இப்படிப்பட்ட ஊழியத்தை
உடையவர்களாகிய நாங்கள் இரக்கம்
பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறதில்லை. (2கொரிந்தியர்
4:1)
ippadippatta oozhiyaththai udaiyavarga'laagiya naangga'l irakkam pet’riruppathaal soarnthupoagi’rathillai. (2korinthiyar 4:1)
வெட்கமான அந்தரங்க
காரியங்களை நாங்கள் வெறுத்து,
தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும்,
சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு
முன்பாக எல்லா மனுஷருடைய
மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று
விளங்கப்பண்ணுகிறோம். (2கொரிந்தியர் 4:2)
vedkamaana antharangga kaariyangga'lai naangga'l ve’ruththu, thanthiramaay
nadavaamalum, theava vasanaththaip purattaamalum, saththiyaththai ve'lippaduththugi’rathinaalea theavanukku
munbaaga
ellaa manusharudaiya manachsaadchikkum engga'lai uththamaren’ru vi'langgappa'n'nugi’roam. (2korinthiyar
4:2)
எங்கள் சுவிசேஷம்
மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும். (2கொரிந்தியர்
4:3)
engga'l suviseasham ma’raiporu'laayirunthaal, kettuppoagi’ravarga'lukkea athu ma’raiporu'laayirukkum.
(2korinthiyar 4:3)
தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின்
மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப்
பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன்
அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். (2கொரிந்தியர்
4:4)
theavanudaiya saayalaayirukki’ra ki’risthuvin magimaiyaana suviseashaththin o'li, avisuvaasiga'laagiya avarga'lukkup piragaasamaayiraathapadikku, ippirapagnchaththin theavanaanavan avarga'ludaiya manathaik
kurudaakkinaan. (2korinthiyar 4:4)
நாங்கள் எங்களையே
பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக்
கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள்
ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம். (2கொரிந்தியர்
4:5)
naangga'l engga'laiyea pirasanggiyaamal, ki’risthu iyeasuvaik karththaren’rum, engga'laiyoa iyeasuvinimiththam ungga'l oozhiyakkaararen’rum pirasanggikki’roam. (2korinthiyar
4:5)
இருளிலிருந்து வெளிச்சத்தைப்
பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள
தமது மகிமையின் அறிவாகிய
ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள்
இருதயங்களிலே பிரகாசித்தார். (2கொரிந்தியர்
4:6)
iru'lilirunthu ve'lichchaththaip piragaasikkachsonna theavan iyeasuki’risthuvin mugaththilu'l'la thamathu magimaiyin a’rivaagiya o'liyaith thoan’rappa'n'numporuttaaga, engga'l iruthayangga'lilea piragaasiththaar. (2korinthiyar 4:6)
இந்த மகத்துவமுள்ள
வல்லமை எங்களால் உண்டாயிராமல்,
தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி,
இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். (2கொரிந்தியர்
4:7)
intha magaththuvamu'l'la vallamai
engga'laal u'ndaayiraamal, theavanaal
u'ndaayirukki’rathen’ru vi'langgumpadi, inthap pokkishaththai ma'npaa'ndangga'lil pet’rirukki’roam. (2korinthiyar 4:7)
நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; (2கொரிந்தியர்
4:8)
naangga'l eppakkaththilum nerukkappattum odunggippoagi’rathillai; kalakkamadainthum manamu’rivadaigi’rathillai; (2korinthiyar 4:8)
துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து
போகிறதில்லை. (2கொரிந்தியர் 4:9)
thunbappaduththappattum kaividappadugi’rathillai; keezhea
tha'l'lappattum madinthu
poagi’rathillai. (2korinthiyar
4:9)
கர்த்தராகிய இயேசுவினுடைய
ஜீவனும் எங்கள் சரீரத்திலே
விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை
எப்பொழுதும் எங்கள் சரீரத்தில்
சுமந்து திரிகிறோம். (2கொரிந்தியர்
4:10)
karththaraagiya iyeasuvinudaiya jeevanum engga'l sareeraththilea vi'langgumpadikku, iyeasuvin mara'naththai
eppozhuthum engga'l sareeraththil sumanthu thirigi’roam. (2korinthiyar 4:10)
எப்படியெனில், சாவுக்கினமான
எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய
ஜீவனும் விளங்கும்படிக்கு உயிரோடிருக்கிற நாங்கள்
எப்பொழுதும் இயேசுவினிமித்தம் மரணத்திற்கு
ஒப்புக்கொடுக்கப்படுகிறோம். (2கொரிந்தியர் 4:11)
eppadiyenil, saavukkinamaana engga'l maamsaththilea iyeasuvinudaiya jeevanum
vi'langgumpadikku uyiroadirukki’ra naangga'l eppozhuthum
iyeasuvinimiththam mara'naththi’rku oppukkodukkappadugi’roam. (2korinthiyar
4:11)
இப்படி மரணமானது
எங்களிடத்திலும், ஜீவனானது உங்களிடத்திலும் பெலன்செய்கிறது. (2கொரிந்தியர்
4:12)
ippadi mara'namaanathu engga'lidaththilum, jeevanaanathu
ungga'lidaththilum belanseygi’rathu. (2korinthiyar
4:12)
விசுவாசித்தேன், ஆகையால்
பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும்
அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறபடியால் பேசுகிறோம்.
(2கொரிந்தியர் 4:13)
visuvaasiththean, aagaiyaal peasinean en’ru ezhuthiyirukki’rapadi, naangga'lum antha visuvaasaththin aaviyai
udaiyavarga'laayirunthu, visuvaasikki’rapadiyaal peasugi’roam. (2korinthiyar
4:13)
கர்த்தராகிய இயேசுவை
எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி,
உங்களுடனேகூடத் தமக்குமுன்பாக நிறுத்துவாரென்று அறிந்திருக்கிறோம். (2கொரிந்தியர்
4:14)
karththaraagiya iyeasuvai ezhuppinavar engga'laiyum iyeasuvaikko'ndu ezhuppi,
ungga'ludaneakoodath thamakkumunbaaga ni’ruththuvaaren’ru a’rinthirukki’roam. (2korinthiyar
4:14)
தேவனுடைய மகிமை விளங்குவதற்கேதுவாகக் கிருபையானது
அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே பெருகும்படிக்கு, இவையெல்லாம்
உங்கள்நிமித்தம் உண்டாயிருக்கிறது. (2கொரிந்தியர்
4:15)
theavanudaiya magimai vi'langguvatha’rkeathuvaagak kirubaiyaanathu aneagarudaiya sthoaththiraththinaalea perugumpadikku, ivaiyellaam
ungga'lnimiththam u'ndaayirukki’rathu. (2korinthiyar
4:15)
ஆனபடியினாலே நாங்கள்
சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான
மனுஷனானது அழிந்தும், உள்ளான
மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது. (2கொரிந்தியர்
4:16)
aanapadiyinaalea naangga'l soarnthupoagi’rathillai; engga'l pu’rambaana manushanaanathu azhinthum,
u'l'laana manushanaanathu naa'lukkunaa'l puthithaakkappadugi’rathu. (2korinthiyar
4:16)
மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு,
அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான
நம்முடைய உபத்திரவம் மிகவும்
அதிகமான நித்திய கனமகிமையை
உண்டாக்குகிறது. (2கொரிந்தியர் 4:17)
mealum kaa'nappadugi’ravaiga'laiyalla, kaa'nappadaathavaiga'lai noakkiyirukki’ra namakku, athiseekkiraththil neenggum ileasaana nammudaiya
ubaththiravam migavum athigamaana niththiya
kanamagimaiyai u'ndaakkugi’rathu. (2korinthiyar
4:17)
ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள். (2கொரிந்தியர்
4:18)
eanenil, kaa'nappadugi’ravaiga'l aniththiyamaanavaiga'l, kaa'nappadaathavaiga'loa niththiyamaanavaiga'l. (2korinthiyar 4:18)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!