Friday, May 27, 2016

1 Korinthiyar 9 | 1 கொரிந்தியர் 9 | 1 Corinthians 9

நான்  அப்போஸ்தலனல்லவா?  நான்  சுயாதீனனல்லவா?  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவை  நான்  தரிசிக்கவில்லையா?  கர்த்தருக்குள்  நீங்கள்  என்  கிரியையாயிருக்கிறீர்களல்லவா?  (1கொரிந்தியர்  9:1)

naan  appoasthalanallavaa?  naan  suyaatheenanallavaa?  nammudaiya  karththaraagiya  iyeasuki’risthuvai  naan  tharisikkavillaiyaa?  karththarukku'l  neengga'l  en  kiriyaiyaayirukki’reerga'lallavaa?  (1korinthiyar  9:1)

நான்  மற்றவர்களுக்கு  அப்போஸ்தலனாயிராவிட்டாலும்,  உங்களுக்கல்லவோ  அப்போஸ்தலனாயிருக்கிறேன்;  கர்த்தருக்குள்  நீங்கள்  என்  அப்போஸ்தல  ஊழியத்திற்கு  முத்திரையாயிருக்கிறீர்களே.  (1கொரிந்தியர்  9:2)

naan  mat’ravarga'lukku  appoasthalanaayiraavittaalum,  ungga'lukkallavoa  appoasthalanaayirukki’rean;  karththarukku'l  neengga'l  en  appoasthala  oozhiyaththi’rku  muththiraiyaayirukki’reerga'lea.  (1korinthiyar  9:2)

என்னை  நியாயம்  விசாரிக்கிறவர்களுக்கு  நான்  சொல்லுகிற  மாறுத்தரமாவது:  (1கொரிந்தியர்  9:3)

ennai  niyaayam  visaarikki’ravarga'lukku  naan  sollugi’ra  maa’ruththaramaavathu:  (1korinthiyar  9:3)

புசிக்கவும்  குடிக்கவும்  எங்களுக்கு  அதிகாரமில்லையா?  (1கொரிந்தியர்  9:4)

pusikkavum  kudikkavum  engga'lukku  athigaaramillaiyaa?  (1korinthiyar  9:4)

மற்ற  அப்போஸ்தலரும்,  கர்த்தருடைய  சகோதரரும்,  கேபாவும்  செய்கிறதுபோல,  மனைவியாகிய  ஒரு  சகோதரியைக்  கூட்டிக்கொண்டு  திரிய  எங்களுக்கும்  அதிகாரமில்லையா?  (1கொரிந்தியர்  9:5)

mat’ra  appoasthalarum,  karththarudaiya  sagoathararum,  keapaavum  seygi’rathupoala,  manaiviyaagiya  oru  sagoathariyaik  koottikko'ndu  thiriya  engga'lukkum  athigaaramillaiyaa?  (1korinthiyar  9:5)

அல்லது,  கைத்தொழில்  செய்யாதிருக்கிறதற்கு  எனக்கும்  பர்னபாவுக்கும்மாத்திரந்தானா  அதிகாரமில்லை?  (1கொரிந்தியர்  9:6)

allathu,  kaiththozhil  seyyaathirukki’ratha’rku  enakkum  barnabaavukkummaaththiranthaanaa  athigaaramillai?  (1korinthiyar  9:6)

எவன்  தன்  சொந்தப்பணத்தைச்  செலவழித்து,  தண்டிலே  சேவகம்பண்ணுவான்?  எவன்  திராட்சத்தோட்டத்தை  உண்டாக்கி,  அதின்  கனியில்  புசியாதிருப்பான்?  எவன்  மந்தையை  மேய்த்து,  அதின்  பாலைச்  சாப்பிடாதிருப்பான்?  (1கொரிந்தியர்  9:7)

evan  than  sonthappa'naththaich  selavazhiththu,  tha'ndilea  seavagampa'n'nuvaan?  evan  thiraadchaththoattaththai  u'ndaakki,  athin  kaniyil  pusiyaathiruppaan?  evan  manthaiyai  meayththu,  athin  paalaich  saappidaathiruppaan?  (1korinthiyar  9:7)

இவைகளை  மனுஷர்  வழக்கத்தின்படி  சொல்லுகிறேனோ?  நியாயப்பிரமாணமும்  இவைகளைச்  சொல்லுகிறதில்லையா?  (1கொரிந்தியர்  9:8)

ivaiga'lai  manushar  vazhakkaththinpadi  sollugi’reanoa?  niyaayappiramaa'namum  ivaiga'laich  sollugi’rathillaiyaa?  (1korinthiyar  9:8)

போரடிக்கிற  மாட்டை  வாய்கட்டாயாக  என்று  மோசேயின்  பிரமாணத்திலே  எழுதியிருக்கிறதே.  தேவன்  மாடுகளுக்காகவே  கவலையாயிருக்கிறாரோ?  (1கொரிந்தியர்  9:9)

poaradikki’ra  maattai  vaaykattaayaaga  en’ru  moaseayin  piramaa'naththilea  ezhuthiyirukki’rathea.  theavan  maaduga'lukkaagavea  kavalaiyaayirukki’raaroa?  (1korinthiyar  9:9)

நமக்காகத்தான்  இதைச்  சொல்லுகிறாரோ?  உழுகிறவன்  நம்பிக்கையோடே  உழவும்,  போரடிக்கிறவன்  தான்  நம்புகிறதில்  பங்கடைவேன்  என்கிற  நம்பிக்கையோடே  போரடிக்கவும்  வேண்டியதே,  ஆகையால்,  அது  நமக்காகவே  எழுதியிருக்கிறது.  (1கொரிந்தியர்  9:10)

namakkaagaththaan  ithaich  sollugi’raaroa?  uzhugi’ravan  nambikkaiyoadea  uzhavum,  poaradikki’ravan  thaan  nambugi’rathil  panggadaivean  engi’ra  nambikkaiyoadea  poaradikkavum  vea'ndiyathea,  aagaiyaal,  athu  namakkaagavea  ezhuthiyirukki’rathu.  (1korinthiyar  9:10)

நாங்கள்  உங்களுக்கு  ஞானநன்மைகளை  விதைத்திருக்க,  உங்கள்  சரீரநன்மைகளை  அறுத்தால்  அது  பெரிய  காரியமா?  (1கொரிந்தியர்  9:11)

naangga'l  ungga'lukku  gnaanananmaiga'lai  vithaiththirukka,  ungga'l  sareerananmaiga'lai  a’ruththaal  athu  periya  kaariyamaa?  (1korinthiyar  9:11)

மற்றவர்கள்  உங்களிடத்திலே  இந்த  அதிகாரத்தைச்  செலுத்தினால்,  அவர்களிலும்  நாங்கள்  அதிகமாய்ச்  செலுத்தலாமல்லவா?  அப்படியிருந்தும்,  கிறிஸ்துவின்  சுவிசேஷத்திற்கு  யாதொரு  தடையும்  உண்டாகாதபடிக்கு,  நாங்கள்  இந்த  அதிகாரத்தைச்  செலுத்தாமல்  எல்லாப்  பாடும்  படுகிறோம்.  (1கொரிந்தியர்  9:12)

mat’ravarga'l  ungga'lidaththilea  intha  athigaaraththaich  seluththinaal,  avarga'lilum  naangga'l  athigamaaych  seluththalaamallavaa?  appadiyirunthum,  ki’risthuvin  suviseashaththi’rku  yaathoru  thadaiyum  u'ndaagaathapadikku,  naangga'l  intha  athigaaraththaich  seluththaamal  ellaap  paadum  padugi’roam.  (1korinthiyar  9:12)

ஆசாரிய  ஊழியஞ்செய்கிறவர்கள்  தேவாலயத்திற்குரியவைகளில்  புசிக்கிறார்களென்றும்,  பலிபீடத்தை  அடுத்துப்  பணிவிடை  செய்கிறவர்களுக்குப்  பலிபீடத்திலுள்ளவைகளில்  பங்கு  உண்டென்றும்  அறியீர்களா?  (1கொரிந்தியர்  9:13)

aasaariya  oozhiyagnseygi’ravarga'l  theavaalayaththi’rkuriyavaiga'lil  pusikki’raarga'len’rum,  balipeedaththai  aduththup  pa'nividai  seygi’ravarga'lukkup  balipeedaththilu'l'lavaiga'lil  panggu  u'nden’rum  a’riyeerga'laa?  (1korinthiyar  9:13)

அந்தப்படியே  சுவிசேஷத்தை  அறிவிக்கிறவர்களுக்குச்  சுவிசேஷத்தினாலே  பிழைப்பு  உண்டாகவேண்டுமென்று  கர்த்தரும்  கட்டளையிட்டிருக்கிறார்.  (1கொரிந்தியர்  9:14)

anthappadiyea  suviseashaththai  a’rivikki’ravarga'lukkuch  suviseashaththinaalea  pizhaippu  u'ndaagavea'ndumen’ru  karththarum  katta'laiyittirukki’raar.  (1korinthiyar  9:14)

அப்படியிருந்தும்,  நான்  இவைகளில்  ஒன்றையும்  அநுபவிக்கவில்லை;  இப்படி  எனக்கு  நடக்கவேண்டுமென்று  இவைகளை  நான்  எழுதுகிறதுமில்லை.  என்  மேன்மைபாராட்டலை  ஒருவன்  அவத்தமாக்குகிறதைப்பார்க்கிலும்  சாகிறது  எனக்கு  நலமாயிருக்கும்.  (1கொரிந்தியர்  9:15)

appadiyirunthum,  naan  ivaiga'lil  on’raiyum  anubavikkavillai;  ippadi  enakku  nadakkavea'ndumen’ru  ivaiga'lai  naan  ezhuthugi’rathumillai.  en  meanmaipaaraattalai  oruvan  avaththamaakkugi’rathaippaarkkilum  saagi’rathu  enakku  nalamaayirukkum.  (1korinthiyar  9:15)

சுவிசேஷத்தை  நான்  பிரசங்கித்துவந்தும்,  மேன்மைபாராட்ட  எனக்கு  இடமில்லை;  அது  என்மேல்  விழுந்த  கடமையாயிருக்கிறது;  சுவிசேஷத்தை  நான்  பிரசங்கியாதிருந்தால்,  எனக்கு  ஐயோ.  (1கொரிந்தியர்  9:16)

suviseashaththai  naan  pirasanggiththuvanthum,  meanmaipaaraatta  enakku  idamillai;  athu  enmeal  vizhuntha  kadamaiyaayirukki’rathu;  suviseashaththai  naan  pirasanggiyaathirunthaal,  enakku  aiyoa.  (1korinthiyar  9:16)

நான்  உற்சாகமாய்  அப்படிச்  செய்தால்  எனக்குப்  பலன்  உண்டு;  உற்சாகமில்லாதவனாய்ச்  செய்தாலும்,  உக்கிராண  உத்தியோகம்  எனக்கு  ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே.  (1கொரிந்தியர்  9:17)

naan  u’rchaagamaay  appadich  seythaal  enakkup  palan  u'ndu;  u’rchaagamillaathavanaaych  seythaalum,  ukkiraa'na  uththiyoagam  enakku  oppuvikkappattirukki’rathea.  (1korinthiyar  9:17)

ஆதலால்  எனக்குப்  பலன்  என்ன?  நான்  சுவிசேஷத்தைப்  பிரசங்கிக்கையில்  அதைப்பற்றி  எனக்கு  உண்டாயிருக்கிற  அதிகாரத்தை  முற்றிலும்  செலுத்தாமல்,  கிறிஸ்துவின்  சுவிசேஷத்தைச்  செலவில்லாமல்  ஸ்தாபிப்பதே  எனக்குப்  பலன்.  (1கொரிந்தியர்  9:18)

aathalaal  enakkup  palan  enna?  naan  suviseashaththaip  pirasanggikkaiyil  athaippat’ri  enakku  u'ndaayirukki’ra  athigaaraththai  mut’rilum  seluththaamal,  ki’risthuvin  suviseashaththaich  selavillaamal  sthaabippathea  enakkup  palan.  (1korinthiyar  9:18)

நான்  ஒருவருக்கும்  அடிமைப்படாதவனாயிருந்தும்,  நான்  அதிக  ஜனங்களை  ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு,  என்னைத்தானே  எல்லாருக்கும்  அடிமையாக்கினேன்.  (1கொரிந்தியர்  9:19)

naan  oruvarukkum  adimaippadaathavanaayirunthum,  naan  athiga  janangga'lai  aathaayappaduththikko'l'lumpadikku,  ennaiththaanea  ellaarukkum  adimaiyaakkinean.  (1korinthiyar  9:19)

யூதரை  ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு  யூதருக்கு  யூதனைப்போலவும்,  நியாயப்பிரமாணத்துக்குக்  கீழ்ப்பட்டவர்களை  ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு  நியாயப்பிரமாணத்துக்குக்  கீழ்ப்பட்டவனைப்  போலவுமானேன்.  (1கொரிந்தியர்  9:20)

yootharai  aathaayappaduththikko'l'lumpadikku  yootharukku  yoothanaippoalavum,  niyaayappiramaa'naththukkuk  keezhppattavarga'lai  aathaayappaduththikko'l'lumpadikku  niyaayappiramaa'naththukkuk  keezhppattavanaip  poalavumaanean.  (1korinthiyar  9:20)

நியாயப்பிரமாணமில்லாதவர்களை  ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு  அவர்களுக்கு  நியாயப்பிரமாணம்  இல்லாதவனைப்  போலவுமானேன்.  அப்படியிருந்தும்,  நான்  தேவனுக்குமுன்பாக  நியாயப்பிரமாணமில்லாதவனாயிராமல்,  கிறிஸ்துவின்  பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன்.  (1கொரிந்தியர்  9:21)

niyaayappiramaa'namillaathavarga'lai  aathaayappaduththikko'l'lumpadikku  avarga'lukku  niyaayappiramaa'nam  illaathavanaip  poalavumaanean.  appadiyirunthum,  naan  theavanukkumunbaaga  niyaayappiramaa'namillaathavanaayiraamal,  ki’risthuvin  piramaa'naththukku'l'laanavanaayirukki’rean.  (1korinthiyar  9:21)

பலவீனரை  ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப்  பலவீனருக்குப்  பலவீனனைப்போலானேன்;  எப்படியாகிலும்  சிலரை  இரட்சிக்கும்படிக்கு  நான்  எல்லாருக்கும்  எல்லாமானேன்.  (1கொரிந்தியர்  9:22)

balaveenarai  aathaayappaduththikko'l'lumpadikkup  balaveenarukkup  balaveenanaippoalaanean;  eppadiyaagilum  silarai  iradchikkumpadikku  naan  ellaarukkum  ellaamaanean.  (1korinthiyar  9:22)

சுவிசேஷத்தில்  நான்  உடன்பங்காளியாகும்படிக்கு,  அதினிமித்தமே  இப்படிச்  செய்கிறேன்.  (1கொரிந்தியர்  9:23)

suviseashaththil  naan  udanpanggaa'liyaagumpadikku,  athinimiththamea  ippadich  seygi’rean.  (1korinthiyar  9:23)

பந்தயச்  சாலையில்  ஓடுகிறவர்களெல்லாரும்  ஓடுவார்கள்;  ஆகிலும்,  ஒருவனே  பந்தயத்தைப்  பெறுவானென்று  அறியீர்களா?  நீங்கள்  பெற்றுக்கொள்ளத்தக்கதாக  ஓடுங்கள்.  (1கொரிந்தியர்  9:24)

panthayach  saalaiyil  oadugi’ravarga'lellaarum  oaduvaarga'l;  aagilum,  oruvanea  panthayaththaip  pe’ruvaanen’ru  a’riyeerga'laa?  neengga'l  pet’rukko'l'laththakkathaaga  oadungga'l.  (1korinthiyar  9:24)

பந்தயத்திற்குப்  போராடுகிற  யாவரும்  எல்லாவற்றிலேயும்  இச்சையடக்கமாயிருப்பார்கள்.  அவர்கள்  அழிவுள்ள  கிரீடத்தைப்  பெறும்படிக்கு  அப்படிச்  செய்கிறார்கள்,  நாமோ  அழிவில்லாத  கிரீடத்தைப்  பெறும்படிக்கு  அப்படிச்  செய்கிறோம்.  (1கொரிந்தியர்  9:25)

panthayaththi’rkup  poaraadugi’ra  yaavarum  ellaavat’rileayum  ichchaiyadakkamaayiruppaarga'l.  avarga'l  azhivu'l'la  kireedaththaip  pe’rumpadikku  appadich  seygi’raarga'l,  naamoa  azhivillaatha  kireedaththaip  pe’rumpadikku  appadich  seygi’roam.  (1korinthiyar  9:25)

ஆதலால்  நான்  நிச்சயமில்லாதவனாக  ஓடேன்;  ஆகாயத்தை  அடிக்கிறவனாகச்  சிலம்பம்பண்ணேன்.  (1கொரிந்தியர்  9:26)

aathalaal  naan  nichchayamillaathavanaaga  oadean;  aagaayaththai  adikki’ravanaagach  silambampa'n'nean.  (1korinthiyar  9:26)

மற்றவர்களுக்குப்  பிரசங்கம்பண்ணுகிற  நான்தானே  ஆகாதவனாய்ப்  போகாதபடிக்கு,  என்  சரீரத்தை  ஒடுக்கிக்  கீழ்ப்படுத்துகிறேன்.  (1கொரிந்தியர்  9:27)

mat’ravarga'lukkup  pirasanggampa'n'nugi’ra  naanthaanea  aagaathavanaayp  poagaathapadikku,  en  sareeraththai  odukkik  keezhppaduththugi’rean.  (1korinthiyar  9:27)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!