தமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா?
ஆதியாகமம்|aathiyaakamam 1
துவக்கத்தில் தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்.
thuvakkaththil theavan vaanaththaiyum poomiyaiyum padaiththaar.
பூமியானது வெறுமையாக இருந்தது; தண்ணீரின்மேல் இருள் சூழ்ந்திருந்தது. தேவ ஆவியானவர் அந்தத் தண்ணீரின்மேல் அசை வாடிக்கொண்டிருந்தார்.
poomiyaanathu ve'rumaiyaaka irunthathu; tha'n'neerinmeal iru'l soozhnthirunthathu. theava aaviyaanavar anthath tha'n'neerinmeal asai vaadikko'ndirunthaar.
அப்பொழுது தேவன், “வெளிச்சம் உண்டாகட்டும்” என்றார். வெளிச்சம் உண்டாயிற்று.
appozhuthu theavan, “ve'lichcham u'ndaakattum” en'raar. ve'lichcham u'ndaayit'ru.
தேவன் வெளிச்சத்தைப் பார்த்தார். அது நல்லதென்று அறிந்துகொண்டார். பிறகு தேவன் வெளிச்சத்தையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார்.
theavan ve'lichchaththaip paarththaar. athu nallathen'ru a'rinthuko'ndaar. pi'raku theavan ve'lichchaththaiyum iru'laiyum vevvea'raakap piriththaar.
தேவன் வெளிச்சத்துக்குப் “பகல்” என்று பெயரிட்டார். அவர் இருளுக்கு “இரவு” என்று பெயரிட்டார். மாலையும் காலையும் ஏற்பட்டது. இதுவே முதல் நாளாயிற்று.
theavan ve'lichchaththukkup “pakal” en'ru peyarittaar. avar iru'lukku “iravu” en'ru peyarittaar. maalaiyum kaalaiyum ea'rpattathu. ithuvea muthal naa'laayit'ru.
பிறகு தேவன், “இரண்டு பாகமாக தண்ணீர்ப் பகுதி பிரிந்து ஆகாய விரிவு உண்டாகக்கடவது!” என்றார்.
pi'raku theavan, “ira'ndu paakamaaka tha'n'neerp pakuthi pirinthu aakaaya virivu u'ndaakakkadavathu!” en'raar.
தேவன் காற்றின் விரிவை உருவாக்கி, தண்ணீரைத் தனியாகப் பிரித்தார். தண்ணீரில் ஒரு பகுதி காற்றிற்கு மேலேயும், மறுபகுதி காற்றிற்குக் கீழேயும் ஆனது.
theavan kaat'rin virivai uruvaakki, tha'n'neeraith thaniyaakap piriththaar. tha'n'neeril oru pakuthi kaat'ri'rku mealeayum, ma'rupakuthi kaat'ri'rkuk keezheayum aanathu.
தேவன் காற்றின் விரிவுக்கு “வானம்” என்று பெயரிட்டார். மாலையும் காலையும் ஏற்பட்டது. இது இரண்டாம் நாள் ஆகும்.
theavan kaat'rin virivukku “vaanam” en'ru peyarittaar. maalaiyum kaalaiyum ea'rpattathu. ithu ira'ndaam naa'l aakum.
பிறகு தேவன், “வானத்தின் கீழே உள்ள தண்ணீரெல்லாம் ஓரிடத்தில் சேர்வதாக, அதனால் காய்ந்த நிலம் உண்டாகட்டும்” என்று சொன்னார். அது அவ்வாறே ஆயிற்று.
pi'raku theavan, “vaanaththin keezhea u'l'la tha'n'neerellaam oaridaththil searvathaaka, athanaal kaayntha nilam u'ndaakattum” en'ru sonnaar. athu avvaa'rea aayit'ru.
தேவன் அந்த காய்ந்த நிலத்துக்கு “பூமி” என்று பெயரிட்டார். ஒன்று சேர்ந்த தண்ணீருக்கு தேவன் “கடல்” என்று பெயரிட்டார். தேவன் இது நல்லது என்று கண்டார்.
theavan antha kaayntha nilaththukku “poomi” en'ru peyarittaar. on'ru searntha tha'n'neerukku theavan “kadal” en'ru peyarittaar. theavan ithu nallathu en'ru ka'ndaar.
பிறகு தேவன், “பூமியில் புல்லும் விதைகளைத் தரும் செடிகளும் கனிதருகிற மரங்களும் உருவாகட்டும். கனிமரங்கள் விதைகளை உடைய கனிகளை உருவாக்கட்டும். ஒவ்வொரு செடிகொடிகளும் தங்கள் இனத்தை உண்டாக்கக்கடவது. இவை பூமியிலே வளரட்டும்” என்று சொன்னார். அவ்வாறே ஆயிற்று.
pi'raku theavan, “poomiyil pullum vithaika'laith tharum sedika'lum kanitharuki'ra marangka'lum uruvaakattum. kanimarangka'l vithaika'lai udaiya kanika'lai uruvaakkattum. ovvoru sedikodika'lum thangka'l inaththai u'ndaakkakkadavathu. ivai poomiyilea va'larattum” en'ru sonnaar. avvaa'rea aayit'ru.
பூமி புல்லையும் தானியங்களைக் கொடுக்கும் செடிகளையும் முளைப்பித்தது. பூமி விதைகளைக்கொண்ட பழங்களைக் கொடுக்கும் மரங்களை முளைப்பித்தது. ஒவ்வொரு செடியும் தனக்கேயுரிய இனத்தை உருவாக்கியது. தேவன் இது நல்லதென்று கண்டார்.
poomi pullaiyum thaaniyangka'laik kodukkum sedika'laiyum mu'laippiththathu. poomi vithaika'laikko'nda pazhangka'laik kodukkum marangka'lai mu'laippiththathu. ovvoru sediyum thanakkeayuriya inaththai uruvaakkiyathu. theavan ithu nallathen'ru ka'ndaar.
மாலையும் காலையும் ஏற்பட்டது. இது மூன்றாம் நாளாயிற்று.
maalaiyum kaalaiyum ea'rpattathu. ithu moon'raam naa'laayit'ru.
பிறகு தேவன், “வானத்தில் வெளிச்சம் உண்டாகட்டும், இந்த வெளிச்சமானது பகலையும் இரவையும் பிரிக்கட்டும். இந்த வெளிச்சங்கள் காலங்களையும் நாட்களையும் ஆண்டுகளையும் குறிப்பதாக இருக்கட்டும்.
pi'raku theavan, “vaanaththil ve'lichcham u'ndaakattum, intha ve'lichchamaanathu pakalaiyum iravaiyum pirikkattum. intha ve'lichchangka'l kaalangka'laiyum naadka'laiyum aa'nduka'laiyum ku'rippathaaka irukkattum.
இந்த வெளிச்சங்கள் வானத்திலிருந்து பூமிக்கு ஒளி தரட்டும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
intha ve'lichchangka'l vaanaththilirunthu poomikku o'li tharattum” en'raar. athu avvaa'rea aayit'ru.
தேவன் இரண்டு மகத்தான ஒளிச்சுடர்களை உண்டுபண்ணினார். தேவன் பெரிய ஒளிச்சுடரைப் பகலை ஆண்டுகொள்ளவும், சிறிய ஒளிச்சுடரை இரவை ஆண்டுகொள்ளவும் செய்தார். நட்சத்திரங்களையும் தேவன் உருவாக்கினார்.
theavan ira'ndu makaththaana o'lichsudarka'lai u'ndupa'n'ninaar. theavan periya o'lichsudaraip pakalai aa'nduko'l'lavum, si'riya o'lichsudarai iravai aa'nduko'l'lavum seythaar. nadchaththirangka'laiyum theavan uruvaakkinaar.
தேவன் இந்த ஒளிச்சுடர்களைப் பூமிக்கு வெளிச்சம் தரும்படி வானத்தில் வைத்தார்.
theavan intha o'lichsudarka'laip poomikku ve'lichcham tharumpadi vaanaththil vaiththaar.
இரவையும் பகலையும் ஆள்வதற்கு இந்த ஒளிச்சுடர்களைத் தேவன் வானத்தில் ஏற்படுத்தினார். இவை வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வேறுபாட்டை உண்டாக்கிற்று. இது நல்லது என்று தேவன் கண்டுகொண்டார்.
iravaiyum pakalaiyum aa'lvatha'rku intha o'lichsudarka'laith theavan vaanaththil ea'rpaduththinaar. ivai ve'lichchaththukkum iru'lukkum vea'rupaattai u'ndaakkit'ru. ithu nallathu en'ru theavan ka'nduko'ndaar.
மாலையும் காலையும் ஏற்பட்டது. இது நான்காம் நாள்.
maalaiyum kaalaiyum ea'rpattathu. ithu naankaam naa'l.
பிறகு தேவன், “தண்ணீரானது திரளான உயிரினங்களை தோற்றுவிப்பதாக, பூமியிலும் வானத்திலும் பறப்பதற்காக பறவைகள் உருவாகட்டும்” என்றார்.
pi'raku theavan, “tha'n'neeraanathu thira'laana uyirinangka'lai thoat'ruvippathaaka, poomiyilum vaanaththilum pa'rappatha'rkaaka pa'ravaika'l uruvaakattum” en'raar.
பிறகு தேவன் கடலில் வாழும் பெரிய உயிரினங்களை உருவாக்கினார். கடலுக்குள் அலைந்து திரிகிற ஏராளமான உயிரினங்களைப் படைத்தார். பல்வேறு வகையான கடல் வாழ் உயிர்களையும் படைத்தார். வானத்தில் பறந்து திரிகிறதற்கு பல்வேறுவகைப் பறவைகளையும் படைத்தார். தேவன் இது நல்லது என்று கண்டார்.
pi'raku theavan kadalil vaazhum periya uyirinangka'lai uruvaakkinaar. kadalukku'l alainthu thiriki'ra earaa'lamaana uyirinangka'laip padaiththaar. palvea'ru vakaiyaana kadal vaazh uyirka'laiyum padaiththaar. vaanaththil pa'ranthu thiriki'ratha'rku palvea'ruvakaip pa'ravaika'laiyum padaiththaar. theavan ithu nallathu en'ru ka'ndaar.
தேவன் அவைகளை ஆசீர்வதித்து, இனப் பெருக்கம் செய்து, எண்ணிக்கையில் விருத்தியடைந்து கடல் தண்ணீரை நிரப்புங்கள், மேலும் பறவைகள் பூமியில் பெருகட்டும் என்று சொன்னார்.
theavan avaika'lai aaseervathiththu, inap perukkam seythu, e'n'nikkaiyil viruththiyadainthu kadal tha'n'neerai nirappungka'l, mealum pa'ravaika'l poomiyil perukattum en'ru sonnaar.
மாலையும் காலையும் ஏற்பட்டது. இது ஐந்தாம் நாள் ஆயிற்று.
maalaiyum kaalaiyum ea'rpattathu. ithu ainthaam naa'l aayit'ru.
பிறகு தேவன், “பூமியானது, கால் நடைகள், ஊர்வன, காட்டு மிருகங்கள் முதலியனவற்றை அதனதன் இனத்திற்கு ஏற்ப தோற்றுவிப்பதாக” என்றார். அவை அப்படியே உண்டானது.
pi'raku theavan, “poomiyaanathu, kaal nadaika'l, oorvana, kaattu mirukangka'l muthaliyanavat'rai athanathan inaththi'rku ea'rpa thoat'ruvippathaaka” en'raar. avai appadiyea u'ndaanathu.
இவ்வாறு, தேவன் எல்லாவகையான மிருகங் களையும் படைத்தார். அவர் காட்டு மிருகங்களையும், வீட்டு மிருகங்களையும், பூமியில் ஊர்ந்து செல்லும் விதவிதமான உயிரினங்களையும் படைத்தார். இவை நல்லதென்று தேவன் கண்டுகொண்டார்.
ivvaa'ru, theavan ellaavakaiyaana mirukang ka'laiyum padaiththaar. avar kaattu mirukangka'laiyum, veettu mirukangka'laiyum, poomiyil oornthu sellum vithavithamaana uyirinangka'laiyum padaiththaar. ivai nallathen'ru theavan ka'nduko'ndaar.
அதன் பிறகு தேவன், “நாம் மனுக்குலத்தை நமது சாயலில் உருவாக்குவோம். மனிதர்கள் நம்மைப்போலவே இருப்பார்கள். அவர்கள் கடலில் உள்ள எல்லா மீன்களையும், வானத்திலுள்ள பறவைகளையும் ஆண்டுகொள்ளட்டும். அவர்கள் பெரிய மிருகங்களையும் தரையில் ஊரும் உயிரினங்களையும் ஆண்டுகொள்ளட்டும்” என்று சொன்னார்.
athan pi'raku theavan, “naam manukkulaththai namathu saayalil uruvaakkuvoam. manitharka'l nammaippoalavea iruppaarka'l. avarka'l kadalil u'l'la ellaa meenka'laiyum, vaanaththilu'l'la pa'ravaika'laiyum aa'nduko'l'lattum. avarka'l periya mirukangka'laiyum tharaiyil oorum uyirinangka'laiyum aa'nduko'l'lattum” en'ru sonnaar.
எனவே தேவன் தமது சொந்த சாயலிலேயே மனுகுலத்தைப் படைத்தார், தேவனுடைய சாயலாகவே அவர்களைப் படைத்தார். தேவன் அவர்களை ஆண் என்றும் பெண் என்றும் படைத்தார்.
enavea theavan thamathu sontha saayalileayea manukulaththaip padaiththaar, theavanudaiya saayalaakavea avarka'laip padaiththaar. theavan avarka'lai aa'n en'rum pe'n en'rum padaiththaar.
தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். அவர்களிடம், “பிள்ளைகளைப் பெற்று விருத்தியடையுங்கள், பூமியை நிரப்பி அதை ஆண்டுகொள்ளுங்கள். கடலில் உள்ள மீன்களையும் வானத்திலுள்ள பறவைகளையும் ஆண்டுகொள்ளுங்கள். பூமியில் அலைந்து திரிகின்ற அனைத்து உயிரினங்களையும் ஆண்டுகொள்ளுங்கள்” என்றார்.
theavan avarka'lai aaseervathiththaar. avarka'lidam, “pi'l'laika'laip pet'ru viruththiyadaiyungka'l, poomiyai nirappi athai aa'nduko'l'lungka'l. kadalil u'l'la meenka'laiyum vaanaththilu'l'la pa'ravaika'laiyum aa'nduko'l'lungka'l. poomiyil alainthu thirikin'ra anaiththu uyirinangka'laiyum aa'nduko'l'lungka'l” en'raar.
மேலும் தேவன், “நான் உங்களுக்குத் தானியங்களைத் தரும் அனைத்து வகைப் பயிரினங்களையும், எல்லாவகையான பழ மரங்களையும் தருகிறேன். அந்த மரங்கள் விதைகளோடு கூடிய கனிகளைத் தரும். அந்த விதைகளும் கனிகளும் உங்களுக்கு உணவாகும்.
mealum theavan, “naan ungka'lukkuth thaaniyangka'laith tharum anaiththu vakaip payirinangka'laiyum, ellaavakaiyaana pazha marangka'laiyum tharuki'rean. antha marangka'l vithaika'loadu koodiya kanika'laith tharum. antha vithaika'lum kanika'lum ungka'lukku u'navaakum.
நான் புல் பூண்டுகளையெல்லாம் மிருகங்களுக்காகக் கொடுத்துள்ளேன். புல் பூண்டுகள் அவற்றுக்கு உணவாக இருக்கும். பூமியில் உள்ள அனைத்து மிருகங்களும் வானத்திலுள்ள அனைத்து பறவைகளும், தரையில் ஊர்கின்ற அனைத்து சிறு உயிரினங்களும் அவற்றை உணவாகக்கொள்ளும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
naan pul poo'nduka'laiyellaam mirukangka'lukkaakak koduththu'l'lean. pul poo'nduka'l avat'rukku u'navaaka irukkum. poomiyil u'l'la anaiththu mirukangka'lum vaanaththilu'l'la anaiththu pa'ravaika'lum, tharaiyil oorkin'ra anaiththu si'ru uyirinangka'lum avat'rai u'navaakakko'l'lum” en'raar. athu avvaa'rea aayit'ru.
தாம் உண்டாக்கிய அனைத்தும் மிக நன்றாக இருப்பதாக தேவன் கண்டார். மாலையும் காலையும் ஏற்பட்டது. இது ஆறாவது நாளாயிற்று.
thaam u'ndaakkiya anaiththum mika nan'raaka iruppathaaka theavan ka'ndaar. maalaiyum kaalaiyum ea'rpattathu. ithu aa'raavathu naa'laayit'ru.
Download Entire Bible in Romanised
Easy to Read Tamil Bible in Romanised
Last updated: September 30, 2022
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!