அவ்வேளையிலே 
சீஷர்கள்  இயேசுவினிடத்தில்  வந்து: 
பரலோகராஜ்யத்தில்  எவன்  பெரியவனாயிருப்பான்  என்று  கேட்டார்கள்.  (மத்தேயு 
18:1)
avvea'laiyilea  seesharga'l  iyeasuvinidaththil 
vanthu:  paraloagaraajyaththil 
evan  periyavanaayiruppaan  en'ru  keattaarga'l.  (maththeayu  18:1)
இயேசு  ஒரு  பிள்ளையைத் 
தம்மிடத்தில்  அழைத்து,  அதை  அவர்கள்  நடுவே  நிறுத்தி:  (மத்தேயு 
18:2)
iyeasu  oru  pi'l'laiyaith  thammidaththil  azhaiththu, 
athai  avarga'l  naduvea  ni'ruththi:  (maththeayu  18:2)
நீங்கள் 
மனந்திரும்பிப்  பிள்ளைகளைப்போல்  ஆகாவிட்டால், 
பரலோகராஜ்யத்தில்  பிரவேசிக்கமாட்டீர்கள்  என்று, 
மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன். 
(மத்தேயு  18:3)
neengga'l  mananthirumbip  pi'l'laiga'laippoal 
aagaavittaal,  paraloagaraajyaththil 
piraveasikkamaatteerga'l  en'ru,  meyyaagavea  ungga'lukkuch  sollugi'rean.  (maththeayu 
18:3)
ஆகையால் 
இந்தப்  பிள்ளையைப்போலத்  தன்னைத் 
தாழ்த்துகிறவன்  எவனோ,  அவனே  பரலோகராஜ்யத்தில்  பெரியவனாயிருப்பான்.  (மத்தேயு 
18:4)
aagaiyaal  inthap 
pi'l'laiyaippoalath  thannaith  thaazhththugi'ravan  evanoa,  avanea 
paraloagaraajyaththil  periyavanaayiruppaan.  (maththeayu 
18:4)
இப்படிப்பட்ட 
ஒரு  பிள்ளையை  என்  நாமத்தினிமித்தம்  ஏற்றுக்கொள்ளுகிறவன்  என்னை  ஏற்றுக்கொள்ளுகிறான்.  (மத்தேயு 
18:5)
ippadippatta  oru  pi'l'laiyai  en  naamaththinimiththam  eat’rukko'l'lugi'ravan  ennai  eat’rukko'l'lugi'raan.  (maththeayu  18:5)
என்னிடத்தில் 
விசுவாசமாயிருக்கிற  இந்தச்  சிறியரில் 
ஒருவனுக்கு  இடறல்  உண்டாக்குகிறவன்  எவனோ,  அவனுடைய  கழுத்தில் 
ஏந்திரக்கல்லைக்  கட்டி,  சமுத்திரத்தின்  ஆழத்திலே 
அவனை  அமிழ்த்துகிறது  அவனுக்கு 
நலமாயிருக்கும்.  (மத்தேயு  18:6)
ennidaththil  visuvaasamaayirukki'ra  inthach  si'riyaril  oruvanukku  ida'ral  u'ndaakkugi'ravan  evanoa,  avanudaiya 
kazhuththil  eanthirakkallaik  katti,  samuththiraththin  aazhaththilea  avanai 
amizhththugi'rathu  avanukku 
nalamaayirukkum.  (maththeayu  18:6)
இடறல்களினிமித்தம்  உலகத்துக்கு 
ஐயோ,  இடறல்கள்  வருவது 
அவசியம்,  ஆனாலும்  எந்த  மனுஷனால்  இடறல்  வருகிறதோ,  அவனுக்கு 
ஐயோ!  (மத்தேயு  18:7)
ida'ralga'linimiththam 
ulagaththukku  aiyoa, 
ida'ralga'l  varuvathu  avasiyam,  aanaalum  entha  manushanaal  ida'ral  varugi'rathoa,  avanukku  aiyoa! 
(maththeayu  18:7)
உன்  கையாவது  உன்  காலாவது  உனக்கு 
இடறல்  உண்டாக்கினால்,  அதைத்  தறித்து  எறிந்துபோடு; 
நீ  இரண்டு  கையுடையவனாய், 
அல்லது  இரண்டு  காலுடையவனாய் 
நித்திய  அக்கினியிலே  தள்ளப்படுவதைப்பார்க்கிலும்,  சப்பாணியாய், 
அல்லது  ஊனனாய்,  நித்திய 
ஜீவனுக்குள்  பிரவேசிப்பது  உனக்கு 
நலமாயிருக்கும்.  (மத்தேயு  18:8)
un  kaiyaavathu  un  kaalaavathu  unakku 
ida'ral  u'ndaakkinaal,  athaith 
tha'riththu  e'rinthupoadu;  nee  ira'ndu 
kaiyudaiyavanaay,  allathu  ira'ndu 
kaaludaiyavanaay  niththiya  akkiniyilea 
tha'l'lappaduvathaippaarkkilum,  sappaa'niyaay, 
allathu  oonanaay,  niththiya 
jeevanukku'l  piraveasippathu 
unakku  nalamaayirukkum.  (maththeayu 
18:8)
உன்  கண்  உனக்கு 
இடறல்  உண்டாக்கினால்,  அதைப்  பிடுங்கி  எறிந்துபோடு; 
இரண்டு  கண்ணுடையவனாய்  எரிநரகத்தில் 
தள்ளப்படுவதைப்பார்க்கிலும்,  ஒற்றைக்கண்ணனாய்  ஜீவனுக்குள் 
பிரவேசிப்பது  உனக்கு  நலமாயிருக்கும்.  (மத்தேயு 
18:9)
un  ka'n  unakku 
ida'ral  u'ndaakkinaal,  athaip 
pidunggi  e'rinthupoadu;  ira'ndu  ka'n'nudaiyavanaay  erinaragaththil  tha'l'lappaduvathaippaarkkilum,  ot'raikka'n'nanaay  jeevanukku'l 
piraveasippathu  unakku 
nalamaayirukkum.  (maththeayu  18:9)
இந்தச் 
சிறியரில்  ஒருவனையும்  அற்பமாய் 
எண்ணாதபடிக்கு  எச்சரிக்கையாயிருங்கள்;  அவர்களுக்குரிய  தேவதூதர்கள் 
பரலோகத்திலே  என்  பரமபிதாவின் 
சமுகத்தை  எப்போதும்  தரிசிக்கிறார்கள்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன். 
(மத்தேயு  18:10)
inthach  si'riyaril  oruvanaiyum  a’rpamaay  e'n'naathapadikku  echcharikkaiyaayirungga'l;  avarga'lukkuriya  theavathootharga'l  paraloagaththilea 
en  paramapithaavin  samugaththai  eppoathum 
tharisikki'raarga'l  en'ru  ungga'lukkuch  sollugi'rean.  (maththeayu 
18:10)
மனுஷகுமாரன் 
கெட்டுப்போனதை  ரட்சிக்க  வந்தார். 
(மத்தேயு  18:11)
manushakumaaran  kettuppoanathai 
radchikka  vanthaar. 
(maththeayu  18:11)
உங்களுக்கு 
எப்படித்  தோன்றுகிறது?  ஒரு  மனுஷனுக்கு  நூறு  ஆடுகளிருக்க,  அவைகளில் 
ஒன்று  சிதறிப்போனால்,  அவன்  மற்றத்  தொண்ணூற்றொன்பது  ஆடுகளையும் 
மலைகளில்  விட்டுப்  போய்ச் 
சிதறிப்போனதைத்  தேடாமலிருப்பானோ?  (மத்தேயு 
18:12)
ungga'lukku  eppadith 
thoan'rugi'rathu?  oru  manushanukku  noo'ru  aaduga'lirukka, 
avaiga'lil  on'ru  sitha'rippoanaal,  avan  mat'rath  tho'n'noot’ronbathu  aaduga'laiyum 
malaiga'lil  vittup  poaych  sitha'rippoanathaith  theadaamaliruppaanoa?  (maththeayu 
18:12)
அவன்  அதைக்  கண்டுபிடித்தால்,  சிதறிப்போகாத 
தொண்ணூற்றொன்பது  ஆடுகளைக்குறித்துச்  சந்தோஷப்படுகிறதைப்பார்க்கிலும்,  அதைக்குறித்து 
அதிகமாய்ச்  சந்தோஷப்படுவான்  என்று, 
மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன். 
(மத்தேயு  18:13)
avan  athaik  ka'ndupidiththaal,  sitha'rippoagaatha  tho'n'noot'ronbathu  aaduga'laikku'riththuch  santhoashappadugi'rathaippaarkkilum,  athaikku'riththu  athigamaaych  santhoashappaduvaan  en'ru,  meyyaagavea  ungga'lukkuch  sollugi'rean.  (maththeayu 
18:13)
இவ்விதமாக, 
இந்தச்  சிறியரில்  ஒருவனாகிலும் 
கெட்டுப்போவது  பரலோகத்திலிருக்கிற  உங்கள் 
பிதாவின்  சித்தமல்ல.  (மத்தேயு 
18:14)
ivvithamaaga,  inthach  si'riyaril  oruvanaagilum  kettuppoavathu 
paraloagaththilirukki'ra  ungga'l  pithaavin  siththamalla.  (maththeayu  18:14)
உன்  சகோதரன்  உனக்கு 
விரோதமாகக்  குற்றஞ்செய்தால்,  அவனிடத்தில் 
போய்,  நீயும்  அவனும் 
தனித்திருக்கையில்,  அவன்  குற்றத்தை 
அவனுக்கு  உணர்த்து;  அவன்  உனக்குச்  செவிகொடுத்தால்,  உன்  சகோதரனை  ஆதாயப்படுத்திக்கொண்டாய்.  (மத்தேயு 
18:15)
un  sagoatharan 
unakku  viroathamaagak  kut'ragnseythaal,  avanidaththil  poay,  neeyum  avanum 
thaniththirukkaiyil,  avan  kut'raththai  avanukku  u'narththu; 
avan  unakkuch  sevikoduththaal,  un  sagoatharanai 
aathaayappaduththikko'ndaay.  (maththeayu  18:15)
அவன்  செவிகொடாமற்போனால்,  இரண்டு 
மூன்று  சாட்சிகளுடைய  வாக்கினாலே 
சங்கதிகளெல்லாம்  நிலைவரப்படும்படி,  இரண்டொருவரை 
உன்னுடனே  கூட்டிக்கொண்டு  போ.  (மத்தேயு  18:16)
avan  sevikodaama’rpoanaal,  ira'ndu  moon'ru  saadchiga'ludaiya  vaakkinaalea 
sanggathiga'lellaam  nilaivarappadumpadi,  ira'ndoruvarai  unnudanea 
koottikko'ndu  poa.  (maththeayu  18:16)
அவர்களுக்கும் 
அவன்  செவிகொடாமற்போனால்,  அதைச்  சபைக்குத்  தெரியப்படுத்து;  சபைக்கும் 
செவிகொடாதிருப்பானானால்,  அவன்  உனக்கு 
அஞ்ஞானியைப்போலவும்  ஆயக்காரனைப்போலவும்  இருப்பானாக. 
(மத்தேயு  18:17)
avarga'lukkum  avan  sevikodaama’rpoanaal,  athaich  sabaikkuth  theriyappaduththu;  sabaikkum  sevikodaathiruppaanaanaal,  avan  unakku  agngnaaniyaippoalavum  aayakkaaranaippoalavum  iruppaanaaga.  (maththeayu  18:17)
பூலோகத்திலே 
நீங்கள்  எவைகளைக்  கட்டுவீர்களோ 
அவைகள்  பரலோகத்திலும்  கட்டப்பட்டிருக்கும்;  பூலோகத்திலே 
நீங்கள்  எவைகளைக்  கட்டவிழ்ப்பீர்களோ  அவைகள் 
பரலோகத்திலும்  கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்  என்று, 
மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன். 
(மத்தேயு  18:18)
booloagaththilea 
neengga'l  evaiga'laik  kattuveerga'loa  avaiga'l  paraloagaththilum 
kattappattirukkum; 
booloagaththilea 
neengga'l  evaiga'laik  kattavizhppeerga'loa  avaiga'l  paraloagaththilum 
kattavizhkkappattirukkum 
en'ru,  meyyaagavea  ungga'lukkuch  sollugi'rean.  (maththeayu 
18:18)
அல்லாமலும், 
உங்களில்  இரண்டு  பேர்  தாங்கள்  வேண்டிக்கொள்ளப்போகிற  எந்தக் 
காரியத்தைக்  குறித்தாகிலும்  பூமியிலே 
ஒருமனப்பட்டிருந்தால்,  பரலோகத்தில்  இருக்கிற 
என்  பிதாவினால்  அது  அவர்களுக்கு  உண்டாகும் 
என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன். 
(மத்தேயு  18:19)
allaamalum,  ungga'lil  ira'ndu  pear  thaangga'l  vea'ndikko'l'lappoagi'ra  enthak  kaariyaththaik  ku'riththaagilum  boomiyilea  orumanappattirunthaal, 
paraloagaththil  irukki'ra  en  pithaavinaal 
athu  avarga'lukku 
u'ndaagum  en'ru  ungga'lukkuch  sollugi'rean.  (maththeayu 
18:19)
ஏனெனில், 
இரண்டுபேராவது  மூன்றுபேராவது  என்  நாமத்தினாலே  எங்கே  கூடியிருக்கிறார்களோ,  அங்கே  அவர்கள்  நடுவிலே 
இருக்கிறேன்  என்றார்.  (மத்தேயு 
18:20)
eanenil,  ira'ndupearaavathu  moon'rupearaavathu  en  naamaththinaalea  enggea  koodiyirukki'raarga'loa,  anggea  avarga'l  naduvilea  irukki'rean  en'raar.  (maththeayu  18:20)
அப்பொழுது, 
பேதுரு  அவரிடத்தில்  வந்து: 
ஆண்டவரே,  என்  சகோதரன் 
எனக்கு  விரோதமாய்க்  குற்றஞ்செய்து 
வந்தால்,  நான்  எத்தனைதரம் 
மன்னிக்கவேண்டும்?  ஏழுதரமட்டுமோ  என்று  கேட்டான்.  (மத்தேயு 
18:21)
appozhuthu,  peathuru  avaridaththil 
vanthu:  aa'ndavarea,  en  sagoatharan 
enakku  viroathamaayk  kut'ragnseythu  vanthaal, 
naan  eththanaitharam  mannikkavea'ndum?  eazhutharamattumoa  en'ru  keattaan.  (maththeayu  18:21)
அதற்கு 
இயேசு:  ஏழுதரமாத்திரம்  அல்ல,  ஏழெழுபதுதரமட்டும்  என்று  உனக்குச்  சொல்லுகிறேன். 
(மத்தேயு  18:22)
atha’rku  iyeasu:  eazhutharamaaththiram  alla,  eazhezhubathutharamattum  en'ru  unakkuch  sollugi'rean.  (maththeayu  18:22)
எப்படியெனில், 
பரலோகராஜ்யம்  தன்  ஊழியக்காரரிடத்தில்  கணக்குப் 
பார்க்கவேண்டுமென்றிருந்த  ஒரு  ராஜாவுக்கு 
ஒப்பாயிருக்கிறது.  (மத்தேயு  18:23)
eppadiyenil,  paraloagaraajyam 
than  oozhiyakkaararidaththil  ka'nakkup 
paarkkavea'ndumen'riruntha  oru  raajaavukku  oppaayirukki'rathu.  (maththeayu  18:23)
அவன்  கணக்குப்பார்க்கத்  தொடங்கினபோது, 
பதினாயிரம்  தாலந்து  கடன்  பட்டவன்  ஒருவனை 
அவனுக்கு  முன்பாகக்  கொண்டுவந்தார்கள்.  (மத்தேயு 
18:24)
avan  ka'nakkuppaarkkath  thodangginapoathu,  pathinaayiram  thaalanthu 
kadan  pattavan  oruvanai  avanukku 
munbaagak  ko'nduvanthaarga'l.  (maththeayu  18:24)
கடனைத்தீர்க்க 
அவனுக்கு  நிர்வாகம்  இல்லாதபடியால்,  அவனுடைய 
ஆண்டவன்  அவனையும்  அவன்  பெண்ஜாதி  பிள்ளைகளையும்,  அவனுக்கு 
உண்டான  எல்லாவற்றையும்  விற்று, 
கடனைத்  தீர்க்கும்படிக்  கட்டளையிட்டான்.  (மத்தேயு 
18:25)
kadanaiththeerkka  avanukku  nirvaagam  illaathapadiyaal,  avanudaiya 
aa'ndavan  avanaiyum  avan  pe'njaathi  pi'l'laiga'laiyum,  avanukku  u'ndaana 
ellaavat'raiyum  vit'ru,  kadanaith  theerkkumpadik  katta'laiyittaan.  (maththeayu 
18:25)
அப்பொழுது, 
அந்த  ஊழியக்காரன்  தாழ  விழுந்து,  வணங்கி: 
ஆண்டவனே!  என்னிடத்தில்  பொறுமையாயிரும்,  எல்லாவற்றையும்  உமக்குக் 
கொடுத்துத்  தீர்க்கிறேன்  என்றான். 
(மத்தேயு  18:26)
appozhuthu,  antha  oozhiyakkaaran  thaazha 
vizhunthu,  va'nanggi:  aa'ndavanea!  ennidaththil 
po'rumaiyaayirum,  ellaavat'raiyum  umakkuk  koduththuth 
theerkki'rean  en'raan.  (maththeayu  18:26)
அந்த  ஊழியக்காரனுடைய  ஆண்டவன் 
மனதிரங்கி,  அவனை  விடுதலைபண்ணி, 
கடனையும்  அவனுக்கு  மன்னித்துவிட்டான்.  (மத்தேயு 
18:27)
antha  oozhiyakkaaranudaiya  aa'ndavan 
manathiranggi,  avanai 
viduthalaipa'n'ni,  kadanaiyum  avanukku 
manniththuvittaan.  (maththeayu 
18:27)
அப்படியிருக்க,  அந்த  ஊழியக்காரன்  புறப்பட்டுப்போகையில்,  தன்னிடத்தில் 
நூறு  வெள்ளிப்பணம்  கடன்பட்டிருந்தவனாகிய  தன்  உடன்வேலைக்காரரில்  ஒருவனைக் 
கண்டு,  அவனைப்  பிடித்து, 
தொண்டையை  நெரித்து:  நீ  பட்ட  கடனை  எனக்குக்  கொடுத்துத் 
தீர்க்கவேண்டும்  என்றான்.  (மத்தேயு 
18:28)
appadiyirukka,  antha  oozhiyakkaaran  pu'rappattuppoagaiyil,  thannidaththil  noo'ru  ve'l'lippa'nam  kadanpattirunthavanaagiya  than  udanvealaikkaararil  oruvanaik 
ka'ndu,  avanaip  pidiththu, 
tho'ndaiyai  neriththu:  nee  patta  kadanai  enakkuk 
koduththuth  theerkkavea'ndum  en'raan.  (maththeayu  18:28)
அப்பொழுது 
அவனுடைய  உடன்வேலைக்காரன்  அவன்  காலிலே  விழுந்து: 
என்னிடத்தில்  பொறுமையாயிரும்,  எல்லாவற்றையும்  உமக்குக் 
கொடுத்துத்  தீர்க்கிறேன்  என்று, 
அவனை  வேண்டிக்கொண்டான்.  (மத்தேயு 
18:29)
appozhuthu  avanudaiya  udanvealaikkaaran  avan  kaalilea  vizhunthu: 
ennidaththil  po'rumaiyaayirum, 
ellaavat'raiyum  umakkuk 
koduththuth  theerkki'rean  en'ru,  avanai  vea'ndikko'ndaan.  (maththeayu 
18:29)
அவனோ  சம்மதியாமல்,  போய்,  அவன்  பட்ட  கடனைக்  கொடுத்துத் 
தீர்க்குமளவும்  அவனைக்  காவலில் 
போடுவித்தான்.  (மத்தேயு  18:30)
avanoa  sammathiyaamal, 
poay,  avan  patta  kadanaik  koduththuth 
theerkkuma'lavum  avanaik  kaavalil 
poaduviththaan.  (maththeayu  18:30)
நடந்ததை 
அவனுடைய  உடன்வேலைக்காரர்  கண்டு, 
மிகவும்  துக்கப்பட்டு,  ஆண்டவனிடத்தில்  வந்து, 
நடந்ததையெல்லாம்  அறிவித்தார்கள்.  (மத்தேயு 
18:31)
nadanthathai  avanudaiya  udanvealaikkaarar  ka'ndu, 
migavum  thukkappattu,  aa'ndavanidaththil  vanthu, 
nadanthathaiyellaam  a'riviththaarga'l.  (maththeayu  18:31)
அப்பொழுது, 
அவனுடைய  ஆண்டவன்  அவனை  அழைப்பித்து:  பொல்லாத 
ஊழியக்காரனே,  நீ  என்னை  வேண்டிக்கொண்டபடியினால்  அந்தக் 
கடன்  முழுவதையும்  உனக்கு 
மன்னித்துவிட்டேன்.  (மத்தேயு  18:32)
appozhuthu,  avanudaiya  aa'ndavan 
avanai  azhaippiththu:  pollaatha 
oozhiyakkaaranea,  nee  ennai  vea'ndikko'ndapadiyinaal  anthak 
kadan  muzhuvathaiyum  unakku 
manniththuvittean.  (maththeayu 
18:32)
நான்  உனக்கு  இரங்கினதுபோல, 
நீயும்  உன்  உடன்வேலைக்காரனுக்கு  இரங்கவேண்டாமோ 
என்று  சொல்லி,  (மத்தேயு 
18:33)
naan  unakku  irangginathupoala,  neeyum  un  udanvealaikkaaranukku  iranggavea'ndaamoa  en'ru  solli,  (maththeayu  18:33)
அவனுடைய 
ஆண்டவன்  கோபமடைந்து,  அவன்  பட்ட  கடனையெல்லாம் 
தனக்குக்  கொடுத்துத்  தீர்க்குமளவும்  உபாதிக்கிறவர்களிடத்தில்  அவனை  ஒப்புக்கொடுத்தான்.  (மத்தேயு 
18:34)
avanudaiya  aa'ndavan  koabamadainthu,  avan  patta  kadanaiyellaam  thanakkuk 
koduththuth  theerkkuma'lavum  ubaathikki'ravarga'lidaththil 
avanai  oppukkoduththaan.  (maththeayu 
18:34)
நீங்களும் 
அவனவன்  தன்  தன்  சகோதரன்  செய்த  தப்பிதங்களை  மனப்பூர்வமாய் 
மன்னியாமற்போனால்,  என்  பரமபிதாவும் 
உங்களுக்கு  இப்படியே  செய்வார் 
என்றார்.  (மத்தேயு  18:35)
neengga'lum  avanavan 
than  than  sagoatharan  seytha  thappithangga'lai  manappoorvamaay  manniyaama’rpoanaal,  en  paramapithaavum  ungga'lukku  ippadiyea  seyvaar  en'raar.  (maththeayu  18:35)
Correction(s) March 17, 2019 >>> Changed ottaikka'n'nanaay to ot'raikka'n'nanaay (Matthew 18:9)
ReplyDelete