கலகம் அமர்ந்தபின்பு, பவுல் சீஷரைத் தன்னிடத்திற்கு வரவழைத்து,
வினவிக்கொண்டு, மக்கெதோனியாவுக்குப் போகப் புறப்பட்டான். (அப்போஸ்தலர்
20:1)
kalagam amarnthapinbu, pavul seesharaith thannidaththi’rku varavazhaiththu, vinavikko'ndu, makkethoaniyaavukkup poagap pu’rappattaan. (appoasthalar 20:1)
அவன் அந்தத்
திசைகளிலே சுற்றி நடந்து,
சீஷர்களுக்கு வெகுவாய்ப் புத்திசொல்லி,
கிரேக்கு தேசத்திலே சேர்ந்தான்.
(அப்போஸ்தலர் 20:2)
avan anthath
thisaiga'lilea sut’ri nadanthu,
seesharga'lukku veguvaayp buththisolli, kireakku theasaththilea searnthaan. (appoasthalar
20:2)
அங்கே மூன்றுமாதம்
சஞ்சரித்தபின்பு, அவன் கப்பல்
ஏறி, சீரியாதேசத்துக்குப்போக மனதாயிருந்தபோது, யூதர்கள்
அவனுக்குத் தீமைசெய்யும்படி இரகசியமான
யோசனைகொண்டிருந்தபடியால், மக்கெதோனியா தேசத்தின்
வழியாய்த் திரும்பிப்போகத் தீர்மானம்
பண்ணினான். (அப்போஸ்தலர் 20:3)
anggea moon’rumaatham sagnchariththapinbu, avan kappal
ea’ri,
seeriyaatheasaththukkuppoaga manathaayirunthapoathu, yootharga'l avanukkuth
theemaiseyyumpadi iragasiyamaana yoasanaiko'ndirunthapadiyaal, makkethoaniyaa theasaththin vazhiyaayth
thirumbippoagath theermaanam
pa'n'ninaan. (appoasthalar 20:3)
பெரோயா ஊரானாகிய
சோபத்தரும், தெசலோனிக்கேயரில் அரிஸ்தர்க்கும், செக்குந்தும்,
தெர்பையானாகிய காயுவும், தீமோத்தேயும்,
ஆசியா நாட்டாராகிய தீகிக்கும்
துரோப்பீமும், ஆசியாநாடுவரைக்கும் அவனுக்கு
வழித்துணையாய் வந்தார்கள். (அப்போஸ்தலர்
20:4)
beroayaa ooraanaagiya soapaththarum, thesaloanikkeayaril aristharkkum,
sekkunthum, therbaiyaanaagiya kaayuvum, theemoaththeayum, aasiyaa naattaaraagiya theegikkum thuroappeemum, aasiyaanaaduvaraikkum avanukku
vazhiththu'naiyaay vanthaarga'l. (appoasthalar 20:4)
இவர்கள் முன்னாகப்
போய், துரோவாபட்டணத்திலே எங்களுக்காகக்
காத்திருந்தார்கள். (அப்போஸ்தலர் 20:5)
ivarga'l munnaagap poay, thuroavaapatta'naththilea engga'lukkaagak kaaththirunthaarga'l. (appoasthalar 20:5)
புளிப்பில்லாத அப்பப்பண்டிகை
நாட்களுக்குப்பின்பு நாங்கள் கப்பல்
ஏறிப் பிலிப்பிபட்டணத்தை விட்டு
ஐந்து நாளைக்குள்ளே துரோவாபட்டணத்துக்கு அவர்களிடத்தில் வந்து,
அங்கே ஏழுநாள் தங்கியிருந்தோம். (அப்போஸ்தலர்
20:6)
pu'lippillaatha appappa'ndigai naadka'lukkuppinbu naangga'l kappal
ea’rip
pilippipatta'naththai vittu ainthu
naa'laikku'l'lea thuroavaapatta'naththukku avarga'lidaththil vanthu, anggea eazhunaa'l
thanggiyirunthoam. (appoasthalar
20:6)
வாரத்தின் முதல்நாளிலே,
அப்பம் பிட்கும்படி சீஷர்கள்
கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே
புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து,
நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான். (அப்போஸ்தலர்
20:7)
vaaraththin muthalnaa'lilea, appam pidkumpadi seesharga'l koodivanthirukkaiyil, pavul ma’runaa'lilea pu’rappadavea'ndumen’rirunthu, avarga'ludanea sambaashiththu, naduraaththirimattum pirasanggiththaan. (appoasthalar
20:7)
அவர்கள் கூடியிருந்த
மேல்வீட்டிலே அநேக விளக்குகள்
வைத்திருந்தது. (அப்போஸ்தலர் 20:8)
avarga'l koodiyiruntha mealveettilea aneaga vi'lakkuga'l vaiththirunthathu. (appoasthalar
20:8)
அப்பொழுது ஐத்திகு
என்னும் பேர்கொண்ட ஒரு வாலிபன் ஜன்னலில்
உட்கார்ந்திருந்து, பவுல் நெடுநேரம்
பிரசங்கம் பண்ணிக்கொண்டிருக்கையில், மிகுந்த
தூக்கமடைந்து, நித்திரைமயக்கத்தினால் சாய்ந்து,
மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்து, மரித்தவனாய்
எடுக்கப்பட்டான். (அப்போஸ்தலர் 20:9)
appozhuthu aiththiku ennum pearko'nda
oru vaaliban jannalil
udkaarnthirunthu, pavul nedunearam
pirasanggam pa'n'nikko'ndirukkaiyil, miguntha thookkamadainthu, niththiraimayakkaththinaal saaynthu, moon’raam meththaiyilirunthu keezhea
vizhunthu, mariththavanaay edukkappattaan. (appoasthalar
20:9)
உடனே பவுல் இறங்கிப்போய், அவன்மேல்
விழுந்து, அவனை அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிர் இவனுக்குள்
இருக்கிறது என்றான். (அப்போஸ்தலர்
20:10)
udanea pavul i’ranggippoay, avanmeal
vizhunthu, avanai a'naiththukko'ndu: kalanggaathirungga'l, ivan uyir ivanukku'l irukki’rathu en’raan. (appoasthalar
20:10)
பின்பு ஏறிப்போய்,
அப்பம் பிட்டுப் புசித்து,
விடியற்காலமளவும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்து, பின்பு
புறப்பட்டான். (அப்போஸ்தலர் 20:11)
pinbu ea’rippoay, appam pittup pusiththu, vidiya’rkaalama'lavum vegunearam peasikko'ndirunthu, pinbu pu’rappattaan. (appoasthalar 20:11)
அந்த வாலிபனை
அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டுவந்து, மிகுந்த
ஆறுதலடைந்தார்கள். (அப்போஸ்தலர் 20:12)
antha vaalibanai avarga'l uyiru'l'lavanaagak koottikko'nduvanthu, miguntha aa’ruthaladainthaarga'l. (appoasthalar 20:12)
பவுல் ஆசோபட்டணம்வரைக்கும் கரைவழியாய்ப்
போக மனதாயிருந்தபடியால், அவன் திட்டம்பண்ணியிருந்தபடியே, நாங்கள்
கப்பல் ஏறி, அந்தப்
பட்டணத்தில் அவனை ஏற்றிக்கொள்ளும்படி முன்னாக
அங்கே போயிருந்தோம். (அப்போஸ்தலர்
20:13)
pavul aasoapatta'namvaraikkum
karaivazhiyaayp poaga manathaayirunthapadiyaal, avan thittampa'n'niyirunthapadiyea, naangga'l kappal
ea’ri,
anthap patta'naththil avanai
eat’rikko'l'lumpadi munnaaga anggea poayirunthoam. (appoasthalar
20:13)
அவன் ஆசோபட்டணத்திலே எங்களைக்
கண்டபோது, நாங்கள் அவனை ஏற்றிக்கொண்டு, மித்திலேனே
பட்டணத்துக்கு வந்தோம். (அப்போஸ்தலர்
20:14)
avan aasoapatta'naththilea engga'laik ka'ndapoathu, naangga'l avanai
eat’rikko'ndu, miththileanea
patta'naththukku vanthoam.
(appoasthalar 20:14)
அவ்விடம்விட்டு, மறுநாளிலே
கீயுதீவுக்கு எதிராக வந்து,
(அப்போஸ்தலர் 20:15)
avvidamvittu, ma’runaa'lilea keeyutheevukku ethiraaga vanthu,
(appoasthalar 20:15)
பவுல் கூடுமானால்
பெந்தெகொஸ்தே பண்டிகைநாளிலே எருசலேமிலிருக்கவேண்டுமென்று தீவிரப்பட்டதினிமித்தம், தான் ஆசியாவிலே காலம்போக்காதபடிக்கு, எபேசு பட்டணத்தைக் கடந்து
போகவேண்டுமென்று தீர்மானித்ததினால், மறுநாளிலே
சாமுதீவு பிடித்து, துரோகில்லியோன் ஊர்த்துறையிலே
தங்கி, மறுநாள் மிலேத்துபட்டணத்துக்கு வந்தோம்.
(அப்போஸ்தலர் 20:16)
pavul koodumaanaal
penthekosthea pa'ndigainaa'lilea erusaleamilirukkavea'ndumen’ru theevirappattathinimiththam, thaan aasiyaavilea kaalampoakkaathapadikku, ebeasu patta'naththaik kadanthu
poagavea'ndumen’ru theermaaniththathinaal, ma’runaa'lilea saamutheevu pidiththu,
thuroakilliyoan oorththu’raiyilea thanggi, ma’runaa'l mileaththupatta'naththukku vanthoam. (appoasthalar
20:16)
மிலேத்துவிலிருந்து அவன் எபேசுவுக்கு ஆள் அனுப்பி, சபையின்
மூப்பரை வரவழைத்தான். (அப்போஸ்தலர்
20:17)
mileaththuvilirunthu avan ebeasuvukku aa'l anuppi,
sabaiyin
moopparai varavazhaiththaan. (appoasthalar
20:17)
அவர்கள் தன்னிடத்தில்
வந்து சேர்ந்தபொழுது, அவன் அவர்களை நோக்கி:
நான் ஆசியாநாட்டில் வந்த முதல்நாள் தொடங்கி
எல்லாக் காலங்களிலும் உங்களுடனே
இன்னவிதமாய் இருந்தேன் என்பதை
நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். (அப்போஸ்தலர்
20:18)
avarga'l thannidaththil vanthu
searnthapozhuthu, avan avarga'lai noakki: naan aasiyaanaattil vantha
muthalnaa'l thodanggi ellaak kaalangga'lilum ungga'ludanea innavithamaay
irunthean enbathai neengga'l a’rinthirukki’reerga'l. (appoasthalar 20:18)
வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த
கண்ணீரோடும், யூதருடைய தீமையான
யோசனைகளால் எனக்கு நேரிட்ட
சோதனைகளோடும், நான் கர்த்தரைச்
சேவித்தேன். (அப்போஸ்தலர் 20:19)
vegu manaththaazhmaiyoadum, miguntha ka'n'neeroadum, yootharudaiya
theemaiyaana yoasanaiga'laal enakku
nearitta
soathanaiga'loadum, naan karththaraich seaviththean. (appoasthalar 20:19)
பிரயோஜனமானவைகளில் ஒன்றையும்
நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக
வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து,
உபதேசம்பண்ணி, (அப்போஸ்தலர் 20:20)
pirayoajanamaanavaiga'lil on’raiyum naan ungga'lukku ma’raiththuvaikkaamal, ve'liyaranggamaaga veeduga'lthoa’rum ungga'lukkup pirasanggiththu, ubatheasampa'n'ni, (appoasthalar
20:20)
தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக்குறித்தும், நம்முடைய
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக்குறித்தும், நான் யூதருக்கும் கிரேக்கருக்கும் சாட்சியாக
அறிவித்தேன். (அப்போஸ்தலர் 20:21)
theavanidaththi’rku mananthirumbuvathaikku’riththum, nammudaiya
karththaraagiya iyeasuki’risthuvai visuvaasippathaikku’riththum, naan yootharukkum
kireakkarukkum saadchiyaaga a’riviththean. (appoasthalar 20:21)
இப்பொழுதும் நான் ஆவியிலே கட்டுண்டவனாய்
எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு நேரிடுங்காரியங்களை நான் அறியேன். (அப்போஸ்தலர்
20:22)
ippozhuthum naan aaviyilea kattu'ndavanaay erusaleamukkup poagi’rean; anggea enakku
nearidungkaariyangga'lai naan a’riyean. (appoasthalar 20:22)
கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு
வைத்திருக்கிறதென்று பரிசுத்தஆவியானவர் பட்டணந்தோறும்
தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன். (அப்போஸ்தலர்
20:23)
kattuga'lum ubaththiravangga'lum enakku
vaiththirukki’rathen’ru parisuththaaaviyaanavar
patta'nanthoa’rum therivikki’rathaimaaththiram a’rinthirukki’rean. (appoasthalar 20:23)
ஆகிலும் அவைகளில்
ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்;
என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே
முடிக்கவும், தேவனுடைய கிருபையின்
சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே
விரும்புகிறேன். (அப்போஸ்தலர் 20:24)
aagilum avaiga'lil on’raiyungku’riththuk kavalaippadean; en piraa'nanaiyum naan arumaiyaaga e'n'nean; en oattaththaich santhoashaththoadea mudikkavum,
theavanudaiya kirubaiyin suviseashaththaip pirasanggampa'n'numpadikku
naan karththaraagiya iyeasuvinidaththil pet’ra oozhiyaththai ni’raiveat’ravumea virumbugi’rean. (appoasthalar 20:24)
இதோ, நான் உங்களுக்குள்ளே சஞ்சரித்து,
தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப்
பிரசங்கம்பண்ணினதைக் கேட்டவர்களாகிய நீங்களெல்லாரும் இனி என் முகத்தைப்
பார்க்கமாட்டீர்களென்று அறிந்திருக்கிறேன். (அப்போஸ்தலர்
20:25)
ithoa, naan ungga'lukku'l'lea sagnchariththu, theavanudaiya
raajyaththaik ku’riththup pirasanggampa'n'ninathaik keattavarga'laagiya neengga'lellaarum ini en mugaththaip paarkkamaatteerga'len’ru a’rinthirukki’rean. (appoasthalar 20:25)
தேவனுடைய ஆலோசனையில்
ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு
அறிவித்தபடியினாலே, (அப்போஸ்தலர் 20:26)
theavanudaiya aaloasanaiyil on’raiyum naan ma’raiththuvaikkaamal,
ellaavat’raiyum ungga'lukku a’riviththapadiyinaalea, (appoasthalar
20:26)
எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி
நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை
இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன்.
(அப்போஸ்தலர் 20:27)
ellaarudaiya iraththappazhikkum neenggi naan suththamaayirukki’reanenbatha’rku ungga'lai in’raiyaththinam saadchiga'laaga vaikki’rean. (appoasthalar
20:27)
ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி
உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். (அப்போஸ்தலர்
20:28)
aagaiyaal, ungga'laikku’riththum, theavan
thammudaiya suyaraththaththinaalea
sambaathiththukko'nda thamathu
sabaiyai
meayppatha’rkup parisuththaaavi ungga'laik ka'nkaa'niga'laaga vaiththa manthai
muzhuvathaiyungku’riththum, echcharikkaiyaayirungga'l. (appoasthalar 20:28)
நான் போனபின்பு
மந்தையைத் தப்பவிடாத கொடிதான
ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும்.
(அப்போஸ்தலர் 20:29)
naan poanapinbu manthaiyaith
thappavidaatha kodithaana oanaayga'l ungga'lukku'l'lea varum.
(appoasthalar 20:29)
உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத்
தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன். (அப்போஸ்தலர்
20:30)
ungga'lilum silar ezhumbi, seesharga'laith thangga'lidaththil izhuththukko'l'lumpadi maa’rupaadaanavaiga'laip poathippaarga'len’ru a’rinthirukki’rean. (appoasthalar 20:30)
ஆனபடியால், நான் மூன்றுவருஷ காலமாய்
இரவும் பகலும் கண்ணீரோடே
இடைவிடாமல் அவனவனுக்குப் புத்திசொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து
விழித்திருங்கள். (அப்போஸ்தலர் 20:31)
aanapadiyaal, naan moon’ruvarusha kaalamaay iravum
pagalum
ka'n'neeroadea idaividaamal avanavanukkup
buththisollikko'nduvanthathai ninaiththu
vizhiththirungga'l. (appoasthalar
20:31)
இப்பொழுதும் சகோதரரே,
நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச்
சுதந்தரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும்
அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும்
உங்களை ஒப்புக்கொடுக்கிறேன். (அப்போஸ்தலர்
20:32)
ippozhuthum sagoathararea, neengga'l bakthiviruththiyadaiyavum, parisuththamaakkappatta anaivarukku'l'lum ungga'lukkuch suthantharaththaik
kodukkavum vallavaraayirukki’ra theavanukkum avarudaiya
kirubaiyu'l'la vasanaththukkum ungga'lai oppukkodukki’rean. (appoasthalar
20:32)
ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை. (அப்போஸ்தலர்
20:33)
oruvanudaiya ve'l'liyaiyaagilum ponnaiyaagilum vasthiraththaiyaagilum naan ichchikkavillai.
(appoasthalar 20:33)
நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும்
என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக்
கைகளே வேலைசெய்தது. (அப்போஸ்தலர்
20:34)
neengga'l a’rinthirukki’rapadi, enakkum
ennudaneakooda irunthavarga'lukkum vea'ndiyavaiga'lukkaaga inthak
kaiga'lea
vealaiseythathu. (appoasthalar
20:34)
இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத்
தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே
பாக்கியம் என்று கர்த்தராகிய
இயேசு சொன்ன வார்த்தைகளை
நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களுக்குக்
காண்பித்தேன் என்றான். (அப்போஸ்தலர்
20:35)
ippadip pirayaasappattu, balaveenaraith thaanggavum, vaanggugi’rathaippaarkkilum
kodukki’rathea baakkiyam en’ru karththaraagiya iyeasu sonna vaarththaiga'lai ninaikkavum
vea'ndumen’ru ellaa vithaththileayum ungga'lukkuk kaa'nbiththean en’raan. (appoasthalar
20:35)
இவைகளைச் சொன்னபின்பு,
அவன் முழங்காற்படியிட்டு, அவர்களெல்லாரோடுங்கூட ஜெபம்பண்ணினான். (அப்போஸ்தலர்
20:36)
ivaiga'laich sonnapinbu, avan muzhanggaa’rpadiyittu, avarga'lellaaroadungkooda
jebampa'n'ninaan. (appoasthalar
20:36)
அவர்களெல்லாரும் மிகவும்
அழுது, என் முகத்தை
நீங்கள் இனிப் பார்க்கமாட்டீர்களென்று அவன் சொன்ன வார்த்தையைக்குறித்து அதிகமாய்த்
துக்கப்பட்டு, (அப்போஸ்தலர் 20:37)
avarga'lellaarum migavum azhuthu, en mugaththai neengga'l inip paarkkamaatteerga'len’ru avan sonna vaarththaiyaikku’riththu athigamaayth thukkappattu, (appoasthalar 20:37)
பவுலின் கழுத்தைக்
கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்து, கப்பல்வரைக்கும் அவனுடனே
கூடப்போனார்கள். (அப்போஸ்தலர் 20:38)
pavulin kazhuththaik
kattikko'ndu, avanai
muththagnseythu, kappalvaraikkum avanudanea
koodappoanaarga'l. (appoasthalar
20:38)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!