Friday, February 21, 2020

எஸ்தர்

இந்துதேசம்முதல்<India>  எத்தியோப்பியா<Ethiopia>  தேசம்வரைக்குமுள்ள  நூற்றிருபத்தேழு  நாடுகளையும்  அரசாண்ட  அகாஸ்வேருவின்<Ahasuerus>  நாட்களிலே  சம்பவித்ததாவது:  {Esth  1:1}

 

ராஜாவாகிய  அகாஸ்வேரு<Ahasuerus>  சூசான்<Shushan>  அரமனையிலிருக்கிற  தன்  ராஜ்யத்தின்  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருந்தான்.  {Esth  1:2}

 

அவன்  தன்  ராஜ்யபாரத்தின்  மூன்றாம்  வருஷத்திலே  தன்னுடைய  பிரபுக்களுக்கும்  ஊழியக்காரருக்கும்  விருந்துபண்ணினான்;  அப்பொழுது  பெர்சியா<Persia>  மேதியா<Media>  தேசங்களிலுள்ள  மகத்தானவர்களும்,  நாடுகளின்  அதிபதிகளும்,  பிரபுக்களும்,  அவன்  சமுகத்தில்  வந்திருந்தார்கள்.  {Esth  1:3}

 

அவன்  தன்  ராஜ்யத்தின்  மகிமையான  ஐசுவரியத்தையும்,  தன்  மகத்துவத்தின்  சிறந்த  பிரதாபத்தையும்  அநேக  நாளாகிய  நூற்றெண்பதுநாளளவும்  விளங்கச்செய்துகொண்டிருந்தான்.  {Esth  1:4}

 

அந்த  நாட்கள்  முடிந்தபோது,  ராஜா  சூசான்<Shushan>  அரமனையில்  வந்திருந்த  பெரியோர்முதல்  சிறியோர்மட்டுமுள்ள  சமஸ்த  ஜனங்களுக்கும்  ராஜ  அரமனையைச்சேர்ந்த  சிங்காரத்தோட்டத்திலுள்ள  மண்டபத்தில்  ஏழுநாள்  விருந்து  செய்வித்தான்.  {Esth  1:5}

 

அங்கே  வெண்கலத்  தூண்களின்மேலுள்ள  வெள்ளி  வளையங்களில்  மெல்லிய  நூலும்  சிவப்புநூலுமான  கயிறுகளால்  வெள்ளையும்  பச்சையும்  இளநீலமுமாகிய  தொங்குதிரைகள்  விதானித்திருந்தது;  சிவப்பும்  நீலமும்  வெள்ளையும்  கறுப்புமான  கற்கள்  பதித்திருந்த  தளவரிசையின்மேல்  பொற்சரிகையும்  வெள்ளிச்சரிகையுமான  மெத்தைகள்  வைக்கப்பட்டிருந்தது.  {Esth  1:6}

 

பொன்னால்  செய்யப்பட்ட  நானாவித  பாத்திரங்களிலே  பானம்  கொடுக்கப்பட்டது;  முதல்தரமான  திராட்சரசம்  ராஜஸ்திதிக்கு  ஏற்கப்  பரிபூரணமாய்ப்  பரிமாறப்பட்டது.  {Esth  1:7}

 

அவரவருடைய  மனதின்படியே  செய்யலாம்  என்று  ராஜா  தன்  அரமனையின்  பெரிய  மனுஷருக்கெல்லாம்  கட்டளையிட்டிருந்தபடியினால்,  முறைப்படி  பானம்பண்ணினார்கள்;  ஒருவனும்  பலவந்தம்  பண்ணவில்லை.  {Esth  1:8}

 

ராஜஸ்திரீயாகிய  வஸ்தியும்<Vashti>  ராஜாவாகிய  அகாஸ்வேருவின்<Ahasuerus>  அரமனையிலே  ஸ்திரீகளுக்கு  ஒரு  விருந்து  செய்தாள்.  {Esth  1:9}

 

ஏழாம்  நாளிலே  ராஜா  திராட்சரசத்தினால்  களிப்பாயிருக்கும்போது,  மகா  ரூபவதியாயிருந்த  ராஜஸ்திரீயாகிய  வஸ்தியின்<Vashti>  சௌந்தரியத்தை  ஜனங்களுக்கும்  பிரபுக்களுக்கும்  காண்பிக்கும்படி,  ராஜகிரீடம்  தரிக்கப்பட்டவளாக,  அவளை  ராஜாவுக்குமுன்பாக  அழைத்துவரவேண்டுமென்று,  {Esth  1:10}

 

ராஜாவாகிய  அகாஸ்வேருவின்<Ahasuerus>  சமுகத்தில்  சேவிக்கிற  மெகுமான்<Mehuman>,  பிஸ்தா<Biztha>,  அற்போனா<Harbona>,  பிக்தா<Bigtha>,  அபக்தா<Abagtha>,  சேதார்<Zethar>,  கர்காஸ்<Carcas>  என்னும்  ஏழு  பிரதானிகளுக்கும்  கட்டளையிட்டான்.  {Esth  1:11}

 

ஆனாலும்  பிரதானிகள்  மூலமாய்  ராஜா  சொல்லியனுப்பின  கட்டளைக்கு  ராஜஸ்திரீயாகிய  வஸ்தி<Vashti>  வரமாட்டேன்  என்றாள்;  அப்பொழுது  ராஜா  கடுங்கோபமடைந்து,  தனக்குள்ளே  மூர்க்கவெறிகொண்டான்.  {Esth  1:12}

 

அச்சமயத்தில்  ராஜசமுகத்தைத்  தரிசிக்கிறவர்களும்,  ராஜ்யத்தின்  முதல்  ஆசனங்களில்  உட்காருகிறவர்களுமான  கர்ஷேனா<Carshena>,  சேதார்<Shethar>,  அத்மாதா<Admatha>,  தர்ஷீஸ்<Tarshish>,  மேரேஸ்<Meres>,  மர்சேனா<Marsena>,  மெமுகான்<Memucan>  என்னும்  பெர்சியர்<Persia>  மேதியருடைய<Media>  ஏழு  பிரபுக்களும்  அவன்  சமீபத்தில்  இருந்தார்கள்.  {Esth  1:13}

 

ராஜா  நியாயப்பிரமாணத்தையும்  ராஜநீதியையும்  அறிந்தவர்களிடத்தில்  பேசுவது  தனக்கு  வழக்கமானபடியால்,  காலாகால  வர்த்தமானங்களை  அறிந்த  பண்டிதர்களை  நோக்கி:  {Esth  1:14}

 

ராஜாவாகிய  அகாஸ்வேரு<Ahasuerus>  பிரதானிகள்  மூலமாய்ச்  சொல்லியனுப்பின  கட்டளையின்படி  ராஜஸ்திரீயாகிய  வஸ்தி<Vashti>  செய்யாமற்போனதினிமித்தம்,  தேசச்சட்டத்தின்படி  அவளுக்குச்  செய்யவேண்டியது  என்ன  என்று  கேட்டான்.  {Esth  1:15}

 

அப்பொழுது  மெமுகான்<Memucan>  ராஜாவுக்கும்  பிரபுக்களுக்கும்  முன்னே  பிரதியுத்தரமாக:  ராஜஸ்திரீயாகிய  வஸ்தி<Vashti>  ராஜாவுக்குமாத்திரம்  அல்ல,  ராஜாவாகிய  அகாஸ்வேருவினுடைய<Ahasuerus>  சகல  நாடுகளிலுமுள்ள  சகல  பிரபுக்களுக்கும்  சகல  ஜனங்களுக்குங்கூட  அநியாயஞ்செய்தாள்.  {Esth  1:16}

 

ராஜாவாகிய  அகாஸ்வேரு<Ahasuerus>  ராஜஸ்திரீயாகிய  வஸ்தியைத்<Vashti>  தமக்கு  முன்பாக  அழைத்துவரச்  சொன்னபோது,  அவள்  வரமாட்டோம்  என்கிற  செய்தி  எல்லா  ஸ்திரீகளுக்கும்  பிரசித்தமானால்,  அவர்களும்  தங்கள்  புருஷரைத்  தங்கள்  பார்வையில்  அற்பமாய்  எண்ணுவார்கள்.  {Esth  1:17}

 

இன்றையதினமே  பெர்சியாவிலும்<Persia>  மேதியாவிலுமுள்ள<Media>  பிரபுக்களின்  ஸ்திரீகள்  ராஜஸ்திரீயின்  செய்தியைக்  கேட்கும்போது,  ராஜாவின்  பிரபுக்களுக்கெல்லாம்  அப்படியே  சொல்லுவார்கள்;  மிகுந்த  அசட்டையும்  எரிச்சலும்  விளையும்.  {Esth  1:18}

 

ராஜாவுக்குச்  சம்மதியாயிருந்தால்,  வஸ்தி<Vashti>  இனி  ராஜாவாகிய  அகாஸ்வேருவுக்கு<Ahasuerus>  முன்பாக  வரக்கூடாது  என்றும்,  அவளுடைய  ராஜமேன்மையை  அவளைப்பார்க்கிலும்  உத்தமியாகிய  மற்றொரு  ஸ்திரீக்கு  ராஜா  கொடுப்பாராக  என்றும்,  அவரால்  ஒரு  ராஜகட்டளை  பிறந்து,  அது  மீறப்படாதபடிக்கு,  பெர்சியாவுக்கும்<Persians>  மேதியாவுக்கும்<Medes>  உரிய  தேசச்  சட்டத்திலும்  எழுதப்படவேண்டும்.  {Esth  1:19}

 

இப்படி  ராஜா  தீர்த்த  காரியம்  தமது  விஸ்தீரணமான  ராஜ்யமெங்கும்  கேட்கப்படும்போது,  பெரியோர்முதல்  சிறியோர்மட்டுமுள்ள  எல்லா  ஸ்திரீகளும்  தங்கள்  புருஷரைக்  கனம்பண்ணுவார்கள்  என்றான்.  {Esth  1:20}

 

இந்த  வார்த்தை  ராஜாவுக்கும்  பிரபுக்களுக்கும்  நலமாய்த்  தோன்றினதினால்,  ராஜா  மெமுகானுடைய<Memucan>  வார்த்தையின்படியே  செய்து,  {Esth  1:21}

 

எந்தப்  புருஷனும்  தன்  வீட்டுக்குத்தானே  அதிகாரியாயிருக்கவேண்டும்  என்றும்,  இதை  அந்தந்த  ஜனங்களுடைய  பாஷையிலே  பிரசித்தம்பண்ணவேண்டும்  என்றும்,  அந்தந்த  நாட்டில்  வழங்குகிற  அட்சரத்திலும்,  அந்தந்த  ஜாதியார்  பேசுகிற  பாஷையிலும்,  ராஜாவின்  சகல  நாடுகளுக்கும்  கட்டளை  எழுதி  அனுப்பினான்.  {Esth  1:22}

 

இவைகளுக்குப்பின்பு,  ராஜாவாகிய  அகாஸ்வேருவின்<Ahasuerus>  உக்கிரம்  தணிந்தபோது,  அவன்  வஸ்தியையும்<Vashti>  அவள்  செய்ததையும்  அவளைக்குறித்துத்  தீர்மானிக்கப்பட்டதையும்  நினைத்தான்.  {Esth  2:1}

 

அப்பொழுது  ராஜாவைச்  சேவிக்கிற  அவனுடைய  ஊழியக்காரர்  அவனை  நோக்கி:  ரூபவதிகளாயிருக்கிற  கன்னிப்பெண்களை  ராஜாவுக்காகத்  தேடவேண்டும்.  {Esth  2:2}

 

அதற்காக  ராஜா  தம்முடைய  ராஜ்யத்தின்  நாடுகளிலெல்லாம்  விசாரிப்புக்காரரை  வைக்கவேண்டும்;  இவர்கள்  ரூபவதிகளாயிருக்கிற  சகல  கன்னிப்பெண்களையும்  கூட்டி,  சூசான்<Shushan>  அரமனையிலிருக்கிற  கன்னிமாடத்துக்கு  அழைத்துவந்து,  ஸ்திரீகளைக்  காவல்பண்ணுகிற  ராஜாவின்  பிரதானியாகிய  யேகாயின்<Hege>  வசத்திலே  ஒப்புவிக்கவேண்டும்;  அவர்களுடைய  சுத்திகரிப்புக்கு  வேண்டியவைகள்  அவர்களுக்குக்  கொடுக்கப்படவேண்டும்.  {Esth  2:3}

 

அப்பொழுது  ராஜாவின்  கண்களுக்குப்  பிரியமான  கன்னி  வஸ்திக்குப்<Vashti>  பதிலாகப்  பட்டத்து  ஸ்திரீயாக  வேண்டும்  என்றார்கள்;  இந்த  வார்த்தை  ராஜாவுக்கு  நலமாய்த்  தோன்றினபடியால்  அப்படியே  செய்தான்.  {Esth  2:4}

 

அப்பொழுது  சூசான்<Shushan>  அரமனையிலே  பென்யமீனியனாகிய<Benjamite>  கீசின்<Kish>  குமாரன்  சீமேயினுடைய<Shimei>  மகனாகிய  யாவீரின்<Jair>  குமாரன்  மொர்தெகாய்<Mordecai>  என்னும்  பேருள்ள  ஒரு  யூதன்<Jew>  இருந்தான்.  {Esth  2:5}

 

அவன்  பாபிலோன்<Babylon>  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சார்<Nebuchadnezzar>  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  எகொனியாவைப்<Jeconiah>  பிடித்துக்கொண்டு  போகிறபோது,  அவனோடேகூட  எருசலேமிலிருந்து<Jerusalem>  பிடித்துக்கொண்டு  போகப்பட்டவர்களில்  ஒருவனாயிருந்தான்.  {Esth  2:6}

 

அவன்  தன்  சிறிய  தகப்பன்  குமாரத்தியாகிய  எஸ்தர்<Esther>  என்னும்  அத்சாளை<Hadassah>  வளர்த்தான்;  அவளுக்குத்  தாய்தகப்பனில்லை;  அந்தப்  பெண்  ரூபவதியும்  சௌந்தரியமுடையவளுமாயிருந்தாள்;  அவள்  தகப்பனும்  அவள்  தாயும்  மரணமடைந்தபோது,  மொர்தெகாய்<Mordecai>  அவளைத்  தன்  குமாரத்தியாக  எடுத்துக்கொண்டான்.  {Esth  2:7}

 

ராஜாவின்  கட்டளையும்  தீர்மானமும்  பிரசித்தமாகி,  அநேகம்  பெண்கள்  கூட்டப்பட்டு,  சூசான்<Shushan>  அரமனையிலுள்ள  யேகாயின்<Hegai>  வசத்தில்  ஒப்புவிக்கப்படுகிறபோது,  எஸ்தரும்<Esther>  ராஜாவின்  அரமனைக்கு  அழைத்துக்கொண்டுபோகப்பட்டு,  ஸ்திரீகளைக்  காவல்பண்ணுகிற  யேகாயின்<Hegai>  வசத்தில்  ஒப்புவிக்கப்பட்டாள்.  {Esth  2:8}

 

அந்தப்  பெண்  அவன்  பார்வைக்கு  நன்றாயிருந்ததினால்,  அவளுக்கு  அவன்  கண்களிலே  தயைகிடைத்தது;  ஆகையால்  அவளுடைய  சுத்திகரிப்புக்கு  வேண்டியவைகளையும்,  அவளுக்குத்  தேவையான  மற்றவைகளையும்  அவளுக்குக்  கொடுக்கவும்,  ராஜ  அரமனையிலிருக்கிற  ஏழு  தாதிமார்களை  அவளுக்கு  நியமிக்கவும்  ஜாக்கிரதைப்பட்டு  கன்னிமாடத்தில்  சிறந்த  ஒரு  இடத்திலே  அவளையும்  அவள்  தாதிமார்களையும்  வைத்தான்.  {Esth  2:9}

 

எஸ்தரோவென்றால்<Esther>  தன்  குலத்தையும்,  தன்  பூர்வோத்தரத்தையும்  அறிவிக்காதிருந்தாள்;  மொர்தெகாய்<Mordecai>  அதைத்  தெரிவிக்கவேண்டாமென்று  அவளுக்குக்  கற்பித்திருந்தான்.  {Esth  2:10}

 

எஸ்தருடைய<Esther>  சுகசெய்தியையும்  அவளுக்கு  நடக்குங்காரியத்தையும்  அறிய  மொர்தெகாய்<Mordecai>  நாடோறும்  கன்னிமாடத்து  முற்றத்துக்கு  முன்பாக  உலாவுவான்.  {Esth  2:11}

 

ஒவ்வொரு  பெண்ணும்  ஆறுமாதம்  வெள்ளைப்போளத்  தைலத்தினாலும்,  ஆறுமாதம்  சுகந்தவர்க்கங்களினாலும்,  ஸ்திரீகளுக்குரிய  மற்றச்  சுத்திகரிப்புகளினாலும்  ஜோடிக்கப்படுகிற  நாட்கள்  நிறைவேறி,  இவ்விதமாய்  ஸ்திரீகளின்  முறைமைப்படி  பன்னிரண்டு  மாதமாகச்  செய்யப்பட்டுத்  தீர்ந்தபின்பு,  ராஜாவாகிய  அகாஸ்வேருவினிடத்தில்<Ahasuerus>  பிரவேசிக்க,  அவளவளுடைய  முறை  வருகிறபோது,  {Esth  2:12}

 

இப்படி  ஜோடிக்கப்பட்ட  பெண்  ராஜாவினிடத்தில்  பிரவேசிப்பாள்;  கன்னிமாடத்திலிருந்து  தன்னோடேகூட  ராஜ  அரமனைக்குப்போக,  அவள்  தனக்கு  வேண்டுமென்று  கேட்பவையெல்லாம்  அவளுக்குக்  கொடுக்கப்படும்.  {Esth  2:13}

 

சாயங்காலத்திலே  அவள்  உள்ளே  பிரவேசித்து,  காலமே,  அபிமான  ஸ்திரீகளைக்  காவல்பண்ணுகிற  ராஜாவின்  பிரதானியாகிய  சாஸ்காசுடைய<Shaashgaz>  விசாரிப்புக்குள்ளிருக்கிற  ஸ்திரீகளின்  இரண்டாம்  மாடத்துக்குத்  திரும்பிவருவாள்;  ராஜா  தன்னை  விரும்பிப்  பேர்சொல்லி  அழைப்பித்தாலொழிய  அவள்  ஒருபோதும்  ராஜாவினிடத்தில்  பிரவேசிக்கக்கூடாது.  {Esth  2:14}

 

மொர்தெகாய்<Mordecai>  தனக்குக்  குமாரத்தியாய்  ஏற்றுக்கொண்டவளும்,  அவன்  சிறியதகப்பனாகிய  அபியாயேலின்<Abihail>  குமாரத்தியுமான  எஸ்தர்<Esther>  ராஜாவினிடத்தில்  பிரவேசிக்கிறதற்கு  முறைவந்தபோது,  அவள்  ஸ்திரீகளைக்  காவல்பண்ணுகிற  ராஜாவின்  பிரதானியாகிய  யேகாய்<Hegai>  நியமித்த  காரியமேயல்லாமல்  வேறொன்றும்  கேட்கவில்லை;  எஸ்தருக்குத்<Esther>  தன்னைக்  காண்கிற  எல்லார்  கண்களிலும்  தயைகிடைத்தது.  {Esth  2:15}

 

அப்படியே  எஸ்தர்<Esther>  ராஜாவாகிய  அகாஸ்வேரு<Ahasuerus>  அரசாளுகிற  ஏழாம்  வருஷம்  தேபேத்<Tebeth>  மாதமாகிய  பத்தாம்  மாதத்திலே  ராஜாவினிடத்தில்  அரமனைக்கு  அழைத்துக்கொண்டு  போகப்பட்டாள்.  {Esth  2:16}

 

ராஜா  சகல  ஸ்திரீகளைப்பார்க்கிலும்  எஸ்தர்மேல்<Esther>  அன்புவைத்தான்;  சகல  கன்னிகைகளைப்பார்க்கிலும்  அவளுக்கு  அவன்  சமுகத்தில்  அதிக  தயையும்  பட்சமும்  கிடைத்தது;  ஆகையால்  அவன்  ராஜகிரீடத்தை  அவள்  சிரசின்மேல்  வைத்து,  அவளை  வஸ்தியின்<Vashti>  ஸ்தானத்திலே  பட்டத்து  ஸ்திரீயாக்கினான்.  {Esth  2:17}

 

அப்பொழுது  ராஜா  தன்னுடைய  எல்லாப்  பிரபுக்களுக்கும்  ஊழியக்காரருக்கும்,  எஸ்தரினிமித்தம்<Esther>  ஒரு  பெரிய  விருந்துசெய்து,  நாடுகளுக்குச்  சலக்கரணை  உண்டாக்கி,  ராஜஸ்திதிக்குத்தக்க  வெகுமானங்களைக்  கொடுத்தான்.  {Esth  2:18}

 

இரண்டாந்தரம்  கன்னிகைகள்  சேர்க்கப்படும்போது,  மொர்தெகாய்<Mordecai>  ராஜாவின்  அரமனை  வாசலில்  உட்கார்ந்திருந்தான்.  {Esth  2:19}

 

எஸ்தர்<Esther>  மொர்தெகாய்<Mordecai>  தனக்குக்  கற்பித்திருந்தபடி,  தன்  பூர்வோத்தரத்தையும்  தன்  குலத்தையும்  தெரிவிக்காதிருந்தாள்;  எஸ்தர்<Esther>  மொர்தெகாய்<Mordecai>  இடத்திலே  வளரும்போது  அவன்  சொற்கேட்டு  நடந்ததுபோல,  இப்பொழுதும்  அவன்  சொற்கேட்டு  நடந்துவந்தாள்.  {Esth  2:20}

 

அந்நாட்களில்  மொர்தெகாய்<Mordecai>  ராஜாவின்  அரமனை  வாசலில்  உட்கார்ந்திருக்கிறபோது,  வாசல்காக்கிற  ராஜாவின்  இரண்டு  பிரதானிகளாகிய  பிக்தானும்<Bigthan>  தேரேசும்<Teresh>  வர்மம்  வைத்து,  ராஜாவாகிய  அகாஸ்வேருவின்மேல்<Ahasuerus>  கைபோட  வகைதேடினார்கள்.  {Esth  2:21}

 

இந்தக்  காரியம்  மொர்தெகாய்க்குத்<Mordecai>  தெரியவந்ததினால்,  அவன்  அதை  ராஜாத்தியாகிய  எஸ்தருக்கு<Esther>  அறிவித்தான்;  எஸ்தர்<Esther>  மொர்தெகாயின்<Mordecai>  பேரால்  அதை  ராஜாவுக்குச்  சொன்னாள்.  {Esth  2:22}

 

அந்தக்  காரியம்  விசாரிக்கப்படுகிறபோது,  அது  மெய்யென்று  காணப்பட்டது;  ஆகையால்  அவர்கள்  இருவரும்  மரத்திலே  தூக்கிப்போடப்பட்டார்கள்;  இது  ராஜ  சமுகத்திலே  நாளாகமப்புஸ்தகத்திலே  எழுதப்பட்டிருக்கிறது.  {Esth  2:23}

 

இந்த  நடபடிகளுக்குப்பின்பு,  ராஜாவாகிய  அகாஸ்வேரு<Ahasuerus>  அம்மெதாத்தாவின்<Hammedatha>  குமாரனாகிய  ஆமான்<Haman>  என்னும்  ஆகாகியனை<Agagite>  மேன்மைப்படுத்தி,  தன்னிடத்திலிருக்கிற  சகல  பிரபுக்களுக்கும்  மேலாக  அவனுடைய  ஆசனத்தை  உயர்த்திவைத்தான்.  {Esth  3:1}

 

ஆகையால்  ராஜாவின்  அரமனை  வாசலிலிருக்கிற  ராஜாவின்  ஊழியக்காரர்  எல்லாரும்  ஆமானை<Haman>  வணங்கி  நமஸ்கரித்து  வந்தார்கள்;  அவனுக்கு  இப்படிச்  செய்யவேண்டும்  என்று  ராஜா  கட்டளையிட்டிருந்தான்;  ஆனாலும்  மொர்தெகாய்<Mordecai>  அவனை  வணங்கவுமில்லை,  நமஸ்கரிக்கவுமில்லை.  {Esth  3:2}

 

அப்பொழுது  ராஜாவின்  அரமனை  வாசலிலிருக்கிற  ராஜாவின்  ஊழியக்காரர்  மொர்தெகாயைப்<Mordecai>  பார்த்து:  நீ  ராஜாவின்  கட்டளையை  மீறுகிறது  என்ன  என்று  கேட்டார்கள்.  {Esth  3:3}

 

இப்படி  அவர்கள்  நாளுக்குநாள்  அவனுடனே  சொல்லியும்,  அவன்  தங்களுக்குச்  செவிகொடாதபோது,  தான்  யூதன்<Jew>  என்று  அவன்  அவர்களுக்கு  அறிவித்திருந்தபடியால்,  மொர்தெகாயின்<Mordecai>  சொற்கள்  நிலைநிற்குமோ  என்று  பார்க்கிறதற்கு,  அதை  ஆமானுக்கு<Haman>  அறிவித்தார்கள்.  {Esth  3:4}

 

ஆமான்<Haman>  மொர்தெகாய்<Mordecai>  தன்னை  வணங்கி  நமஸ்கரியாததைக்  கண்டபோது,  மூர்க்கம்  நிறைந்தவனானான்.  {Esth  3:5}

 

ஆனாலும்  மொர்தெகாயின்மேல்மாத்திரம்<Mordecai>  கைபோடுவது  அவனுக்கு  அற்பக்காரியமாகக்  கண்டது;  மொர்தெகாயின்<Mordecai>  ஜனங்கள்  இன்னாரென்று  ஆமானுக்கு<Haman>  அறிவிக்கப்பட்டிருந்தபடியால்,  அகாஸ்வேருவின்<Ahasuerus>  ராஜ்யமெங்கும்  இருக்கிற  மொர்தெகாயின்<Mordecai>  ஜனமாகிய  யூதரையெல்லாம்<Jews>  சங்கரிக்க  அவன்  வகைதேடினான்.  {Esth  3:6}

 

ராஜாவாகிய  அகாஸ்வேருவின்<Ahasuerus>  பன்னிரண்டாம்  வருஷம்  நிசான்<Nisan>  மாதமாகிய  முதலாம்  மாதத்திலே  ஆமானுக்கு<Haman>  முன்பாகப்  பூர்<Pur>  என்னப்பட்ட  சீட்டு  ஒவ்வொரு  நாளையும்  ஒவ்வொரு  மாதத்தையும்  குறித்துப்  போடப்பட்டு,  ஆதார்மாதமான<Adar>  பன்னிரண்டாம்  மாதத்தின்மேல்  விழுந்தது.  {Esth  3:7}

 

அப்பொழுது  ஆமான்<Haman>  அகாஸ்வேரு<Ahasuerus>  ராஜாவை  நோக்கி:  உம்முடைய  ராஜ்யத்தின்  சகல  நாடுகளிலுமுள்ள  ஜனங்களுக்குள்ளே  ஒருவித  ஜனங்கள்  சிதறுண்டு  பரம்பியிருக்கிறார்கள்;  அவர்களுடைய  வழக்கங்கள்  சகல  ஜனங்களுடைய  வழக்கங்களுக்கும்  விகற்பமாயிருக்கிறது;  அவர்கள்  ராஜாவின்  சட்டங்களைக்  கைக்கொள்ளுகிறதில்லை;  ஆகையால்  அவர்களை  இப்படி  விட்டிருக்கிறது  ராஜாவுக்கு  நியாயமல்ல.  {Esth  3:8}

 

ராஜாவுக்குச்  சம்மதியானால்,  அவர்களை  அழிக்கவேண்டுமென்று  எழுதி  அனுப்பவேண்டியது;  அப்பொழுது  நான்  ராஜாவின்  கஜானாவிலே  கொண்டுவந்து  செலுத்த  பதினாயிரம்  தாலந்து  வெள்ளியை  எண்ணிக்  காரியக்காரர்  கையில்  கொடுப்பேன்  என்றான்.  {Esth  3:9}

 

அப்பொழுது  ராஜா  தன்  கையிலிருக்கிற  தன்  மோதிரத்தைக்  கழற்றி,  அதை  ஆகாகியனான<Agagite>  அம்மெதாத்தாவின்<Hammedatha>  குமாரனும்  யூதரின்<Jews>  சத்துருவுமாகிய  ஆமானிடத்தில்<Haman>  கொடுத்து,  {Esth  3:10}

 

ஆமானை<Haman>  நோக்கி:  அந்த  வெள்ளியை  நீ  வைத்துக்கொள்;  அந்த  ஜனத்துக்கு  உன்  இஷ்டப்படி  செய்யலாம்  என்றான்.  {Esth  3:11}

 

முதலாம்  மாதம்  பதின்மூன்றாந்தேதியிலே,  ராஜாவின்  சம்பிரதிகள்  அழைக்கப்பட்டார்கள்;  ஆமான்<Haman>  கற்பித்தபடியெல்லாம்  ராஜாவின்  தேசாதிபதிகளுக்கும்,  ஒவ்வொரு  நாட்டின்மேல்  வைக்கப்பட்டிருந்த  துரைகளுக்கும்,  ஒவ்வொரு  ஜனத்தின்  பிரபுக்களுக்கும்,  அந்தந்த  நாட்டில்  வழங்கும்  அட்சரத்திலும்,  அந்தந்த  ஜாதியார்  பேசும்  பாஷையிலும்  எழுதப்பட்டது;  ராஜாவாகிய  அகாஸ்வேருவின்<Ahasuerus>  பேரால்  அது  எழுதப்பட்டு,  ராஜாவின்  மோதிரத்தினால்  முத்திரை  போடப்பட்டது.  {Esth  3:12}

 

ஆதார்<Adar>  மாதமான  பன்னிரண்டாம்  மாதம்  பதின்மூன்றாந்தேதியாகிய  ஒரேநாளிலே  சிறியோர்  பெரியோர்  குழந்தைகள்  ஸ்திரீகள்  ஆகிய  சகல  யூதரையும்<Jews>  அழித்துக்  கொன்று  நிர்மூலமாக்கவும்,  அவர்களைக்  கொள்ளையிடவும்,  அஞ்சற்காரர்  கையிலே  ராஜாவின்  நாடுகளுக்கெல்லாம்  கட்டளைகள்  அனுப்பப்பட்டது.  {Esth  3:13}

 

அந்த  நாளுக்கு  ஆயத்தப்பட்டிருக்கவேண்டும்  என்று  சகல  ஜனங்களுக்கும்  கூறி  அறிவிக்கிறதற்காகக்  கொடுக்கப்பட்ட  கட்டளையின்  நகல்  இதுவே,  இது  ஒவ்வொரு  நாட்டிலும்  பிரசித்தம்பண்ணப்பட்டது.  {Esth  3:14}

 

அந்த  அஞ்சற்காரர்  ராஜாவின்  உத்தரவினால்  தீவிரமாய்ப்  புறப்பட்டுப்போனார்கள்;  அந்தக்  கட்டளை  சூசான்<Shushan>  அரமனையில்  பிறந்தது.  ராஜாவும்  ஆமானும்<Haman>  குடிக்கும்படி  உட்கார்ந்தார்கள்;  சூசான்<Shushan>  நகரம்  கலங்கிற்று.  {Esth  3:15}

 

நடந்த  யாவற்றையும்  மொர்தெகாய்<Mordecai>  அறிந்தபோது,  மொர்தெகாய்<Mordecai>  தன்  வஸ்திரங்களைக்  கிழித்து,  இரட்டுடுத்தி,  சாம்பல்  போட்டுக்கொண்டு,  நகரத்தின்  நடுவே  புறப்பட்டுப்போய்,  துயரமுள்ள  மகா  சத்தத்துடனே  அலறிக்கொண்டு,  {Esth  4:1}

 

ராஜாவின்  அரமனை  வாசல்  முகப்புமட்டும்  வந்தான்;  இரட்டுடுத்தினவனாய்  ராஜாவின்  அரமனை  வாசலுக்குள்  பிரவேசிக்க  ஒருவனுக்கும்  உத்தரவில்லை.  {Esth  4:2}

 

ராஜாவின்  உத்தரவும்  அவனுடைய  கட்டளையும்  போய்ச்  சேர்ந்த  ஒவ்வொரு  நாட்டிலும்  ஸ்தலத்திலுமுள்ள  யூதருக்குள்ளே<Jews>  மகா  துக்கமும்,  உபவாசமும்,  அழுகையும்,  புலம்பலும்  உண்டாய்,  அநேகர்  இரட்டுடுத்திச்  சாம்பலில்  கிடந்தார்கள்.  {Esth  4:3}

 

அப்பொழுது  எஸ்தரின்<Esther>  தாதிமார்களும்,  அவளுடைய  பிரதானிகளும்போய்,  அதை  அவளுக்கு  அறிவித்தார்கள்;  அதினாலே  ராஜாத்தி  மிகவும்  துக்கப்பட்டு,  மொர்தெகாய்<Mordecai>  உடுத்திருந்த  இரட்டை  எடுத்துப்போட்டு,  அவனை  உடுத்துவிக்கிறதற்கு  வஸ்திரங்களை  அனுப்பினாள்;  அவனோ  அவைகளை  ஏற்றுக்கொள்ளாதிருந்தான்.  {Esth  4:4}

 

அப்பொழுது  எஸ்தர்<Esther>  தன்  பணிவிடைக்கென்று  ராஜாவினால்  நியமித்திருந்த  அவனுடைய  பிரதானிகளில்  ஒருவனாகிய  ஆத்தாகை<Hatach>  அழைப்பித்து:  காரியம்  என்ன?  அதின்  முகாந்தரம்  என்ன?  என்று  அறியும்படி,  மொர்தெகாயினிடத்தில்<Mordecai>  விசாரிக்க  அவனுக்குக்  கட்டளையிட்டாள்.  {Esth  4:5}

 

அப்படியே  ஆத்தாகு<Hatach>  ராஜாவின்  அரமனை  வாசலுக்கு  முன்னான  பட்டணவீதியிலிருக்கிற  மொர்தெகாயினிடத்தில்<Mordecai>  புறப்பட்டுப்போனான்.  {Esth  4:6}

 

அப்பொழுது  மொர்தெகாய்<Mordecai>  தனக்குச்  சம்பவித்த  எல்லாவற்றைப்பற்றியும்,  யூதரை<Jews>  அழிக்கும்படி  ஆமான்<Haman>  ராஜாவின்  கஜானாவுக்கு  எண்ணிக்கொடுப்பேன்  என்று  சொன்ன  பணத்தொகையைப்பற்றியும்  அவனுக்கு  அறிவித்ததும்  அன்றி,  {Esth  4:7}

 

யூதர்களை<Jews>  அழிக்கும்படி  சூசானில்<Shushan>  பிறந்த  கட்டளையின்  நகலையும்  அவனிடத்தில்  கொடுத்து,  அதை  எஸ்தருக்குக்<Esther>  காண்பித்துத்  தெரியப்படுத்தவும்,  அவள்  அகத்தியமாய்  ராஜாவினிடத்திற்  போய்,  அவனிடத்தில்  தன்  ஜனங்களுக்காக  விண்ணப்பம்பண்ணவும்  மன்றாடவும்  வேண்டுமென்று  அவளுக்குச்  சொல்லச்சொன்னான்.  {Esth  4:8}

 

ஆத்தாகு<Hatach>  வந்து,  மொர்தெகாயின்<Mordecai>  வார்த்தைகளை  எஸ்தருக்கு<Esther>  அறிவித்தான்.  {Esth  4:9}

 

அப்பொழுது  எஸ்தர்<Esther>  ஆத்தாகினிடத்தில்<Hatach>  மொர்தெகாய்க்குச்<Mordecai>  சொல்லியனுப்பினது:  {Esth  4:10}

 

யாராவது  அழைப்பிக்கப்படாமல்,  உள்முற்றத்தில்  ராஜாவினிடத்தில்  பிரவேசித்தால்,  புருஷரானாலும்  ஸ்திரீயானாலும்  சரி,  அவர்கள்  பிழைக்கும்படிக்கு  அவர்களுக்கு  ராஜா  பொற்செங்கோலை  நீட்டினாலொழிய  மற்றப்படி  சாகவேண்டும்  என்கிற  ஒரு  தவறாத  சட்டமுண்டு,  இது  ராஜாவின்  சகல  ஊழியக்காரருக்கும்,  ராஜாவினுடைய  நாடுகளிலுள்ள  சகல  ஜனங்களுக்கும்  தெரியும்;  நான்  இந்த  முப்பதுநாளளவும்  ராஜாவினிடத்தில்  வரவழைப்பிக்கப்படவில்லை  என்று  சொல்லச்சொன்னாள்.  {Esth  4:11}

 

எஸ்தரின்<Esther>  வார்த்தைகளை  மொர்தெகாய்க்குத்<Mordecai>  தெரிவித்தார்கள்.  {Esth  4:12}

 

மொர்தெகாய்<Mordecai>  எஸ்தருக்குத்<Esther>  திரும்பச்  சொல்லச்சொன்னது:  நீ  ராஜாவின்  அரமனையிலிருக்கிறதினால்,  மற்ற  யூதர்<Jews>  தப்பக்கூடாதிருக்க,  நீ  தப்புவாயென்று  உன்  மனதிலே  நினைவுகொள்ளாதே.  {Esth  4:13}

 

நீ  இந்தக்  காலத்திலே  மவுனமாயிருந்தால்,  யூதருக்குச்<Jews>  சகாயமும்  இரட்சிப்பும்  வேறொரு  இடத்திலிருந்து  எழும்பும்,  அப்பொழுது  நீயும்  உன்  தகப்பன்  குடும்பத்தாரும்  அழிவீர்கள்;  நீ  இப்படிப்பட்ட  காலத்துக்கு  உதவியாயிருக்கும்படி  உனக்கு  ராஜமேன்மை  கிடைத்திருக்கலாமே,  யாருக்குத்  தெரியும்,  என்று  சொல்லச்சொன்னான்.  {Esth  4:14}

 

அப்பொழுது  எஸ்தர்<Esther>  மொர்தெகாய்க்கு<Mordecai>  மறுபடியும்  சொல்லச்சொன்னது:  {Esth  4:15}

 

நீர்  போய்,  சூசானில்<Shushan>  இருக்கிற  யூதரையெல்லாம்<Jews>  கூடிவரச்செய்து,  மூன்றுநாள்  அல்லும்  பகலும்  புசியாமலும்  குடியாமலுமிருந்து,  எனக்காக  உபவாசம்பண்ணுங்கள்;  நானும்  என்  தாதிமாரும்  உபவாசம்பண்ணுவோம்;  இவ்விதமாக  சட்டத்தை  மீறி,  ராஜாவினிடத்தில்  பிரவேசிப்பேன்;  நான்  செத்தாலும்  சாகிறேன்  என்று  சொல்லச்சொன்னாள்.  {Esth  4:16}

 

அப்பொழுது  மொர்தெகாய்<Mordecai>  புறப்பட்டுப்போய்,  எஸ்தர்<Esther>  தனக்குக்  கற்பித்தபடியெல்லாம்  செய்தான்.  {Esth  4:17}

 

மூன்றாம்  நாளிலே  எஸ்தர்<Esther>  ராஜவஸ்திரந்  தரித்துக்கொண்டு,  ராஜ  அரமனையின்  உள்முற்றத்தில்,  ராஜா  கொலுவிருக்கும்  ஸ்தானத்துக்கு  எதிராக  வந்து  நின்றாள்;  ராஜா  அரமனைவாசலுக்கு  எதிரான  கொலுமண்டபத்தில்  ராஜாசனத்திலே  வீற்றிருந்தான்.  {Esth  5:1}

 

ராஜா  ராஜஸ்திரீயாகிய  எஸ்தர்<Esther>  முற்றத்தில்  நிற்கிறதைக்  கண்டபோது,  அவளுக்கு  அவன்  கண்களில்  தயை  கிடைத்ததினால்,  ராஜா  தன்  கையிலிருக்கிற  பொற்செங்கோலை  எஸ்தரிடத்திற்கு<Esther>  நீட்டினான்;  அப்பொழுது  எஸ்தர்<Esther>  கிட்டவந்து  செங்கோலின்  நுனியைத்  தொட்டாள்.  {Esth  5:2}

 

ராஜா  அவளை  நோக்கி:  எஸ்தர்<Esther>  ராஜாத்தியே,  உனக்கு  என்னவேண்டும்?  நீ  கேட்கிற  மன்றாட்டு  என்ன?  நீ  ராஜ்யத்தில்  பாதிமட்டும்  கேட்டாலும்,  உனக்குக்  கொடுக்கப்படும்  என்றான்.  {Esth  5:3}

 

அப்பொழுது  எஸ்தர்<Esther>:  ராஜாவுக்குச்  சித்தமானால்,  நான்  தமக்குச்  செய்வித்த  விருந்துக்கு  ராஜாவும்  ஆமானும்<Haman>  இன்றைக்கு  வரவேண்டும்  என்றாள்.  {Esth  5:4}

 

அப்பொழுது  ராஜா  எஸ்தர்<Esther>  சொற்படி  செய்ய,  ஆமானைத்<Haman>  தீவிரித்து  வரும்படி  சொல்லி,  எஸ்தர்<Esther>  செய்த  விருந்துக்கு  ராஜாவும்  ஆமானும்<Haman>  வந்தார்கள்.  {Esth  5:5}

 

விருந்திலே  திராட்சரசம்  பரிமாறப்படுகையில்,  ராஜா  எஸ்தரைப்<Esther>  பார்த்து:  உன்  வேண்டுதல்  என்ன?  அது  உனக்குக்  கொடுக்கப்படும்;  நீ  கேட்கிறது  என்ன?  நீ  ராஜ்யத்தில்  பாதிமட்டும்  கேட்டாலும்  கிடைக்கும்  என்றான்.  {Esth  5:6}

 

அதற்கு  எஸ்தர்<Esther>  பிரதியுத்தரமாக:  {Esth  5:7}

 

ராஜாவின்  கண்களில்  எனக்குக்  கிருபைகிடைத்து,  என்  வேண்டுதலைக்  கட்டளையிடவும்,  என்  விண்ணப்பத்தின்படி  செய்யவும்,  ராஜாவுக்குச்  சித்தமாயிருந்தால்,  ராஜாவும்  ஆமானும்<Haman>  நான்  இன்னும்  தங்களுக்குச்  செய்யப்போகிற  விருந்துக்கு  வரவேண்டும்  என்பதே  என்  வேண்டுதலும்  என்  விண்ணப்பமுமாயிருக்கிறது;  நாளைக்கு  ராஜாவின்  சொற்படி  செய்வேன்  என்றாள்.  {Esth  5:8}

 

அன்றையதினம்  ஆமான்<Haman>  சந்தோஷமும்  மனமகிழ்ச்சியுமாய்ப்  புறப்பட்டான்;  ஆனாலும்  ராஜாவின்  அரமனை  வாசலிலிருக்கிற  மொர்தெகாய்<Mordecai>  தனக்கு  முன்  எழுந்திராமலும்  அசையாமலும்  இருக்கிறதை  ஆமான்<Haman>  கண்டபோது,  அவன்  மொர்தெகாயின்மேல்<Mordecai>  உக்கிரம்  நிறைந்தவனானான்.  {Esth  5:9}

 

ஆகிலும்  ஆமான்<Haman>  அதை  அடக்கிக்கொண்டு,  தன்  வீட்டுக்கு  வந்து,  தன்  சிநேகிதரையும்  தன்  மனைவியாகிய  சிரேஷையும்<Zeresh>  அழைத்து,  {Esth  5:10}

 

தன்  ஐசுவரியத்தின்  மகிமையையும்,  தன்  பிள்ளைகளின்  திரட்சியையும்,  ராஜா  தன்னைப்  பெரியவனாக்கி,  தன்னைப்  பிரபுக்கள்மேலும்  ராஜாவின்  ஊழியக்காரர்மேலும்  உயர்த்தின  எல்லாவற்றையும்  ஆமான்<Haman>  அவர்களுக்கு  விவரித்துச்சொன்னான்.  {Esth  5:11}

 

பின்னையும்  ஆமான்<Haman>:  ராஜஸ்திரீயாகிய  எஸ்தரும்<Esther>  தான்  செய்த  விருந்துக்கு  ராஜாவுடனேகூட  என்னைத்தவிர  வேறொருவரையும்  அழைக்கவில்லை;  நாளைக்கும்  ராஜாவுடனேகூட  நான்  விருந்துக்கு  வரவழைக்கப்பட்டிருக்கிறேன்.  {Esth  5:12}

 

ஆனாலும்  அந்த  யூதனாகிய<Jew>  மொர்தெகாய்<Mordecai>  ராஜாவின்  அரமனைவாசலில்  உட்கார்ந்திருக்கிறதை  நான்  காணுமளவும்  அவையெல்லாம்  எனக்கு  ஒன்றுமில்லையென்றான்.  {Esth  5:13}

 

அப்பொழுது  அவன்  மனைவியாகிய  சிரேஷும்<Zeresh>  அவனுடைய  சிநேகிதர்  எல்லாரும்  அவனைப்  பார்த்து:  ஐம்பதுமுழ  உயரமான  ஒரு  தூக்குமரம்  செய்யப்படவேண்டும்;  அதிலே  மொர்தெகாயை<Mordecai>  தூக்கிப்போடும்படி  நாளையத்தினம்  நீர்  ராஜாவுக்குச்  சொல்லவேண்டும்;  பின்பு  சந்தோஷமாய்  ராஜாவுடனேகூட  விருந்துக்குப்  போகலாம்  என்றார்கள்;  இந்தக்  காரியம்  ஆமானுக்கு<Haman>  நன்றாய்க்  கண்டதினால்  தூக்குமரத்தைச்  செய்வித்தான்.  {Esth  5:14}

 

அந்த  ராத்திரியிலே  ராஜாவுக்கு  நித்திரை  வராதபடியினால்,  காலவர்த்தமானங்கள்  எழுதியிருக்கிற  நடபடி  புஸ்தகத்தைக்  கொண்டுவரச்சொன்னான்;  அது  ராஜசமுகத்தில்  வாசிக்கப்பட்டது.  {Esth  6:1}

 

அப்பொழுது  வாசற்  காவலாளரில்  ராஜாவின்  இரண்டு  பிரதானிகளாகிய  பிக்தானாவும்<Bigthana>  தேரேசும்<Teresh>,  ராஜாவாகிய  அகாஸ்வேருவின்மேல்<Ahasuerus>  கைபோடப்பார்த்த  செய்தியை  மொர்தெகாய்<Mordecai>  அறிவித்தான்  என்று  எழுதியிருக்கிறது  வாசிக்கப்பட்டது.  {Esth  6:2}

 

அப்பொழுது  ராஜா:  இதற்காக  மொர்தெகாய்க்கு<Mordecai>  கனமும்  மேன்மையும்  செய்யப்பட்டதா  என்று  கேட்டான்.  அதற்கு  ராஜாவைச்  சேவிக்கிற  ஊழியக்காரர்:  அவனுக்கு  ஒன்றும்  செய்யப்படவில்லை  என்று  சொன்னார்கள்.  {Esth  6:3}

 

ஆமான்<Haman>  தான்  செய்த  தூக்குமரத்திலே  மொர்தெகாயைத்<Mordecai>  தூக்கிப்போடவேண்டுமென்று,  ராஜாவிடத்தில்  பேசும்படி  ராஜ  அரமனையின்  வெளிமுற்றத்திலே  வந்திருந்தான்.  அப்பொழுது  ராஜா:  முற்றத்திலிருக்கிறது  யார்  என்று  கேட்டான்.  {Esth  6:4}

 

ராஜாவின்  ஊழியக்காரர்  அவனை  நோக்கி:  இதோ,  ஆமான்<Haman>  முற்றத்திலே  நிற்கிறான்  என்றார்கள்;  ராஜா:  அவன்  உள்ளே  வரட்டும்  என்றான்.  {Esth  6:5}

 

ஆமான்<Haman>  உள்ளே  வந்தபோது,  ராஜா  அவனை  நோக்கி:  ராஜா  கனம்பண்ண  விரும்புகிற  மனுஷனுக்கு  என்ன  செய்யப்படவேண்டும்  என்று  கேட்டான்;  அதற்கு  ஆமான்<Haman>,  என்னையன்றி,  யாரை  ராஜா  கனம்பண்ண  விரும்புவார்  என்று  தன்  மனதிலே  நினைத்து,  {Esth  6:6}

 

ராஜாவை  நோக்கி:  ராஜா  கனம்பண்ண  விரும்புகிற  மனுஷனுக்குச்  செய்யவேண்டியது  என்னவென்றால்,  {Esth  6:7}

 

ராஜா  உடுத்திக்கொள்ளுகிற  ராஜவஸ்திரமும்,  ராஜா  ஏறுகிற  குதிரையும்,  அவர்  சிரசிலே  தரிக்கப்படும்  ராஜமுடியும்  கொண்டுவரப்படவேண்டும்.  {Esth  6:8}

 

அந்த  வஸ்திரமும்  குதிரையும்  ராஜாவுடைய  பிரதான  பிரபுக்களில்  ஒருவனுடைய  கையிலே  கொடுக்கப்படவேண்டும்;  ராஜா  கனம்பண்ண  விரும்புகிற  மனுஷனை  அலங்கரித்தபின்,  அவனைக்  குதிரையின்மேல்  ஏற்றி,  நகரவீதியில்  உலாவும்படி  செய்து,  ராஜா  கனம்பண்ண  விரும்புகிற  மனுஷனுக்கு  இப்படியே  செய்யப்படும்  என்று  அவனுக்கு  முன்பாகக்  கூறப்படவேண்டும்  என்றான்.  {Esth  6:9}

 

அப்பொழுது  ராஜா  ஆமானை<Haman>  நோக்கி:  சீக்கிரமாய்  நீ  சொன்னபடி  வஸ்திரத்தையும்  குதிரையையும்  கொண்டுபோய்,  ராஜ  அரமனையின்  வாசலில்  உட்கார்ந்திருக்கிற  யூதனாகிய<Jew>  மொர்தெகாய்க்கு<Mordecai>  அந்தப்பிரகாரம்  செய்;  நீ  சொன்ன  எல்லாவற்றிலும்  ஒன்றும்  தவறாதபடி  பார்  என்றான்.  {Esth  6:10}

 

அப்படியே  ஆமான்<Haman>  வஸ்திரத்தையும்  குதிரையையும்  கொண்டுபோய்,  மொர்தெகாயை<Mordecai>  அலங்கரித்து,  அவனைக்  குதிரையின்மேல்  ஏற்றி,  நகரவீதியில்  உலாவும்படி  செய்து,  ராஜா  கனம்பண்ண  விரும்புகிற  மனுஷனுக்கு  இப்படியே  செய்யப்படும்  என்று  அவனுக்கு  முன்பாகக்  கூறினான்.  {Esth  6:11}

 

பின்பு  மொர்தெகாய்<Mordecai>  ராஜாவின்  அரமனைவாசலுக்குத்  திரும்பிவந்தான்;  ஆமானோவென்றால்<Haman>  சஞ்சலப்பட்டு  முக்காடிட்டுக்கொண்டு  தன்  வீட்டுக்குத்  தீவிரித்துப்போனான்.  {Esth  6:12}

 

ஆமான்<Haman>  தனக்கு  நேரிட்ட  எல்லாவற்றையும்  தன்  மனைவியாகிய  சிரேஷுக்கும்<Zeresh>  தன்  சிநேகிதர்  எல்லாருக்கும்  அறிவித்தபோது,  அவனுடைய  ஆலோசனைக்காரரும்  அவன்  மனைவியாகிய  சிரேஷும்<Zeresh>  அவனைப்  பார்த்து:  மொர்தெகாய்க்கு<Mordecai>  முன்பாக  நீர்  தாழ்ந்துபோகத்  தொடங்கினீர்;  அவன்  யூதகுலமானால்<Jews>,  நீர்  அவனை  மேற்கொள்ளாமல்  அவனுக்கு  முன்பாகத்  தாழ்ந்துபோவது  நிச்சயம்  என்றார்கள்.  {Esth  6:13}

 

அவர்கள்  இப்படிப்  பேசிக்கொண்டிருக்கும்போதே,  ராஜாவின்  பிரதானிகள்  வந்து,  எஸ்தர்<Esther>  செய்த  விருந்துக்கு  வர  ஆமானைத்<Haman>  துரிதப்படுத்தினார்கள்.  {Esth  6:14}

 

ராஜாத்தியாகிய  எஸ்தருடனே<Esther>  விருந்துண்ண,  ராஜாவும்  ஆமானும்<Haman>  வந்தபோது,  {Esth  7:1}

 

இரண்டாம்  நாள்  விருந்தில்  திராட்சரசம்  பரிமாறப்படும்போது,  ராஜா  எஸ்தரை<Esther>  நோக்கி:  எஸ்தர்<Esther>  ராஜாத்தியே,  உன்  வேண்டுதல்  என்ன?  அது  உனக்குக்  கொடுக்கப்படும்;  நீ  கேட்கிற  மன்றாட்டு  என்ன?  நீ  ராஜ்யத்தில்  பாதிமட்டும்  கேட்டாலும்  கிடைக்கும்  என்றான்.  {Esth  7:2}

 

அப்பொழுது  ராஜாத்தியாகிய  எஸ்தர்<Esther>  பிரதியுத்தரமாக:  ராஜாவே,  உம்முடைய  கண்களில்  எனக்குக்  கிருபை  கிடைத்து,  ராஜாவுக்குச்  சித்தமாயிருந்தால்  என்  வேண்டுதலுக்கு  என்  ஜீவனும்,  என்  மன்றாட்டுக்கு  என்  ஜனங்களும்  எனக்குக்  கட்டளையிடப்படுவதாக.  {Esth  7:3}

 

எங்களை  அழித்துக்  கொன்று  நிர்மூலமாக்கும்படி  நானும்  என்  ஜனங்களும்  விற்கப்பட்டோம்;  அடிமைகளாகவும்  வெள்ளாட்டிகளாகவும்  விற்கப்பட்டுப்போனாலும்  நான்  மவுனமாயிருப்பேன்;  இப்பொழுதோ  ராஜாவுக்கு  உண்டாகும்  நஷ்டத்துக்கு  அந்தச்  சத்துரு  உத்தரவாதம்பண்ண  முடியாது  என்றாள்.  {Esth  7:4}

 

அப்பொழுது  ராஜாவாகிய  அகாஸ்வேரு<Ahasuerus>  மறுமொழியாக,  ராஜாத்தியாகிய  எஸ்தரை<Esther>  நோக்கி:  இப்படிச்  செய்யத்  துணிகரங்கொண்டவன்  யார்?  அவன்  எங்கே?  என்றான்.  {Esth  7:5}

 

அதற்கு  எஸ்தர்<Esther>:  சத்துருவும்  பகைஞனுமாகிய  அந்த  மனிதன்  இந்தத்  துஷ்ட  ஆமான்தான்<Haman>  என்றாள்;  அப்பொழுது  ராஜாவுக்கும்  ராஜாத்திக்கும்  முன்பாக  ஆமான்<Haman>  திகிலடைந்தான்.  {Esth  7:6}

 

ராஜா  உக்கிரத்தோடே  திராட்சரசப்பந்தியை  விட்டெழுந்து,  அரமனைத்  தோட்டத்திற்குப்  போனான்;  ராஜாவினால்  தனக்குப்  பொல்லாப்பு  நிர்ணயிக்கப்பட்டதென்று  ஆமான்<Haman>  கண்டு,  ராஜாத்தியாகிய  எஸ்தரிடத்தில்<Esther>  தன்  பிராணனுக்காக  விண்ணப்பம்பண்ண  எழுந்துநின்றான்.  {Esth  7:7}

 

ராஜா  அரமனைத்  தோட்டத்திலிருந்து  திராட்சரசம்  பரிமாறப்பட்ட  இடத்துக்குத்  திரும்பிவருகையில்,  எஸ்தர்<Esther>  உட்கார்ந்திருக்கிற  மெத்தையின்மேல்  ஆமான்<Haman>  விழுந்துகிடந்தான்;  அப்பொழுது  ராஜா:  நான்  அரமனையிலிருக்கும்போதே  என்  கண்முன்னே  இவன்  ராஜாத்தியைப்  பலவந்தம்  செய்யவேண்டுமென்றிருக்கிறானோ  என்றான்;  இந்த  வார்த்தை  ராஜாவின்  வாயிலிருந்து  பிறந்தவுடனே  ஆமானின்<Haman>  முகத்தை  மூடிப்போட்டார்கள்.  {Esth  7:8}

 

அப்பொழுது  ராஜசமுகத்தில்  இருக்கிற  பிரதானிகளில்  அற்போனா<Harbonah>  என்னும்  ஒருவன்:  இதோ,  ராஜாவின்  நன்மைக்காகப்  பேசின  மொர்தெகாய்க்கு<Mordecai>  ஆமான்<Haman>  செய்வித்த  ஐம்பது  முழ  உயரமான  தூக்குமரம்  ஆமானின்<Haman>  வீட்டண்டை  நாட்டப்பட்டிருக்கிறது  என்றான்;  அப்பொழுது  ராஜா:  அதிலே  அவனைத்  தூக்கிப்போடுங்கள்  என்றான்.  {Esth  7:9}

 

அப்படியே  ஆமான்<Haman>  மொர்தெகாய்க்கு<Mordecai>  ஆயத்தம்பண்ணின  தூக்குமரத்தில்  ஆமானையே<Haman>  தூக்கிப்போட்டார்கள்;  அப்பொழுது  ராஜாவின்  உக்கிரம்  தணிந்தது.  {Esth  7:10}

 

அன்றையதினம்  அகாஸ்வேரு<Ahasuerus>  ராஜா  யூதரின்<Jews>  சத்துருவாயிருந்த  ஆமானின்<Haman>  வீட்டை  ராஜாத்தியாகிய  எஸ்தருக்குக்<Esther>  கொடுத்தான்;  மொர்தெகாய்<Mordecai>  ராஜசமுகத்தில்  வந்தான்;  அவன்  தனக்கு  இன்ன  உறவு  என்று  எஸ்தர்<Esther>  அறிவித்திருந்தாள்.  {Esth  8:1}

 

ராஜா  ஆமானின்<Haman>  கையிலிருந்து  வாங்கிப்போட்ட  தம்முடைய  மோதிரத்தை  எடுத்து,  அதை  மொர்தெகாய்க்குக்<Mordecai>  கொடுத்தான்;  எஸ்தர்<Esther>  மொர்தெகாயை<Mordecai>  ஆமானின்<Haman>  அரமனைக்கு  அதிகாரியாக  வைத்தாள்.  {Esth  8:2}

 

பின்னும்  எஸ்தர்<Esther>  ராஜசமுகத்தில்  பேசி,  அவன்  பாதங்களில்  விழுந்து  அழுது,  ஆகாகியனான<Agagite>  ஆமானின்<Haman>  தீவினையையும்  அவன்  யூதருக்கு<Jews>  விரோதஞ்செய்ய  யோசித்த  யோசனையையும்  பரிகரிக்க  அவனிடத்தில்  விண்ணப்பம்பண்ணினாள்.  {Esth  8:3}

 

அப்பொழுது  ராஜா  பொற்செங்கோலை  எஸ்தருக்கு<Esther>  நீட்டினான்;  எஸ்தர்<Esther>  எழுந்திருந்து  ராஜசமுகத்தில்  நின்று:  {Esth  8:4}

 

ராஜாவுக்குச்  சித்தமாயிருந்து  அவர்  சமுகத்தில்  எனக்குக்  கிருபைகிடைத்து,  ராஜசமுகத்தில்  நான்  சொல்லும்  வார்த்தை  சரியென்று  காணப்பட்டு,  அவருடைய  கண்களுக்கு  நான்  பிரியமாயிருந்தால்,  ராஜாவின்  நாடுகளிலெல்லாம்  இருக்கிற  யூதரை<Jews>  அழிக்கவேண்டும்  என்று  அம்மெதாத்தாவின்<Hammedatha>  குமாரனாகிய  ஆமான்<Haman>  என்னும்  ஆகாகியன்<Agagite>  தீவினையாய்  எழுதின  கட்டளைகள்  செல்லாமற்போகப்பண்ணும்படி  எழுதி  அனுப்பப்படவேண்டும்.  {Esth  8:5}

 

என்  ஜனத்தின்மேல்  வரும்  பொல்லாப்பை  நான்  எப்படிப்  பார்க்கக்கூடும்?  என்  குலத்துக்கு  வரும்  அழிவை  நான்  எப்படிச்  சகிக்கக்கூடும்?  என்றாள்.  {Esth  8:6}

 

அப்பொழுது  அகாஸ்வேரு<Ahasuerus>  ராஜா  ராஜாத்தியாகிய  எஸ்தரையும்<Esther>  யூதனாகிய<Jew>  மொர்தெகாயையும்<Mordecai>  நோக்கி:  இதோ,  ஆமானின்<Haman>  வீட்டை  எஸ்தருக்குக்<Esther>  கொடுத்தேன்;  அவன்  யூதர்மேல்<Jews>  தன்  கையைப்போட  எத்தனித்தபடியினால்  அவனை  மரத்திலே  தூக்கிப்போட்டார்கள்.  {Esth  8:7}

 

இப்போதும்  உங்களுக்கு  இஷ்டமானபடி  நீங்கள்  ராஜாவின்  நாமத்தினால்  யூதருக்காக<Jews>  எழுதி,  ராஜாவின்  மோதிரத்தினால்  முத்திரைபோடுங்கள்;  ராஜாவின்பேரால்  எழுதப்பட்டு,  ராஜாவின்  மோதிரத்தினால்  முத்திரைபோடப்பட்டதைச்  செல்லாமற்  போகப்பண்ண  ஒருவராலும்  கூடாது  என்றான்.  {Esth  8:8}

 

சீவான்<Sivan>  மாதம்  என்னும்  மூன்றாம்  மாதம்  இருபத்துமூன்றாந்தேதியாகிய  அக்காலத்திலேதானே  ராஜாவின்  சம்பிரதிகள்  அழைக்கப்பட்டார்கள்;  மொர்தெகாய்<Mordecai>  கற்பித்தபடியெல்லாம்  யூதருக்கும்<Jews>  இந்துதேசம்முதல்<India>  எத்தியோப்பியா<Ethiopia>  தேசமட்டுமுள்ள  நூற்றிருபத்தேழு  நாடுகளின்  தேசாதிபதிகளுக்கும்,  அதிபதிகளுக்கும்,  அதிகாரிகளுக்கும்,  அந்தந்த  நாட்டில்  வழங்கும்  அட்சரத்திலும்,  அந்தந்த  ஜாதியார்  பேசும்  பாஷையிலும்,  யூதருக்கும்<Jews>  அவர்கள்  அட்சரத்திலும்  அவர்கள்  பாஷையிலும்  எழுதப்பட்டது.  {Esth  8:9}

 

அந்தக்  கட்டளைகள்  அகாஸ்வேரு<Ahasuerus>  ராஜாவின்  பேரால்  எழுதப்பட்டு,  ராஜாவின்  மோதிரத்தினால்  முத்திரை  போடப்பட்டபின்,  குதிரைகள்மேலும்  வேகமான  ஒட்டகங்கள்மேலும்,  கோவேறு  கழுதைகள்மேலும்  ஏறிப்போகிற  அஞ்சற்காரர்  கையில்  அனுப்பப்பட்டது.  {Esth  8:10}

 

அவைகளில்,  அகாஸ்வேரு<Ahasuerus>  ராஜாவுடைய  எல்லா  நாடுகளிலும்  ஆதார்<Adar>  மாதம்  என்கிற  பன்னிரண்டாம்  மாதம்  பதின்மூன்றாந்தேதியாகிய  அந்த  ஒரேநாளிலே,  {Esth  8:11}

 

அந்தந்தப்  பட்டணத்திலிருக்கிற  யூதர்<Jews>  ஒன்றாய்ச்  சேர்ந்து,  தங்கள்  பிராணனைக்  காப்பாற்றவும்,  தங்களை  விரோதிக்கும்  சத்துருக்களாகிய  ஜனத்தாரும்  தேசத்தாருமான  எல்லாரையும்,  அவர்கள்  குழந்தைகளையும்,  ஸ்திரீகளையும்  அழித்துக்  கொன்று  நிர்மூலமாக்கவும்,  அவர்கள்  உடைமைகளைக்  கொள்ளையிடவும்,  ராஜா  யூதருக்குக்<Jews>  கட்டளையிட்டார்  என்று  எழுதியிருந்தது.  {Esth  8:12}

 

யூதர்<Jews>  தங்கள்  பகைஞருக்குச்  சரிக்குச்  சரிக்கட்டும்படி  நியமித்த  அன்றையதினத்தில்  ஆயத்தமாயிருக்கவேண்டுமென்று  அந்தந்த  நாட்டிலுள்ள  சகல  ஜனங்களுக்கும்  கூறப்படுகிறதற்காகக்  கொடுக்கப்பட்ட  கட்டளையின்  நகல்  இதுவே;  இது  ஒவ்வொரு  நாட்டிலும்  பிரசித்தம்பண்ணப்பட்டது.  {Esth  8:13}

 

அப்படியே  வேகமான  ஒட்டகங்கள்மேலும்,  கோவேறு  கழுதைகள்மேலும்  ஏறின  அஞ்சற்காரர்  ராஜாவின்  வார்த்தையினாலே  ஏவப்பட்டு,  தீவிரத்தோடே  புறப்பட்டுப்போனார்கள்;  அந்தக்  கட்டளை  சூசான்<Shushan>  அரமனையில்  கொடுக்கப்பட்டது.  {Esth  8:14}

 

அப்பொழுது  மொர்தெகாய்<Mordecai>  இளநீலமும்  வெள்ளையுமான  ராஜவஸ்திரமும்,  பெரிய  பொன்முடியும்,  பட்டும்  இரத்தாம்பரமும்  அணிந்தவனாய்  ராஜாவினிடத்திலிருந்து  புறப்பட்டான்;  சூசான்<Shushan>  நகரம்  ஆர்ப்பரித்து  மகிழ்ந்திருந்தது.  {Esth  8:15}

 

இவ்விதமாய்  யூதருக்கு<Jews>  வெளிச்சமும்,  மகிழ்ச்சியும்,  களிப்பும்,  கனமும்  உண்டாயிற்று.  {Esth  8:16}

 

ராஜாவின்  வார்த்தையும்  அவனுடைய  கட்டளையும்  போய்ச்சேர்ந்த  எல்லா  நாடுகளிலும்,  எல்லாப்  பட்டணங்களிலும்,  யூதருக்குள்ளே<Jews>  அது  மகிழ்ச்சியும்,  களிப்பும்,  விருந்துண்டு  கொண்டாடும்  நல்ல  நாளுமாயிருந்தது;  யூதருக்குப்<Jews>  பயப்படுகிற  பயம்  தேசத்து  ஜனங்களைப்  பிடித்ததினால்,  அவர்களில்  அநேகர்  யூதமார்க்கத்தில்<Jews>  அமைந்தார்கள்.  {Esth  8:17}

 

ராஜாவின்  வார்த்தையின்படியும்  அவனுடைய  கட்டளையின்படியும்  செய்யப்படுகிறதற்கு,  ஆதார்<Adar>  மாதம்  என்கிற  பன்னிரண்டாம்  மாதம்  பதின்மூன்றாந்  தேதியிலே,  யூதரின்<Jews>  பகைஞர்  அவர்களை  மேற்கொள்ளலாம்  என்று  நம்பினார்களே;  அந்நாளிலேதானே,  யூதரானவர்கள்<Jews>  தங்கள்  பகைஞரை  மேற்கொள்ளும்படிக்குக்  காரியம்  மாறுதலாய்  முடிந்தது.  {Esth  9:1}

 

யூதர்<Jews>  அகாஸ்வேரு<Ahasuerus>  ராஜாவின்  சகல  நாடுகளிலுமுள்ள  பட்டணங்களிலே  தங்களுக்குப்  பொல்லாப்பு  வரப்பண்ணப்  பார்த்தவர்கள்மேல்  கைபோடக்  கூடிக்கொண்டார்கள்;  ஒருவரும்  அவர்களுக்கு  முன்பாக  நிற்கக்கூடாதிருந்தது;  அவர்களைப்பற்றி  சகல  ஜனங்களுக்கும்  பயமுண்டாயிற்று.  {Esth  9:2}

 

நாடுகளின்  சகல  அதிகாரிகளும்,  தேசாதிபதிகளும்,  துரைகளும்,  ராஜாவின்  காரியங்களை  நடப்பிக்கிறவர்களும்,  யூதருக்குத்<Jews>  துணைநின்றார்கள்;  மொர்தெகாயினால்<Mordecai>  உண்டான  பயங்கரம்  அவர்களைப்  பிடித்தது.  {Esth  9:3}

 

மொர்தெகாய்<Mordecai>  ராஜாவின்  அரமனையில்  பெரியவனாயிருந்தான்;  அவனுடைய  கீர்த்தி  எல்லா  நாடுகளிலும்  பிரசித்தமாயிற்று;  இந்த  மொர்தெகாய்<Mordecai>  என்பவன்  மேன்மேலும்  பெரியவனானான்.  {Esth  9:4}

 

அப்படியே  யூதர்<Jews>  தங்கள்  சத்துருக்களையெல்லாம்  பட்டயத்தால்  வெட்டிக்  கொன்று  நிர்மூலமாக்கி,  தங்கள்  இஷ்டப்படி  தங்கள்  பகைஞருக்குச்  செய்தார்கள்.  {Esth  9:5}

 

யூதர்<Jews>  சூசான்<Shushan>  அரமனையிலும்  ஐந்நூறுபேரைக்  கொன்று  நிர்மூலமாக்கினார்கள்.  {Esth  9:6}

 

அம்மெதாத்தாவின்<Hammedatha>  குமாரனாகிய  ஆமான்<Haman>  என்னும்  யூதருடைய<Jews>  சத்துருவின்  குமாரரான  பர்சான்தாத்தா<Parshandatha>,  தல்போன்<Dalphon>,  அஸ்பாதா<Aspatha>,  {Esth  9:7}

 

பொராதா<Poratha>,  அதலியா<Adalia>,  அரிதாத்தா<Aridatha>,  {Esth  9:8}

 

பர்மஷ்டா<Parmashta>,  அரிசாய்<Arisai>,  அரிதாய்<Aridai>,  வாய்சாதா<Vajezatha>  ஆகிய  பத்துப்பேரையும்  கொன்றுபோட்டார்கள்.  {Esth  9:9}

 

ஆனாலும்  கொள்ளையிடத்  தங்கள்  கையை  நீட்டவில்லை.  {Esth  9:10}

 

அன்றையதினம்  சூசான்<Shushan>  அரமனையில்  கொன்றுபோடப்பட்டவர்களின்  தொகை  ராஜசமுகத்தில்  கொண்டுவரப்பட்டது.  {Esth  9:11}

 

அப்பொழுது  ராஜா,  ராஜாத்தியாகிய  எஸ்தரை<Esther>  நோக்கி:  யூதர்<Jews>  சூசான்<Shushan>  அரமனையில்  ஐந்நூறுபேரையும்  ஆமானின்<Haman>  பத்துக்  குமாரரையும்  கொன்று  நிர்மூலமாக்கினார்கள்;  ராஜாவின்  மற்ற  நாடுகளிலும்  என்ன  செய்திருப்பார்களோ!  இப்போதும்  உன்  வேண்டுதல்  என்ன?  அது  உனக்குக்  கட்டளையிடப்படும்;  உன்  மன்றாட்டு  என்ன?  அதின்படி  செய்யப்படும்  என்றான்.  {Esth  9:12}

 

அப்பொழுது  எஸ்தர்<Esther>:  ராஜாவுக்குச்  சித்தமாயிருந்தால்,  இன்றையதினத்துக்  கட்டளையின்படியே  சூசானிலிருக்கிற<Shushan>  யூதர்<Jews>  நாளையதினமும்  செய்யவும்,  ஆமானின்<Haman>  பத்துக்  குமாரரின்  உடலையும்  தூக்குமரத்தில்  தூக்கிப்போடவும்  உத்தரவாகவேண்டும்  என்றாள்.  {Esth  9:13}

 

அப்படியே  செய்யும்படிக்கு  ராஜா  உத்தரவு  கொடுத்தான்;  அதற்குச்  சூசானிலே<Shushan>  கட்டளை  பிறந்தது;  ஆமானின்<Haman>  பத்துக்  குமாரருடைய  உடலையும்  தூக்கிப்போட்டார்கள்.  {Esth  9:14}

 

சூசானிலிருக்கிற<Shushan>  யூதர்<Jews>  ஆதார்<Adar>  மாதத்தின்  பதினாலாந்தேதியிலும்  கூடிச்சேர்ந்து,  சூசானில்<Shushan>  முந்நூறுபேரைக்  கொன்றுபோட்டார்கள்;  ஆனாலும்  கொள்ளையிடத்  தங்கள்  கையை  நீட்டவில்லை.  {Esth  9:15}

 

ராஜாவின்  நாடுகளிலுள்ள  மற்ற  யூதர்கள்<Jews>  தங்கள்  பிராணனைத்  தற்காக்கவும்,  தங்கள்  பகைஞருக்கு  விலகி  இளைப்பாறுதல்  அடையவும்  ஒருமிக்கச்  சேர்ந்து,  தங்கள்  விரோதிகளில்  எழுபத்தையாயிரம்  பேரைக்  கொன்றுபோட்டார்கள்;  ஆனாலும்  கொள்ளையிடத்  தங்கள்  கையை  நீட்டவில்லை.  {Esth  9:16}

 

ஆதார்<Adar>  மாதத்தின்  பதின்மூன்றாந்தேதியிலே  இப்படிச்  செய்து,  பதினாலாந்தேதியிலே  இளைப்பாறி,  அதை  விருந்துண்டு  சந்தோஷப்படுகிற  பண்டிகை  நாளாக்கினார்கள்.  {Esth  9:17}

 

சூசானிலுள்ள<Shushan>  யூதரோவென்றால்<Jews>,  அந்த  மாதத்தின்  பதின்மூன்றாந்தேதியிலும்  பதினாலாந்தேதியிலும்  ஏகமாய்க்  கூடி,  பதினைந்தாந்தேதியில்  இளைப்பாறி,  அதை  விருந்துண்டு  சந்தோஷப்படுகிற  பண்டிகை  நாளாக்கினார்கள்.  {Esth  9:18}

 

ஆதலால்  அலங்கமில்லாத  ஊர்களில்  குடியிருக்கிற  நாட்டுப்புறத்தாரான  யூதர்கள்<Jews>  ஆதார்<Adar>  மாதத்தின்  பதினாலாந்தேதியைச்  சந்தோஷமும்,  விருந்துண்கிற  பூரிப்புமான  நாளும்,  ஒருவருக்கொருவர்  வரிசைகளை  அனுப்புகிற  நாளுமாக்கினார்கள்.  {Esth  9:19}

 

மொர்தெகாய்<Mordecai>  இந்த  வர்த்தமானங்களை  எழுதி,  சமீபத்திலும்  தூரத்திலும்  இருக்கிற  அகாஸ்வேரு<Ahasuerus>  ராஜாவின்  சகல  நாடுகளிலுமுள்ள  எல்லா  யூதருக்கும்<Jews>  நிருபங்களை  அனுப்பி,  {Esth  9:20}

 

வருஷந்தோறும்  ஆதார்<Adar>  மாதத்தின்  பதினாலாம்  பதினைந்தாந்தேதிகளை,  யூதர்<Jews>  தங்கள்  பகைஞருக்கு  நீங்கலாகி  இளைப்பாறுதல்  அடைந்த  நாட்களாகவும்,  அவர்கள்  சஞ்சலம்  சந்தோஷமாகவும்,  அவர்கள்  துக்கம்  மகிழ்ச்சியாகவும்  மாறின  மாதமாகவும்  ஆசரித்து,  {Esth  9:21}

 

அந்நாட்களில்  விருந்துண்டு  சந்தோஷங்கொண்டாடவும்,  ஒருவருக்கொருவர்  வரிசைகளை  அனுப்பவும்,  எளியவர்களுக்குத்  தானதர்மஞ்செய்யவும்  வேண்டுமென்று  திட்டம்பண்ணினான்.  {Esth  9:22}

 

அப்பொழுது  யூதர்<Jews>  தாங்கள்  செய்யத்தொடங்கினபடியும்  மொர்தெகாய்<Mordecai>  தங்களுக்கு  எழுதினபடியும்  செய்யச்  சம்மதித்தார்கள்.  {Esth  9:23}

 

அம்மெதாத்தாவின்<Hammedatha>  குமாரனாகிய  ஆமான்<Haman>  என்னும்  ஆகாகியன்<Agagite>,  யூதருக்கெல்லாம்<Jews>  சத்துருவாயிருந்து  யூதரைச்<Jews>  சங்கரிக்க  நினைத்து,  அவர்களை  அழிக்கவும்  நிர்மூலமாக்கவும்,  பூர்<Pur>  என்னப்பட்ட  சீட்டைப்  போடுவித்தான்.  {Esth  9:24}

 

ஆனாலும்  எஸ்தர்<Esther>,  ராஜசமுகத்தில்  போய்,  யூதருக்கு<Jews>  விரோதமாய்  அவன்  நினைத்த  அவனுடைய  பொல்லாத  யோசனை  அவனுடைய  தலையின்மேல்  திரும்பும்படி  கட்டளை  பிறப்பித்ததினாலே,  அவனையும்  அவன்  குமாரரையும்  மரத்திலே  தூக்கிப்போட்டார்கள்.  {Esth  9:25}

 

ஆகையினால்  அந்த  நாட்கள்  பூர்<Pur>  என்னும்  பேரினால்  பூரீம்<Purim>  என்னப்பட்டது;  அவன்  அந்த  நிருபத்தில்  எழுதியிருந்த  எல்லா  வார்த்தைகளினிமித்தமும்,  தாங்களே  இந்த  விஷயத்தில்  அநுபவித்தவைகளினிமித்தமும்,  தங்களுக்கு  நேரிட்டவைகளினிமித்தமும்,  {Esth  9:26}

 

யூதர்<Jews>  அதைத்  திட்டப்படுத்தி,  அந்த  இரண்டு  நாட்களைக்குறித்து  எழுதியிருக்கிறபடியே,  அவைகளை  வருஷந்தோறும்,  அவைகளின்  சரியான  காலத்திலே  ஆசரியாமலிருப்பதில்லை  என்பதையும்,  {Esth  9:27}

 

இந்த  நாட்கள்  எல்லாத்  தலைமுறைகளிலும்,  வம்சங்களிலும்,  தேசங்களிலும்,  ஊர்களிலும்  நினைவுகூரப்பட்டு  ஆசரிக்கப்படவேண்டும்  என்பதையும்,  இந்தப்  பூரீம்<Purim>  என்னும்  பண்டிகை  நாட்கள்  யூதருக்குள்ளே<Jews>  தவறிப்போகாமலும்,  அவைகளை  நினைவுகூருதல்  தங்கள்  சந்ததியாருக்குள்ளே  ஒழிந்துபோகாமலும்  இருக்கவேண்டும்  என்பதையும்,  தங்கள்மேலும்,  தங்கள்  சந்ததியார்மேலும்,  தங்கள்  மார்க்கத்தில்  அமையப்போகிற  மற்ற  யாவர்மேலும்  கடனாக  நியமித்துக்கொண்டார்கள்.  {Esth  9:28}

 

பூரீமைக்குறித்து<Purim>  எழுதியிருக்கிற  இந்த  இரண்டாம்  நிருபத்தைத்  திடப்படுத்தும்படிக்கு,  அபியாயேலின்<Abihail>  குமாரத்தியாகிய  எஸ்தர்<Esther>  என்னும்  ராஜாத்தியும்,  யூதனாகிய<Jew>  மொர்தெகாயும்<Mordecai>,  பின்னும்  மகா  உறுதியாய்  எழுதினார்கள்.  {Esth  9:29}

 

யூதனாகிய<Jew>  மொர்தெகாயும்<Mordecai>,  ராஜாத்தியாகிய  எஸ்தரும்<Esther>  யூதருக்கு<Jews>  உறுதிப்பாடுபண்ணினதும்,  அவர்கள்தானே  உபவாசத்தோடும்  அலறுதலோடும்  ஆசரிப்போம்  என்று  தங்கள்மேலும்  தங்கள்  சந்ததியார்மேலும்  கடனாக  நியமித்துக்கொண்டதுமான,  பூரீம்<Purim>  என்னப்பட்ட  இந்த  நாட்கள்  அவைகளின்  சரியான  காலங்களில்  ஆசரிக்கப்படும்  காரியத்தை  உறுதியாக்க,  {Esth  9:30}

 

அவன்  அகாஸ்வேருவின்<Ahasuerus>  ராஜ்யத்திலுள்ள  நூற்றிருபத்தேழு  நாடுகளிலும்  இருக்கிற  எல்லா  யூதருக்கும்<Jews>  சமாதானமும்  உண்மையுமான  வார்த்தைகளையுடைய  நிருபங்களை  அனுப்பினான்.  {Esth  9:31}

 

இப்படியே  எஸ்தரின்<Esther>  கட்டளையானது  பூரீம்<Purim>  நாட்களைப்பற்றின  இந்த  வர்த்தமானங்களைத்  திடப்படுத்தினது;  அது  ஒரு  புஸ்தகத்தில்  எழுதப்பட்டது.  {Esth  9:32}

 

ராஜாவாகிய  அகாஸ்வேரு<Ahasuerus>  தேசத்தின்மேலும்,  சமுத்திரத்திலுள்ள  தீவுகளின்மேலும்,  பகுதி  ஏற்படுத்தினான்.  {Esth  10:1}

 

வல்லமையும்  பராக்கிரமமுமான  அவனுடைய  எல்லாச்  செய்கைகளும்,  ராஜா  பெரியவனாக்கின  மொர்தெகாயினுடைய<Mordecai>  மேன்மையின்  விர்த்தாந்தமும்,  மேதியா<Media>  பெர்சியா<Persia>  ராஜாக்களின்  நடபடி  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  {Esth  10:2}

 

யூதனாகிய<Jew>  மொர்தெகாய்<Mordecai>  ராஜாவாகிய  அகாஸ்வேருவுக்கு<Ahasuerus>  இரண்டாவதானவனும்,  யூதருக்குள்<Jews>  பெரியவனும்,  தன்  திரளான  சகோதரருக்குப்  பிரியமானவனுமாயிருந்ததும்  அன்றித்  தன்  ஜனங்களுடைய  நன்மையை  நாடி,  தன்  குலத்தாருக்கெல்லாம்  சமாதானமுண்டாகப்  பேசுகிறவனுமாயிருந்தான்.  {Esth  10:3}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!