Thursday, May 26, 2016

1 Korinthiyar 6 | 1 கொரிந்தியர் 6 | 1 Corinthians 6

உங்களில்  ஒருவனுக்கு  வேறொருவனோடே  வழக்குண்டானால்,  வழக்காடும்படி  அவன்  பரிசுத்தவான்களிடத்தில்  போகாமல்,  அநீதக்காரரிடத்தில்  போகத்  துணிகிறதென்ன?  (1கொரிந்தியர்  6:1)

ungga'lil  oruvanukku  vea’roruvanoadea  vazhakku'ndaanaal,  vazhakkaadumpadi  avan  parisuththavaanga'lidaththil  poagaamal,  aneethakkaararidaththil  poagath  thu'nigi’rathenna?  (1korinthiyar  6:1)

பரிசுத்தவான்கள்  உலகத்தை  நியாயந்தீர்ப்பார்களென்று  அறியீர்களா?  உலகம்  உங்களால்  நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க,  அற்ப  வழக்குகளைத்  தீர்க்க  நீங்கள்  அபாத்திரரா?  (1கொரிந்தியர்  6:2)

parisuththavaanga'l  ulagaththai  niyaayantheerppaarga'len’ru  a’riyeerga'laa?  ulagam  ungga'laal  niyaayantheerkkappaduvathaayirukka,  a’rpa  vazhakkuga'laith  theerkka  neengga'l  abaaththiraraa?  (1korinthiyar  6:2)

தேவ  தூதர்களையும்  நியாயந்தீர்ப்போமென்று  அறியீர்களா?  அப்படியிருக்க,  இந்த  ஜீவனுக்கேற்றவைகளை  நீங்கள்  தீர்த்துக்கொள்ளக்கூடாதிருக்கிறது  எப்படி?  (1கொரிந்தியர்  6:3)

theava  thootharga'laiyum  niyaayantheerppoamen’ru  a’riyeerga'laa?  appadiyirukka,  intha  jeevanukkeat’ravaiga'lai  neengga'l  theerththukko'l'lakkoodaathirukki’rathu  eppadi?  (1korinthiyar  6:3)

இந்த  ஜீவனுக்கேற்ற  வழக்குகள்  உங்களுக்கு  இருந்தால்,  தீர்ப்புச்செய்கிறதற்கு,  சபையில்  அற்பமாய்  எண்ணப்பட்டவர்களை  நியமித்துக்கொள்ளுங்கள்.  (1கொரிந்தியர்  6:4)

intha  jeevanukkeat’ra  vazhakkuga'l  ungga'lukku  irunthaal,  theerppuchseygi’ratha’rku,  sabaiyil  a’rpamaay  e'n'nappattavarga'lai  niyamiththukko'l'lungga'l.  (1korinthiyar  6:4)

உங்களுக்கு  வெட்கம்  உண்டாகும்படி  இதைச்  சொல்லுகிறேன்.  சகோதரனுக்கும்  சகோதரனுக்கும்  உண்டான  வழக்கைத்  தீர்க்கத்தக்க  விவேகி  ஒருவனாகிலும்  உங்களுக்குள்  இல்லையா?  (1கொரிந்தியர்  6:5)

ungga'lukku  vedkam  u'ndaagumpadi  ithaich  sollugi’rean.  sagoatharanukkum  sagoatharanukkum  u'ndaana  vazhakkaith  theerkkaththakka  viveagi  oruvanaagilum  ungga'lukku'l  illaiyaa?  (1korinthiyar  6:5)

சகோதரனோடே  சகோதரன்  வழக்காடுகிறான்,  அவிசுவாசிகளுக்கு  முன்பாகவும்  அப்படிச்  செய்கிறான்.  (1கொரிந்தியர்  6:6)

sagoatharanoadea  sagoatharan  vazhakkaadugi’raan,  avisuvaasiga'lukku  munbaagavum  appadich  seygi’raan.  (1korinthiyar  6:6)

நீங்கள்  ஒருவரோடொருவர்  வழக்காடுகிறது  எவ்விதத்திலும்  குற்றமாயிருக்கிறது.  அப்படிச்  செய்கிறதைவிட  நீங்கள்  ஏன்  அநியாயத்தைச்  சகித்துக்கொள்ளுகிறதில்லை,  ஏன்  நஷ்டத்தைப்  பொறுத்துக்கொள்ளுகிறதில்லை?  (1கொரிந்தியர்  6:7)

neengga'l  oruvaroadoruvar  vazhakkaadugi’rathu  evvithaththilum  kut’ramaayirukki’rathu.  appadich  seygi’rathaivida  neengga'l  ean  aniyaayaththaich  sagiththukko'l'lugi’rathillai,  ean  nashdaththaip  po’ruththukko'l'lugi’rathillai?  (1korinthiyar  6:7)

நீங்களே  அநியாயஞ்செய்கிறீர்கள்,  நஷ்டப்படுத்துகிறீர்கள்;  சகோதரருக்கும்  அப்படிச்  செய்கிறீர்களே.  (1கொரிந்தியர்  6:8)

neengga'lea  aniyaayagnseygi’reerga'l,  nashdappaduththugi’reerga'l;  sagoathararukkum  appadich  seygi’reerga'lea.  (1korinthiyar  6:8)

அநியாயக்காரர்  தேவனுடைய  ராஜ்யத்தைச்  சுதந்தரிப்பதில்லையென்று  அறியீர்களா?  வஞ்சிக்கப்படாதிருங்கள்;  வேசிமார்க்கத்தாரும்,  விக்கிரகாராதனைக்காரரும்,  விபசாரக்காரரும்,  சுயபுணர்ச்சிக்காரரும்,  ஆண்புணர்ச்சிக்காரரும்,  (1கொரிந்தியர்  6:9)

aniyaayakkaarar  theavanudaiya  raajyaththaich  suthantharippathillaiyen’ru  a’riyeerga'laa?  vagnchikkappadaathirungga'l;  veasimaarkkaththaarum,  vikkiragaaraathanaikkaararum,  vibasaarakkaararum,  suyapu'narchchikkaararum,  aa'npu'narchchikkaararum,  (1korinthiyar  6:9)

திருடரும்,  பொருளாசைக்காரரும்,  வெறியரும்,  உதாசினரும்,  கொள்ளைக்காரரும்  தேவனுடைய  ராஜ்யத்தைச்  சுதந்தரிப்பதில்லை.  (1கொரிந்தியர்  6:10)

thirudarum,  poru'laasaikkaararum,  ve’riyarum,  uthaasinarum,  ko'l'laikkaararum  theavanudaiya  raajyaththaich  suthantharippathillai.  (1korinthiyar  6:10)

உங்களில்  சிலர்  இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்;  ஆயினும்  கர்த்தராகிய  இயேசுவின்  நாமத்தினாலும்,  நமது  தேவனுடைய  ஆவியினாலும்  கழுவப்பட்டீர்கள்,  பரிசுத்தமாக்கப்பட்டீர்கள்,  நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.  (1கொரிந்தியர்  6:11)

ungga'lil  silar  ippadippattavarga'laayiruntheerga'l;  aayinum  karththaraagiya  iyeasuvin  naamaththinaalum,  namathu  theavanudaiya  aaviyinaalum  kazhuvappatteerga'l,  parisuththamaakkappatteerga'l,  neethimaanga'laakkappatteerga'l.  (1korinthiyar  6:11)

எல்லாவற்றையும்  அநுபவிக்க  எனக்கு  அதிகாரமுண்டு,  ஆகிலும்  எல்லாம்  தகுதியாயிராது;  எல்லாவற்றையும்  அநுபவிக்க  எனக்கு  அதிகாரமுண்டு,  ஆகிலும்  நான்  ஒன்றிற்கும்  அடிமைப்படமாட்டேன்.  (1கொரிந்தியர்  6:12)

ellaavat’raiyum  anubavikka  enakku  athigaaramu'ndu,  aagilum  ellaam  thaguthiyaayiraathu;  ellaavat’raiyum  anubavikka  enakku  athigaaramu'ndu,  aagilum  naan  on’ri’rkum  adimaippadamaattean.  (1korinthiyar  6:12)

வயிற்றுக்குப்  போஜனமும்  போஜனத்துக்கு  வயிறும்  ஏற்கும்;  ஆனாலும்  தேவன்  இதையும்  அதையும்  அழியப்பண்ணுவார்.  சரீரமோ  வேசித்தனத்திற்கல்ல,  கர்த்தருக்கே  உரியது;  கர்த்தரும்  சரீரத்திற்கு  உரியவர்.  (1கொரிந்தியர்  6:13)

vayit’rukkup  poajanamum  poajanaththukku  vayi’rum  ea’rkum;  aanaalum  theavan  ithaiyum  athaiyum  azhiyappa'n'nuvaar.  sareeramoa  veasiththanaththi’rkalla,  karththarukkea  uriyathu;  karththarum  sareeraththi’rku  uriyavar.  (1korinthiyar  6:13)

தேவன்  கர்த்தரை  எழுப்பினாரே,  நம்மையும்  தமது  வல்லமையினாலே  எழுப்புவார்.  (1கொரிந்தியர்  6:14)

theavan  karththarai  ezhuppinaarea,  nammaiyum  thamathu  vallamaiyinaalea  ezhuppuvaar.  (1korinthiyar  6:14)

உங்கள்  சரீரங்கள்  கிறிஸ்துவின்  அவயவங்களென்று  அறியீர்களா?  அப்படியிருக்க,  நான்  கிறிஸ்துவின்  அவயவங்களை  வேசியின்  அவயவங்களாக்கலாமா?  அப்படிச்  செய்யலாகாதே.  (1கொரிந்தியர்  6:15)

ungga'l  sareerangga'l  ki’risthuvin  avayavangga'len’ru  a’riyeerga'laa?  appadiyirukka,  naan  ki’risthuvin  avayavangga'lai  veasiyin  avayavangga'laakkalaamaa?  appadich  seyyalaagaathea.  (1korinthiyar  6:15)

வேசியோடு  இசைந்திருக்கிறவன்  அவளுடனே  ஒரே  சரீரமாயிருக்கிறானென்று  அறியீர்களா?  இருவரும்  ஒரே  மாம்சமாயிருப்பார்கள்  என்று  சொல்லியிருக்கிறதே.  (1கொரிந்தியர்  6:16)

veasiyoadu  isainthirukki’ravan  ava'ludanea  orea  sareeramaayirukki’raanen’ru  a’riyeerga'laa?  iruvarum  orea  maamsamaayiruppaarga'l  en’ru  solliyirukki’rathea.  (1korinthiyar  6:16)

அப்படியே  கர்த்தரோடிசைந்திருக்கிறவனும்,  அவருடனே  ஒரே  ஆவியாயிருக்கிறான்.  (1கொரிந்தியர்  6:17)

appadiyea  karththaroadisainthirukki’ravanum,  avarudanea  orea  aaviyaayirukki’raan.  (1korinthiyar  6:17)

வேசித்தனத்திற்கு  விலகியோடுங்கள்.  மனுஷன்  செய்கிற  எந்தப்  பாவமும்  சரீரத்திற்குப்  புறம்பாயிருக்கும்;  வேசித்தனஞ்  செய்கிறவனோ  தன்  சுயசரீரத்திற்கு  விரோதமாய்ப்  பாவஞ்செய்கிறான்.  (1கொரிந்தியர்  6:18)

veasiththanaththi’rku  vilagiyoadungga'l.  manushan  seygi’ra  enthap  paavamum  sareeraththi’rkup  pu’rambaayirukkum;  veasiththanagn  seygi’ravanoa  than  suyasareeraththi’rku  viroathamaayp  paavagnseygi’raan.  (1korinthiyar  6:18)

உங்கள்  சரீரமானது  நீங்கள்  தேவனாலே  பெற்றும்  உங்களில்  தங்கியும்  இருக்கிற  பரிசுத்த  ஆவியினுடைய  ஆலயமாயிருக்கிறதென்றும்,  நீங்கள்  உங்களுடையவர்களல்லவென்றும்  அறியீர்களா?  (1கொரிந்தியர்  6:19)

ungga'l  sareeramaanathu  neengga'l  theavanaalea  pet’rum  ungga'lil  thanggiyum  irukki’ra  parisuththa  aaviyinudaiya  aalayamaayirukki’rathen’rum,  neengga'l  ungga'ludaiyavarga'lallaven’rum  a’riyeerga'laa?  (1korinthiyar  6:19)

கிரயத்துக்குக்  கொள்ளப்பட்டீர்களே;  ஆகையால்  தேவனுக்கு  உடையவைகளாகிய  உங்கள்  சரீரத்தினாலும்  உங்கள்  ஆவியினாலும்  தேவனை  மகிமைப்படுத்துங்கள்.  (1கொரிந்தியர்  6:20)

kirayaththukkuk  ko'l'lappatteerga'lea;  aagaiyaal  theavanukku  udaiyavaiga'laagiya  ungga'l  sareeraththinaalum  ungga'l  aaviyinaalum  theavanai  magimaippaduththungga'l.  (1korinthiyar  6:20)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!