Sunday, May 22, 2016

Appoasthalar 26 | அப்போஸ்தலருடைய நடபடிகள் 26 | Acts 26


அகிரிப்பா  பவுலை  நோக்கி:  நீ  உனக்காகப்  பேச  உனக்கு  உத்தரவாகிறது  என்றான்.  அப்பொழுது  பவுல்  கையை  நீட்டி,  தனக்காக  உத்தரவு  சொல்லத்தொடங்கினான்.  (அப்போஸ்தலர்  26:1)

agirippaa  pavulai  noakki:  nee  unakkaagap  peasa  unakku  uththaravaagi’rathu  en’raan.  appozhuthu  pavul  kaiyai  neetti,  thanakkaaga  uththaravu  sollaththodangginaan.  (appoasthalar  26:1)

அகிரிப்பா  ராஜாவே,  யூதர்கள்  என்மேல்  சாட்டுகிற  சகல  காரியங்களைக்குறித்தும்  நான்  இன்றைக்கு  உமக்கு  முன்பாக  உத்தரவு  சொல்லப்போகிறபடியினாலே  என்னைப்  பாக்கியவான்  என்றெண்ணுகிறேன்.  (அப்போஸ்தலர்  26:2)

agirippaa  raajaavea,  yootharga'l  enmeal  saattugi’ra  sagala  kaariyangga'laikku’riththum  naan  in’raikku  umakku  munbaaga  uththaravu  sollappoagi’rapadiyinaalea  ennaip  baakkiyavaan  en’re'n'nugi’rean.  (appoasthalar  26:2)

விசேஷமாய்  நீர்  யூதருடைய  சகல  முறைமைகளையும்  தர்க்கங்களையும்  அறிந்தவரானதால்  அப்படி  எண்ணுகிறேன்;  ஆகையால்  நான்  சொல்வதைப்  பொறுமையோடே  கேட்கும்படி  உம்மை  வேண்டிக்கொள்ளுகிறேன்.  (அப்போஸ்தலர்  26:3)

viseashamaay  neer  yootharudaiya  sagala  mu’raimaiga'laiyum  tharkkangga'laiyum  a’rinthavaraanathaal  appadi  e'n'nugi’rean;  aagaiyaal  naan  solvathaip  po’rumaiyoadea  keadkumpadi  ummai  vea'ndikko'l'lugi’rean.  (appoasthalar  26:3)

நான்  என்  சிறுவயதுமுதற்கொண்டு,  எருசலேமிலே  என்  ஜனத்தாருக்குள்ளே  இருந்தபடியால்,  ஆதிமுதல்  நான்  நடந்த  நடக்கையை  யூதரெல்லாரும்  அறிந்திருக்கிறார்கள்.  (அப்போஸ்தலர்  26:4)

naan  en  si’ruvayathumutha’rko'ndu,  erusaleamilea  en  janaththaarukku'l'lea  irunthapadiyaal,  aathimuthal  naan  nadantha  nadakkaiyai  yootharellaarum  a’rinthirukki’raarga'l.  (appoasthalar  26:4)

நம்முடைய  மார்க்கத்திலுள்ள  சமயபேதங்களில்  மிகவும்  கண்டிப்பான  சமயத்துக்கு  இசைந்தபடி  பரிசேயனாய்  நடந்தேனென்று  சாட்சிசொல்ல  அவர்களுக்கு  மனதிருந்தால்  சொல்லலாம்.  (அப்போஸ்தலர்  26:5)

nammudaiya  maarkkaththilu'l'la  samayabeathangga'lil  migavum  ka'ndippaana  samayaththukku  isainthapadi  pariseayanaay  nadantheanen’ru  saadchisolla  avarga'lukku  manathirunthaal  sollalaam.  (appoasthalar  26:5)

தேவன்  நம்முடைய  பிதாக்களுக்கு  அருளிச்செய்த  வாக்குத்தத்தம்  நிறைவேறுமென்கிற  நம்பிக்கைக்காகவே  நான்  இப்பொழுது  நியாயத்தீர்ப்படைகிறவனாய்  நிற்கிறேன்.  (அப்போஸ்தலர்  26:6)

theavan  nammudaiya  pithaakka'lukku  aru'lichseytha  vaakkuththaththam  ni’raivea’rumengi’ra  nambikkaikkaagavea  naan  ippozhuthu  niyaayaththeerppadaigi’ravanaay  ni’rki’rean.  (appoasthalar  26:6)

இரவும்  பகலும்  இடைவிடாமல்  ஆராதனை  செய்துவருகிற  நம்முடைய  பன்னிரண்டு  கோத்திரத்தாரும்  அந்த  வாக்குத்தத்தம்  நிறைவேறுமென்று  நம்பியிருக்கிறார்கள்.  அகிரிப்பா  ராஜாவே,  அந்த  நம்பிக்கையினிமித்தமே  யூதர்கள்  என்மேல்  குற்றஞ்சாட்டுகிறார்கள்.  (அப்போஸ்தலர்  26:7)

iravum  pagalum  idaividaamal  aaraathanai  seythuvarugi’ra  nammudaiya  pannira'ndu  koaththiraththaarum  antha  vaakkuththaththam  ni’raivea’rumen’ru  nambiyirukki’raarga'l.  agirippaa  raajaavea,  antha  nambikkaiyinimiththamea  yootharga'l  enmeal  kut’ragnsaattugi’raarga'l.  (appoasthalar  26:7)

தேவன்  மரித்தோரை  எழுப்புகிறது  நம்பப்படாத  காரியமென்று  நீங்கள்  எண்ணுகிறதென்ன?  (அப்போஸ்தலர்  26:8)

theavan  mariththoarai  ezhuppugi’rathu  nambappadaatha  kaariyamen’ru  neengga'l  e'n'nugi’rathenna?  (appoasthalar  26:8)

முன்னே  நானும்  நசரேயனாகிய  இயேசுவின்  நாமத்திற்கு  விரோதமாய்  அநேக  காரியங்களை  நடப்பிக்கவேண்டுமென்று  நினைத்திருந்தேன்.  (அப்போஸ்தலர்  26:9)

munnea  naanum  nasareayanaagiya  iyeasuvin  naamaththi’rku  viroathamaay  aneaga  kaariyangga'lai  nadappikkavea'ndumen’ru  ninaiththirunthean.  (appoasthalar  26:9)

அப்படியே  நான்  எருசலேமிலும்  செய்தேன்.  நான்  பிரதான  ஆசாரியர்களிடத்தில்  அதிகாரம்  பெற்று,  பரிசுத்தவான்களில்  அநேகரைச்  சிறைச்சாலைகளில்  அடைத்தேன்;  அவர்கள்  கொலைசெய்யப்படுகையில்  நானும்  சம்மதித்திருந்தேன்.  (அப்போஸ்தலர்  26:10)

appadiyea  naan  erusaleamilum  seythean.  naan  pirathaana  aasaariyarga'lidaththil  athigaaram  pet’ru,  parisuththavaanga'lil  aneagaraich  si’raichsaalaiga'lil  adaiththean;  avarga'l  kolaiseyyappadugaiyil  naanum  sammathiththirunthean.  (appoasthalar  26:10)

சகல  ஜெபஆலயங்களிலும்  நான்  அவர்களை  அநேகந்தரம்  தண்டித்து,  தேவதூஷணஞ்  சொல்லக்  கட்டாயப்படுத்தினேன்;  அவர்கள்  பேரில்  மூர்க்கவெறி  கொண்டவனாய்  அந்நியபட்டணங்கள்வரைக்கும்  அவர்களைத்  துன்பப்படுத்தினேன்.  (அப்போஸ்தலர்  26:11)

sagala  jebaaalayangga'lilum  naan  avarga'lai  aneagantharam  tha'ndiththu,  theavathoosha'nagn  sollak  kattaayappaduththinean;  avarga'l  pearil  moorkkave’ri  ko'ndavanaay  anniyapatta'nangga'lvaraikkum  avarga'laith  thunbappaduththinean.  (appoasthalar  26:11)

இப்படிச்  செய்துவருகையில்,  நான்  பிரதான  ஆசாரியர்களிடத்தில்  அதிகாரமும்  உத்தரவும்  பெற்று,  தமஸ்குவுக்குப்  போகும்போது,  (அப்போஸ்தலர்  26:12)

ippadich  seythuvarugaiyil,  naan  pirathaana  aasaariyarga'lidaththil  athigaaramum  uththaravum  pet’ru,  thamaskuvukkup  poagumpoathu,  (appoasthalar  26:12)

மத்தியான  வேளையில்,  ராஜாவே,  நான்  வழியிலே  சூரியனுடைய  பிரகாசத்திலும்  அதிகமான  ஒளி  வானத்திலிருந்து  என்னையும்  என்னுடனேகூடப்  பிரயாணம்பண்ணினவர்களையும்  சுற்றிப்  பிரகாசிக்கக்கண்டேன்.  (அப்போஸ்தலர்  26:13)

maththiyaana  vea'laiyil,  raajaavea,  naan  vazhiyilea  sooriyanudaiya  piragaasaththilum  athigamaana  o'li  vaanaththilirunthu  ennaiyum  ennudaneakoodap  pirayaa'nampa'n'ninavarga'laiyum  sut’rip  piragaasikkakka'ndean.  (appoasthalar  26:13)

நாங்களெல்லாரும்  தரையிலே  விழுந்தபோது:  சவுலே,  சவுலே,  நீ  ஏன்  என்னைத்  துன்பப்படுத்துகிறாய்?  முள்ளில்  உதைக்கிறது  உனக்குக்  கடினமாம்  என்று  எபிரெயு  பாஷையிலே  என்னுடனே  சொல்லுகிற  ஒரு  சத்தத்தைக்  கேட்டேன்.  (அப்போஸ்தலர்  26:14)

naangga'lellaarum  tharaiyilea  vizhunthapoathu:  savulea,  savulea,  nee  ean  ennaith  thunbappaduththugi’raay?  mu'l'lil  uthaikki’rathu  unakkuk  kadinamaam  en’ru  ebireyu  baashaiyilea  ennudanea  sollugi’ra  oru  saththaththaik  keattean.  (appoasthalar  26:14)

அப்பொழுது  நான்:  ஆண்டவரே,  நீர்  யார்  என்றேன்.  அதற்கு  அவர்:  நீ  துன்பப்படுத்துகிற  இயேசு  நானே.  (அப்போஸ்தலர்  26:15)

appozhuthu  naan:  aa'ndavarea,  neer  yaar  en’rean.  atha’rku  avar:  nee  thunbappaduththugi’ra  iyeasu  naanea.  (appoasthalar  26:15)

இப்பொழுது  நீ  எழுந்து,  காலுன்றி  நில்.  நீ  கண்டவைகளையும்  நான்  உனக்குத்  தரிசனமாகிக்  காண்பிக்கப்போகிறவைகளையும்  குறித்து  உன்னை  ஊழியக்காரனாகவும்  சாட்சியாகவும்  ஏற்படுத்துகிறதற்காக  உனக்குத்  தரிசனமானேன்.  (அப்போஸ்தலர்  26:16)

ippozhuthu  nee  ezhunthu,  kaalun’ri  nil.  nee  ka'ndavaiga'laiyum  naan  unakkuth  tharisanamaagik  kaa'nbikkappoagi’ravaiga'laiyum  ku’riththu  unnai  oozhiyakkaaranaagavum  saadchiyaagavum  ea’rpaduththugi’ratha’rkaaga  unakkuth  tharisanamaanean.  (appoasthalar  26:16)

உன்  சுயஜனத்தாரிடத்தினின்றும்  அந்நிய  ஜனத்தாரிடத்தினின்றும்  உன்னை  விடுதலையாக்கி,  (அப்போஸ்தலர்  26:17)

un  suyajanaththaaridaththinin’rum  anniya  janaththaaridaththinin’rum  unnai  viduthalaiyaakki,  (appoasthalar  26:17)

அவர்கள்  என்னைப்  பற்றும்  விசுவாசத்தினாலே  பாவமன்னிப்பையும்  பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய  சுதந்தரத்தையும்  பெற்றுக்கொள்ளும்படியாக,  அவர்கள்  இருளைவிட்டு  ஒளியினிடத்திற்கும்,  சாத்தானுடைய  அதிகாரத்தைவிட்டுத்  தேவனிடத்திற்கும்  திரும்பும்படிக்கு  நீ  அவர்களுடைய  கண்களைத்  திறக்கும்பொருட்டு,  இப்பொழுது  உன்னை  அவர்களிடத்திற்கு  அனுப்புகிறேன்  என்றார்.  (அப்போஸ்தலர்  26:18)

avarga'l  ennaip  pat’rum  visuvaasaththinaalea  paavamannippaiyum  parisuththamaakkappattavarga'lukkuriya  suthantharaththaiyum  pet’rukko'l'lumpadiyaaga,  avarga'l  iru'laivittu  o'liyinidaththi’rkum,  saaththaanudaiya  athigaaraththaivittuth  theavanidaththi’rkum  thirumbumpadikku  nee  avarga'ludaiya  ka'nga'laith  thi’rakkumporuttu,  ippozhuthu  unnai  avarga'lidaththi’rku  anuppugi’rean  en’raar.  (appoasthalar  26:18)

ஆகையால்,  அகிரிப்பா  ராஜாவே,  நான்  அந்தப்  பரமதரிசனத்துக்குக்  கீழ்ப்படியாதவனாயிருக்கவில்லை.  (அப்போஸ்தலர்  26:19)

aagaiyaal,  agirippaa  raajaavea,  naan  anthap  paramatharisanaththukkuk  keezhppadiyaathavanaayirukkavillai.  (appoasthalar  26:19)

முன்பு  தமஸ்குவிலும்  எருசலேமிலும்  யூதேயா  தேசமெங்குமுள்ளவர்களிடத்திலும்,  பின்பு  புறஜாதியாரிடத்திலும்  நான்  போய்,  அவர்கள்  தேவனிடத்திற்கு  மனந்திரும்பிக்  குணப்படவும்,  மனந்திரும்புதலுக்கேற்ற  கிரியைகளைச்  செய்யவும்  வேண்டுமென்று  அறிவித்தேன்.  (அப்போஸ்தலர்  26:20)

munbu  thamaskuvilum  erusaleamilum  yootheayaa  theasamenggumu'l'lavarga'lidaththilum,  pinbu  pu’rajaathiyaaridaththilum  naan  poay,  avarga'l  theavanidaththi’rku  mananthirumbik  ku'nappadavum,  mananthirumbuthalukkeat’ra  kiriyaiga'laich  seyyavum  vea'ndumen’ru  a’riviththean.  (appoasthalar  26:20)

இதினிமித்தமே  யூதர்கள்  தேவாலயத்திலே  என்னைப்  பிடித்துக்  கொலைசெய்யப்  பிரயத்தனம்பண்ணினார்கள்.  (அப்போஸ்தலர்  26:21)

ithinimiththamea  yootharga'l  theavaalayaththilea  ennaip  pidiththuk  kolaiseyyap  pirayaththanampa'n'ninaarga'l.  (appoasthalar  26:21)

ஆனாலும்  தேவ  அநுக்கிரகம்  பெற்று,  நான்  இந்நாள்வரைக்கும்  சிறியோருக்கும்  பெரியோருக்கும்  சாட்சிகூறி  வருகிறேன்.  (அப்போஸ்தலர்  26:22)

aanaalum  theava  anukkiragam  pet’ru,  naan  innaa'lvaraikkum  si’riyoarukkum  periyoarukkum  saadchikoo’ri  varugi’rean.  (appoasthalar  26:22)

தீர்க்கதரிசிகளும்  மோசேயும்  முன்னமே  சொல்லியிருந்தபடியே,  கிறிஸ்து  பாடுபடவேண்டியதென்றும்,  மரித்தோர்  உயிர்த்தெழுதலில்  அவர்  முதல்வராகி,  சுய  ஜனங்களுக்கும்  அந்நிய  ஜனங்களுக்கும்  ஒளியை  வெளிப்படுத்துகிறவரென்றும்  சொல்லுகிறேனேயன்றி,  வேறொன்றையும்  நான்  சொல்லுகிறதில்லை  என்றான்.  (அப்போஸ்தலர்  26:23)

theerkkatharisiga'lum  moaseayum  munnamea  solliyirunthapadiyea,  ki’risthu  paadupadavea'ndiyathen’rum,  mariththoar  uyirththezhuthalil  avar  muthalvaraagi,  suya  janangga'lukkum  anniya  janangga'lukkum  o'liyai  ve'lippaduththugi’ravaren’rum  sollugi’reaneayan’ri,  vea’ron’raiyum  naan  sollugi’rathillai  en’raan.  (appoasthalar  26:23)

இவ்விதமாய்  அவன்  தனக்காக  உத்தரவு  சொல்லுகையில்,  பெஸ்து  உரத்த  சத்தமாய்:  பவுலே,  நீ  பிதற்றுகிறாய்,  அதிகக்  கல்வி  உனக்குப்  பயித்தியமுண்டாக்குகிறது  என்றான்.  (அப்போஸ்தலர்  26:24)

ivvithamaay  avan  thanakkaaga  uththaravu  sollugaiyil,  pesthu  uraththa  saththamaay:  pavulea,  nee  pithat’rugi’raay,  athigak  kalvi  unakkup  payiththiyamu'ndaakkugi’rathu  en’raan.  (appoasthalar  26:24)

அதற்கு  அவன்:  கனம்பொருந்திய  பெஸ்துவே,  நான்  பயித்தியக்காரனல்ல,  சத்தியமும்  சொஸ்தபுத்தியுமுள்ள  வார்த்தைகளைப்  பேசுகிறேன்.  (அப்போஸ்தலர்  26:25)

atha’rku  avan:  kanamporunthiya  pesthuvea,  naan  payiththiyakkaaranalla,  saththiyamum  sosthabuththiyumu'l'la  vaarththaiga'laip  peasugi’rean.  (appoasthalar  26:25)

இந்தச்  சங்கதிகளை  ராஜா  அறிந்திருக்கிறார்;  ஆகையால்  தைரியமாய்  அவருக்கு  முன்பாகப்  பேசுகிறேன்;  இவைகளில்  ஒன்றும்  அவருக்கு  மறைவானதல்லவென்று  எண்ணுகிறேன்;  இது  ஒரு  மூலையிலே  நடந்த  காரியமல்ல.  (அப்போஸ்தலர்  26:26)

inthach  sanggathiga'lai  raajaa  a’rinthirukki’raar;  aagaiyaal  thairiyamaay  avarukku  munbaagap  peasugi’rean;  ivaiga'lil  on’rum  avarukku  ma’raivaanathallaven’ru  e'n'nugi’rean;  ithu  oru  moolaiyilea  nadantha  kaariyamalla.  (appoasthalar  26:26)

அகிரிப்பா  ராஜாவே,  தீர்க்கதரிசிகளை  விசுவாசிக்கிறீரா?  விசுவாசிக்கிறீர்  என்று  அறிவேன்  என்றான்.  (அப்போஸ்தலர்  26:27)

agirippaa  raajaavea,  theerkkatharisiga'lai  visuvaasikki’reeraa?  visuvaasikki’reer  en’ru  a’rivean  en’raan.  (appoasthalar  26:27)

அப்பொழுது  அகிரிப்பா  பவுலை  நோக்கி:  நான்  கிறிஸ்தவனாகிறதற்குக்  கொஞ்சங்குறைய  நீ  என்னைச்  சம்மதிக்கப்பண்ணுகிறாய்  என்றான்.  (அப்போஸ்தலர்  26:28)

appozhuthu  agirippaa  pavulai  noakki:  naan  ki’risthavanaagi’ratha’rkuk  kognchangku’raiya  nee  ennaich  sammathikkappa'n'nugi’raay  en’raan.  (appoasthalar  26:28)

அதற்குப்  பவுல்:  நீர்  மாத்திரமல்ல,  இன்று  என்  வசனத்தைக்  கேட்கிற  யாவரும்,  கொஞ்சங்குறையமாத்திரம்  அல்ல,  இந்தக்  கட்டுகள்  தவிர,  முழுவதும்  என்னைப்போலாகும்படி  தேவனை  வேண்டிக்கொள்ளுகிறேன்  என்றான்.  (அப்போஸ்தலர்  26:29)

atha’rkup  pavul:  neer  maaththiramalla,  in’ru  en  vasanaththaik  keadki’ra  yaavarum,  kognchangku’raiyamaaththiram  alla,  inthak  kattuga'l  thavira,  muzhuvathum  ennaippoalaagumpadi  theavanai  vea'ndikko'l'lugi’rean  en’raan.  (appoasthalar  26:29)

இவைகளை  அவன்  சொன்னபோது,  ராஜாவும்  தேசாதிபதியும்  பெர்னீக்கேயாளும்  அவர்களுடனேகூட  உட்கார்ந்திருந்தவர்களும்  எழுந்து,  (அப்போஸ்தலர்  26:30)

ivaiga'lai  avan  sonnapoathu,  raajaavum  theasaathibathiyum  berneekkeayaa'lum  avarga'ludaneakooda  udkaarnthirunthavarga'lum  ezhunthu,  (appoasthalar  26:30)

தனியே  போய்:  இந்த  மனுஷன்  மரணத்துக்காவது  கட்டுகளுக்காவது  பாத்திரமானதொன்றையும்  செய்யவில்லையென்று  தங்களுக்குள்ளே  பேசிக்கொண்டார்கள்.  (அப்போஸ்தலர்  26:31)

thaniyea  poay:  intha  manushan  mara'naththukkaavathu  kattuga'lukkaavathu  paaththiramaanathon’raiyum  seyyavillaiyen’ru  thangga'lukku'l'lea  peasikko'ndaarga'l.  (appoasthalar  26:31)

அகிரிப்பா  பெஸ்துவை  நோக்கி:  இந்த  மனுஷன்  இராயனுக்கு  அபயமிடாதிருந்தானானால்,  இவனை  விடுதலைபண்ணலாகும்  என்றான்.  (அப்போஸ்தலர்  26:32)

agirippaa  pesthuvai  noakki:  intha  manushan  iraayanukku  abayamidaathirunthaanaanaal,  ivanai  viduthalaipa'n'nalaagum  en’raan.  (appoasthalar  26:32)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!