நாங்கள் தப்பிக்
கரைசேர்ந்தபின்பு, அந்தத் தீவின்பேர்
மெலித்தா என்று அறிந்தோம்.
(அப்போஸ்தலர் 28:1)
naangga'l thappik karaisearnthapinbu, anthath theevinpear
meliththaa en’ru a’rinthoam. (appoasthalar 28:1)
அந்நியராகிய அந்தத்
தீவார் எங்களுக்குப் பாராட்டின
அன்பு கொஞ்சமல்ல. அந்த வேளையிலே பிடித்திருந்த
மழைக்காகவும் குளிருக்காகவும் அவர்கள்
நெருப்பை மூட்டி, எங்கள்
அனைவரையும் சேர்த்துக்கொண்டார்கள். (அப்போஸ்தலர்
28:2)
anniyaraagiya anthath theevaar
engga'lukkup paaraattina anbu kognchamalla. antha vea'laiyilea pidiththiruntha mazhaikkaagavum ku'lirukkaagavum avarga'l neruppai
mootti,
engga'l
anaivaraiyum searththukko'ndaarga'l. (appoasthalar
28:2)
பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடுகையில்,
ஒரு விரியன்பாம்பு அனலுறைத்துப்
புறப்பட்டு அவனுடைய கையைக்
கவ்விக்கொண்டது. (அப்போஸ்தலர் 28:3)
pavul sila vi’raguga'lai vaari antha neruppinmeal
poadugaiyil, oru viriyanpaambu analu’raiththup pu’rappattu avanudaiya
kaiyaik kavvikko'ndathu. (appoasthalar
28:3)
விஷப்பூச்சி அவன் கையிலே தொங்குகிறதை
அந்நியராகிய அந்தத் தீவார்
கண்டபோது, இந்த மனுஷன்
கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை;
இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும்,
பழியானது இவனைப் பிழைக்கவொட்டவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். (அப்போஸ்தலர்
28:4)
vishappoochchi avan kaiyilea
thonggugi’rathai anniyaraagiya anthath
theevaar ka'ndapoathu, intha manushan kolaipaathagan, itha’rkuch santheagamillai; ivan samuththiraththukkuth
thappivanthum, pazhiyaanathu ivanaip
pizhaikkavottavillaiyen’ru thangga'lukku'l'lea sollikko'ndaarga'l. (appoasthalar
28:4)
அவன் அந்தப்
பூச்சியைத் தீயிலே உதறிப்போட்டு,
ஒரு தீங்கும் அடையாதிருந்தான். (அப்போஸ்தலர்
28:5)
avan anthap
poochchiyaith theeyilea
utha’rippoattu, oru theenggum adaiyaathirunthaan. (appoasthalar
28:5)
அவனுக்கு வீக்கங்கண்டு,
அல்லது அவன் சடிதியாய்
விழுந்து சாவானென்று அவர்கள்
பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு
வராததைக் கண்டபோது, வேறு சிந்தையாகி, இவன் தேவனென்று சொல்லிக்கொண்டார்கள். (அப்போஸ்தலர்
28:6)
avanukku veekkangka'ndu, allathu
avan sadithiyaay vizhunthu
saavaanen’ru avarga'l paarththukko'ndirunthaarga'l; nedunearamaayp paarththukko'ndirunthum, oru seathamum avanukku varaathathaik
ka'ndapoathu, vea’ru sinthaiyaagi, ivan theavanen’ru sollikko'ndaarga'l. (appoasthalar
28:6)
தீவுக்கு முதலாளியாகிய
புபிலியு என்னும் பேர்கொண்டவனுடைய நிலங்கள்
அந்த இடத்திற்குச் சமீபமாயிருந்தது; அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்றுநாள்
பட்சமாய் விசாரித்தான். (அப்போஸ்தலர்
28:7)
theevukku muthalaa'liyaagiya pubiliyu ennum pearko'ndavanudaiya nilangga'l antha idaththi’rkuch sameebamaayirunthathu;
avan engga'lai eat’rukko'ndu, moon’runaa'l padchamaay visaariththaan. (appoasthalar
28:7)
புபிலியுவினுடைய தகப்பன்
ஜுரத்தினாலும் இரத்தபேதியினாலும் வருத்தப்பட்டுக் கிடந்தான்;
பவுல் அவனிடத்திற்குப் போய் ஜெபம்பண்ணி, அவன்மேல்
கைகளை வைத்து, அவனைக்
குணமாக்கினான். (அப்போஸ்தலர் 28:8)
pubiliyuvinudaiya
thagappan
juraththinaalum iraththabeathiyinaalum varuththappattuk kidanthaan; pavul avanidaththi’rkup poay jebampa'n'ni, avanmeal
kaiga'lai
vaiththu, avanaik ku'namaakkinaan. (appoasthalar
28:8)
இது நடந்தபின்பு,
தீவிலே இருந்த மற்ற வியாதிக்காரரும் வந்து,
குணமாக்கப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 28:9)
ithu nadanthapinbu, theevilea
iruntha mat’ra viyaathikkaararum vanthu,
ku'namaakkappattaarga'l. (appoasthalar 28:9)
அவர்கள் எங்களுக்கு
அநேக மரியாதை செய்து,
நாங்கள் கப்பல் ஏறிப்போகிறபோது எங்களுக்குத்
தேவையானவைகளை ஏற்றினார்கள். (அப்போஸ்தலர்
28:10)
avarga'l engga'lukku aneaga mariyaathai seythu, naangga'l kappal
ea’rippoagi’rapoathu engga'lukkuth theavaiyaanavaiga'lai eat’rinaarga'l. (appoasthalar 28:10)
மூன்றுமாதம் சென்றபின்பு,
அந்தத் தீவிலே மழைகாலத்திற்குத் தங்கியிருந்த
மிதுனம் என்னும் அடையாளமுடைய
அலெக்சந்திரியாபட்டணத்துக் கப்பலிலே நாங்கள்
ஏறிப் புறப்பட்டு, (அப்போஸ்தலர்
28:11)
moon’rumaatham sen’rapinbu, anthath theevilea
mazhaikaalaththi’rkuth thanggiyiruntha mithunam
ennum adaiyaa'lamudaiya aleksanthiriyaapatta'naththuk kappalilea naangga'l ea’rip pu’rappattu, (appoasthalar 28:11)
சீரகூசா பட்டணத்தைச்
சேர்ந்து, அங்கே மூன்றுநாள்
தங்கினோம். (அப்போஸ்தலர் 28:12)
seerakoosaa patta'naththaich searnthu, anggea moon’runaa'l thangginoam. (appoasthalar 28:12)
அவ்விடம்விட்டுச் சுற்றியோடி,
ரேகியுதுறைமுகத்துக்கு வந்து சேர்ந்தோம்.
மறுநாளில் தென்றற் காற்றெடுக்கையில் புறப்பட்டு,
இரண்டாம் நாள் புத்தேயோலிபட்டணத்திற்கு வந்து,
(அப்போஸ்தலர் 28:13)
avvidamvittuch sut’riyoadi, reagiyuthu’raimugaththukku vanthu searnthoam. ma’runaa'lil then’ra’r kaat’redukkaiyil pu’rappattu, ira'ndaam naa'l puththeayoalipatta'naththi’rku vanthu,
(appoasthalar 28:13)
அங்கே சகோதரரைக்
கண்டோம்; அவர்கள் எங்களை
ஏழுநாள் தங்களிடத்தில் இருக்கும்படி
வேண்டிக்கொண்டார்கள்; அந்தப்படி நாங்கள்
இருந்து, பின்பு ரோமாபுரிக்குப் போனோம்.
(அப்போஸ்தலர் 28:14)
anggea sagoathararaik ka'ndoam; avarga'l engga'lai eazhunaa'l
thangga'lidaththil irukkumpadi
vea'ndikko'ndaarga'l; anthappadi
naangga'l
irunthu, pinbu roamaapurikkup poanoam.
(appoasthalar 28:14)
அவ்விடத்திலுள்ள சகோதரர்கள்
நாங்கள் வருகிற செய்தியைக்
கேள்விப்பட்டு, சிலர் அப்பியுபுரம்வரைக்கும், சிலர் மூன்று சத்திரம்வரைக்கும், எங்களுக்கு
எதிர்கொண்டுவந்தார்கள்; அவர்களைப் பவுல் கண்டு, தேவனை ஸ்தோத்திரித்துத் தைரியமடைந்தான். (அப்போஸ்தலர்
28:15)
avvidaththilu'l'la sagoathararga'l naangga'l varugi’ra seythiyaik kea'lvippattu, silar appiyupuramvaraikkum, silar moon’ru saththiramvaraikkum, engga'lukku ethirko'nduvanthaarga'l; avarga'laip pavul ka'ndu, theavanai
sthoaththiriththuth thairiyamadainthaan. (appoasthalar
28:15)
நாங்கள் ரோமாபுரியில்
சேர்ந்தபோது, நூற்றுக்கு அதிபதி
தன் காவலிலிருந்தவர்களைச் சேனாபதியினிடத்தில் ஒப்புக்கொடுத்தான்; அப்பொழுது
பவுல் தன்னைக் காத்திருக்கிற
சேவகனுடனே தனித்துக் குடியிருக்கும்படி உத்தரவு
பெற்றுக்கொண்டான். (அப்போஸ்தலர் 28:16)
naangga'l roamaapuriyil searnthapoathu, noot’rukku athibathi than kaavalilirunthavarga'laich seanaabathiyinidaththil
oppukkoduththaan; appozhuthu pavul thannaik kaaththirukki’ra seavaganudanea thaniththuk kudiyirukkumpadi uththaravu
pet’rukko'ndaan. (appoasthalar
28:16)
மூன்றுநாளைக்குப்பின்பு, பவுல் யூதரில் பிரதானமானவர்களை வரவழைத்தான்;
அவர்கள் கூடிவந்திருந்தபோது, அவன் அவர்களை நோக்கி:
சகோதரரே, நம்முடைய ஜனங்களுக்கும்
நம்முடைய முன்னோர்களின் முறைமைகளுக்கும் விரோதமானதொன்றையும் நான் செய்யாமலிருந்தும், கட்டப்பட்டவனாக எருசலேமிலிருந்து ரோமர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டேன். (அப்போஸ்தலர்
28:17)
moon’runaa'laikkuppinbu, pavul yootharil pirathaanamaanavarga'lai varavazhaiththaan; avarga'l koodivanthirunthapoathu, avan avarga'lai noakki: sagoathararea, nammudaiya
janangga'lukkum nammudaiya
munnoarga'lin mu’raimaiga'lukkum viroathamaanathon’raiyum naan seyyaamalirunthum, kattappattavanaaga erusaleamilirunthu roamar
kaiga'lil
oppukkodukkappattean. (appoasthalar
28:17)
அவர்கள் என்னை நியாயம் விசாரித்தபோது
மரணத்துக்கேதுவான குற்றம் ஒன்றும்
என்னிடத்தில் காணாதபடியினால், என்னை விடுதலையாக்க மனதாயிருந்தார்கள். (அப்போஸ்தலர்
28:18)
avarga'l ennai niyaayam
visaariththapoathu mara'naththukkeathuvaana kut’ram on’rum ennidaththil
kaa'naathapadiyinaal, ennai viduthalaiyaakka manathaayirunthaarga'l. (appoasthalar
28:18)
யூதர்கள் அதற்கு
எதிர்பேசினபோது, நான் இராயனுக்கு
அபயமிடவேண்டியதாயிருந்தது; ஆயினும் என் ஜனத்தார்மேல் யாதொரு
குற்றஞ் சாட்டவேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை.
(அப்போஸ்தலர் 28:19)
yootharga'l atha’rku ethirpeasinapoathu, naan iraayanukku
abayamidavea'ndiyathaayirunthathu; aayinum
en janaththaarmeal yaathoru
kut’ragn
saattavea'ndumen’ru naan appadich seyyavillai. (appoasthalar 28:19)
இந்தக் காரியத்தினிமித்தமே உங்களைக்
காணவும் உங்களுடனே பேசவும்
உங்களை அழைப்பித்தேன். இஸ்ரவேலுடைய
நம்பிக்கைக்காகவே இந்தச் சங்கிலியால்
கட்டப்பட்டிருக்கிறேன் என்றான். (அப்போஸ்தலர்
28:20)
inthak kaariyaththinimiththamea ungga'laik kaa'navum
ungga'ludanea peasavum ungga'lai azhaippiththean. isravealudaiya nambikkaikkaagavea inthach sanggiliyaal kattappattirukki’rean en’raan. (appoasthalar
28:20)
அதற்கு அவர்கள்:
உன்னைக்குறித்து யூதேயாவிலிருந்து எங்களுக்குக்
காகிதம் வரவுமில்லை, வந்த சகோதரரில் ஒருவனும்
உன்பேரில் ஒரு பொல்லாங்கை
அறிவித்ததுமில்லை, அதைப்பற்றிப் பேசினதுமில்லை. (அப்போஸ்தலர்
28:21)
atha’rku avarga'l: unnaikku’riththu yootheayaavilirunthu engga'lukkuk kaagitham varavumillai,
vantha sagoathararil oruvanum
unpearil oru pollaanggai a’riviththathumillai, athaippat’rip peasinathumillai. (appoasthalar
28:21)
எங்கும் இந்த மதபேதத்துக்கு விரோதமாய்ப்
பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறபடியால், இதைக்குறித்து
உன்னுடைய அபிப்பிராயம் என்னவென்று
கேட்டறிய விரும்புகிறோம் என்றார்கள்.
(அப்போஸ்தலர் 28:22)
enggum intha mathabeathaththukku viroathamaayp
peasugi’rathaaga naangga'l a’rinthirukki’rapadiyaal, ithaikku’riththu unnudaiya abippiraayam ennaven’ru keatta’riya virumbugi’roam en’raarga'l. (appoasthalar 28:22)
அதற்காக அவர்கள்
ஒரு நாளைக்குறித்து, அநேகம்பேர்
அவன் தங்கியிருந்த வீட்டிற்கு
அவனிடத்தில் வந்தார்கள். அவன் காலமே தொடங்கிச்
சாயங்காலமட்டும் மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும்
இருந்து இயேசுவுக்கடுத்த விசேஷங்களை
அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய
ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சிகொடுத்து விஸ்தரித்துப்
பேசினான். (அப்போஸ்தலர் 28:23)
atha’rkaaga avarga'l oru naa'laikku’riththu, aneagampear avan thanggiyiruntha veetti’rku avanidaththil
vanthaarga'l. avan kaalamea thodanggich saayanggaalamattum moaseayin niyaayappiramaa'naththilum theerkkatharisiga'lin aagamangga'lilum irunthu iyeasuvukkaduththa viseashangga'lai avarga'lukkup poathiththu, theavanudaiya
raajyaththaik ku’riththuch saadchikoduththu visthariththup peasinaan. (appoasthalar
28:23)
அவன் சொன்னவைகளைச்
சிலர் விசுவாசித்தார்கள், சிலர் விசுவாசியாதிருந்தார்கள். (அப்போஸ்தலர்
28:24)
avan sonnavaiga'laich silar visuvaasiththaarga'l, silar visuvaasiyaathirunthaarga'l. (appoasthalar
28:24)
இப்படி அவர்கள்
ஒருவரோடொருவர் ஒவ்வாமலிருந்து, புறப்பட்டுப்போகையில், பவுல் அவர்களுக்குச் சொன்ன வாக்கியமாவது: (அப்போஸ்தலர்
28:25)
ippadi avarga'l oruvaroadoruvar ovvaamalirunthu, pu’rappattuppoagaiyil, pavul avarga'lukkuch sonna vaakkiyamaavathu: (appoasthalar
28:25)
நீங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாரக்கண்டும் பாராதிருப்பீர்கள். (அப்போஸ்தலர்
28:26)
neengga'l kaathaarakkeattum u'naraathiruppeerga'l, ka'n'naarakka'ndum paaraathiruppeerga'l. (appoasthalar
28:26)
இவர்கள் கண்களினால்
காணாமலும், காதுகளினால் கேளாமலும்,
இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, இந்த ஜனத்தின் இருதயம்
கொழுத்திருக்கிறது; காதுகளினால் மந்தமாய்க்
கேட்டுத் தங்கள் கண்களை
மூடிக்கொண்டார்கள் என்று இந்த ஜனத்தினிடத்தில் போய்ச்
சொல்லு என்பதைப் பரிசுத்தஆவி
ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய
பிதாக்களுடனே நன்றாய்ச் சொல்லியிருக்கிறார். (அப்போஸ்தலர்
28:27)
ivarga'l ka'nga'linaal kaa'naamalum, kaathuga'linaal kea'laamalum,
iruthayaththinaal u'narnthu ku'nappadaamalum, naan ivarga'lai aaroakkiyamaakkaamalum irukkumpadikku, intha janaththin iruthayam
kozhuththirukki’rathu; kaathuga'linaal manthamaayk
keattuth
thangga'l
ka'nga'lai moodikko'ndaarga'l en’ru intha janaththinidaththil poaych sollu enbathaip parisuththaaavi easaayaa theerkkatharisiyaikko'ndu nammudaiya
pithaakka'ludanea nan’raaych solliyirukki’raar. (appoasthalar 28:27)
ஆதலால் தேவனுடைய
இரட்சிப்பு புறஜாதியாருக்கு அனுப்பப்பட்டிருக்கிறதென்றும், அவர்கள்
அதற்குச் செவிகொடுப்பார்களென்றும் உங்களுக்குத்
தெரிந்திருக்கக்கடவது என்றான். (அப்போஸ்தலர்
28:28)
aathalaal theavanudaiya
iradchippu pu’rajaathiyaarukku anuppappattirukki’rathen’rum, avarga'l atha’rkuch sevikoduppaarga'len’rum ungga'lukkuth therinthirukkakkadavathu en’raan. (appoasthalar
28:28)
இப்படி அவன் சொன்னபின்பு, யூதர்கள்
தங்களுக்குள்ளே மிகவும் தர்க்கம்
பண்ணிக்கொண்டு, போய்விட்டார்கள். (அப்போஸ்தலர்
28:29)
ippadi avan sonnapinbu, yootharga'l thangga'lukku'l'lea migavum tharkkam
pa'n'nikko'ndu, poayvittaarga'l. (appoasthalar
28:29)
பின்பு பவுல் தனக்காக வாடகைக்கு
வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு
வருஷமுழுதும் தங்கி, தன்னிடத்தில்
வந்த யாவரையும் ஏற்றுக்கொண்டு, (அப்போஸ்தலர்
28:30)
pinbu pavul thanakkaaga vaadagaikku vaanggiyiruntha veettilea ira'ndu
varushamuzhuthum thanggi, thannidaththil vantha
yaavaraiyum eat’rukko'ndu, (appoasthalar 28:30)
மிகுந்த தைரியத்துடனே
தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக்
குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய
இயேசுகிறிஸ்துவைப்பற்றிய விசேஷங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான். (அப்போஸ்தலர்
28:31)
miguntha thairiyaththudanea thadaiyillaamal, theavanudaiya
raajyaththaik ku’riththup pirasanggiththu, karththaraagiya iyeasuki’risthuvaippat’riya viseashangga'lai ubatheasiththukko'ndirunthaan. (appoasthalar
28:31)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!