Friday, May 20, 2016

Appoasthalar 18 | அப்போஸ்தலருடைய நடபடிகள் 18 | Acts 18


அதன்பின்பு  பவுல்  அத்தேனே  பட்டணத்தை  விட்டு,  கொரிந்து  பட்டணத்துக்கு  வந்து;  (அப்போஸ்தலர்  18:1)

athanpinbu  pavul  aththeanea  patta'naththai  vittu,  korinthu  patta'naththukku  vanthu;  (appoasthalar  18:1)

யூதரெல்லாரும்  ரோமாபுரியை  விட்டுப்  போகும்படி  கிலவுதியுராயன்  கட்டளையிட்டபடியினாலே,  இத்தாலியாவிலிருந்து  புதிதாய்  வந்திருந்த  பொந்துதேசத்தானாகிய  ஆக்கில்லா  என்னும்  நாமமுள்ள  ஒரு  யூதனையும்  அவன்  மனைவியாகிய  பிரிஸ்கில்லாளையும்  அங்கே  கண்டு,  அவர்களிடத்திற்குப்  போனான்.  (அப்போஸ்தலர்  18:2)

yootharellaarum  roamaapuriyai  vittup  poagumpadi  kilavuthiyuraayan  katta'laiyittapadiyinaalea,  iththaaliyaavilirunthu  puthithaay  vanthiruntha  ponthutheasaththaanaagiya  aakkillaa  ennum  naamamu'l'la  oru  yoothanaiyum  avan  manaiviyaagiya  piriskillaa'laiyum  anggea  ka'ndu,  avarga'lidaththi’rkup  poanaan.  (appoasthalar  18:2)

அவர்கள்  கூடாரம்பண்ணுகிற  தொழிலாளிகளாயிருந்தார்கள்;  தானும்  அந்தத்  தொழில்  செய்கிறவனானபடியினாலே  அவர்களிடத்தில்  தங்கி,  வேலைசெய்துகொண்டு  வந்தான்.  (அப்போஸ்தலர்  18:3)

avarga'l  koodaarampa'n'nugi’ra  thozhilaa'liga'laayirunthaarga'l;  thaanum  anthath  thozhil  seygi’ravanaanapadiyinaalea  avarga'lidaththil  thanggi,  vealaiseythuko'ndu  vanthaan.  (appoasthalar  18:3)

ஓய்வுநாள்தோறும்  அவன்  ஜெபஆலயத்திலே  சம்பாஷணைபண்ணி,  யூதருக்கும்  கிரேக்கருக்கும்  புத்திசொன்னான்.  (அப்போஸ்தலர்  18:4)

oayvunaa'lthoa’rum  avan  jebaaalayaththilea  sambaasha'naipa'n'ni,  yootharukkum  kireakkarukkum  buththisonnaan.  (appoasthalar  18:4)

மக்கெதோனியாவிலிருந்து  சீலாவும்  தீமோத்தேயும்  வந்தபோது,  பவுல்  ஆவியில்  வைராக்கியங்கொண்டு,  இயேசுவே  கிறிஸ்து  என்று  யூதருக்குத்  திருஷ்டாந்தப்படுத்தினான்.  (அப்போஸ்தலர்  18:5)

makkethoaniyaavilirunthu  seelaavum  theemoaththeayum  vanthapoathu,  pavul  aaviyil  vairaakkiyangko'ndu,  iyeasuvea  ki’risthu  en’ru  yootharukkuth  thirushdaanthappaduththinaan.  (appoasthalar  18:5)

அவர்கள்  எதிர்த்துநின்று  தூஷித்தபோது,  அவன்  தன்  வஸ்திரங்களை  உதறி:  உங்கள்  இரத்தப்பழி  உங்கள்  தலையின்மேல்  இருக்கும்;  நான்  சுத்தமாயிருக்கிறேன்;  இதுமுதல்  புறஜாதியாரிடத்திற்குப்  போகிறேனென்று  அவர்களுடனே  சொல்லி,  (அப்போஸ்தலர்  18:6)

avarga'l  ethirththunin’ru  thooshiththapoathu,  avan  than  vasthirangga'lai  utha’ri:  ungga'l  iraththappazhi  ungga'l  thalaiyinmeal  irukkum;  naan  suththamaayirukki’rean;  ithumuthal  pu’rajaathiyaaridaththi’rkup  poagi’reanen’ru  avarga'ludanea  solli,  (appoasthalar  18:6)

அவ்விடத்தைவிட்டு,  தேவனை  வணங்குகிறவனாகிய  யுஸ்து  என்னும்  பேருள்ள  ஒருவனுடைய  வீட்டிற்கு  வந்தான்;  அவன்  வீடு  ஜெபஆலயத்திற்கு  அடுத்ததாயிருந்தது.  (அப்போஸ்தலர்  18:7)

avvidaththaivittu,  theavanai  va'nanggugi’ravanaagiya  yusthu  ennum  pearu'l'la  oruvanudaiya  veetti’rku  vanthaan;  avan  veedu  jebaaalayaththi’rku  aduththathaayirunthathu.  (appoasthalar  18:7)

ஜெபஆலயத்தலைவனாகிய  கிறிஸ்பு  என்பவன்  தன்  வீட்டார்  அனைவரோடும்  கர்த்தரிடத்தில்  விசுவாசமுள்ளவனானான்.  கொரிந்தியரில்  அநேகரும்  சுவிசேஷத்தைக்  கேட்டு,  விசுவாசித்து,  ஞானஸ்நானம்  பெற்றார்கள்.  (அப்போஸ்தலர்  18:8)

jebaaalayaththalaivanaagiya  ki’rispu  enbavan  than  veettaar  anaivaroadum  karththaridaththil  visuvaasamu'l'lavanaanaan.  korinthiyaril  aneagarum  suviseashaththaik  keattu,  visuvaasiththu,  gnaanasnaanam  pet’raarga'l.  (appoasthalar  18:8)

இராத்திரியிலே  கர்த்தர்  பவுலுக்குத்  தரிசனமாகி:  நீ  பயப்படாமல்  பேசு,  மவுனமாயிராதே;  (அப்போஸ்தலர்  18:9)

iraaththiriyilea  karththar  pavulukkuth  tharisanamaagi:  nee  bayappadaamal  peasu,  mavunamaayiraathea;  (appoasthalar  18:9)

நான்  உன்னுடனேகூட  இருக்கிறேன்,  உனக்குத்  தீங்குசெய்யும்படி  ஒருவனும்  உன்மேல்  கைபோடுவதில்லை;  இந்தப்  பட்டணத்தில்  எனக்கு  அநேக  ஜனங்கள்  உண்டு  என்றார்.  (அப்போஸ்தலர்  18:10)

naan  unnudaneakooda  irukki’rean,  unakkuth  theengguseyyumpadi  oruvanum  unmeal  kaipoaduvathillai;  inthap  patta'naththil  enakku  aneaga  janangga'l  u'ndu  en’raar.  (appoasthalar  18:10)

அவன்  ஒரு  வருஷமும்  ஆறு  மாதமும்  அங்கே  தங்கி,  தேவவசனத்தை  அவர்களுக்குள்ளே  உபதேசம்பண்ணிக்கொண்டுவந்தான்.  (அப்போஸ்தலர்  18:11)

avan  oru  varushamum  aa’ru  maathamum  anggea  thanggi,  theavavasanaththai  avarga'lukku'l'lea  ubatheasampa'n'nikko'nduvanthaan.  (appoasthalar  18:11)

கல்லியோன்  என்பவன்  அகாயா  நாட்டிற்கு  அதிபதியானபோது,  யூதர்கள்  ஒருமனப்பட்டு,  பவுலுக்கு  விரோதமாய்  எழும்பி,  அவனை  நியாயாசனத்துக்கு  முன்பாகக்  கொண்டுபோய்:  (அப்போஸ்தலர்  18:12)

kalliyoan  enbavan  akaayaa  naatti’rku  athibathiyaanapoathu,  yootharga'l  orumanappattu,  pavulukku  viroathamaay  ezhumbi,  avanai  niyaayaasanaththukku  munbaagak  ko'ndupoay:  (appoasthalar  18:12)

இவன்  வேதப்பிரமாணத்துக்கு  விகற்பமாய்த்  தேவனைச்  சேவிக்கும்படி  மனுஷருக்குப்  போதிக்கிறான்  என்றார்கள்.  (அப்போஸ்தலர்  18:13)

ivan  veathappiramaa'naththukku  viga’rpamaayth  theavanaich  seavikkumpadi  manusharukkup  poathikki’raan  en’raarga'l.  (appoasthalar  18:13)

பவுல்  பேசுவதற்கு  எத்தனப்படுகையில்,  கல்லியோன்  யூதரை  நோக்கி:  யூதர்களே,  இது  ஒரு  அநியாயமாய்,  அல்லது  பொல்லாத  நடக்கையாயிருக்குமேயானால்  நான்  உங்களுக்குப்  பொறுமையாய்ச்  செவிகொடுப்பது  நியாயமாயிருக்கும்.  (அப்போஸ்தலர்  18:14)

pavul  peasuvatha’rku  eththanappadugaiyil,  kalliyoan  yootharai  noakki:  yootharga'lea,  ithu  oru  aniyaayamaay,  allathu  pollaatha  nadakkaiyaayirukkumeayaanaal  naan  ungga'lukkup  po’rumaiyaaych  sevikoduppathu  niyaayamaayirukkum.  (appoasthalar  18:14)

இது  சொற்களுக்கும்,  நாமங்களுக்கும்,  உங்கள்  வேதத்துக்கும்  அடுத்த  தர்க்கமானபடியினாலே,  இப்படிப்பட்டவைகளைக்குறித்து  விசாரணைசெய்ய  எனக்கு  மனதில்லை,  நீங்களே  பார்த்துக்கொள்ளுங்கள்  என்று  சொல்லி,  (அப்போஸ்தலர்  18:15)

ithu  so’rka'lukkum,  naamangga'lukkum,  ungga'l  veathaththukkum  aduththa  tharkkamaanapadiyinaalea,  ippadippattavaiga'laikku’riththu  visaara'naiseyya  enakku  manathillai,  neengga'lea  paarththukko'l'lungga'l  en’ru  solli,  (appoasthalar  18:15)

அவர்களை  நியாயாசனத்தினின்று  துரத்திவிட்டான்.  (அப்போஸ்தலர்  18:16)

avarga'lai  niyaayaasanaththinin’ru  thuraththivittaan.  (appoasthalar  18:16)

அப்பொழுது  கிரேக்கரெல்லாரும்  ஜெபஆலயத்தலைவனாகிய  சொஸ்தேனேயைப்  பிடித்து,  நியாயாசனத்துக்கு  முன்பாக  அடித்தார்கள்.  இவைகளில்  ஒன்றையுங்குறித்துக்  கல்லியோன்  கவலைப்படவில்லை.  (அப்போஸ்தலர்  18:17)

appozhuthu  kireakkarellaarum  jebaaalayaththalaivanaagiya  sostheaneayaip  pidiththu,  niyaayaasanaththukku  munbaaga  adiththaarga'l.  ivaiga'lil  on’raiyungku’riththuk  kalliyoan  kavalaippadavillai.  (appoasthalar  18:17)

பவுல்  அநேகநாள்  அங்கே  தரித்திருந்தபின்பு,  சகோதரரிடத்தில்  உத்தரவு  பெற்றுக்கொண்டு,  தனக்கு  ஒரு  பிரார்த்தனை  உண்டாயிருந்தபடியினால்  கெங்கிரேயா  பட்டணத்தில்  தலைச்சவரம்  பண்ணிக்கொண்டு,  சீரியாதேசத்துக்குப்  போகக்  கப்பல்  ஏறினான்.  பிரிஸ்கில்லாளும்  ஆக்கில்லாவும்  அவனுடனே  கூடப்போனார்கள்.  (அப்போஸ்தலர்  18:18)

pavul  aneaganaa'l  anggea  thariththirunthapinbu,  sagoathararidaththil  uththaravu  pet’rukko'ndu,  thanakku  oru  piraarththanai  u'ndaayirunthapadiyinaal  kenggireayaa  patta'naththil  thalaichsavaram  pa'n'nikko'ndu,  seeriyaatheasaththukkup  poagak  kappal  ea’rinaan.  piriskillaa'lum  aakkillaavum  avanudanea  koodappoanaarga'l.  (appoasthalar  18:18)

அவன்  எபேசுபட்டணத்துக்கு  வந்தபோது,  அங்கே  அவர்களை  விட்டு  நீங்கி,  ஜெபஆலயத்தில்  பிரவேசித்து,  யூதருடனே  சம்பாஷணைபண்ணினான்.  (அப்போஸ்தலர்  18:19)

avan  ebeasupatta'naththukku  vanthapoathu,  anggea  avarga'lai  vittu  neenggi,  jebaaalayaththil  piraveasiththu,  yootharudanea  sambaasha'naipa'n'ninaan.  (appoasthalar  18:19)

அவன்  இன்னுஞ்  சிலகாலம்  தங்களுடனே  இருக்கவேண்டுமென்று  அவர்கள்  கேட்டுக்கொண்டபோது,  அவன்  சம்மதியாமல்,  (அப்போஸ்தலர்  18:20)

avan  innugn  silakaalam  thangga'ludanea  irukkavea'ndumen’ru  avarga'l  keattukko'ndapoathu,  avan  sammathiyaamal,  (appoasthalar  18:20)

வருகிற  பண்டிகையிலே  எப்படியாயினும்  நான்  எருசலேமில்  இருக்கவேண்டும்,  தேவனுக்குச்  சித்தமானால்  திரும்பி  உங்களிடத்திற்கு  வருவேனென்று  சொல்லி,  அவர்களிடத்தில்  உத்தரவு  பெற்றுக்கொண்டு,  கப்பல்  ஏறி,  எபேசுவை  விட்டுப்  புறப்பட்டு,  (அப்போஸ்தலர்  18:21)

varugi’ra  pa'ndigaiyilea  eppadiyaayinum  naan  erusaleamil  irukkavea'ndum,  theavanukkuch  siththamaanaal  thirumbi  ungga'lidaththi’rku  varuveanen’ru  solli,  avarga'lidaththil  uththaravu  pet’rukko'ndu,  kappal  ea’ri,  ebeasuvai  vittup  pu’rappattu,  (appoasthalar  18:21)

செசரியா  பட்டணத்துக்கு  வந்து,  எருசலேமுக்குப்  போய்,  சபையைச்  சந்தித்து,  அந்தியோகியாவுக்குப்  போனான்.  (அப்போஸ்தலர்  18:22)

sesariyaa  patta'naththukku  vanthu,  erusaleamukkup  poay,  sabaiyaich  santhiththu,  anthiyoakiyaavukkup  poanaan.  (appoasthalar  18:22)

அங்கே  சிலகாலம்  சஞ்சரித்தபின்பு,  புறப்பட்டு,  கிரமமாய்க்  கலாத்தியா  நாட்டிலேயும்  பிரிகியா  நாட்டிலேயும்  சுற்றித்திரிந்து,  சீஷரெல்லாரையும்  திடப்படுத்தினான்.  (அப்போஸ்தலர்  18:23)

anggea  silakaalam  sagnchariththapinbu,  pu’rappattu,  kiramamaayk  kalaaththiyaa  naattileayum  pirigiyaa  naattileayum  sut’riththirinthu,  seesharellaaraiyum  thidappaduththinaan.  (appoasthalar  18:23)

அப்பொழுது  அலெக்சந்திரியா  பட்டணத்தில்  பிறந்தவனும்  சாதுரியவானும்  வேதாகமங்களில்  வல்லவனுமான  அப்பொல்லோ  என்னும்  பேர்கொண்ட  ஒரு  யூதன்  எபேசுபட்டணத்துக்கு  வந்தான்.  (அப்போஸ்தலர்  18:24)

appozhuthu  aleksanthiriyaa  patta'naththil  pi’ranthavanum  saathuriyavaanum  veathaagamangga'lil  vallavanumaana  appolloa  ennum  pearko'nda  oru  yoothan  ebeasupatta'naththukku  vanthaan.  (appoasthalar  18:24)

அவன்  கர்த்தருடைய  மார்க்கத்திலே  உபதேசிக்கப்பட்டு,  யோவான்  கொடுத்த  ஸ்நானத்தைமாத்திரம்  அறிந்தவனாயிருந்து,  ஆவியில்  அனலுள்ளவனாய்க்  கர்த்தருக்கு  அடுத்தவைகளைத்  திட்டமாய்ப்  போதகம்பண்ணிக்கொண்டுவந்தான்.  (அப்போஸ்தலர்  18:25)

avan  karththarudaiya  maarkkaththilea  ubatheasikkappattu,  yoavaan  koduththa  snaanaththaimaaththiram  a’rinthavanaayirunthu,  aaviyil  analu'l'lavanaayk  karththarukku  aduththavaiga'laith  thittamaayp  poathagampa'n'nikko'nduvanthaan.  (appoasthalar  18:25)

அவன்  ஜெபஆலயத்தில்  தைரியமாய்ப்  பேசத்தொடங்கினபோது  ஆக்கில்லாவும்  பிரிஸ்கில்லாளும்  அவன்  பேசுகிறதைக்  கேட்டு,  அவனைச்  சேர்த்துக்கொண்டு,  தேவனுடைய  மார்க்கத்தை  அதிக  திட்டமாய்  அவனுக்கு  விவரித்துக்காண்பித்தார்கள்.  (அப்போஸ்தலர்  18:26)

avan  jebaaalayaththil  thairiyamaayp  peasaththodangginapoathu  aakkillaavum  piriskillaa'lum  avan  peasugi’rathaik  keattu,  avanaich  searththukko'ndu,  theavanudaiya  maarkkaththai  athiga  thittamaay  avanukku  vivariththukkaa'nbiththaarga'l.  (appoasthalar  18:26)

பின்பு  அவன்  அகாயா  நாட்டிற்குப்  போகவேண்டுமென்றிருக்கையில்,  சீஷர்கள்  அவனை  ஏற்றுக்கொள்ளும்படி  சகோதரர்  அவர்களுக்கு  எழுதினார்கள்.  (அப்போஸ்தலர்  18:27)

pinbu  avan  akaayaa  naatti’rkup  poagavea'ndumen’rirukkaiyil,  seesharga'l  avanai  eat’rukko'l'lumpadi  sagoatharar  avarga'lukku  ezhuthinaarga'l.  (appoasthalar  18:27)

அவன்  அங்கே  வந்தபின்பு  வெளியரங்கமாக  யூதர்களுடனே  பலமாய்த்  தர்க்கம்பண்ணி,  இயேசுவே  கிறிஸ்து  என்று  வேதவாக்கியங்களைக்கொண்டு  திருஷ்டாந்தப்படுத்தினபடியால்,  கிருபையினாலே  விசுவாசிகளானவர்களுக்கு  மிகவும்  உதவியாயிருந்தான்.  (அப்போஸ்தலர்  18:28)

avan  anggea  vanthapinbu  ve'liyaranggamaaga  yootharga'ludanea  balamaayth  tharkkampa'n'ni,  iyeasuvea  ki’risthu  en’ru  veathavaakkiyangga'laikko'ndu  thirushdaanthappaduththinapadiyaal,  kirubaiyinaalea  visuvaasiga'laanavarga'lukku  migavum  uthaviyaayirunthaan.  (appoasthalar  18:28)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!