தேவனுடைய
சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனாகிய பவுலும்,
சகோதரனாகிய சொஸ்தெனேயும், (1கொரிந்தியர்
1:1)
theavanudaiya siththaththinaalea iyeasuki’risthuvin appoasthalanaagumpadi azhaikkappattavanaagiya pavulum, sagoatharanaagiya sostheneayum, (1korinthiyar 1:1)
கொரிந்துவிலே
கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய
சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும்
ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய
இயேசு கிறிஸ்துவின் நாமத்தை
எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும்
எழுதுகிறதாவது: (1கொரிந்தியர் 1:2)
korinthuvilea ki’risthu iyeasuvukku'l
parisuththamaakkappattavarga'laayum, parisuththavaanga'laagumpadi azhaikkappattavarga'laayumirukki’ra theavanudaiya sabaikkum, engga'lukkum
thangga'lukkum aa'ndavaraayirukki’ra nammudaiya karththaraagiya iyeasu ki’risthuvin
naamaththai enggum thozhuthuko'l'lugi’ra anaivarukkum ezhuthugi’rathaavathu: (1korinthiyar 1:2)
நம்முடைய
பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய
இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும்
சமாதானமும் உண்டாவதாக. (1கொரிந்தியர்
1:3)
nammudaiya pithaavaagiya theavanaalum karththaraagiya iyeasuki’risthuvinaalum ungga'lukkuk
kirubaiyum samaathaanamum u'ndaavathaaga. (1korinthiyar 1:3)
கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி
உங்களுக்குள்ளே ஸ்திரப்படுத்தப்பட்டபடியே, (1கொரிந்தியர்
1:4)
ki’risthuvaippat’riya saadchi ungga'lukku'l'lea
sthirappaduththappattapadiyea, (1korinthiyar
1:4)
நீங்கள்
இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும்
எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும், சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால், (1கொரிந்தியர்
1:5)
neengga'l iyeasuki’risthuvukku'l'laay ellaa ubatheasaththilum ellaa a’rivilum, mat’rellaavat’rilum, sampoora'namu'l'lavarga'laakkappattirukki’rapadiyaal, (1korinthiyar
1:5)
அவர் மூலமாய் உங்களுக்கு
அளிக்கப்பட்ட தேவகிருபைக்காக, நான் உங்களைக்குறித்து எப்பொழுதும்
என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். (1கொரிந்தியர்
1:6)
avar moolamaay ungga'lukku a'likkappatta theavakirubaikkaaga, naan ungga'laikku’riththu eppozhuthum
en theavanai sthoaththirikki’rean. (1korinthiyar 1:6)
அப்படியே
நீங்கள் யாதொரு வரத்திலும்
குறைவில்லாதவர்களாய், நம்முடைய கர்த்தராகிய
இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள். (1கொரிந்தியர்
1:7)
appadiyea neengga'l yaathoru varaththilum
ku’raivillaathavarga'laay,
nammudaiya karththaraagiya iyeasuki’risthu ve'lippaduvatha’rkuk kaaththirukki’reerga'l. (1korinthiyar 1:7)
நம்முடைய
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்
நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார். (1கொரிந்தியர்
1:8)
nammudaiya karththaraagiya iyeasu ki’risthuvin
naa'lilea neengga'l kut’ragnsaattappadaathavarga'laayirukkumpadi mudivupariyantham avar ungga'lai sthirappaduththuvaar. (1korinthiyar
1:8)
தம்முடைய
குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை
அழைத்த தேவன் உண்மையுள்ளவர். (1கொரிந்தியர்
1:9)
thammudaiya kumaaranum nammudaiya
karththarumaayirukki’ra iyeasuki’risthuvudanea aikkiyamaayiruppatha’rku ungga'lai azhaiththa theavan
u'nmaiyu'l'lavar. (1korinthiyar 1:9)
சகோதரரே,
நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப்
பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும்
ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று,
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே
உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். (1கொரிந்தியர்
1:10)
sagoathararea, neengga'lellaarum orea kaariyaththaip peasavum, pirivinaiga'lillaamal
eagamanathum eagayoasanaiyum u'l'lavarga'laaych seerporunthiyirukkavum vea'ndumen’ru, nammudaiya karththaraagiya iyeasuki’risthuvin naamaththinaalea ungga'lukkup buththisollugi’rean. (1korinthiyar
1:10)
ஏனெனில்,
என் சகோதரரே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று
குலோவேயாளின் வீட்டாரால் உங்களைக்குறித்து எனக்கு
அறிவிக்கப்பட்டது. (1கொரிந்தியர் 1:11)
eanenil, en sagoathararea, ungga'lukku'l'lea
vaakkuvaathangga'l u'nden’ru kuloaveayaa'lin veettaaraal ungga'laikku’riththu enakku a’rivikkappattathu. (1korinthiyar
1:11)
உங்களில்
சிலர்: நான் பவுலைச்
சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச்
சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச்
சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச்
சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்.
(1கொரிந்தியர் 1:12)
ungga'lil silar: naan pavulaich searnthavanen’rum, naan appolloavaich searnthavanen’rum, naan keapaavaich searnthavanen’rum, naan ki’risthuvaich searnthavanen’rum sollugi’rapadiyaal, naan ippadich sollugi’rean. (1korinthiyar 1:12)
கிறிஸ்து
பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச்
சிலுவையிலறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா
ஞானஸ்நானம் பெற்றீர்கள்? (1கொரிந்தியர்
1:13)
ki’risthu pirinthirukki’raaraa? pavulaa ungga'lukkaagach siluvaiyila’raiyappattaan? pavulin naamaththinaaleayaa gnaanasnaanam
pet’reerga'l? (1korinthiyar 1:13)
என் நாமத்தினாலே ஞானஸ்நானங்
கொடுத்தேனென்று ஒருவனும் சொல்லாதபடிக்கு, (1கொரிந்தியர்
1:14)
en naamaththinaalea gnaanasnaanang koduththeanen’ru oruvanum sollaathapadikku, (1korinthiyar 1:14)
நான் கிறிஸ்புவுக்கும் காயுவுக்குமேயன்றி, உங்களில்
வேறொருவனுக்கும் ஞானஸ்நானங் கொடுக்கவில்லை; இதற்காகத்
தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். (1கொரிந்தியர்
1:15)
naan ki’rispuvukkum
kaayuvukkumeayan’ri, ungga'lil vea’roruvanukkum
gnaanasnaanang kodukkavillai; itha’rkaagath theavanai
sthoaththirikki’rean. (1korinthiyar
1:15)
ஸ்தேவானுடைய
வீட்டாருக்கும் நான் ஞானஸ்நானங்
கொடுத்ததுண்டு. இதுவுமல்லாமல் இன்னும்
யாருக்காவது நான் ஞானஸ்நானங்
கொடுத்தேனோ இல்லையோ அறியேன்.
(1கொரிந்தியர் 1:16)
stheavaanudaiya veettaarukkum
naan gnaanasnaanang koduththathu'ndu. ithuvumallaamal innum yaarukkaavathu naan gnaanasnaanang koduththeanoa
illaiyoa a’riyean. (1korinthiyar 1:16)
ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி
கிறிஸ்து என்னை அனுப்பவில்லை;
சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்;
கிறிஸ்துவின் சிலுவை வீணாய்ப்போகாதபடிக்கு, சாதுரிய
ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார்.
(1கொரிந்தியர் 1:17)
gnaanasnaanaththaik
kodukkumpadi ki’risthu ennai anuppavillai;
suviseashaththaip
pirasanggikkavea
anuppinaar; ki’risthuvin
siluvai vee'naayppoagaathapadikku, saathuriya
gnaanamillaamal pirasanggikkavea anuppinaar. (1korinthiyar
1:17)
சிலுவையைப்பற்றிய உபதேசம்
கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ
அது தேவபெலனாயிருக்கிறது. (1கொரிந்தியர்
1:18)
siluvaiyaippat’riya ubatheasam kettuppoagi’ravarga'lukkup paiththiyamaayirukki’rathu, iradchikkappadugi’ra namakkoa athu theavabelanaayirukki’rathu. (1korinthiyar 1:18)
அந்தப்படி
ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை
அவமாக்குவேன் என்று எழுதியிருக்கிறது. (1கொரிந்தியர்
1:19)
anthappadi gnaaniga'ludaiya
gnaanaththai naan azhiththu,
buththisaaliga'ludaiya buththiyai
avamaakkuvean en’ru ezhuthiyirukki’rathu. (1korinthiyar 1:19)
ஞானி எங்கே? வேதபாரகன்
எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே?
இவ்வுலகத்தின் ஞானத்தைத் தேவன் பைத்தியமாக்கவில்லையா? (1கொரிந்தியர்
1:20)
gnaani enggea? veathapaaragan enggea? ippirapagnchath tharkkasaasthiri
enggea? ivvulagaththin gnaanaththaith theavan
paiththiyamaakkavillaiyaa? (1korinthiyar 1:20)
எப்படியெனில்,
தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத்
தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை
இரட்சிக்கத் தேவனுக்குப் பிரியமாயிற்று. (1கொரிந்தியர்
1:21)
eppadiyenil, theavagnaanaththukkeat’rapadi ulagamaanathu
suyagnaanaththinaalea theavanai
a’riyaathirukkaiyil, paiththiyamaagath thoan’rugi’ra pirasanggaththinaalea visuvaasiga'lai iradchikkath theavanukkup piriyamaayit’ru. (1korinthiyar 1:21)
யூதர்கள்
அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர்
ஞானத்தைத் தேடுகிறார்கள்; (1கொரிந்தியர்
1:22)
yootharga'l adaiyaa'laththaik keadki’raarga'l, kireakkar
gnaanaththaith theadugi’raarga'l; (1korinthiyar 1:22)
நாங்களோ
சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்
பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு
இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும்
இருக்கிறார். (1கொரிந்தியர் 1:23)
naangga'loa siluvaiyil a’raiyappatta ki’risthuvaip pirasanggikki’roam; avar yootharukku ida’ralaayum kireakkarukkup paiththiyamaayum irukki’raar. (1korinthiyar 1:23)
ஆகிலும்
யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள்
அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து
தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார். (1கொரிந்தியர்
1:24)
aagilum yootharaanaalum kireakkaraanaalum evarga'l azhaikkappattirukki’raarga'loa avarga'lukkuk ki’risthu theavabelanum theavagnaanamumaayirukki’raar. (1korinthiyar 1:24)
இந்தப்படி,
தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது
மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவனுடைய
பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய
பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது. (1கொரிந்தியர்
1:25)
inthappadi, theavanudaiya paiththiyam
ennappaduvathu manusharudaiya gnaanaththilum athiga gnaanamaayirukki’rathu; theavanudaiya balaveenam ennappaduvathu manusharudaiya balaththilum athiga balamaayirukki’rathu. (1korinthiyar 1:25)
எப்படியெனில்,
சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட
அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள்
அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை,
பிரபுக்கள் அநேகரில்லை. (1கொரிந்தியர்
1:26)
eppadiyenil, sagoathararea,
neengga'l azhaikkappatta azhaippaip paarungga'l; maamsaththinpadi
gnaaniga'l aneagarillai, vallavarga'l aneagarillai,
pirabukka'l aneagarillai. (1korinthiyar 1:26)
ஞானிகளை
வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில்
பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை
வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில்
பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். (1கொரிந்தியர்
1:27)
gnaaniga'lai vedkappaduththumpadi theavan
ulagaththil paiththiyamaanavaiga'laith
therinthuko'ndaar; balamu'l'lavaiga'lai vedkappaduththumpadi theavan
ulagaththil balaveenamaanavaiga'laith therinthuko'ndaar. (1korinthiyar
1:27)
உள்ளவைகளை
அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய்
எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். (1கொரிந்தியர்
1:28)
u'l'lavaiga'lai avamaakkumpadi, ulagaththin izhivaanavaiga'laiyum,
a’rpamaay e'n'nappattavaiga'laiyum, illaathavaiga'laiyum, theavan therinthuko'ndaar. (1korinthiyar
1:28)
மாம்சமான
எவனும் தேவனுக்கு முன்பாகப்
பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்.
(1கொரிந்தியர் 1:29)
maamsamaana evanum
theavanukku munbaagap perumaipaaraattaathapadikku
appadich seythaar. (1korinthiyar 1:29)
அந்தப்படி,
நீங்கள் அவராலே கிறிஸ்து
இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக, (1கொரிந்தியர்
1:30)
anthappadi, neengga'l avaraalea ki’risthu iyeasuvukkudpattirukki’reerga'l. ezhuthiyirukki’rapadi meanmaipaaraattugi’ravan karththaraikku’riththea
meanmaipaaraattaththakkathaaga, (1korinthiyar 1:30)
அவரே தேவனால் நமக்கு
ஞானமும் நீதியும் பரிசுத்தமும்
மீட்புமானார். (1கொரிந்தியர் 1:31)
avarea theavanaal namakku
gnaanamum neethiyum parisuththamum meedpumaanaar. (1korinthiyar
1:31)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!