விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில்,
நம்மெல்லாருக்கும் அறிவு உண்டென்று
நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும்,
அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்.
(1கொரிந்தியர் 8:1)
vikkiragangga'lukkup padaikkappattavaiga'laikku’riththa vishayaththil, nammellaarukkum a’rivu u'nden’ru namakkuth
theriyumea. a’rivu i’rumaappai u'ndaakkum, anboa bakthiviruththiyai u'ndaakkum.
(1korinthiyar 8:1)
ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும்
அறியவேண்டியபிரகாரமாக அவன் இன்னும்
அறியவில்லை. (1கொரிந்தியர் 8:2)
oruvan
thaan eatheanum on’rai a’rinthavanen’ru e'n'nikko'lvaanaanaal, on’raiyum a’riyavea'ndiyapiragaaramaaga avan innum a’riyavillai. (1korinthiyar 8:2)
தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான். (1கொரிந்தியர்
8:3)
theavanil anbukoorugi’ravanevanoa, avan theavanaal
a’riyappattirukki’raan. (1korinthiyar 8:3)
விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற
விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது
ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு
தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம். (1கொரிந்தியர்
8:4)
vikkiragangga'lukkup padaikkappattavaiga'laip pusikki’ra vishayaththaippat’ri, ulagaththilea vikkiragamaanathu on’rumillaiyen’rum oruvareayan’ri vea’roru theavan illaiyen’rum a’rinthirukki’roam. (1korinthiyar 8:4)
வானத்திலேயும் பூமியிலேயும்
தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு;
இப்படி அநேக தேவர்களும்
அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், (1கொரிந்தியர்
8:5)
vaanaththileayum boomiyileayum theavarga'l ennappadugi’ravarga'l u'ndu; ippadi
aneaga theavarga'lum aneaga karththaakka'lum u'ndaayirunthaalum, (1korinthiyar
8:5)
பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு,
அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று
நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து
என்னும் ஒரே கர்த்தரும்
நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும்
உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய்
நாமும் உண்டாயிருக்கிறோம். (1கொரிந்தியர்
8:6)
pithaavaagiya orea theavan
namakku'ndu, avaraalea sagalamum u'ndaayirukki’rathu; avarukken’ru naamum
u'ndaayirukki’roam.
iyeasuki’risthu ennum orea karththarum
namakku'ndu; avarmoolamaaych sagalamum u'ndaayirukki’rathu, avar moolamaay naamum
u'ndaayirukki’roam.
(1korinthiyar 8:6)
ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.
சிலர் இன்றையவரைக்கும் விக்கிரகத்தை
ஒரு பொருளென்று எண்ணி,
விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டதைப் புசிக்கிறார்கள்; அவர்களுடைய
மனச்சாட்சி பலவீனமாயிருப்பதால் அசுசிப்படுகிறது. (1கொரிந்தியர்
8:7)
aagilum, intha a’rivu ellaaridaththilum illai.
silar in’raiyavaraikkum vikkiragaththai oru poru'len’ru e'n'ni,
vikkiragaththukkup
padaikkappattathaip pusikki’raarga'l; avarga'ludaiya manachsaadchi balaveenamaayiruppathaal asusippadugi’rathu. (1korinthiyar 8:7)
போஜனமானது நம்மைத்
தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால்
நமக்கு ஒரு மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு
ஒரு குறைவுமில்லை. (1கொரிந்தியர்
8:8)
poajanamaanathu nammaith
theavanukku uganthavarga'laakkamaattaathu; ennaththinaalenil, pusippathinaal namakku
oru meanmaiyumillai, pusiyaathiruppathinaal namakku
oru ku’raivumillai. (1korinthiyar 8:8)
ஆகிலும் இதைக்குறித்து
உங்களுக்கு உண்டாயிருக்கிற அதிகாரம்
எவ்விதத்திலும் பலவீனருக்குத் தடுக்கலாகாதபடிக்குப் பாருங்கள்.
(1கொரிந்தியர் 8:9)
aagilum ithaikku’riththu ungga'lukku u'ndaayirukki’ra athigaaram evvithaththilum balaveenarukkuth thadukkalaagaathapadikkup paarungga'l. (1korinthiyar
8:9)
எப்படியெனில், அறிவுள்ளவனாகிய உன்னை விக்கிரகக்கோவிலிலே பந்தியிருக்க
ஒருவன் கண்டால், பலவீனனாயிருக்கிற அவனுடைய
மனச்சாட்சி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிப்பதற்குத் துணிவுகொள்ளுமல்லவா? (1கொரிந்தியர்
8:10)
eppadiyenil, a’rivu'l'lavanaagiya unnai vikkiragakkoavililea panthiyirukka
oruvan ka'ndaal, balaveenanaayirukki’ra avanudaiya manachsaadchi vikkiragangga'lukkup
padaikkappattavaiga'laip pusippatha’rkuth thu'nivuko'l'lumallavaa? (1korinthiyar
8:10)
பலவீனமுள்ள சகோதரன்
உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா? அவனுக்காகக்
கிறிஸ்து மரித்தாரே. (1கொரிந்தியர்
8:11)
balaveenamu'l'la sagoatharan un a’rivinimiththam kettuppoagalaamaa?
avanukkaagak ki’risthu mariththaarea. (1korinthiyar
8:11)
இப்படிச் சகோதரருக்கு
விரோதமாய்ப் பாவஞ்செய்து, பலவீனமுள்ள
அவர்களுடைய மனச்சாட்சியைப் புண்படுத்துகிறதினாலே, நீங்கள்
கிறிஸ்துவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறீர்கள். (1கொரிந்தியர்
8:12)
ippadich sagoathararukku viroathamaayp
paavagnseythu, balaveenamu'l'la avarga'ludaiya manachsaadchiyaip pu'npaduththugi’rathinaalea, neengga'l ki’risthuvukku viroathamaayp paavagnseygi’reerga'l. (1korinthiyar 8:12)
ஆதலால் போஜனம்
என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு
இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம்
புசியாதிருப்பேன். (1கொரிந்தியர் 8:13)
aathalaal poajanam
en sagoatharanukku ida’ralu'ndaakkinaal, naan en sagoatharanukku ida’ralu'ndaakkaathapadikku, en’raikkum maamsam pusiyaathiruppean. (1korinthiyar
8:13)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!