அப்பொல்லோ என்பவன்
கொரிந்து பட்டணத்திலே இருக்கையில்,
பவுல் மேடான தேசங்கள்
வழியாய்ப் போய், எபேசுவுக்கு
வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு:
(அப்போஸ்தலர் 19:1)
appolloa enbavan korinthu
patta'naththilea irukkaiyil,
pavul meadaana theasangga'l vazhiyaayp poay, ebeasuvukku vanthaan; anggea sila seesharaik ka'ndu:
(appoasthalar 19:1)
நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்தஆவியைப் பெற்றீர்களா
என்று கேட்டான். அதற்கு
அவர்கள்: பரிசுத்தஆவி உண்டென்பதை
நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். (அப்போஸ்தலர்
19:2)
neengga'l visuvaasiga'laanapoathu, parisuththaaaviyaip pet’reerga'laa en’ru keattaan. atha’rku avarga'l: parisuththaaavi u'ndenbathai naangga'l kea'lvippadavea illai en’raarga'l. (appoasthalar
19:2)
அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள்
எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்
என்றான். அதற்கு அவர்கள்:
யோவான் கொடுத்த ஞானஸ்நானம்
பெற்றோம் என்றார்கள். (அப்போஸ்தலர்
19:3)
appozhuthu avan: appadiyaanaal neengga'l entha gnaanasnaanam pet’reerga'l en’raan. atha’rku avarga'l: yoavaan koduththa
gnaanasnaanam pet’roam en’raarga'l. (appoasthalar
19:3)
அப்பொழுது பவுல்:
யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய
கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்கவேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி,
மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே
என்றான். (அப்போஸ்தலர் 19:4)
appozhuthu pavul:
yoavaan thanakkuppin varugi’ravaraagiya ki’risthu iyeasuvil visuvaasiga'laayirukkavea'ndum en’ru janangga'lukkuch solli, mananthirumbuthalukku eat’ra gnaanasnaanaththaik koduththaanea
en’raan.
(appoasthalar 19:4)
அதைக் கேட்டபோது
அவர்கள் கர்த்தராகிய இயேசுவின்
நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.
(அப்போஸ்தலர் 19:5)
athaik keattapoathu avarga'l karththaraagiya iyeasuvin naamaththinaalea gnaanasnaanam
pet’raarga'l. (appoasthalar
19:5)
அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தஆவி
அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது
அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித்
தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள். (அப்போஸ்தலர்
19:6)
allaamalum pavul avarga'lmeal kaiga'lai vaiththapoathu, parisuththaaavi avarga'lmeal vanthaar;
appozhuthu avarga'l anniyabaashaiga'laip peasith theerkkatharisanagn sonnaarga'l. (appoasthalar 19:6)
அந்த மனுஷரெல்லாரும் ஏறக்குறையப்
பன்னிரண்டுபேராயிருந்தார்கள். (அப்போஸ்தலர் 19:7)
antha manusharellaarum ea’rakku’raiyap pannira'ndupearaayirunthaarga'l. (appoasthalar 19:7)
பின்பு பவுல் ஜெபஆலயத்தில் பிரவேசித்து,
தைரியமாய்ப் பிரசங்கித்து, மூன்று
மாதமளவும் தேவனுடைய ராஜ்யத்துக்கடுத்தவைகளைக்குறித்துச் சம்பாஷணைபண்ணி, புத்திசொல்லிக்கொண்டு வந்தான்.
(அப்போஸ்தலர் 19:8)
pinbu pavul jebaaalayaththil piraveasiththu, thairiyamaayp
pirasanggiththu, moon’ru maathama'lavum theavanudaiya
raajyaththukkaduththavaiga'laikku’riththuch sambaasha'naipa'n'ni,
buththisollikko'ndu vanthaan.
(appoasthalar 19:8)
சிலர் கடினப்பட்டு
அவிசுவாசிகளாகிக் கூட்டத்திற்கு முன்பாக
இந்த மார்க்கத்தை நிந்தித்தபோது, அவன் அவர்களை விட்டு
விலகி, சீஷரை அவர்களிலிருந்து பிரித்துக்கொண்டு, திறன்னு
என்னும் ஒருவனுடைய வித்தியாசாலையிலே அநுதினமும்
சம்பாஷித்துக்கொண்டுவந்தான். (அப்போஸ்தலர் 19:9)
silar kadinappattu avisuvaasiga'laagik koottaththi’rku munbaaga intha maarkkaththai ninthiththapoathu, avan avarga'lai vittu vilagi, seesharai avarga'lilirunthu piriththukko'ndu, thi’rannu ennum oruvanudaiya viththiyaasaalaiyilea anuthinamum
sambaashiththukko'nduvanthaan. (appoasthalar
19:9)
இரண்டு வருஷகாலம்
இப்படி நடந்ததினாலே ஆசியாவில்
குடியிருந்த யூதரும் கிரேக்கருமாகிய எல்லாரும்
கர்த்தராகிய இயேசுவின் வசனத்தைக்
கேட்டார்கள். (அப்போஸ்தலர் 19:10)
ira'ndu varushakaalam
ippadi nadanthathinaalea aasiyaavil kudiyiruntha
yootharum kireakkarumaagiya ellaarum karththaraagiya iyeasuvin vasanaththaik keattaarga'l. (appoasthalar 19:10)
பவுலின் கைகளினாலே
தேவன் விசேஷித்த அற்புதங்களைச்
செய்தருளினார். (அப்போஸ்தலர் 19:11)
pavulin kaiga'linaalea theavan
viseashiththa a’rputhangga'laich seytharu'linaar. (appoasthalar
19:11)
அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும்
கொண்டுவந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு
நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும்
அவர்களைவிட்டுப் புறப்பட்டன. (அப்போஸ்தலர்
19:12)
avanudaiya sareeraththilirunthu u’rumaalga'laiyum kachchaiga'laiyum
ko'nduvanthu, viyaathikkaararmeal poada viyaathiga'l avarga'laivittu neenggippoayina; pollaatha
aaviga'lum avarga'laivittup pu’rappattana. (appoasthalar
19:12)
அப்பொழுது தேசாந்தரிகளாய்த் திரிகிற
மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர் பொல்லாத ஆவிகள்
பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின்
நாமத்தைச் சொல்லத் துணிந்து:
பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு
உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள்.
(அப்போஸ்தலர் 19:13)
appozhuthu theasaanthariga'laayth thirigi’ra manthiravaathiga'laagiya yootharil
silar
pollaatha aaviga'l pidiththirunthavarga'lmeal karththaraagiya iyeasuvin naamaththaich sollath thu'ninthu: pavul pirasanggikki’ra iyeasuvinpearil aa'naiyittu ungga'lukkuk katta'laiyidugi’roam en’raarga'l. (appoasthalar 19:13)
பிரதான ஆசாரியனாகிய
ஸ்கேவா என்னும் ஓர் யூதனுடைய குமாரர்
ஏழுபேர் இப்படிச் செய்தார்கள்.
(அப்போஸ்தலர் 19:14)
pirathaana aasaariyanaagiya skeavaa ennum oar yoothanudaiya
kumaarar eazhupear ippadich seythaarga'l. (appoasthalar 19:14)
பொல்லாத ஆவி அவர்களை நோக்கி:
இயேசுவை அறிவேன், பவுலையும்
அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி,
(அப்போஸ்தலர் 19:15)
pollaatha aavi avarga'lai noakki: iyeasuvai a’rivean, pavulaiyum
a’rivean,
neengga'l
yaar en’ru solli, (appoasthalar
19:15)
பொல்லாத ஆவியையுடைய
மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து,
பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள,
அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு
ஓடிப்போனார்கள். (அப்போஸ்தலர் 19:16)
pollaatha aaviyaiyudaiya manushan
avarga'lmeal paaynthu,
balaathkaarampa'n'ni, avarga'lai mea’rko'l'la, avarga'l niruvaa'niga'lum kaayappattavarga'lumaagi antha veettai vittu oadippoanaarga'l. (appoasthalar 19:16)
இது எபேசுவிலே
குடியிருந்த யூதர் கிரேக்கர்
அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய
இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது. (அப்போஸ்தலர்
19:17)
ithu ebeasuvilea kudiyiruntha
yoothar kireakkar anaivarukkum
theriyavanthapoathu, avarga'lellaarum bayamadainthaarga'l; karththaraagiya iyeasuvin naamam
magimaippattathu. (appoasthalar
19:17)
விசுவாசித்தவர்களில் அநேகர்
வந்து, தங்கள் செய்கைகளை
வெளிப்படுத்தி அறிக்கையிட்டார்கள். (அப்போஸ்தலர்
19:18)
visuvaasiththavarga'lil aneagar vanthu, thangga'l seygaiga'lai ve'lippaduththi a’rikkaiyittaarga'l. (appoasthalar
19:18)
மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர்
தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து,
எல்லாருக்கு முன்பாகச் சுட்டெரித்தார்கள்; அவைகளின்
கிரயத்தைத் தொகைபார்த்து, ஐம்பதினாயிரம்
வெள்ளிக்காசாகக் கண்டார்கள். (அப்போஸ்தலர்
19:19)
maayaviththaikkaararaayirunthavarga'lil aneagar thangga'l pusthagangga'laik ko'nduvanthu,
ellaarukku munbaagach sutteriththaarga'l; avaiga'lin kirayaththaith thogaipaarththu, aimbathinaayiram ve'l'likkaasaagak ka'ndaarga'l. (appoasthalar
19:19)
இவ்வளவு பலமாய்க்
கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது.
(அப்போஸ்தலர் 19:20)
ivva'lavu balamaayk karththarudaiya vasanam viruththiyadainthu mea’rko'ndathu. (appoasthalar
19:20)
இவைகள் முடிந்தபின்பு, பவுல் மக்கெதோனியா அகாயா என்னும் நாடுகளில்
சுற்றிநடந்து, எருசலேமுக்குப்போகும்படி ஆவியில்
நிருணயம்பண்ணிக்கொண்டு: நான் அங்கே போனபின்பு ரோமாபுரியையும் பார்க்கவேண்டியதென்று சொல்லி,
(அப்போஸ்தலர் 19:21)
ivaiga'l mudinthapinbu, pavul makkethoaniyaa akaayaa ennum naaduga'lil sut’rinadanthu, erusaleamukkuppoagumpadi aaviyil niru'nayampa'n'nikko'ndu: naan anggea poanapinbu roamaapuriyaiyum paarkkavea'ndiyathen’ru solli, (appoasthalar
19:21)
தனக்கு உதவிசெய்தவர்களில் இரண்டுபேராகிய
தீமோத்தேயுவையும் எரஸ்துவையும் மக்கெதோனியாவுக்கு அனுப்பிவிட்டு; தான் பின்னுஞ் சிலகாலம்
ஆசியாவிலே தங்கினான். (அப்போஸ்தலர்
19:22)
thanakku uthaviseythavarga'lil ira'ndupearaagiya theemoaththeayuvaiyum erasthuvaiyum
makkethoaniyaavukku anuppivittu; thaan pinnugn
silakaalam aasiyaavilea thangginaan. (appoasthalar
19:22)
அக்காலத்திலே இந்த மார்க்கத்தைக்குறித்துப் பெரிய கலகம் உண்டாயிற்று.
(அப்போஸ்தலர் 19:23)
akkaalaththilea intha maarkkaththaikku’riththup periya kalagam u'ndaayit’ru. (appoasthalar
19:23)
எப்படியென்றால், தெமேத்திரியு
என்னும் பேர்கொண்ட ஒரு தட்டான் தியானாளின்
கோவிலைப்போல வெள்ளியினால் சிறிய கோவில்களைச் செய்து,
தொழிலாளிகளுக்கு மிகுந்த ஆதாயம்
வருவித்துக்கொண்டிருந்தான். (அப்போஸ்தலர் 19:24)
eppadiyen’raal, themeaththiriyu ennum pearko'nda oru thattaan thiyaanaa'lin koavilaippoala ve'l'liyinaal
si’riya
koavilga'laich seythu, thozhilaa'liga'lukku miguntha aathaayam
varuviththukko'ndirunthaan. (appoasthalar 19:24)
இவர்களையும் இப்படிப்பட்ட
தொழில்செய்கிற மற்ற வேலையாட்களையும் அவன் கூடிவரச்செய்து: மனுஷர்களே,
இந்தத் தொழிலினால் நமக்கு
நல்ல பிழைப்பு உண்டாயிருக்கிறதென்று அறிவீர்கள்.
(அப்போஸ்தலர் 19:25)
ivarga'laiyum ippadippatta thozhilseygi’ra mat’ra vealaiyaadka'laiyum avan koodivarachseythu: manusharga'lea, inthath thozhilinaal
namakku nalla pizhaippu
u'ndaayirukki’rathen’ru a’riveerga'l. (appoasthalar
19:25)
இப்படியிருக்க, கைகளினால்
செய்யப்பட்ட தேவர்கள் தேவர்களல்லவென்று இந்தப்
பவுல் என்பவன் சொல்லி,
எபேசுவிலேமாத்திரமல்ல, கொஞ்சங்குறைய ஆசியா எங்கும் அநேக ஜனங்களுக்குப் போதித்து,
அவர்களை வசப்படுத்திக்கொண்டான் என்று நீங்கள் கண்டும்
கேட்டும் இருக்கிறீர்கள். (அப்போஸ்தலர்
19:26)
ippadiyirukka, kaiga'linaal seyyappatta theavarga'l theavarga'lallaven’ru inthap
pavul enbavan solli, ebeasuvileamaaththiramalla, kognchangku’raiya aasiyaa enggum aneaga janangga'lukkup poathiththu, avarga'lai vasappaduththikko'ndaan en’ru neengga'l ka'ndum
keattum
irukki’reerga'l. (appoasthalar
19:26)
இதனால் நம்முடைய
தொழில் அற்றுப்போகும்படியான அபாயம்
நேரிட்டிருக்கிறதுமல்லாமல், மகா தேவியாகிய
தியானாளுடைய கோவில் எண்ணமற்றுப்
போகிறதற்கும், ஆசியா முழுமையும்
பூச்சக்கரமும் சேவிக்கிற அவளுடைய
மகத்துவம் அழிந்துபோகிறதற்கும் ஏதுவாயிருக்கிறது என்றான்.
(அப்போஸ்தலர் 19:27)
ithanaal nammudaiya
thozhil at’ruppoagumpadiyaana abaayam nearittirukki’rathumallaamal, mahaa theaviyaagiya thiyaanaa'ludaiya koavil
e'n'namat’rup poagi’ratha’rkum, aasiyaa muzhumaiyum poochchakkaramum seavikki’ra ava'ludaiya magaththuvam azhinthupoagi’ratha’rkum eathuvaayirukki’rathu en’raan. (appoasthalar 19:27)
அவர்கள் இதைக் கேட்டு, கோபத்தால்
நிறைந்து: எபேசியருடைய தியானாளே
பெரியவள் என்று சத்தமிட்டார்கள். (அப்போஸ்தலர்
19:28)
avarga'l ithaik keattu, koabaththaal ni’rainthu: ebeasiyarudaiya thiyaanaa'lea
periyava'l en’ru saththamittaarga'l. (appoasthalar 19:28)
பட்டணம் முழுவதும்
கலகத்தினால் நிறைந்தது. பவுலுக்கு
வழித்துணையாய் வந்த மக்கெதோனியராகிய காயுவையும்
அரிஸ்தர்க்குவையும் அவர்கள் இழுத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு
அரங்கசாலைக்குப் பாய்ந்தோடினார்கள். (அப்போஸ்தலர்
19:29)
patta'nam muzhuvathum kalagaththinaal ni’rainthathu. pavulukku
vazhiththu'naiyaay vantha makkethoaniyaraagiya kaayuvaiyum
aristharkkuvaiyum avarga'l izhuththukko'ndu, orumanappattu aranggasaalaikkup paaynthoadinaarga'l. (appoasthalar
19:29)
பவுல் கூட்டத்துக்குள்ளே போக மனதாயிருந்தபோது, சீஷர்கள்
அவனைப் போகவிடவில்லை. (அப்போஸ்தலர்
19:30)
pavul koottaththukku'l'lea poaga manathaayirunthapoathu, seesharga'l avanaip poagavidavillai. (appoasthalar
19:30)
ஆசியாநாட்டுத் தலைவரில்
அவனுக்குச் சிநேகிதராயிருந்த சிலரும்
அவனிடத்திற்கு ஆள் அனுப்பி,
அரங்கசாலைக்குள் போகவேண்டாம் என்று எச்சரித்தார்கள். (அப்போஸ்தலர்
19:31)
aasiyaanaattuth thalaivaril
avanukkuch sineagitharaayiruntha
silarum
avanidaththi’rku aa'l anuppi, aranggasaalaikku'l poagavea'ndaam en’ru echchariththaarga'l. (appoasthalar 19:31)
கூட்டத்தில் அமளியுண்டாகி,
சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகப் பேசினார்கள்;
தாங்கள் கூடிவந்த காரணம்
இன்னதென்று அநேகருக்குத் தெரியாதிருந்தது. (அப்போஸ்தலர்
19:32)
koottaththil ama'liyu'ndaagi, silar ippadiyum silar appadiyumaagap peasinaarga'l; thaangga'l koodivantha kaara'nam
innathen’ru aneagarukkuth theriyaathirunthathu. (appoasthalar
19:32)
அப்பொழுது யூதர்கள்
அலெக்சந்தர் என்பவனை முன்னிற்கத்
தள்ளுகையில், கூட்டத்திலே சிலர் அவனை முன்னே
இழுத்துவிட்டார்கள். அலெக்சந்தர் கையமர்த்தி,
ஜனங்களுக்கு உத்தரவுசொல்ல மனதாயிருந்தான். (அப்போஸ்தலர்
19:33)
appozhuthu yootharga'l aleksanthar enbavanai munni’rkath tha'l'lugaiyil, koottaththilea silar avanai
munnea izhuththuvittaarga'l. aleksanthar kaiyamarththi, janangga'lukku uththaravusolla manathaayirunthaan. (appoasthalar
19:33)
அவன் யூதனென்று
அவர்கள் அறிந்தபோது, எபேசியருடைய
தியானாளே பெரியவள் என்று இரண்டுமணி நேரமளவும்
எல்லாரும் ஏகமாய்ச் சத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள். (அப்போஸ்தலர்
19:34)
avan yoothanen’ru avarga'l a’rinthapoathu, ebeasiyarudaiya thiyaanaa'lea
periyava'l en’ru ira'nduma'ni nearama'lavum
ellaarum eagamaaych saththamittukko'ndirunthaarga'l. (appoasthalar
19:34)
பட்டணத்துச் சம்பிரதியானவன் ஜனங்களை
அமர்த்தி: எபேசியரே, எபேசியருடைய
பட்டணம் மகா தேவியாகிய
தியானாளுக்கும் வானத்திலிருந்து விழுந்த
சிலைக்கும் கோவிற்பரிசாரகியாயிருக்கிறதை அறியாதவன்
உண்டோ? (அப்போஸ்தலர் 19:35)
patta'naththuch sambirathiyaanavan
janangga'lai amarththi:
ebeasiyarea, ebeasiyarudaiya patta'nam mahaa theaviyaagiya thiyaanaa'lukkum vaanaththilirunthu vizhuntha
silaikkum
koavi’rparisaaragiyaayirukki’rathai a’riyaathavan u'ndoa?
(appoasthalar 19:35)
இது எதிர்பேசப்படாத காரியமாகையால், நீங்கள்
ஒன்றும் பதறிச்செய்யாமல் அமர்ந்திருக்கவேண்டும். (அப்போஸ்தலர்
19:36)
ithu ethirpeasappadaatha kaariyamaagaiyaal, neengga'l on’rum patha’richseyyaamal amarnthirukkavea'ndum. (appoasthalar
19:36)
இந்த மனுஷரை
இங்கே கொண்டுவந்தீர்கள்; இவர்கள்
கோவிற்கொள்ளைக்காரருமல்ல, உங்கள் தேவியைத்
தூஷிக்கிறவர்களுமல்ல. (அப்போஸ்தலர் 19:37)
intha manusharai
inggea
ko'nduvantheerga'l; ivarga'l koavi’rko'l'laikkaararumalla, ungga'l theaviyaith
thooshikki’ravarga'lumalla. (appoasthalar
19:37)
தெமேத்திரியுக்கும் அவனைச்
சேர்ந்த தொழிலாளிகளுக்கும் ஒருவன்மேல்
ஒருகாரியம் உண்டாயிருந்தால், நியாயம்
விசாரிக்கிற நாட்களுண்டு, தேசாதிபதிகளும் இருக்கிறார்கள்; ஒருவர்பேரிலொருவர் வழக்காடிக்கொள்ளட்டும். (அப்போஸ்தலர்
19:38)
themeaththiriyukkum avanaich searntha thozhilaa'liga'lukkum oruvanmeal
orukaariyam u'ndaayirunthaal, niyaayam
visaarikki’ra naadka'lu'ndu, theasaathibathiga'lum irukki’raarga'l; oruvarpeariloruvar vazhakkaadikko'l'lattum. (appoasthalar
19:38)
நீங்கள் வேறே யாதொரு காரியத்தைக்குறித்து விசாரிக்கவேண்டியதானால், அது நியாயசங்கத்திலே தீர்க்கப்படும். (அப்போஸ்தலர்
19:39)
neengga'l vea’rea yaathoru kaariyaththaikku’riththu visaarikkavea'ndiyathaanaal, athu niyaayasanggaththilea theerkkappadum. (appoasthalar
19:39)
இன்றைக்கு உண்டான
கலகத்தைக்குறித்து நாம் உத்தரவுசொல்லுகிறதற்கு ஏதுவில்லாதபடியால், இந்தக்
கலகத்தைக்குறித்து நாங்கள் விசாரிக்கப்படும்போது, குற்றவாளிகளாகிறதற்கு ஏதுவாயிருப்போமே என்று சொல்லி, (அப்போஸ்தலர்
19:40)
in’raikku u'ndaana kalagaththaikku’riththu naam uththaravusollugi’ratha’rku eathuvillaathapadiyaal, inthak
kalagaththaikku’riththu naangga'l visaarikkappadumpoathu, kut’ravaa'liga'laagi’ratha’rku eathuvaayiruppoamea en’ru solli, (appoasthalar
19:40)
பின்பு கூட்டத்தை
அனுப்பிவிட்டான். (அப்போஸ்தலர் 19:41)
pinbu koottaththai anuppivittaan. (appoasthalar 19:41)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!