukodukkappattathu; avarga'lil oruvanukkum on’rum ku’raivaayirunthathillai. (appoasthalar
4:35)
சீப்புருதீவானும் லேவியனும்
அப்போஸ்தலராலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா
என்னும் மறுபேர்பெற்றவனுமாகிய யோசே என்பவன், (அப்போஸ்தலர்
4:36)
seeppurutheevaanum
leaviyanum appoasthalaraalea aa’ruthalin magan en’ru arththangko'l'lum barnabaa ennum ma’rupearpet’ravanumaagiya yoasea enbavan, (appoasthalar
4:36)
தனக்கு உண்டாயிருந்த
நிலத்தைவிற்று, அதின் கிரயத்தைக்
கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே
வைத்தான். (அப்போஸ்தலர் 4:37)
thanakku u'ndaayiruntha nilaththaivit’ru, athin kirayaththaik ko'nduvanthu,
appoasthalarudaiya paathaththilea vaiththaan.
(appoasthalar 4:37)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!