Tuesday, May 12, 2020

யோபு

ஊத்ஸ்<Uz>  தேசத்திலே  யோபு<Job>  என்னும்  பேர்கொண்ட  ஒரு  மனுஷன்  இருந்தான்;  அந்த  மனுஷன்  உத்தமனும்  சன்மார்க்கனும்,  தேவனுக்குப்  பயந்து,  பொல்லாப்புக்கு  விலகுகிறவனுமாயிருந்தான்.  {Job  1:1}

 

அவனுக்கு  ஏழு  குமாரரும்,  மூன்று  குமாரத்திகளும்  பிறந்தார்கள்.  {Job  1:2}

 

அவனுக்கு  ஏழாயிரம்  ஆடுகளும்,  மூவாயிரம்  ஒட்டகங்களும்,  ஐந்நூறு  ஏர்மாடுகளும்,  ஐந்நூறு  கழுதைகளுமாகிய  மிருகஜீவன்கள்  இருந்ததுமன்றி,  திரளான  பணிவிடைக்காரரும்  இருந்தார்கள்;  அதினால்  அந்த  மனுஷன்  கிழக்கத்திப்  புத்திரர்  எல்லாரிலும்  பெரியவனாயிருந்தான்.  {Job  1:3}

 

அவன்  குமாரர்,  அவனவன்  தன்தன்  நாளிலே  தன்தன்  வீட்டிலே  விருந்துசெய்து,  தங்கள்  மூன்று  சகோதரிகளையும்  தங்களோடே  போஜனம்  பண்ணும்படி  அழைப்பார்கள்.  {Job  1:4}

 

விருந்துசெய்கிற  அவரவருடைய  நாள்முறை  முடிகிறபோது,  யோபு<Job>:  ஒருவேளை  என்  குமாரர்  பாவஞ்செய்து,  தேவனைத்  தங்கள்  இருதயத்திலே  தூஷித்திருப்பார்கள்  என்று  சொல்லி,  அவர்களை  அழைத்தனுப்பி,  பரிசுத்தப்படுத்தி,  அதிகாலமே  எழுந்து,  அவர்கள்  எல்லாருடைய  இலக்கத்தின்படியேயும்  சர்வாங்க  தகனபலிகளைச்  செலுத்துவான்;  இந்தப்பிரகாரமாக  யோபு<Job>  அந்நாட்களிலெல்லாம்  செய்துவருவான்.  {Job  1:5}

 

ஒருநாள்  தேவபுத்திரர்  கர்த்தருடைய  சந்நிதியில்  வந்து  நின்றபோது,  சாத்தானும்  அவர்கள்  நடுவிலே  வந்து  நின்றான்.  {Job  1:6}

 

கர்த்தர்  சாத்தானைப்  பார்த்து:  நீ  எங்கேயிருந்து  வருகிறாய்  என்றார்.  சாத்தான்  கர்த்தருக்குப்  பிரதியுத்தரமாக:  பூமியெங்கும்  உலாவி,  அதில்  சுற்றித்திரிந்து  வருகிறேன்  என்றான்.  {Job  1:7}

 

கர்த்தர்  சாத்தானை  நோக்கி:  என்  தாசனாகிய  யோபின்மேல்<Job>  கவனம்  வைத்தாயோ?  உத்தமனும்  சன்மார்க்கனும்,  தேவனுக்குப்  பயந்து,  பொல்லாப்புக்கு  விலகுகிறவனுமாகிய  அவனைப்போலப்  பூமியில்  ஒருவனும்  இல்லை  என்றார்.  {Job  1:8}

 

அதற்குச்  சாத்தான்  கர்த்தருக்குப்  பிரதியுத்தரமாக:  யோபு<Job>  விருதாவாகவா  தேவனுக்குப்  பயந்து  நடக்கிறான்?  {Job  1:9}

 

நீர்  அவனையும்  அவன்  வீட்டையும்  அவனுக்கு  உண்டான  எல்லாவற்றையும்  சுற்றி  வேலியடைக்கவில்லையோ?  அவன்  கைகளின்  கிரியையை  ஆசீர்வதித்தீர்;  அவனுடைய  சம்பத்து  தேசத்தில்  பெருகிற்று.  {Job  1:10}

 

ஆனாலும்  உம்முடைய  கையை  நீட்டி  அவனுக்கு  உண்டானவையெல்லாம்  தொடுவீரானால்,  அப்பொழுது  அவன்  உமது  முகத்துக்கு  எதிரே  உம்மைத்  தூஷிக்கானோ  பாரும்  என்றான்.  {Job  1:11}

 

கர்த்தர்  சாத்தானை  நோக்கி:  இதோ,  அவனுக்கு  உண்டானவையெல்லாம்  உன்  கையிலிருக்கிறது;  அவன்மேல்மாத்திரம்  உன்  கையை  நீட்டாதே  என்றார்;  அப்பொழுது  சாத்தான்  கர்த்தருடைய  சந்நிதியைவிட்டுப்  புறப்பட்டுப்போனான்.  {Job  1:12}

 

பின்பு  ஒருநாள்  யோபுடைய<Job>  குமாரரும்,  அவன்  குமாரத்திகளும்,  தங்கள்  மூத்த  சகோதரன்  வீட்டிலே  புசித்து,  திராட்சரசம்  குடிக்கிறபோது,  {Job  1:13}

 

ஒரு  ஆள்  அவனிடத்தில்  வந்து:  எருதுகள்  உழுகிறபோது,  கழுதைகள்  அவைகளின்  பக்கத்திலே  மேய்ந்துகொண்டிருக்கையில்,  {Job  1:14}

 

சபேயர்<Sabeans>  அவைகள்மேல்  விழுந்து,  அவைகளைச்  சாய்த்துக்கொண்டுபோனார்கள்;  வேலையாட்களையும்  பட்டயக்கருக்கினால்  வெட்டிப்போட்டார்கள்;  நான்  ஒருவன்மாத்திரம்  தப்பி,  அதை  உமக்கு  அறிவிக்கும்படி  வந்தேன்  என்றான்.  {Job  1:15}

 

இவன்  இப்படிப்  பேசிக்கொண்டிருக்கையில்,  வேறொருவன்  வந்து:  வானத்திலிருந்து  தேவனுடைய  அக்கினி  விழுந்து,  ஆடுகளையும்  வேலையாட்களையும்  சுட்டெரித்துப்போட்டது;  நான்  ஒருவன்மாத்திரம்  தப்பி,  அதை  உமக்கு  அறிவிக்கும்படி  வந்தேன்  என்றான்.  {Job  1:16}

 

இவன்  இப்படிப்  பேசிக்கொண்டிருக்கையில்,  வேறொருவன்  வந்து:  கல்தேயர்<Chaldeans>  மூன்று  பவுஞ்சாய்  வந்து,  ஒட்டகங்கள்மேல்  விழுந்து,  அவைகளை  ஓட்டிக்கொண்டுபோனார்கள்;  வேலையாட்களையும்  பட்டயக்கருக்கினால்  வெட்டிப்போட்டார்கள்;  நான்  ஒருவன்மாத்திரம்  தப்பி,  அதை  உமக்கு  அறிவிக்கும்படி  வந்தேன்  என்றான்.  {Job  1:17}

 

இவன்  இப்படிப்  பேசிக்கொண்டிருக்கையில்,  வேறொருவன்  வந்து:  உம்முடைய  குமாரரும்  உம்முடைய  குமாரத்திகளும்,  தங்கள்  மூத்த  சகோதரன்  வீட்டிலே  புசித்துத்  திராட்சரசம்  குடிக்கிறபோது,  {Job  1:18}

 

வனாந்தரவழியாய்ப்  பெருங்காற்று  வந்து,  அந்த  வீட்டின்  நாலு  மூலையிலும்  அடிக்க,  அது  பிள்ளைகளின்மேல்  விழுந்ததினால்  அவர்கள்  இறந்துபோனார்கள்;  நான்  ஒருவன்மாத்திரம்  தப்பி,  அதை  உமக்கு  அறிவிக்கும்படி  வந்தேன்  என்றான்.  {Job  1:19}

 

அப்பொழுது  யோபு<Job>  எழுந்திருந்து,  தன்  சால்வையைக்  கிழித்து,  தன்  தலையைச்  சிரைத்து,  தரையிலே  விழுந்து  பணிந்து:  {Job  1:20}

 

நிர்வாணியாய்  என்  தாயின்  கர்ப்பத்திலிருந்து  வந்தேன்;  நிர்வாணியாய்  அவ்விடத்துக்குத்  திரும்புவேன்;  கர்த்தர்  கொடுத்தார்,  கர்த்தர்  எடுத்தார்;  கர்த்தருடைய  நாமத்துக்கு  ஸ்தோத்திரம்  என்றான்.  {Job  1:21}

 

இவையெல்லாவற்றிலும்  யோபு<Job>  பாவஞ்செய்யவுமில்லை,  தேவனைப்பற்றிக்  குறைசொல்லவுமில்லை.  {Job  1:22}

 

பின்னொருநாளிலே  தேவபுத்திரர்  கர்த்தருடைய  சந்நிதியில்  வந்து  நின்றபோது,  சாத்தானும்  அவர்கள்  நடுவிலே  கர்த்தருடைய  சந்நிதியில்  வந்து  நின்றான்.  {Job  2:1}

 

கர்த்தர்  சாத்தானைப்  பார்த்து:  நீ  எங்கேயிருந்து  வருகிறாய்  என்றார்;  சாத்தான்  கர்த்தருக்குப்  பிரதியுத்தரமாக:  பூமியெங்கும்  உலாவி,  அதில்  சுற்றித்திரிந்து  வருகிறேன்  என்றான்.  {Job  2:2}

 

அப்பொழுது  கர்த்தர்  சாத்தானை  நோக்கி:  நீ  என்  தாசனாகிய  யோபின்மேல்<Job>  கவனம்  வைத்தாயோ?  உத்தமனும்  சன்மார்க்கனும்,  தேவனுக்குப்  பயந்து,  பொல்லாப்புக்கு  விலகுகிறவனுமான  மனுஷனாகிய  அவனைப்போல  பூமியில்  ஒருவனுமில்லை;  முகாந்தரமில்லாமல்  அவனை  நிர்மூலமாக்கும்படி  நீ  என்னை  ஏவினபோதிலும்,  அவன்  இன்னும்  தன்  உத்தமத்திலே  உறுதியாய்  நிற்கிறான்  என்றார்.  {Job  2:3}

 

சாத்தான்  கர்த்தருக்குப்  பிரதியுத்தரமாக:  தோலுக்குப்  பதிலாகத்  தோலையும்,  தன்  ஜீவனுக்குப்  பதிலாகத்  தனக்கு  உண்டான  எல்லாவற்றையும்,  மனுஷன்  கொடுத்துவிடுவான்.  {Job  2:4}

 

ஆனாலும்  நீர்  உம்முடைய  கையை  நீட்டி,  அவன்  எலும்பையும்  அவன்  மாம்சத்தையும்  தொடுவீரானால்,  அப்பொழுது  அவன்  உமது  முகத்துக்கு  எதிரே  உம்மைத்  தூஷிக்கானோ  பாரும்  என்றான்.  {Job  2:5}

 

அப்பொழுது  கர்த்தர்  சாத்தானை  நோக்கி:  இதோ,  அவன்  உன்  கையிலிருக்கிறான்;  ஆகிலும்  அவன்  பிராணனைமாத்திரம்  தப்பவிடு  என்றார்.  {Job  2:6}

 

அப்பொழுது  சாத்தான்  கர்த்தருடைய  சந்நிதியைவிட்டுப்  புறப்பட்டு,  யோபின்<Job>  உள்ளங்கால்தொடங்கி  அவன்  உச்சந்தலைமட்டும்  கொடிய  பருக்களால்  அவனை  வாதித்தான்.  {Job  2:7}

 

அவன்  ஒரு  ஓட்டை  எடுத்து,  தன்னைச்  சுறண்டிக்கொண்டு  சாம்பலில்  உட்கார்ந்தான்.  {Job  2:8}

 

அப்பொழுது  அவன்  மனைவி  அவனைப்  பார்த்து:  நீர்  இன்னும்  உம்முடைய  உத்தமத்தில்  உறுதியாய்  நிற்கிறீரோ?  தேவனைத்  தூஷித்து  ஜீவனை  விடும்  என்றாள்.  {Job  2:9}

 

அதற்கு  அவன்:  நீ  பயித்தியக்காரி  பேசுகிறதுபோலப்  பேசுகிறாய்;  தேவன்  கையிலே  நன்மையைப்  பெற்ற  நாம்  தீமையையும்  பெறவேண்டாமோ  என்றான்;  இவைகள்  எல்லாவற்றிலும்  யோபு<Job>  தன்  உதடுகளினால்  பாவஞ்செய்யவில்லை.  {Job  2:10}

 

யோபுடைய<Job>  மூன்று  சிநேகிதராகிய  தேமானியனான<Temanite>  எலிப்பாசும்<Eliphaz>,  சூகியனான<Shuhite>  பில்தாதும்<Bildad>,  நாகமாத்தியனான<Naamathite>  சோப்பாரும்<Zophar>,  யோபுக்கு<Job>  நேரிட்ட  தீமைகள்  யாவையும்  கேள்விப்பட்டபோது,  அவனுக்காகப்  பரிதபிக்கவும்,  அவனுக்கு  ஆறுதல்சொல்லவும்,  ஒருவரோடொருவர்  யோசனைபண்ணிக்கொண்டு,  அவரவர்  தங்கள்  ஸ்தலங்களிலிருந்து  வந்தார்கள்.  {Job  2:11}

 

அவர்கள்  தூரத்தில்  வருகையில்  தங்கள்  கண்களை  ஏறெடுத்துப்  பார்த்தபோது,  அவனை  உருத்தெரியாமல்,  சத்தமிட்டு  அழுது,  அவரவர்  தங்கள்  சால்வையைக்  கிழித்து,  வானத்தைப்  பார்த்து:  தங்கள்  தலைகள்மேல்  புழுதியைத்  தூற்றிக்கொண்டு,  {Job  2:12}

 

வந்து,  அவன்  துக்கம்  மகாகொடிய  துக்கம்  என்று  கண்டு,  ஒருவரும்  அவனோடு  ஒரு  வார்த்தையையும்  பேசாமல்,  இரவுபகல்  ஏழுநாள்,  அவனோடுகூடத்  தரையிலே  உட்கார்ந்திருந்தார்கள்.  {Job  2:13}

 

அதற்குப்பின்பு  யோபு<Job>  தன்  வாயைத்  திறந்து,  தான்  பிறந்த  நாளைச்  சபித்து,  {Job  3:1}

 

வசனித்துச்  சொன்னது  என்னவென்றால்:  {Job  3:2}

 

நான்  பிறந்தநாளும்  ஒரு  ஆண்பிள்ளை  உற்பத்தியாயிற்றென்று  சொல்லப்பட்ட  ராத்திரியும்  அழிவதாக.  {Job  3:3}

 

அந்த  நாள்  அந்தகாரப்படுவதாக;  தேவன்  உயரத்திலிருந்து  அதை  விசாரியாமலும்,  ஒளி  அதின்மேல்  பிரகாசியாமலும்,  {Job  3:4}

 

அந்தகாரமும்  மரண  இருளும்  அதைக்  கறைப்படுத்தி,  மப்பு  அதை  மூடி,  மந்தாரநாளின்  பயங்கரங்கள்  அதை  அருக்களிப்பாக்குவதாக.  {Job  3:5}

 

அந்த  ராத்திரியை  அந்தகாரம்  பிடிப்பதாக;  வருஷத்தின்  நாட்களில்  அது  சந்தோஷப்படுகிற  நாளாயிராமலும்  மாதங்களின்  கணக்கிலே  அது  வராமலும்  போவதாக.  {Job  3:6}

 

அந்த  ராத்திரி  தனிமையாயிருப்பதாக;  அதிலே  கெம்பீரசத்தம்  இல்லாமற்போவதாக.  {Job  3:7}

 

நாளைச்  சபிக்கிறவர்களும்,  லிவியாதானை<leviathan>  எழும்பப்பண்ணத்தக்கவர்களும்,  அதைச்  சபிப்பார்களாக.  {Job  3:8}

 

அதின்  அஸ்தமனகாலத்தில்  தோன்றிய  நட்சத்திரங்கள்  இருண்டு,  அது  எதிர்பார்த்திருந்த  வெளிச்சம்  உண்டாகாமலும்,  விடியற்காலத்து  வெளுப்பை  அது  காணாமலும்  இருப்பதாக.  {Job  3:9}

 

நான்  இருந்த  கர்ப்பத்தின்  வாசலை  அது  அடைக்காமலும்,  என்  கண்கள்  காண்கிற  வருத்தத்தை  மறைத்துவிடாமலும்  இருந்ததே.  {Job  3:10}

 

நான்  கர்ப்பத்தில்தானே  அழியாமலும்,  கர்ப்பத்திலிருந்து  புறப்படுகிறபோதே  சாகாமலும்  போனதென்ன?  {Job  3:11}

 

என்னை  ஏந்திக்கொள்ள  மடியும்,  நான்  பாலுண்ண  ஸ்தனங்களும்  உண்டாயிருந்ததென்ன?  {Job  3:12}

 

அப்படியில்லாதிருந்தால்,  அசையாமல்  கிடந்து  அமர்ந்திருந்து,  {Job  3:13}

 

பாழ்நிலங்களில்  தங்களுக்கு  மாளிகையைக்கட்டின  பூமியின்  ராஜாக்களோடும்  மந்திரிமார்களோடும்,  {Job  3:14}

 

அல்லது,  பொன்னை  உடையவர்களும்,  தங்கள்  வீடுகளை  வெள்ளியினால்  நிரப்பினவர்களுமான  பிரபுக்களோடுங்கூட  நான்  இப்பொழுது  தூங்கி  இளைப்பாறுவேனே.  {Job  3:15}

 

அல்லது,  வெளிப்படாத  முதிராப்பிண்டம்போலவும்,  வெளிச்சத்தைக்  காணாத  சிசுக்கள்போலவும்  இருப்பேனே.  {Job  3:16}

 

துன்மார்க்கருடைய  தொந்தரவு  அங்கே  ஓய்ந்திருக்கிறது;  பெலனற்று  விடாய்த்துப்போனவர்கள்  அங்கே  இளைப்பாறுகிறார்கள்.  {Job  3:17}

 

கட்டுண்டிருந்தவர்கள்  அங்கே  ஏகமாக  அமைந்திருக்கிறார்கள்;  ஒடுக்குகிறவனுடைய  சத்தம்  அங்கே  கேட்கப்படுகிறதில்லை.  {Job  3:18}

 

சிறியவனும்  பெரியவனும்  அங்கே  சரியாயிருக்கிறார்கள்;  அடிமை  தன்  எஜமானுக்கு  நீங்கலாயிருக்கிறான்.  {Job  3:19}

 

மரணத்துக்கு  ஆசையாய்க்  காத்திருந்து,  புதையலைத்  தேடுகிறதுபோல  அதைத்  தேடியும்  அடையாமற்போகிறவர்களும்,  {Job  3:20}

 

பிரேதக்குழியைக்  கண்டுபிடித்ததினால்  மிகவும்  களிகூர்ந்து,  {Job  3:21}

 

அதற்காகச்  சந்தோஷப்படுகிற  நிர்ப்பாக்கியருமாகிய  இவர்களுக்கு  வெளிச்சமும்,  மனச்சஞ்சலமுள்ள  இவர்களுக்கு  ஜீவனும்  கொடுக்கப்படுகிறதினால்  பலன்  என்ன?  {Job  3:22}

 

தன்  வழியைக்  காணக்கூடாதபடிக்கு,  தேவனால்  வளைந்துகொள்ளப்பட்டவனுக்கு  வெளிச்சத்தினால்  பலன்  என்ன?  {Job  3:23}

 

என்  போஜனத்துக்கு  முன்னே  எனக்குப்  பெருமூச்சு  உண்டாகிறது;  என்  கதறுதல்  வெள்ளம்போல்  புரண்டுபோகிறது.  {Job  3:24}

 

நான்  பயந்த  காரியம்  எனக்கு  நேரிட்டது;  நான்  அஞ்சினது  எனக்கு  வந்தது.  {Job  3:25}

 

எனக்குச்  சுகமுமில்லை,  இளைப்பாறுதலுமில்லை,  அமைதலுமில்லை;  எனக்குத்  தத்தளிப்பே  நேரிட்டது.  {Job  3:26}

 

அப்பொழுது  தேமானியனாகிய<Temanite>  எலிப்பாஸ்<Eliphaz>  பிரதியுத்தரமாக:  {Job  4:1}

 

நாங்கள்  உம்முடனே  பேசத்துணிந்தால்,  ஆயாசப்படுவீரோ?  ஆனாலும்  பேசாமல்  அடக்கிக்கொள்ளத்தக்கவன்  யார்?  {Job  4:2}

 

இதோ,  நீர்  அநேகருக்குப்  புத்திசொல்லி,  இளைத்த  கைகளைத்  திடப்படுத்தினீர்.  {Job  4:3}

 

விழுகிறவனை  உம்முடைய  வார்த்தைகளால்  நிற்கப்பண்ணி,  தள்ளாடுகிற  முழங்கால்களைப்  பலப்படுத்தினீர்.  {Job  4:4}

 

இப்பொழுதோ  துன்பம்  உமக்கு  நேரிட்டபடியினால்  ஆயாசப்படுகிறீர்;  அது  உம்மைத்  தொட்டதினால்  கலங்குகிறீர்.  {Job  4:5}

 

உம்முடைய  தேவபக்தி  உம்முடைய  உறுதியாயும்,  உம்முடைய  வழிகளின்  உத்தமம்  உம்முடைய  நம்பிக்கையாயும்  இருக்கவேண்டியதல்லவோ?  {Job  4:6}

 

குற்றமில்லாமல்  அழிந்தவன்  உண்டோ?  சன்மார்க்கர்  அதம்பண்ணப்பட்டது  எப்போ?  இதை  நினைத்துப்பாரும்.  {Job  4:7}

 

நான்  கண்டிருக்கிறபடி,  அநியாயத்தை  உழுது,  தீவினையை  விதைத்தவர்கள்,  அதையே  அறுக்கிறார்கள்.  {Job  4:8}

 

தேவனுடைய  சுவாசத்தினாலே  அவர்கள்  அழிந்து,  அவருடைய  நாசியின்  காற்றினாலே  நிர்மூலமாகிறார்கள்.  {Job  4:9}

 

சிங்கத்தின்  கெர்ச்சிப்பும்,  துஷ்டசிங்கத்தின்  முழக்கமும்  அடங்கும்;  பாலசிங்கங்களின்  பற்களும்  தகர்ந்து  போம்.  {Job  4:10}

 

கிழச்சிங்கம்  இரையில்லாமையால்  மாண்டுபோம்,  பாலசிங்கங்கள்  சிதறுண்டுபோம்.  {Job  4:11}

 

இப்போதும்  ஒரு  வார்த்தை  என்னிடத்தில்  இரகசியமாய்  அறிவிக்கப்பட்டது,  அதினுடைய  மெல்லிய  ஓசை  என்  செவியில்  விழுந்தது.  {Job  4:12}

 

மனுஷர்மேல்  அயர்ந்த  நித்திரை  இறங்குகையில்,  இராத்தரிசனங்களில்  பலவித  தோற்றங்கள்  உண்டாகும்போது,  {Job  4:13}

 

திகிலும்  நடுக்கமும்  என்னைப்  பிடித்தது,  என்  எலும்புகளெல்லாம்  நடுங்கினது.  {Job  4:14}

 

அப்பொழுது  ஒரு  ஆவி  என்  முகத்துக்கு  முன்பாகக்  கடந்தது,  என்  உடலின்  மயிர்  சிலிர்த்தது.  {Job  4:15}

 

அது  ஒரு  உருப்போல  என்  கண்களுக்குமுன்  நின்றது,  ஆனாலும்  அதின்  ரூபம்  இன்னதென்று  விளங்கவில்லை;  அமைதலுண்டாயிற்று,  அப்பொழுது  நான்  கேட்ட  சத்தமாவது:  {Job  4:16}

 

மனுஷன்  தேவனைப்பார்க்கிலும்  நீதிமானாயிருப்பானோ?  மனுபுத்திரன்  தன்னை  உண்டாக்கினவரைப்பார்க்கிலும்  சுத்தமாயிருப்பானோ?  {Job  4:17}

 

கேளும்,  அவர்  தம்முடைய  பணிவிடைக்காரரிடத்தில்  நம்பிக்கை  வைப்பதில்லை;  தம்முடைய  தூதரின்மேலும்  புத்தியீனத்தைச்  சுமத்துகிறாரே,  {Job  4:18}

 

புழுதியில்  அஸ்திபாரம்  போட்டு,  மண்  வீடுகளில்  வாசம்பண்ணி,  பொட்டுப்பூச்சியால்  அரிக்கப்படுகிறவர்கள்மேல்  அவர்  நம்பிக்கை  வைப்பது  எப்படி?  {Job  4:19}

 

காலைமுதல்  மாலைவரைக்கும்  மடிந்து,  கவனிப்பார்  ஒருவருமில்லாமல்,  நித்திய  அழிவடைகிறார்கள்.  {Job  4:20}

 

அவர்களிலிருக்கிற  அவர்களுடைய  மேன்மை  போய்விடுமல்லவோ?  ஞானமடையாமல்  சாகிறார்களே  என்று  சொன்னான்.  {Job  4:21}

 

இப்போது  கூப்பிடும்,  உமக்கு  உத்தரவு  கொடுப்பார்  உண்டோ  பார்ப்போம்?  பரிசுத்தவான்களில்  யாரை  நோக்கிப்  பார்ப்பீர்?  {Job  5:1}

 

கோபம்  நிர்மூடனைக்  கொல்லும்;  பொறாமை  புத்தியில்லாதவனை  அதம்பண்ணும்.  {Job  5:2}

 

நிர்மூடன்  ஒருவன்  வேரூன்றுகிறதை  நான்  கண்டு  உடனே  அவன்  வாசஸ்தலத்தைச்  சபித்தேன்.  {Job  5:3}

 

அவன்  பிள்ளைகள்  இரட்சிப்புக்குத்  தூரமாகி,  தப்புவிப்பாரில்லாமல்,  வாசலிலே  நொறுக்கப்பட்டார்கள்.  {Job  5:4}

 

பசித்தவன்  அவன்  விளைச்சலை  முட்செடிகளுக்குள்ளுமிருந்து  பறித்துத்  தின்றான்;  பறிகாரன்  அவன்  ஆஸ்தியை  விழுங்கினான்.  {Job  5:5}

 

தீங்கு  புழுதியிலிருந்து  உண்டாகிறதுமில்லை;  வருத்தம்  மண்ணிலிருந்து  முளைக்கிறதுமில்லை.  {Job  5:6}

 

அக்கினிப்பொறிகள்  மேலே  பறக்கிறதுபோல,  மனுஷன்  வருத்தம்  அநுபவிக்கப்  பிறந்திருக்கிறான்.  {Job  5:7}

 

ஆனாலும்  நான்  தேவனை  நாடி,  என்  நியாயத்தைத்  தேவனிடத்தில்  ஒப்புவிப்பேன்.  {Job  5:8}

 

ஆராய்ந்து  முடியாத  பெரிய  காரியங்களையும்,  எண்ணிமுடியாத  அதிசயங்களையும்  அவர்  செய்கிறார்.  {Job  5:9}

 

தாழ்ந்தவர்களை  உயரத்தில்  வைத்து,  துக்கிக்கிறவர்களை  இரட்சித்து  உயர்த்துகிறார்.  {Job  5:10}

 

அவர்  பூமியின்மேல்  மழையை  வருஷிக்கப்பண்ணி,  வெளிநிலங்களின்மேல்  தண்ணீர்களை  வருவிக்கிறார்.  {Job  5:11}

 

தந்திரக்காரரின்  கைகள்  காரியத்தை  முடிய  நடத்தக்கூடாதபடிக்கு,  அவர்களுடைய  உபாயங்களை  அவர்  அபத்தமாக்குகிறார்.  {Job  5:12}

 

அவர்  ஞானிகளை  அவர்களுடைய  தந்திரத்திலே  பிடிக்கிறார்;  திரியாவரக்காரரின்  ஆலோசனை  கவிழ்க்கப்படும்.  {Job  5:13}

 

அவர்கள்  பகற்காலத்திலே  அந்தகாரத்துக்குள்ளாகி,  மத்தியான  வேளையிலே  இரவில்  தடவுகிறதுபோலத்  தடவித்  திரிகிறார்கள்.  {Job  5:14}

 

ஆனாலும்  எளியவனை  அவர்கள்  வாயிலிருக்கிற  பட்டயத்துக்கும்,  பெலவானின்  கைக்கும்  விலக்கி  இரட்சிக்கிறார்.  {Job  5:15}

 

அதினால்  தரித்திரனுக்கு  நம்பிக்கை  உண்டு;  தீமையானது  தன்  வாயை  மூடும்.  {Job  5:16}

 

இதோ,  தேவன்  தண்டிக்கிற  மனுஷன்  பாக்கியவான்;  ஆகையால்  சர்வவல்லவருடைய  சிட்சையை  அற்பமாக  எண்ணாதிரும்.  {Job  5:17}

 

அவர்  காயப்படுத்திக்  காயங்கட்டுகிறார்;  அவர்  அடிக்கிறார்,  அவருடைய  கை  ஆற்றுகிறது.  {Job  5:18}

 

ஆறு  இக்கட்டுகளுக்கு  உம்மை  நீங்கலாக்குவார்;  ஏழாவதிலும்  பொல்லாப்பு  உம்மைத்  தொடாது.  {Job  5:19}

 

பஞ்சகாலத்திலே  அவர்  உம்மை  மரணத்துக்கும்,  யுத்தத்திலே  பட்டயத்தின்  வெட்டுக்கும்  விலக்கி  மீட்பார்.  {Job  5:20}

 

நாவின்  சவுக்குக்கும்  மறைக்கப்படுவீர்;  பாழாக்குதல்  வரும்போதும்  பயப்படாமலிருப்பீர்.  {Job  5:21}

 

பாழாக்குதலையும்  பஞ்சத்தையும்  பார்த்து  நகைப்பீர்;  காட்டுமிருகங்களுக்கும்  பயப்படாமலிருப்பீர்.  {Job  5:22}

 

வெளியின்  கல்லுகளோடும்  உமக்கு  உடன்படிக்கையிருக்கும்;  வெளியின்  மிருகங்களும்  உம்மோடே  சமாதானமாயிருக்கும்.  {Job  5:23}

 

உம்முடைய  கூடாரம்  சமாதானத்தோடிருக்கக்  காண்பீர்;  உம்முடைய  வாசஸ்தலத்தை  விசாரிக்கும்போது  குறைவைக்  காணமாட்டீர்.  {Job  5:24}

 

உம்முடைய  சந்தானம்  பெருகி,  உம்முடைய  சந்ததியார்  பூமியின்  பூண்டுகளைப்போல  இருப்பார்கள்  என்பதை  அறிந்துகொள்வீர்.  {Job  5:25}

 

தானியம்  ஏற்றகாலத்திலே  அம்பாரத்தில்  சேருகிறதுபோல,  முதிர்வயதிலே  கல்லறையில்  சேருவீர்.  {Job  5:26}

 

இதோ,  நாங்கள்  ஆராய்ந்து  அறிந்தது  இதுதான்;  காரியம்  இப்படியிருக்கிறது;  இதை  நீர்  கேட்டு  உமக்கு  நன்மையுண்டாக  அறிந்துகொள்ளும்  என்றான்.  {Job  5:27}

 

யோபு<Job>  பிரதியுத்தரமாக:  {Job  6:1}

 

என்  சஞ்சலம்  நிறுக்கப்பட்டு,  என்  நிர்ப்பந்தம்  எல்லாம்  தராசிலே  வைக்கப்பட்டால்  நலமாயிருக்கும்.  {Job  6:2}

 

அப்பொழுது  அது  கடற்கரை  மணலைப்பார்க்கிலும்  பாரமாயிருக்கும்;  ஆகையால்  என்  துக்கம்  சொல்லிமுடியாது.  {Job  6:3}

 

சர்வவல்லவரின்  அம்புகள்  எனக்குள்  தைத்திருக்கிறது;  அவைகளின்  விஷம்  என்  உயிரைக்  குடிக்கிறது;  தேவனால்  உண்டாகும்  பயங்கரங்கள்  எனக்கு  முன்பாக  அணியணியாய்  நிற்கிறது.  {Job  6:4}

 

புல்லிருக்கிற  இடத்திலே  காட்டுக்கழுதை  கத்துமோ?  தனக்குத்  தீவனமிருக்கிற  இடத்திலே  எருது  கதறுமோ?  {Job  6:5}

 

ருசியில்லாத  பதார்த்தத்தை  உப்பில்லாமல்  சாப்பிடக்கூடுமோ?  முட்டையின்  வெள்ளைக்கருவில்  சுவை  உண்டோ?  {Job  6:6}

 

உங்கள்  வார்த்தைகளை  என்  ஆத்துமா  தொடமாட்டேன்  என்கிறது;  அவைகள்  அரோசிகமான  போஜனம்போல்  இருக்கிறது.  {Job  6:7}

 

,  என்  மன்றாட்டு  எனக்கு  அருளப்பட்டு,  நான்  வாஞ்சிப்பதைத்  தேவன்  எனக்குத்  தந்து,  {Job  6:8}

 

தேவன்  என்னை  நொறுக்கச்  சித்தமாய்,  தம்முடைய  கையை  நீட்டி  என்னைத்  துண்டித்துப்போட்டால்  நலமாயிருக்கும்.  {Job  6:9}

 

அப்பொழுதாவது  எனக்கு  ஆறுதல்  இருக்குமே;  அப்பொழுது  என்னைத்  தப்பவிடாத  நோவிலே  மரத்திருப்பேன்;  பரிசுத்தருடைய  வார்த்தைகளை  நான்  மறைத்துவைக்கவில்லை,  அவர்  என்னைத்  தப்பவிடாராக.  {Job  6:10}

 

நான்  காத்துக்கொண்டிருக்க  என்  பெலன்  எம்மாத்திரம்?  என்  ஜீவனை  நீடித்திருக்கப்பண்ண  என்  முடிவு  எப்படிப்பட்டது?  {Job  6:11}

 

என்  பெலன்  கற்களின்  பெலனோ?  என்  மாம்சம்  வெண்கலமோ?  {Job  6:12}

 

எனக்கு  உதவியானது  ஒன்றும்  இல்லையல்லவோ?  சகாயம்  என்னைவிட்டு  நீங்கிற்றே.  {Job  6:13}

 

உபாதிக்கப்படுகிறவனுக்கு  அவனுடைய  சிநேகிதனால்  தயைகிடைக்கவேண்டும்;  அவனோ  சர்வவல்லவருக்குப்  பயப்படாதேபோகிறான்.  {Job  6:14}

 

என்  சகோதரர்  காட்டாறுபோல  மோசம்பண்ணுகிறார்கள்;  ஆறுகளின்  வெள்ளத்தைப்போலக்  கடந்துபோகிறார்கள்.  {Job  6:15}

 

அவைகள்  குளிர்காலப்  பனிக்கட்டியினாலும்,  அதில்  விழுந்திருக்கிற  உறைந்த  மழையினாலும்  கலங்கலாகி,  {Job  6:16}

 

உஷ்ணங்கண்டவுடனே  உருகி  வற்றி,  அனல்பட்டவுடனே  தங்கள்  ஸ்தலத்தில்  உருவழிந்துபோகின்றன.  {Job  6:17}

 

அவைகளுடைய  வழிகளின்  போக்குகள்  இங்குமங்கும்  பிரியும்;  அவைகள்  விருதாவிலே  பரவி  ஒன்றும்  இல்லாமற்போகும்.  {Job  6:18}

 

தேமாவின்<Tema>  பயணக்காரர்  தேடி,  சேபாவின்<Sheba>  பயணக்கூட்டங்கள்  அவைகள்மேல்  நம்பிக்கை  வைத்து,  {Job  6:19}

 

தாங்கள்  இப்படி  நம்பினதினாலே  வெட்கப்படுகிறார்கள்;  அவ்விடமட்டும்  வந்து  கலங்கிப்போகிறார்கள்.  {Job  6:20}

 

அப்படியே  நீங்களும்  இப்பொழுது  ஒன்றுக்கும்  உதவாமற்போனீர்கள்;  என்  ஆபத்தைக்  கண்டு  பயப்படுகிறீர்கள்.  {Job  6:21}

 

எனக்கு  ஏதாகிலும்  கொண்டுவாருங்கள்  என்றும்,  உங்கள்  ஆஸ்தியிலிருந்து  எனக்கு  யாதொரு  வெகுமானம்  கொடுங்கள்  என்றும்;  {Job  6:22}

 

அல்லது  சத்துருவின்  கைக்கு  என்னைத்  தப்புவியுங்கள்,  வல்லடிக்காரரின்  கைக்கு  என்னை  நீங்கலாக்கி  மீட்டு  விடுங்கள்  என்றும்  நான்  சொன்னதுண்டோ?  {Job  6:23}

 

எனக்கு  உபதேசம்பண்ணுங்கள்,  நான்  மவுனமாயிருப்பேன்;  நான்  எதிலே  தவறினேனோ  அதை  எனக்குத்  தெரியப்படுத்துங்கள்.  {Job  6:24}

 

செம்மையான  வார்த்தைகளில்  எவ்வளவு  வல்லமை  உண்டு?  உங்கள்  கடிந்துகொள்ளுதலினால்  காரியம்  என்ன?  {Job  6:25}

 

கடிந்துகொள்ள  நீங்கள்  வார்த்தைகளை  யோசித்து,  நம்பிக்கையற்றவனுடைய  வார்த்தைகளைக்  காற்றிலே  விட்டுவிடுகிறீர்களோ?  {Job  6:26}

 

இப்படிச்  செய்து  திக்கற்றவன்மேல்  நீங்கள்  விழுந்து,  உங்கள்  சிநேகிதனுக்குப்  படுகுழியை  வெட்டுகிறீர்கள்.  {Job  6:27}

 

இப்போதும்  உங்களுக்குச்  சித்தமானால்  என்னை  நோக்கிப்  பாருங்கள்;  அப்பொழுது  நான்  பொய்சொல்லுகிறேனோ  என்று  உங்களுக்குப்  பிரத்தியட்சமாய்  விளங்கும்.  {Job  6:28}

 

நீங்கள்  திரும்புங்கள்,  அக்கிரமம்  காணப்படாதிருக்கும்;  திரும்புங்கள்  என்  நீதி  அதிலே  விளங்கும்.  {Job  6:29}

 

என்  நாவிலே  அக்கிரமம்  உண்டோ?  என்  வாய்  ஆகாதவைகளைப்  பகுத்தறியாதோ?  {Job  6:30}

 

பூமியிலே  போராட  மனுஷனுக்குக்  குறிக்கப்பட்ட  காலம்  உண்டல்லவோ?  அவன்  நாட்கள்  ஒரு  கூலிக்காரன்  நாட்களைப்போல்  இருக்கிறதல்லவோ?  {Job  7:1}

 

ஒரு  வேலையாள்  நிழலை  வாஞ்சித்து,  ஒரு  கூலிக்காரன்  தன்  கூலியை  வரப்பார்த்திருக்கிறதுபோல,  {Job  7:2}

 

மாயையான  மாதங்கள்  என்னுடைய  சுதந்தரமாகி,  சஞ்சலமான  ராத்திரிகள்  எனக்குக்  குறிக்கப்பட்டது.  {Job  7:3}

 

நான்  படுத்துக்கொள்ளுகிறபோது,  எப்பொழுது  எழுந்திருப்பேன்?  இராக்காலம்  எப்பொழுது  முடியும்  என்று  சொல்லி,  கிழக்கு  வெளுக்குமட்டும்  அரண்டு  புரளுகிறதினால்  எனக்குப்  போதுமென்று  போகிறது.  {Job  7:4}

 

என்  மாம்சம்  பூச்சிகளினாலும்,  அடைபற்றின  புழுதியினாலும்  மூடப்பட்டிருக்கிறது;  என்  தோல்  வெடித்து  அருவருப்பாயிற்று.  {Job  7:5}

 

என்  நாட்கள்  நெய்கிறவன்  எறிகிற  நாடாவிலும்  தீவிரமாய்  ஓடுகிறது;  அவைகள்  நம்பிக்கையில்லாமல்  முடிந்துபோகும்.  {Job  7:6}

 

என்  பிராணன்  காற்றைப்போலிருக்கிறதென்றும்,  என்  கண்கள்  இனி  நன்மையைக்  காணப்போகிறதில்லையென்றும்  நினைத்தருளும்.  {Job  7:7}

 

இப்போது  என்னைக்  காண்கிறவர்களின்  கண்கள்  இனி  என்னைக்  காண்பதில்லை;  உம்முடைய  கண்கள்  என்மேல்  நோக்கமாயிருக்கிறது;  நானோ  இல்லாமற்போகிறேன்.  {Job  7:8}

 

மேகம்  பறந்துபோகிறதுபோல,  பாதாளத்தில்  இறங்குகிறவன்  இனி  ஏறிவரான்.  {Job  7:9}

 

இனி  தன்  வீட்டுக்குத்  திரும்பான்,  அவன்  ஸ்தலம்  இனி  அவனை  அறியாது.  {Job  7:10}

 

ஆகையால்  நான்  என்  வாயை  அடக்காமல்,  என்  ஆவியின்  வேதனையினால்  பேசி,  என்  ஆத்துமத்தின்  கசப்பினால்  அங்கலாய்ப்பேன்.  {Job  7:11}

 

தேவரீர்  என்மேல்  காவல்  வைக்கிறதற்கு  நான்  சமுத்திரமோ?  நான்  ஒரு  திமிங்கிலமோ?  {Job  7:12}

 

என்  கட்டில்  எனக்கு  ஆறுதல்  கொடுக்கும்  என்றும்,  என்  படுக்கை  என்  தவிப்பை  ஆற்றும்  என்றும்  நான்  சொல்வேனாகில்,  {Job  7:13}

 

நீர்  சொப்பனங்களால்  என்னைக்  கலங்கப்பண்ணி,  தரிசனங்களால்  எனக்குத்  திகிலுண்டாக்குகிறீர்.  {Job  7:14}

 

அதினால்  என்  ஆத்துமா,  நெருக்குண்டு  சாகிறதையும்,  என்  எலும்புகளோடே  உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும்,  மரணத்தையும்  விரும்புகிறது.  {Job  7:15}

 

இப்படியிருக்கிறதை  அரோசிக்கிறேன்;  எந்நாளும்  உயிரோடிருக்க  விரும்பேன்,  என்னை  விட்டுவிடும்;  என்  நாட்கள்  மாயைதானே.  {Job  7:16}

 

மனுஷனை  நீர்  ஒரு  பொருட்டாக  எண்ணுகிறதற்கும்,  அவன்மேல்  சிந்தை  வைக்கிறதற்கும்,  {Job  7:17}

 

காலைதோறும்  அவனை  விசாரிக்கிறதற்கும்,  நிமிஷந்தோறும்  அவனைச்  சோதிக்கிறதற்கும்,  அவன்  எம்மாத்திரம்?  {Job  7:18}

 

நான்  என்  உமிழ்நீரை  விழுங்காதபடி  எத்தனைகாலம்  என்னை  நெகிழாமலும்,  என்னை  விடாமலும்  இருப்பீர்.  {Job  7:19}

 

மன்னுயிரைக்  காப்பவரே,  பாவஞ்செய்தேனானால்  உமக்கு  நான்  செய்யவேண்டியது  என்ன?  நான்  எனக்குத்தானே  பாரமாயிருக்கும்படிக்கு,  நீர்  என்னை  உமக்கு  இலக்காக  வைத்தது  என்ன?  {Job  7:20}

 

என்  மீறுதலை  நீர்  மன்னியாமலும்,  என்  அக்கிரமத்தை  நீக்காமலும்  இருக்கிறது  என்ன?  இப்பொழுதே  மண்ணில்  படுத்துக்கொள்வேன்;  விடியற்காலத்திலே  என்னைத்  தேடுவீரானால்  நான்  இரேன்  என்றான்.  {Job  7:21}

 

அப்பொழுது  சூகியனான<Shuhite>  பில்தாத்<Bildad>  பிரதியுத்தரமாக:  {Job  8:1}

 

நீர்  எந்தமட்டும்  இப்படிப்பட்டவைகளைப்  பேசுவீர்?  எதுவரைக்கும்  உம்முடைய  வாயின்  வார்த்தைகள்  பலமான  காற்றைப்போலிருக்கும்?  {Job  8:2}

 

தேவன்  நியாயத்தைப்  புரட்டுவாரோ?  சர்வவல்லவர்  நீதியைப்  புரட்டுவாரோ?  {Job  8:3}

 

உம்முடைய  பிள்ளைகள்  அவருக்கு  விரோதமாய்ப்  பாவஞ்செய்திருந்தாலும்  அவர்களுடைய  பாதகத்தின்  ஆக்கினைக்கு  அவர்களை  அவர்  ஒப்புக்கொடுத்திருந்தாலும்,  {Job  8:4}

 

நீர்  தேவனை  ஏற்கனவே  தேடி,  சர்வவல்லவரை  நோக்கி  விண்ணப்பஞ்செய்து,  {Job  8:5}

 

சுத்தமும்  செம்மையுமாய்  இருந்தீரேயானால்,  அப்பொழுது  அவர்  உமக்காக  விழித்து  நீதியுள்ள  உம்முடைய  வாசஸ்தலத்தைச்  சாங்கோபாங்கமாக்குவார்.  {Job  8:6}

 

உம்முடைய  துவக்கம்  அற்பமாயிருந்தாலும்,  உம்முடைய  முடிவு  சம்பூரணமாயிருக்கும்.  {Job  8:7}

 

ஆகையால்,  நீர்  முந்தின  தலைமுறையாரிடத்தில்  விசாரித்து,  அவர்கள்  முன்னோர்களின்  செய்தியை  ஆராய்ந்துபாரும்.  {Job  8:8}

 

நாம்  நேற்று  உண்டானவர்கள்,  ஒன்றும்  அறியோம்;  பூமியின்மேல்  நம்முடைய  நாட்கள்  நிழலைப்போலிருக்கிறது.  {Job  8:9}

 

அவர்கள்  உமக்கு  உபதேசித்து,  உமக்குத்  தெரிவித்து,  தங்கள்  இருதயத்திலிருக்கும்  நியாயங்களை  வெளிப்படுத்துவார்கள்  அல்லவோ?  {Job  8:10}

 

சேறில்லாமல்  நாணல்  ஓங்கி  வளருமோ?  தண்ணீரில்லாமல்  கோரைப்புல்  முளைக்குமோ?  {Job  8:11}

 

அது  இன்னும்  பச்சையாயிருக்கும்போதே,  அறுக்கப்படாதிருந்தும்  மற்ற  எந்தப்  புல்லைப்பார்க்கிலும்  சீக்கிரமாய்  வாடிப்போம்  அல்லவோ?  {Job  8:12}

 

தேவனை  மறக்கிற  எல்லாருடைய  வழிகளும்  அப்படியே  இருக்கும்;  மாயக்காரரின்  நம்பிக்கை  அழிந்துபோம்.  {Job  8:13}

 

அவனுடைய  வீண்  எண்ணம்  அற்றுப்போய்,  அவனுடைய  நம்பிக்கை  சிலந்திப்பூச்சி  வீடுபோலிருக்கும்.  {Job  8:14}

 

ஒருவன்  அதின்  வீட்டின்மேல்  சாய்ந்தால்,  அது  நிலைக்கமாட்டாது,  அதைப்  பிடித்தால்,  அது  நிற்காது.  {Job  8:15}

 

வெயில்  எரிக்காததற்கு  முன்னே  அவன்  பச்சைச்செடி,  அதின்  கொடிகள்  அவன்  தோட்டத்தின்மேலே  படரும்;  {Job  8:16}

 

அதின்  வேர்கள்  கற்குவியலில்  சிக்கி,  கற்பாறையை  நாடும்.  {Job  8:17}

 

அது  அதினிடத்தில்  இராதபடிக்கு  நிர்மூலமானபின்,  அது  இருந்த  இடம்  உன்னை  நான்  கண்டதில்லையென்று  மறுதலிக்கும்.  {Job  8:18}

 

இதோ,  அவன்  வழியின்  மகிழ்ச்சி  இப்படியே  போகிறது;  ஆனாலும்  வேறே  பேர்  மண்ணிலிருந்து  முளைப்பார்கள்.  {Job  8:19}

 

இதோ,  தேவன்  உத்தமனை  வெறுக்கிறதுமில்லை,  பொல்லாதவர்களுக்குக்  கைகொடுக்கிறதுமில்லை.  {Job  8:20}

 

இனி  அவர்  உம்முடைய  வாயை  நகைப்பினாலும்,  உம்முடைய  உதடுகளைக்  கெம்பீரத்தினாலும்  நிரப்புவார்.  {Job  8:21}

 

உம்மைப்  பகைக்கிறவர்கள்  வெட்கத்தால்  மூடப்படுவார்கள்;  துன்மார்க்கருடைய  கூடாரம்  அழிந்துபோகும்  என்றான்.  {Job  8:22}

 

அதற்கு  யோபு<Job>  பிரதியுத்தரமாக:  {Job  9:1}

 

ஆம்,  காரியம்  இப்படியிருக்கிறது  என்று  அறிவேன்;  தேவனுக்கு  முன்பாக  மனுஷன்  நீதிமானாயிருப்பதெப்படி?  {Job  9:2}

 

அவர்  அவனோடே  வழக்காடச்  சித்தமாயிருந்தால்,  ஆயிரத்தில்  ஒன்றுக்காகிலும்  அவருக்கு  உத்தரவு  சொல்லமாட்டானே.  {Job  9:3}

 

அவர்  இருதயத்தில்  ஞானமுள்ளவர்,  பெலத்தில்  பராக்கிரமமுள்ளவர்;  அவருக்கு  விரோதமாகத்  தன்னைக்  கடினப்படுத்தி  வாழ்ந்தவன்  யார்?  {Job  9:4}

 

அவர்  பர்வதங்களைச்  சடிதியாய்ப்  பேர்க்கிறார்;  தம்முடைய  கோபத்தில்  அவைகளைப்  புரட்டிப்போடுகிறார்.  {Job  9:5}

 

பூமியின்  தூண்கள்  அதிரத்தக்கதாய்  அதை  அதின்  ஸ்தானத்தினின்று  அசையப்பண்ணுகிறார்.  {Job  9:6}

 

அவர்  சூரியனுக்குக்  கட்டளையிட  அது  உதிக்காதிருக்கும்;  அவர்  நட்சத்திரங்களை  மறைத்துப்போடுகிறார்.  {Job  9:7}

 

அவர்  ஒருவரே  வானங்களை  விரித்து,  சமுத்திர  அலைகளின்மேல்  நடக்கிறவர்.  {Job  9:8}

 

அவர்  துருவச்சக்கர  நட்சத்திரங்களையும்,  மிருகசீரிஷத்தையும்,  அறுமீனையும்,  தட்சண  மண்டலங்களையும்  உண்டாக்கினவர்.  {Job  9:9}

 

ஆராய்ந்து  முடியாத  பெரிய  காரியங்களையும்,  எண்ணிமுடியாத  அதிசயங்களையும்  அவர்  செய்கிறார்.  {Job  9:10}

 

இதோ,  அவர்  என்  அருகில்  போகிறார்,  நான்  அவரைக்  காணேன்;  அவர்  கடந்துபோகிறார்,  நான்  அவரை  அறியேன்.  {Job  9:11}

 

இதோ,  அவர்  பறித்துக்கொண்டுபோகிறார்,  அவரை  மறிப்பவன்  யார்?  நீர்  என்ன  செய்கிறீர்  என்று  அவரைக்  கேட்பவன்  யார்?  {Job  9:12}

 

தேவன்  தம்முடைய  கோபத்தைத்  திருப்பமாட்டார்;  ஒருவருக்கொருவர்  துணைநிற்கிற  அகங்காரிகள்  அவருக்கு  அடங்கவேண்டும்.  {Job  9:13}

 

இப்படியிருக்க,  அவருக்கு  மறுமொழி  கொடுக்கவும்,  அவரோடே  வழக்காடும்  வார்த்தைகளைத்  தெரிந்துகொள்ளவும்  நான்  எம்மாத்திரம்?  {Job  9:14}

 

நான்  நீதிமானாயிருந்தாலும்  அவரோடே  வழக்காடாமல்,  என்  நியாயாதிபதியினிடத்தில்  இரக்கத்துக்குக்  கெஞ்சுவேன்.  {Job  9:15}

 

நான்  கெஞ்ச,  அவர்  எனக்கு  உத்தரவு  அருளினாலும்,  அவர்  என்  விண்ணப்பத்துக்குச்  செவிகொடுத்தார்  என்று  நம்பேன்.  {Job  9:16}

 

அவர்  புசலினால்  என்னை  முறிக்கிறார்;  முகாந்தரமில்லாமல்  அநேகம்  காயங்களை  எனக்கு  உண்டாக்குகிறார்.  {Job  9:17}

 

நான்  மூச்சுவிட  எனக்கு  இடங்கொடாமல்,  கசப்பினால்  என்னை  நிரப்புகிறார்.  {Job  9:18}

 

பெலத்தைப்  பார்த்தால்,  அவரே  பெலத்தவர்;  நியாயத்தைப்  பார்த்தால்,  என்  பட்சத்தில்  சாட்சி  சொல்லுகிறவன்  யார்?  {Job  9:19}

 

நான்  என்னை  நீதிமானாக்கினாலும்  என்  வாயே  என்னைக்  குற்றவாளியாக்கும்;  நான்  உத்தமன்  என்று  சொன்னாலும்,  நான்  மாறுபாடானவன்  என்று  அது  சாட்சிகொடுக்கும்.  {Job  9:20}

 

நான்  உத்தமனென்றாலும்  என்  உள்ளத்தை  நான்  அறியேன்;  என்  ஜீவனை  அரோசிப்பேன்.  {Job  9:21}

 

ஒரு  காரியம்  உண்டு,  அதைச்  சொல்லுகிறேன்;  சன்மார்க்கனையும்  துன்மார்க்கனையும்  அவர்  அழிக்கிறார்.  {Job  9:22}

 

சவுக்கானது  அசுப்பிலே  வாதித்துக்  கொல்லும்போது,  அவர்  குற்றமில்லாதவர்களின்  சோதனையைப்பார்த்து  நகைக்கிறார்.  {Job  9:23}

 

உலகம்  துன்மார்க்கர்  கையில்  விடப்பட்டிருக்கிறது;  அதிலிருக்கிற  நியாயாதிபதிகளின்  முகத்தை  மூடிப்போடுகிறார்;  அவர்  இதைச்  செய்கிறதில்லையென்றால்,  பின்னை  யார்  இதைச்  செய்கிறார்.  {Job  9:24}

 

என்  நாட்கள்  அஞ்சற்காரர்  ஓட்டத்திலும்  தீவிரமாயிருக்கிறது;  அவைகள்  நன்மையைக்  காணாமல்  பறந்துபோம்.  {Job  9:25}

 

அவைகள்  வேகமாய்  ஓடுகிற  கப்பல்களைப்போலவும்,  இரையின்மேல்  பாய்கிற  கழுகைப்போலவும்  கடந்துபோகிறது.  {Job  9:26}

 

என்  அங்கலாய்ப்பை  நான்  மறந்து,  என்  முகத்தின்  துக்கத்தை  மாற்றி,  திடன்கொள்வேன்  என்று  சொன்னால்,  {Job  9:27}

 

என்  வருத்தங்களைப்பற்றிப்  பயமாயிருக்கிறேன்;  என்னைக்  குற்றமில்லாதவனாக  எண்ணமாட்டீர்  என்று  அறிவேன்.  {Job  9:28}

 

நான்  பொல்லாதவனாயிருந்தால்,  விருதாவாய்ப்  போராடவேண்டியது  என்ன?  {Job  9:29}

 

நான்  உறைந்த  மழைத்  தண்ணீரில்  முழுகி,  என்  கைகளைச்  சவுக்காரத்தினால்  சுத்தம்பண்ணினாலும்,  {Job  9:30}

 

நீர்  என்னைச்  சேற்றுப்பள்ளத்திலே  அமிழ்த்துவீர்.  அப்பொழுது  என்  வஸ்திரமே  என்னை  அருவருக்கும்.  {Job  9:31}

 

நான்  அவருக்குப்  பிரதியுத்தரம்  சொல்லுகிறதற்கும்,  நாங்கள்  கூடி  நியாயத்திற்கு  வருகிறதற்கும்,  அவர்  என்னைப்போல  மனுஷன்  அல்லவே.  {Job  9:32}

 

எங்கள்  இருவர்மேலும்  தன்  கையை  வைக்கத்தக்க  மத்தியஸ்தன்  எங்களுக்குள்  இல்லையே.  {Job  9:33}

 

அவர்  தமது  மிலாற்றை  என்னை  விட்டு  அகற்றுவாராக;  அவருடைய  பயங்கரம்  என்னைக்  கலங்கப்பண்ணாதிருப்பதாக.  {Job  9:34}

 

அப்பொழுது  நான்  அவருக்குப்  பயப்படாமல்  பேசுவேன்;  இப்பொழுதோ  அப்படிச்  செய்ய  இடமில்லை.  {Job  9:35}

 

என்  ஆத்துமா  ஜீவனை  அரோசிக்கிறது,  நான்  என்  துயரத்துக்கு  எனக்குள்ளே  இடங்கொடுத்து,  என்  மனச்சஞ்சலத்தினாலே  பேசுவேன்.  {Job  10:1}

 

நான்  தேவனை  நோக்கி:  என்னைக்  குற்றவாளியென்று  தீர்க்காதிரும்;  நீர்  எதினிமித்தம்  என்னோடே  வழக்காடுகிறீர்,  அதை  எனக்குத்  தெரியப்படுத்தும்  என்பேன்.  {Job  10:2}

 

நீர்  என்னை  ஒடுக்கி,  உம்முடைய  கைகளின்  கிரியையை  வெறுத்து,  துன்மார்க்கரின்  யோசனையைக்  கிருபையாய்ப்  பார்க்கிறது  உமக்கு  நன்றாயிருக்குமோ?  {Job  10:3}

 

மாம்சக்  கண்கள்  உமக்கு  உண்டோ?  மனுஷன்  பார்க்கிறபிரகாரமாய்ப்  பார்க்கிறீரோ?  {Job  10:4}

 

நீர்  என்  அக்கிரமத்தைக்  கிண்டிக்கிளப்பி,  என்  பாவத்தை  ஆராய்ந்து  விசாரிக்கிறதற்கு,  {Job  10:5}

 

உம்முடைய  நாட்கள்  ஒரு  மனுஷனுடைய  நாட்களைப்போலவும்,  உம்முடைய  வருஷங்கள்  ஒரு  புருஷனுடைய  ஜீவகாலத்தைப்போலவும்  இருக்கிறதோ?  {Job  10:6}

 

நான்  துன்மார்க்கன்  அல்ல  என்பது  உமக்குத்  தெரியும்;  உம்முடைய  கைக்கு  என்னைத்  தப்புவிக்கிறவன்  இல்லை.  {Job  10:7}

 

உம்முடைய  கரங்கள்  என்னையும்  எனக்குரிய  எல்லாவற்றையும்  உருவாக்கிப்  படைத்திருந்தும்,  என்னை  நிர்மூலமாக்குகிறீர்.  {Job  10:8}

 

களிமண்போல  என்னை  உருவாக்கினீர்  என்பதையும்,  என்னைத்  திரும்பத்  தூளாகப்போகப்பண்ணுவீர்  என்பதையும்  நினைத்தருளும்.  {Job  10:9}

 

நீர்  என்னைப்  பால்போல்  வார்த்து,  தயிர்போல்  உறையப்பண்ணினீர்  அல்லவோ?  {Job  10:10}

 

தோலையும்  சதையையும்  எனக்குத்  தரித்து,  எலும்புகளாலும்  நரம்புகளாலும்  என்னை  இசைத்தீர்.  {Job  10:11}

 

எனக்கு  ஜீவனைத்  தந்ததும்  அல்லாமல்,  தயவையும்  எனக்குப்  பாராட்டினீர்;  உம்முடைய  பராமரிப்பு  என்  ஆவியைக்  காப்பாற்றினது.  {Job  10:12}

 

இவைகள்  உம்முடைய  உள்ளத்தில்  மறைந்திருந்தாலும்,  இது  உமக்குள்  இருக்கிறது  என்று  அறிவேன்.  {Job  10:13}

 

நான்  பாவஞ்செய்தால்,  அதை  நீர்  என்னிடத்தில்  விசாரித்து,  என்  அக்கிரமத்தை  என்மேல்  சுமத்தாமல்  விடீர்.  {Job  10:14}

 

நான்  துன்மார்க்கனாயிருந்தால்  எனக்கு  ஐயோ!  நான்  நீதிமானாயிருந்தாலும்  என்  தலையை  நான்  எடுக்கமாட்டேன்;  அவமானத்தால்  நிரப்பப்பட்டேன்;  நீர்  என்  சிறுமையைப்  பார்த்தருளும்,  அது  அதிகரிக்கிறது.  {Job  10:15}

 

சிங்கத்தைப்போல  என்னை  வேட்டையாடி,  எனக்கு  விரோதமாய்  உமது  அதிசய  வல்லமையை  விளங்கப்பண்ணுகிறீர்.  {Job  10:16}

 

நீர்  உம்முடைய  சாட்சிகளை  எனக்கு  விரோதமாய்  இரட்டிக்கப்பண்ணுகிறீர்;  என்மேல்  உம்முடைய  கோபத்தை  அதிகரிக்கப்பண்ணுகிறீர்;  போராட்டத்தின்மேல்  போராட்டம்  அதிகரிக்கிறது.  {Job  10:17}

 

நீர்  என்னைக்  கர்ப்பத்திலிருந்து  புறப்படப்பண்ணினது  என்ன?  ஒரு  கண்ணும்  என்னைக்  காணாதபடி,  நான்  அப்பொழுதே  ஜீவித்துப்போனால்  நலமாமே.  {Job  10:18}

 

நான்  ஒருக்காலும்  இல்லாதது  போலிருந்து,  கர்ப்பத்திலிருந்து  பிரேதக்குழிக்குக்  கொண்டுபோகப்பட்டிருப்பேன்.  {Job  10:19}

 

என்  நாட்கள்  கொஞ்சமல்லவோ?  {Job  10:20}

 

காரிருளும்  மரணாந்தகாரமுமான  இருண்ட  தேசமும்,  இருள்சூழ்ந்த  ஒழுங்கில்லாத  மரணாந்தகாரமுள்ள  தேசமும்,  ஒளியும்  இருளாகும்  தேசமுமாகிய,  போனால்  திரும்பிவராத  தேசத்துக்கு,  நான்  போகுமுன்னே,  {Job  10:21}

 

நான்  சற்று  இளைப்பாறும்படி  நீர்  என்னைவிட்டு  ஓய்ந்திரும்  என்றான்.  {Job  10:22}

 

அப்பொழுது  நாகமாத்தியனாகிய<Naamathite>  சோப்பார்<Zophar>  பிரதியுத்தரமாக:  {Job  11:1}

 

ஏராளமான  வார்த்தைகளுக்கு  உத்தரவு  சொல்லவேண்டாமோ?  வாய்ச்சாலகன்  நீதிமானாய்  விளங்குவானோ?  {Job  11:2}

 

உம்முடைய  வீம்புவார்த்தைகளுக்கு  மனுஷர்  மவுனமாயிருப்பார்களோ?  நீர்  பரியாசம்பண்ணும்போது,  ஒருவரும்  உம்மை  வெட்கப்படுத்த  வேண்டாமோ?  {Job  11:3}

 

என்  சொல்  சுத்தம்  என்றும்,  நான்  தேவரீருடைய  பார்வைக்குத்  துப்புரவானவன்  என்றும்  நீர்  சொல்லுகிறீர்.  {Job  11:4}

 

ஆனாலும்  தேவன்  பேசி,  உமக்கு  விரோதமாய்த்  தம்முடைய  உதடுகளைத்  திறந்து,  {Job  11:5}

 

உமக்கு  ஞானத்தின்  இரகசியங்களை  வெளிப்படுத்தினால்  நலமாயிருக்கும்;  உள்ளபடி  பார்த்தால்,  அது  இரட்டிப்புள்ளதாயிருக்கிறது;  ஆகையால்  உம்முடைய  அக்கிரமத்திற்கேற்றபடி  தேவன்  உம்மைத்  தண்டிக்கவில்லையென்று  அறிந்துகொள்ளும்.  {Job  11:6}

 

தேவனுடைய  அந்தரங்க  ஞானத்தை  நீர்  ஆராய்ந்து,  சர்வவல்லவருடைய  சம்பூரணத்தை  நீர்  அறியக்கூடுமோ?  {Job  11:7}

 

அது  வானபரியந்தம்  உயர்ந்தது;  உம்மால்  என்ன  ஆகும்?  அது  பாதாளத்திலும்  ஆழமானது,  நீர்  அறியக்கூடியது  என்ன?  {Job  11:8}

 

அதின்  அளவு  பூமியைப்பார்க்கிலும்  நீளமும்,  சமுத்திரத்தைப்பார்க்கிலும்  அகலமுமாயிருக்கிறது.  {Job  11:9}

 

அவர்  பிடித்தாலும்,  அவர்  அடைத்தாலும்,  அவர்  நியாயத்தில்  கொண்டுவந்து  நிறுத்தினாலும்,  அவரைத்  தடைபண்ணுகிறவன்  யார்?  {Job  11:10}

 

மனுஷருடைய  மாயத்தை  அவர்  அறிவார்;  அக்கிரமத்தை  அவர்  கண்டும்,  அதைக்  கவனியாதிருப்பாரோ?  {Job  11:11}

 

புத்தியில்லாத  மனுஷன்  காட்டுக்கழுதைக்குட்டிக்கு  ஒப்பாகப்  பிறந்திருந்தாலும்,  பெருநெஞ்சுள்ளவனாயிருக்கிறான்.  {Job  11:12}

 

நீர்  உம்முடைய  இருதயத்தை  ஆயத்தப்படுத்தி,  உம்முடைய  கைகளை  அவருக்கு  நேராக  விரித்தால்  நலமாயிருக்கும்.  {Job  11:13}

 

உம்முடைய  கையிலே  அக்கிரமம்  இருந்தால்,  அதைத்  தூரத்தில்  அகற்றிவிட்டு,  அநியாயம்  உம்முடைய  கூடாரங்களில்  வாசமாயிருக்கவொட்டாதிரும்.  {Job  11:14}

 

அப்பொழுது  உம்முடைய  முகத்தை  மாசில்லாமல்  ஏறெடுத்து,  பயப்படாமல்  திடன்கொண்டிருப்பீர்.  {Job  11:15}

 

அப்பொழுது  நீர்  வருத்தத்தை  மறந்து,  கடந்துபோன  தண்ணீரைப்போல  அதை  நினைப்பீர்.  {Job  11:16}

 

அப்பொழுது  உம்முடைய  ஆயுசுகாலம்  பட்டப்பகலைப்பார்க்கிலும்  பிரகாசமாயிருக்கும்;  இருள்  அடைந்த  நீர்  விடியற்காலத்தைப்போலிருப்பீர்.  {Job  11:17}

 

நம்பிக்கை  உண்டாயிருக்கிறதினால்  திடனாயிருப்பீர்;  தோண்டி  ஆராய்ந்து  சுகமாய்ப்  படுத்துக்கொள்வீர்.  {Job  11:18}

 

பயப்படுத்துவாரில்லாமல்  நித்திரை  செய்வீர்;  அநேகர்  உமது  முகத்தை  நோக்கி  விண்ணப்பம்பண்ணுவார்கள்.  {Job  11:19}

 

துன்மார்க்கருடைய  கண்கள்  பூத்துப்போய்,  அவர்கள்  அடைக்கலம்  அவர்களை  விட்டொழிந்து,  அவர்கள்  நம்பிக்கை  சாகிறவன்  சுவாசம்போல்  அழிந்துபோகும்  என்றான்.  {Job  11:20}

 

யோபு<Job>  பிரதியுத்தரமாக:  {Job  12:1}

 

ஆம்,  நீங்களே  ஞானமுள்ள  ஜனங்கள்;  உங்களுடனே  ஞானம்  சாகும்.  {Job  12:2}

 

உங்களைப்போல  எனக்கும்  புத்தியுண்டு;  உங்களிலும்  நான்  தாழ்ந்தவன்  அல்ல;  இப்படிப்பட்டவைகளை  அறியாதவன்  யார்?  {Job  12:3}

 

என்  சிநேகிதரால்  நான்  நிந்திக்கப்பட்டு,  தேவனை  நோக்கிப்  பிரார்த்திப்பேன்;  அவர்  எனக்கு  மறுஉத்தரவு  அருளுவார்;  உத்தமனாகிய  நீதிமான்  பரியாசம்பண்ணப்படுகிறான்.  {Job  12:4}

 

ஆபத்துக்குள்ளானவன்  சுகமாயிருக்கிறவனுடைய  நினைவில்  இகழ்ச்சியடைகிறான்;  காலிடறினவர்களுக்கு  இது  நேரிடும்.  {Job  12:5}

 

கள்ளருடைய  கூடாரங்களில்  செல்வமுண்டு;  தேவனைக்  கோபப்படுத்துகிறவர்களுக்குச்  சாங்கோபாங்கமுண்டு;  அவர்கள்  கையிலே  தேவன்  கொண்டுவந்து  கொடுக்கிறார்.  {Job  12:6}

 

இப்போதும்  நீ  மிருகங்களைக்  கேட்டுப்பார்,  அவைகள்  உனக்குப்  போதிக்கும்;  ஆகாயத்துப்  பறவைகளைக்  கேள்,  அவைகள்  உனக்கு  அறிவிக்கும்.  {Job  12:7}

 

அல்லது  பூமியை  விசாரித்துக்  கேள்,  அது  உனக்கு  உபதேசிக்கும்;  சமுத்திரத்தின்  மச்சங்களைக்  கேள்,  அவைகள்  உனக்கு  விவரிக்கும்.  {Job  12:8}

 

கர்த்தருடைய  கரம்  இதைச்  செய்ததென்று  இவைகளெல்லாவற்றினாலும்  அறியாதவன்  யார்?  {Job  12:9}

 

சகல  பிராணிகளின்  ஜீவனும்,  மாம்சமான  சகல  மனுஷரின்  ஆவியும்  அவர்  கையிலிருக்கிறது.  {Job  12:10}

 

வாயானது  போஜனத்தை  ருசிபார்க்கிறதுபோல,  செவியானது  வார்த்தைகளைச்  சோதித்துப்பார்க்கிறதல்லவா?  {Job  12:11}

 

முதியோரிடத்தில்  ஞானமும்  வயதுசென்றவர்களிடத்தில்  புத்தியும்  இருக்குமே.  {Job  12:12}

 

அவரிடத்தில்  ஞானமும்  வல்லமையும்  எத்தனை  அதிகமாய்  இருக்கும்?  அவருக்குத்தான்  ஆலோசனையும்  புத்தியும்  உண்டு.  {Job  12:13}

 

இதோ,  அவர்  இடித்தால்  கட்டமுடியாது;  அவர்  மனுஷனை  அடைத்தால்  விடுவிக்கமுடியாது.  {Job  12:14}

 

இதோ,  அவர்  தண்ணீர்களை  அடக்கினால்  எல்லாம்  உலர்ந்துபோம்;  அவர்  அவைகளை  வரவிட்டால்,  பூமியைக்  கீழதுமேலதாக்கும்.  {Job  12:15}

 

அவரிடத்தில்  பெலனும்  ஞானமுமுண்டு;  மோசம்போகிறவனும்  மோசம்போக்குகிறவனும்,  அவர்  கையின்  கீழிருக்கிறார்கள்.  {Job  12:16}

 

அவர்  ஆலோசனைக்காரரைச்  சிறைபிடித்து,  நியாயாதிபதிகளை  மதிமயக்குகிறார்.  {Job  12:17}

 

அவர்  ராஜாக்களுடைய  கட்டுகளை  அவிழ்த்து,  அவர்கள்  இடுப்புகளைக்  கச்சைகட்டுகிறார்.  {Job  12:18}

 

அவர்  மந்திரிகளைச்  சிறைபிடித்துக்கொண்டுபோய்,  பெலவான்களைக்  கவிழ்த்துப்போடுகிறார்.  {Job  12:19}

 

அவர்  நம்பிக்கையுள்ளவர்களுடைய  வாக்கை  விலக்கி,  முதிர்வயதுள்ளவர்களின்  ஆலோசனையை  வாங்கிப்போடுகிறார்.  {Job  12:20}

 

அவர்  பிரபுக்களின்மேல்  இகழ்ச்சி  வரப்பண்ணுகிறார்;  பலவான்களின்  கச்சையைத்  தளர்ந்துபோகப்பண்ணுகிறார்.  {Job  12:21}

 

அவர்  அந்தகாரத்திலிருக்கிற  ஆழங்களை  வெளியரங்கமாக்கி,  மரண  இருளை  வெளிச்சத்தில்  கொண்டுவருகிறார்.  {Job  12:22}

 

அவர்  ஜாதிகளைப்  பெருகவும்  அழியவும்  பண்ணுகிறார்;  அவர்  ஜாதிகளைப்  பரவவும்  குறுகவும்  பண்ணுகிறார்.  {Job  12:23}

 

அவர்  பூமியிலுள்ள  ஜனத்தினுடைய  அதிபதிகளின்  நெஞ்சை  அகற்றிப்போட்டு,  அவர்களை  வழியில்லாத  அந்தரத்திலே  அலையப்பண்ணுகிறார்.  {Job  12:24}

 

அவர்கள்  வெளிச்சமற்ற  இருளிலே  தடவித்திரிகிறார்கள்;  வெறித்தவர்களைப்போல  அவர்களைத்  தடுமாறித்  திரியப்பண்ணுகிறார்.  {Job  12:25}

 

இதோ,  இவைகளெல்லாவற்றையும்  என்  கண்  கண்டு,  என்  காது  கேட்டு  அறிந்திருக்கிறது.  {Job  13:1}

 

நீங்கள்  அறிந்திருக்கிறதை  நானும்  அறிந்திருக்கிறேன்;  நான்  உங்களுக்குத்  தாழ்ந்தவன்  அல்ல.  {Job  13:2}

 

சர்வவல்லவரோடே  நான்  பேசினால்  நல்லது;  தேவனோடே  நியாயத்திற்காக  வழக்காட  விரும்புவேன்.  {Job  13:3}

 

நீங்கள்  பொய்யைப்  பிணைக்கிறவர்கள்;  நீங்கள்  எல்லாரும்  காரியத்துக்குதவாத  வைத்தியர்கள்.  {Job  13:4}

 

நீங்கள்  பேசாமலிருந்தால்  நலமாகும்;  அது  உங்களுக்கு  ஞானமாயிருக்கும்.  {Job  13:5}

 

நீங்கள்  என்  நியாயத்தைக்  கேட்டு,  என்  உதடுகள்  சொல்லும்  விசேஷங்களைக்  கவனியுங்கள்.  {Job  13:6}

 

நீங்கள்  தேவனுக்காக  நியாயக்கேடாய்ப்  பேசி,  அவருக்காக  வஞ்சகமாய்  வசனிக்கவேண்டுமோ?  {Job  13:7}

 

அவருக்கு  முகதாட்சிணியம்  பண்ணுவீர்களோ?  தேவனுக்காக  வழக்காடுவீர்களோ?  {Job  13:8}

 

அவர்  உங்களை  ஆராய்ந்துபார்த்தால்  அது  உங்களுக்கு  நலமாயிருக்குமோ?  மனுஷனைப்  பரியாசம்பண்ணுகிறதுபோல  அவரைப்  பரியாசம்பண்ணுவீர்களோ?  {Job  13:9}

 

நீங்கள்  அந்தரங்கமாய்  முகதாட்சிணியம்பண்ணினால்,  அவர்  உங்களை  எவ்விதத்திலும்  கண்டிப்பார்.  {Job  13:10}

 

அவருடைய  மகத்துவம்  உங்களைத்  திடுக்கிடப்பண்ணாதோ?  அவருடைய  பயங்கரம்  உங்களைப்  பிடிக்கமாட்டாதோ?  {Job  13:11}

 

உங்கள்  பேரை  நினைக்கப்பண்ணும்  அடையாளங்கள்  சாம்பலுக்குச்  சரி;  உங்கள்  மேட்டிமைகள்  சேற்றுக்குவியல்களுக்குச்  சமானம்.  {Job  13:12}

 

நீங்கள்  மவுனமாயிருங்கள்,  நான்  பேசுகிறேன்,  எனக்கு  வருகிறது  வரட்டும்.  {Job  13:13}

 

நான்  என்  பற்களினால்  என்  சதையைப்  பிடுங்கி,  என்  பிராணனை  என்  கையிலே  வைப்பானேன்?  {Job  13:14}

 

அவர்  என்னைக்  கொன்றுபோட்டாலும்,  அவர்மேல்  நம்பிக்கையாயிருப்பேன்;  ஆனாலும்  என்  வழிகளை  அவருக்கு  முன்பாக  ரூபகாரம்பண்ணுவேன்.  {Job  13:15}

 

அவரே  என்  இரட்சிப்பு;  மாயக்காரனோ  அவர்  சந்நிதியில்  சேரான்.  {Job  13:16}

 

என்  வசனத்தையும்,  நான்  சொல்லிக்  காண்பிக்கிறதையும்,  உங்கள்  செவிகளால்  கவனமாய்க்  கேளுங்கள்.  {Job  13:17}

 

இதோ,  என்  நியாயங்களை  அணியணியாக  வைத்தேன்;  என்  நீதி  விளங்கும்  என்று  அறிவேன்.  {Job  13:18}

 

என்னோடே  வழக்காடவேண்டுமென்று  இருக்கிறவன்  யார்?  நான்  மவுனமாயிருந்தால்  ஜீவித்துப்போவேனே.  {Job  13:19}

 

இரண்டு  காரியங்களைமாத்திரம்  எனக்குச்  செய்யாதிருப்பீராக;  அப்பொழுது  உமது  முகத்துக்கு  முன்பாக  ஒளித்துக்கொள்ளாதிருப்பேன்.  {Job  13:20}

 

உம்முடைய  கையை  என்னைவிட்டுத்  தூரப்படுத்தும்;  உம்முடைய  பயங்கரம்  என்னைக்  கலங்கப்பண்ணாதிருப்பதாக.  {Job  13:21}

 

நீர்  கூப்பிடும்,  நான்  உத்தரவு  கொடுப்பேன்;  அல்லது  நான்  பேசுவேன்;  நீர்  எனக்கு  மறுமொழி  சொல்லும்.  {Job  13:22}

 

என்  அக்கிரமங்களும்  பாவங்களும்  எத்தனை?  என்  மீறுதலையும்  என்  பாவத்தையும்  எனக்கு  உணர்த்தும்.  {Job  13:23}

 

நீர்  உமது  முகத்தை  மறைத்து,  என்னை  உமக்குப்  பகைஞனாக  எண்ணுவானேன்?  {Job  13:24}

 

காற்றடித்த  சருகை  நொறுக்குவீரோ?  காய்ந்துபோன  துரும்பைப்  பின்தொடருவீரோ?  {Job  13:25}

 

மகா  கசப்பான  தீர்ப்புகளை  என்பேரில்  எழுதுகிறீர்;  என்  சிறுவயதின்  அக்கிரமங்களை  எனக்குப்  பலிக்கப்பண்ணுகிறீர்.  {Job  13:26}

 

என்  கால்களைத்  தொழுவடித்துப்போட்டு,  என்  வழிகளையெல்லாம்  காவல்பண்ணுகிறீர்;  என்  காலடிகளில்  அடையாளத்தைப்  போடுகிறீர்.  {Job  13:27}

 

இப்படிப்பட்டவன்  அழுகிப்போகிற  வஸ்துபோலவும்,  பொட்டரித்த  வஸ்திரம்போலவும்  அழிந்துபோவான்.  {Job  13:28}

 

ஸ்திரீயினிடத்தில்  பிறந்த  மனுஷன்  வாழ்நாள்  குறுகினவனும்  சஞ்சலம்  நிறைந்தவனுமாயிருக்கிறான்.  {Job  14:1}

 

அவன்  பூவைப்போலப்  பூத்து  அறுப்புண்கிறான்;  நிழலைப்போல  நிலைநிற்காமல்  ஓடிப்போகிறான்.  {Job  14:2}

 

ஆகிலும்  இப்படிப்பட்டவன்மேல்  நீர்  உம்முடைய  கண்களைத்  திறந்துவைத்து,  உம்முடைய  நியாயத்துக்கு  என்னைக்  கொண்டுபோவீரோ?  {Job  14:3}

 

அசுத்தமானதிலிருந்து  சுத்தமானதைப்  பிறப்பிக்கத்தக்கவன்  உண்டோ?  ஒருவனுமில்லை.  {Job  14:4}

 

அவனுடைய  நாட்கள்  இம்மாத்திரம்  என்று  குறிக்கப்பட்டிருக்கையால்,  அவனுடைய  மாதங்களின்  தொகை  உம்மிடத்தில்  இருக்கிறது;  அவன்  கடந்துபோகக்கூடாத  எல்லையை  அவனுக்கு  ஏற்படுத்தினீர்.  {Job  14:5}

 

அவன்  ஒரு  கூலிக்காரனைப்போல்  தன்  நாளின்  வேலையாயிற்று  என்று  ரம்மியப்படுமட்டும்  அவன்  ஓய்ந்திருக்கும்படி  உமது  பார்வையை  அவனை  விட்டு  விலக்கும்.  {Job  14:6}

 

ஒரு  மரத்தைக்குறித்தாவது  நம்பிக்கையுண்டு;  அது  வெட்டிப்போடப்பட்டாலும்  திரும்பத்  தழைக்கும்,  அதின்  இளங்கிளைகள்  துளிர்க்கும்;  {Job  14:7}

 

அதின்  வேர்  தரையிலே  பழையதாகி,  அதின்  அடிக்கட்டை  மண்ணிலே  செத்தாலும்,  {Job  14:8}

 

தண்ணீரின்  வாசனையினால்  அது  துளிர்த்து,  இளமரம்போலக்  கிளைவிடும்.  {Job  14:9}

 

மனுஷனோவென்றால்  செத்தபின்  ஒழிந்துபோகிறான்,  மனுபுத்திரன்  ஜீவித்துப்போனபின்  அவன்  எங்கே?  {Job  14:10}

 

தண்ணீர்  ஏரியிலிருந்து  வடிந்து,  வெள்ளம்  வற்றிச்  சுவறிப்போகிறதுபோல,  {Job  14:11}

 

மனுஷன்  படுத்துக்கிடக்கிறான்,  வானங்கள்  ஒழிந்துபோகுமளவும்  எழுந்திருக்கிறதும்  இல்லை,  நித்திரை  தெளிந்து  விழிக்கிறதும்  இல்லை.  {Job  14:12}

 

நீர்  என்னைப்  பாதாளத்தில்  ஒளித்து,  உமது  கோபம்  தீருமட்டும்  என்னை  மறைத்து,  என்னைத்  திரும்ப  நினைக்கும்படிக்கு  எனக்கு  ஒரு  காலத்தைக்  குறித்தால்  நலமாயிருக்கும்.  {Job  14:13}

 

மனுஷன்  செத்தபின்  பிழைப்பானோ?  எனக்கு  மாறுதல்  எப்போது  வருமென்று  எனக்குக்  குறிக்கப்பட்ட  போராட்டத்தின்  நாளெல்லாம்  நான்  காத்திருக்கிறேன்.  {Job  14:14}

 

என்னைக்  கூப்பிடும்,  அப்பொழுது  நான்  உமக்கு  உத்தரவு  சொல்லுவேன்;  உமது  கைகளின்  கிரியையின்மேல்  விருப்பம்  வைப்பீராக.  {Job  14:15}

 

இப்பொழுது  என்  நடைகளை  எண்ணுகிறீர்;  என்  பாவத்தின்மேலல்லவோ  கவனமாயிருக்கிறீர்.  {Job  14:16}

 

என்  மீறுதல்  ஒரு  கட்டாகக்  கட்டப்பட்டு  முத்திரைபோடப்பட்டிருக்கிறது,  என்  அக்கிரமத்தை  ஒருமிக்கச்  சேர்த்தீர்.  {Job  14:17}

 

மலைமுதலாய்  விழுந்து  கரைந்துபோம்;  கன்மலை  தன்  இடத்தைவிட்டுப்  பேர்ந்துபோம்.  {Job  14:18}

 

தண்ணீர்  கற்களைக்  குடையும்;  ஜலப்பிரவாகம்  பூமியின்  தூளில்  முளைத்ததை  மூடும்;  அப்படியே  மனுஷன்  கொண்டிருக்கும்  நம்பிக்கையை  அழிக்கிறீர்.  {Job  14:19}

 

நீர்  என்றைக்கும்  அவனைப்  பெலனாய்  நெருக்குகிறதினால்  அவன்  போய்  விடுகிறான்;  அவன்  முகரூபத்தை  மாறப்பண்ணி  அவனை  அனுப்பிவிடுகிறீர்.  {Job  14:20}

 

அவன்  பிள்ளைகள்  கனமடைந்தாலும்  அவன்  உணரான்;  அவர்கள்  சிறுமைப்பட்டாலும்  அவர்களைக்  கவனியான்.  {Job  14:21}

 

அவன்  மாம்சம்  அவனிலிருக்குமளவும்  அதற்கு  நோவிருக்கும்;  அவன்  ஆத்துமா  அவனுக்குள்ளிருக்குமட்டும்  அதற்குத்  துக்கமுண்டு  என்றான்.  {Job  14:22}

 

அப்பொழுது  தேமானியனாகிய<Temanite>  எலிப்பாஸ்<Eliphaz>  பிரதியுத்தரமாக:  {Job  15:1}

 

ஞானவான்  காற்றைப்போன்ற  நியாயங்களைச்  சொல்லி,  தன்  வயிற்றைக்  கொண்டல்காற்றினால்  நிரப்பி,  {Job  15:2}

 

பிரயோஜனமில்லாத  வார்த்தைகளாலும்,  உபயோகமில்லாத  வசனங்களாலும்  தர்க்கிக்கலாமோ?  {Job  15:3}

 

நீர்  பயபக்தியை  வீணென்று  சொல்லி,  தேவனுக்கு  முன்பாக  ஜெபத்தியானத்தைக்  குறையப்பண்ணுகிறீர்.  {Job  15:4}

 

உம்முடைய  வாய்  உம்முடைய  அக்கிரமத்தைச்  சொல்லிக்காட்டுகிறது;  நீர்  தந்திரமுள்ளவர்களின்  நாவைத்  தெரிந்துகொண்டீர்.  {Job  15:5}

 

நான்  அல்ல,  உம்முடைய  வாயே  உம்மைக்  குற்றவாளி  என்று  தீர்க்கிறது;  உம்முடைய  உதடுகளே  உமக்கு  விரோதமாகச்  சாட்சியிடுகிறது.  {Job  15:6}

 

மனுஷரில்  முந்திப்  பிறந்தவர்  நீர்தானோ?  பர்வதங்களுக்குமுன்னே  உருவாக்கப்பட்டீரோ?  {Job  15:7}

 

நீர்  தேவனுடைய  இரகசிய  ஆலோசனையைக்  கேட்டு,  ஞானத்தை  உம்மிடமாய்ச்  சேர்த்துக்கொண்டீரோ?  {Job  15:8}

 

நாங்கள்  அறியாத  எந்தக்  காரியத்தை  நீர்  அறிந்திருக்கிறீர்?  எங்களுக்கு  விளங்காத  எந்தக்  காரியமாவது  உமக்கு  விளங்கியிருக்கிறதோ?  {Job  15:9}

 

உம்முடைய  தகப்பனைப்பார்க்கிலும்  பெரிய  வயதுள்ள  நரைத்தோரும்  விருத்தாப்பியரும்  எங்களுக்குள்  இருக்கிறார்களே.  {Job  15:10}

 

தேவன்  அருளிய  ஆறுதல்களும்,  உம்மோடே  சொல்லப்படுகிற  மிருதுவான  பேச்சும்  உமக்கு  அற்பகாரியமாயிருக்கிறதோ?  {Job  15:11}

 

உம்முடைய  இருதயம்  உம்மை  எங்கே  கொண்டுபோகிறது?  உம்முடைய  கண்கள்  நெறித்துப்பார்க்கிறது  என்ன?  {Job  15:12}

 

தேவனுக்கு  விரோதமாக  உம்முடைய  ஆவியை  எழுப்பி,  உம்முடைய  வாயிலிருந்து  வசனங்களைப்  புறப்படப்பண்ணுகிறீர்.  {Job  15:13}

 

மனுஷனானவன்  பரிசுத்தமாயிருக்கிறதற்கும்,  ஸ்திரீயினிடத்தில்  பிறந்தவன்  நீதிமானாயிருக்கிறதற்கும்,  அவன்  எம்மாத்திரம்?  {Job  15:14}

 

இதோ,  தம்முடைய  பரிசுத்தவான்களையும்  அவர்  நம்புகிறதில்லை;  வானங்களும்  அவர்  பார்வைக்குச்  சுத்தமானவைகள்  அல்ல.  {Job  15:15}

 

அநியாயத்தைத்  தண்ணீரைப்போலக்  குடிக்கிற  மனுஷன்  எத்தனை  அதிகமாய்  அருவருப்பும்  அசுத்தமுமாயிருக்கிறான்?  {Job  15:16}

 

உமக்குக்  காரியத்தைத்  தெரியப்பண்ணுவேன்,  என்னைக்  கேளும்;  நான்  கண்டதை  உமக்கு  விவரித்துச்  சொல்லுவேன்.  {Job  15:17}

 

ஞானிகள்  தங்கள்  பிதாக்கள்  சொல்லக்  கேட்டு  மறைக்காமல்  அறிவித்ததையே  நான்  சொல்லுவேன்.  {Job  15:18}

 

அவர்களுக்குமாத்திரம்  பூமி  அளிக்கப்பட்டது;  அந்நியர்  அவர்கள்  நடுவே  கடந்துபோக  இடமில்லை.  {Job  15:19}

 

துன்மார்க்கன்  உயிரோடிருக்கிற  நாளெல்லாம்  துன்பத்தால்  வாதிக்கப்படுகிறான்;  பலவந்தம்பண்ணுகிறவனுக்கு  அவன்  வருஷங்களின்  தொகை  மறைக்கப்பட்டிருக்கிறது.  {Job  15:20}

 

பயங்கரமான  சத்தம்  அவன்  காதுகளில்  தொனிக்கிறது;  அவன்  சமாதானமாயிருக்கையில்  பாழாக்கிறவன்  அவன்மேல்  வருவான்.  {Job  15:21}

 

இருளிலிருந்து  திரும்பிவர  அவனுக்கு  நம்பிக்கையில்லாமல்,  பதிவிருக்கிறவர்களின்  பட்டயத்துக்கு  அவன்  பயப்படுகிறான்.  {Job  15:22}

 

அப்பம்  எங்கே  கிடைக்கும்  என்று  அவன்  அலைந்து  திரிகிறான்;  அந்தகாரநாள்  தனக்குச்  சமீபித்திருக்கிறதை  அறிவான்.  {Job  15:23}

 

இக்கட்டும்  நெருக்கமும்  அவனைக்  கலங்கப்பண்ணி,  யுத்தசன்னத்தனான  ராஜாவைப்போல  அவனை  மேற்கொள்ளும்.  {Job  15:24}

 

அவன்  தேவனுக்கு  விரோதமாகக்  கை  நீட்டி,  சர்வவல்லவருக்கு  விரோதமாகப்  பராக்கிரமம்  பாராட்டுகிறான்.  {Job  15:25}

 

கடினக்கழுத்தோடும்,  பருத்த  குமிழுள்ள  தன்  கேடயங்களோடும்  அவருக்கு  எதிராக  ஓடுகிறான்.  {Job  15:26}

 

அவன்  முகத்தைக்  கொழுப்பு  மூடியிருக்கிறது;  அடிவயிறு  தொந்தி  விட்டிருக்கிறது.  {Job  15:27}

 

ஆனாலும்  பாழான  பட்டணங்களிலும்,  குடிபோன  கற்குவியலான  வீடுகளிலும்  வாசம்பண்ணுவான்.  {Job  15:28}

 

அவன்  ஐசுவரியவானாவதுமில்லை,  அவன்  ஆஸ்தி  நிலைப்பதுமில்லை;  அப்படிப்பட்டவர்களின்  செல்வம்  பூமியில்  நீடித்திருப்பதில்லை.  {Job  15:29}

 

இருளுக்கு  அவன்  தப்புவதில்லை;  அக்கினிஜுவாலை  அவனுடைய  கிளையைக்  காய்ந்துபோகப்பண்ணும்;  அவருடைய  வாயின்  சுவாசத்தால்  அற்றுப்போவான்.  {Job  15:30}

 

வழிதப்பினவன்  மாயையை  நம்பானாக;  நம்பினால்  மாயையே  அவன்  பலனாயிருக்கும்.  {Job  15:31}

 

அது  அவன்  நாள்  வருமுன்னே  அவனுக்குப்  பூரணமாய்ப்  பலிக்கும்;  அவனுடைய  கொப்புப்  பச்சைகொள்வதில்லை.  {Job  15:32}

 

பிஞ்சுகள்  உதிர்ந்துபோகிற  திராட்சச்செடியைப்போலவும்,  பூக்கள்  உதிர்ந்துபோகிற  ஒலிவமரத்தைப்போலவும்  அவன்  இருப்பான்.  {Job  15:33}

 

மாயக்காரரின்  கூட்டம்  வெறுமையாய்ப்  போம்;  பரிதானம்  வாங்கினவர்களின்  கூடாரங்களை  அக்கினி  பட்சிக்கும்.  {Job  15:34}

 

அப்படிப்பட்டவன்  அநியாயத்தைக்  கர்ப்பந்தரித்து  அக்கிரமத்தைப்  பெறுகிறான்;  அவர்கள்  கர்ப்பம்  மாயையைப்  பிறப்பிக்கும்  என்றான்.  {Job  15:35}

 

அதற்கு  யோபு<Job>  பிரதியுத்தரமாக:  {Job  16:1}

 

இப்படிப்பட்ட  அநேகங்  காரியங்களை  நான்  கேட்டிருக்கிறேன்;  நீங்கள்  எல்லாரும்  அலட்டுண்டாக்குகிற  தேற்றரவாளர்.  {Job  16:2}

 

காற்றைப்போன்ற  வார்த்தைகளுக்கு  முடிவிராதோ?  இப்படி  நீ  உத்தரவுசொல்ல  உனக்குத்  துணிவு  உண்டானதென்ன?  {Job  16:3}

 

உங்களைப்போல  நானும்  பேசக்கூடும்;  நான்  இருக்கும்  நிலைமையில்  நீங்கள்  இருந்தால்,  நான்  உங்களுக்கு  விரோதமாக  வார்த்தைகளைக்  கோர்த்து,  உங்களுக்கு  எதிரே  என்  தலையைத்  துலுக்கவுங்கூடும்.  {Job  16:4}

 

ஆனாலும்  நான்  என்  வாயினால்  உங்களுக்குத்  திடன்சொல்லுவேன்,  என்  உதடுகளின்  அசைவு  உங்கள்  துக்கத்தை  ஆற்றும்.  {Job  16:5}

 

நான்  பேசினாலும்  என்  துக்கம்  ஆறாது;  நான்  பேசாமலிருந்தாலும்  எனக்கு  என்ன  ஆறுதல்?  {Job  16:6}

 

இப்போது  அவர்  என்னை  இளைத்துப்போகச்  செய்தார்;  என்  கூட்டத்தையெல்லாம்  பாழாக்கினீர்.  {Job  16:7}

 

நீர்  என்னைச்  சுருங்கிப்போகப்பண்ணினது  அதற்குச்  சாட்சி;  என்  மெலிவு  என்னில்  அத்தாட்சியாக  நின்று,  என்  முகத்துக்கு  முன்பாக  உத்தரவு  சொல்லும்.  {Job  16:8}

 

என்னைப்  பகைக்கிறவனுடைய  கோபம்  என்னைப்  பீறுகிறது,  என்பேரில்  பற்கடிக்கிறான்;  என்  சத்துரு  கொடிய  கண்ணினால்  என்னைப்  பார்க்கிறான்.  {Job  16:9}

 

எனக்கு  விரோதமாகத்  தங்கள்  வாயை  விரிவாய்த்  திறந்தார்கள்;  நிந்தையாக  என்னைக்  கன்னத்தில்  அடித்தார்கள்;  எனக்கு  விரோதமாக  ஏகமாய்க்  கூட்டங்கூடினார்கள்.  {Job  16:10}

 

தேவன்  என்னை  அநியாயக்காரன்  வசமாக  ஒப்புவித்து,  துன்மார்க்கரின்  கையில்  என்னை  அகப்படப்பண்ணினார்.  {Job  16:11}

 

நான்  சுகமாய்  வாழ்ந்திருந்தேன்;  அவர்  என்னை  நருக்கி,  என்  பிடரியைப்  பிடித்து,  என்னை  நொறுக்கி,  என்னைத்  தமக்கு  இலக்காக  நிறுத்தினார்.  {Job  16:12}

 

அவருடைய  வில்லாளர்  என்னைச்  சூழ்ந்துகொண்டார்கள்;  என்  ஈரலைத்  தப்பவிடாமல்  பிளந்தார்;  என்  பிச்சைத்  தரையில்  ஊற்றிவிட்டார்.  {Job  16:13}

 

நொறுக்குதலின்மேல்  நொறுக்குதலை  என்மேல்  வரப்பண்ணினார்;  பராக்கிரமசாலியைப்போல  என்மேல்  பாய்ந்தார்.  {Job  16:14}

 

நான்  இரட்டுச்சேலையைத்  தைத்து,  என்  தோளின்மேல்  போர்த்துக்கொண்டேன்;  என்  மகிமையைப்  புழுதியிலே  போட்டுவிட்டேன்.  {Job  16:15}

 

அழுகிறதினால்  என்  முகம்  அழுக்கடைந்தது;  மரண  இருள்  என்  கண்ணிமைகளின்மேல்  உண்டாயிருக்கிறது.  {Job  16:16}

 

என்  கைகளிலே  கொடுமையில்லாதிருக்கையிலும்,  என்  ஜெபம்  சுத்தமாயிருக்கையிலும்,  அப்படியாயிற்று.  {Job  16:17}

 

பூமியே,  என்  இரத்தத்தை  மூடிப்போடாதே;  என்  அலறுதலுக்கு  மறைவிடம்  உண்டாகாதிருப்பதாக.  {Job  16:18}

 

இப்போதும்  இதோ,  என்  சாட்சி  பரலோகத்திலிருக்கிறது,  எனக்குச்  சாட்சி  பகருகிறவர்  உன்னதங்களில்  இருக்கிறார்.  {Job  16:19}

 

என்  சிநேகிதர்  என்னைப்  பரியாசம்பண்ணுகிறார்கள்;  என்  கண்  தேவனை  நோக்கிக்  கண்ணீர்  சொரிகிறது.  {Job  16:20}

 

ஒரு  மனுபுத்திரன்  தன்  சிநேகிதனுக்காக  வழக்காடுகிறதுபோல,  தேவனோடே  மனுஷனுக்காக  வழக்காடுகிறவர்  ஒருவர்  உண்டானால்  நலமாயிருக்கும்.  {Job  16:21}

 

குறுகின  வருஷங்களுக்கு  முடிவு  வருகிறது;  நான்  திரும்பிவராத  வழியே  போவேன்.  {Job  16:22}

 

என்  சுவாசம்  ஒழிகிறது,  என்  நாட்கள்  முடிகிறது;  பிரேதக்குழி  எனக்கு  ஆயத்தமாயிருக்கிறது.  {Job  17:1}

 

பரியாசம்பண்ணுகிறவர்கள்  என்னிடத்தில்  இல்லையோ?  அவர்கள்  செய்யும்  அநியாயங்களை  என்  கண்  பார்த்துக்கொண்டிருக்கிறது.  {Job  17:2}

 

தேவரீர்  என்  காரியத்தை  மேல்போட்டுக்கொண்டு,  எனக்காகப்  பிணைப்படுவீராக;  வேறே  யார்  எனக்குக்  கைகொடுக்கத்தக்கவர்?  {Job  17:3}

 

நீர்  அவர்கள்  இருதயத்துக்கு  ஞானத்தை  மறைத்தீர்;  ஆகையால்  அவர்களை  உயர்த்தாதிருப்பீர்.  {Job  17:4}

 

எவன்  தன்  சிநேகிதருக்குக்  கேடாகத்  துரோகம்  பேசுகிறானோ,  அவன்  பிள்ளைகளின்  கண்களும்  பூத்துப்போகும்.  {Job  17:5}

 

ஜனங்களுக்குள்ளே  அவர்  என்னைப்  பழமொழியாக  வைத்தார்;  அவர்கள்  முகத்துக்குமுன்  நான்  அருவருப்பானேன்.  {Job  17:6}

 

இதினிமித்தம்  என்  கண்கள்  சஞ்சலத்தினால்  இருளடைந்தது;  என்  அவயவங்களெல்லாம்  நிழலைப்போலிருக்கிறது.  {Job  17:7}

 

சன்மார்க்கர்  இதற்காகப்  பிரமிப்பார்கள்;  குற்றமில்லாதவன்  மாயக்காரனுக்கு  விரோதமாக  எழும்புவான்.  {Job  17:8}

 

நீதிமான்  தன்  வழியை  உறுதியாய்ப்  பிடிப்பான்;  சுத்தமான  கைகளுள்ளவன்  மேன்மேலும்  பலத்துப்போவான்.  {Job  17:9}

 

இப்போதும்  நீங்கள்  எல்லாரும்  போய்வாருங்கள்;  உங்களில்  ஞானமுள்ள  ஒருவனையும்  காணேன்.  {Job  17:10}

 

என்  நாட்கள்  போயிற்று;  என்  இருதயத்தில்  எனக்கு  உண்டாயிருந்த  சிந்தனைகள்  அற்றுப்போயிற்று.  {Job  17:11}

 

அவைகள்  இரவைப்  பகலாக்கிற்று;  இருளை  வெளிச்சம்  தொடர்ந்துவரும்  என்று  எண்ணச்செய்தது.  {Job  17:12}

 

அப்படி  நான்  காத்துக்கொண்டிருந்தாலும்,  பாதாளம்  எனக்கு  வீடாயிருக்கும்;  இருளில்  என்  படுக்கையைப்  போடுவேன்.  {Job  17:13}

 

அழிவைப்பார்த்து,  நீ  எனக்குத்  தகப்பன்  என்கிறேன்;  புழுக்களைப்  பார்த்து,  நீங்கள்  எனக்குத்  தாயும்  எனக்குச்  சகோதரியும்  என்கிறேன்.  {Job  17:14}

 

என்  நம்பிக்கை  இப்போது  எங்கே?  நான்  நம்பியிருந்ததைக்  காண்பவன்  யார்?  {Job  17:15}

 

அது  பாதாளத்தின்  காவலுக்குள்  இறங்கும்;  அப்போது  தூளில்  ஏகமாய்  இளைப்பாறுவோம்  என்றான்.  {Job  17:16}

 

அப்பொழுது  சூகியனான<Shuhite>  பில்தாத்<Bildad>  பிரதியுத்தரமாக:  {Job  18:1}

 

நீங்கள்  எந்தமட்டும்  பேச்சுகளை  முடிக்காதிருப்பீர்கள்?  புத்திமான்களாயிருங்கள்;  நாங்களும்  பேசட்டும்.  {Job  18:2}

 

நாங்கள்  மிருகங்களைப்போல  எண்ணப்பட்டு,  உங்கள்  பார்வைக்குத்  தீழ்ப்பானவர்களாயிருப்பானேன்?  {Job  18:3}

 

கோபத்தினால்  உம்மைத்தானே  பீறுகிற  உமதுநிமித்தம்  பூமி  பாழாய்ப்போகுமோ?  கன்மலை  தன்னிடத்தை  விட்டுப்  பேருமோ?  {Job  18:4}

 

துன்மார்க்கனுடைய  விளக்கு  அணைந்துபோம்;  அவன்  அடுப்பின்  நெருப்பும்  அவிந்துபோம்.  {Job  18:5}

 

அவன்  கூடாரத்தில்  வெளிச்சம்  அந்தகாரப்படும்;  அவன்  விளக்கு  அவனுடனே  அணைந்துபோம்.  {Job  18:6}

 

அவன்  பெலனாய்  நடந்த  நடைகள்  குறைந்துபோம்;  அவன்  ஆலோசனை  அவனை  விழப்பண்ணும்.  {Job  18:7}

 

அவன்  தன்  கால்களினால்  வலையில்  அகப்பட்டு,  வலைச்சிக்கலிலே  நடக்கிறான்.  {Job  18:8}

 

கண்ணி  அவன்  குதிகாலைப்  பிடிக்கும்;  பறிகாரர்  அவனை  மேற்கொள்வார்கள்.  {Job  18:9}

 

அவனுக்காகச்  சுருக்கு  தரையிலும்,  அவனுக்காகக்  கண்ணி  வழியிலும்  வைக்கப்பட்டிருக்கிறது.  {Job  18:10}

 

சுற்றிலுமிருந்துண்டாகும்  பயங்கரங்கள்  அவனைத்  திடுக்கிடப்பண்ணி,  அவன்  கால்களைத்  திசைதெரியாமல்  அலையப்பண்ணும்.  {Job  18:11}

 

அவன்  பெலனைப்  பட்டினி  தின்றுபோடும்;  அவன்  பக்கத்தில்  கேடு  ஆயத்தப்பட்டு  நிற்கும்.  {Job  18:12}

 

அது  அவன்  அங்கத்தின்  பலத்தைப்  பட்சிக்கும்;  பயங்கரமான  மரணமே  அவன்  அவயவங்களைப்  பட்சிக்கும்.  {Job  18:13}

 

அவன்  நம்பிக்கை  அவன்  கூடாரத்திலிருந்து  வேரோடே  பிடுங்கப்படும்;  அது  அவனைப்  பயங்கர  ராஜாவினிடத்தில்  துரத்தும்.  {Job  18:14}

 

அவனுக்கு  ஒன்றுமில்லாமற்போனதினால்,  பயங்கரம்  அவன்  கூடாரத்தில்  குடியிருக்கும்;  கந்தகம்  அவன்  வாசஸ்தலத்தின்மேல்  தெளிக்கப்படும்.  {Job  18:15}

 

கீழே  இருக்கிற  அவன்  வேர்கள்  அழிந்துபோகும்;  மேலே  இருக்கிற  அவன்  கிளைகள்  பட்டுப்போகும்.  {Job  18:16}

 

அவனை  நினைக்கும்  நினைப்புப்  பூமியிலிருந்தழியும்,  வீதிகளில்  அவன்  பேரில்லாமற்போகும்.  {Job  18:17}

 

அவன்  வெளிச்சத்திலிருந்து  இருளில்  துரத்திவிடப்பட்டு,  பூலோகத்திலிருந்து  தள்ளுண்டுபோவான்.  {Job  18:18}

 

அவன்  ஜனத்துக்குள்ளே  அவனுக்குப்  புத்திரனும்  இல்லை  பௌத்திரனும்  இல்லை;  அவன்  வீட்டில்  மீதியாயிருக்கத்தக்கவன்  ஒருவனும்  இல்லை.  {Job  18:19}

 

அவன்  காலத்தோர்  அவன்  நாளுக்காகத்  திடுக்கிட்டதுபோல,  பின்னடியாரும்  பிரமிப்பார்கள்.  {Job  18:20}

 

அக்கிரமக்காரன்  குடியிருந்த  ஸ்தானங்கள்  இவைகள்தான்;  தேவனை  அறியாமற்போனவனுடைய  ஸ்தலம்  இதுவே  என்பார்கள்  என்றான்.  {Job  18:21}

 

யோபு<Job>  பிரதியுத்தரமாக:  {Job  19:1}

 

நீங்கள்  எந்தமட்டும்  என்  ஆத்துமாவை  வருத்தப்படுத்தி,  வார்த்தைகளினால்  என்னை  நொறுக்குவீர்கள்?  {Job  19:2}

 

இப்போது  பத்துதரம்  என்னை  நிந்தித்தீர்கள்;  நீங்கள்  எனக்குக்  கடினமுகம்  காண்பிக்கிறதினால்  உங்களுக்கு  வெட்கமில்லை.  {Job  19:3}

 

நான்  தப்பிநடந்தது  மெய்யானாலும்,  என்  தப்பிதம்  என்னோடேதான்  இருக்கிறது.  {Job  19:4}

 

நீங்கள்  எனக்கு  விரோதமாகப்  பெருமைபாராட்டி,  எனக்கு  நிந்தையாக  என்னைக்  கடிந்துகொள்ளவேண்டும்  என்றிருப்பீர்களாகில்,  {Job  19:5}

 

தேவன்  என்னைக்  கவிழ்த்து,  தம்முடைய  வலையை  என்மேல்  வீசினார்  என்று  அறியுங்கள்.  {Job  19:6}

 

இதோ,  கொடுமை  என்று  கூப்பிடுகிறேன்,  கேட்பார்  ஒருவரும்  இல்லை;  கூக்குரலிடுகிறேன்,  நியாயவிசாரணை  இல்லை.  {Job  19:7}

 

நான்  கடந்துபோகக்கூடாதபடிக்கு  அவர்  என்  பாதையை  வேலியடைத்து,  என்  வழிகளை  இருளாக்கிவிட்டார்.  {Job  19:8}

 

என்னிலிருந்த  என்  மகிமையை  அவர்  உரிந்துகொண்டு,  என்  சிரசின்  கிரீடத்தை  எடுத்துப்போட்டார்.  {Job  19:9}

 

அவர்  என்னை  நான்குபுறத்திலும்  நாசமாக்கினார்,  நான்  அற்றுப்போகிறேன்;  என்  நம்பிக்கையை  ஒரு  செடியைப்போலப்  பிடுங்கிப்போட்டார்.  {Job  19:10}

 

அவர்  தமது  கோபத்தை  என்மேல்  எரியப்பண்ணினார்;  என்னைத்  தம்முடைய  சத்துருக்களில்  ஒருவனாக  எண்ணிக்கொள்ளுகிறார்.  {Job  19:11}

 

அவருடைய  தண்டுப்படைகள்  ஏகமாய்  வந்து,  எனக்கு  விரோதமாய்த்  தங்கள்  வழியை  உயர்த்தி,  என்  கூடாரத்தைச்  சுற்றிப்  பாளயமிறங்கினார்கள்.  {Job  19:12}

 

என்  சகோதரரை  என்னைவிட்டுத்  தூரப்படுத்தினார்;  எனக்கு  அறிமுகமானவர்கள்  எனக்கு  அந்நியராய்ப்  போனார்கள்.  {Job  19:13}

 

என்  பந்துஜனங்கள்  விலகிப்போனார்கள்;  என்  சிநேகிதர்  என்னை  மறந்துவிட்டார்கள்.  {Job  19:14}

 

என்  வீட்டு  ஜனங்களும்,  என்  வேலைக்காரிகளும்,  என்னை  அந்நியனாக  எண்ணுகிறார்கள்;  அவர்கள்  பார்வைக்கு  நான்  பரதேசியானேன்.  {Job  19:15}

 

நான்  என்  வேலைக்காரனைக்  கூப்பிடுகிறபோது  அவன்  எனக்கு  உத்தரவுகொடான்;  என்  வாயினால்  நான்  அவனைக்  கெஞ்சவேண்டியதாயிற்று.  {Job  19:16}

 

என்  சுவாசம்  என்  மனைவிக்கு  வேறுபட்டிருக்கிறது;  என்  கர்ப்பத்தின்  பிள்ளைகளுக்காகப்  பரிதபிக்கிறேன்.  {Job  19:17}

 

சிறுபிள்ளைகளும்  என்னை  அசட்டைபண்ணுகிறார்கள்;  நான்  எழுந்தால்,  அவர்கள்  எனக்கு  விரோதமாய்ப்  பேசுகிறார்கள்.  {Job  19:18}

 

என்  பிராணசிநேகிதர்  எல்லாரும்  என்னை  வெறுக்கிறார்கள்;  நான்  சிநேகித்தவர்கள்  எனக்கு  விரோதிகளானார்கள்.  {Job  19:19}

 

என்  எலும்புகள்  என்  தோலோடும்  என்  மாம்சத்தோடும்  ஒட்டிக்கொண்டிருக்கிறது;  என்  பற்களை  மூடக்  கொஞ்சம்  தோல்மாத்திரம்  தப்பினது.  {Job  19:20}

 

என்  சிநேகிதரே,  எனக்கு  இரங்குங்கள்,  எனக்கு  இரங்குங்கள்;  தேவனுடைய  கை  என்னைத்  தொட்டது.  {Job  19:21}

 

தேவனைப்போல  நீங்களும்  என்னைத்  துன்பப்படுத்துவானேன்?  என்  மாம்சம்  பட்சிக்கப்பட்டாலும்  நீங்கள்  திருப்தியற்றிருக்கிறதென்ன?  {Job  19:22}

 

,  நான்  இப்பொழுது  சொல்லும்  வார்த்தைகள்  எழுதப்பட்டால்  நலமாயிருக்கும்;  அவைகள்  ஒரு  புஸ்தகத்தில்  வரையப்பட்டு,  {Job  19:23}

 

அல்லது  என்றைக்கும்  நிலைக்க  அவைகள்  கருங்கல்லிலே  உளிவெட்டாகவும்  ஈய  எழுத்தாகவும்  பதிந்தால்  நலமாயிருக்கும்.  {Job  19:24}

 

என்  மீட்பர்  உயிரோடிருக்கிறார்  என்றும்,  அவர்  கடைசிநாளில்  பூமியின்மேல்  நிற்பார்  என்றும்  நான்  அறிந்திருக்கிறேன்.  {Job  19:25}

 

இந்த  என்  தோல்முதலானவை  அழுகிப்போனபின்பு,  நான்  என்  மாம்சத்தில்  இருந்து  தேவனைப்  பார்ப்பேன்.  {Job  19:26}

 

அவரை  நானே  பார்ப்பேன்;  அந்நிய  கண்கள்  அல்ல,  என்  கண்களே  அவரைக்  காணும்;  இந்த  வாஞ்சையால்  என்  உள்ளிந்திரியங்கள்  எனக்குள்  சோர்ந்துபோகிறது.  {Job  19:27}

 

காரியத்தின்  மூலம்  எனக்குள்  கண்டுபிடிக்கப்படுகையில்,  நாம்  ஏன்  அவனைத்  துன்பப்படுத்துகிறோம்  என்று  நீங்கள்  சொல்லவேண்டியதாமே.  {Job  19:28}

 

பட்டயத்துக்குப்  பயப்படுங்கள்;  நியாயத்தீர்ப்பு  உண்டென்கிறதை  நீங்கள்  அறியும்பொருட்டு,  மூர்க்கமானது  பட்டயத்தினால்  உண்டாகும்  ஆக்கினையை  வரப்பண்ணும்  என்றான்.  {Job  19:29}

 

அப்பொழுது  நாகமாத்தியனான<Naamathite>  சோப்பார்<Zophar>  பிரதியுத்தரமாக:  {Job  20:1}

 

இதற்காக  மறுஉத்தரவு  கொடுக்க  என்  சிந்தனைகள்  என்னை  ஏவுகிறபடியால்  நான்  தீவிரித்துச்  சொல்லுகிறேன்.  {Job  20:2}

 

நிந்தித்தேன்  என்று  நான்  கடிந்துகொள்ளப்பட்டதைக்  கேட்டேன்;  ஆனாலும்  உணர்வினால்  என்  ஆவி  பிரதியுத்தரம்  சொல்ல  என்னை  ஏவுகிறது.  {Job  20:3}

 

துன்மார்க்கனின்  கெம்பீரம்  குறுகினது  என்பதையும்,  மாயக்காரனின்  சந்தோஷம்  ஒரு  நிமிஷம்மாத்திரம்  நிற்கும்  என்பதையும்,  {Job  20:4}

 

அவர்  மனுஷனைப்  பூமியில்  வைத்த  ஆதிகாலமுதல்  இப்படியிருக்கிறது  என்பதையும்  நீர்  அறியீரோ?  {Job  20:5}

 

அவனுடைய  மேன்மை  வானபரியந்தம்  உயர்ந்தாலும்,  அவனுடைய  தலை  மேகங்கள்மட்டும்  எட்டினாலும்,  {Job  20:6}

 

அவன்  தன்  மலத்தைப்போல  என்றைக்கும்  அழிந்துபோவான்;  அவனைக்  கண்டவர்கள்,  அவன்  எங்கே?  என்பார்கள்.  {Job  20:7}

 

அவன்  ஒரு  சொப்பனத்தைப்போல்  பறந்துபோய்க்  காணப்படாதவனாவான்;  இரவில்  தோன்றும்  தரிசனத்தைப்போல்  பறக்கடிக்கப்படுவான்.  {Job  20:8}

 

அவனைப்  பார்த்த  கண்  இனி  அவனைப்  பார்ப்பதில்லை;  அவன்  இருந்த  ஸ்தலம்  இனி  அவனைக்  காண்பதில்லை.  {Job  20:9}

 

அவன்  பிள்ளைகள்  எளிமையானவர்களின்  சகாயத்தைத்  தேடுவார்கள்;  அவன்  பறித்ததை  அவன்  கைகள்  திரும்பக்  கொடுக்கவேண்டியதாகும்.  {Job  20:10}

 

அவன்  எலும்புகள்  அவனுடைய  வாலவயதின்  பாவங்களினால்  நிறைந்திருந்து,  அவனோடேகூட  மண்ணிலே  படுத்துக்கொள்ளும்.  {Job  20:11}

 

பொல்லாப்பு  அவன்  வாயிலே  இனிமையாயிருப்பதால்,  அவன்  அதைத்  தன்  நாவின்கீழ்  அடக்கி,  {Job  20:12}

 

அதை  விடாமல்  பதனம்பண்ணி,  தன்  வாய்க்குள்ளே  வைத்துக்கொண்டிருந்தாலும்,  {Job  20:13}

 

அவன்  போஜனம்  அவன்  குடல்களில்  மாறி,  அவனுக்குள்  விரியன்பாம்புகளின்  பிச்சாய்ப்போகும்.  {Job  20:14}

 

அவன்  விழுங்கின  ஆஸ்தியைக்  கக்குவான்;  தேவன்  அதை  அவன்  வயிற்றிலிருந்து  வெளியே  தள்ளிவிடுவார்.  {Job  20:15}

 

அவன்  விரியன்  பாம்புகளின்  விஷத்தை  உறிஞ்சுவான்;  விரியனின்  நாக்கு  அவனைக்  கொல்லும்.  {Job  20:16}

 

தேனும்  நெய்யும்  ஓடும்  வாய்க்கால்களையும்  ஆறுகளையும்  அவன்  காண்பதில்லை.  {Job  20:17}

 

தான்  பிரயாசப்பட்டுத்  தேடினதை  அவன்  விழுங்காமல்  திரும்பக்  கொடுப்பான்;  அவன்  திரும்பக்கொடுக்கிறது  அவன்  ஆஸ்திக்குச்  சரியாயிருக்கும்;  அவன்  களிகூராதிருப்பான்.  {Job  20:18}

 

அவன்  ஒடுக்கி,  ஏழைகளைக்  கைவிட்டு,  தான்  கட்டாத  வீட்டைப்  பறித்தபடியினாலும்,  {Job  20:19}

 

தன்  வயிறு  திருப்தியற்றிருந்தபடியினாலும்,  அவன்  இச்சித்த  காரியங்களில்  அவனுக்கு  ஒன்றும்  இருப்பதில்லை.  {Job  20:20}

 

அவன்  போஜனத்தில்  ஒன்றும்  மீதியாவதில்லை;  ஆகையால்  அவன்  ஆஸ்தி  நிலைநிற்பதில்லை.  {Job  20:21}

 

அவன்  வேண்டுமென்கிற  பரிபூரணம்  அவனுக்கு  வந்தபின்,  அவனுக்கு  வியாகுலம்  உண்டாகும்;  சிறுமைப்படுகிற  ஒவ்வொருவருடைய  கையும்  அவன்மேல்  வரும்.  {Job  20:22}

 

தன்  வயிற்றை  நிரப்பத்தக்கது  இன்னும்  அவனுக்கு  இருந்தாலும்,  அவர்  அவன்மேல்  தமது  கோபத்தின்  உக்கிரத்தை  வரவிட்டு,  அவன்  போஜனம்பண்ணுகையில்,  அதை  அவன்மேல்  சொரியப்பண்ணுவார்.  {Job  20:23}

 

இருப்பு  ஆயுதத்துக்கு  அவன்  தப்பியோடினாலும்  உருக்குவில்  அவனை  உருவ  எய்யும்.  {Job  20:24}

 

உருவின  பட்டயம்  அவன்  சரீரத்தையும்,  மின்னுகிற  அம்பு  அவன்  பிச்சையும்  உருவிப்போகும்;  பயங்கரங்கள்  அவன்மேல்  வரும்.  {Job  20:25}

 

அவன்  ஒளிக்கும்  இடங்களில்  காரிருள்  அடங்கியிருக்கும்;  அவியாத  அக்கினி  அவனைப்  பட்சிக்கும்;  அவன்  கூடாரத்தில்  மீதியாயிருக்கிறவன்  தீங்கு  அநுபவிப்பான்.  {Job  20:26}

 

வானங்கள்  அவன்  அக்கிரமத்தை  வெளிப்படுத்தி,  பூமி  அவனுக்கு  விரோதமாக  எழும்பும்.  {Job  20:27}

 

அவன்  வீட்டின்  சம்பத்துப்  போய்விடும்;  அவருடைய  கோபத்தின்  நாளிலே  அவைகள்  கரைந்துபோகும்.  {Job  20:28}

 

இதுவே  தேவனால்  துன்மார்க்கனுக்குக்  கிடைக்கும்  பங்கும்,  அவன்  செய்கைக்குத்  தேவனால்  அவனுக்கு  வரும்  சுதந்தரமுமாம்  என்றான்.  {Job  20:29}

 

யோபு<Job>  பிரதியுத்தரமாக:  {Job  21:1}

 

என்  வசனத்தைக்  கவனமாய்க்  கேளுங்கள்;  இது  நீங்கள்  என்னைத்  தேற்றரவுபண்ணுவதுபோல  இருக்கும்.  {Job  21:2}

 

நான்  பேசப்போகிறேன்,  சகித்திருங்கள்;  நான்  பேசினபின்பு  பரியாசம்பண்ணுங்கள்.  {Job  21:3}

 

நான்  மனுஷனைப்பார்த்தா  அங்கலாய்க்கிறேன்?  அப்படியானாலும்  என்  ஆவி  விசனப்படாதிருக்குமா?  {Job  21:4}

 

என்னைக்  கவனித்துப்பாருங்கள்,  அப்பொழுது  நீங்கள்  பிரமித்து,  உங்கள்  வாயைக்  கையால்  பொத்திக்கொள்வீர்கள்.  {Job  21:5}

 

இதை  நான்  நினைக்கையில்  கலங்குகிறேன்;  நடுக்கம்  என்  மாம்சத்தைப்  பிடிக்கும்.  {Job  21:6}

 

துன்மார்க்கர்  ஜீவித்து  விருத்தராகி,  வல்லவராவானேன்?  {Job  21:7}

 

அவர்களோடுங்கூட  அவர்கள்  சந்ததியார்  அவர்களுக்கு  முன்பாகவும்,  அவர்கள்  பிள்ளைகள்  அவர்கள்  கண்களுக்கு  முன்பாகவும்  திடப்படுகிறார்கள்.  {Job  21:8}

 

அவர்கள்  வீடுகள்  பயமில்லாமல்  பத்திரப்பட்டிருக்கும்;  தேவனுடைய  மிலாறு  அவர்கள்மேல்  வருகிறதில்லை.  {Job  21:9}

 

அவர்களுடைய  எருது  பொலிந்தால்,  வீணாய்ப்போகாது;  அவர்களுடைய  பசு  சினை  அழியாமல்  ஈனுகிறது.  {Job  21:10}

 

அவர்கள்  தங்கள்  குழந்தைகளை  ஒரு  மந்தையைப்போல  வெளியே  போகவிடுகிறார்கள்;  அவர்கள்  பிள்ளைகள்  குதித்து  விளையாடுகிறார்கள்.  {Job  21:11}

 

அவர்கள்  தம்புரையும்  சுரமண்டலத்தையும்  எடுத்துப்  பாடி,  கின்னரத்தின்  ஓசைக்குச்  சந்தோஷப்படுகிறார்கள்.  {Job  21:12}

 

அவர்கள்  செல்வவான்களாய்த்  தங்கள்  நாட்களைப்  போக்கி,  ஒரு  க்ஷணப்பொழுதிலே  பாதாளத்தில்  இறங்குகிறார்கள்.  {Job  21:13}

 

அவர்கள்  தேவனை  நோக்கி:  எங்களைவிட்டு  விலகியிரும்,  உம்முடைய  வழிகளை  அறிய  விரும்போம்;  {Job  21:14}

 

சர்வவல்லவரை  நாம்  சேவிக்க  அவர்  யார்?  அவரை  நோக்கி  ஜெபம்பண்ணுவதினால்  நமக்குப்  பிரயோஜனம்  என்ன  என்கிறார்கள்.  {Job  21:15}

 

ஆனாலும்  அவர்கள்  வாழ்வு  அவர்கள்  கையிலிராது;  துன்மார்க்கரின்  ஆலோசனை  எனக்குத்  தூரமாயிருப்பதாக.  {Job  21:16}

 

எத்தனைச்  சடுதியில்  துன்மார்க்கரின்  விளக்கு  அணைந்துபோம்;  அவர்  தமது  கோபத்தினால்  வேதனைகளைப்  பகிர்ந்துகொடுக்கையில்,  அவர்கள்  ஆபத்து  அவர்கள்மேல்  வரும்.  {Job  21:17}

 

அவர்கள்  காற்றுமுகத்திலிருக்கிற  துரும்பைப்போலவும்,  பெருங்காற்று  பறக்கடிக்கிற  பதரைப்போலவும்  இருக்கிறார்கள்.  {Job  21:18}

 

தேவன்  அவனுடைய  அக்கிரமத்தை  அவன்  பிள்ளைகளுக்கு  வைத்து  வைக்கிறார்;  அவன்  உணரத்தக்கவிதமாய்  அதை  அவனுக்குப்  பலிக்கப்பண்ணுகிறார்.  {Job  21:19}

 

அவனுடைய  அழிவை  அவனுடைய  கண்கள்  காணும்,  சர்வவல்லவருடைய  உக்கிரத்தைக்  குடிப்பான்.  {Job  21:20}

 

அவன்  மாதங்களின்  தொகை  குறுக்கப்படும்போது,  அவனுக்குப்  பிற்பாடு  அவன்  வீட்டைப்பற்றி  அவனுக்கு  இருக்கும்  விருப்பமென்ன?  {Job  21:21}

 

உயர்ந்தோரை  நியாயந்தீர்க்கிற  தேவனுக்கு  அறிவை  உணர்த்த  யாராலாகும்?  {Job  21:22}

 

ஒருவன்  நிர்வாகத்தோடும்  சுகத்தோடும்  வாழ்ந்து  குறையற்ற  பெலனுள்ளவனாய்ச்  சாகிறான்.  {Job  21:23}

 

அவனுடைய  பால்பாத்திரங்கள்  பாலால்  நிரம்பியிருக்கிறது,  அவன்  எலும்புகளில்  ஊன்  புஷ்டியாயிருக்கிறது.  {Job  21:24}

 

வேறொருவன்  ஒரு  நாளாவது  சந்தோஷத்தோடே  சாப்பிடாமல்,  மனக்கிலேசத்தோடே  சாகிறான்.  {Job  21:25}

 

இருவரும்  சமமாய்  மண்ணிலே  படுத்துக்கொள்ளுகிறார்கள்;  புழுக்கள்  அவர்களை  மூடும்.  {Job  21:26}

 

இதோ,  நான்  உங்கள்  நினைவுகளையும்,  நீங்கள்  என்னைப்பற்றி  அநியாயமாய்க்  கொண்டிருக்கும்  ஆலோசனைகளையும்  அறிவேன்.  {Job  21:27}

 

பிரபுவினுடைய  வீடு  எங்கே?  துன்மார்க்கருடைய  கூடாரம்  எங்கே?  என்று  சொல்லுகிறீர்கள்.  {Job  21:28}

 

வழிநடந்துபோகிறவர்களை  நீங்கள்  கேட்கவில்லையா,  அவர்கள்  சொல்லும்  குறிப்புகளை  நீங்கள்  அறியவில்லையா?  {Job  21:29}

 

துன்மார்க்கன்  ஆபத்துநாளுக்கென்று  வைக்கப்படுகிறான்;  அவன்  கோபாக்கினையின்  நாளுக்கென்று  கொண்டுவரப்படுகிறான்.  {Job  21:30}

 

அவன்  வழியை  அவன்  முகத்துக்கு  முன்பாகத்  தூண்டிக்  காண்பிக்கிறவன்  யார்?  அவன்  செய்கைக்குத்தக்க  பலனை  அவனுக்குச்  சரிக்கட்டுகிறவன்  யார்?  {Job  21:31}

 

அவன்  கல்லறைக்குக்  கொண்டுவரப்படுகிறான்;  அவன்  கோரி  காக்கப்பட்டிருக்கும்.  {Job  21:32}

 

பள்ளத்தாக்கின்  புல்பத்தைகள்  அவனுக்கு  இன்பமாயிருக்கும்;  அவனுக்கு  முன்னாக  எண்ணிறந்த  ஜனங்கள்  போனதுபோல,  அவனுக்குப்  பின்னாக  ஒவ்வொருவரும்  அவ்விடத்துக்குச்  செல்லுவார்கள்.  {Job  21:33}

 

நீங்கள்  வீணான  ஆறுதலை  எனக்குச்  சொல்லுகிறது  என்ன?  உங்கள்  மறுமொழிகளில்  உண்மைக்கேடு  இருக்கிறது  என்றான்.  {Job  21:34}

 

அப்பொழுது  தேமானியனான<Temanite>  எலிப்பாஸ்<Eliphaz>  பிரதியுத்தரமாக:  {Job  22:1}

 

ஒரு  மனுஷன்  விவேகியாயிருந்து,  தனக்குத்தான்  பிரயோஜனமாயிருக்கிறதினால்  தேவனுக்குப்  பிரயோஜனமாயிருப்பானோ?  {Job  22:2}

 

நீர்  நீதிமானாயிருப்பதினால்  சர்வவல்லவருக்கு  நன்மையுண்டாகுமோ?  நீர்  உம்முடைய  வழிகளை  உத்தமமாக்குகிறது  அவருக்கு  ஆதாயமாயிருக்குமோ?  {Job  22:3}

 

அவர்  உமக்குப்  பயந்து  உம்மோடே  வழக்காடி,  உம்மோடே  நியாயத்துக்கு  வருவாரோ?  {Job  22:4}

 

உம்முடைய  பொல்லாப்புப்  பெரியதும்,  உம்முடைய  அக்கிரமங்கள்  முடிவில்லாதவைகளுமாய்  இருக்கிறதல்லவோ?  {Job  22:5}

 

முகாந்தரமில்லாமல்  உம்முடைய  சகோதரர்  கையில்  அடகுவாங்கி,  ஏழைகளின்  வஸ்திரங்களைப்  பறித்துக்கொண்டீர்.  {Job  22:6}

 

விடாய்த்தவனுக்குத்  தாகத்துக்குத்  தண்ணீர்  கொடாமலும்,  பசித்தவனுக்குப்  போஜனம்  கொடாமலும்  போனீர்.  {Job  22:7}

 

பலவானுக்கே  தேசத்தில்  இடமுண்டாயிற்று;  கனவான்  அதில்  குடியேறினான்.  {Job  22:8}

 

விதவைகளை  வெறுமையாய்  அனுப்பிவிட்டீர்;  தாய்தகப்பன்  இல்லாதவர்களின்  புயங்கள்  முறிக்கப்பட்டது.  {Job  22:9}

 

ஆகையால்  கண்ணிகள்  உம்மைச்  சூழ்ந்திருக்கிறது;  அசுப்பிலே  உமக்கு  வந்த  பயங்கரம்  உம்மைக்  கலங்கப்பண்ணுகிறது.  {Job  22:10}

 

நீர்  பார்க்கக்கூடாதபடிக்கு  இருள்  வந்தது,  ஜலப்பிரவாகம்  உம்மை  மூடுகிறது.  {Job  22:11}

 

தேவன்  பரலோகத்தின்  உன்னதங்களிலிருக்கிறார்  அல்லவோ?  நட்சத்திரங்களின்  உயரத்தைப்  பாரும்,  அவைகள்  எத்தனை  உயரமாயிருக்கிறது.  {Job  22:12}

 

நீர்:  தேவன்  எப்படி  அறிவார்,  அந்தகாரத்துக்கு  அப்புறத்திலிருக்கிறவர்  நியாயம்  விசாரிக்கக்கூடுமோ?  {Job  22:13}

 

அவர்  பாராதபடிக்கு  மேகங்கள்  அவருக்கு  மறைவாயிருக்கிறது;  பரமண்டலங்களின்  சக்கரத்திலே  அவர்  உலாவுகிறார்  என்று  சொல்லுகிறீர்.  {Job  22:14}

 

அக்கிரம  மாந்தர்  பூர்வத்தில்  நடந்த  மார்க்கத்தைக்  கவனித்துப்  பார்த்தீரோ?  {Job  22:15}

 

காலம்  வருமுன்னே  அவர்கள்  வாடிப்போனார்கள்;  அவர்களுடைய  அஸ்திபாரத்தின்மேல்  வெள்ளம்  புரண்டது.  {Job  22:16}

 

தேவன்  அவர்கள்  வீடுகளை  நன்மையால்  நிரப்பியிருந்தாலும்,  அவர்கள்  அவரை  நோக்கி:  எங்களைவிட்டு  விலகும்,  சர்வவல்லவராலே  எங்களுக்கு  என்ன  ஆகும்  என்றார்கள்.  {Job  22:17}

 

ஆகையால்  துன்மார்க்கரின்  ஆலோசனை  எனக்குத்  தூரமாயிருப்பதாக.  {Job  22:18}

 

எங்கள்  நிலைமை  நிர்மூலமாகாமல்,  அவர்களுக்கு  மீதியானதையோ  அக்கினி  பட்சித்ததென்பதை  நீதிமான்கள்  கண்டு  சந்தோஷப்படுகிறார்கள்.  {Job  22:19}

 

குற்றமில்லாதவன்  அவர்களைப்  பார்த்து  நகைக்கிறான்.  {Job  22:20}

 

நீர்  அவரோடே  பழகிச்  சமாதானமாயிரும்;  அதினால்  உமக்கு  நன்மை  வரும்.  {Job  22:21}

 

அவர்  வாயினின்று  பிறந்த  வேதப்பிரமாணத்தை  ஏற்றுக்கொண்டு,  அவர்  வார்த்தைகளை  உம்முடைய  இருதயத்தில்  வைத்துக்கொள்ளவேண்டுகிறேன்.  {Job  22:22}

 

நீர்  சர்வவல்லவரிடத்தில்  மனந்திரும்பினால்,  திரும்பக்  கட்டப்படுவீர்;  அக்கிரமத்தை  உமது  கூடாரத்துக்குத்  தூரமாக்குவீர்.  {Job  22:23}

 

அப்பொழுது  தூளைப்போல்  பொன்னையும்,  ஆற்றுக்  கற்களைப்போல்  ஓப்பீரின்<Ophir>  தங்கத்தையும்  சேர்த்து  வைப்பீர்.  {Job  22:24}

 

அப்பொழுது  சர்வவல்லவர்  தாமே  உமக்குப்  பசும்பொன்னும்,  உமக்குச்  சொக்கவெள்ளியுமாயிருப்பார்.  {Job  22:25}

 

அப்பொழுது  சர்வவல்லவர்மேல்  மனமகிழ்ச்சியாயிருந்து,  தேவனுக்கு  நேராக  உம்முடைய  முகத்தை  ஏறெடுப்பீர்.  {Job  22:26}

 

நீர்  அவரை  நோக்கி  விண்ணப்பம்பண்ண,  அவர்  உமக்குச்  செவிகொடுப்பார்;  அப்பொழுது  நீர்  உம்முடைய  பொருத்தனைகளைச்  செலுத்துவீர்.  {Job  22:27}

 

நீர்  ஒரு  காரியத்தை  நிருணயம்பண்ணினால்,  அது  உமக்கு  நிலைவரப்படும்;  உம்முடைய  பாதைகளில்  வெளிச்சம்  பிரகாசிக்கும்.  {Job  22:28}

 

மனுஷர்  ஒடுக்கப்படும்போது  திடப்படக்கடவர்கள்  என்று  நீர்  சொல்ல,  தாழ்ந்தோர்  ரட்சிக்கப்படுவார்கள்.  {Job  22:29}

 

குற்றமற்றிராதவனையுங்கூடத்  தப்புவிப்பார்;  உம்முடைய  கைகளின்  சுத்தத்தினிமித்தம்  அவன்  தப்பிப்போவான்  என்றான்.  {Job  22:30}

 

யோபு<Job>  பிரதியுத்தரமாக:  {Job  23:1}

 

இன்றையதினமும்  என்  அங்கலாய்ப்பு  முரண்டுத்தனமாக  எண்ணப்படுகிறது;  என்  தவிப்பைப்பார்க்கிலும்  என்  வாதை  கடினமானது.  {Job  23:2}

 

நான்  அவரை  எங்கே  கண்டு  சந்திக்கலாம்  என்பதை  அறிந்தால்  நலமாயிருக்கும்;  அப்பொழுது  நான்  அவர்  ஆசனத்துக்கு  முன்பாக  வந்துசேர்ந்து,  {Job  23:3}

 

என்  நியாயத்தை  அவருக்கு  முன்பாக  வரிசையாய்  வைத்து,  காரியத்தை  ரூபிக்கும்  வார்த்தைகளால்  என்  வாயை  நிரப்புவேன்.  {Job  23:4}

 

அவருடைய  மறுமொழிகளை  நான்  அறிந்து,  அவர்  எனக்குச்  சொல்வதை  உணர்ந்துகொள்ளுவேன்.  {Job  23:5}

 

அவர்  தம்முடைய  மகா  வல்லமையின்படியே  என்னோடே  வழக்காடுவாரோ?  அவர்  அப்படிச்  செய்யாமல்  என்மேல்  தயை  வைப்பார்.  {Job  23:6}

 

அங்கே  சன்மார்க்கன்  அவரோடே  வழக்காடலாம்;  அப்பொழுது  என்னை  நியாயந்தீர்க்கிறவரின்  கைக்கு  என்றைக்கும்  நீங்கலாய்த்  தப்புவித்துக்கொள்வேன்.  {Job  23:7}

 

இதோ,  நான்  முன்னாகப்போனாலும்  அவர்  இல்லை;  பின்னாகப்போனாலும்  அவரைக்  காணேன்.  {Job  23:8}

 

இடதுபுறத்தில்  அவர்  கிரியை  செய்தும்  அவரைக்  காணேன்;  வலதுபுறத்திலும்  நான்  அவரைக்  காணாதபடிக்கு  ஒளித்திருக்கிறார்.  {Job  23:9}

 

ஆனாலும்  நான்  போகும்  வழியை  அவர்  அறிவார்;  அவர்  என்னைச்  சோதித்தபின்  நான்  பொன்னாக  விளங்குவேன்.  {Job  23:10}

 

என்  கால்கள்  அவர்  அடிகளைப்  பற்றிப்பிடித்தது;  அவருடைய  நெறியைவிட்டு  நான்  சாயாமல்  அதைக்  கைக்கொண்டேன்.  {Job  23:11}

 

அவர்  உதடுகளின்  கற்பனைகளை  விட்டு  நான்  பின்வாங்குவதில்லை;  அவருடைய  வாயின்  வார்த்தைகளை  எனக்கு  வேண்டிய  ஆகாரத்தைப்பார்க்கிலும்  அதிகமாய்க்  காத்துக்கொண்டேன்.  {Job  23:12}

 

அவரோவென்றால்  ஒரே  மனமாயிருக்கிறார்;  அவரைத்  திருப்பத்தக்கவர்  யார்?  அவருடைய  சித்தத்தின்படியெல்லாம்  செய்வார்.  {Job  23:13}

 

எனக்குக்  குறித்திருக்கிறதை  அவர்  நிறைவேற்றுவார்;  இப்படிப்பட்டவைகள்  இன்னும்  அநேகம்  அவரிடத்தில்  உண்டு.  {Job  23:14}

 

ஆகையால்  அவருக்கு  முன்பாகக்  கலங்குகிறேன்;  நான்  சிந்திக்கிறபோது,  அவருக்குப்  பயப்படுகிறேன்.  {Job  23:15}

 

தேவன்  என்  இருதயத்தை  இளக்கரிக்கப்பண்ணினார்;  சர்வவல்லவர்  என்னைக்  கலங்கப்பண்ணினார்.  {Job  23:16}

 

அந்தகாரம்  வராததற்கு  முன்னே  நான்  சங்கரிக்கப்படாமலும்,  இருளை  அவர்  எனக்கு  மறைக்காமலும்போனதினால்  இப்படியிருக்கிறேன்.  {Job  23:17}

 

சர்வவல்லவருக்குக்  காலங்கள்  மறைக்கப்படாதிருக்க,  அவரை  அறிந்தவர்கள்  அவர்  நியமித்த  நாட்களை  அறியாதிருக்கிறதென்ன?  {Job  24:1}

 

சிலர்  எல்லைக்குறிப்புகளை  ஒற்றி,  மந்தைகளைப்  பலாத்காரமாய்ச்  சாய்த்துக்கொண்டுபோய்ப்  பட்சிக்கிறார்கள்.  {Job  24:2}

 

தாய்  தகப்பன்  இல்லாதவர்களின்  கழுதையை  ஓட்டிக்கொண்டுபோய்,  விதவையின்  மாட்டை  ஈடாக  எடுத்துக்கொள்ளுகிறார்கள்.  {Job  24:3}

 

தேசத்தில்  சிறுமைப்பட்டவர்கள்  ஏகமாய்  ஒளித்துக்கொள்ளத்தக்கதாக,  எளிமையானவர்களை  வழியைவிட்டு  விலக்குகிறார்கள்.  {Job  24:4}

 

இதோ,  அவர்கள்  காட்டுக்கழுதைகளைப்போல  இரைதேட  அதிகாலமே  தங்கள்  வேலைக்குப்  புறப்படுகிறார்கள்;  வனாந்தரவெளிதான்  அவர்களுக்கும்  அவர்கள்  பிள்ளைகளுக்கும்  ஆகாரம்  கொடுக்கவேண்டும்.  {Job  24:5}

 

துன்மார்க்கனுடைய  வயலில்  அவர்கள்  அவனுக்காக  அறுப்பு  அறுத்து,  அவனுடைய  திராட்சத்தோட்டத்தின்  பழங்களைச்  சேர்க்கிறார்கள்.  {Job  24:6}

 

குளிரிலே  போர்த்துக்கொள்ளுகிறதற்கு  ஒன்றும்  இல்லாததினால்,  வஸ்திரமில்லாமல்  இராத்தங்கி,  {Job  24:7}

 

மலைகளிலிருந்துவரும்  மழைகளிலே  நனைந்து,  ஒதுக்கிடமில்லாததினால்  கன்மலையிலே  அண்டிக்கொள்ளுகிறார்கள்.  {Job  24:8}

 

அவர்களோ  தகப்பனில்லாத  பிள்ளையை  முலையைவிட்டுப்  பறித்து,  தரித்திரன்  போர்த்துக்கொண்டிருக்கிறதை  அடகுவாங்குகிறார்கள்.  {Job  24:9}

 

அவனை  வஸ்திரமில்லாமல்  நடக்கவும்,  பட்டினியாய்  அரிக்கட்டுகளைச்  சுமக்கவும்,  {Job  24:10}

 

தங்கள்  மதில்களுக்குள்ளே  செக்காட்டவும்,  தாகத்தவனமாய்  ஆலையாட்டவும்  பண்ணுகிறார்கள்.  {Job  24:11}

 

ஊரில்  மனுஷர்  தவிக்கிறார்கள்,  குற்றுயிராய்க்  கிடக்கிறவர்களின்  ஆத்துமா  கூப்பிடுகிறது;  என்றாலும்,  தேவன்  அதைக்  குற்றமாக  அவர்கள்மேல்  சுமத்துகிறதில்லை.  {Job  24:12}

 

அவர்கள்  வெளிச்சத்துக்கு  விரோதமாய்  நடக்கிறவர்களின்  கூட்டத்தார்;  அவர்கள்  அவருடைய  வழிகளை  அறியாமலும்,  அவருடைய  பாதைகளில்  தரிக்காமலும்  இருக்கிறார்கள்.  {Job  24:13}

 

கொலைபாதகன்  பொழுது  விடிகிறபோது  எழுந்து,  சிறுமையும்  எளிமையுமானவனைக்  கொன்று,  இராக்காலத்திலே  திருடனைப்போல்  திரிகிறான்.  {Job  24:14}

 

விபசாரனுடைய  கண்  மாலை  மயங்குகிற  வேளைக்குக்  காத்திருந்து:  என்னை  ஒரு  கண்ணும்  காணமாட்டாதென்று  முகத்தை  மூடிக்கொள்ளுகிறான்.  {Job  24:15}

 

அவர்கள்  பகலில்  அடையாளம்  பார்த்த  வீடுகளை  இருட்டிலே  கன்னமிடுகிறார்கள்;  அவர்கள்  வெளிச்சத்தை  அறியார்கள்.  {Job  24:16}

 

விடியுங்காலமும்  அவர்களுக்கு  மரண  இருள்போல்  இருக்கிறது;  அப்படிப்பட்டவன்  மரண  இருளின்  பயங்கரத்தோடு  பழகியிருக்கிறான்.  {Job  24:17}

 

நீரோட்டத்தைப்போல்  தீவிரமாய்ப்  போவான்;  தேசத்தில்  அவன்  பங்கு  சபிக்கப்பட்டுப்  போகிறதினால்,  அவன்  திராட்சத்தோட்டங்களின்  வழியை  இனிக்  காண்பதில்லை.  {Job  24:18}

 

வறட்சியும்  உஷ்ணமும்  உறைந்த  மழையைப்  பட்சிக்கும்;  அப்படியே  பாதாளமானது  பாவிகளைப்  பட்சிக்கும்.  {Job  24:19}

 

அவனைப்  பெற்ற  கர்ப்பம்  அவனை  மறக்கும்;  புழு  திருப்திகரமாய்  அவனைத்  தின்னும்;  அவன்  அப்புறம்  நினைக்கப்படுவதில்லை;  அக்கிரமமானது  பட்டமரத்தைப்போல  முறிந்துவிழும்.  {Job  24:20}

 

பிள்ளைபெறாத  மலடியின்  ஆஸ்தியைப்  பட்சித்துவிட்டு,  விதவைக்கு  நன்மை  செய்யாதேபோகிறான்.  {Job  24:21}

 

தன்  பலத்தினாலே  வல்லவர்களைத்  தன்  பாரிசமாக்குகிறான்;  அவன்  எழும்புகிறபோது  ஒருவனுக்கும்  பிராணனைப்பற்றி  நிச்சயமில்லை.  {Job  24:22}

 

தேவன்  அவனுக்குச்  சுகவாழ்வைக்  கட்டளையிட்டால்,  அதின்மேல்  உறுதியாய்  நம்பிக்கை  வைக்கிறான்;  ஆனாலும்  அவருடைய  கண்கள்  அப்படிப்பட்டவர்களின்  வழிகளுக்கு  விரோதமாயிருக்கிறது.  {Job  24:23}

 

அவர்கள்  கொஞ்சக்காலம்  உயர்ந்திருந்து,  காணாமற்போய்,  தாழ்த்தப்பட்டு,  மற்ற  எல்லாரைப்போலும்  அடக்கப்படுகிறார்கள்;  கதிர்களின்  நுனியைப்போல  அறுக்கப்படுகிறார்கள்.  {Job  24:24}

 

அப்படியில்லையென்று  என்னைப்  பொய்யனாக்கி,  என்  வார்த்தைகளை  வியர்த்தமாக்கத்தக்கவன்  யார்  என்றான்.  {Job  24:25}

 

அப்பொழுது  சூகியனான<Shuhite>  பில்தாத்<Bildad>  பிரதியுத்தரமாக:  {Job  25:1}

 

அதிகாரமும்  பயங்கரமும்  அவரிடத்தில்  இருக்கிறது;  அவர்  தமது  உன்னதமான  ஸ்தலங்களில்  சமாதானத்தை  உண்டாக்குகிறார்.  {Job  25:2}

 

அவருடைய  சேனைகளுக்குத்  தொகையுண்டோ?  அவருடைய  வெளிச்சம்  யார்மேல்  உதிக்காமலிருக்கிறது?  {Job  25:3}

 

இப்படியிருக்க,  மனுஷன்  தேவனுக்கு  முன்பாக  நீதிமானாயிருப்பது  எப்படி?  ஸ்திரீயினிடத்தில்  பிறந்தவன்  சுத்தமாயிருப்பது  எப்படி?  {Job  25:4}

 

சந்திரனை  அண்ணாந்துபாரும்,  அதுவும்  பிரகாசியாமலிருக்கிறது;  நட்சத்திரங்களும்  அவர்  பார்வைக்குச்  சுத்தமானவைகள்  அல்ல.  {Job  25:5}

 

புழுவாயிருக்கிற  மனிதனும்,  பூச்சியாயிருக்கிற  மனுபுத்திரனும்  எம்மாத்திரம்  என்றான்.  {Job  25:6}

 

யோபு<Job>  மறுமொழியாக:  {Job  26:1}

 

திடனில்லாதவனுக்கு  நீ  எப்படி  ஒத்தாசைபண்ணினாய்?  பெலனற்ற  கையை  நீ  எப்படி  ஆதரித்தாய்?  {Job  26:2}

 

நீ  ஞானமில்லாதவனுக்கு  எப்படி  உசாவுதுணையாயிருந்து,  மெய்ப்பொருளைக்  குறைவற  அறிவித்தாய்?  {Job  26:3}

 

யாருக்கு  அறிவைப்  போதித்தாய்?  உன்னிடத்திலிருந்து  புறப்பட்ட  ஆவி  யாருடையது?  {Job  26:4}

 

ஜலத்தின்  கீழ்  மடிந்தவர்களுக்கும்,  அவர்களோடே  தங்குகிறவர்களுக்கும்  தத்தளிப்பு  உண்டு.  {Job  26:5}

 

அவருக்கு  முன்பாகப்  பாதாளம்  வெளியாய்த்  திறந்திருக்கிறது;  நரகம்  மூடப்படாதிருக்கிறது.  {Job  26:6}

 

அவர்  உத்தரமண்டலத்தை  வெட்டவெளியிலே  விரித்து,  பூமியை  அந்தரத்திலே  தொங்கவைக்கிறார்.  {Job  26:7}

 

அவர்  தண்ணீர்களைத்  தம்முடைய  கார்மேகங்களில்  கட்டிவைக்கிறார்;  அதின்  பாரத்தினால்  மேகம்  கிழிகிறதில்லை.  {Job  26:8}

 

அவர்  தமது  சிங்காசனம்  நிற்கும்  ஆகாசத்தை  ஸ்திரப்படுத்தி,  அதின்மேல்  தமது  மேகத்தை  விரிக்கிறார்.  {Job  26:9}

 

அவர்  தண்ணீர்கள்மேல்  சக்கரவட்டம்  தீர்த்தார்;  வெளிச்சமும்  இருளும்  முடியுமட்டும்  அப்படியே  இருக்கும்.  {Job  26:10}

 

அவருடைய  கண்டிதத்தால்  வானத்தின்  தூண்கள்  அதிர்ந்து  தத்தளிக்கும்.  {Job  26:11}

 

அவர்  தமது  வல்லமையினால்  சமுத்திரக்  கொந்தளிப்பை  அமரப்பண்ணி,  தமது  ஞானத்தினால்  அதின்  மூர்க்கத்தை  அடக்குகிறார்.  {Job  26:12}

 

தமது  ஆவியினால்  வானத்தை  அலங்கரித்தார்;  அவருடைய  கரம்  நெளிவான  சர்ப்ப  நட்சத்திரத்தை  உருவாக்கிற்று.  {Job  26:13}

 

இதோ,  இவைகள்  அவருடைய  கிரியையில்  கடைகோடியானவைகள்,  அவரைக்குறித்து  நாங்கள்  கேட்டது  எவ்வளவு  கொஞ்சம்;  அவருடைய  வல்லமையின்  இடிமுழக்கத்தை  அறிந்தவன்  யார்  என்றான்.  {Job  26:14}

 

யோபு<Job>  பின்னும்  தன்  பிரசங்கவாக்கியத்தைத்  தொடர்ந்து  சொன்னது:  {Job  27:1}

 

என்  சுவாசம்  என்னிலும்,  தேவன்  தந்த  ஆவி  என்  நாசியிலும்  இருக்குமட்டும்,  {Job  27:2}

 

என்  உதடுகள்  தீமையைச்  சொல்வதுமில்லை;  என்  நாக்கு  கபடம்  பேசுவதுமில்லையென்று,  {Job  27:3}

 

என்  நியாயத்தைத்  தள்ளிவிடுகிற  தேவனும்,  என்  ஆத்துமாவைக்  கசப்பாக்குகிற  சர்வவல்லவருமானவருடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்.  {Job  27:4}

 

நீங்கள்  பேசுகிறது  நீதியென்று  நான்  ஒத்துக்கொள்வது  எனக்குத்  தூரமாயிருப்பதாக;  என்  ஆவி  பிரியுமட்டும்  என்  உத்தமத்தை  என்னைவிட்டு  விலக்கேன்.  {Job  27:5}

 

என்  நீதியைக்  கெட்டியாய்ப்  பிடித்திருக்கிறேன்;  அதை  நான்  விட்டுவிடேன்;  நான்  உயிரோடிருக்குமளவும்  என்  இருதயம்  என்னை  நிந்திக்காது.  {Job  27:6}

 

என்  பகைஞன்  ஆகாதவனைப்போலும்,  எனக்கு  விரோதமாய்  எழும்புகிறவன்  அக்கிரமக்காரனைப்போலும்  இருப்பானாக.  {Job  27:7}

 

மாயக்காரன்  பொருளைத்  தேடி  வைத்திருந்தாலும்,  தேவன்  அவன்  ஆத்துமாவை  எடுத்துக்கொள்ளும்போது,  அவன்  நம்பிக்கை  என்ன?  {Job  27:8}

 

ஆபத்து  அவன்மேல்  வரும்போது,  தேவன்  அவன்  கூப்பிடுதலைக்  கேட்பாரோ?  {Job  27:9}

 

அவன்  சர்வவல்லவர்மேல்  மனமகிழ்ச்சியாயிருப்பானோ?  அவன்  எப்பொழுதும்  தேவனைத்  தொழுதுகொண்டிருப்பானோ?  {Job  27:10}

 

தேவனுடைய  கரத்தின்  கிரியையைக்  குறித்து  உங்களுக்கு  உபதேசிப்பேன்;  சர்வவல்லவரிடத்தில்  இருக்கிறதை  நான்  மறைக்கமாட்டேன்.  {Job  27:11}

 

இதோ,  நீங்கள்  எல்லாரும்  அதைக்  கண்டிருந்தும்,  நீங்கள்  இத்தனை  வீண்  எண்ணங்கொண்டிருக்கிறது  என்ன?  {Job  27:12}

 

பொல்லாத  மனுஷனுக்குத்  தேவனிடத்திலிருந்து  வருகிற  பங்கும்,  கொடூரக்காரர்  சர்வவல்லவரால்  அடைகிற  சுதந்தரமும்  என்னவெனில்,  {Job  27:13}

 

அவனுடைய  குமாரர்  பெருகினால்  பட்டயத்துக்கு  இரையாவார்கள்;  அவன்  கர்ப்பப்பிறப்புகள்  ஆகாரத்தினால்  திருப்தியாவதில்லை.  {Job  27:14}

 

அவனுக்கு  மீதியானவர்கள்  செத்துப்  புதைக்கப்படுவார்கள்;  அவனுடைய  விதவைகள்  புலம்புவதில்லை.  {Job  27:15}

 

அவன்  புழுதியைப்போலப்  பணத்தைக்  குவித்துக்கொண்டாலும்,  மண்ணைப்போல  வஸ்திரங்களைச்  சவதரித்தாலும்,  {Job  27:16}

 

அவன்  சவதரித்ததை  நீதிமான்  உடுத்திக்கொண்டு,  குற்றமில்லாதவன்  அவன்  பணத்தைப்  பகிர்ந்துகொள்ளுவான்.  {Job  27:17}

 

அவனுடைய  வீடு  பொட்டுப்பூச்சி  கட்டின  வீட்டைப்போலும்,  காவல்காக்கிறவன்  போட்ட  குடிசையைப்போலுமாகும்.  {Job  27:18}

 

அவன்  ஐசுவரியவானாய்த்  தூங்கிக்  கிடந்து,  ஒன்றும்  பறிகொடாதேபோனாலும்,  அவன்  தன்  கண்களைத்  திறக்கும்போது  ஒன்றுமில்லாதிருக்கும்.  {Job  27:19}

 

வெள்ளத்தைப்போலத்  திகில்கள்  அவனை  வாரிக்கொண்டுபோகும்;  இராக்காலத்தில்  பெருங்காற்று  அவனை  அடித்துக்கொண்டுபோகும்.  {Job  27:20}

 

கொண்டல்காற்று  அவனைத்  தூக்கிக்கொண்டுபோக,  அவன்  போய்விடுவான்;  அது  அவனை  அவன்  ஸ்தலத்திலிருந்து  தள்ளிக்கொண்டுபோகும்.  {Job  27:21}

 

அவர்  இவைகளை  அவன்மேல்  வரப்பண்ணி  அவனைத்  தப்பவிடாதிருப்பார்;  அவருடைய  கைக்குத்  தப்பியோடப்  பார்ப்பான்.  {Job  27:22}

 

ஜனங்கள்  அவனைப்  பார்த்துக்  கைகொட்டி,  அவனை  அவன்  ஸ்தலத்தைவிட்டு  வெருட்டிவிடுவார்கள்.  {Job  27:23}

 

வெள்ளிக்கு  விளைவிடம்  உண்டு,  பொன்னுக்குப்  புடமிடும்  ஸ்தலமுமுண்டு.  {Job  28:1}

 

இரும்பு  மண்ணிலிருந்து  எடுக்கப்படும்;  செம்பு  கற்களில்  உருக்கி  எடுக்கப்படும்.  {Job  28:2}

 

மனிதன்  அந்தகாரத்திலும்  மரண  இருளிலும்  இருக்கிற  கற்களைக்  கடையாந்தரமட்டும்  ஆராய்ந்து  தேடி,  இருளுக்கும்  அங்கே  முடிவுண்டாக்குகிறான்.  {Job  28:3}

 

கடக்கக்கூடாததும்  நிலையாததுமான  ஆறு  எழும்பினாலும்,  உழைப்பாளியானவன்  அதை  மனுஷரால்  வற்றிப்போகப்பண்ணிச்  செல்லுகிறான்.  {Job  28:4}

 

பூமியின்மேல்  ஆகாரம்  விளையும்;  அதின்  கீழிடங்களிலிருக்கிறவைகளோ,  அக்கினியால்  மாறினதுபோலிருக்கும்.  {Job  28:5}

 

அதின்  கல்லுகளில்  இந்திரநீலம்  விளையும்;  அதின்  பொடியில்  பொன்பொடிகளும்  உண்டாயிருக்கும்.  {Job  28:6}

 

ஒரு  வழியுண்டு,  அது  ஒரு  பட்சிக்கும்  தெரியாது;  வல்லூறின்  கண்ணும்  அதைக்  கண்டதில்லை;  {Job  28:7}

 

துஷ்டமிருகங்களின்  கால்  அதில்  படவில்லை;  சிங்கம்  அதைக்  கடந்ததில்லை.  {Job  28:8}

 

அவன்  தன்  கைகளைக்  கற்பாறையின்மேல்  நீட்டி,  மலைகளை  வேரோடே  புரட்டுகிறான்.  {Job  28:9}

 

கன்மலைகளுக்குள்ளும்  நீர்க்கால்களை  வெட்டுகிறான்;  அவன்  கண்  விலையுயர்ந்த  எல்லாவற்றையும்  காணும்.  {Job  28:10}

 

ஒரு  துளியும்  கசியாதபடி  ஆறுகளை  அடைக்கிறான்;  மறைவிடத்திலிருக்கிறதை  வெளிச்சத்திலே  கொண்டுவருகிறான்.  {Job  28:11}

 

ஆனாலும்  ஞானம்  கண்டெடுக்கப்படுவது  எங்கே?  புத்தி  விளைகிற  இடம்  எது?  {Job  28:12}

 

அதின்  விலை  மனுஷனுக்குத்  தெரியாது;  அது  ஜீவனுள்ளோருடைய  தேசத்திலே  அகப்படுகிறதில்லை.  {Job  28:13}

 

ஆழமானது:  அது  என்னிடத்தில்  இல்லையென்கிறது;  சமுத்திரமானதும்,  அது  என்னிடத்தில்  இல்லையென்கிறது.  {Job  28:14}

 

அதற்கு  ஈடாகத்  தங்கத்தைக்  கொடுக்கவும்,  அதற்குக்  கிரயமாக  வெள்ளியை  நிறுக்கவும்  கூடாது.  {Job  28:15}

 

ஓப்பீரின்<Ophir>  தங்கமும்,  விலையேறப்பெற்ற  கோமேதகமும்,  இந்திர  நீலக்கல்லும்  அதற்கு  ஈடல்ல.  {Job  28:16}

 

பொன்னும்  பளிங்கும்  அதற்கு  ஒப்பல்ல;  பசும்பொன்னாபரணங்களுக்கு  அதை  மாற்றக்கூடாது.  {Job  28:17}

 

பவளத்தையும்  ஸ்படிகத்தையும்  அத்தோடே  ஒப்பிட்டுப்  பேசலாகாது;  முத்துக்களைப்பார்க்கிலும்  ஞானத்தின்  விலை  உயர்ந்தது.  {Job  28:18}

 

எத்தியோப்பியாவின்<Ethiopia>  புஷ்பராகம்  அதற்கு  நிகரல்ல;  பசும்பொன்னும்  அதற்குச்  சரியல்ல.  {Job  28:19}

 

இப்படியிருக்க,  ஞானம்  எங்கேயிருந்து  வரும்;  புத்தி  தங்கும்  இடம்  எங்கே?  {Job  28:20}

 

அது  ஜீவனுள்ள  சகலருடைய  கண்களுக்கும்  ஒளித்தும்,  ஆகாசத்துப்  பறவைகளுக்கு  மறைந்தும்  இருக்கிறது.  {Job  28:21}

 

நாசமும்  மரணமும்,  நாங்கள்  எங்கள்  காதுகளினாலேமாத்திரம்  அதின்  கீர்த்தியைக்  கேட்டோம்  என்கிறது.  {Job  28:22}

 

தேவனோ  அதின்  வழியை  அறிவார்,  அதின்  ஸ்தானம்  அவருக்கே  தெரியும்.  {Job  28:23}

 

அவர்  பூமியின்  கடையாந்தரங்களைப்  பார்த்து,  வானங்களின்கீழ்  இருக்கிறதையெல்லாம்  காண்கிறார்.  {Job  28:24}

 

அவர்  காற்றுக்கு  அதின்  நிறையை  நியமித்து,  ஜலத்துக்கு  அதின்  அளவைப்  பிரமாணித்து,  {Job  28:25}

 

மழைக்குத்  திட்டத்தையும்,  இடிமுழக்கத்தோடே  கூடிய  மின்னலுக்கு  வழியையும்  ஏற்படுத்துகிறார்.  {Job  28:26}

 

அவர்  அதைப்  பார்த்துக்  கணக்கிட்டார்;  அதை  ஆராய்ந்து  ஆயத்தப்படுத்தி,  {Job  28:27}

 

மனுஷனை  நோக்கி:  இதோ,  ஆண்டவருக்குப்  பயப்படுவதே  ஞானம்;  பொல்லாப்பை  விட்டு  விலகுவதே  புத்தி  என்றார்  என்று  சொன்னான்.  {Job  28:28}

 

பின்னும்  யோபு<Job>  தன்  பிரசங்கவாக்கியத்தைத்  தொடர்ந்து  சொன்னது:  {Job  29:1}

 

சென்றுபோன  மாதங்களிலும்,  தேவன்  என்னைக்  காப்பாற்றிவந்த  நாட்களிலும்  எனக்கு  உண்டாயிருந்த  சீர்  இப்பொழுது  இருந்தால்  நலமாயிருக்கும்.  {Job  29:2}

 

அப்பொழுது  அவர்  தீபம்  என்  தலையின்மேல்  பிரகாசித்தது;  அவர்  அருளின  வெளிச்சத்தினால்  இருளைக்  கடந்துபோனேன்.  {Job  29:3}

 

தேவனுடைய  இரகசியச்செயல்  என்  கூடாரத்தின்மேல்  இருந்தது.  {Job  29:4}

 

அப்பொழுது  சர்வவல்லவர்  என்னோடிருந்தார்;  என்  பிள்ளைகள்  என்னைச்  சூழ்ந்திருந்தார்கள்.  {Job  29:5}

 

என்  பாதங்களை  நான்  நெய்யினால்  கழுவினேன்;  கன்மலைகளிலிருந்து  எனக்காக  எண்ணெய்  நதிபோல  ஓடிவந்தது;  அந்தச்  செல்வநாட்களின்  சீர்  இப்போதிருந்தால்  நலமாயிருக்கும்.  {Job  29:6}

 

நான்  பட்டணவீதியால்  வாசலுக்குள்  புறப்பட்டுப்போய்,  வீதியில்  என்  ஆசனத்தைப்  போடும்போது,  {Job  29:7}

 

வாலிபர்  என்னைக்  கண்டு  ஒளித்துக்கொள்வார்கள்;  முதியோர்  எழுந்திருந்து  நிற்பார்கள்.  {Job  29:8}

 

பிரபுக்கள்  பேசுகிறதை  நிறுத்தி,  கையினால்  தங்கள்  வாயைப்  பொத்திக்கொள்வார்கள்.  {Job  29:9}

 

பெரியோரின்  சத்தம்  அடங்கி,  அவர்கள்  நாக்கு  அவர்கள்  மேல்வாயோடு  ஒட்டிக்கொள்ளும்.  {Job  29:10}

 

என்னைக்  கேட்ட  காது  என்னைப்  பாக்கியவான்  என்றது;  என்னைக்  கண்ட  கண்  எனக்குச்  சாட்சியிட்டது.  {Job  29:11}

 

முறையிடுகிற  ஏழையையும்,  திக்கற்ற  பிள்ளையையும்,  உதவியற்றவனையும்  இரட்சித்தேன்.  {Job  29:12}

 

கெட்டுப்போக  இருந்தவனுடைய  ஆசீர்வாதம்  என்மேல்  வந்தது;  விதவையின்  இருதயத்தைக்  கெம்பீரிக்கப்பண்ணினேன்.  {Job  29:13}

 

நீதியைத்  தரித்துக்கொண்டேன்;  அது  என்  உடுப்பாயிருந்தது;  என்  நியாயம்  எனக்குச்  சால்வையும்  பாகையுமாய்  இருந்தது.  {Job  29:14}

 

நான்  குருடனுக்குக்  கண்ணும்,  சப்பாணிக்குக்  காலுமாயிருந்தேன்.  {Job  29:15}

 

நான்  எளியவர்களுக்குத்  தகப்பனாயிருந்து,  நான்  அறியாத  வழக்கை  ஆராய்ந்துபார்த்தேன்.  {Job  29:16}

 

நான்  அநியாயக்காரருடைய  கடைவாய்ப்  பற்களை  உடைத்து,  அவர்கள்  பறித்ததை  அவர்கள்  பற்களிலிருந்து  பிடுங்கினேன்.  {Job  29:17}

 

என்  கூட்டிலே  நான்  ஜீவித்துப்போவேன்;  என்  நாட்களை  மணலத்தனையாய்ப்  பெருகப்பண்ணுவேன்  என்றேன்.  {Job  29:18}

 

என்  வேர்  தண்ணீர்களின்  ஓரமாய்ப்  படர்ந்தது;  என்  கிளையின்மேல்  பனி  இராமுழுதும்  தங்கியிருந்தது.  {Job  29:19}

 

என்  மகிமை  என்னில்  செழித்தோங்கி,  என்  கையிலுள்ள  என்  வில்  புதுப்பெலன்  கொண்டது.  {Job  29:20}

 

எனக்குச்  செவிகொடுத்துக்  காத்திருந்தார்கள்;  என்  ஆலோசனையைக்  கேட்டு  மவுனமாயிருந்தார்கள்.  {Job  29:21}

 

என்  பேச்சுக்குப்  பேசாமலிருந்தார்கள்;  என்  வசனம்  அவர்கள்மேல்  துளிதுளியாய்  விழுந்தது.  {Job  29:22}

 

மழைக்குக்  காத்திருக்கிறதுபோல்  எனக்குக்  காத்திருந்து,  பின்மாரிக்கு  ஆசையுள்ளவர்கள்போல்  தங்கள்  வாயை  ஆவென்று  திறந்திருந்தார்கள்.  {Job  29:23}

 

நான்  அவர்களைப்  பார்த்து  நகைக்கும்போது,  அவர்கள்  துணிகரங்கொள்ளவில்லை;  என்  முகக்களையை  மாறச்செய்யவும்  இல்லை.  {Job  29:24}

 

அவர்கள்  வழியேபோக  எனக்குச்  சித்தமாகும்போது,  நான்  தலைவனாய்  உட்கார்ந்து,  இராணுவத்துக்குள்  ராஜாவைப்போலும்,  துக்கித்தவர்களைத்  தேற்றரவுபண்ணுகிறவனைப்போலும்  இருந்தேன்.  {Job  29:25}

 

இப்போதோ  என்னிலும்  இளவயதானவர்கள்  என்னைப்  பரியாசம்பண்ணுகிறார்கள்;  இவர்களுடைய  பிதாக்களை  நான்  என்  மந்தையைக்  காக்கும்  நாய்களோடே  வைக்கவுங்கூட  வெட்கப்பட்டிருப்பேன்.  {Job  30:1}

 

விருத்தாப்பியத்தினாலே  பெலனற்றுப்போன  அவர்கள்  கைகளினால்  எனக்கு  என்ன  உதவியிருந்தது.  {Job  30:2}

 

குறைச்சலினாலும்  பசியினாலும்  அவர்கள்  வாடி,  வெகுநாளாய்ப்  பாழும்  வெறுமையுமான  அந்தரவெளிக்கு  ஓடிப்போய்,  {Job  30:3}

 

செடிகளுக்குள்  இருக்கிற  தழைகளைப்  பிடுங்குவார்கள்;  காட்டுப்பூண்டுகளின்  கிழங்குகள்  அவர்களுக்கு  ஆகாரமாயிருந்தது.  {Job  30:4}

 

அவர்கள்  மனுஷரின்  நடுவிலிருந்து  துரத்தப்பட்டார்கள்;  கள்ளனைத்  துரத்துகிறதுபோல்:  கள்ளன்  கள்ளன்  என்று  அவர்களைத்  துரத்திவிட்டார்கள்.  {Job  30:5}

 

அவர்கள்  பள்ளத்தாக்குகளின்  வெடிப்புகளிலும்,  பூமியின்  கெபிகளிலும்,  கன்மலைகளிலும்  போய்  குடியிருந்தார்கள்.  {Job  30:6}

 

செடிகளுக்குள்ளிருந்து  கதறி,  காஞ்சொறிகளின்கீழ்  ஒதுங்கினார்கள்.  {Job  30:7}

 

அவர்கள்  மூடரின்  மக்களும்,  நீசரின்  பிள்ளைகளும்,  தேசத்திலிருந்து  துரத்துண்டவர்களுமாய்  இருந்தார்கள்.  {Job  30:8}

 

ஆனாலும்  இப்போது  நான்  அவர்களுக்குப்  பாட்டும்  பழமொழியும்  ஆனேன்.  {Job  30:9}

 

என்னை  அருவருத்து,  எனக்குத்  தூரமாகி,  என்  முகத்துக்கு  முன்பாகத்  துப்பக்  கூசாதிருக்கிறார்கள்.  {Job  30:10}

 

நான்  கட்டின  கட்டை  அவர்  அவிழ்த்து,  என்னைச்  சிறுமைப்படுத்தினபடியினால்,  அவர்களும்  கடிவாளத்தை  என்  முகத்துக்கு  முன்பாக  உதறிவிட்டார்கள்.  {Job  30:11}

 

வலதுபாரிசத்தில்  வாலிபர்  எழும்பி,  என்  கால்களைத்  தவறிவிழப்பண்ணி,  தங்கள்  கேடான  வழிகளை  எனக்கு  நேராக  ஆயத்தப்படுத்துகிறார்கள்.  {Job  30:12}

 

என்  பாதையைக்  கெடுத்து,  என்  ஆபத்தை  வர்த்திக்கப்பண்ணுகிறார்கள்;  அதற்கு  அவர்களுக்கு  ஒத்தாசைபண்ணுகிறவர்கள்  தேவையில்லை.  {Job  30:13}

 

பெரிதான  திறப்புண்டாக்கி,  தாங்கள்  கெடுத்த  வழியில்  புரண்டுவருகிறார்கள்.  {Job  30:14}

 

பயங்கரங்கள்  என்மேல்  திரும்பிவருகிறது,  அவைகள்  காற்றைப்போல  என்  ஆத்துமாவைப்  பின்தொடருகிறது;  என்  சுகவாழ்வு  ஒரு  மேகத்தைப்போல்  கடந்துபோயிற்று.  {Job  30:15}

 

ஆகையால்  இப்போது  என்  ஆத்துமா  என்னில்  முறிந்துபோயிற்று;  உபத்திரவத்தின்  நாட்கள்  என்னைப்  பிடித்துக்கொண்டது.  {Job  30:16}

 

இராக்காலத்திலே  என்  எலும்புகள்  துளைக்கப்பட்டு,  என்  நரம்புகளுக்கு  இளைப்பாறுதல்  இல்லாதிருக்கிறது.  {Job  30:17}

 

நோயின்  உக்கிரத்தினால்  என்  உடுப்பு  வேறுபட்டுப்போயிற்று;  அது  என்  அங்கியின்  கழுத்துப்பட்டையைப்போல,  என்னைச்  சுற்றிக்கொண்டது.  {Job  30:18}

 

சேற்றிலே  தள்ளப்பட்டேன்;  தூளுக்கும்  சாம்பலுக்கும்  ஒப்பானேன்.  {Job  30:19}

 

உம்மை  நோக்கிக்  கூப்பிடுகிறேன்;  நீர்  எனக்கு  மறுஉத்தரவு  கொடாதிருக்கிறீர்;  கெஞ்சிநிற்கிறேன்,  என்மேல்  பாராமுகமாயிருக்கிறீர்.  {Job  30:20}

 

என்மேல்  கொடூரமுள்ளவராக  மாறினீர்;  உம்முடைய  கரத்தின்  வல்லமையால்  என்னை  விரோதிக்கிறீர்.  {Job  30:21}

 

நீர்  என்னைத்  தூக்கி,  என்னைக்  காற்றிலே  பறக்கவிட்டு,  என்னைப்  பயத்தினால்  உருகிப்போகப்பண்ணுகிறீர்.  {Job  30:22}

 

சகல  ஜீவாத்துமாக்களுக்கும்  குறிக்கப்பட்ட  தாவரமாகிய  மரணத்துக்கு  என்னை  ஒப்புக்கொடுப்பீர்  என்று  அறிவேன்.  {Job  30:23}

 

ஆனாலும்  நான்  யாதொருவனை  அவன்  ஆபத்திலே  தவிக்கப்பண்ணினதும்,  {Job  30:24}

 

துன்னாளைக்  கண்டவனுக்காக  நான்  அழாதிருந்ததும்,  எளியவனுக்காக  என்  ஆத்துமா  வியாகுலப்படாதிருந்ததும்  உண்டானால்,  அவர்  என்  மனுவுக்கு  இடங்கொடாமல்,  எனக்கு  விரோதமாய்த்  தமது  கையை  நீட்டுவாராக.  {Job  30:25}

 

நன்மைக்குக்  காத்திருந்த  எனக்குத்  தீமை  வந்தது;  வெளிச்சத்தை  வரப்  பார்த்துக்கொண்டிருந்த  எனக்கு  இருள்  வந்தது.  {Job  30:26}

 

என்  குடல்கள்  கொதித்து,  அமராதிருக்கிறது;  உபத்திரவநாட்கள்  என்மேல்  வந்தது.  {Job  30:27}

 

வெயில்  படாதிருந்தும்,  நான்  கறுகறுத்துத்  திரிகிறேன்;  நான்  சபையிலிருந்து  எழுந்திருக்கும்போது  அலறுகிறேன்.  {Job  30:28}

 

நான்  மலைப்பாம்புகளுக்குச்  சகோதரனும்,  கோட்டான்களுக்குத்  தோழனுமானேன்.  {Job  30:29}

 

என்  தோல்  என்மேல்  கறுத்துப்போயிற்று;  என்  எலும்புகள்  உஷ்ணத்தினால்  காய்ந்துபோயிற்று.  {Job  30:30}

 

என்  சுரமண்டலம்  புலம்பலாகவும்,  என்  கின்னரம்  அழுகிறவர்களின்  ஓலமாகவும்  மாறின.  {Job  30:31}

 

என்  கண்களோடே  உடன்படிக்கைபண்ணின  நான்  ஒரு  கன்னிகையின்மேல்  நினைப்பாயிருப்பதெப்படி?  {Job  31:1}

 

அப்பொழுது  உன்னதங்களிலிருந்து  தேவன்  அளிக்கும்  பங்கும்,  உன்னதத்திலிருந்து  சர்வவல்லவர்  கொடுக்கும்  சுதந்தரமும்  கிடைக்குமோ?  {Job  31:2}

 

மாறுபாடானவனுக்கு  ஆபத்தும்,  அக்கிரமச்  செய்கைக்காரருக்கு  ஆக்கினையுமல்லவோ  கிடைக்கும்.  {Job  31:3}

 

அவர்  என்  வழிகளைப்  பார்த்து,  என்  நடைகளையெல்லாம்  எண்ணுகிறார்  அல்லவோ?  {Job  31:4}

 

நான்  மாயையிலே  நடந்தேனோ,  என்  கால்  கபடுசெய்யத்  தீவிரித்ததோ  என்று,  {Job  31:5}

 

சுமுத்திரையான  தராசிலே  தேவன்  என்னை  நிறுத்து,  என்  உத்தமத்தை  அறிவாராக.  {Job  31:6}

 

என்  நடைகள்  வழியைவிட்டு  விலகினதும்,  என்  இருதயம்  என்  கண்களைப்  பின்தொடர்ந்ததும்,  ஏதாகிலும்  ஒரு  மாசு  என்  கைகளில்  ஒட்டிக்கொண்டதும்  உண்டானால்,  {Job  31:7}

 

அப்பொழுது  நான்  விதைத்ததை  வேறொருவன்  புசிப்பானாக;  என்  பயிர்கள்  வேரற்றுப்போகக்கடவது.  {Job  31:8}

 

என்  மனம்  யாதொரு  ஸ்திரீயின்மேல்  மயங்கி,  அயலானுடைய  வாசலை  நான்  எட்டிப்பார்த்ததுண்டானால்,  {Job  31:9}

 

அப்பொழுது  என்  மனைவி  வேறொருவனுக்கு  மாவரைப்பாளாக;  வேற்றுமனிதர்  அவள்மேல்  சாய்வார்களாக.  {Job  31:10}

 

அது  தோஷம்,  அது  நியாயாதிபதிகளால்  விசாரிக்கப்படும்  அக்கிரமமாமே.  {Job  31:11}

 

அது  பாதாளபரியந்தம்  பட்சிக்கும்  அக்கினியாய்  என்  சம்பத்தையெல்லாம்  நிர்மூலமாக்கும்.  {Job  31:12}

 

என்  வேலைக்காரனானாலும்,  என்  வேலைக்காரியானாலும்,  என்னோடு  வழக்காடும்போது,  அவர்கள்  நியாயத்தை  நான்  அசட்டைபண்ணியிருந்தால்,  {Job  31:13}

 

தேவன்  எழும்பும்போது,  நான்  என்னசெய்வேன்;  அவர்  விசாரிக்கும்போது,  நான்  அவருக்கு  என்ன  மறுஉத்தரவு  சொல்லுவேன்.  {Job  31:14}

 

தாயின்  கர்ப்பத்தில்  என்னை  உண்டுபண்ணினவர்  அவனையும்  உண்டுபண்ணினார்  அல்லவோ?  ஒரேவிதமான  கர்ப்பத்தில்  எங்களை  உருவாக்கினார்  அல்லவோ?  {Job  31:15}

 

எளியவர்கள்  வாஞ்சித்ததை  நான்  கொடாதிருந்து,  விதவையின்  கண்களைப்  பூத்துப்போகப்பண்ணி,  {Job  31:16}

 

தாய்தகப்பனில்லாத  பிள்ளை  என்  ஆகாரத்தில்  சாப்பிடாமல்,  நான்  ஒருவனாய்ச்  சாப்பிட்டதுண்டோ?  {Job  31:17}

 

என்  சிறுவயதுமுதல்  அவன்  தகப்பனிடத்தில்  வளர்வதுபோல  என்னோடே  வளர்ந்தான்;  நான்  என்  தாயின்  கர்ப்பத்திலே  பிறந்ததுமுதல்  அப்படிப்பட்டவர்களைக்  கைலாகுகொடுத்து  நடத்தினேன்.  {Job  31:18}

 

ஒருவன்  உடுப்பில்லாததினால்  மடிந்துபோகிறதையும்,  ஏழைக்கு  மூட  வஸ்திரமில்லாதிருக்கிறதையும்  நான்  கண்டபோது,  {Job  31:19}

 

அவன்  என்  ஆட்டுமயிர்க்  கம்பளியினாலே  அனல்கொண்டதினால்,  அவன்  இடை  என்னைப்  புகழாதிருந்ததும்,  {Job  31:20}

 

ஒலிமுகவாசலில்  எனக்குச்  செல்வாக்கு  உண்டென்று  நான்  கண்டு,  திக்கற்றவனுக்கு  விரோதமாய்  என்  கையை  நீட்டினதும்  உண்டானால்,  {Job  31:21}

 

என்  கைப்பட்டை  தோளிலிருந்து  சரிந்து,  என்  புயத்து  எலும்பு  முறிந்துபோவதாக.  {Job  31:22}

 

தேவன்  ஆக்கினையிடுவார்  என்றும்,  அவருடைய  மகத்துவத்தை  உத்தரிக்கக்கூடாது  என்றும்,  எனக்குப்  பயங்கரமாயிருந்தது.  {Job  31:23}

 

நான்  பொன்னின்மேல்  என்  நம்பிக்கையை  வைத்து,  தங்கத்தைப்பார்த்து:  நீ  என்  ஆதரவு  என்று  நான்  சொன்னதும்,  {Job  31:24}

 

என்  ஆஸ்திபெரியதென்றும்,  என்  கைக்கு  மிகுதியும்  கிடைத்ததென்றும்  நான்  மகிழ்ந்ததும்,  {Job  31:25}

 

சூரியன்  பிரகாசிக்கும்போதும்,  அல்லது  சந்திரன்  மகிமையாய்ச்  செல்லும்போதும்,  நான்  அதை  நோக்கி:  {Job  31:26}

 

என்  மனம்  இரகசியமாய்  மயக்கப்பட்டு,  என்  வாய்  என்  கையை  முத்தி  செய்ததுண்டானால்,  {Job  31:27}

 

இதுவும்  நியாயாதிபதிகளால்  விசாரிக்கப்படத்தக்க  அக்கிரமமாயிருக்கும்;  அதினால்  உன்னதத்திலிருக்கிற  தேவனை  மறுதலிப்பேனே.  {Job  31:28}

 

என்  பகைஞனுடைய  ஆபத்திலே  நான்  மகிழ்ந்து,  பொல்லாப்பு  அவனுக்கு  நேரிட்டபோது  களிகூர்ந்திருந்தேனோ?  {Job  31:29}

 

அவன்  ஜீவனுக்குச்  சாபத்தைக்  கொடுக்கும்படி  விரும்பி,  வாயினால்  பாவஞ்செய்ய  நான்  இடங்கொடுக்கவில்லை.  {Job  31:30}

 

அவன்  இனத்தார்களில்  திருப்தியாகாதவனைக்  காண்பிப்பவன்  யாரென்று  என்  கூடாரத்தின்  மனுஷர்  சொல்லார்களோ?  {Job  31:31}

 

பரதேசி  வீதியிலே  இராத்தங்கினதில்லை;  வழிப்போக்கனுக்கு  என்  வாசல்களைத்  திறந்தேன்.  {Job  31:32}

 

நான்  ஆதாமைப்போல<Adam>  என்  மீறுதல்களை  மூடி,  என்  அக்கிரமத்தை  என்  மடியிலே  ஒளித்துவைத்தேனோ?  {Job  31:33}

 

திரளான  என்  கூட்டத்துக்கு  நான்  பயந்ததினாலாவது,  இனத்தார்  ஜனத்தார்  பண்ணும்  இகழ்ச்சி  என்னைத்  திடுக்கிடப்பண்ணினதினாலாவது,  நான்  பேசாதிருந்து,  வாசற்படியை  விட்டுப்  புறப்படாதிருந்தேனோ?  {Job  31:34}

 

,  என்  வழக்கைக்  கேட்கிறவன்  ஒருவன்  இருந்தால்  நலமாயிருக்கும்;  இதோ,  சர்வவல்லவர்  எனக்கு  உத்தரவு  அருளிச்செய்யவும்,  என்  எதிராளி  தன்  வழக்கை  எழுதிக்கொடுக்கவும்  எனக்கு  விருப்பமுண்டு.  {Job  31:35}

 

அதை  நான்  என்  தோளின்மேல்  வைத்து,  எனக்குக்  கிரீடமாகத்  தரித்துக்கொள்வேனே.  {Job  31:36}

 

அவனுக்கு  நான்  என்  நடைகளைத்  தொகை  தொகையாய்க்  காண்பித்து,  ஒரு  பிரபுவைப்போல  அவனிடத்தில்  போவேன்.  {Job  31:37}

 

எனக்கு  விரோதமாக  என்  காணிபூமி  கூப்பிடுகிறதும்,  அதின்  படைச்சால்கள்கூட  அழுகிறதும்,  {Job  31:38}

 

கூலிகொடாமல்  நான்  அதின்  பலனைப்  புசித்து,  பயிரிட்டவர்களின்  ஆத்துமாவை  உபத்திரவப்படுத்தினதும்  உண்டானால்,  {Job  31:39}

 

அதில்  கோதுமைக்குப்  பதிலாக  முள்ளும்,  வாற்கோதுமைக்குப்  பதிலாகக்  களையும்  முளைக்கக்கடவது  என்றான்.  யோபின்<Job>  வார்த்தைகள்  முடிந்தது.  {Job  31:40}

 

யோபு<Job>  தன்  பார்வைக்கு  நீதிமானாயிருந்தபடியினால்,  அவனுக்கு  அந்த  மூன்று  மனுஷரும்  பிரதியுத்தரம்  சொல்லி  ஓய்ந்தார்கள்.  {Job  32:1}

 

அதினால்  ராமின்<Ram>  வம்சத்தானான  பூசியனாகிய<Buzite>  பரகெயேலின்<Barachel>  குமாரன்  எலிகூவுக்குக்<Elihu>  கோபம்  மூண்டது;  யோபு<Job>,  தேவனைப்பார்க்கிலும்  தன்னைத்தான்  நீதிமானாக்கினதினிமித்தம்,  அவன்மேலும்  அவனுக்குக்  கோபம்  மூண்டது.  {Job  32:2}

 

கொடுக்கத்தக்க  மறுமொழி  யோபின்<Job>  மூன்று  சிநேகிதருக்கும்  அகப்படாதிருந்தும்,  அவர்கள்  அவனை  ஆகாதவனென்று  தீர்த்ததினிமித்தம்,  அவர்கள்மேலும்  அவனுக்குக்  கோபம்  மூண்டது.  {Job  32:3}

 

அவர்கள்  தன்னைப்பார்க்கிலும்  வயதுசென்றவர்களானபடியினால்,  எலிகூ<Elihu>  யோபின்<Job>  வார்த்தைகள்  முடிந்து  தீருமட்டும்  காத்திருந்தான்.  {Job  32:4}

 

அந்த  மூன்று  மனுஷரின்  வாயிலும்  மறுஉத்தரவு  பிறக்கவில்லையென்று  எலிகூ<Elihu>  கண்டபோது,  அவனுக்குக்  கோபம்  மூண்டது.  {Job  32:5}

 

ஆதலால்  பரகெயேலின்<Barachel>  குமாரன்  எலிகூ<Elihu>  என்னும்  பூசியன்<Buzite>  பிரதியுத்தரமாக:  நான்  இளவயதுள்ளவன்,  நீங்களோ  விருத்தாப்பியர்;  ஆகையால்  நான்  அஞ்சி,  என்  அபிப்பிராயத்தை  உங்களுக்கு  முன்பாக  வெளிப்படுத்தப்  பயந்திருந்தேன்.  {Job  32:6}

 

முதியோர்  பேசட்டும்,  வயதுசென்றவர்கள்  ஞானத்தை  அறிவிக்கட்டும்  என்றிருந்தேன்.  {Job  32:7}

 

ஆனாலும்  மனுஷரில்  ஒரு  ஆவியுண்டு;  சர்வவல்லவருடைய  சுவாசமே  அவர்களை  உணர்வுள்ளவர்களாக்கும்.  {Job  32:8}

 

பெரியோரெல்லாம்  ஞானிகளல்ல;  முதியோரெல்லாம்  நீதியை  அறிந்தவர்களுமல்ல.  {Job  32:9}

 

ஆகையால்  எனக்குச்  செவிகொடுங்கள்;  நானும்  என்  அபிப்பிராயத்தை  வெளிப்படுத்துவேன்  என்றேன்.  {Job  32:10}

 

இதோ,  உங்கள்  வசனங்கள்  முடியுமட்டும்  காத்திருந்தேன்;  நீங்கள்  சொல்லத்தக்கதை  ஆராய்ந்து  தேடுமட்டும்,  உங்கள்  நியாயங்களுக்குச்  செவிகொடுத்தேன்.  {Job  32:11}

 

நான்  உங்கள்  சொல்லைக்  கவனித்தேன்;  ஆனாலும்  இதோ,  உங்களில்  யோபுக்கு<Job>  நியாயத்தைத்  தெரியக்காட்டி,  அவருடைய  வசனங்களுக்கு  ஏற்ற  பிரதியுத்தரம்  சொல்லுகிறவனில்லை.  {Job  32:12}

 

ஞானத்தைக்  கண்டுபிடித்தோம்  என்று  நீங்கள்  சொல்லாதபடி  பாருங்கள்;  மனுஷனல்ல,  தேவனே  அவரை  ஜெயங்கொள்ளவேண்டும்.  {Job  32:13}

 

அவர்  என்னைப்பார்த்துப்  பேசினதில்லை;  நீங்கள்  சொன்ன  வார்த்தைகளினால்  நான்  அவருக்குப்  பிரதியுத்தரம்  சொல்வதுமில்லை.  {Job  32:14}

 

அவர்கள்  கலங்கி,  அப்புறம்  பிரதியுத்தரம்  சொல்லாதிருக்கிறார்கள்;  அவர்களுக்குப்  பேச்சு  அற்றுப்போயிற்று.  {Job  32:15}

 

அவர்கள்  பேசார்களோ  என்று  காத்திருந்தேன்;  ஆனாலும்  அவர்கள்  அப்புறம்  மறுமொழி  கொடாமலிருந்தபடியினால்,  {Job  32:16}

 

நானும்  பிரதியுத்தரமாக  எனக்குத்  தோன்றியமட்டும்  சொல்லுவேன்;  நானும்  என்  அபிப்பிராயத்தை  வெளிப்படுத்துவேன்.  {Job  32:17}

 

வார்த்தைகள்  எனக்குள்  நிறைந்திருக்கிறது;  என்  உள்ளத்திலுள்ள  ஆவி  என்னை  நெருக்கி  ஏவுகிறது.  {Job  32:18}

 

இதோ,  என்  உள்ளம்  அடைக்கப்பட்டிருந்து,  புதுத்  துருத்திகளை  முதலாய்ப்  பீறப்பண்ணுகிற  புது  ரசத்தைப்போலிருக்கிறது.  {Job  32:19}

 

நான்  ஆறுதலடையும்படி  பேசுவேன்;  என்  உதடுகளைத்  திறந்து  பிரதியுத்தரம்  சொல்லுவேன்.  {Job  32:20}

 

நான்  ஒருவனுடைய  முகத்தைப்  பாராமலும்,  ஒரு  மனுஷனுக்கும்  இச்சகம்  பேசாமலும்  இருப்பேனாக.  {Job  32:21}

 

நான்  இச்சகம்  பேச  அறியேன்;  பேசினால்  என்னை  உண்டாக்கினவர்  சீக்கிரமாய்  என்னை  எடுத்துக்கொள்வார்.  {Job  32:22}

 

யோபே<Job>,  என்  நியாயங்களைக்  கேளும்;  என்  வார்த்தைகளுக்கெல்லாம்  செவிகொடும்.  {Job  33:1}

 

இதோ,  என்  வாயை  இப்போது  திறந்தேன்;  என்  வாயிலிருக்கிற  என்  நாவானது  பேசும்.  {Job  33:2}

 

என்  வார்த்தைகள்  என்  இருதயத்தின்  உண்மைக்கு  ஒத்திருக்கும்;  நான்  அறிந்ததை  என்  உதடுகள்  சுத்தமாய்  வசனிக்கும்.  {Job  33:3}

 

தேவனுடைய  ஆவியானவர்  என்னை  உண்டாக்கினார்;  சர்வவல்லவருடைய  சுவாசம்  எனக்கு  உயிர்கொடுத்தது.  {Job  33:4}

 

உம்மாலே  கூடுமானால்  எனக்கு  மறுமொழி  கொடும்;  நீர்  ஆயத்தப்பட்டு  எனக்கு  எதிராக  நில்லும்.  {Job  33:5}

 

இதோ,  உம்மைப்போல  நானும்  தேவனால்  உண்டானவன்;  நானும்  மண்ணினால்  உருவாக்கப்பட்டவன்.  {Job  33:6}

 

இதோ,  நீர்  எனக்குப்  பயப்பட்டுக்  கலங்கத்  தேவையில்லை;  என்  கை  உம்மேல்  பாரமாயிருக்கமாட்டாது.  {Job  33:7}

 

நான்  காதாரக்  கேட்க  நீர்  சொன்னதும்,  எனக்குக்  கேள்வியான  உம்முடைய  வார்த்தைகளின்  சத்தமும்  என்னவென்றால்:  {Job  33:8}

 

நான்  மீறுதல்  இல்லாத  சுத்தன்,  நான்  குற்றமற்றவன்,  என்னில்  அக்கிரமமில்லை.  {Job  33:9}

 

இதோ,  என்னில்  அவர்  குற்றம்பிடிக்கப்  பார்க்கிறார்,  என்னைத்  தமக்குச்  சத்துருவாக  எண்ணிக்கொள்ளுகிறார்.  {Job  33:10}

 

அவர்  என்  கால்களைத்  தொழுவிலே  மாட்டி,  என்  நடைகளையெல்லாம்  காவல்படுத்துகிறார்  என்று  சொன்னீர்.  {Job  33:11}

 

இதிலே  நீர்  நீதியுள்ளவர்  அல்லவென்று  உமக்குப்  பிரதியுத்தரமாகச்  சொல்லுகிறேன்;  மனுஷனைப்பார்க்கிலும்  தேவன்  பெரியவராயிருக்கிறார்.  {Job  33:12}

 

அவர்  தம்முடைய  செயல்கள்  எல்லாவற்றையுங்குறித்துக்  காரணம்  சொல்லவில்லையென்று  நீர்  அவரோடே  ஏன்  வழக்காடுகிறீர்?  {Job  33:13}

 

தேவன்  ஒருவிசை  சொல்லியிருக்கிற  காரியத்தை  இரண்டாம்விசை  பார்த்துத்  திருத்துகிறவரல்லவே.  {Job  33:14}

 

கனநித்திரை  மனுஷர்மேல்  இறங்கி,  அவர்கள்  படுக்கையின்மேல்  அயர்ந்திருக்கையில்,  {Job  33:15}

 

அவர்  இராக்காலத்துத்  தரிசனமான  சொப்பனத்திலே  மனுஷருடைய  செவிக்குத்  தாம்  செய்யும்  காரியத்தை  வெளிப்படுத்தி,  அதை  அவர்களுக்கு  வரும்  தண்டனையினாலே  முத்திரைபோட்டு,  {Job  33:16}

 

மனுஷன்  தன்னுடைய  செய்கையைவிட்டு  நீங்கவும்,  மனுஷருடைய  பெருமை  அடங்கவும்  செய்கிறார்.  {Job  33:17}

 

இவ்விதமாய்  அவன்  ஆத்துமாவைப்  படுகுழிக்கும்,  அவன்  ஜீவனைப்  பட்டய  வெட்டுக்கும்  தப்புவிக்கிறார்.  {Job  33:18}

 

அவன்  தன்  படுக்கையிலே  வாதையினாலும்,  தன்  சகல  எலும்புகளிலும்  அகோரமான  நோவினாலும்  தண்டிக்கப்படுகிறான்.  {Job  33:19}

 

அவன்  ஜீவன்  அப்பத்தையும்,  அவன்  ஆத்துமா  ருசிகரமான  போஜனத்தையும்  அரோசிக்கும்.  {Job  33:20}

 

அவன்  மாம்சம்  காணப்படாதபடிக்கு  அழிந்து,  மூடப்பட்டிருந்த  அவன்  எலும்புகள்  வெளிப்படுகிறது.  {Job  33:21}

 

அவன்  ஆத்துமா  பாதாளத்துக்கும்,  அவன்  பிராணன்  சாவுக்கும்  சமீபிக்கிறது.  {Job  33:22}

 

ஆயிரத்தில்  ஒருவராகிய  சாமாசிபண்ணுகிற  தூதனானவர்  மனுஷனுக்குத்  தம்முடைய  நிதானத்தை  அறிவிக்கும்படிக்கு,  அவனுக்கு  அநுசாரியாயிருந்தாரேயாகில்,  {Job  33:23}

 

அவர்  அவனுக்கு  இரங்கி,  அவன்  படுகுழியில்  இறங்காதபடிக்கு:  நீர்  அவனை  இரட்சியும்;  மீட்கும்பொருளை  நான்  கண்டுபிடித்தேன்  என்பார்.  {Job  33:24}

 

அப்பொழுது  அவன்  மாம்சம்  வாலிபத்தில்  இருந்ததைப்பார்க்கிலும்  ஆரோக்கியமடையும்;  தன்  வாலவயது  நாட்களுக்குத்  திரும்புவான்.  {Job  33:25}

 

அவன்  தேவனை  நோக்கி  விண்ணப்பம்பண்ணும்போது,  அவன்  அவருடைய  சமுகத்தைக்  கெம்பீரத்தோடே  பார்க்கும்படி  அவர்  அவன்மேல்  பிரியமாகி,  அந்த  மனுஷனுக்கு  அவனுடைய  நீதியின்  பலனைக்  கொடுப்பார்.  {Job  33:26}

 

அவன்  மனுஷரை  நோக்கிப்பார்த்து:  நான்  பாவஞ்செய்து  செம்மையானதைப்  புரட்டினேன்,  அது  எனக்குப்  பிரயோஜனமாயிருக்கவில்லை.  {Job  33:27}

 

என்  ஆத்துமா  படுகுழியில்  இறங்காதபடி,  அவர்  அதை  இரட்சிப்பார்;  ஆகையால்  என்  பிராணன்  வெளிச்சத்தைக்  காணும்  என்று  சொல்லுவான்.  {Job  33:28}

 

இதோ,  தேவன்  மனுஷனுடைய  ஆத்துமாவைப்  படுகுழிக்கு  விலக்குகிறதற்கும்,  அவனை  ஜீவனுள்ளோரின்  வெளிச்சத்தினாலே  பிரகாசிப்பிக்கிறதற்கும்,  {Job  33:29}

 

அவர்  இவைகளையெல்லாம்  அவனிடத்தில்  பலமுறை  நடப்பிக்கிறார்.  {Job  33:30}

 

யோபே<Job>,  நீர்  கவனித்து  என்  சொல்லைக்  கேளும்;  நான்  பேசப்போகிறேன்,  நீர்  மவுனமாயிரும்.  {Job  33:31}

 

சொல்லத்தக்க  நியாயங்கள்  இருந்ததேயானால்,  எனக்கு  மறுஉத்தரவு  கொடும்;  நீர்  பேசும்,  உம்மை  நீதிமானாகத்  தீர்க்க  எனக்கு  ஆசையுண்டு.  {Job  33:32}

 

ஒன்றும்  இல்லாதிருந்ததேயாகில்  நீர்  என்  சொல்லைக்  கேளும்,  மவுனமாயிரும்,  நான்  உமக்கு  ஞானத்தை  உபதேசிப்பேன்  என்றான்.  {Job  33:33}

 

பின்னும்  எலிகூ<Elihu>  மாறுத்தரமாக:  {Job  34:1}

 

ஞானிகளே,  என்  வார்த்தைகளைக்  கேளுங்கள்;  அறிவாளிகளே,  எனக்குச்  செவிகொடுங்கள்.  {Job  34:2}

 

வாயானது  போஜனத்தை  ருசிபார்க்கிறதுபோல,  செவியானது  வார்த்தைகளைச்  சோதித்துப்பார்க்கும்.  {Job  34:3}

 

நமக்காக  நியாயமானதைத்  தெரிந்துகொள்வோமாக;  நன்மை  இன்னதென்று  நமக்குள்ளே  அறிந்துகொள்வோமாக.  {Job  34:4}

 

யோபு<Job>:  நான்  நீதிமான்;  தேவன்  என்  நியாயத்தைத்  தள்ளிவிட்டார்  என்றும்,  {Job  34:5}

 

நியாயம்  என்னிடத்தில்  இருந்தும்  நான்  பொய்யனென்று  எண்ணப்படுகிறேன்;  மீறுதல்  இல்லாதிருந்தும்,  அம்பினால்  எனக்கு  உண்டான  காயம்  ஆறாததாயிருக்கிறதென்றும்  சொன்னாரே.  {Job  34:6}

 

யோபைப்போலவே<Job>,  பரியாசம்பண்ணுதலைத்  தண்ணீரைப்போல்  குடித்து,  {Job  34:7}

 

அக்கிரமக்காரரோடே  கூடிக்கொண்டு,  துன்மார்க்கரோடே  திரிகிறவன்  யார்?  {Job  34:8}

 

எப்படியெனில்,  தேவன்மேல்  பிரியம்  வைக்கிறது  மனுஷனுக்குப்  பிரயோஜனம்  அல்ல  என்றாரே.  {Job  34:9}

 

ஆகையால்  புத்திமான்களே,  எனக்குச்  செவிகொடுங்கள்;  அக்கிரமம்  தேவனுக்கும்,  அநீதி  சர்வவல்லவருக்கும்  தூரமாயிருக்கிறது.  {Job  34:10}

 

மனுஷனுடைய  செய்கைக்குத்தக்கதை  அவனுக்குச்  சரிக்கட்டி,  அவனவன்  நடக்கைக்குத்தக்கதாக  அவனவனுக்குப்  பலனளிக்கிறார்.  {Job  34:11}

 

தேவன்  அநியாயஞ்  செய்யாமலும்,  சர்வவல்லவர்  நீதியைப்  புரட்டாமலும்  இருக்கிறது  மெய்யே.  {Job  34:12}

 

பூமியின்மேல்  மனுஷனுக்கு  அதிகாரம்  கொடுத்தவர்  யார்?  பூச்சக்கரம்  முழுதையும்  ஒழுங்குப்படுத்தினவர்  யார்?  {Job  34:13}

 

அவர்  தம்முடைய  இருதயத்தை  அவனுக்கு  விரோதமாகத்  திருப்பினாராகில்,  அவனுடைய  ஆவியையும்  அவனுடைய  சுவாசத்தையும்  தம்மிடத்தில்  இழுத்துக்கொள்ளுவார்.  {Job  34:14}

 

அப்படியே  மாம்சமான  யாவும்  ஏகமாய்  ஜீவித்துப்போம்,  மனுஷன்  தூளுக்குத்  திரும்புவான்.  {Job  34:15}

 

உமக்கு  உணர்விருந்தால்  இதைக்  கேளும்,  என்  வார்த்தைகளின்  சத்தத்துக்குச்  செவிகொடும்.  {Job  34:16}

 

நீதியைப்  பகைக்கிற  ஒருவன்  ஆளக்கூடுமோ?  மகா  நீதிபரரைக்  குற்றப்படுத்துவீரோ?  {Job  34:17}

 

ஒரு  ராஜாவைப்  பார்த்து,  நீ  பொல்லாதவன்  என்றும்,  அதிபதிகளைப்  பார்த்து,  நீங்கள்  அக்கிரமக்காரர்  என்றும்  சொல்லத்தகுமோ?  {Job  34:18}

 

இப்படியிருக்க,  பிரபுக்களின்  முகத்தைப்பாராமலும்,  ஏழையைப்பார்க்கிலும்  ஐசுவரியவானை  அதிகமாய்  எண்ணாமலும்  இருக்கிறவரை  நோக்கி  இப்படிச்  சொல்லலாமா?  இவர்கள்  எல்லாரும்  அவர்  கரங்களின்  கிரியையே.  {Job  34:19}

 

இப்படிப்பட்டவர்கள்  சடிதியில்  சாவார்கள்;  ஜனங்கள்  பாதிஜாமத்தில்  கலங்கி  ஒழிந்துபோவார்கள்;  காணாத  கையினால்  பலவந்தர்  அழிந்துபோவார்கள்.  {Job  34:20}

 

அவருடைய  கண்கள்  மனுஷருடைய  வழிகளை  நோக்கியிருக்கிறது;  அவர்களுடைய  நடைகளையெல்லாம்  அவர்  பார்க்கிறார்.  {Job  34:21}

 

அக்கிரமக்காரர்  ஒளித்துக்கொள்ளத்தக்க  அந்தகாரமுமில்லை,  மரண  இருளுமில்லை.  {Job  34:22}

 

மனுஷன்  தேவனோடே  வழக்காடும்படி  அவர்  அவன்மேல்  மிஞ்சினதொன்றையும்  சுமத்தமாட்டார்.  {Job  34:23}

 

ஆராய்ந்து  முடியாத  நியாயமாய்  அவர்  வல்லமையுள்ளவர்களை  நொறுக்கி,  வேறே  மனுஷரை  அவர்கள்  ஸ்தானத்திலே  நிறுத்துகிறார்.  {Job  34:24}

 

அவர்கள்  கிரியைகளை  அவர்  அறிந்தவரானபடியால்,  அவர்கள்  நசுங்கிப்போகத்தக்கதாய்  இராக்காலத்தில்  அவர்களைக்  கவிழ்த்துப்போடுகிறார்.  {Job  34:25}

 

அவர்கள்  அவரை  விட்டுப்  பின்வாங்கி,  அவருடைய  எல்லா  வழிகளையும்  உணர்ந்துகொள்ளாமல்  போனபடியினாலும்,  {Job  34:26}

 

எளியவர்களின்  கூக்குரல்  அவரிடத்தில்  சேரும்படி  செய்ததினாலும்,  சிறுமையானவனுடைய  கூக்குரலைக்  கேட்கிற  அவர்,  {Job  34:27}

 

எல்லாரும்  பார்க்கும்படி  அவர்களைத்  துன்மார்க்கரென்று  அடிக்கிறார்.  {Job  34:28}

 

மாயக்காரன்  ஆளாதபடிக்கும்,  ஜனங்கள்  சிக்கிக்கொள்ளப்படாதபடிக்கும்,  {Job  34:29}

 

ஒரு  ஜனத்துக்கானாலும்  ஒரு  மனுஷனுக்கானாலும்,  அவர்  சமாதானத்தை  அருளினால்  யார்  கலங்கப்பண்ணுவான்?  அவர்  தமது  முகத்தை  மறைத்தால்  அவரைக்  காண்கிறவன்  யார்?  {Job  34:30}

 

நான்  தண்டிக்கப்பட்டேன்;  நான்  இனிப்  பாவஞ்செய்யமாட்டேன்.  {Job  34:31}

 

நான்  காணாத  காரியத்தை  நீர்  எனக்குப்  போதியும்,  நான்  அநியாயம்  பண்ணினேனானால்,  நான்  இனி  அப்படிச்  செய்வதில்லை  என்று  தேவனை  நோக்கிச்  சொல்லத்தகுமே.  {Job  34:32}

 

நீர்  அப்படிச்  செய்யமாட்டோமென்கிறபடியினால்,  உம்மோடிருக்கிறவர்களில்  ஒருவனை  உமக்குப்  பதிலாக  அதைச்  செய்யச்சொல்வீரோ?  நான்  அல்ல,  நீரே  தெரிந்துகொள்ளவேண்டும்;  அல்லவென்றால்,  நீர்  அறிந்திருக்கிறதைச்  சொல்லும்.  {Job  34:33}

 

யோபு<Job>  அறிவில்லாமல்  பேசினார்;  அவர்  வார்த்தைகள்  ஞானமுள்ளவைகள்  அல்லவென்று,  {Job  34:34}

 

புத்தியுள்ள  மனுஷர்  என்  பட்சமாய்ப்  பேசுவார்கள்;  ஞானமுள்ள  மனுஷனும்  எனக்குச்  செவிகொடுப்பான்.  {Job  34:35}

 

அக்கிரமக்காரர்  சொன்ன  மறுஉத்தரவுகளினிமித்தம்  யோபு<Job>  முற்றமுடிய  சோதிக்கப்படவேண்டியதே  என்  அபேட்சை.  {Job  34:36}

 

தம்முடைய  பாவத்தோடே  மீறுதலைக்  கூட்டினார்;  அவர்  எங்களுக்குள்ளே  கைகொட்டி,  தேவனுக்கு  விரோதமாய்த்  தம்முடைய  வார்த்தைகளை  மிகுதியாக  வசனித்தார்  என்றான்.  {Job  34:37}

 

பின்னும்  எலிகூ<Elihu>  மாறுத்தரமாக:  {Job  35:1}

 

என்  நீதி  தேவனுடைய  நீதியைப்பார்க்கிலும்  பெரியதென்று  நீர்  சொன்னது  நியாயம்  என்று  எண்ணுகிறீரோ?  {Job  35:2}

 

நான்  பாவியாயிராததினால்  எனக்குப்  பிரயோஜனமென்ன?  பலன்  என்ன?  என்று  சொன்னீர்.  {Job  35:3}

 

உமக்கும்  உம்மோடே  இருக்கிற  உம்முடைய  சிநேகிதருக்கும்  நான்  பிரதியுத்தரம்  சொல்லுகிறேன்.  {Job  35:4}

 

நீர்  வானத்தை  அண்ணாந்துபார்த்து,  உம்மைப்பார்க்கிலும்  உயரமாயிருக்கிற  ஆகாயமண்டலங்களைக்  கண்ணோக்கும்.  {Job  35:5}

 

நீர்  பாவஞ்செய்தால்  அதினாலே  அவருக்கு  என்ன  நஷ்டம்?  உம்முடைய  மீறுதல்கள்  மிகுதியானாலும்,  அதினாலே  அவருக்கு  என்ன  சேதம்?  {Job  35:6}

 

நீர்  நீதிமானாயிருந்தால்,  அதினாலே  அவருக்கு  என்ன  கிடைக்கும்?  அல்லது  அவர்  உம்முடைய  கையில்  என்ன  லாபத்தைப்  பெறுவார்?  {Job  35:7}

 

உம்முடைய  பாவத்தினால்  உம்மைப்போன்ற  மனுஷனுக்கு  நஷ்டமும்,  உம்முடைய  நீதியினால்  மனுபுத்திரனுக்கு  லாபமும்  உண்டாகும்.  {Job  35:8}

 

அநேகரால்  பலவந்தமாய்  ஒடுக்கப்பட்டவர்கள்  முறையிட்டு,  வல்லவர்களுடைய  புயத்தினிமித்தம்  அலறுகிறார்கள்.  {Job  35:9}

 

பூமியின்  மிருகங்களைப்பார்க்கிலும்  எங்களைப்  புத்திமான்களும்,  ஆகாசத்துப்  பறவைகளைப்பார்க்கிலும்  எங்களை  ஞானவான்களுமாக்கி,  {Job  35:10}

 

என்னை  உண்டாக்கினவரும்,  இரவிலும்  கீதம்பாட  அருள்செய்கிறவருமாகிய  என்  சிருஷ்டிகர்த்தாவாகிய  தேவன்  எங்கே  என்று  கேட்பவன்  ஒருவனுமில்லை.  {Job  35:11}

 

அங்கே  அவர்கள்  பொல்லாதவர்களின்  பெருமையினிமித்தம்  கூப்பிடுகிறார்கள்;  அவரோ  மறுஉத்தரவு  கொடுக்கிறதில்லை.  {Job  35:12}

 

தேவன்  வீண்வார்த்தைக்குச்  செவிகொடார்,  சர்வவல்லவர்  அதைக்  கவனியார்.  {Job  35:13}

 

அவருடைய  தரிசனம்  உமக்குக்  கிடைக்கிறதில்லை  என்று  நீர்  சொல்லுகிறீரே;  ஆனாலும்  நியாயத்தீர்ப்பு  அவரிடத்தில்  இருக்கிறது;  ஆகையால்  அவருக்குக்  காத்துக்கொண்டிரும்.  {Job  35:14}

 

இப்போது  அவருடைய  கோபமானது  நியாயத்தை  முற்றிலும்  விசாரியாது;  அவர்  இன்னும்  ஒன்றையும்  குறையற்றவிதமாய்த்  தீர்க்கவில்லை.  {Job  35:15}

 

ஆகையால்  யோபு<Job>  வீணாய்த்  தம்முடைய  வாயைத்  திறந்து,  அறிவில்லாமல்  வார்த்தைகளை  மிகுதியாய்  வசனிக்கிறார்  என்றான்.  {Job  35:16}

 

பின்னும்  எலிகூ<Elihu>:  {Job  36:1}

 

நான்  பேசிமுடியுமட்டும்  சற்றே  பொறும்;  இன்னும்  தேவன்பட்சத்தில்  நான்  சொல்லவேண்டிய  நியாயங்களை  உமக்குச்  சொல்லிக்காண்பிப்பேன்.  {Job  36:2}

 

நான்  தூரத்திலிருந்து  என்  ஞானத்தைக்  கொண்டுவந்து,  என்னை  உண்டாக்கினவருடைய  நீதியை  விளங்கப்பண்ணுவேன்.  {Job  36:3}

 

மெய்யாகவே  என்  வார்த்தைகள்  பொய்யற்றிருக்கும்;  உம்மோடே  பேசுகிறவன்  அறிவில்  தேறினவன்.  {Job  36:4}

 

இதோ,  தேவன்  மகத்துவமுள்ளவர்,  அவர்  ஒருவரையும்  புறக்கணியார்;  மன  உருக்கத்திலும்  அவர்  மகத்துவமுள்ளவர்.  {Job  36:5}

 

அவர்  துன்மார்க்கரைப்  பிழைக்க  ஒட்டாதிருக்கிறார்;  சிறுமையானவர்களின்  நியாயத்தை  விசாரிக்கிறார்.  {Job  36:6}

 

அவர்  தம்முடைய  கண்களை  நீதிமான்களைவிட்டு  விலக்காமல்,  அவர்களை  ராஜாக்களோடே  கூடச்  சிங்காசனத்தில்  ஏறவும்,  உயர்ந்த  ஸ்தலத்தில்  என்றைக்கும்  உட்கார்ந்திருக்கவும்  செய்கிறார்.  {Job  36:7}

 

அவர்கள்  விலங்குகள்  போடப்பட்டு,  உபத்திரவத்தின்  கயிறுகளால்  கட்டப்பட்டிருந்தாலும்,  {Job  36:8}

 

அவர்,  அவர்கள்  கிரியையையும்,  மிஞ்சிப்போன  அவர்களுடைய  மீறுதல்களையும்  அவர்களுக்குத்  தெரியப்படுத்தி,  {Job  36:9}

 

அக்கிரமத்தை  விட்டுத்  திரும்பும்படி  அவர்கள்  செவியைத்  திறந்து  கடிந்துகொள்ளுகிறார்.  {Job  36:10}

 

அவர்கள்  அடங்கி  அவரைச்  சேவித்தால்,  தங்கள்  நாட்களை  நன்மையாகவும்,  தங்கள்  வருஷங்களைச்  செல்வவாழ்வாகவும்  போக்குவார்கள்.  {Job  36:11}

 

அடங்கார்களேயாகில்  பட்டயத்துக்கு  இரையாகி,  ஞானம்  அடையாமல்  மாண்டுபோவார்கள்.  {Job  36:12}

 

மாயமுள்ள  இருதயத்தார்  குரோதத்தைக்  குவித்துக்கொள்ளுகிறார்கள்;  அவர்களை  அவர்  கட்டிவைக்கும்போது  கெஞ்சிக்  கூப்பிடுவார்கள்.  {Job  36:13}

 

அவர்கள்  வாலவயதிலே  மாண்டுபோவார்கள்;  இலச்சையானவர்களுக்குள்ளே  அவர்கள்  பிராணன்  முடியும்.  {Job  36:14}

 

சிறுமைப்பட்டவர்களை  அவர்  சிறுமைக்கு  நீங்கலாக்கி,  அவர்கள்  ஒடுக்கப்பட்டிருக்கையில்  அவர்கள்  செவியைத்  திறக்கிறார்.  {Job  36:15}

 

அப்படியே  அவர்  உம்மையும்  நெருக்கத்தினின்று  விலக்கி,  ஒடுக்கமில்லாத  விசாலத்திலே  வைப்பார்;  உம்முடைய  போஜனபந்தி  கொழுமையான  பதார்த்தங்களால்  நிறைந்திருக்கும்.  {Job  36:16}

 

ஆகாதவன்மேல்  வரும்  நியாயத்தீர்ப்பு  நிறைவேறப்  பார்ப்பீர்;  நியாயமும்  நீதியும்  உம்மை  ஆதரிக்கும்.  {Job  36:17}

 

உக்கிரமுண்டாயிருக்கிறதினால்  அவர்  உம்மை  ஒரு  அடியினால்  வாரிக்கொண்டு  போகாதபடிக்கு  எச்சரிக்கையாயிரும்;  அப்பொழுது  மீட்கும்பொருளை  மிகுதியாய்க்  கொடுத்தாலும்  அதற்கு  நீர்  நீங்கலாகமாட்டீர்.  {Job  36:18}

 

உம்முடைய  செல்வத்தை  அவர்  மதிப்பாரோ?  உம்முடைய  பொன்னையும்,  பூரண  பராக்கிரமத்தையும்  அவர்  மதிக்கமாட்டாரே.  {Job  36:19}

 

ஜனங்கள்  தங்கள்  இடத்தைவிட்டு  வாரிக்கொள்ளப்படப்போகிற  இரவை  வாஞ்சிக்காதிரும்.  {Job  36:20}

 

அக்கிரமத்துக்குத்  திரும்பாதபடிக்கு  எச்சரிக்கையாயிரும்;  உபத்திரவத்தைப்பார்க்கிலும்  அக்கிரமத்தைத்  தெரிந்துகொண்டீரே.  {Job  36:21}

 

இதோ,  தேவன்  தம்முடைய  வல்லமையில்  உயர்ந்திருக்கிறார்;  அவரைப்போல்  போதிக்கிறவர்  யார்?  {Job  36:22}

 

அவருடைய  வழியின்  நியாயத்தை  விசாரிக்கத்தக்கவன்  யார்?  நீர்  அநியாயம்  செய்தீர்  என்று  சொல்லத்தக்கவன்  யார்?  {Job  36:23}

 

மனுஷர்  நோக்கிப்பார்க்கிற  அவருடைய  கிரியையை  நீர்  மகிமைப்படுத்த  நினையும்.  {Job  36:24}

 

எல்லா  மனுஷரும்  அதைக்  காண்கிறார்களே;  தூரத்திலிருந்து  அது  மனுஷருக்கு  வெளிப்படுகிறது.  {Job  36:25}

 

இதோ,  தேவன்  மகத்துவமுள்ளவர்;  நாம்  அவரை  அறிய  முடியாது;  அவருடைய  வருஷங்களின்  இலக்கம்  ஆராய்ந்து  முடியாதது.  {Job  36:26}

 

அவர்  நீர்த்துளிகளை  அணுவைப்போல  ஏறப்பண்ணுகிறார்;  அவைகள்  மேகத்திலிருந்து  மழையாய்ச்  சொரிகிறது.  {Job  36:27}

 

அதை  மேகங்கள்  பெய்து,  மனுஷர்மேல்  மிகுதியாய்ப்  பொழிகிறது.  {Job  36:28}

 

மேகங்களின்  பரவுதலையும்,  அவருடைய  கூடாரத்திலிருந்து  எழும்பும்  குமுறல்களையும்  அறியமுடியுமோ?  {Job  36:29}

 

இதோ,  அதின்மேல்  தம்முடைய  மின்னலின்  ஒளியை  விரிக்கிறார்;  சமுத்திரத்தின்  ஆழங்களையும்  மூடுகிறார்.  {Job  36:30}

 

அவைகளால்  ஜனங்களை  தண்டிக்கிறவரும்,  ஆகாரங்கொடுத்து  இரட்சிக்கிறவருமாயிருக்கிறார்.  {Job  36:31}

 

அவர்  மின்னலின்  ஒளியைத்  தமது  கைக்குள்ளே  மூடி,  அது  இன்னின்னதை  அடிக்கவேண்டுமென்று  கட்டளையிடுகிறார்.  {Job  36:32}

 

அதினால்  அவர்  செய்ய  நினைக்கிறதையும்,  மந்தாரம்  எழும்பப்போகிறதையும்,  ஆடுமாடுகள்  அறியப்படுத்தும்.  {Job  36:33}

 

இதினால்  என்  இருதயம்  தத்தளித்து,  தன்னிடத்தைவிட்டுத்  தெறிக்கிறது.  {Job  37:1}

 

அவருடைய  சத்தத்தினால்  உண்டாகிற  அதிர்ச்சியையும்,  அவர்  வாயிலிருந்து  புறப்படுகிற  முழக்கத்தையும்  கவனமாய்க்  கேளுங்கள்.  {Job  37:2}

 

அவர்  வானத்தின்  கீழெங்கும்  அந்தத்  தொனியையும்,  பூமியின்  கடையாந்தரங்கள்மேல்  அதின்  மின்னலையும்  செல்லவிடுகிறார்.  {Job  37:3}

 

அதற்குப்பின்பு  அவர்  சத்தமாய்  முழங்கி,  தம்முடைய  மகத்துவத்தின்  சத்தத்தைக்  குமுறப்பண்ணுகிறார்;  அவருடைய  சத்தம்  கேட்கப்படும்போது  அதைத்  தவிர்க்கமுடியாது.  {Job  37:4}

 

தேவன்  தம்முடைய  சத்தத்தை  ஆச்சரியமானவிதமாய்க்  குமுறப்பண்ணுகிறார்;  நாம்  கிரகிக்கக்கூடாத  பெரியகாரியங்களை  அவர்  செய்கிறார்.  {Job  37:5}

 

அவர்  உறைந்த  மழையையும்,  கல்மழையையும்,  தம்முடைய  வல்லமையின்  பெருமழையையும்  பார்த்து:  பூமியின்மேல்  பெய்யுங்கள்  என்று  கட்டளையிடுகிறார்.  {Job  37:6}

 

தாம்  உண்டாக்கின  சகல  மனுஷரும்  தம்மை  அறியும்படிக்கு,  அவர்  சகல  மனுஷருடைய  கையையும்  முத்திரித்துப்போடுகிறார்.  {Job  37:7}

 

அப்பொழுது  காட்டுமிருகங்கள்  தங்கள்  குகைகளில்  புகுந்து,  தங்கள்  கெபிகளில்  தங்கும்.  {Job  37:8}

 

தெற்கேயிருந்து  சூறாவளியும்,  வடகாற்றினால்  குளிரும்  வரும்.  {Job  37:9}

 

தம்முடைய  சுவாசத்தினால்  தேவன்  குளிரைக்  கொடுக்கிறார்;  அப்பொழுது  ஜலத்தின்  மேற்பரப்பானது  உறைந்துபோம்.  {Job  37:10}

 

அவர்  நீர்த்துளிகளை  மேகத்தில்  ஏற்றி,  மின்னலினால்  மேகத்தைச்  சிதறப்பண்ணுகிறார்.  {Job  37:11}

 

அவர்  அவைகளுக்குக்  கட்டளையிடுகிற  யாவையும்,  அவைகள்  பூச்சக்கரத்தில்  நடப்பிக்கும்படி,  அவர்  அவைகளைத்  தம்முடைய  ஞான  ஆலோசனைகளின்படியே  சுற்றித்  திரியப்பண்ணுகிறார்.  {Job  37:12}

 

ஒன்றில்  தண்டனையாகவும்,  ஒன்றில்  தம்முடைய  பூமிக்கு  உபயோகமாகவும்,  ஒன்றில்  கிருபையாகவும்,  அவைகளை  வரப்பண்ணுகிறார்.  {Job  37:13}

 

யோபே<Job>,  இதற்குச்  செவிகொடும்;  தரித்துநின்று  தேவனுடைய  ஆச்சரியமான  கிரியைகளைத்  தியானித்துப்பாரும்.  {Job  37:14}

 

தேவன்  அவைகளைத்  திட்டம்பண்ணி,  தம்முடைய  மேகத்தின்  மின்னலைப்  பிரகாசிக்கப்பண்ணும்  விதத்தை  அறிவீரோ?  {Job  37:15}

 

மேகங்கள்  தொங்கும்படி  வைக்கும்  நிறையையும்,  பூரண  ஞானமுள்ளவரின்  அற்புதமான  செய்கைகளையும்,  {Job  37:16}

 

தென்றலினால்  அவர்  பூமியை  அமையப்பண்ணும்போது,  உம்முடைய  வஸ்திரங்கள்  உஷ்ணமாயிருக்கும்  வகையையும்  அறிவீரோ?  {Job  37:17}

 

வார்க்கப்பட்ட  கண்ணாடியைப்போல்  கெட்டியான  ஆகாயமண்டலங்களை  நீர்  அவரோடேகூட  இருந்து  விரித்தீரோ?  {Job  37:18}

 

அவருக்கு  நாம்  சொல்லத்தக்கதை  எங்களுக்குப்  போதியும்;  அந்தகாரத்தினிமித்தம்  முறைதப்பிப்  பேசுகிறோம்.  {Job  37:19}

 

நான்  பேசத்துணிந்தேன்  என்று  யாதாமொருவன்  அவருக்கு  முன்பாகச்  சொல்லத்தகுமோ?  ஒருவன்  பேசத்துணிந்தால்  அவன்  விழுங்கப்பட்டுப்போவானே.  {Job  37:20}

 

இப்போதும்  காற்று  வீசி  ஆகாயமண்டலங்களிலுள்ள  மப்பு  நீங்கப்பண்ணியிருக்கிற  சமயத்தில்  வடக்கேயிருந்து  பொன்மயமான  காந்தி  வருகிறபோது,  {Job  37:21}

 

ஆகாயமண்டலத்திலே  பிரகாசிக்கிற  சூரியனை  முதலாய்  ஒருவரும்  நோக்கிப்  பார்க்கக்கூடாதே;  தேவனிடத்திலோ  பயங்கரமான  மகத்துவமுண்டு.  {Job  37:22}

 

சர்வவல்லவரை  நாம்  கண்டுபிடிக்கக்கூடாது;  அவர்  வல்லமையிலும்  நியாயத்திலும்  பெருத்தவர்;  அவர்  மகாநீதிபரர்;  அவர்  ஒடுக்கமாட்டார்.  {Job  37:23}

 

ஆகையால்  மனுஷர்  அவருக்குப்  பயப்படவேண்டும்;  தங்கள்  எண்ணத்தில்  ஞானிகளாயிருக்கிற  எவர்களையும்  அவர்  மதிக்கமாட்டார்  என்றான்.  {Job  37:24}

 

அப்பொழுது  கர்த்தர்:  பெருங்காற்றிலிருந்து  யோபுக்கு<Job>  உத்தரவாக:  {Job  38:1}

 

அறிவில்லாத  வார்த்தைகளினால்  ஆலோசனையை  அந்தகாரப்படுத்துகிற  இவன்  யார்?  {Job  38:2}

 

இப்போதும்  புருஷனைப்போல்  இடைகட்டிக்கொள்;  நான்  உன்னைக்  கேட்பேன்;  நீ  எனக்கு  உத்தரவு  சொல்லு.  {Job  38:3}

 

நான்  பூமியை  அஸ்திபாரப்படுத்துகிறபோது  நீ  எங்கேயிருந்தாய்?  நீ  அறிவாளியானால்  அதை  அறிவி.  {Job  38:4}

 

அதற்கு  அளவு  குறித்தவர்  யார்?  அதின்மேல்  நூல்போட்டவர்  யார்?  இதை  நீ  அறிந்திருந்தால்  சொல்லு.  {Job  38:5}

 

அதின்  ஆதாரங்கள்  எதின்மேல்  போடப்பட்டது?  அதின்  கோடிக்கல்லை  வைத்தவர்  யார்?  {Job  38:6}

 

அப்பொழுது  விடியற்காலத்து  நட்சத்திரங்கள்  ஏகமாய்ப்  பாடி,  தேவபுத்திரர்  எல்லாரும்  கெம்பீரித்தார்களே.  {Job  38:7}

 

கர்ப்பத்திலிருந்து  உதிக்கிறதுபோல்  சமுத்திரம்  புரண்டுவந்தபோது,  அதைக்  கதவுகளால்  அடைத்தவர்  யார்?  {Job  38:8}

 

மேகத்தை  அதற்கு  வஸ்திரமாகவும்,  இருளை  அதற்குப்  புடவையாகவும்  நான்  உடுத்தினபோதும்,  {Job  38:9}

 

நான்  அதற்கு  எல்லையைக்  குறித்து,  அதற்குத்  தாழ்ப்பாள்களையும்  கதவுகளையும்  போட்டு:  {Job  38:10}

 

இம்மட்டும்  வா,  மிஞ்சி  வராதே;  உன்  அலைகளின்  பெருமை  இங்கே  அடங்கக்கடவது  என்று  நான்  சொல்லுகிறபோதும்  நீ  எங்கேயிருந்தாய்?  {Job  38:11}

 

துஷ்டர்கள்  பூமியிலிருந்து  உதறிப்போடப்படும்படிக்கு,  அதின்  கடையாந்தரங்களைப்  பிடிக்கும்பொருட்டு,  {Job  38:12}

 

உன்  ஜீவகாலத்தில்  எப்போதாவது  நீ  விடியற்காலத்துக்குக்  கட்டளைகொடுத்து,  அருணோதயத்துக்கு  அதின்  இடத்தைக்  காண்பித்ததுண்டோ?  {Job  38:13}

 

பூமி  முத்திரையிடப்பட்ட  களிமண்போல்  வேறே  ரூபங்கொள்ளும்;  சகலமும்  வஸ்திரம்  தரித்திருக்கிறதுபோல்  காணப்படும்.  {Job  38:14}

 

துன்மார்க்கரின்  ஒளி  அவர்களை  விட்டு  எடுபடும்;  மேட்டிமையான  புயம்  முறிக்கப்படும்.  {Job  38:15}

 

நீ  சமுத்திரத்தின்  அடித்தலங்கள்மட்டும்  புகுந்து,  ஆழத்தின்  அடியில்  உலாவினதுண்டோ?  {Job  38:16}

 

மரணவாசல்கள்  உனக்குத்  திறந்ததுண்டோ?  மரண  இருளின்  வாசல்களை  நீ  பார்த்ததுண்டோ?  {Job  38:17}

 

நீ  பூமியின்  விசாலங்களை  ஆராய்ந்து  அறிந்ததுண்டோ?  இவைகளையெல்லாம்  நீ  அறிந்திருந்தால்  சொல்லு.  {Job  38:18}

 

வெளிச்சம்  வாசமாயிருக்கும்  இடத்துக்கு  வழியெங்கே?  இருள்  குடிகொண்டிருக்கும்  ஸ்தானமெங்கே?  {Job  38:19}

 

அதின்  எல்லை  இன்னதென்று  உனக்குத்  தெரியுமோ?  அதின்  வீட்டுக்குப்போகிற  பாதையை  அறிந்திருக்கிறாயோ?  {Job  38:20}

 

நீ  அதை  அறியும்படி  அப்போது  பிறந்திருந்தாயோ?  உன்  நாட்களின்  தொகை  அவ்வளவு  பெரிதோ?  {Job  38:21}

 

உறைந்த  மழையின்  பண்டசாலைகளுக்குள்  நீ  பிரவேசித்தாயோ?  கல்மழையிருக்கிற  பண்டசாலைகளைப்  பார்த்தாயோ?  {Job  38:22}

 

ஆபத்து  வருங்காலத்திலும்,  கலகமும்  யுத்தமும்  வருங்காலத்திலும்,  பிரயோகிக்கும்படி  நான்  அவைகளை  வைத்துவைத்திருக்கிறேன்.  {Job  38:23}

 

வெளிச்சம்  பரவப்படுகிறதற்கும்,  கீழ்க்காற்று  பூமியின்மேல்  வீசுகிறதற்குமான  வழி  எங்கே?  {Job  38:24}

 

பாழும்  அந்தரவெளியுமான  தரையைத்  திருப்தியாக்கி,  இளம்பூண்டுகளின்  முளைகளை  முளைக்கப்பண்ணும்படி,  {Job  38:25}

 

பூமியெங்கும்  மனுஷர்  குடியில்லாத  இடத்திலும்,  மனுஷசஞ்சாரமில்லாத  வனாந்தரத்திலும்  மழையை  வருஷிக்கப்பண்ணி,  {Job  38:26}

 

வெள்ளத்துக்கு  நீர்க்கால்களையும்,  இடிமுழக்கங்களோடு  வரும்  மின்னலுக்கு  வழிகளையும்  பகுத்தவர்  யார்?  {Job  38:27}

 

மழைக்கு  ஒரு  தகப்பனுண்டோ?  பனித்துளிகளை  ஜநிப்பித்தவர்  யார்?  {Job  38:28}

 

உறைந்த  தண்ணீர்  யாருடைய  வயிற்றிலிருந்து  புறப்படுகிறது?  ஆகாயத்தினுடைய  உறைந்த  பனியைப்  பெற்றவர்  யார்?  {Job  38:29}

 

ஜலம்  கல்லுருவங்கொண்டு  மறைந்து,  ஆழத்தின்  முகம்  கெட்டியாய்  உறைந்திருக்கிறதே.  {Job  38:30}

 

அறுமீன்  நட்சத்திரத்தின்  சுகிர்த  சம்பந்தத்தை  நீ  இணைக்கக்கூடுமோ?  அல்லது  மிருகசீரிஷத்தின்  கட்டுகளை  அவிழ்ப்பாயோ?  {Job  38:31}

 

இராசிகளை  அதினதின்  காலத்திலே  வரப்பண்ணுவாயோ?  துருவச்சக்கர  நட்சத்திரத்தையும்  அதைச்  சேர்ந்த  நட்சத்திரங்களையும்  வழிநடத்துவாயோ?  {Job  38:32}

 

வானத்தின்  நியமங்களை  நீ  அறிவாயோ?  அது  பூமியையாளும்  ஆளுகையை  நீ  திட்டம்பண்ணுவாயோ?  {Job  38:33}

 

ஏராளமான  தண்ணீர்  உன்மேல்  சொரியவேணும்  என்று  உன்  சத்தத்தை  மேகங்கள்பரியந்தம்  உயர்த்துவாயோ?  {Job  38:34}

 

நீ  மின்னல்களை  அழைத்தனுப்பி,  அவைகள்  புறப்பட்டுவந்து:  இதோ,  இங்கேயிருக்கிறோம்  என்று  உனக்குச்  சொல்லும்படி  செய்வாயோ?  {Job  38:35}

 

அந்தக்கரணங்களில்  ஞானத்தை  வைத்தவர்  யார்?  உள்ளத்தில்  புத்தியைக்  கொடுத்தவர்  யார்?  {Job  38:36}

 

ஞானத்தினாலே  கொடிமாசிகளை  எண்ணுபவர்  யார்?  {Job  38:37}

 

தூளானது  ஏகபாளமாகவும்,  மண்கட்டிகள்  ஒன்றோடொன்று  ஒட்டிக்கொள்ளவும்,  ஆகாயத்துருத்திகளிலுள்ள  தண்ணீரைப்  பொழியப்பண்ணுகிறவர்  யார்?  {Job  38:38}

 

நீ  சிங்கத்துக்கு  இரையை  வேட்டையாடி,  {Job  38:39}

 

சிங்கக்குட்டிகள்  தாங்கள்  தங்கும்  இடங்களிலே  கிடந்து  கெபியிலே  பதிவிருக்கிறபோது,  அவைகளின்  ஆசையைத்  திருப்தியாக்குவாயோ?  {Job  38:40}

 

காக்கைக்குஞ்சுகள்  தேவனை  நோக்கிக்  கூப்பிட்டு,  ஆகாரமில்லாமல்  பறந்து  அலைகிறபோது,  அவைகளுக்கு  இரையைச்  சவதரித்துக்  கொடுக்கிறவர்  யார்?  {Job  38:41}

 

வரையாடுகள்  ஈனுங்காலத்தை  அறிவாயோ?  மான்கள்  குட்டிபோடுகிறதைக்  கவனித்தாயோ?  {Job  39:1}

 

அவைகள்  சினைப்பட்டிருந்து  வருகிற  மாதங்களை  நீ  எண்ணி,  அவைகள்  ஈனுங்காலத்தை  அறிவாயோ?  {Job  39:2}

 

அவைகள்  நொந்து  குனிந்து  தங்கள்  குட்டிகளைப்  போட்டு,  தங்கள்  வேதனைகளை  நீக்கிவிடும்.  {Job  39:3}

 

அவைகளின்  குட்டிகள்  பலத்து,  வனத்திலே  வளர்ந்து,  அவைகளண்டைக்குத்  திரும்ப  வராமற்போய்விடும்.  {Job  39:4}

 

காட்டுக்கழுதையைத்  தன்னிச்சையாய்த்  திரியவிட்டவர்  யார்?  அந்தக்  காட்டுக்கழுதையின்  கட்டுகளை  அவிழ்த்தவர்  யார்?  {Job  39:5}

 

அதற்கு  நான்  வனாந்தரத்தை  வீடாகவும்,  உவர்நிலத்தை  வாசஸ்தலமாகவும்  கொடுத்தேன்.  {Job  39:6}

 

அது  பட்டணத்தின்  இரைச்சலை  அலட்சியம்பண்ணி,  ஓட்டுகிறவனுடைய  கூக்குரலை  மதிக்கிறதில்லை.  {Job  39:7}

 

அது  மலைகளிலே  தன்  மேய்ச்சலைக்  கண்டுபிடித்து,  சகலவிதப்  பச்சைப்பூண்டுகளையும்  தேடித்திரியும்.  {Job  39:8}

 

காண்டாமிருகம்  உன்னிடத்தில்  சேவிக்கச்  சம்மதிக்குமோ?  அது  உன்  முன்னணைக்கு  முன்பாக  இராத்தங்குமோ?  {Job  39:9}

 

படைச்சால்களை  உழ  நீ  காண்டாமிருகத்தைக்  கயிறுபோட்டு  ஏரிலே  பூட்டுவாயோ?  அது  உனக்கு  இசைந்து  பரம்படிக்குமோ?  {Job  39:10}

 

அது  அதிக  பெலமுள்ளதென்று  நீ  நம்பி  அதினிடத்தில்  வேலை  வாங்குவாயோ?  {Job  39:11}

 

உன்  தானியத்தை  அது  உன்  வீட்டில்  கொண்டுவந்து,  உன்  களஞ்சியத்தில்  சேர்க்கும்  என்று  நீ  அதை  நம்புவாயோ?  {Job  39:12}

 

தீக்குருவிகள்  தங்கள்  செட்டைகளை  அசைவாட்டி  ஓடுகிற  ஓட்டம்,  நாரை  தன்  செட்டைகளாலும்  இறகுகளாலும்  பறக்கிறதற்குச்  சமானமல்லவோ?  {Job  39:13}

 

அது  தன்  முட்டைகளைத்  தரையிலே  இட்டு,  அவைகளை  மணலிலே  அனலுறைக்க  வைத்துவிட்டுப்போய்,  {Job  39:14}

 

காலால்  மிதிபட்டு  உடைந்துபோம்  என்பதையும்,  காட்டுமிருகங்கள்  அவைகளை  மிதித்துவிடும்  என்பதையும்  நினைக்கிறதில்லை.  {Job  39:15}

 

அது  தன்  குஞ்சுகள்  தன்னுடையதல்லாததுபோல  அவைகளைக்  காக்காத  கடினகுணமுள்ளதாயிருக்கும்;  அவைகளுக்காக  அதற்குக்  கவலையில்லாதபடியினால்  அது  பட்ட  வருத்தம்  விருதாவாம்.  {Job  39:16}

 

தேவன்  அதற்குப்  புத்தியைக்  கொடாமல்,  ஞானத்தை  விலக்கிவைத்தார்.  {Job  39:17}

 

அது  செட்டை  விரித்து  எழும்பும்போது,  குதிரையையும்  அதின்மேல்  ஏறியிருக்கிறவனையும்  அலட்சியம்பண்ணும்.  {Job  39:18}

 

குதிரைக்கு  நீ  வீரியத்தைக்  கொடுத்தாயோ?  அதின்  தொண்டையில்  குமுறலை  வைத்தாயோ?  {Job  39:19}

 

ஒரு  வெட்டுக்கிளியை  மிரட்டுகிறதுபோல  அதை  மிரட்டுவாயோ?  அதினுடைய  நாசியின்  செருக்கு  பயங்கரமாயிருக்கிறது.  {Job  39:20}

 

அது  தரையிலே  தாளடித்து,  தன்  பலத்தில்  களித்து,  ஆயுதங்களைத்  தரித்தவருக்கு  எதிராகப்  புறப்படும்.  {Job  39:21}

 

அது  கலங்காமலும்,  பட்டயத்துக்குப்  பின்வாங்காமலுமிருந்து,  பயப்படுதலை  அலட்சியம்பண்ணும்.  {Job  39:22}

 

அம்பறாத்தூணியும்,  மின்னுகிற  ஈட்டியும்,  கேடகமும்  அதின்மேல்  கலகலக்கும்போது,  {Job  39:23}

 

கர்வமும்  மூர்க்கமுங்கொண்டு  தரையை  விழுங்கிவிடுகிறதுபோல்  அநுமானித்து,  எக்காளத்தின்  தொனிக்கு  அஞ்சாமல்  பாயும்.  {Job  39:24}

 

எக்காளம்  தொனிக்கும்போது  அது  நிகியென்று  கனைக்கும்;  யுத்தத்தையும்,  படைத்தலைவரின்  ஆர்ப்பரிப்பையும்,  சேனைகளின்  ஆரவாரத்தையும்  தூரத்திலிருந்து  மோப்பம்  பிடிக்கும்.  {Job  39:25}

 

உன்  புத்தியினாலே  ராஜாளி  பறந்து,  தெற்குக்கு  எதிராகத்  தன்  செட்டைகளை  விரிக்கிறதோ?  {Job  39:26}

 

உன்  கற்பனையினாலே  கழுகு  உயரப்  பறந்து,  உயரத்திலே  தன்  கூட்டைக்  கட்டுமோ?  {Job  39:27}

 

அது  கன்மலையிலும்,  கன்மலையின்  சிகரத்திலும்,  அரணான  ஸ்தலத்திலும்  தங்கி  வாசம்பண்ணும்.  {Job  39:28}

 

அங்கேயிருந்து  இரையை  நோக்கும்;  அதின்  கண்கள்  தூரத்திலிருந்து  அதைப்  பார்க்கும்.  {Job  39:29}

 

அதின்  குஞ்சுகள்  இரத்தத்தை  உறிஞ்சும்;  பிணம்  எங்கேயோ  அங்கே  கழுகு  சேரும்  என்றார்.  {Job  39:30}

 

பின்னும்  கர்த்தர்  யோபுக்கு<Job>  உத்தரமாக:  {Job  40:1}

 

சர்வவல்லவரோடே  வழக்காடி  அவருக்குப்  புத்தி  படிப்பிக்கிறவன்  யார்?  தேவன்பேரில்  குற்றம்  பிடிக்கிறவன்  இவைகளுக்கு  உத்தரவு  சொல்லக்கடவன்  என்றார்.  {Job  40:2}

 

அப்பொழுது  யோபு<Job>  கர்த்தருக்குப்  பிரதியுத்தரமாக:  {Job  40:3}

 

இதோ,  நான்  நீசன்;  நான்  உமக்கு  என்ன  மறுஉத்தரவு  சொல்லுவேன்;  என்  கையினால்  என்  வாயைப்  பொத்திக்கொள்ளுகிறேன்.  {Job  40:4}

 

நான்  இரண்டொருதரம்  பேசினேன்;  இனி  நான்  பிரதியுத்தரம்  கொடாமலும்  பேசாமலும்  இருப்பேன்  என்றான்.  {Job  40:5}

 

அப்பொழுது  கர்த்தர்  பெருங்காற்றில்  இருந்து  யோபுக்கு<Job>  உத்தரவு  அருளினார்.  {Job  40:6}

 

இப்போதும்  புருஷனைப்போல  நீ  அரைகட்டிக்கொள்;  நான்  உன்னைக்  கேட்பேன்;  நீ  எனக்கு  உத்தரவு  சொல்லு.  {Job  40:7}

 

நீ  என்  நியாயத்தை  அவமாக்குவாயோ?  நீ  உன்னை  நீதிமானாக்கிக்கொள்ளும்படிக்கு  என்மேல்  குற்றஞ்சுமத்துவாயோ?  {Job  40:8}

 

தேவனுடைய  புயத்தைப்போல்  உனக்குப்  புயமுண்டோ?  அவரைப்போல்  இடிமுழக்கமாய்ச்  சத்தமிடக்கூடுமோ?  {Job  40:9}

 

இப்போதும்  நீ  முக்கியத்தாலும்  மகத்துவத்தாலும்  உன்னை  அலங்கரித்து,  மகிமையையும்  கனத்தையும்  தரித்துக்கொண்டு,  {Job  40:10}

 

நீ  உன்  கோபத்தின்  உக்கிரத்தை  வீசி,  அகந்தையுள்ளவனையெல்லாம்  தேடிப்பார்த்துத்  தாழ்த்திவிட்டு,  {Job  40:11}

 

பெருமையுள்ளவனையெல்லாம்  கவனித்து,  அவனைப்  பணியப்பண்ணி,  துன்மார்க்கரை  அவர்களிருக்கிற  ஸ்தலத்திலே  மிதித்துவிடு.  {Job  40:12}

 

நீ  அவர்களை  ஏகமாய்ப்  புழுதியிலே  புதைத்து,  அவர்கள்  முகங்களை  அந்தரங்கத்திலே  கட்டிப்போடு.  {Job  40:13}

 

அப்பொழுது  உன்  வலதுகை  உனக்கு  இரட்சிப்பு  உண்டுபண்ணும்  என்று  சொல்லி,  நான்  உன்னைப்  புகழுவேன்.  {Job  40:14}

 

இப்போதும்  பிகெமோத்தை<behemoth>  நீ  கவனித்துப்பார்;  உன்னை  உண்டாக்கினதுபோல  அதையும்  உண்டாக்கினேன்;  அது  மாட்டைப்போல்  புல்லைத்  தின்னும்.  {Job  40:15}

 

இதோ,  அதினுடைய  பெலன்  அதின்  இடுப்பிலும்,  அதின்  வீரியம்  அதின்  வயிற்றின்  நரம்புகளிலும்  இருக்கிறது.  {Job  40:16}

 

அது  தன்  வாலைக்  கேதுருமரத்தைப்போல்  நீட்டுகிறது;  அதின்  இடுப்பு  நரம்புகள்  பின்னிக்கொண்டிருக்கிறது.  {Job  40:17}

 

அதின்  எலும்புகள்  கெட்டியான  வெண்கலத்தைப்போலவும்,  அதின்  அஸ்திகள்  இருப்புக்  கம்பிகளைப்போலவும்  இருக்கிறது.  {Job  40:18}

 

அது  தேவனுடைய  கிரியைகளில்  பிரதானமான  ஒரு  கிரியை,  அதை  உண்டாக்கினவர்  அதற்கு  ஒரு  பட்டயத்தையும்  கொடுத்தார்.  {Job  40:19}

 

காட்டுமிருகங்கள்  யாவும்  விளையாடுகிற  மலைகள்  அதற்கு  மேய்ச்சலை  விளைவிக்கும்.  {Job  40:20}

 

அது  நிழலுள்ள  செடிகளின்  கீழும்,  நாணலின்  மறைவிலும்,  உளையிலும்  படுத்துக்கொள்ளும்.  {Job  40:21}

 

தழைகளின்  நிழல்  அதைக்  கவிந்து,  நதியின்  அலரிகள்  அதைச்  சூழ்ந்துகொள்ளும்.  {Job  40:22}

 

இதோ,  நதி  புரண்டுவந்தாலும்  அது  பயந்தோடாது;  யோர்தான்<Jordan>  நதியத்தனை  தண்ணீர்  அதின்  முகத்தில்  மோதினாலும்  அது  அசையாமலிருக்கும்.  {Job  40:23}

 

அதின்  கண்கள்  பார்த்திருக்க  அதை  யார்  பிடிக்கக்கூடும்?  மூக்கணாங்கயிறுபோட  அதின்  மூக்கை  யார்  குத்தக்கூடும்?  {Job  40:24}

 

லிவியாதானை<leviathan>  தூண்டிலினால்  பிடிக்கக்கூடுமோ?  அதின்  நாக்கை  நீ  விடுகிற  கயிற்றினாலே  பிடிக்கக்கூடுமோ?  {Job  41:1}

 

அதின்  மூக்கை  நார்க்கயிறுபோட்டுக்  கட்டக்கூடுமோ?  குறட்டினால்  அதின்  தாடையை  உருவக்  குத்தக்கூடுமோ?  {Job  41:2}

 

அது  உன்னைப்  பார்த்து  அநேக  விண்ணப்பஞ்  செய்யுமோ?  உன்னை  நோக்கி  இச்சகவார்த்தைகளைச்  சொல்லுமோ?  {Job  41:3}

 

அது  உன்னோடே  உடன்படிக்கைபண்ணுமோ?  அதைச்  சதாகாலமும்  அடிமைகொள்வாயோ?  {Job  41:4}

 

ஒரு  குருவியோடே  விளையாடுகிறதுபோல்,  நீ  அதனோடே  விளையாடி,  அதை  நீ  உன்  பெண்மக்களண்டையிலே  கட்டிவைப்பாயோ?  {Job  41:5}

 

கூட்டாளிகள்  அதைப்  பிடிக்கப்  பிரயத்தனப்பட்டு,  அதை  வியாபாரிகளுக்குப்  பங்கிடுவார்களோ?  {Job  41:6}

 

நீ  அதின்  தோலை  அநேக  அம்புகளினாலும்,  அதின்  தலையை  எறிவல்லையங்களினாலும்  எறிவாயோ?  {Job  41:7}

 

அதின்மேல்  உன்  கையைப்போடு,  யுத்தத்தை  நினைத்துக்கொள்;  இனி  அப்படிச்  செய்யத்  துணியமாட்டாய்.  {Job  41:8}

 

இதோ,  அதைப்  பிடிக்கலாம்  என்று  நம்பினவன்  மோசம்போய்,  அதைப்  பார்த்தவுடனே  விழுவான்  அல்லவோ?  {Job  41:9}

 

அதை  எழுப்பத்தக்க  தைரியவான்  இல்லாதிருக்க,  எனக்கு  முன்பாக  நிற்பவன்  யார்?  {Job  41:10}

 

தனக்குப்  பதில்கொடுக்கப்படும்படி,  முந்தி  எனக்குக்  கொடுத்தவன்  யார்?  வானத்தின்  கீழுள்ளவைகள்  எல்லாம்  என்னுடையவைகள்.  {Job  41:11}

 

அதின்  அங்கங்களும்,  அதின்  வீரியமும்,  அதின்  உடல்  இசைவின்  நேர்த்தியும்  இன்னதென்று  நான்  சொல்லாமல்  மறைக்கமாட்டேன்.  {Job  41:12}

 

அது  மூடியிருக்கிற  அதின்  போர்வையைக்  கிளப்பக்கூடியவன்  யார்?  அதின்  இரண்டு  தாடைகளின்  நடுவே  கடிவாளம்  போடத்தக்கவன்  யார்?  {Job  41:13}

 

அதின்  முகத்தின்  கதவைத்  திறக்கக்கூடியவன்  யார்?  சுற்றிலுமிருக்கிற  அதின்  பற்கள்  பயங்கரமானவைகள்.  {Job  41:14}

 

முத்திரைப்  பதிப்புப்போல  அழுத்தங்கொண்டு  அடர்த்தியாயிருக்கிற  அதின்  பரிசைகளின்  அரணிப்பு  மகா  சிறப்பாயிருக்கிறது.  {Job  41:15}

 

அவைகள்  நடுவே  காற்றும்  புகமாட்டாத  நெருக்கமாய்  அவைகள்  ஒன்றோடொன்று  இணைக்கப்பட்டிருக்கிறது.  {Job  41:16}

 

அவைகள்  ஒன்றோடொன்று  ஒட்டிக்கொண்டு  இணைபிரியாமல்  பிடித்துக்கொண்டிருக்கிறது.  {Job  41:17}

 

அது  தும்முகையில்  ஒளி  வீசும்,  அதின்  கண்கள்  அருணோதயத்தின்  புருவங்களைப்போல்  இருக்கிறது.  {Job  41:18}

 

அதின்  வாயிலிருந்து  எரிகிற  பந்தங்கள்  புறப்பட்டு,  அக்கினிப்பொறிகள்  பறக்கும்.  {Job  41:19}

 

கொதிக்கிற  சட்டியிலும்  கொப்பரையிலும்  இருந்து  புறப்படுகிறதுபோல,  அதின்  நாசிகளிலிருந்து  புகை  புறப்படும்.  {Job  41:20}

 

அதின்  சுவாசம்  கரிகளைக்  கொளுத்தும்,  அதின்  வாயிலிருந்து  ஜுவாலை  புறப்படும்.  {Job  41:21}

 

அதின்  கழுத்திலே  பெலன்  குடிகொண்டிருக்கும்;  பயங்கரம்  அதற்குமுன்  கூத்தாடும்.  {Job  41:22}

 

அதின்  உடற்கூறுகள்,  அசையாத  கெட்டியாய்  ஒன்றோடொன்று  ஒட்டிக்கொண்டிருக்கும்.  {Job  41:23}

 

அதின்  நெஞ்சு  கல்லைப்போலவும்,  ஏந்திரத்தின்  அடிக்கல்லைப்போலவும்  கெட்டியாயிருக்கும்.  {Job  41:24}

 

அது  எழும்பும்போது  பலசாலிகள்  அஞ்சி  பயத்தினால்  மயங்கித்  திகைப்பார்கள்.  {Job  41:25}

 

அதைத்  தாக்குகிறவனுடைய  பட்டயம்,  ஈட்டி,  வல்லையம்,  கவசம்,  ஒன்றும்  அதற்குமுன்  நிற்காது.  {Job  41:26}

 

அது  இரும்பை  வைக்கோலாகவும்,  வெண்கலத்தை  உளுத்த  மரமாகவும்  எண்ணும்.  {Job  41:27}

 

அம்பு  அதைத்  துரத்தாது;  கவண்கற்கள்  அதற்குத்  துரும்பாகும்.  {Job  41:28}

 

அது  பெருந்தடிகளைத்  தாளடிகளாக  எண்ணி,  ஈட்டியின்  அசைவை  இகழும்.  {Job  41:29}

 

அதின்  கீழாகக்  கூர்மையான  கற்கள்  கிடந்தாலும்,  அது  சேற்றின்மேல்  ஓடுகிறதுபோலக்  கருக்கான  அவைகளின்மேலும்  ஓடும்.  {Job  41:30}

 

அது  ஆழத்தை  உலைப்பானையைப்போல்  பொங்கப்பண்ணி,  கடலைத்  தைலம்போலக்  கலக்கிவிடும்.  {Job  41:31}

 

அது  தனக்குப்  பின்னாகப்  பாதையைத்  துலங்கப்பண்ணும்;  ஆழமானது  வெளுப்பான  நரையைப்போல்  விளங்கும்.  {Job  41:32}

 

பூமியின்மேல்  அதற்கு  ஒப்பானது  ஒன்றுமில்லை;  அது  நிர்ப்பயமாயிருக்க  உண்டுபண்ணப்பட்டது.  {Job  41:33}

 

அது  மேட்டிமையானதையெல்லாம்  அற்பமாய்  எண்ணுகிறது;  அது  அகங்காரமுள்ள  ஜீவன்களுக்கெல்லாம்  ராஜாவாயிருக்கிறது  என்றார்.  {Job  41:34}

 

அப்பொழுது  யோபு<Job>  கர்த்தருக்குப்  பிரதியுத்தரமாக:  {Job  42:1}

 

தேவரீர்  சகலத்தையும்  செய்ய  வல்லவர்;  நீர்  செய்ய  நினைத்தது  தடைபடாது  என்பதை  அறிந்திருக்கிறேன்.  {Job  42:2}

 

அறிவில்லாமல்  ஆலோசனையை  மறைக்கிற  இவன்  யார்?  ஆகையால்  நான்  எனக்குத்  தெரியாததையும்,  என்  புத்திக்கு  எட்டாததையும்,  நான்  அறியாததையும்  அலப்பினேன்  என்கிறேன்.  {Job  42:3}

 

நீர்  எனக்குச்  செவிகொடும்,  அப்பொழுது  நான்  பேசுவேன்;  நான்  உம்மைக்  கேள்விகேட்பேன்,  நீர்  எனக்கு  உத்தரவு  சொல்லும்.  {Job  42:4}

 

என்  காதினால்  உம்மைக்குறித்துக்  கேள்விப்பட்டேன்;  இப்பொழுதோ  என்  கண்  உம்மைக்  காண்கிறது.  {Job  42:5}

 

ஆகையால்  நான்  என்னை  அருவருத்து,  தூளிலும்  சாம்பலிலும்  இருந்து  மனஸ்தாபப்படுகிறேன்  என்றான்.  {Job  42:6}

 

கர்த்தர்  இந்த  வார்த்தைகளை  யோபோடே<Job>  பேசினபின்,  கர்த்தர்  தேமானியனான<Temanite>  எலிப்பாசை<Eliphaz>  நோக்கி:  உன்மேலும்  உன்  இரண்டு  சிநேகிதர்மேலும்  எனக்குக்  கோபம்  மூளுகிறது;  என்  தாசனாகிய  யோபு<Job>  பேசினதுபோல்,  நீங்கள்  என்னைக்குறித்து  நிதானமாய்ப்  பேசவில்லை.  {Job  42:7}

 

ஆதலால்  நீங்கள்  ஏழு  காளைகளையும்,  ஏழு  ஆட்டுக்கடாக்களையும்  தெரிந்துகொண்டு,  என்  தாசனாகிய  யோபினிடத்தில்<Job>  போய்,  உங்களுக்காகச்  சர்வாங்க  தகனபலிகளை  இடுங்கள்;  என்  தாசனாகிய  யோபும்<Job>  உங்களுக்காக  வேண்டுதல்  செய்வான்;  நான்  அவன்  முகத்தைப்  பார்த்து,  உங்களை  உங்கள்  புத்தியீனத்துக்குத்  தக்கதாக  நடத்தாதிருப்பேன்;  என்  தாசனாகிய  யோபு<Job>  பேசினதுபோல்,  நீங்கள்  என்னைக்குறித்து  நிதானமாய்ப்  பேசவில்லை  என்றார்.  {Job  42:8}

 

அப்பொழுது  தேமானியனான<Temanite>  எலிப்பாசும்<Eliphaz>  சூகியனான<Shuhite>  பில்தாதும்<Bildad>  நாகமாத்தியனான<Naamathite>  சோப்பாரும்<Zophar>  போய்,  கர்த்தர்  தங்களுக்குச்  சொன்னபடியே  செய்தார்கள்;  அப்பொழுது  கர்த்தர்  யோபின்<Job>  முகத்தைப்  பார்த்தார்.  {Job  42:9}

 

யோபு<Job>  தன்  சிநேகிதருக்காக  வேண்டுதல்  செய்தபோது,  கர்த்தர்  அவன்  சிறையிருப்பை  மாற்றினார்.  யோபுக்கு<Job>  முன்  இருந்த  எல்லாவற்றைப்பார்க்கிலும்  இரண்டத்தனையாய்க்  கர்த்தர்  அவனுக்குத்  தந்தருளினார்.  {Job  42:10}

 

அப்பொழுது  அவனுடைய  எல்லாச்  சகோதரரும்  சகோதரிகளும்,  முன்  அவனுக்கு  அறிமுகமான  அனைவரும்  அவனிடத்தில்  வந்து,  அவன்  வீட்டிலே  அவனோடே  போஜனம்பண்ணி,  கர்த்தர்  அவன்மேல்  வரப்பண்ணின  சகல  தீங்கினிமித்தம்  அவனுக்காக  அங்கலாய்த்து,  அவனுக்கு  ஆறுதல்  சொல்லி,  அவரவர்  ஒவ்வொரு  தங்கக்காசையும்,  அவரவர்  ஒவ்வொரு  பொன்  ஆபரணத்தையும்  அவனுக்குக்  கொடுத்தார்கள்.  {Job  42:11}

 

கர்த்தர்  யோபின்<Job>  முன்னிலைமையைப்  பார்க்கிலும்  அவன்  பின்னிலைமையை  ஆசீர்வதித்தார்;  பதினாலாயிரம்  ஆடுகளும்,  ஆறாயிரம்  ஒட்டகங்களும்,  ஆயிரம்  ஏர்களும்,  ஆயிரம்  கழுதைகளும்  அவனுக்கு  உண்டாயின.  {Job  42:12}

 

ஏழு  குமாரரும்,  மூன்று  குமாரத்திகளும்  அவனுக்குப்  பிறந்தார்கள்.  {Job  42:13}

 

மூத்த  மகளுக்கு  எமீமாள்<Jemima>  என்றும்,  இரண்டாம்  மகளுக்குக்  கெத்சீயாள்<Kezia>  என்றும்,  மூன்றாம்  மகளுக்குக்  கேரேனாப்புக்<Kerenhappuch>  என்றும்  பேரிட்டான்.  {Job  42:14}

 

தேசத்தில்  எங்கும்  யோபின்<Job>  குமாரத்திகளைப்போல்  சௌந்தரியமான  பெண்கள்  காணப்படவில்லை;  அவர்கள்  தகப்பன்  அவர்கள்  சகோதரரின்  நடுவிலே  அவர்களுக்குச்  சுதந்தரம்  கொடுத்தான்.  {Job  42:15}

 

இதற்குப்பின்பு  யோபு<Job>  நூற்றுநாற்பது  வருஷம்  உயிரோடிருந்து,  நாலு  தலைமுறையாகத்  தன்  பிள்ளைகளையும்  தன்  பிள்ளைகளுடைய  பிள்ளைகளையும்  கண்டான்.  {Job  42:16}

 

யோபு<Job>  நெடுநாளிருந்து,  பூரண  வயதுள்ளவனாய்  மரித்தான்.  {Job  42:17}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!