அவ்வேளையிலே
சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து:
பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டார்கள். (மத்தேயு
18:1)
avvea'laiyilea seesharga'l iyeasuvinidaththil
vanthu: paraloagaraajyaththil
evan periyavanaayiruppaan en'ru keattaarga'l. (maththeayu 18:1)
இயேசு ஒரு பிள்ளையைத்
தம்மிடத்தில் அழைத்து, அதை அவர்கள் நடுவே நிறுத்தி: (மத்தேயு
18:2)
iyeasu oru pi'l'laiyaith thammidaththil azhaiththu,
athai avarga'l naduvea ni'ruththi: (maththeayu 18:2)
நீங்கள்
மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால்,
பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று,
மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(மத்தேயு 18:3)
neengga'l mananthirumbip pi'l'laiga'laippoal
aagaavittaal, paraloagaraajyaththil
piraveasikkamaatteerga'l en'ru, meyyaagavea ungga'lukkuch sollugi'rean. (maththeayu
18:3)
ஆகையால்
இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத்
தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான். (மத்தேயு
18:4)
aagaiyaal inthap
pi'l'laiyaippoalath thannaith thaazhththugi'ravan evanoa, avanea
paraloagaraajyaththil periyavanaayiruppaan. (maththeayu
18:4)
இப்படிப்பட்ட
ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான். (மத்தேயு
18:5)
ippadippatta oru pi'l'laiyai en naamaththinimiththam eat’rukko'l'lugi'ravan ennai eat’rukko'l'lugi'raan. (maththeayu 18:5)
என்னிடத்தில்
விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில்
ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில்
ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே
அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு
நலமாயிருக்கும். (மத்தேயு 18:6)
ennidaththil visuvaasamaayirukki'ra inthach si'riyaril oruvanukku ida'ral u'ndaakkugi'ravan evanoa, avanudaiya
kazhuththil eanthirakkallaik katti, samuththiraththin aazhaththilea avanai
amizhththugi'rathu avanukku
nalamaayirukkum. (maththeayu 18:6)
இடறல்களினிமித்தம் உலகத்துக்கு
ஐயோ, இடறல்கள் வருவது
அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு
ஐயோ! (மத்தேயு 18:7)
ida'ralga'linimiththam
ulagaththukku aiyoa,
ida'ralga'l varuvathu avasiyam, aanaalum entha manushanaal ida'ral varugi'rathoa, avanukku aiyoa!
(maththeayu 18:7)
உன் கையாவது உன் காலாவது உனக்கு
இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு;
நீ இரண்டு கையுடையவனாய்,
அல்லது இரண்டு காலுடையவனாய்
நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய்,
அல்லது ஊனனாய், நித்திய
ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு
நலமாயிருக்கும். (மத்தேயு 18:8)
un kaiyaavathu un kaalaavathu unakku
ida'ral u'ndaakkinaal, athaith
tha'riththu e'rinthupoadu; nee ira'ndu
kaiyudaiyavanaay, allathu ira'ndu
kaaludaiyavanaay niththiya akkiniyilea
tha'l'lappaduvathaippaarkkilum, sappaa'niyaay,
allathu oonanaay, niththiya
jeevanukku'l piraveasippathu
unakku nalamaayirukkum. (maththeayu
18:8)
உன் கண் உனக்கு
இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு;
இரண்டு கண்ணுடையவனாய் எரிநரகத்தில்
தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் ஜீவனுக்குள்
பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். (மத்தேயு
18:9)
un ka'n unakku
ida'ral u'ndaakkinaal, athaip
pidunggi e'rinthupoadu; ira'ndu ka'n'nudaiyavanaay erinaragaththil tha'l'lappaduvathaippaarkkilum, ot'raikka'n'nanaay jeevanukku'l
piraveasippathu unakku
nalamaayirukkum. (maththeayu 18:9)
இந்தச்
சிறியரில் ஒருவனையும் அற்பமாய்
எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள்
பரலோகத்திலே என் பரமபிதாவின்
சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(மத்தேயு 18:10)
inthach si'riyaril oruvanaiyum a’rpamaay e'n'naathapadikku echcharikkaiyaayirungga'l; avarga'lukkuriya theavathootharga'l paraloagaththilea
en paramapithaavin samugaththai eppoathum
tharisikki'raarga'l en'ru ungga'lukkuch sollugi'rean. (maththeayu
18:10)
மனுஷகுமாரன்
கெட்டுப்போனதை ரட்சிக்க வந்தார்.
(மத்தேயு 18:11)
manushakumaaran kettuppoanathai
radchikka vanthaar.
(maththeayu 18:11)
உங்களுக்கு
எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில்
ஒன்று சிதறிப்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும்
மலைகளில் விட்டுப் போய்ச்
சிதறிப்போனதைத் தேடாமலிருப்பானோ? (மத்தேயு
18:12)
ungga'lukku eppadith
thoan'rugi'rathu? oru manushanukku noo'ru aaduga'lirukka,
avaiga'lil on'ru sitha'rippoanaal, avan mat'rath tho'n'noot’ronbathu aaduga'laiyum
malaiga'lil vittup poaych sitha'rippoanathaith theadaamaliruppaanoa? (maththeayu
18:12)
அவன் அதைக் கண்டுபிடித்தால், சிதறிப்போகாத
தொண்ணூற்றொன்பது ஆடுகளைக்குறித்துச் சந்தோஷப்படுகிறதைப்பார்க்கிலும், அதைக்குறித்து
அதிகமாய்ச் சந்தோஷப்படுவான் என்று,
மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(மத்தேயு 18:13)
avan athaik ka'ndupidiththaal, sitha'rippoagaatha tho'n'noot'ronbathu aaduga'laikku'riththuch santhoashappadugi'rathaippaarkkilum, athaikku'riththu athigamaaych santhoashappaduvaan en'ru, meyyaagavea ungga'lukkuch sollugi'rean. (maththeayu
18:13)
இவ்விதமாக,
இந்தச் சிறியரில் ஒருவனாகிலும்
கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள்
பிதாவின் சித்தமல்ல. (மத்தேயு
18:14)
ivvithamaaga, inthach si'riyaril oruvanaagilum kettuppoavathu
paraloagaththilirukki'ra ungga'l pithaavin siththamalla. (maththeayu 18:14)
உன் சகோதரன் உனக்கு
விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில்
போய், நீயும் அவனும்
தனித்திருக்கையில், அவன் குற்றத்தை
அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய். (மத்தேயு
18:15)
un sagoatharan
unakku viroathamaagak kut'ragnseythaal, avanidaththil poay, neeyum avanum
thaniththirukkaiyil, avan kut'raththai avanukku u'narththu;
avan unakkuch sevikoduththaal, un sagoatharanai
aathaayappaduththikko'ndaay. (maththeayu 18:15)
அவன் செவிகொடாமற்போனால், இரண்டு
மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே
சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை
உன்னுடனே கூட்டிக்கொண்டு போ. (மத்தேயு 18:16)
avan sevikodaama’rpoanaal, ira'ndu moon'ru saadchiga'ludaiya vaakkinaalea
sanggathiga'lellaam nilaivarappadumpadi, ira'ndoruvarai unnudanea
koottikko'ndu poa. (maththeayu 18:16)
அவர்களுக்கும்
அவன் செவிகொடாமற்போனால், அதைச் சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும்
செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு
அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக.
(மத்தேயு 18:17)
avarga'lukkum avan sevikodaama’rpoanaal, athaich sabaikkuth theriyappaduththu; sabaikkum sevikodaathiruppaanaanaal, avan unakku agngnaaniyaippoalavum aayakkaaranaippoalavum iruppaanaaga. (maththeayu 18:17)
பூலோகத்திலே
நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ
அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே
நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள்
பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று,
மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(மத்தேயு 18:18)
booloagaththilea
neengga'l evaiga'laik kattuveerga'loa avaiga'l paraloagaththilum
kattappattirukkum;
booloagaththilea
neengga'l evaiga'laik kattavizhppeerga'loa avaiga'l paraloagaththilum
kattavizhkkappattirukkum
en'ru, meyyaagavea ungga'lukkuch sollugi'rean. (maththeayu
18:18)
அல்லாமலும்,
உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக்
காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே
ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற
என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும்
என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(மத்தேயு 18:19)
allaamalum, ungga'lil ira'ndu pear thaangga'l vea'ndikko'l'lappoagi'ra enthak kaariyaththaik ku'riththaagilum boomiyilea orumanappattirunthaal,
paraloagaththil irukki'ra en pithaavinaal
athu avarga'lukku
u'ndaagum en'ru ungga'lukkuch sollugi'rean. (maththeayu
18:19)
ஏனெனில்,
இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே
இருக்கிறேன் என்றார். (மத்தேயு
18:20)
eanenil, ira'ndupearaavathu moon'rupearaavathu en naamaththinaalea enggea koodiyirukki'raarga'loa, anggea avarga'l naduvilea irukki'rean en'raar. (maththeayu 18:20)
அப்பொழுது,
பேதுரு அவரிடத்தில் வந்து:
ஆண்டவரே, என் சகோதரன்
எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து
வந்தால், நான் எத்தனைதரம்
மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான். (மத்தேயு
18:21)
appozhuthu, peathuru avaridaththil
vanthu: aa'ndavarea, en sagoatharan
enakku viroathamaayk kut'ragnseythu vanthaal,
naan eththanaitharam mannikkavea'ndum? eazhutharamattumoa en'ru keattaan. (maththeayu 18:21)
அதற்கு
இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.
(மத்தேயு 18:22)
atha’rku iyeasu: eazhutharamaaththiram alla, eazhezhubathutharamattum en'ru unakkuch sollugi'rean. (maththeayu 18:22)
எப்படியெனில்,
பரலோகராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப்
பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு
ஒப்பாயிருக்கிறது. (மத்தேயு 18:23)
eppadiyenil, paraloagaraajyam
than oozhiyakkaararidaththil ka'nakkup
paarkkavea'ndumen'riruntha oru raajaavukku oppaayirukki'rathu. (maththeayu 18:23)
அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது,
பதினாயிரம் தாலந்து கடன் பட்டவன் ஒருவனை
அவனுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். (மத்தேயு
18:24)
avan ka'nakkuppaarkkath thodangginapoathu, pathinaayiram thaalanthu
kadan pattavan oruvanai avanukku
munbaagak ko'nduvanthaarga'l. (maththeayu 18:24)
கடனைத்தீர்க்க
அவனுக்கு நிர்வாகம் இல்லாதபடியால், அவனுடைய
ஆண்டவன் அவனையும் அவன் பெண்ஜாதி பிள்ளைகளையும், அவனுக்கு
உண்டான எல்லாவற்றையும் விற்று,
கடனைத் தீர்க்கும்படிக் கட்டளையிட்டான். (மத்தேயு
18:25)
kadanaiththeerkka avanukku nirvaagam illaathapadiyaal, avanudaiya
aa'ndavan avanaiyum avan pe'njaathi pi'l'laiga'laiyum, avanukku u'ndaana
ellaavat'raiyum vit'ru, kadanaith theerkkumpadik katta'laiyittaan. (maththeayu
18:25)
அப்பொழுது,
அந்த ஊழியக்காரன் தாழ விழுந்து, வணங்கி:
ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக்
கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான்.
(மத்தேயு 18:26)
appozhuthu, antha oozhiyakkaaran thaazha
vizhunthu, va'nanggi: aa'ndavanea! ennidaththil
po'rumaiyaayirum, ellaavat'raiyum umakkuk koduththuth
theerkki'rean en'raan. (maththeayu 18:26)
அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன்
மனதிரங்கி, அவனை விடுதலைபண்ணி,
கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான். (மத்தேயு
18:27)
antha oozhiyakkaaranudaiya aa'ndavan
manathiranggi, avanai
viduthalaipa'n'ni, kadanaiyum avanukku
manniththuvittaan. (maththeayu
18:27)
அப்படியிருக்க, அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப்போகையில், தன்னிடத்தில்
நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டிருந்தவனாகிய தன் உடன்வேலைக்காரரில் ஒருவனைக்
கண்டு, அவனைப் பிடித்து,
தொண்டையை நெரித்து: நீ பட்ட கடனை எனக்குக் கொடுத்துத்
தீர்க்கவேண்டும் என்றான். (மத்தேயு
18:28)
appadiyirukka, antha oozhiyakkaaran pu'rappattuppoagaiyil, thannidaththil noo'ru ve'l'lippa'nam kadanpattirunthavanaagiya than udanvealaikkaararil oruvanaik
ka'ndu, avanaip pidiththu,
tho'ndaiyai neriththu: nee patta kadanai enakkuk
koduththuth theerkkavea'ndum en'raan. (maththeayu 18:28)
அப்பொழுது
அவனுடைய உடன்வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து:
என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக்
கொடுத்துத் தீர்க்கிறேன் என்று,
அவனை வேண்டிக்கொண்டான். (மத்தேயு
18:29)
appozhuthu avanudaiya udanvealaikkaaran avan kaalilea vizhunthu:
ennidaththil po'rumaiyaayirum,
ellaavat'raiyum umakkuk
koduththuth theerkki'rean en'ru, avanai vea'ndikko'ndaan. (maththeayu
18:29)
அவனோ சம்மதியாமல், போய், அவன் பட்ட கடனைக் கொடுத்துத்
தீர்க்குமளவும் அவனைக் காவலில்
போடுவித்தான். (மத்தேயு 18:30)
avanoa sammathiyaamal,
poay, avan patta kadanaik koduththuth
theerkkuma'lavum avanaik kaavalil
poaduviththaan. (maththeayu 18:30)
நடந்ததை
அவனுடைய உடன்வேலைக்காரர் கண்டு,
மிகவும் துக்கப்பட்டு, ஆண்டவனிடத்தில் வந்து,
நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள். (மத்தேயு
18:31)
nadanthathai avanudaiya udanvealaikkaarar ka'ndu,
migavum thukkappattu, aa'ndavanidaththil vanthu,
nadanthathaiyellaam a'riviththaarga'l. (maththeayu 18:31)
அப்பொழுது,
அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத
ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக்
கடன் முழுவதையும் உனக்கு
மன்னித்துவிட்டேன். (மத்தேயு 18:32)
appozhuthu, avanudaiya aa'ndavan
avanai azhaippiththu: pollaatha
oozhiyakkaaranea, nee ennai vea'ndikko'ndapadiyinaal anthak
kadan muzhuvathaiyum unakku
manniththuvittean. (maththeayu
18:32)
நான் உனக்கு இரங்கினதுபோல,
நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ
என்று சொல்லி, (மத்தேயு
18:33)
naan unakku irangginathupoala, neeyum un udanvealaikkaaranukku iranggavea'ndaamoa en'ru solli, (maththeayu 18:33)
அவனுடைய
ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம்
தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான். (மத்தேயு
18:34)
avanudaiya aa'ndavan koabamadainthu, avan patta kadanaiyellaam thanakkuk
koduththuth theerkkuma'lavum ubaathikki'ravarga'lidaththil
avanai oppukkoduththaan. (maththeayu
18:34)
நீங்களும்
அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய்
மன்னியாமற்போனால், என் பரமபிதாவும்
உங்களுக்கு இப்படியே செய்வார்
என்றார். (மத்தேயு 18:35)
neengga'lum avanavan
than than sagoatharan seytha thappithangga'lai manappoorvamaay manniyaama’rpoanaal, en paramapithaavum ungga'lukku ippadiyea seyvaar en'raar. (maththeayu 18:35)
Correction(s) March 17, 2019 >>> Changed ottaikka'n'nanaay to ot'raikka'n'nanaay (Matthew 18:9)
ReplyDelete