அவர்கள் அம்பிபோலி
பட்டணத்தையும் அப்பொலோனியா பட்டணத்தையும்
கடந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்கு
வந்தார்கள்; அங்கே யூதருக்கு
ஒரு ஜெபஆலயம் இருந்தது.
(அப்போஸ்தலர் 17:1)
avarga'l ampipoali patta'naththaiyum appoloaniyaa
patta'naththaiyum kadanthu,
thesaloanikkea patta'naththukku vanthaarga'l; anggea yootharukku
oru jebaaalayam irunthathu.
(appoasthalar 17:1)
பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை
எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து,
(அப்போஸ்தலர் 17:2)
pavul than vazhakkaththinpadiyea avarga'lidaththil poay, moon’ru oayvunaadka'lil veathavaakkiyangga'lin niyaayangga'lai eduththu
avarga'ludanea sambaashiththu, (appoasthalar 17:2)
கிறிஸ்து பாடுபடவும்
மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற
இந்த இயேசுவே கிறிஸ்து
என்றும் காண்பித்து, திருஷ்டாந்தப்படுத்தினான். (அப்போஸ்தலர்
17:3)
ki’risthu paadupadavum mariththoarilirunthu ezhunthirukkavum vea'ndiyathen’rum, naan ungga'lukku a’rivikki’ra intha iyeasuvea ki’risthu en’rum kaa'nbiththu, thirushdaanthappaduththinaan. (appoasthalar
17:3)
அவர்களில் சிலரும்,
பக்தியுள்ள கிரேக்கரில் திரளான
ஜனங்களும், கனம்பொருந்திய ஸ்திரீகளில்
அநேகரும் விசுவாசித்து, பவுலையும்
சீலாவையும் சேர்ந்து கொண்டார்கள்.
(அப்போஸ்தலர் 17:4)
avarga'lil silarum, bakthiyu'l'la kireakkaril thira'laana
janangga'lum, kanamporunthiya sthireega'lil aneagarum visuvaasiththu, pavulaiyum seelaavaiyum searnthu ko'ndaarga'l. (appoasthalar
17:4)
விசுவாசியாத யூதர்கள்
வைராக்கியங்கொண்டு வீணராகிய சில பொல்லாதவர்களைச் சேர்த்துக்கொண்டு, கூட்டங்கூடி,
பட்டணத்தில் அமளியுண்டாக்கி, யாசோனுடைய
வீட்டை வளைந்துகொண்டு, அவர்களைப்
பட்டணத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுவர வகைதேடினார்கள். (அப்போஸ்தலர்
17:5)
visuvaasiyaatha yootharga'l vairaakkiyangko'ndu vee'naraagiya sila pollaathavarga'laich searththukko'ndu,
koottangkoodi, patta'naththil ama'liyu'ndaakki, yaasoanudaiya veettai va'lainthuko'ndu, avarga'laip patta'naththaarukku munbaaga izhuththukko'nduvara vagaitheadinaarga'l. (appoasthalar 17:5)
அவர்களைக் காணாமல்,
யாசோனையும் சில சகோதரரையும்
பட்டணத்து அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுவந்து: உலகத்தைக்
கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள். (அப்போஸ்தலர்
17:6)
avarga'laik kaa'naamal, yaasoanaiyum sila sagoathararaiyum patta'naththu athigaariga'lidaththil izhuththukko'nduvanthu: ulagaththaik kalakkugi’ravarga'l inggeayum vanthirukki’raarga'l. (appoasthalar
17:6)
இவர்களை யாசோன்
ஏற்றுக்கொண்டான். இவர்களெல்லாரும் இயேசு என்னும் வேறொருவனை
ராஜா என்று சொல்லி,
இராயனுடைய கட்டளைகளுக்கு விரோதமாகச்
செய்கிறார்களென்று கூக்குரலிட்டு, (அப்போஸ்தலர்
17:7)
ivarga'lai yaasoan eat’rukko'ndaan. ivarga'lellaarum iyeasu ennum vea’roruvanai raajaa
en’ru
solli,
iraayanudaiya katta'laiga'lukku viroathamaagach seygi’raarga'len’ru kookkuralittu, (appoasthalar 17:7)
இவைகளைக் கேட்டுக்கொண்டிருந்த ஜனங்களையும்
பட்டணத்து அதிகாரிகளையும் கலங்கப்பண்ணினார்கள். (அப்போஸ்தலர்
17:8)
ivaiga'laik keattukko'ndiruntha
janangga'laiyum patta'naththu athigaariga'laiyum kalanggappa'n'ninaarga'l. (appoasthalar
17:8)
பின்பு அவர்கள்
யாசோனிடத்திலும் மற்றவர்களிடத்திலும் ஜாமீன்
வாங்கிக்கொண்டு, அவர்களை விட்டுவிட்டார்கள். (அப்போஸ்தலர்
17:9)
pinbu avarga'l yaasoanidaththilum
mat’ravarga'lidaththilum jaameen
vaanggikko'ndu, avarga'lai vittuvittaarga'l. (appoasthalar
17:9)
உடனே சகோதரர்
இராத்திரிகாலத்திலே பவுலையும் சீலாவையும்
பெரோயா பட்டணத்துக்கு அனுப்பிவிட்டார்கள்; அவர்கள்
அங்கே சேர்ந்து, யூதருடைய
ஜெபஆலயத்திற்குப் போனார்கள். (அப்போஸ்தலர்
17:10)
udanea sagoatharar iraaththirikaalaththilea pavulaiyum
seelaavaiyum beroayaa patta'naththukku anuppivittaarga'l; avarga'l anggea searnthu, yootharudaiya jebaaalayaththi’rkup poanaarga'l. (appoasthalar 17:10)
அந்தப் பட்டணத்தார்
மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள்
இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும்
வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள். (அப்போஸ்தலர்
17:11)
anthap patta'naththaar manoavaagnchaiyaay vasanaththai eat’rukko'ndu, kaariyangga'l ippadiyirukki’rathaa en’ru thinanthoa’rum veathavaakkiyangga'lai aaraaynthupaarththathinaal, thesaloanikkeayil u'l'lavarga'laippaarkkilum na’rku'nasaaliga'laayirunthaarga'l. (appoasthalar
17:11)
அதனால் அவர்களில்
அநேகம்பேரும் கனம்பொருந்திய கிரேக்கரில்
அநேக ஸ்திரீகளும் புருஷர்களும்
விசுவாசித்தார்கள். (அப்போஸ்தலர் 17:12)
athanaal avarga'lil aneagampearum kanamporunthiya kireakkaril
aneaga
sthireega'lum purusharga'lum visuvaasiththaarga'l. (appoasthalar
17:12)
பெரோயாவிலும் தேவவசனம்
பவுலினால் அறிவிக்கப்படுகிறதென்று தெசலோனிக்கேயரான யூதர்கள்
அறிந்தபோது, அங்கேயும் வந்து,
ஜனங்களைக் கிளப்பிவிட்டார்கள். (அப்போஸ்தலர்
17:13)
beroayaavilum theavavasanam pavulinaal a’rivikkappadugi’rathen’ru thesaloanikkeayaraana yootharga'l a’rinthapoathu, anggeayum vanthu,
janangga'laik ki'lappivittaarga'l. (appoasthalar 17:13)
உடனே சகோதரர்
பவுலைச் சமுத்திரவழியாய்ப் போக அனுப்பிவிட்டார்கள். சீலாவும்
தீமோத்தேயும் அங்கே தங்கியிருந்தார்கள். (அப்போஸ்தலர்
17:14)
udanea sagoatharar pavulaich samuththiravazhiyaayp poaga anuppivittaarga'l. seelaavum theemoaththeayum anggea thanggiyirunthaarga'l. (appoasthalar 17:14)
பவுலை வழிநடத்தினவர்கள் அவனை அத்தேனே பட்டணம்வரைக்கும் அழைத்துக்கொண்டுபோய்; அங்கே சீலாவும் தீமோத்தேயும்
அதிசீக்கிரமாகத் தன்னிடத்திற்கு வரும்படி
அவர்களுக்குச் சொல்லக் கட்டளை
பெற்றுக்கொண்டு புறப்பட்டுப்போனார்கள். (அப்போஸ்தலர்
17:15)
pavulai vazhinadaththinavarga'l avanai
aththeanea patta'namvaraikkum
azhaiththukko'ndupoay; anggea seelaavum theemoaththeayum athiseekkiramaagath thannidaththi’rku varumpadi avarga'lukkuch sollak katta'lai pet’rukko'ndu pu’rappattuppoanaarga'l. (appoasthalar 17:15)
அத்தேனே பட்டணத்தில்
பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கையில், அந்தப்
பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு,
தன் ஆவியில் மிகுந்த
வைராக்கியமடைந்து, (அப்போஸ்தலர் 17:16)
aththeanea patta'naththil pavul avarga'lukkaagak kaaththukko'ndirukkaiyil, anthap
patta'nam
vikkiragangga'laal ni’rainthirukki’rathaik ka'ndu, than aaviyil miguntha vairaakkiyamadainthu, (appoasthalar
17:16)
ஜெபஆலயத்தில் யூதரோடும்,
பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும்
சம்பாஷணைபண்ணினான். (அப்போஸ்தலர் 17:17)
jebaaalayaththil yootharoadum, bakthiyu'l'lavarga'loadum, santhaive'liyil
ethirppattavarga'loadum thinanthoa’rum sambaasha'naipa'n'ninaan.
(appoasthalar 17:17)
அப்பொழுது எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கருமான ஞானிகளில்
சிலர் அவனுடனே வாக்குவாதம்பண்ணினார்கள். சிலர்:
இந்த வாயாடி என்ன பேசப்போகிறான் என்றார்கள்.
சிலர்: இவன் அந்நிய
தேவதைகளை அறிவிக்கிறவனாகக் காண்கிறது
என்றார்கள். அவன் இயேசுவையும்
உயிர்த்தெழுதலையும் அவர்களுக்குப் பிரசங்கித்தபடியினாலே அப்படிச்
சொன்னார்கள். (அப்போஸ்தலர் 17:18)
appozhuthu eppikkoorarum
sthoayikkarumaana gnaaniga'lil silar avanudanea vaakkuvaathampa'n'ninaarga'l. silar: intha vaayaadi
enna peasappoagi’raan en’raarga'l. silar: ivan anniya theavathaiga'lai a’rivikki’ravanaagak kaa'ngi’rathu en’raarga'l. avan iyeasuvaiyum uyirththezhuthalaiyum avarga'lukkup pirasanggiththapadiyinaalea
appadich
sonnaarga'l. (appoasthalar
17:18)
அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு
அழைத்துக்கொண்டுபோய்: நீ சொல்லுகிற
புதிதான உபதேசம் இன்னதென்று
நாங்கள் அறியலாமா? (அப்போஸ்தலர்
17:19)
avarga'l avanai maars meadaikku azhaiththukko'ndupoay: nee sollugi’ra puthithaana
ubatheasam innathen’ru naangga'l a’riyalaamaa? (appoasthalar
17:19)
நூதனமான காரியங்களை
எங்கள் காதுகள் கேட்கப்பண்ணுகிறாய்; அவைகளின்
கருத்து இன்னதென்று அறிய மனதாயிருக்கிறோம் என்றார்கள்.
(அப்போஸ்தலர் 17:20)
noothanamaana kaariyangga'lai engga'l kaathuga'l keadkappa'n'nugi’raay; avaiga'lin karuththu
innathen’ru a’riya manathaayirukki’roam en’raarga'l. (appoasthalar 17:20)
அந்த அத்தேனே
பட்டணத்தாரெல்லாரும், அங்கே தங்குகிற
அந்நியரும், நவமான காரியங்களைச்
சொல்லுகிறதிலும் கேட்கிறதிலுமேயொழிய வேறொன்றிலும்
பொழுதுபோக்குகிறதில்லை. (அப்போஸ்தலர் 17:21)
antha aththeanea
patta'naththaarellaarum, anggea thanggugi’ra anniyarum,
navamaana kaariyangga'laich sollugi’rathilum keadki’rathilumeayozhiya
vea’ron’rilum pozhuthupoakkugi’rathillai. (appoasthalar
17:21)
அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின்
நடுவிலே நின்று: அத்தேனரே,
எந்த விஷயத்திலும் நீங்கள்
மிகுந்த தேவதாபக்தியுள்ளவர்களென்று காண்கிறேன்.
(அப்போஸ்தலர் 17:22)
appozhuthu pavul maars meadaiyin
naduvilea nin’ru: aththeanarea, entha vishayaththilum neengga'l miguntha theavathaabakthiyu'l'lavarga'len’ru kaa'ngi’rean. (appoasthalar
17:22)
எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள்
ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாத
தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்;
நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற
அவரையே நான் உங்களுக்கு
அறிவிக்கிறேன். (அப்போஸ்தலர் 17:23)
eppadiyen’raal, naan sut’riththirinthu, ungga'l aaraathanaikkuriyavaiga'laik kavaniththup
paarththapozhuthu, a’riyappadaatha theavanukku en’ru ezhuthiyirukki’ra oru balipeedaththaik
ka'ndean; neengga'l a’riyaamal aaraathikki’ra avaraiyea naan ungga'lukku a’rivikki’rean. (appoasthalar
17:23)
உலகத்தையும் அதிலுள்ள
யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர்
வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால்
கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை. (அப்போஸ்தலர்
17:24)
ulagaththaiyum athilu'l'la yaavat’raiyum u'ndaakkina
theavanaanavar vaanaththi’rkum boomikkum aa'ndavaraayirukki’rapadiyaal kaiga'linaal kattappatta koavilga'lil avar vaasampa'n'nugi’rathillai. (appoasthalar
17:24)
எல்லாருக்கும் ஜீவனையும்
சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற
அவர், தமக்கு யாதொன்று
தேவையானதுபோல, மனுஷர் கைகளால்
பணிவிடைகொள்ளுகிறதுமில்லை. (அப்போஸ்தலர் 17:25)
ellaarukkum jeevanaiyum
suvaasaththaiyum sagalaththaiyum kodukki’ra avar, thamakku yaathon’ru theavaiyaanathupoala, manushar
kaiga'laal pa'nividaiko'l'lugi’rathumillai. (appoasthalar
17:25)
மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே
தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும்
அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும்
குறித்திருக்கிறார்; (அப்போஸ்தலர் 17:26)
manushajaathiyaana sagala janangga'laiyum avar orea iraththaththinaalea thoan’rappa'n'ni, boomiyinmeethenggum kudiyirukkachseythu, mun theermaanikkappatta kaalangga'laiyum avarga'l kudiyiruppin
ellaiga'laiyum ku’riththirukki’raar; (appoasthalar 17:26)
கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும்
கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு
அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும்
தூரமானவரல்லவே. (அப்போஸ்தலர் 17:27)
karththaraagiya thammai avarga'l thadaviyaagilum ka'ndupidikkaththakkathaagath thammaith theadumpadikku appadich seythaar; avar nammil oruvarukkum
thooramaanavarallavea. (appoasthalar 17:27)
ஏனெனில் அவருக்குள்
நாம் பிழைக்கிறோம், அசைகிறோம்,
இருக்கிறோம்; அப்படியே உங்கள்
புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார்
என்று சொல்லியிருக்கிறார்கள். (அப்போஸ்தலர்
17:28)
eanenil avarukku'l
naam pizhaikki’roam, asaigi’roam, irukki’roam; appadiyea ungga'l pulavarga'lilum silar, naam avarudaiya santhathiyaar en’ru solliyirukki’raarga'l. (appoasthalar
17:28)
நாம் தேவனுடைய
சந்ததியாராயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின
பொன், வெள்ளி, கல் இவைகளுக்குத் தெய்வம்
ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது. (அப்போஸ்தலர்
17:29)
naam theavanudaiya
santhathiyaaraayirukka, manusharudaiya siththiravealaiyinaalum yukthiyinaalum uruvaakkina
pon, ve'l'li, kal ivaiga'lukkuth theyvam oppaayirukkumen’ru naam ninaikkalaagaathu. (appoasthalar 17:29)
அறியாமையுள்ள காலங்களைத்
தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ
மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார். (அப்போஸ்தலர்
17:30)
a’riyaamaiyu'l'la
kaalangga'laith theavan
kaa'naathavarpoalirunthaar; ippozhuthoa mananthirumbavea'ndumen’ru enggumu'l'la manusharellaarukkum katta'laiyidugi’raar. (appoasthalar 17:30)
மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை
நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும்
விளங்கப்பண்ணினார் என்றான். (அப்போஸ்தலர்
17:31)
mealum oru naa'laik ku’riththirukki’raar; athilea avar thaam niyamiththa
manushanaikko'ndu, booloagaththai neethiyaay
niyaayantheerppaar; antha manushanai
mariththoarilirunthu ezhuppinathinaalea athin nichchayaththai ellaarukkum vi'langgappa'n'ninaar en’raan. (appoasthalar
17:31)
மரித்தோரின் உயிர்த்தெழுதலைக்குறித்து அவர்கள்
கேட்டபொழுது, சிலர் இகழ்ந்தார்கள். சிலர்:
நீ சொல்லுகிறதை இன்னொருவேளை
கேட்போம் என்றார்கள். (அப்போஸ்தலர்
17:32)
mariththoarin uyirththezhuthalaikku’riththu avarga'l keattapozhuthu, silar igazhnthaarga'l. silar: nee sollugi’rathai innoruvea'lai keadpoam
en’raarga'l. (appoasthalar
17:32)
இப்படியிருக்க, பவுல் அவர்களை விட்டுப்
போய்விட்டான். (அப்போஸ்தலர் 17:33)
ippadiyirukka, pavul avarga'lai vittup poayvittaan. (appoasthalar 17:33)
சிலர் அவனைப்
பற்றிக்கொண்டு, விசுவாசிகளானார்கள். அவர்களில்
மார்ஸ்மேடையின் நியாயாதிபதிகளில் ஒருவனாகிய
தியொனீசியு என்பவனும், தாமரி என்னும் பேருள்ள
ஒரு ஸ்திரீயும், இவர்களுடனே
வேறு சிலரும் இருந்தார்கள்.
(அப்போஸ்தலர் 17:34)
silar avanaip pat’rikko'ndu, visuvaasiga'laanaarga'l. avarga'lil maarsmeadaiyin niyaayaathibathiga'lil oruvanaagiya thiyoneesiyu enbavanum, thaamari ennum pearu'l'la oru sthireeyum, ivarga'ludanea vea’ru silarum irunthaarga'l. (appoasthalar
17:34)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!