உங்களுக்குள்ளே விபசாரம்
உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே; ஒருவன்
தன் தகப்பனுடைய மனைவியை
வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத
விபசாரமாயிருக்கிறதே. (1கொரிந்தியர் 5:1)
ungga'lukku'l'lea vibasaaram u'nden’ru pirasiththamaaych sollappadugi’rathea; oruvan than thagappanudaiya manaiviyai vaiththukko'ndirukki’raanea; athu agngnaaniga'lukku'l'lum sollappadaatha vibasaaramaayirukki’rathea. (1korinthiyar 5:1)
இப்படிப்பட்ட காரியஞ்செய்தவனை நீங்கள்
உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள். (1கொரிந்தியர்
5:2)
ippadippatta kaariyagnseythavanai neengga'l ungga'laivittu neekkaamalum thukkappadaamalum, i’rumaappadainthirukki’reerga'l. (1korinthiyar 5:2)
நான் சரீரத்தினாலே
உங்களுக்குத் தூரமாயிருந்தும், ஆவியினாலே
உங்களோடேகூட இருக்கிறவனாய், இப்படிச்
செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறதுபோல, (1கொரிந்தியர்
5:3)
naan
sareeraththinaalea ungga'lukkuth thooramaayirunthum, aaviyinaalea
ungga'loadeakooda
irukki’ravanaay,
ippadich seythavanaikku’riththu
naan kooda irukki’rathupoala, (1korinthiyar
5:3)
நீங்களும், என்னுடைய
ஆவியும், நமது கர்த்தராகிய
இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தோடே கூடிவந்திருக்கையில், (1கொரிந்தியர்
5:4)
neengga'lum, ennudaiya
aaviyum, namathu karththaraagiya iyeasuki’risthuvin athigaaraththoadea koodivanthirukkaiyil, (1korinthiyar
5:4)
அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே
இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக,
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே
அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன். (1கொரிந்தியர்
5:5)
appadippattavanudaiya aavi karththaraagiya iyeasuki’risthuvin naa'lilea iradchikkappadumpadi, maamsaththin azhivukkaaga, nammudaiya
karththaraagiya iyeasuki’risthuvin
naamaththinaalea avanaich saaththaanukku oppukkodukkavea'ndumen’ru theerppuchseygi’rean. (1korinthiyar 5:5)
நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல;
கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா
முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?
(1கொரிந்தியர் 5:6)
neengga'l meanmaipaaraattugi’rathu nallathalla; kogncham pu'liththamaa
pisainthamaa
muzhuvathaiyum pu'lippaakkumen’ru a’riyeerga'laa? (1korinthiyar 5:6)
ஆகையால், நீங்கள்
புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே,
புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே
கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய
பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப்
பலியிடப்பட்டிருக்கிறாரே. (1கொரிந்தியர் 5:7)
aagaiyaal, neengga'l pu'lippillaathavarga'laayirukki’rapadiyea,
puthithaayp pisaintha maavaayirukkumpadikku, pazhaiya
pu'liththamaavaip pu’rambea kazhiththuppoadungga'l. eanenil nammudaiya
paskaavaagiya ki’risthu namakkaagap baliyidappattirukki’raarea. (1korinthiyar 5:7)
ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு
என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத
அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம். (1கொரிந்தியர்
5:8)
aathalaal pazhaiya
pu'liththamaavoadea alla, thurkku'nam
pollaappu ennum pu'liththamaavoadum alla, thuppuravu u'nmai
ennum pu'lippillaatha appaththoadea
pa'ndigaiyai aasarikkakkadavoam. (1korinthiyar 5:8)
விபசாரக்காரரோடே கலந்திருக்கக்கூடாதென்று நிருபத்தில்
உங்களுக்கு எழுதினேன். (1கொரிந்தியர்
5:9)
vibasaarakkaararoadea kalanthirukkakkoodaathen’ru nirubaththil ungga'lukku ezhuthinean. (1korinthiyar
5:9)
ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு
எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால்
நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே. (1கொரிந்தியர்
5:10)
aanaalum, ivvulagaththilu'l'la vibasaarakkaarar, poru'laasaikkaarar, ko'l'laikkaarar, vikkiragaaraathanaikkaarar ivarga'loadu evva'lavum
kalanthirukkakkoodaathen’ru
naan ezhuthavillai; appadiyaanaal
neengga'l ulagaththaivittu neenggippoagavea'ndiyathaayirukkumea. (1korinthiyar
5:10)
நான் உங்களுக்கு
எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன்
விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது,
கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே
கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது. (1கொரிந்தியர்
5:11)
naan
ungga'lukku
ezhuthinathennaven’raal,
sagoatharanennappatta oruvan
vibasaarakkaaranaayaavathu, poru'laasaikkaaranaayaavathu, vikkiragaaraathanaikkaaranaayaavathu, uthaasinanaayaavathu, ve’riyanaayaavathu, ko'l'laikkaaranaayaavathu irunthaal,
avanoadea kalanthirukkakkoodaathu; appadippattavanudaneakoodap pusikkavungkoodaathu. (1korinthiyar
5:11)
புறம்பே இருக்கிறவர்களைக் குறித்துத்
தீர்ப்புச்செய்கிறது என் காரியமா?
உள்ளே இருக்கிறவர்களைக் குறித்தல்லவோ
நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்? (1கொரிந்தியர்
5:12)
pu’rambea irukki’ravarga'laik ku’riththuth theerppuchseygi’rathu en kaariyamaa?
u'l'lea irukki’ravarga'laik ku’riththallavoa neengga'l theerppuchseygi’reerga'l? (1korinthiyar
5:12)
புறம்பே இருக்கிறவர்களைக் குறித்துத்
தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகையால்
அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள். (1கொரிந்தியர்
5:13)
pu’rambea irukki’ravarga'laik ku’riththuth theavanea theerppuchseyvaar. aagaiyaal anthap
pollaathavanai ungga'laivittuth tha'l'lippoadungga'l. (1korinthiyar 5:13)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!