இப்படியாக,
எந்த மனுஷனும் எங்களைக்
கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், தேவனுடைய
இரகசியங்களின் உக்கிராணக்காரரென்றும் எண்ணிக்கொள்ளக்கடவன். (1கொரிந்தியர்
4:1)
ippadiyaaga, entha manushanum engga'laik ki’risthuvin
oozhiyakkaararen’rum, theavanudaiya
iragasiyangga'lin ukkiraa'nakkaararen’rum e'n'nikko'l'lakkadavan. (1korinthiyar
4:1)
மேலும்,
உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது
அவனுக்கு அவசியமாம். (1கொரிந்தியர்
4:2)
mealum, ukkiraa'nakkaaran u'nmaiyu'l'lavanen’ru kaa'nappaduvathu avanukku
avasiyamaam. (1korinthiyar
4:2)
ஆயினும்
நான் உங்களாலேயாவது மனுஷருடைய
நியாயநாளின் விசாரணையினாலேயாவது தீர்ப்பைப்
பெறுவது எனக்கு மிகவும்
அற்ப காரியமாயிருக்கிறது; நானும்
என்னைக்குறித்துத் தீர்ப்புச்சொல்லுகிறதில்லை. (1கொரிந்தியர்
4:3)
aayinum naan ungga'laaleayaavathu manusharudaiya niyaayanaa'lin visaara'naiyinaaleayaavathu theerppaip pe’ruvathu enakku migavum a’rpa kaariyamaayirukki’rathu; naanum ennaikku’riththuth theerppuchsollugi’rathillai. (1korinthiyar 4:3)
என்னிடத்தில்
நான் யாதொரு குற்றத்தையும்
அறியேன்; ஆகிலும் அதினாலே
நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே.
(1கொரிந்தியர் 4:4)
ennidaththil naan yaathoru
kut’raththaiyum a’riyean; aagilum athinaalea naan neethimaanaagi’rathillai;
ennai niyaayam visaarikki’ravar karththarea.
(1korinthiyar 4:4)
ஆனதால்,
கர்த்தர் வருமளவும் நீங்கள்
காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்; இருளில்
மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின்
யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது
அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால்
உண்டாகும். (1கொரிந்தியர் 4:5)
aanathaal, karththar varuma'lavum
neengga'l kaalaththukkumunnea yaathon’raikku’riththum theerppuchsollaathirungga'l; iru'lil
ma’rainthirukki’ravaiga'lai avar ve'liyaranggamaakki, iruthayangga'lin yoasanaiga'laiyum ve'lippaduththuvaar; appozhuthu
avanavanukkuriya pugazhchchi theavanaal u'ndaagum. (1korinthiyar 4:5)
சகோதரரே,
எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள்
எங்களாலே கற்றுக்கொள்ளவும், ஒருவனும்
ஒருவனிமித்தம் மற்றொருவனுக்கு விரோதமாய்
இறுமாப்படையாதிருக்கவும், நான் உங்கள்நிமித்தம் என்னையும்
அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து,
இவைகளை எழுதினேன். (1கொரிந்தியர்
4:6)
sagoathararea, ezhuthappattatha’rku mignchi e'n'navea'ndaamen’ru neengga'l engga'laalea
kat’rukko'l'lavum, oruvanum
oruvanimiththam mat’roruvanukku
viroathamaay i’rumaappadaiyaathirukkavum, naan ungga'lnimiththam
ennaiyum appolloavaiyum thirushdaanthamaaga vaiththu, ivaiga'lai ezhuthinean. (1korinthiyar
4:6)
அன்றியும்
உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர்
யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல் ஏன் மேன்மைபாராட்டுகிறாய்? (1கொரிந்தியர்
4:7)
an’riyum unnai viseashiththavanaagumpadi seygi’ravar yaar? unakku
u'ndaayirukki’ravaiga'lil nee pet’rukko'l'laathathu yaathu? nee pet’rukko'ndavanaanaal pet’rukko'l'laathavanpoal ean meanmaipaaraattugi’raay? (1korinthiyar 4:7)
இப்பொழுது
திருப்தியடைந்திருக்கிறீர்களே, இப்பொழுது ஐசுவரியவான்களாயிருக்கிறீர்களே, எங்களையல்லாமல் ஆளுகிறீர்களே;
நீங்கள் ஆளுகிறவர்களானால் நலமாயிருக்கும்; அப்பொழுது
உங்களுடனேகூட நாங்களும் ஆளுவோமே.
(1கொரிந்தியர் 4:8)
ippozhuthu thirupthiyadainthirukki’reerga'lea, ippozhuthu aisuvariyavaanga'laayirukki’reerga'lea, engga'laiyallaamal
aa'lugi’reerga'lea; neengga'l aa'lugi’ravarga'laanaal nalamaayirukkum; appozhuthu
ungga'ludaneakooda naangga'lum aa'luvoamea. (1korinthiyar
4:8)
எங்களுக்குத்
தோன்றுகிறபடி தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை
மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாய்க் காணப்படப்பண்ணினார்; நாங்கள்
உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும்
வேடிக்கையானோம். (1கொரிந்தியர் 4:9)
engga'lukkuth thoan’rugi’rapadi theavan appoasthalarga'laagiya engga'lai mara'naththukkuk ku’rikkappattavarga'lpoalak
kadaisiyaanavarga'laayk
kaa'nappadappa'n'ninaar; naangga'l ulagaththukkum
thootharukkum manusharukkum veadikkaiyaanoam. (1korinthiyar
4:9)
நாங்கள்
கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர், நீங்கள்
கிறிஸ்துவில் புத்திசாலிகள்; நாங்கள்
பலவீனர், நீங்கள் பலவான்கள்;
நீங்கள் கனவான்கள், நாங்கள்
கனவீனர். (1கொரிந்தியர் 4:10)
naangga'l ki’risthuvinimiththam paiththiyakkaarar, neengga'l ki’risthuvil
buththisaaliga'l; naangga'l balaveenar,
neengga'l balavaanga'l; neengga'l kanavaanga'l, naangga'l kanaveenar. (1korinthiyar
4:10)
இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருக்கிறோம். (1கொரிந்தியர்
4:11)
innearamvaraikkum pasiyu'l'lavarga'lum, thaagamu'l'lavarga'lum, nirvaa'niga'lum, kuttu'ndavarga'lum, thangga idamillaathavarga'lumaayirukki’roam. (1korinthiyar 4:11)
எங்கள்
கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறோம்; வையப்பட்டு,
ஆசீர்வதிக்கிறோம்; துன்பப்பட்டு, சகிக்கிறோம்.
(1கொரிந்தியர் 4:12)
engga'l kaiga'linaalea vealaiseythu, paadupadugi’roam; vaiyappattu, aaseervathikki’roam; thunbappattu, sagikki’roam. (1korinthiyar
4:12)
தூஷிக்கப்பட்டு, வேண்டிக்கொள்ளுகிறோம்; இந்நாள்வரைக்கும் உலகத்தின்
குப்பையைப்போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவுமானோம். (1கொரிந்தியர்
4:13)
thooshikkappattu, vea'ndikko'l'lugi’roam; innaa'lvaraikkum ulagaththin kuppaiyaippoalavum, ellaarum
thudaiththuppoadugi’ra azhukkaippoalavumaanoam. (1korinthiyar
4:13)
உங்களை
வெட்கப்படுத்தும்படிக்கு நான் இவைகளை
எழுதவில்லை, நீங்கள் எனக்குப்
பிரியமான பிள்ளைகளென்று உங்களுக்குப்
புத்திசொல்லுகிறேன். (1கொரிந்தியர் 4:14)
ungga'lai vedkappaduththumpadikku naan ivaiga'lai ezhuthavillai, neengga'l enakkup piriyamaana
pi'l'laiga'len’ru ungga'lukkup
buththisollugi’rean. (1korinthiyar 4:14)
கிறிஸ்துவுக்குள் பதினாயிரம்
உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும்,
தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு
இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள்
சுவிசேஷத்தினால் நான் உங்களைப்
பெற்றேன். (1கொரிந்தியர் 4:15)
ki’risthuvukku'l pathinaayiram
ubaaththiyaayarga'l ungga'lukku
irunthaalum, thagappanmaar
aneagar ungga'lukku illaiyea; ki’risthu iyeasuvukku'l
suviseashaththinaal
naan ungga'laip pet’rean. (1korinthiyar 4:15)
ஆகையால்,
என்னைப் பின்பற்றுகிறவர்களாகுங்களென்று உங்களுக்குப்
புத்திசொல்லுகிறேன். (1கொரிந்தியர் 4:16)
aagaiyaal, ennaip
pinpat’rugi’ravarga'laagungga'len’ru ungga'lukkup
buththisollugi’rean. (1korinthiyar 4:16)
இதினிமித்தமாக, எனக்குப்
பிரியமும், கர்த்தருக்குள் உண்மையுமுள்ள
என் குமாரனாகிய தீமோத்தேயுவை
உங்களிடத்தில் அனுப்பினேன்; நான் எங்கும் எந்தச்
சபையிலும் போதித்துவருகிறபிரகாரம் கிறிஸ்துவுக்குள்ளான என் நடக்கைகளை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான். (1கொரிந்தியர்
4:17)
ithinimiththamaaga, enakkup piriyamum,
karththarukku'l u'nmaiyumu'l'la en kumaaranaagiya theemoaththeayuvai ungga'lidaththil anuppinean; naan enggum enthach sabaiyilum poathiththuvarugi’rapiragaaram ki’risthuvukku'l'laana en nadakkaiga'lai avan ungga'lukku gnaabagappaduththuvaan. (1korinthiyar
4:17)
நான் உங்களிடத்திற்கு வருகிறதில்லை
என்கிறதாகச் சிலர் இறுமாப்படைந்திருக்கிறார்கள். (1கொரிந்தியர்
4:18)
naan ungga'lidaththi’rku varugi’rathillai
engi’rathaagach silar i’rumaappadainthirukki’raarga'l. (1korinthiyar 4:18)
ஆகிலும்
கர்த்தருக்குச் சித்தமானால் நான் சீக்கிரமாய் உங்களிடத்திற்கு வந்து,
இறுமாப்படைந்திருக்கிறவர்களுடைய பேச்சையல்ல, அவர்களுடைய
பெலத்தையே அறிந்துகொள்வேன். (1கொரிந்தியர்
4:19)
aagilum karththarukkuch siththamaanaal
naan seekkiramaay
ungga'lidaththi’rku vanthu, i’rumaappadainthirukki’ravarga'ludaiya
peachchaiyalla, avarga'ludaiya belaththaiyea
a’rinthuko'lvean. (1korinthiyar
4:19)
தேவனுடைய
ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது. (1கொரிந்தியர்
4:20)
theavanudaiya raajyam peachchilea alla, belaththilea u'ndaayirukki’rathu. (1korinthiyar 4:20)
உங்களுக்கு
என்னவேண்டும்? நான் பிரம்போடு
உங்களிடத்தில் வரவேண்டுமோ? அல்லது
அன்போடும் சாந்தமுள்ள ஆவியோடும்
வரவேண்டுமோ? (1கொரிந்தியர் 4:21)
ungga'lukku ennavea'ndum?
naan piramboadu ungga'lidaththil
varavea'ndumoa? allathu anboadum saanthamu'l'la
aaviyoadum varavea'ndumoa? (1korinthiyar
4:21)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!