நாம் தேவனுடைய
பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர்
நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று
பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும்
அறியவில்லை. (1யோவான் 3:1)
naam theavanudaiya
pi'l'laiga'len’ru azhaikkappaduvathinaalea pithaavaanavar namakkup
paaraattina anbu evva'lavu
perithen’ru paarungga'l; ulagam avarai
a’riyaathapadiyinaalea nammaiyum
a’riyavillai. (1yoavaan
3:1)
பிரியமானவர்களே, இப்பொழுது
தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும்
வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு
ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். (1யோவான்
3:2)
piriyamaanavarga'lea, ippozhuthu theavanudaiya
pi'l'laiga'laayirukki’roam, ini evvithamaayiruppoamen’ru innum ve'lippadavillai; aagilum avar ve'lippadumpoathu avar irukki’rava'n'namaagavea naam avaraith tharisippathinaal, avarukku
oppaayiruppoamen’ru a’rinthirukki’roam. (1yoavaan 3:2)
அவர்மேல் இப்படிப்பட்ட
நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும்
சுத்திகரித்துக்கொள்ளுகிறான். (1யோவான் 3:3)
avarmeal ippadippatta nambikkai vaiththirukki’ravanevanum, avar suththamu'l'lavaraayirukki’rathupoala, thannaiyum
suththigariththukko'l'lugi’raan. (1yoavaan 3:3)
பாவஞ்செய்கிற எவனும்
நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே
பாவம். (1யோவான் 3:4)
paavagnseygi’ra evanum
niyaayappiramaa'naththai mee’rugi’raan; niyaayappiramaa'naththai mee’rugi’rathea paavam.
(1yoavaan 3:4)
அவர் நம்முடைய
பாவங்களைச் சுமந்து தீர்க்க
வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில்
பாவமில்லை. (1யோவான் 3:5)
avar nammudaiya
paavangga'laich sumanthu theerkka
ve'lippattaaren’ru a’riveerga'l; avaridaththil paavamillai.
(1yoavaan 3:5)
அவரில் நிலைத்திருக்கிற எவனும்
பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும்
அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை. (1யோவான்
3:6)
avaril nilaiththirukki’ra evanum
paavagnseygi’rathillai; paavagnseygi’ra evanum avaraik
kaa'navumillai, avarai a’riyavumillai. (1yoavaan
3:6)
பிள்ளைகளே, நீங்கள்
ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச்
செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும்
நீதியுள்ளவனாயிருக்கிறான். (1யோவான் 3:7)
pi'l'laiga'lea, neengga'l oruvaraalum vagnchikkappadaathirungga'l; neethiyaich seygi’ravan avar neethiyu'l'lavaraayirukki’rathupoalath thaanum neethiyu'l'lavanaayirukki’raan. (1yoavaan 3:7)
பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில்
பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான்; பிசாசினுடைய
கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய
குமாரன் வெளிப்பட்டார். (1யோவான்
3:8)
paavagnseygi’ravan pisaasinaalu'ndaayirukki’raan; eanenil pisaasaanavan aathimuthal
paavagnseygi’raan; pisaasinudaiya kiriyaiga'lai azhikkumpadikkea theavanudaiya
kumaaran ve'lippattaar. (1yoavaan 3:8)
தேவனால் பிறந்த
எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில்
அவருடைய வித்து அவனுக்குள்
தரித்திருக்கிறது; அவன் தேவனால்
பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான். (1யோவான்
3:9)
theavanaal pi’rantha evanum
paavagnseyyaan, eanenil
avarudaiya viththu avanukku'l
thariththirukki’rathu; avan theavanaal pi’ranthapadiyinaal paavagnseyyamaattaan. (1yoavaan 3:9)
இதினாலே தேவனுடைய
பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின்
பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்;
நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற
எவனும் தேவனால் உண்டானவனல்ல.
(1யோவான் 3:10)
ithinaalea theavanudaiya
pi'l'laiga'l innaaren’rum, pisaasin pi'l'laiga'l innaaren’rum ve'lippadum;
neethiyaich seyyaamalum than sagoatharanil anbukooraamalum irukki’ra evanum theavanaal
u'ndaanavanalla. (1yoavaan 3:10)
நாம் ஒருவரிலொருவர்
அன்புகூரவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல்
கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது. (1யோவான்
3:11)
naam oruvariloruvar anbukooravea'ndumenbathea neengga'l aathimuthal kea'lvippatta viseashamaayirukki’rathu. (1yoavaan 3:11)
பொல்லாங்கனால் உண்டாயிருந்து
தன் சகோதரனைக் கொலைசெய்த
காயீனைப்போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம்
அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள்
நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே.
(1யோவான் 3:12)
pollaangganaal u'ndaayirunthu than sagoatharanaik kolaiseytha kaayeenaippoalirukkavea'ndaam; avan ethinimiththam avanaik
kolaiseythaan? than kiriyaiga'l pollaathavaiga'lum, than sagoatharanudaiya kiriyaiga'l neethiyu'l'lavaiga'lumaayirunthathinimiththanthaanea. (1yoavaan
3:12)
என் சகோதரரே,
உலகம் உங்களைப் பகைத்தால்
ஆச்சரியப்படாதிருங்கள். (1யோவான் 3:13)
en sagoathararea, ulagam ungga'laip pagaiththaal aachchariyappadaathirungga'l. (1yoavaan 3:13)
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு
நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன்
மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான். (1யோவான்
3:14)
naam sagoathararidaththil anbukoorugi’rapadiyaal, mara'naththaivittu neenggi jeevanukkudpattirukki’roamen’ru a’rinthirukki’roam; sagoatharanidaththil anbukooraathavan mara'naththilea nilaiko'ndirukki’raan. (1yoavaan
3:14)
தன் சகோதரனைப்
பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள்
நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள். (1யோவான்
3:15)
than sagoatharanaip pagaikki’ra evanum manusha
kolaipaathaganaayirukki’raan; manusha kolaipaathaganevanoa avanukku'l
niththiyajeevan nilaiththiraathu en’ru a’riveerga'l. (1yoavaan 3:15)
அவர் தம்முடைய
ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே
அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும்
சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். (1யோவான்
3:16)
avar thammudaiya
jeevanai namakkaagak koduththathinaalea anbu innathen’ru a’rinthirukki’roam; naamum sagoathararukkaaga jeevanaikkodukkak kadanaa'liga'laayirukki’roam. (1yoavaan 3:16)
ஒருவன் இவ்வுலக
ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு,
தன் இருதயத்தை அவனுக்கு
அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? (1யோவான்
3:17)
oruvan ivvulaga aasthi
udaiyavanaayirunthu, than sagoatharanukkuk ku’raichchalu'nden’ru ka'ndu, than iruthayaththai avanukku
adaiththukko'ndaal, avanukku'l theava
anbu
nilaiko'l'lugi’ratheppadi? (1yoavaan
3:17)
என் பிள்ளைகளே,
வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும்
அன்புகூரக்கடவோம். (1யோவான் 3:18)
en pi'l'laiga'lea, vasanaththinaalum naavinaalumalla, kiriyaiyinaalum u'nmaiyinaalum anbukoorakkadavoam. (1yoavaan
3:18)
இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்களென்று அறிந்து,
நம்முடைய இருதயத்தை அவருக்கு
முன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம். (1யோவான்
3:19)
ithinaalea naam nammaich saththiyaththi’rkuriyavarga'len’ru a’rinthu, nammudaiya
iruthayaththai avarukku munbaaga nichchayappaduththikko'l'lalaam. (1yoavaan
3:19)
நம்முடைய இருதயமே
நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும்
பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார். (1யோவான்
3:20)
nammudaiya iruthayamea
nammaik kut’ravaa'liga'laagath theerkkumaanaal, theavan
nammudaiya iruthayaththilum periyavaraayirunthu sagalaththaiyum a’rinthirukki’raar. (1yoavaan 3:20)
பிரியமானவர்களே, நம்முடைய
இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து, (1யோவான்
3:21)
piriyamaanavarga'lea, nammudaiya iruthayam
nammaik kut’ravaa'liga'len’ru theerkkaathirunthaal, naam theavanidaththil thairiyangko'ndirunthu, (1yoavaan
3:21)
அவருடைய கற்பனைகளை
நாம் கைக்கொண்டு அவருக்கு
முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம். (1யோவான்
3:22)
avarudaiya ka’rpanaiga'lai naam kaikko'ndu
avarukku munbaagap piriyamaanavaiga'laich seygi’rapadiyinaal
naam vea'ndikko'l'lugi’rathethuvoa athai avaraalea
pet’rukko'l'lugi’roam. (1yoavaan
3:22)
நாம் அவருடைய
குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல்
விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக்
கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே அவருடைய
கற்பனையாயிருக்கிறது. (1யோவான் 3:23)
naam avarudaiya
kumaaranaagiya iyeasuki’risthuvin naamaththinmeal visuvaasamaayirunthu, avar namakkuk
katta'laiyittapadi oruvariloruvar anbaayirukkavea'ndumenbathea avarudaiya ka’rpanaiyaayirukki’rathu. (1yoavaan 3:23)
அவருடைய கட்டளைகளைக்
கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும்
அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின
ஆவியினாலே அறிந்திருக்கிறோம். (1யோவான்
3:24)
avarudaiya katta'laiga'laik kaikko'l'lugi’ravan avaril nilaiththirukki’raan, avarum
avanil nilaiththirukki’raar; avar nammil
nilaiththirukki’rathai avar namakkuth thantharu'lina aaviyinaalea
a’rinthirukki’roam. (1yoavaan
3:24)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!