Sunday, May 29, 2016

2 Korinthiyar 3 | 2 கொரிந்தியர் 3 | 2 Corinthians 3

எங்களை  நாங்களே  மறுபடியும்  மெச்சிக்கொள்ளத்  தொடங்குகிறோமோ?  அல்லது  சிலருக்கு  வேண்டியதாயிருக்கிறதுபோல,  உங்களுக்கு  உபசார  நிருபங்களை  அனுப்பவும்,  உங்களிடத்தில்  உபசார  நிருபங்களைப்  பெற்றுக்கொள்ளவும்  எங்களுக்கு  வேண்டியதோ?  (2கொரிந்தியர்  3:1)

engga'lai  naangga'lea  ma’rupadiyum  mechchikko'l'lath  thodanggugi’roamoa?  allathu  silarukku  vea'ndiyathaayirukki’rathupoala,  ungga'lukku  ubasaara  nirubangga'lai  anuppavum,  ungga'lidaththil  ubasaara  nirubangga'laip  pet’rukko'l'lavum  engga'lukku  vea'ndiyathoa?  (2korinthiyar  3:1)

எங்கள்  இருதயங்களில்  எழுதப்பட்டும்,  சகல  மனுஷராலும்  அறிந்து  வாசிக்கப்பட்டும்  இருக்கிற  எங்கள்  நிருபம்  நீங்கள்தானே.  (2கொரிந்தியர்  3:2)

engga'l  iruthayangga'lil  ezhuthappattum,  sagala  manusharaalum  a’rinthu  vaasikkappattum  irukki’ra  engga'l  nirubam  neengga'lthaanea.  (2korinthiyar  3:2)

ஏனெனில்  நீங்கள்  எங்கள்  ஊழியத்தினால்  உண்டாகிய  கிறிஸ்துவின்  நிருபமாயிருக்கிறீர்களென்று  வெளியரங்கமாயிருக்கிறது;  அது  மையினாலல்ல,  ஜீவனுள்ள  தேவனுடைய  ஆவியினாலும்;  கற்பலகைகளிலல்ல,  இருதயங்களாகிய  சதையான  பலகைகளிலேயும்  எழுதப்பட்டிருக்கிறது.  (2கொரிந்தியர்  3:3)

eanenil  neengga'l  engga'l  oozhiyaththinaal  u'ndaagiya  ki’risthuvin  nirubamaayirukki’reerga'len’ru  ve'liyaranggamaayirukki’rathu;  athu  maiyinaalalla,  jeevanu'l'la  theavanudaiya  aaviyinaalum;  ka’rpalagaiga'lilalla,  iruthayangga'laagiya  sathaiyaana  palagaiga'lileayum  ezhuthappattirukki’rathu.  (2korinthiyar  3:3)

நாங்கள்  தேவனுக்கு  முன்பாகக்  கிறிஸ்துவின்  மூலமாய்  இப்படிப்பட்ட  நம்பிக்கையைக்  கொண்டிருக்கிறோம்.  (2கொரிந்தியர்  3:4)

naangga'l  theavanukku  munbaagak  ki’risthuvin  moolamaay  ippadippatta  nambikkaiyaik  ko'ndirukki’roam.  (2korinthiyar  3:4)

எங்களால்  ஏதாகிலும்  ஆகும்  என்பதுபோல  ஒன்றை  யோசிக்கிறதற்கு  நாங்கள்  எங்களாலே  தகுதியானவர்கள்  அல்ல;  எங்களுடைய  தகுதி  தேவனால்  உண்டாயிருக்கிறது.  (2கொரிந்தியர்  3:5)

engga'laal  eathaagilum  aagum  enbathupoala  on’rai  yoasikki’ratha’rku  naangga'l  engga'laalea  thaguthiyaanavarga'l  alla;  engga'ludaiya  thaguthi  theavanaal  u'ndaayirukki’rathu.  (2korinthiyar  3:5)

புது  உடன்படிக்கையின்  ஊழியக்காரராயிருக்கும்படி,  அவரே  எங்களைத்  தகுதியுள்ளவர்களாக்கினார்;  அந்த  உடன்படிக்கை  எழுத்திற்குரியதாயிராமல்,  ஆவிக்குரியதாயிருக்கிறது;  எழுத்து  கொல்லுகிறது,  ஆவியோ  உயிர்ப்பிக்கிறது.  (2கொரிந்தியர்  3:6)

puthu  udanpadikkaiyin  oozhiyakkaararaayirukkumpadi,  avarea  engga'laith  thaguthiyu'l'lavarga'laakkinaar;  antha  udanpadikkai  ezhuththi’rkuriyathaayiraamal,  aavikkuriyathaayirukki’rathu;  ezhuththu  kollugi’rathu,  aaviyoa  uyirppikki’rathu.  (2korinthiyar  3:6)

எழுத்துக்களினால்  எழுதப்பட்டுக்  கற்களில்  பதிந்திருந்த  மரணத்துக்கேதுவான  ஊழியத்தைச்  செய்த  மோசேயினுடைய  முகத்திலே  மகிமைப்பிரகாசம்  உண்டானபடியால்,  இஸ்ரவேல்  புத்திரர்  அவன்  முகத்தை  நோக்கிப்  பார்க்கக்கூடாதிருந்தார்களே.  (2கொரிந்தியர்  3:7)

ezhuththukka'linaal  ezhuthappattuk  ka’rka'lil  pathinthiruntha  mara'naththukkeathuvaana  oozhiyaththaich  seytha  moaseayinudaiya  mugaththilea  magimaippiragaasam  u'ndaanapadiyaal,  israveal  puththirar  avan  mugaththai  noakkip  paarkkakkoodaathirunthaarga'lea.  (2korinthiyar  3:7)

ஒழிந்துபோகிற  மகிமையையுடைய  அந்த  ஊழியம்  அப்படிப்பட்ட  மகிமையுள்ளதாயிருந்தால்,  ஆவிக்குரிய  ஊழியம்  எவ்வளவு  அதிக  மகிமையுள்ளதாயிருக்கும்?  (2கொரிந்தியர்  3:8)

ozhinthupoagi’ra  magimaiyaiyudaiya  antha  oozhiyam  appadippatta  magimaiyu'l'lathaayirunthaal,  aavikkuriya  oozhiyam  evva'lavu  athiga  magimaiyu'l'lathaayirukkum?  (2korinthiyar  3:8)

ஆக்கினைத்தீர்ப்புக்  கொடுக்கும்  ஊழியம்  மகிமையுள்ளதாயிருந்தால்,  நீதியைக்  கொடுக்கும்  ஊழியம்  அதிக  மகிமையுள்ளதாயிருக்குமே.  (2கொரிந்தியர்  3:9)

aakkinaiththeerppuk  kodukkum  oozhiyam  magimaiyu'l'lathaayirunthaal,  neethiyaik  kodukkum  oozhiyam  athiga  magimaiyu'l'lathaayirukkumea.  (2korinthiyar  3:9)

இப்படியாக,  மகிமைப்பட்டிருந்த  அந்த  ஊழியம்  இந்த  ஊழியத்திற்கு  உண்டாயிருக்கிற  சிறந்த  மகிமைக்குமுன்பாக  மகிமைப்பட்டதல்ல.  (2கொரிந்தியர்  3:10)

ippadiyaaga,  magimaippattiruntha  antha  oozhiyam  intha  oozhiyaththi’rku  u'ndaayirukki’ra  si’rantha  magimaikkumunbaaga  magimaippattathalla.  (2korinthiyar  3:10)

அன்றியும்  ஒழிந்துபோவதே  மகிமையுள்ளதாயிருந்ததானால்,  நிலைத்திருப்பது  அதிக  மகிமையுள்ளதாயிருக்குமே.  (2கொரிந்தியர்  3:11)

an’riyum  ozhinthupoavathea  magimaiyu'l'lathaayirunthathaanaal,  nilaiththiruppathu  athiga  magimaiyu'l'lathaayirukkumea.  (2korinthiyar  3:11)

நாங்கள்  இப்படிப்பட்ட  நம்பிக்கையை  உடையவர்களாதலால்,  மிகவும்  தாராளமாய்ப்  பேசுகிறோம்.  (2கொரிந்தியர்  3:12)

naangga'l  ippadippatta  nambikkaiyai  udaiyavarga'laathalaal,  migavum  thaaraa'lamaayp  peasugi’roam.  (2korinthiyar  3:12)

மேலும்  ஒழிந்துபோவதின்  முடிவை  இஸ்ரவேல்  புத்திரர்  நோக்கிப்பாராதபடிக்கு,  மோசே  தன்  முகத்தின்மேல்  முக்காடு  போட்டுக்கொண்டதுபோல  நாங்கள்  போடுகிறதில்லை.  (2கொரிந்தியர்  3:13)

mealum  ozhinthupoavathin  mudivai  israveal  puththirar  noakkippaaraathapadikku,  moasea  than  mugaththinmeal  mukkaadu  poattukko'ndathupoala  naangga'l  poadugi’rathillai.  (2korinthiyar  3:13)

அவர்களுடைய  மனது  கடினப்பட்டது;  இந்நாள்வரைக்கும்  பழைய  ஏற்பாடு  வாசிக்கப்படுகையில்,  அந்த  முக்காடு  நீங்காமலிருக்கிறது;  அது  கிறிஸ்துவினாலே  நீக்கப்படுகிறது.  (2கொரிந்தியர்  3:14)

avarga'ludaiya  manathu  kadinappattathu;  innaa'lvaraikkum  pazhaiya  ea’rpaadu  vaasikkappadugaiyil,  antha  mukkaadu  neenggaamalirukki’rathu;  athu  ki’risthuvinaalea  neekkappadugi’rathu.  (2korinthiyar  3:14)

மோசேயின்  ஆகமங்கள்  வாசிக்கப்படும்போது,  இந்நாள்வரைக்கும்  முக்காடு  அவர்கள்  இருதயத்தின்மேல்  இருக்கிறதே.  (2கொரிந்தியர்  3:15)

moaseayin  aagamangga'l  vaasikkappadumpoathu,  innaa'lvaraikkum  mukkaadu  avarga'l  iruthayaththinmeal  irukki’rathea.  (2korinthiyar  3:15)

அவர்கள்  கர்த்தரிடத்தில்  மனந்திரும்பும்போது,  அந்த  முக்காடு  எடுபட்டுப்போம்.  (2கொரிந்தியர்  3:16)

avarga'l  karththaridaththil  mananthirumbumpoathu,  antha  mukkaadu  edupattuppoam.  (2korinthiyar  3:16)

கர்த்தரே  ஆவியானவர்;  கர்த்தருடைய  ஆவி  எங்கேயோ  அங்கே  விடுதலையுமுண்டு.  (2கொரிந்தியர்  3:17)

karththarea  aaviyaanavar;  karththarudaiya  aavi  enggeayoa  anggea  viduthalaiyumu'ndu.  (2korinthiyar  3:17)

நாமெல்லாரும்  திறந்த  முகமாய்க்  கர்த்தருடைய  மகிமையைக்  கண்ணாடியிலே  காண்கிறதுபோலக்  கண்டு,  ஆவியாயிருக்கிற  கர்த்தரால்  அந்தச்  சாயலாகத்தானே  மகிமையின்மேல்  மகிமையடைந்து  மறுரூபப்படுகிறோம்.  (2கொரிந்தியர்  3:18)

naamellaarum  thi’rantha  mugamaayk  karththarudaiya  magimaiyaik  ka'n'naadiyilea  kaa'ngi’rathupoalak  ka'ndu,  aaviyaayirukki’ra  karththaraal  anthach  saayalaagaththaanea  magimaiyinmeal  magimaiyadainthu  ma’ruroobappadugi’roam.  (2korinthiyar  3:18)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!