Sunday, January 12, 2020

நாகூம்

நினிவேயின்<Nineveh>  பாரம்.  எல்கோசானாகிய<Elkoshite>  நாகூமின்<Nahum>  தரிசனப்  புஸ்தகம்.  {Nah  1:1}

 

கர்த்தர்  எரிச்சலுள்ளவரும்  நீதியைச்  சரிக்கட்டுகிறவருமான  தேவன்;  கர்த்தர்  நீதியைச்  சரிக்கட்டுகிறவர்,  உக்கிரகோபமுள்ளவர்;  கர்த்தர்  தம்முடைய  சத்துருக்களுக்குப்  பிரதிபலன்  அளிக்கிறவர்,  அவர்  தம்முடைய  பகைஞருக்காகக்  கோபத்தை  வைத்துவைக்கிறவர்.  {Nah  1:2}

 

கர்த்தர்  நீடிய  சாந்தமும்,  மிகுந்த  வல்லமையுமுள்ளவர்;  அவர்களை  ஆக்கினையில்லாமல்  தப்புவிக்கமாட்டார்;  கர்த்தருடைய  வழி  சுழல்காற்றிலும்  பெருங்காற்றிலும்  இருக்கிறது;  மேகங்கள்  அவருடைய  பாதத்தூளாயிருக்கிறது.  {Nah  1:3}

 

அவர்  சமுத்திரத்தை  அதட்டி,  அதை  வற்றிப்போகப்பண்ணி,  சகல  ஆறுகளையும்  வறட்சியாக்குகிறார்;  பாசானும்<Bashan>  கர்மேலும்<Carmel>  சோர்ந்து,  லீபனோனின்<Lebanon>  செழிப்பு  வாடிப்போகும்.  {Nah  1:4}

 

அவர்  சமுகத்தில்  பர்வதங்கள்  அதிர்ந்து  மலைகள்  கரைந்துபோகும்;  அவர்  பிரசன்னத்தினால்  பூமியும்  பூச்சக்கரமும்  அதில்  குடியிருக்கிற  அனைவரோடும்  எடுபட்டுப்போம்.  {Nah  1:5}

 

அவருடைய  கோபத்துக்கு  முன்பாக  நிற்பவன்  யார்?  அவருடைய  உக்கிரகோபத்திலே  தரிப்பவன்  யார்?  அவருடைய  எரிச்சல்  அக்கினியைப்போல  இறைக்கப்படுகிறது;  அவராலே  கன்மலைகள்  பேர்க்கப்படும்.  {Nah  1:6}

 

கர்த்தர்  நல்லவர்,  இக்கட்டுநாளிலே  அரணான  கோட்டை;  தம்மை  நம்புகிறவர்களை  அறிந்திருக்கிறார்.  {Nah  1:7}

 

ஆனாலும்  நினிவேயின்<Nineveh>  ஸ்தானத்தை,  புரண்டுவருகிற  வெள்ளத்தினால்  சர்வசங்காரம்பண்ணுவார்;  இருள்  அவர்  சத்துருக்களைப்  பின்தொடரும்.  {Nah  1:8}

 

நீங்கள்  கர்த்தருக்கு  விரோதமாகச்  செய்ய  நினைக்கிறதென்ன?  அவர்  சர்வசங்காரம்பண்ணுவார்;  இடுக்கம்  மறுபடியும்  உண்டாகாது.  {Nah  1:9}

 

அவர்கள்  சன்னபின்னலாயிருக்கிற  முட்செடிகளுக்கு  ஒப்பாயிருக்கையிலும்,  தங்கள்  மதுபானத்தினால்  வெறிகொண்டிருக்கையிலும்,  அவர்கள்  முழுதும்  காய்ந்துபோன  செத்தையைப்போல  எரிந்துபோவார்கள்.  {Nah  1:10}

 

கர்த்தருக்கு  விரோதமாகப்  பொல்லாத  நினைவுகொண்டிருக்கிற  துராலோசனைக்காரன்  ஒருவன்  உன்னிடத்திலிருந்து  புறப்பட்டான்.  {Nah  1:11}

 

கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  அவர்கள்  சம்பூரணமடைந்து  அநேகராயிருந்தாலும்  அறுப்புண்டுபோவார்கள்;  அவன்  ஒழிந்துபோவான்;  உன்னை  நான்  சிறுமைப்படுத்தினேன்,  இனி  உன்னைச்  சிறுமைப்படுத்தாதிருப்பேன்.  {Nah  1:12}

 

இப்போதும்  நான்  உன்மேல்  இருக்கிற  அவன்  நுகத்தை  முறித்து,  உன்  கட்டுகளை  அறுப்பேன்.  {Nah  1:13}

 

உன்னைக்குறித்துக்  கர்த்தர்  கட்டளைகொடுத்திருக்கிறார்;  இனி  உன்  பேருக்கு  வித்துவிதைக்கப்படுவதில்லை;  உன்  தேவர்களின்  கோவிலில்  இருக்கிற  வெட்டப்பட்ட  விக்கிரகத்தையும்,  வார்க்கப்பட்ட  விக்கிரகத்தையும்  நான்  நிர்மூலம்பண்ணுவேன்;  நீ  கனவீனனானபடியால்  அதை  உனக்குப்  பிரேதக்குழியாக்குவேன்.  {Nah  1:14}

 

இதோ,  சமாதானத்தைக்  கூறுகிற  சுவிசேஷகனுடைய  கால்கள்  மலைகளின்மேல்  வருகிறது;  யூதாவே<Judah>,  உன்  பண்டிகைகளை  ஆசரி;  உன்  பொருத்தனைகளைச்  செலுத்து;  துஷ்டன்  இனி  உன்  வழியாய்க்  கடந்துவருவதில்லை,  அவன்  முழுவதும்  சங்கரிக்கப்பட்டான்.  {Nah  1:15}

 

சிதறடிக்கிறவன்  உன்  முகத்துக்கு  முன்பாக  வருகிறான்;  அரணைக்  காத்துக்கொள்,  வழியைக்  காவல்பண்ணு,  அரையைக்  கெட்டியாய்க்  கட்டிக்கொள்,  உன்  பெலனை  மிகவும்  ஸ்திரப்படுத்து.  {Nah  2:1}

 

வெறுமையாக்குகிறவர்கள்  அவர்களை  வெறுமையாக்கி,  அவர்களுடைய  திராட்சக்கொடிகளைக்  கெடுத்துப்போட்டாலும்,  கர்த்தர்  யாக்கோபின்<Jacob>  மகிமையைத்  திரும்பிவரப்பண்ணுவது  போல்,  இஸ்ரவேலின்<Israel>  மகிமையையும்  திரும்பிவரப்பண்ணுவார்.  {Nah  2:2}

 

அவனுடைய  பராக்கிரமசாலிகளின்  கேடகம்  இரத்தமயமாகும்;  அவனுடைய  யுத்தவீரர்  இரத்தாம்பரந்  தரித்துக்கொண்டிருக்கிறார்கள்;  அவன்  தன்னை  ஆயத்தம்பண்ணும்  நாளிலே  இரதங்கள்  ஜுவாலிக்கிற  கட்கங்களை  உடையதாயிருக்கும்;  ஈட்டிகள்  குலுங்கும்.  {Nah  2:3}

 

இரதங்கள்  தெருக்களில்  கடகடவென்றோடி,  வீதிகளில்  இடசாரி  வலசாரி  வரும்;  அவைகள்  தீவட்டிகளைப்போல  விளங்கி,  மின்னல்களைப்போல  வேகமாய்ப்  பறக்கும்.  {Nah  2:4}

 

அவன்  தன்  பிரபலஸ்தரை  நினைவுகூருவான்;  அவர்கள்  தங்கள்  நடைகளில்  இடறி,  அலங்கத்துக்கு  விரைந்து  ஓடுவார்கள்;  மறைவிடம்  ஆயத்தப்படுத்தப்படும்.  {Nah  2:5}

 

ஆறுகளின்  மதகுகள்  திறக்கப்படும்,  அரமனை  கரைந்துபோம்.  {Nah  2:6}

 

அவன்  சிறைப்பட்டுப்போகத்  தீர்மானமாயிற்று;  அவளுடைய  தாதிமார்கள்  தங்கள்  மார்பிலே  அடித்துக்கொண்டு,  புறாக்களைப்போலச்  சத்தமிட்டுக்  கூடப்போவார்கள்.  {Nah  2:7}

 

நினிவே<Nineveh>  பூர்வகாலமுதல்  தண்ணீர்த்  தடாகம்போல்  இருந்தது;  இப்போதோ  அவர்கள்  ஓடிப்போகிறார்கள்;  நில்லுங்கள்  நில்லுங்கள்  என்றாலும்,  திரும்பிப்பார்க்கிறவன்  இல்லை.  {Nah  2:8}

 

வெள்ளியைக்  கொள்ளையிடுங்கள்,  பொன்னையும்  கொள்ளையிடுங்கள்;  சம்பத்துக்கு  முடிவில்லை;  இச்சிக்கப்படத்தக்க  சகலவித  பொருள்களும்  இருக்கிறது.  {Nah  2:9}

 

அவள்  வெறுமையும்  வெளியும்  பாழுமாவாள்;  மனம்  கரைந்துபோகிறது;  முழங்கால்கள்  தள்ளாடுகிறது;  எல்லா  இடுப்புகளிலும்  மிகுந்த  வேதனை  உண்டு;  எல்லாருடைய  முகங்களும்  கருகிப்போகிறது.  {Nah  2:10}

 

சிங்கங்களின்  வாசஸ்தலம்  எங்கே?  பாலசிங்கம்  இரைதின்கிற  இடம்  எங்கே?  கிழச்சிங்கமாகிய  சிங்கமும்,  சிங்கக்குட்டிகளும்  பயப்படுத்துவாரில்லாமல்  சஞ்சரிக்கிற  ஸ்தானம்  எங்கே?  {Nah  2:11}

 

சிங்கம்  தன்  குட்டிகளுக்குத்  தேவையானதைப்  பீறி,  தன்  பெண்  சிங்கங்களுக்கு  வேண்டியதைத்  தொண்டையைப்  பிடித்துக்  கொன்று,  இரைகளினால்  தன்  கெபிகளையும்,  பீறிப்போட்டவைகளினால்  தன்  தாபரங்களையும்  நிரப்பிற்று.  {Nah  2:12}

 

இதோ,  நான்  உனக்கு  விரோதமாக  வந்து,  இரதங்களைப்  புகையெழும்ப  எரித்துப்போடுவேன்;  பட்டயம்  உன்  பாலசிங்கங்களைப்  பட்சிக்கும்;  நீ  இரைக்காகப்  பிடிக்கும்  வேட்டையைத்  தேசத்தில்  அற்றுப்போகப்பண்ணுவேன்;  உன்  ஸ்தானாபதிகளின்  சத்தம்  இனிக்  கேட்கப்படுவதில்லை  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Nah  2:13}

 

இரத்தப்பழிகளின்  நகரத்திற்கு  ஐயோ!  அது  வஞ்சகத்தினாலும்  கொடுமையினாலும்  நிறைந்திருக்கிறது;  கொள்ளை  ஓயாமல்  நடக்கிறது.  {Nah  3:1}

 

சவுக்குகளின்  ஓசையும்,  உருளைகளின்  அதிர்ச்சியும்,  குதிரைகளின்  பாய்ச்சலும்,  இரதங்கள்  கடகடவென்று  ஓடுகிற  சத்தமும்,  {Nah  3:2}

 

வீரர்  குதிரை  ஏறுகிறதும்,  பட்டயங்கள்  துலங்குகிறதும்,  ஈட்டிகள்  மின்னுகிறதும்,  வெட்டுண்டவர்களின்  திரளும்,  பிரேதங்களின்  ஏராளமும்  அங்கே  உண்டாயிருக்கும்;  பிணங்களுக்குத்  தொகையில்லை;  அவர்கள்  பிணங்களில்  இடறிவிழுகிறார்கள்.  {Nah  3:3}

 

தன்  வேசித்தனங்களினால்  ஜாதிகளையும்,  தன்  சூனியங்களினால்  வம்சங்களையும்  விற்கிற  மகா  சூனியக்காரியும்  ரூபவதியுமாயிருக்கிற  வேசியினுடைய  திரளான  வேசித்தனங்களினிமித்தம்,  {Nah  3:4}

 

இதோ,  நான்  உனக்கு  விரோதமாக  வந்து  உன்  வஸ்திரத்து  ஓரங்களை  உன்  முகமட்டும்  தூக்கியெடுத்து,  ஜாதிகளுக்கு  உன்  நிர்வாணத்தையும்,  ராஜ்யங்களுக்கு  உன்  மானத்தையும்  தெரியப்பண்ணி,  {Nah  3:5}

 

உன்மேல்  தீட்டானவைகளை  எறிந்து,  உன்னைக்  கனவீனப்படுத்தி,  உன்னை  வேடிக்கையாக்கிப்போடுவேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Nah  3:6}

 

அப்பொழுது  உன்னைக்  காண்கிறவனெல்லாம்  நினிவே<Nineveh>  பாழாய்ப்போயிற்று,  அதற்காகப்  புலம்புகிறவர்  யார்?  ஆறுதல்  சொல்லுகிறவர்களை  உனக்கு  எங்கே  தேடுவேனென்று  சொல்லி,  உன்னைவிட்டோடிப்  போவான்.  {Nah  3:7}

 

நதிகள்  மத்தியிலிருந்த  நோ<No>  அம்மோனைப்பார்க்கிலும்<Ammon>  நீ  சிரேஷ்டமோ?  அதைச்  சுற்றிலும்  தண்ணீர்  இருந்தது;  சமுத்திரம்  அதின்  அரணும்,  சமுத்திரக்கால்  அதின்  மதிலுமாயிருந்தது.  {Nah  3:8}

 

எத்தியோப்பியாவும்<Ethiopia>  எகிப்தும்<Egypt>  எண்ணிறந்த  சேனையால்  அதற்குப்  பெலனாக  இருந்தது;  பூத்தும்<Put>  லூபீமும்<Lubim>  அதற்குச்  சகாயமாயிருந்தது.  {Nah  3:9}

 

ஆயினும்  அவள்  குடிவிலக்கப்பட்டுச்  சிறையிருப்பிலே  கொண்டுபோகப்பட்டாள்;  அவள்  குழந்தைகள்  எல்லா  வீதிகளின்  முகனைகளிலும்  மோதியடிக்கப்பட்டார்கள்;  அவளுடைய  கனவான்கள்பேரில்  சீட்டுப்  போட்டார்கள்;  அவளுடைய  பெரியவர்கள்  எல்லாரும்  சங்கிலிகளால்  கட்டப்பட்டார்கள்.  {Nah  3:10}

 

நீயும்  வெறிகொண்டு  ஒளித்துக்கொள்வாய்;  நீயும்  உன்  சத்துருவுக்குத்  தப்ப  அரணான  கோட்டையைத்  தேடுவாய்.  {Nah  3:11}

 

உன்  அரண்களெல்லாம்  முதல்  பழுக்கும்  பழங்களுள்ள  அத்திமரங்களைப்போல்  இருக்கும்;  அவைகள்  குலுக்கப்பட்டால்  அவைகளின்  பழம்  தின்கிறவன்  வாயிலே  விழும்.  {Nah  3:12}

 

இதோ,  உன்  நடுவில்  இருக்கிற  ஜனங்கள்  பேடிகள்;  உன்  தேசத்தின்  வாசல்கள்  உன்  சத்துருவுக்குமுன்  திறவுண்டுபோகும்;  அக்கினி  உன்  தாழ்ப்பாள்களைப்  பட்சிக்கும்.  {Nah  3:13}

 

முற்றிகைக்குத்  தண்ணீர்  மொண்டு  வை,  உன்  அரண்களைப்  பலப்படுத்து;  சேற்றிலே  போய்க்  களிமண்ணை  மிதி,  சூளையைக்  கெட்டிப்படுத்து.  {Nah  3:14}

 

அங்கே  அக்கினி  உன்னைப்  பட்சிக்கும்,  பட்டயம்  உன்னைச்  சங்கரிக்கும்;  அது  பச்சைக்கிளிகளைப்போல்  உன்னைப்  பட்சித்துப்போடும்;  உன்னைப்  பச்சைக்கிளிகளத்தனையாக்கிக்கொள்,  உன்னை  வெட்டுக்கிளிகளத்தனையாக்கிக்கொள்.  {Nah  3:15}

 

உன்  வர்த்தகரை  வானத்து  நட்சத்திரங்களிலும்  அதிகமாக்கினாய்;  இந்தப்  பச்சைக்கிளிகள்  பரவிப்  பறந்துபோகும்.  {Nah  3:16}

 

உன்  மகுடவர்த்தனர்  வெட்டுக்கிளிகளுக்கும்,  உன்  தளகர்த்தர்  பெருங்கிளிகளுக்கும்  சமானமாயிருக்கிறார்கள்;  அவைகள்  குளிர்ச்சியான  நாளில்  வேலிகளில்  பாளையமிறங்கி,  சூரியன்  உதித்தமாத்திரத்தில்  பறந்துபோம்;  பின்பு  அவைகள்  இருக்கும்  இடம்  இன்னதென்று  தெரியாது.  {Nah  3:17}

 

அசீரியா<Assyria>  ராஜாவே,  உன்  மேய்ப்பர்கள்  உறங்குவார்கள்;  உன்  பிரபலஸ்தர்  படுத்திருப்பார்கள்;  உன்  ஜனங்கள்  பர்வதங்களின்மேல்  சிதறியிருக்கிறார்கள்,  அவைகளைக்  கூட்டிச்  சேர்ப்பவன்  இல்லை.  {Nah  3:18}

 

உன்  நொறுங்குதலுக்குப்  பரிகாரம்  இல்லை;  உன்  காயம்  கொடியது;  உன்  செய்தியைக்  கேட்பவர்  யாவரும்  உன்பேரில்  கைகொட்டுவார்கள்;  உன்  பொல்லாப்பு  எந்நேரமும்  யார்பேரிலேதான்  பாயாமற்போயிற்று?  {Nah  3:19}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!