Sunday, May 29, 2016

2 Korinthiyar 5 | 2 கொரிந்தியர் 5 | 2 Corinthians 5

பூமிக்குரிய  கூடாரமாகிய  நம்முடைய  வீடு  அழிந்துபோனாலும்,  தேவனால்  கட்டப்பட்ட  கைவேலையல்லாத  நித்திய  வீடு  பரலோகத்திலே  நமக்கு  உண்டென்று  அறிந்திருக்கிறோம்.  (2கொரிந்தியர்  5:1)

boomikkuriya  koodaaramaagiya  nammudaiya  veedu  azhinthupoanaalum,  theavanaal  kattappatta  kaivealaiyallaatha  niththiya  veedu  paraloagaththilea  namakku  u'nden’ru  a’rinthirukki’roam.  (2korinthiyar  5:1)

ஏனெனில்,  இந்தக்  கூடாரத்திலே  நாம்  தவித்து,  நம்முடைய  பரம  வாசஸ்தலத்தைத்  தரித்துக்கொள்ள  மிகவும்  வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்;  (2கொரிந்தியர்  5:2)

eanenil,  inthak  koodaaraththilea  naam  thaviththu,  nammudaiya  parama  vaasasthalaththaith  thariththukko'l'la  migavum  vaagnchaiyu'l'lavarga'laayirukki’roam;  (2korinthiyar  5:2)

தரித்துக்கொண்டவர்களானால்,  நிர்வாணிகளாய்க்  காணப்படமாட்டோம்.  (2கொரிந்தியர்  5:3)

thariththukko'ndavarga'laanaal,  nirvaa'niga'laayk  kaa'nappadamaattoam.  (2korinthiyar  5:3)

இந்தக்  கூடாரத்திலிருக்கிற  நாம்  பாரஞ்சுமந்து  தவிக்கிறோம்;  இந்தப்  போர்வையைக்  களைந்துபோடவேண்டுமென்று  விரும்பாமல்,  மரணமானது  ஜீவனாலே  விழுங்கப்படுவதற்காகப்  போர்வை  தரித்தவர்களாயிருக்கவேண்டுமென்று  விரும்புகிறோம்.  (2கொரிந்தியர்  5:4)

inthak  koodaaraththilirukki’ra  naam  baaragnsumanthu  thavikki’roam;  inthap  poarvaiyaik  ka'lainthupoadavea'ndumen’ru  virumbaamal,  mara'namaanathu  jeevanaalea  vizhunggappaduvatha’rkaagap  poarvai  thariththavarga'laayirukkavea'ndumen’ru  virumbugi’roam.  (2korinthiyar  5:4)

இதற்கு  நம்மை  ஆயத்தப்படுத்துகிறவர்  தேவனே;  ஆவியென்னும்  அச்சாரத்தை  நமக்குத்  தந்தவரும்  அவரே.  (2கொரிந்தியர்  5:5)

itha’rku  nammai  aayaththappaduththugi’ravar  theavanea;  aaviyennum  achchaaraththai  namakkuth  thanthavarum  avarea.  (2korinthiyar  5:5)

நாம்  தரிசித்து  நடவாமல்,  விசுவாசித்து  நடக்கிறோம்.  (2கொரிந்தியர்  5:6)

naam  tharisiththu  nadavaamal,  visuvaasiththu  nadakki’roam.  (2korinthiyar  5:6)

இந்தத்  தேகத்தில்  குடியிருக்கையில்  கர்த்தரிடத்தில்  குடியிராதவர்களாயிருக்கிறோமென்று  அறிந்தும்,  எப்பொழுதும்  தைரியமாயிருக்கிறோம்.  (2கொரிந்தியர்  5:7)

inthath  theagaththil  kudiyirukkaiyil  karththaridaththil  kudiyiraathavarga'laayirukki’roamen’ru  a’rinthum,  eppozhuthum  thairiyamaayirukki’roam.  (2korinthiyar  5:7)

நாம்  தைரியமாகவேயிருந்து,  இந்தத்  தேகத்தை  விட்டுக்  குடிபோகவும்  கர்த்தரிடத்தில்  குடியிருக்கவும்  அதிகமாய்  விரும்புகிறோம்.  (2கொரிந்தியர்  5:8)

naam  thairiyamaagaveayirunthu,  inthath  theagaththai  vittuk  kudipoagavum  karththaridaththil  kudiyirukkavum  athigamaay  virumbugi’roam.  (2korinthiyar  5:8)

அதினிமித்தமே  நாம்  சரீரத்தில்  குடியிருந்தாலும்  குடியிராமற்போனாலும்  அவருக்குப்  பிரியமானவர்களாயிருக்க  நாடுகிறோம்.  (2கொரிந்தியர்  5:9)

athinimiththamea  naam  sareeraththil  kudiyirunthaalum  kudiyiraama’rpoanaalum  avarukkup  piriyamaanavarga'laayirukka  naadugi’roam.  (2korinthiyar  5:9)

ஏனென்றால்,  சரீரத்தில்  அவனவன்  செய்த  நன்மைக்காவது  தீமைக்காவது  தக்க  பலனை  அடையும்படிக்கு,  நாமெல்லாரும்  கிறிஸ்துவின்  நியாயாசனத்திற்கு  முன்பாக  வெளிப்படவேண்டும்.  (2கொரிந்தியர்  5:10)

eanen’raal,  sareeraththil  avanavan  seytha  nanmaikkaavathu  theemaikkaavathu  thakka  palanai  adaiyumpadikku,  naamellaarum  ki’risthuvin  niyaayaasanaththi’rku  munbaaga  ve'lippadavea'ndum.  (2korinthiyar  5:10)

ஆகையால்  கர்த்தருக்குப்  பயப்படத்தக்கதென்று  அறிந்து,  மனுஷருக்குப்  புத்திசொல்லுகிறோம்;  தேவனுக்கு  முன்பாக  வெளியரங்கமாயிருக்கிறோம்;  உங்கள்  மனச்சாட்சிக்கும்  வெளியரங்கமாயிருக்கிறோம்  என்று  நம்புகிறேன்.  (2கொரிந்தியர்  5:11)

aagaiyaal  karththarukkup  bayappadaththakkathen’ru  a’rinthu,  manusharukkup  buththisollugi’roam;  theavanukku  munbaaga  ve'liyaranggamaayirukki’roam;  ungga'l  manachsaadchikkum  ve'liyaranggamaayirukki’roam  en’ru  nambugi’rean.  (2korinthiyar  5:11)

இதனாலே  நாங்கள்  உங்களுக்கு  முன்பாக  எங்களை  மறுபடியும்  மெச்சிக்கொள்ளாமல்,  இருதயத்திலல்ல,  வெளிவேஷத்தில்  மேன்மைபாராட்டுகிறவர்களுக்கு  எதிரே  எங்களைக்குறித்து  நீங்கள்  மேன்மைபாராட்டும்படிக்கு  ஏதுவுண்டாக்குகிறோம்.  (2கொரிந்தியர்  5:12)

ithanaalea  naangga'l  ungga'lukku  munbaaga  engga'lai  ma’rupadiyum  mechchikko'l'laamal,  iruthayaththilalla,  ve'liveashaththil  meanmaipaaraattugi’ravarga'lukku  ethirea  engga'laikku’riththu  neengga'l  meanmaipaaraattumpadikku  eathuvu'ndaakkugi’roam.  (2korinthiyar  5:12)

நாங்கள்  பைத்தியங்கொண்டவர்களென்றால்  தேவனுக்காக  அப்படியிருக்கும்;  தெளிந்தபுத்தியுள்ளவர்களென்றால்  உங்களுக்காக  அப்படியிருக்கும்.  (2கொரிந்தியர்  5:13)

naangga'l  paiththiyangko'ndavarga'len’raal  theavanukkaaga  appadiyirukkum;  the'linthabuththiyu'l'lavarga'len’raal  ungga'lukkaaga  appadiyirukkum.  (2korinthiyar  5:13)

கிறிஸ்துவினுடைய  அன்பு  எங்களை  நெருக்கி  ஏவுகிறது;  ஏனென்றால்,  எல்லாருக்காகவும்  ஒருவரே  மரித்திருக்க,  எல்லாரும்  மரித்தார்கள்  என்றும்;  (2கொரிந்தியர்  5:14)

ki’risthuvinudaiya  anbu  engga'lai  nerukki  eavugi’rathu;  eanen’raal,  ellaarukkaagavum  oruvarea  mariththirukka,  ellaarum  mariththaarga'l  en’rum;  (2korinthiyar  5:14)

பிழைத்திருக்கிறவர்கள்  இனித்  தங்களுக்கென்று  பிழைத்திராமல்,  தங்களுக்காக  மரித்து  எழுந்தவருக்கென்று  பிழைத்திருக்கும்படி,  அவர்  எல்லாருக்காகவும்  மரித்தாரென்றும்  நிதானிக்கிறோம்.  (2கொரிந்தியர்  5:15)

pizhaiththirukki’ravarga'l  inith  thangga'lukken’ru  pizhaiththiraamal,  thangga'lukkaaga  mariththu  ezhunthavarukken’ru  pizhaiththirukkumpadi,  avar  ellaarukkaagavum  mariththaaren’rum  nithaanikki’roam.  (2korinthiyar  5:15)

ஆகையால்,  இதுமுதற்கொண்டு,  நாங்கள்  ஒருவனையும்  மாம்சத்தின்படி  அறியோம்;  நாங்கள்  கிறிஸ்துவையும்  மாம்சத்தின்படி  அறிந்திருந்தாலும்,  இனி  ஒருபோதும்  அவரை  மாம்சத்தின்படி  அறியோம்.  (2கொரிந்தியர்  5:16)

aagaiyaal,  ithumutha’rko'ndu,  naangga'l  oruvanaiyum  maamsaththinpadi  a’riyoam;  naangga'l  ki’risthuvaiyum  maamsaththinpadi  a’rinthirunthaalum,  ini  orupoathum  avarai  maamsaththinpadi  a’riyoam.  (2korinthiyar  5:16)

இப்படியிருக்க,  ஒருவன்  கிறிஸ்துவுக்குள்ளிருந்தால்  புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்;  பழையவைகள்  ஒழிந்துபோயின,  எல்லாம்  புதிதாயின.  (2கொரிந்தியர்  5:17)

ippadiyirukka,  oruvan  ki’risthuvukku'l'lirunthaal  puthuchsirushdiyaayirukki’raan;  pazhaiyavaiga'l  ozhinthupoayina,  ellaam  puthithaayina.  (2korinthiyar  5:17)

இவையெல்லாம்  தேவனாலே  உண்டாயிருக்கிறது;  அவர்  இயேசுகிறிஸ்துவைக்கொண்டு  நம்மைத்  தம்மோடே  ஒப்புரவாக்கி,  ஒப்புரவாக்குதலின்  ஊழியத்தை  எங்களுக்கு  ஒப்புக்கொடுத்தார்.  (2கொரிந்தியர்  5:18)

ivaiyellaam  theavanaalea  u'ndaayirukki’rathu;  avar  iyeasuki’risthuvaikko'ndu  nammaith  thammoadea  oppuravaakki,  oppuravaakkuthalin  oozhiyaththai  engga'lukku  oppukkoduththaar.  (2korinthiyar  5:18)

அதென்னவெனில்,  தேவன்  உலகத்தாருடைய  பாவங்களை  எண்ணாமல்,  கிறிஸ்துவுக்குள்  அவர்களைத்  தமக்கு  ஒப்புரவாக்கி,  ஒப்புரவாக்குதலின்  உபதேசத்தை  எங்களிடத்தில்  ஒப்புவித்தார்.  (2கொரிந்தியர்  5:19)

athennavenil,  theavan  ulagaththaarudaiya  paavangga'lai  e'n'naamal,  ki’risthuvukku'l  avarga'laith  thamakku  oppuravaakki,  oppuravaakkuthalin  ubatheasaththai  engga'lidaththil  oppuviththaar.  (2korinthiyar  5:19)

ஆனபடியினாலே,  தேவனானவர்  எங்களைக்கொண்டு  புத்திசொல்லுகிறதுபோல,  நாங்கள்  கிறிஸ்துவுக்காக  ஸ்தானாபதிகளாயிருந்து,  தேவனோடே  ஒப்புரவாகுங்கள்  என்று,  கிறிஸ்துவினிமித்தம்  உங்களை  வேண்டிக்கொள்ளுகிறோம்.  (2கொரிந்தியர்  5:20)

aanapadiyinaalea,  theavanaanavar  engga'laikko'ndu  buththisollugi’rathupoala,  naangga'l  ki’risthuvukkaaga  sthaanaabathiga'laayirunthu,  theavanoadea  oppuravaagungga'l  en’ru,  ki’risthuvinimiththam  ungga'lai  vea'ndikko'l'lugi’roam.  (2korinthiyar  5:20)

நாம்  அவருக்குள்  தேவனுடைய  நீதியாகும்படிக்கு,  பாவம்  அறியாத  அவரை  நமக்காகப்  பாவமாக்கினார்.  (2கொரிந்தியர்  5:21)

naam  avarukku'l  theavanudaiya  neethiyaagumpadikku,  paavam  a’riyaatha  avarai  namakkaagap  paavamaakkinaar.  (2korinthiyar  5:21)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!