Friday, May 20, 2016

Appoasthalar 16 | அப்போஸ்தலருடைய நடபடிகள் 16 | Acts 16

அதன்பின்பு  அவன்  தெர்பைக்கும்  லீஸ்திராவுக்கும்  போனான்.  அங்கே  தீமோத்தேயு  என்னப்பட்ட  ஒரு  சீஷன்  இருந்தான்;  அவன்  தாய்  விசுவாசமுள்ள  யூதஸ்திரீ,  அவன்  தகப்பன்  கிரேக்கன்.  (அப்போஸ்தலர்  16:1)

athanpinbu  avan  therbaikkum  leesthiraavukkum  poanaan.  anggea  theemoaththeayu  ennappatta  oru  seeshan  irunthaan;  avan  thaay  visuvaasamu'l'la  yoothasthiree,  avan  thagappan  kireakkan.  (appoasthalar  16:1)

அவன்  லீஸ்திராவிலும்  இக்கோனியாவிலுமுள்ள  சகோதரராலே  நற்சாட்சி  பெற்றவனாயிருந்தான்.  (அப்போஸ்தலர்  16:2)

avan  leesthiraavilum  ikkoaniyaavilumu'l'la  sagoathararaalea  na’rsaadchi  pet’ravanaayirunthaan.  (appoasthalar  16:2)

அவனைப்  பவுல்  தன்னுடனே  கூட்டிக்கொண்டு  போகவேண்டுமென்று  விரும்பி,  அவனுடைய  தகப்பன்  கிரேக்கன்  என்று  அவ்விடங்களிலிருக்கும்  யூதர்களெல்லாரும்  அறிந்திருந்தபடியால்,  அவர்கள்  நிமித்தம்  அவனுக்கு  விருத்தசேதனம்பண்ணினான்.  (அப்போஸ்தலர்  16:3)

avanaip  pavul  thannudanea  koottikko'ndu  poagavea'ndumen’ru  virumbi,  avanudaiya  thagappan  kireakkan  en’ru  avvidangga'lilirukkum  yootharga'lellaarum  a’rinthirunthapadiyaal,  avarga'l  nimiththam  avanukku  viruththaseathanampa'n'ninaan.  (appoasthalar  16:3)

அவர்கள்  பட்டணங்கள்தோறும்  போகையில்,  எருசலேமிலிருக்கும்  அப்போஸ்தலராலும்  மூப்பராலும்  விதிக்கப்பட்ட  சட்டங்களைக்  கைக்கொள்ளும்படி  அவர்களுக்கு  ஒப்புவித்தார்கள்.  (அப்போஸ்தலர்  16:4)

avarga'l  patta'nangga'lthoa’rum  poagaiyil,  erusaleamilirukkum  appoasthalaraalum  moopparaalum  vithikkappatta  sattangga'laik  kaikko'l'lumpadi  avarga'lukku  oppuviththaarga'l.  (appoasthalar  16:4)

அதினாலே  சபைகள்  விசுவாசத்தில்  ஸ்திரப்பட்டு,  நாளுக்குநாள்  பெருகின.  (அப்போஸ்தலர்  16:5)

athinaalea  sabaiga'l  visuvaasaththil  sthirappattu,  naa'lukkunaa'l  perugina.  (appoasthalar  16:5)

அவர்கள்  பிரிகியா  கலாத்தியா  நாடுகளைக்  கடந்துபோனபோது,  ஆசியாவிலே  வசனத்தைச்  சொல்லாதபடிக்குப்  பரிசுத்தஆவியினாலே  தடைபண்ணப்பட்டு,  (அப்போஸ்தலர்  16:6)

avarga'l  pirigiyaa  kalaaththiyaa  naaduga'laik  kadanthupoanapoathu,  aasiyaavilea  vasanaththaich  sollaathapadikkup  parisuththaaaviyinaalea  thadaipa'n'nappattu,  (appoasthalar  16:6)

மீசியா  தேசமட்டும்  வந்து,  பித்தினியா  நாட்டுக்குப்  போகப்  பிரயத்தனம்  பண்ணினார்கள்;  ஆவியானவரோ  அவர்களைப்  போகவொட்டாதிருந்தார்.  (அப்போஸ்தலர்  16:7)

meesiyaa  theasamattum  vanthu,  biththiniyaa  naattukkup  poagap  pirayaththanam  pa'n'ninaarga'l;  aaviyaanavaroa  avarga'laip  poagavottaathirunthaar.  (appoasthalar  16:7)

அப்பொழுது  அவர்கள்  மீசியா  பக்கமாய்ப்  போய்,  துரோவாவுக்கு  வந்தார்கள்.  (அப்போஸ்தலர்  16:8)

appozhuthu  avarga'l  meesiyaa  pakkamaayp  poay,  thuroavaavukku  vanthaarga'l.  (appoasthalar  16:8)

அங்கே  இராத்திரியிலே  பவுலுக்கு  ஒரு  தரிசனம்  உண்டாயிற்று;  அதென்னவெனில்,  மக்கெதோனியா  தேசத்தான்  ஒருவன்  வந்துநின்று:  நீர்  மக்கெதோனியாவுக்கு  வந்து  எங்களுக்கு  உதவிசெய்ய  வேண்டுமென்று  தன்னை  வேண்டிக்கொண்டதாக  இருந்தது.  (அப்போஸ்தலர்  16:9)

anggea  iraaththiriyilea  pavulukku  oru  tharisanam  u'ndaayit’ru;  athennavenil,  makkethoaniyaa  theasaththaan  oruvan  vanthunin’ru:  neer  makkethoaniyaavukku  vanthu  engga'lukku  uthaviseyya  vea'ndumen’ru  thannai  vea'ndikko'ndathaaga  irunthathu.  (appoasthalar  16:9)

அந்தத்  தரிசனத்தை  அவன்  கண்டபோது,  அவர்களுக்குச்  சுவிசேஷத்தை  அறிவிக்கும்படி  கர்த்தர்  எங்களை  அழைத்தாரென்று  நாங்கள்  நிச்சயித்துக்கொண்டு,  உடனே  மக்கெதோனியாவுக்குப்  புறப்பட்டுப்போகப்  பிரயத்தனம்பண்ணி,  (அப்போஸ்தலர்  16:10)

anthath  tharisanaththai  avan  ka'ndapoathu,  avarga'lukkuch  suviseashaththai  a’rivikkumpadi  karththar  engga'lai  azhaiththaaren’ru  naangga'l  nichchayiththukko'ndu,  udanea  makkethoaniyaavukkup  pu’rappattuppoagap  pirayaththanampa'n'ni,  (appoasthalar  16:10)

துரோவாவில்  கப்பல்  ஏறி,  சாமோத்திராக்கே  தீவுக்கும்,  மறுநாளிலே  நெயாப்போலி  பட்டணத்துக்கும்  நேராய்  ஓடி,  (அப்போஸ்தலர்  16:11)

thuroavaavil  kappal  ea’ri,  saamoaththiraakkea  theevukkum,  ma’runaa'lilea  neyaappoali  patta'naththukkum  nearaay  oadi,  (appoasthalar  16:11)

அங்கேயிருந்து  மக்கெதோனியா  தேசத்து  நாடுகளில்  ஒன்றிற்குத்  தலைமையானதும்  ரோமர்  குடியேறினதுமான  பிலிப்பி  பட்டணத்துக்கு  வந்து,  அந்தப்  பட்டணத்திலே  சிலநாள்  தங்கியிருந்தோம்.  (அப்போஸ்தலர்  16:12)

anggeayirunthu  makkethoaniyaa  theasaththu  naaduga'lil  on’ri’rkuth  thalaimaiyaanathum  roamar  kudiyea’rinathumaana  pilippi  patta'naththukku  vanthu,  anthap  patta'naththilea  silanaa'l  thanggiyirunthoam.  (appoasthalar  16:12)

ஓய்வுநாளில்  நாங்கள்  பட்டணத்துக்கு  வெளியே  போய்,  ஆற்றினருகே  வழக்கமாய்  ஜெபம்பண்ணுகிற  இடத்தில்  உட்கார்ந்து,  அங்கே  கூடிவந்த  ஸ்திரீகளுக்கு  உபதேசித்தோம்.  (அப்போஸ்தலர்  16:13)

oayvunaa'lil  naangga'l  patta'naththukku  ve'liyea  poay,  aat’rinarugea  vazhakkamaay  jebampa'n'nugi’ra  idaththil  udkaarnthu,  anggea  koodivantha  sthireega'lukku  ubatheasiththoam.  (appoasthalar  16:13)

அப்பொழுது  தியத்தீரா  ஊராளும்  இரத்தாம்பரம்  விற்கிறவளும்  தேவனை  வணங்குகிறவளுமாகிய  லீதியாள்  என்னும்  பேருள்ள  ஒரு  ஸ்திரீ  கேட்டுக்கொண்டிருந்தாள்;  பவுல்  சொல்லியவைகளைக்  கவனிக்கும்படி  கர்த்தர்  அவள்  இருதயத்தைத்  திறந்தருளினார்.  (அப்போஸ்தலர்  16:14)

appozhuthu  thiyaththeeraa  ooraa'lum  iraththaambaram  vi’rki’rava'lum  theavanai  va'nanggugi’rava'lumaagiya  leethiyaa'l  ennum  pearu'l'la  oru  sthiree  keattukko'ndirunthaa'l;  pavul  solliyavaiga'laik  kavanikkumpadi  karththar  ava'l  iruthayaththaith  thi’rantharu'linaar.  (appoasthalar  16:14)

அவளும்  அவள்  வீட்டாரும்  ஞானஸ்நானம்  பெற்றபின்பு,  அவள்  எங்களை  நோக்கி:  நீங்கள்  என்னைக்  கர்த்தரிடத்தில்  விசுவாசமுள்ளவளென்று  எண்ணினால்,  என்  வீட்டிலே  வந்து  தங்கியிருங்கள்  என்று  எங்களை  வருந்திக்  கேட்டுக்கொண்டாள்.  (அப்போஸ்தலர்  16:15)

ava'lum  ava'l  veettaarum  gnaanasnaanam  pet’rapinbu,  ava'l  engga'lai  noakki:  neengga'l  ennaik  karththaridaththil  visuvaasamu'l'lava'len’ru  e'n'ninaal,  en  veettilea  vanthu  thanggiyirungga'l  en’ru  engga'lai  varunthik  keattukko'ndaa'l.  (appoasthalar  16:15)

நாங்கள்  ஜெபம்பண்ணுகிற  இடத்துக்குப்  போகையில்  குறிசொல்ல  ஏவுகிற  ஆவியைக்கொண்டிருந்து,  குறிசொல்லுகிறதினால்  தன்  எஜமான்களுக்கு  மிகுந்த  ஆதாயத்தை  உண்டாக்கின  ஒரு  பெண்  எங்களுக்கு  எதிர்ப்பட்டாள்.  (அப்போஸ்தலர்  16:16)

naangga'l  jebampa'n'nugi’ra  idaththukkup  poagaiyil  ku’risolla  eavugi’ra  aaviyaikko'ndirunthu,  ku’risollugi’rathinaal  than  ejamaanga'lukku  miguntha  aathaayaththai  u'ndaakkina  oru  pe'n  engga'lukku  ethirppattaa'l.  (appoasthalar  16:16)

அவள்  பவுலையும்  எங்களையும்  பின்தொடர்ந்து  வந்து:  இந்த  மனுஷர்  உன்னதமான  தேவனுடைய  ஊழியக்காரர்,  இரட்சிப்பின்  வழியை  நமக்கு  அறிவிக்கிறவர்கள்  என்று  சத்தமிட்டாள்.  (அப்போஸ்தலர்  16:17)

ava'l  pavulaiyum  engga'laiyum  pinthodarnthu  vanthu:  intha  manushar  unnathamaana  theavanudaiya  oozhiyakkaarar,  iradchippin  vazhiyai  namakku  a’rivikki’ravarga'l  en’ru  saththamittaa'l.  (appoasthalar  16:17)

இப்படி  அநேகநாள்  செய்துகொண்டுவந்தாள்.  பவுல்  சினங்கொண்டு,  திரும்பிப்பார்த்து:  நீ  இவளை  விட்டுப்  புறப்படும்படி  இயேசுகிறிஸ்துவின்  நாமத்தினாலே  உனக்குக்  கட்டளையிடுகிறேன்  என்று  அந்த  ஆவியுடனே  சொன்னான்;  அந்நேரமே  அது  புறப்பட்டுப்போயிற்று.  (அப்போஸ்தலர்  16:18)

ippadi  aneaganaa'l  seythuko'nduvanthaa'l.  pavul  sinangko'ndu,  thirumbippaarththu:  nee  iva'lai  vittup  pu’rappadumpadi  iyeasuki’risthuvin  naamaththinaalea  unakkuk  katta'laiyidugi’rean  en’ru  antha  aaviyudanea  sonnaan;  annearamea  athu  pu’rappattuppoayit’ru.  (appoasthalar  16:18)

அவளுடைய  எஜமான்கள்  தங்கள்  ஆதாயத்து  நம்பிக்கை  அற்றுப்போயிற்றென்று  கண்டு,  பவுலையும்  சீலாவையும்  பிடித்து,  சந்தைவெளியிலுள்ள  அதிகாரிகளிடத்தில்  இழுத்துக்கொண்டு  போனார்கள்.  (அப்போஸ்தலர்  16:19)

ava'ludaiya  ejamaanga'l  thangga'l  aathaayaththu  nambikkai  at’ruppoayit’ren’ru  ka'ndu,  pavulaiyum  seelaavaiyum  pidiththu,  santhaive'liyilu'l'la  athigaariga'lidaththil  izhuththukko'ndu  poanaarga'l.  (appoasthalar  16:19)

அவர்களை  அதிகாரிகளிடத்தில்  ஒப்புவித்து:  யூதர்களாகிய  இந்த  மனுஷர்  நம்முடைய  பட்டணத்தில்  கலகம்பண்ணி,  (அப்போஸ்தலர்  16:20)

avarga'lai  athigaariga'lidaththil  oppuviththu:  yootharga'laagiya  intha  manushar  nammudaiya  patta'naththil  kalagampa'n'ni,  (appoasthalar  16:20)

ரோமராகிய  நாம்  ஏற்றுக்கொள்ளவும்  அநுசரிக்கவும்  தகாத  முறைமைகளைப்  போதிக்கிறார்கள்  என்றார்கள்.  (அப்போஸ்தலர்  16:21)

roamaraagiya  naam  eat’rukko'l'lavum  anusarikkavum  thagaatha  mu’raimaiga'laip  poathikki’raarga'l  en’raarga'l.  (appoasthalar  16:21)

அப்பொழுது  ஜனங்கள்  கூட்டங்கூடி,  அவர்களுக்கு  விரோதமாய்  எழும்பினார்கள்.  அதிகாரிகள்  அவர்கள்  வஸ்திரங்களைக்  கிழித்துப்போடவும்,  அவர்களை  அடிக்கவும்  சொல்லி;  (அப்போஸ்தலர்  16:22)

appozhuthu  janangga'l  koottangkoodi,  avarga'lukku  viroathamaay  ezhumbinaarga'l.  athigaariga'l  avarga'l  vasthirangga'laik  kizhiththuppoadavum,  avarga'lai  adikkavum  solli;  (appoasthalar  16:22)

அவர்களை  அநேக  அடி  அடித்தபின்பு,  சிறைச்சாலையிலே  வைத்து  அவர்களைப்  பத்திரமாய்க்  காக்கும்படி  சிறைச்சாலைக்காரனுக்குக்  கட்டளையிட்டார்கள்.  (அப்போஸ்தலர்  16:23)

avarga'lai  aneaga  adi  adiththapinbu,  si’raichsaalaiyilea  vaiththu  avarga'laip  paththiramaayk  kaakkumpadi  si’raichsaalaikkaaranukkuk  katta'laiyittaarga'l.  (appoasthalar  16:23)

அவன்  இப்படிப்பட்ட  கட்டளையைப்  பெற்று,  அவர்களை  உட்காவலறையிலே  அடைத்து,  அவர்கள்  கால்களைத்  தொழுமரத்தில்  மாட்டிவைத்தான்.  (அப்போஸ்தலர்  16:24)

avan  ippadippatta  katta'laiyaip  pet’ru,  avarga'lai  udkaavala’raiyilea  adaiththu,  avarga'l  kaalga'laith  thozhumaraththil  maattivaiththaan.  (appoasthalar  16:24)

நடுராத்திரியிலே  பவுலும்  சீலாவும்  ஜெபம்பண்ணி,  தேவனைத்  துதித்துப்  பாடினார்கள்;  காவலில்  வைக்கப்பட்டவர்கள்  அதைக்  கேட்டுக்கொண்டிருந்தார்கள்.  (அப்போஸ்தலர்  16:25)

naduraaththiriyilea  pavulum  seelaavum  jebampa'n'ni,  theavanaith  thuthiththup  paadinaarga'l;  kaavalil  vaikkappattavarga'l  athaik  keattukko'ndirunthaarga'l.  (appoasthalar  16:25)

சடிதியிலே  சிறைச்சாலையின்  அஸ்திபாரங்கள்  அசையும்படியாகப்  பூமி  மிகவும்  அதிர்ந்தது;  உடனே  கதவுகளெல்லாம்  திறவுண்டது;  எல்லாருடைய  கட்டுகளும்  கழன்றுபோயிற்று.  (அப்போஸ்தலர்  16:26)

sadithiyilea  si’raichsaalaiyin  asthibaarangga'l  asaiyumpadiyaagap  boomi  migavum  athirnthathu;  udanea  kathavuga'lellaam  thi’ravu'ndathu;  ellaarudaiya  kattuga'lum  kazhan’rupoayit’ru.  (appoasthalar  16:26)

சிறைச்சாலைக்காரன்  நித்திரை  தெளிந்து,  சிறைச்சாலையின்  கதவுகள்  திறந்திருக்கிறதைக்  கண்டு,  கட்டுண்டவர்கள்  ஓடிப்போனார்களென்று  எண்ணி,  பட்டயத்தை  உருவித்  தன்னைக்  கொலைசெய்து  கொள்ளப்போனான்.  (அப்போஸ்தலர்  16:27)

si’raichsaalaikkaaran  niththirai  the'linthu,  si’raichsaalaiyin  kathavuga'l  thi’ranthirukki’rathaik  ka'ndu,  kattu'ndavarga'l  oadippoanaarga'len’ru  e'n'ni,  pattayaththai  uruvith  thannaik  kolaiseythu  ko'l'lappoanaan.  (appoasthalar  16:27)

பவுல்  மிகுந்த  சத்தமிட்டு:  நீ  உனக்குக்  கெடுதி  ஒன்றுஞ்  செய்துகொள்ளாதே;  நாங்கள்  எல்லாரும்  இங்கேதான்  இருக்கிறோம்  என்றான்.  (அப்போஸ்தலர்  16:28)

pavul  miguntha  saththamittu:  nee  unakkuk  keduthi  on’rugn  seythuko'l'laathea;  naangga'l  ellaarum  inggeathaan  irukki’roam  en’raan.  (appoasthalar  16:28)

அப்பொழுது  அவன்  தீபங்களைக்  கொண்டுவரச்சொல்லி,  உள்ளே  ஓடி,  நடுநடுங்கி,  பவுலுக்கும்  சீலாவுக்கும்  முன்பாக  விழுந்து,  (அப்போஸ்தலர்  16:29)

appozhuthu  avan  theebangga'laik  ko'nduvarachsolli,  u'l'lea  oadi,  nadunadunggi,  pavulukkum  seelaavukkum  munbaaga  vizhunthu,  (appoasthalar  16:29)

அவர்களை  வெளியே  அழைத்துவந்து:  ஆண்டவன்மாரே,  இரட்சிக்கப்படுவதற்கு  நான்  என்ன  செய்யவேண்டும்  என்றான்.  (அப்போஸ்தலர்  16:30)

avarga'lai  ve'liyea  azhaiththuvanthu:  aa'ndavanmaarea,  iradchikkappaduvatha’rku  naan  enna  seyyavea'ndum  en’raan.  (appoasthalar  16:30)

அதற்கு  அவர்கள்:  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவை  விசுவாசி,  அப்பொழுது  நீயும்  உன்  வீட்டாரும்  இரட்சிக்கப்படுவீர்கள்  என்று  சொல்லி,  (அப்போஸ்தலர்  16:31)

atha’rku  avarga'l:  karththaraagiya  iyeasuki’risthuvai  visuvaasi,  appozhuthu  neeyum  un  veettaarum  iradchikkappaduveerga'l  en’ru  solli,  (appoasthalar  16:31)

அவனுக்கும்  அவன்  வீட்டிலிருந்த  யாவருக்கும்  கர்த்தருடைய  வசனத்தைப்  போதித்தார்கள்.  (அப்போஸ்தலர்  16:32)

avanukkum  avan  veettiliruntha  yaavarukkum  karththarudaiya  vasanaththaip  poathiththaarga'l.  (appoasthalar  16:32)

மேலும்  இராத்திரியில்  அந்நேரத்திலேதானே  அவன்  அவர்களை  அழைத்துக்கொண்டுபோய்,  அவர்களுடைய  காயங்களைக்  கழுவினான்.  அவனும்  அவனுடையவர்கள்  அனைவரும்  உடனே  ஞானஸ்நானம்  பெற்றார்கள்.  (அப்போஸ்தலர்  16:33)

mealum  iraaththiriyil  annearaththileathaanea  avan  avarga'lai  azhaiththukko'ndupoay,  avarga'ludaiya  kaayangga'laik  kazhuvinaan.  avanum  avanudaiyavarga'l  anaivarum  udanea  gnaanasnaanam  pet’raarga'l.  (appoasthalar  16:33)

பின்பு  அவன்  அவர்களைத்  தன்  வீட்டிற்குக்  கூட்டிக்கொண்டுபோய்,  அவர்களுக்குப்  போஜனங்கொடுத்து,  தன்  வீட்டார்  அனைவரோடுங்கூடத்  தேவனிடத்தில்  விசுவாசமுள்ளவனாகி  மனமகிழ்ச்சியாயிருந்தான்.  (அப்போஸ்தலர்  16:34)

pinbu  avan  avarga'laith  than  veetti’rkuk  koottikko'ndupoay,  avarga'lukkup  poajanangkoduththu,  than  veettaar  anaivaroadungkoodath  theavanidaththil  visuvaasamu'l'lavanaagi  manamagizhchchiyaayirunthaan.  (appoasthalar  16:34)

பொழுது  விடிந்தபின்பு:  அந்த  மனுஷரை  விட்டுவிடுங்கள்  என்று  சொல்ல  அதிகாரிகள்  சேவகர்களை  அனுப்பினார்கள்.  (அப்போஸ்தலர்  16:35)

pozhuthu  vidinthapinbu:  antha  manusharai  vittuvidungga'l  en’ru  solla  athigaariga'l  seavagarga'lai  anuppinaarga'l.  (appoasthalar  16:35)

சிறைச்சாலைக்காரன்  பவுலுக்கு  இந்த  வார்த்தைகளை  அறிவித்து:  உங்களை  விடுதலையாக்கும்படிக்கு  அதிகாரிகள்  கட்டளை  அனுப்பினார்கள்;  ஆகையால்  நீங்கள்  இப்பொழுது  புறப்பட்டுச்  சமாதானத்துடனே  போங்கள்  என்றான்.  (அப்போஸ்தலர்  16:36)

si’raichsaalaikkaaran  pavulukku  intha  vaarththaiga'lai  a’riviththu:  ungga'lai  viduthalaiyaakkumpadikku  athigaariga'l  katta'lai  anuppinaarga'l;  aagaiyaal  neengga'l  ippozhuthu  pu’rappattuch  samaathaanaththudanea  poangga'l  en’raan.  (appoasthalar  16:36)

அதற்குப்  பவுல்:  ரோமராகிய  எங்களை  அவர்கள்  நியாயம்  விசாரியாமல்,  வெளியரங்கமாய்  அடித்து,  சிறைச்சாலையிலே  போட்டார்கள்;  இப்பொழுது  இரகசியமாய்  எங்களை  விடுதலையாக்குகிறார்களோ?  அப்படியல்ல,  அவர்களே  வந்து,  எங்களை  வெளியே  அழைத்து  அனுப்பி  விடட்டும்  என்றான்.  (அப்போஸ்தலர்  16:37)

atha’rkup  pavul:  roamaraagiya  engga'lai  avarga'l  niyaayam  visaariyaamal,  ve'liyaranggamaay  adiththu,  si’raichsaalaiyilea  poattaarga'l;  ippozhuthu  iragasiyamaay  engga'lai  viduthalaiyaakkugi’raarga'loa?  appadiyalla,  avarga'lea  vanthu,  engga'lai  ve'liyea  azhaiththu  anuppi  vidattum  en’raan.  (appoasthalar  16:37)

சேவகர்  இந்த  வார்த்தைகளை  அதிகாரிகளுக்கு  அறிவித்தார்கள்.  ரோமராயிருக்கிறார்களென்று  அவர்கள்  கேட்டபொழுது  பயந்துவந்து,  (அப்போஸ்தலர்  16:38)

seavagar  intha  vaarththaiga'lai  athigaariga'lukku  a’riviththaarga'l.  roamaraayirukki’raarga'len’ru  avarga'l  keattapozhuthu  bayanthuvanthu,  (appoasthalar  16:38)

அவர்களுடனே  தயவாய்ப்  பேசி,  அவர்களை  வெளியே  அழைத்துக்கொண்டுபோய்,  பட்டணத்தை  விட்டுப்  புறப்பட்டுப்போகும்படி  கேட்டுக்கொண்டார்கள்.  (அப்போஸ்தலர்  16:39)

avarga'ludanea  thayavaayp  peasi,  avarga'lai  ve'liyea  azhaiththukko'ndupoay,  patta'naththai  vittup  pu’rappattuppoagumpadi  keattukko'ndaarga'l.  (appoasthalar  16:39)

அந்தப்படி  அவர்கள்  சிறைச்சாலையிலிருந்து  புறப்பட்டு  லீதியாளிடத்திற்குப்போய்,  சகோதரரைக்  கண்டு,  அவர்களுக்கு  ஆறுதல்  சொல்லிப்  போய்விட்டார்கள்.  (அப்போஸ்தலர்  16:40)

anthappadi  avarga'l  si’raichsaalaiyilirunthu  pu’rappattu  leethiyaa'lidaththi’rkuppoay,  sagoathararaik  ka'ndu,  avarga'lukku  aa’ruthal  sollip  poayvittaarga'l.  (appoasthalar  16:40)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!