இயேசு  இந்த  வசனங்களைச் 
சொல்லி  முடித்தபின்பு,  அவர்  கலிலேயாவை  விட்டு 
யோர்தானுக்கு  அக்கரையான  யூதேயாவின் 
எல்லைகளில்  வந்தார்.  (மத்தேயு 
19:1)
iyeasu  intha  vasanangga'laich  solli  mudiththapinbu,  avar  kalileayaavai 
vittu  yoarthaanukku 
akkaraiyaana  yootheayaavin  ellaiga'lil  vanthaar.  (maththeayu 
19:1)
திரளான 
ஜனங்கள்  அவருக்குப்  பின்சென்றார்கள்;  அவ்விடத்தில் 
அவர்களைச்  சொஸ்தமாக்கினார்.  (மத்தேயு 
19:2)
thira'laana  janangga'l  avarukkup  pinsen'raarga'l;  avvidaththil  avarga'laich  sosthamaakkinaar.  (maththeayu  19:2)
அப்பொழுது, 
பரிசேயர்  அவரைச்  சோதிக்கவேண்டுமென்று  அவரிடத்தில் 
வந்து:  புருஷனானவன்  தன்  மனைவியை  எந்த  முகாந்தரத்தினாலாகிலும்  தள்ளிவிடுவது 
நியாயமா  என்று  கேட்டார்கள். 
(மத்தேயு  19:3)
appozhuthu,  pariseayar  avaraich  soathikkavea'ndumen'ru  avaridaththil  vanthu: 
purushanaanavan  than  manaiviyai 
entha  mugaantharaththinaalaagilum  tha'l'lividuvathu  niyaayamaa 
en'ru  keattaarga'l.  (maththeayu 
19:3)
அவர்களுக்கு 
அவர்  பிரதியுத்தரமாக:  ஆதியிலே 
மனுஷரை  உண்டாக்கினவர்  அவர்களை 
ஆணும்  பெண்ணுமாக  உண்டாக்கினார் 
என்பதையும்,  (மத்தேயு  19:4)
avarga'lukku  avar  pirathiyuththaramaaga:  aathiyilea  manusharai 
u'ndaakkinavar  avarga'lai  aa'num  pe'n'numaaga  u'ndaakkinaar  enbathaiyum,  (maththeayu  19:4)
இதினிமித்தம் 
புருஷனானவன்  தன்  தகப்பனையும் 
தாயையும்  விட்டுத்  தன்  மனைவியோடே  இசைந்திருப்பான்;  அவர்கள் 
இருவரும்  ஒரே  மாம்சமாயிருப்பார்கள்  என்று  அவர்  சொன்னதையும், 
நீங்கள்  வாசிக்கவில்லையா?  (மத்தேயு 
19:5)
ithinimiththam  purushanaanavan  than  thagappanaiyum 
thaayaiyum  vittuth  than  manaiviyoadea 
isainthiruppaan;  avarga'l  iruvarum  orea  maamsamaayiruppaarga'l  en'ru  avar  sonnathaiyum,  neengga'l  vaasikkavillaiyaa? 
(maththeayu  19:5)
இப்படி 
இருக்கிறபடியினால்,  அவர்கள்  இருவராயிராமல்,  ஒரே  மாம்சமாயிருக்கிறார்கள்;  ஆகையால், 
தேவன்  இணைத்ததை  மனுஷன் 
பிரிக்காதிருக்கக்கடவன்  என்றார்.  (மத்தேயு 
19:6)
ippadi  irukki'rapadiyinaal, 
avarga'l  iruvaraayiraamal,  orea  maamsamaayirukki'raarga'l;  aagaiyaal,  theavan  i'naiththathai  manushan 
pirikkaathirukkakkadavan  en'raar.  (maththeayu  19:6)
அதற்கு 
அவர்கள்:  அப்படியானால்,  தள்ளுதற்சீட்டைக்  கொடுத்து, 
அவளைத்  தள்ளிவிடலாமென்று  மோசே  ஏன்  கட்டளையிட்டார்  என்றார்கள். 
(மத்தேயு  19:7)
atha’rku  avarga'l:  appadiyaanaal,  tha'l'lutha’rseettaik  koduththu,  ava'laith 
tha'l'lividalaamen'ru  moasea  ean  katta'laiyittaar  en'raarga'l.  (maththeayu 
19:7)
அதற்கு 
அவர்:  உங்கள்  மனைவிகளைத் 
தள்ளிவிடலாமென்று  உங்கள்  இருதயகடினத்தினிமித்தம்  மோசே  உங்களுக்கு  இடங்கொடுத்தார்;  ஆதிமுதலாய் 
அப்படியிருக்கவில்லை.  (மத்தேயு  19:8)
atha’rku  avar:  ungga'l  manaiviga'laith 
tha'l'lividalaamen'ru  ungga'l  iruthayakadinaththinimiththam  moasea  ungga'lukku 
idangkoduththaar;  aathimuthalaay  appadiyirukkavillai.  (maththeayu 
19:8)
ஆதலால், 
எவனாகிலும்  தன்  மனைவி  வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி,  அவளைத் 
தள்ளிவிட்டு  வேறொருத்தியை  விவாகம்பண்ணினால்,  அவன்  விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்;  தள்ளிவிடப்பட்டவளை  விவாகம்பண்ணுகிறவனும்  விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன் 
என்றார்.  (மத்தேயு  19:9)
aathalaal,  evanaagilum  than  manaivi 
veasiththanagnseythathinimiththameayan'ri,  ava'laith  tha'l'livittu  vea'roruththiyai 
vivaagampa'n'ninaal,  avan  vibasaaragnseygi'ravanaayiruppaan;  tha'l'lividappattava'lai  vivaagampa'n'nugi'ravanum  vibasaaragnseygi'ravanaayiruppaan  en'ru  ungga'lukkuch  sollugi'rean  en'raar.  (maththeayu  19:9)
அவருடைய 
சீஷர்கள்  அவரை  நோக்கி: 
மனைவியைப்பற்றிப்  புருஷனுடைய  காரியம் 
இப்படியிருந்தால்,  விவாகம்பண்ணுகிறது  நல்லதல்ல 
என்றார்கள்.  (மத்தேயு  19:10)
avarudaiya  seesharga'l  avarai  noakki: 
manaiviyaippat’rip  purushanudaiya  kaariyam 
ippadiyirunthaal,  vivaagampa'n'nugi'rathu  nallathalla  en'raarga'l.  (maththeayu 
19:10)
அதற்கு 
அவர்:  வரம்பெற்றவர்களே  தவிர  மற்றவர்கள்  இந்த  வசனத்தை  ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.  (மத்தேயு 
19:11)
atha’rku  avar:  varampet’ravarga'lea  thavira  mat'ravarga'l  intha  vasanaththai 
eat’rukko'l'lamaattaarga'l.  (maththeayu  19:11)
தாயின் 
வயிற்றிலிருந்து  அண்ணகர்களாய்ப்  பிறந்தவர்களும்  உண்டு; 
மனுஷர்களால்  அண்ணகர்களாக்கப்பட்டவர்களும்  உண்டு; 
பரலோகராஜ்யத்தினிமித்தம்  தங்களை  அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும்  உண்டு; 
இதை  ஏற்றுக்கொள்ள  வல்லவன் 
ஏற்றுக்கொள்ளக்கடவன்  என்றார்.  (மத்தேயு 
19:12)
thaayin  vayit'rilirunthu 
a'n'nagarga'laayp 
pi'ranthavarga'lum  u'ndu;  manusharga'laal  a'n'nagarga'laakkappattavarga'lum  u'ndu;  paraloagaraajyaththinimiththam  thangga'lai  a'n'nagarga'laakkikko'ndavarga'lum  u'ndu; 
ithai  eat'rukko'l'la 
vallavan  eat'rukko'l'lakkadavan  en'raar.  (maththeayu  19:12)
அப்பொழுது, 
சிறு  பிள்ளைகளின்மேல்  அவர்  கைகளை  வைத்து 
ஜெபம்பண்ணும்படிக்கு  அவர்களை  அவரிடத்தில் 
கொண்டுவந்தார்கள்;  கொண்டுவந்தவர்களைச்  சீஷர்கள் 
அதட்டினார்கள்.  (மத்தேயு  19:13)
appozhuthu,  si'ru  pi'l'laiga'linmeal 
avar  kaiga'lai  vaiththu  jebampa'n'numpadikku  avarga'lai  avaridaththil  ko'nduvanthaarga'l;  ko'nduvanthavarga'laich  seesharga'l  athattinaarga'l.  (maththeayu 
19:13)
இயேசுவோ: 
சிறு  பிள்ளைகள்  என்னிடத்தில் 
வருகிறதற்கு  இடங்கொடுங்கள்;  அவர்களைத் 
தடைபண்ணாதிருங்கள்;  பரலோகராஜ்யம்  அப்படிப்பட்டவர்களுடையது  என்று  சொல்லி,  (மத்தேயு 
19:14)
iyeasuvoa:  si'ru  pi'l'laiga'l  ennidaththil  varugi'ratha’rku  idangkodungga'l;  avarga'laith 
thadaipa'n'naathirungga'l;  paraloagaraajyam  appadippattavarga'ludaiyathu  en'ru  solli,  (maththeayu  19:14)
அவர்கள்மேல் 
கைகளை  வைத்து,  பின்பு 
அவ்விடம்விட்டுப்  புறப்பட்டுப்போனார்.  (மத்தேயு 
19:15)
avarga'lmeal  kaiga'lai  vaiththu,  pinbu  avvidamvittup  pu'rappattuppoanaar.  (maththeayu  19:15)
அப்பொழுது 
ஒருவன்  வந்து,  அவரை  நோக்கி:  நல்ல  போதகரே,  நித்தியஜீவனை 
அடைவதற்கு  நான்  எந்த  நன்மையைச்  செய்யவேண்டும் 
என்று  கேட்டான்.  (மத்தேயு 
19:16)
appozhuthu  oruvan  vanthu, 
avarai  noakki:  nalla  poathagarea,  niththiyajeevanai  adaivatha’rku  naan  entha  nanmaiyaich  seyyavea'ndum 
en'ru  keattaan.  (maththeayu  19:16)
அதற்கு 
அவர்:  நீ  என்னை  நல்லவன்  என்று  சொல்வானேன்?  தேவன்  ஒருவர்  தவிர  நல்லவன்  ஒருவனும் 
இல்லையே;  நீ  ஜீவனில் 
பிரவேசிக்க  விரும்பினால்  கற்பனைகளைக் 
கைக்கொள்  என்றார்.  (மத்தேயு 
19:17)
atha’rku  avar:  nee  ennai  nallavan  en'ru  solvaanean?  theavan  oruvar 
thavira  nallavan  oruvanum 
illaiyea;  nee  jeevanil 
piraveasikka  virumbinaal  ka’rpanaiga'laik  kaikko'l  en'raar.  (maththeayu  19:17)
அவன்  அவரை  நோக்கி: 
எவைகளை  என்று  கேட்டான். 
அதற்கு  இயேசு:  கொலை  செய்யாதிருப்பாயாக,  விபசாரஞ் 
செய்யாதிருப்பாயாக,  களவு  செய்யாதிருப்பாயாக,  பொய்ச்சாட்சி 
சொல்லாதிருப்பாயாக;  (மத்தேயு  19:18)
avan  avarai  noakki: 
evaiga'lai  en'ru  keattaan.  atha’rku  iyeasu:  kolai  seyyaathiruppaayaaga,  vibasaaragn  seyyaathiruppaayaaga,  ka'lavu  seyyaathiruppaayaaga,  poychsaadchi  sollaathiruppaayaaga;  (maththeayu 
19:18)
உன்  தகப்பனையும்  உன்  தாயையும்  கனம்பண்ணுவாயாக;  உன்னிடத்தில் 
நீ  அன்புகூருவதுபோலப்  பிறனிடத்திலும்  அன்புகூருவாயாக  என்பவைகளையே 
என்றார்.  (மத்தேயு  19:19)
un  thagappanaiyum 
un  thaayaiyum  kanampa'n'nuvaayaaga;  unnidaththil  nee  anbukooruvathupoalap  pi'ranidaththilum  anbukooruvaayaaga  enbavaiga'laiyea  en'raar.  (maththeayu  19:19)
அந்த  வாலிபன்  அவரை  நோக்கி:  இவைகளையெல்லாம்  என்  சிறுவயதுமுதல்  கைக்கொண்டிருக்கிறேன்;  இன்னும் 
என்னிடத்தில்  குறைவு  என்ன  என்றான்.  (மத்தேயு 
19:20)
antha  vaaliban  avarai  noakki: 
ivaiga'laiyellaam  en  si'ruvayathumuthal 
kaikko'ndirukki'rean;  innum  ennidaththil  ku'raivu  enna  en'raan.  (maththeayu  19:20)
அதற்கு 
இயேசு:  நீ  பூரண  சற்குணனாயிருக்க  விரும்பினால், 
போய்,  உனக்கு  உண்டானவைகளை 
விற்று,  தரித்திரருக்குக்  கொடு,  அப்பொழுது,  பரலோகத்தில் 
உனக்குப்  பொக்கிஷம்  உண்டாயிருக்கும்;  பின்பு 
என்னைப்  பின்பற்றிவா  என்றார். 
(மத்தேயு  19:21)
atha’rku  iyeasu:  nee  poora'na 
sa’rku'nanaayirukka  virumbinaal,  poay,  unakku 
u'ndaanavaiga'lai  vit'ru,  thariththirarukkuk  kodu,  appozhuthu,  paraloagaththil  unakkup  pokkisham 
u'ndaayirukkum;  pinbu  ennaip  pinpat'rivaa  en'raar.  (maththeayu  19:21)
அந்த  வாலிபன்  மிகுந்த 
ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால்,  இந்த  வார்த்தையைக் 
கேட்டபொழுது,  துக்கமடைந்தவனாய்ப்  போய்விட்டான். 
(மத்தேயு  19:22)
antha  vaaliban  miguntha  aasthiyu'l'lavanaayirunthapadiyaal,  intha  vaarththaiyaik  keattapozhuthu,  thukkamadainthavanaayp  poayvittaan.  (maththeayu  19:22)
அப்பொழுது, 
இயேசு  தம்முடைய  சீஷர்களை 
நோக்கி:  ஐசுவரியவான்  பரலோகராஜ்யத்தில்  பிரவேசிப்பது 
அரிதென்று,  மெய்யாகவே  உங்களுக்குச் 
சொல்லுகிறேன்.  (மத்தேயு  19:23)
appozhuthu,  iyeasu  thammudaiya  seesharga'lai  noakki: 
aisuvariyavaan  paraloagaraajyaththil  piraveasippathu 
arithen'ru,  meyyaagavea  ungga'lukkuch  sollugi'rean.  (maththeayu 
19:23)
மேலும் 
ஐசுவரியவான்  தேவனுடைய  ராஜ்யத்தில் 
பிரவேசிப்பதைப்பார்க்கிலும்,  ஒட்டகமானது  ஊசியின் 
காதிலே  நுழைவது  எளிதாயிருக்கும்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன் 
என்றார்.  (மத்தேயு  19:24)
mealum  aisuvariyavaan 
theavanudaiya  raajyaththil  piraveasippathaippaarkkilum,  ottagamaanathu 
oosiyin  kaathilea 
nuzhaivathu  e'lithaayirukkum  en'ru  ungga'lukkuch  sollugi'rean  en'raar.  (maththeayu  19:24)
அவருடைய 
சீஷர்கள்  அதைக்கேட்டு  மிகவும் 
ஆச்சரியப்பட்டு:  அப்படியானால்,  யார்  ரட்சிக்கப்படக்கூடும்  என்றார்கள். 
(மத்தேயு  19:25)
avarudaiya  seesharga'l  athaikkeattu  migavum  aachchariyappattu:  appadiyaanaal,  yaar  radchikkappadakkoodum  en'raarga'l.  (maththeayu 
19:25)
இயேசு, 
அவர்களைப்  பார்த்து:  மனுஷரால் 
இது  கூடாததுதான்;  தேவனாலே 
எல்லாம்  கூடும்  என்றார். 
(மத்தேயு  19:26)
iyeasu,  avarga'laip  paarththu:  manusharaal 
ithu  koodaathathuthaan;  theavanaalea 
ellaam  koodum  en'raar.  (maththeayu  19:26)
அப்பொழுது, 
பேதுரு  அவரை  நோக்கி: 
இதோ,  நாங்கள்  எல்லாவற்றையும்  விட்டு, 
உம்மைப்  பின்பற்றினோமே;  எங்களுக்கு 
என்ன  கிடைக்கும்  என்றான். 
(மத்தேயு  19:27)
appozhuthu,  peathuru  avarai 
noakki:  ithoa,  naangga'l  ellaavat’raiyum  vittu,  ummaip  pinpat'rinoamea;  engga'lukku 
enna  kidaikkum  en'raan.  (maththeayu  19:27)
அதற்கு 
இயேசு:  மறுஜென்மகாலத்திலே  மனுஷகுமாரன் 
தம்முடைய  மகிமையுள்ள  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருக்கும்போது,  என்னைப் 
பின்பற்றின  நீங்களும்,  இஸ்ரவேலின் 
பன்னிரண்டு  கோத்திரங்களையும்  நியாயந்தீர்க்கிறவர்களாகப்  பன்னிரண்டு 
சிங்காசனங்களின்மேல்  வீற்றிருப்பீர்கள்  என்று, 
மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன். 
(மத்தேயு  19:28)
atha’rku  iyeasu:  ma'rujenmakaalaththilea  manushakumaaran  thammudaiya 
magimaiyu'l'la  singgaasanaththinmeal  veet'rirukkumpoathu,  ennaip  pinpat'rina  neengga'lum,  isravealin  pannira'ndu 
koaththirangga'laiyum  niyaayantheerkki'ravarga'laagap  pannira'ndu 
singgaasanangga'linmeal  veet'riruppeerga'l  en'ru,  meyyaagavea  ungga'lukkuch  sollugi'rean.  (maththeayu 
19:28)
என்  நாமத்தினிமித்தம்  வீட்டையாவது, 
சகோதரரையாவது,  சகோதரிகளையாவது,  தகப்பனையாவது, 
தாயையாவது,  மனைவியையாவது,  பிள்ளைகளையாவது,  நிலங்களையாவது 
விட்டவன்  எவனோ,  அவன்  நூறத்தனையாய்  அடைந்து, 
நித்தியஜீவனையும்  சுதந்தரித்துக்கொள்ளுவான்;  (மத்தேயு 
19:29)
en  naamaththinimiththam  veettaiyaavathu,  sagoathararaiyaavathu,  sagoathariga'laiyaavathu,  thagappanaiyaavathu,  thaayaiyaavathu,  manaiviyaiyaavathu,  pi'l'laiga'laiyaavathu,  nilangga'laiyaavathu 
vittavan  evanoa, 
avan  noo'raththanaiyaay 
adainthu,  niththiyajeevanaiyum  suthanthariththukko'l'luvaan;  (maththeayu  19:29)
ஆகிலும், 
முந்தினோர்  அநேகர்  பிந்தினோராயும்,  பிந்தினோர் 
அநேகர்  முந்தினோராயும்  இருப்பார்கள் 
என்றார்.  (மத்தேயு  19:30)
aagilum,  munthinoar 
aneagar  pinthinoaraayum,  pinthinoar 
aneagar  munthinoaraayum  iruppaarga'l  en'raar.  (maththeayu  19:30)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!