Wednesday, December 25, 2019

தீத்து

தேவனுடைய  ஊழியக்காரனும்,  இயேசுகிறிஸ்துவினுடைய<Jesus  Christ>  அப்போஸ்தலனுமாகிய  பவுல்<Paul>,  பொதுவான  விசுவாசத்தின்படி  உத்தம  குமாரனாகிய  தீத்துவுக்கு<Titus>  எழுதுகிறதாவது:  {Titus  1:1}

 

பிதாவாகிய  தேவனாலும்,  நம்முடைய  இரட்சகராயிருக்கிற  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினாலும்<Jesus  Christ>,  கிருபையும்  இரக்கமும்  சமாதானமும்  உண்டாவதாக.  {Titus  1:2}

 

பொய்யுரையாத  தேவன்  ஆதிகாலமுதல்  நித்திய  ஜீவனைக்குறித்து  வாக்குத்தத்தம்பண்ணி,  அதைக்குறித்த  நம்பிக்கையைப்பற்றி  தேவபக்திக்கேதுவான  சத்தியத்தை  அறிகிற  அறிவும்  விசுவாசமும்  தேவனால்  தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு  உண்டாகும்படி,  {Titus  1:3}

 

ஏற்றகாலங்களிலே  நம்முடைய  இரட்சகராகிய  தேவனுடைய  கட்டளையின்படி  எனக்கு  ஒப்புவிக்கப்பட்ட  பிரசங்கத்தினாலே  தமது  வார்த்தையை  வெளிப்படுத்தினார்.  {Titus  1:4}

 

நீ  குறைவாயிருக்கிறவைகளை  ஒழுங்குபடுத்தும்படிக்கும்,  நான்  உனக்குக்  கட்டளையிட்டபடியே,  பட்டணங்கள்தோறும்  மூப்பரை  ஏற்படுத்தும்படிக்கும்,  உன்னைக்  கிரேத்தாதீவிலே<Crete>  விட்டுவந்தேனே.  {Titus  1:5}

 

குற்றஞ்சாட்டப்படாதவனும்,  ஒரே  மனைவியையுடைய  புருஷனும்,  துன்மார்க்கரென்றும்  அடங்காதவர்களென்றும்  பேரெடுக்காத  விசுவாசமுள்ள  பிள்ளைகளை  உடையவனுமாகிய  ஒருவனிருந்தால்  அவனையே  ஏற்படுத்தலாம்.  {Titus  1:6}

 

ஏனெனில்,  கண்காணியானவன்  தேவனுடைய  உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய்,  குற்றஞ்சாட்டப்படாதவனும்,  தன்  இஷ்டப்படி  செய்யாதவனும்,  முற்கோபமில்லாதவனும்,  மதுபானப்பிரியமில்லாதவனும்,  அடியாதவனும்,  இழிவான  ஆதாயத்தை  இச்சியாதவனும்,  {Titus  1:7}

 

அந்நியரை  உபசரிக்கிறவனும்,  நல்லோர்மேல்  பிரியமுள்ளவனும்,  தெளிந்த  புத்தியுள்ளவனும்,  நீதிமானும்,  பரிசுத்தவானும்,  இச்சையடக்கமுள்ளவனும்,  {Titus  1:8}

 

ஆரோக்கியமான  உபதேசத்தினாலே  புத்திசொல்லவும்,  எதிர்பேசுகிறவர்களைக்  கண்டனம்  பண்ணவும்  வல்லவனுமாயிருக்கும்படி,  தான்  போதிக்கப்பட்டதற்கேற்ற  உண்மையான  வசனத்தை  நன்றாய்ப்  பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும்.  {Titus  1:9}

 

அநேகர்,  விசேஷமாய்  விருத்தசேதனமுள்ளவர்கள்,  அடங்காதவர்களும்,  வீண்பேச்சுக்காரரும்,  மனதை  மயக்குகிறவர்களுமாயிருக்கிறார்கள்.  {Titus  1:10}

 

அவர்களுடைய  வாயை  அடக்கவேண்டும்;  அவர்கள்  இழிவான  ஆதாயத்துக்காகத்  தகாதவைகளை  உபதேசித்து,  முழுக்குடும்பங்களையும்  கவிழ்த்துப்போடுகிறார்கள்.  {Titus  1:11}

 

கிரேத்தாதீவார்<Cretians>  ஓயாப்பொய்யர்,  துஷ்டமிருகங்கள்,  பெருவயிற்றுச்  சோம்பேறிகள்  என்று  அவர்களிலொருவனாகிய  அவர்கள்  தீர்க்கதரிசியானவனே  சொல்லியிருக்கிறான்.  {Titus  1:12}

 

இந்தச்  சாட்சி  உண்மையாயிருக்கிறது;  இது  முகாந்தரமாக,  அவர்கள்  யூதருடைய<Jewish>  கட்டுக்கதைகளுக்கும்,  சத்தியத்தை  விட்டு  விலகுகிற  மனுஷருடைய  கற்பனைகளுக்கும்  செவிகொடாமல்,  {Titus  1:13}

 

விசுவாசத்திலே  ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி,  நீ  அவர்களைக்  கண்டிப்பாய்க்  கடிந்துகொள்.  {Titus  1:14}

 

சுத்தமுள்ளவர்களுக்குச்  சகலமும்  சுத்தமாயிருக்கும்;  அசுத்தமுள்ளவர்களுக்கும்  அவிசுவாசமுள்ளவர்களுக்கும்  ஒன்றும்  சுத்தமாயிராது;  அவர்களுடைய  புத்தியும்  மனச்சாட்சியும்  அசுத்தமாயிருக்கும்.  {Titus  1:15}

 

அவர்கள்  தேவனை  அறிந்திருக்கிறோமென்று  அறிக்கைபண்ணுகிறார்கள்,  கிரியைகளினாலோ  அவரை  மறுதலிக்கிறார்கள்;  அவர்கள்  அருவருக்கப்படத்தக்கவர்களும்,  கீழ்ப்படியாதவர்களும்,  எந்த  நற்கிரியையுஞ்செய்ய  ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.  {Titus  1:16}

 

நீயோ  ஆரோக்கியமான  உபதேசத்துக்கேற்றவைகளைப்  பேசு.  {Titus  2:1}

 

முதிர்வயதுள்ள  புருஷர்கள்  ஜாக்கிரதையுள்ளவர்களும்,  நல்லொழுக்கமுள்ளவர்களும்,  தெளிந்த  புத்தியுள்ளவர்களும்,  விசுவாசத்திலும்  அன்பிலும்  பொறுமையிலும்  ஆரோக்கியமுள்ளவர்களுமாயிருக்கும்படி  புத்திசொல்லு.  {Titus  2:2}

 

முதிர்வயதுள்ள  ஸ்திரீகளும்  அப்படியே  பரிசுத்தத்துக்கேற்றவிதமாய்  நடக்கிறவர்களும்,  அவதூறுபண்ணாதவர்களும்,  மதுபானத்துக்கு  அடிமைப்படாதவர்களுமாயிருக்கவும்,  {Titus  2:3}

 

தேவவசனம்  தூஷிக்கப்படாதபடிக்குப்  பாலிய  ஸ்திரீகள்  தங்கள்  புருஷரிடத்திலும்,  தங்கள்  பிள்ளைகளிடத்திலும்  அன்புள்ளவர்களும்,  {Titus  2:4}

 

தெளிந்த  புத்தியுள்ளவர்களும்,  கற்புள்ளவர்களும்,  வீட்டில்  தரித்திருக்கிறவர்களும்,  நல்லவர்களும்,  தங்கள்  புருஷருக்குக்  கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி,  அவர்களுக்குப்  படிப்பிக்கத்தக்க  நற்காரியங்களைப்  போதிக்கிறவர்களுமாயிருக்கவும்  முதிர்வயதுள்ள  ஸ்திரீகளுக்குப்  புத்திசொல்லு.  {Titus  2:5}

 

அப்படியே,  பாலிய  புருஷரும்  தெளிந்த  புத்தியுள்ளவர்களாயிருக்கவும்  நீ  புத்திசொல்லி,  {Titus  2:6}

 

நீயே  எல்லாவற்றிலும்  உன்னை  நற்கிரியைகளுக்கு  மாதிரியாகக்  காண்பித்து,  {Titus  2:7}

 

எதிரியானவன்  உங்களைக்குறித்துப்  பொல்லாங்கு  சொல்லுகிறதற்கு  ஒன்றுமில்லாமல்  வெட்கப்படத்தக்கதாக,  உபதேசத்திலே  விகற்பமில்லாதவனும்,  நல்லொழுக்கமுள்ளவனும்  குற்றம்பிடிக்கப்படாத  ஆரோக்கியமான  வசனத்தைப்  பேசுகிறவனுமாயிருப்பாயாக.  {Titus  2:8}

 

வேலைக்காரர்  நம்முடைய  இரட்சகராகிய  தேவனுடைய  உபதேசத்தை  எல்லாவற்றிலும்  அலங்கரிக்கத்தக்கதாக,  {Titus  2:9}

 

தங்கள்  எஜமான்களுக்குக்  கீழ்ப்படிந்திருந்து  எதிர்த்துப்பேசாமல்,  எல்லாவற்றிலும்  பிரியமுண்டாக  நடந்துகொள்ளவும்,  திருடாமலிருந்து,  சகலவிதத்திலும்  நல்லுண்மையைக்  காண்பிக்கவும்  புத்திசொல்லு.  {Titus  2:10}

 

ஏனெனில்  எல்லா  மனுஷருக்கும்  இரட்சிப்பை  அளிக்கத்தக்க  தேவகிருபையானது  பிரசன்னமாகி,  {Titus  2:11}

 

நாம்  அவபக்தியையும்  லௌகிக  இச்சைகளையும்  வெறுத்து,  தெளிந்த  புத்தியும்  நீதியும்  தேவபக்தியும்  உள்ளவர்களாய்  இவ்வுலகத்திலே  ஜீவனம்பண்ணி,  {Titus  2:12}

 

நாம்  நம்பியிருக்கிற  ஆனந்த  பாக்கியத்துக்கும்,  மகா  தேவனும்  நமது  இரட்சகருமாகிய  இயேசுகிறிஸ்துவினுடைய<Jesus  Christ>  மகிமையின்  பிரசன்னமாகுதலுக்கும்  எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி  நமக்குப்  போதிக்கிறது.  {Titus  2:13}

 

அவர்  நம்மைச்  சகல  அக்கிரமங்களினின்று  மீட்டுக்கொண்டு,  தமக்குரிய  சொந்த  ஜனங்களாகவும்,  நற்கிரியைகளைச்  செய்யப்  பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும்  நம்மைச்  சுத்திகரிக்கும்படி,  நமக்காகத்  தம்மைத்தாமே  ஒப்புக்கொடுத்தார்.  {Titus  2:14}

 

இவைகளை  நீ  பேசி,  போதித்து,  சகல  அதிகாரத்தோடும்  கடிந்துகொள்.  ஒருவனும்  உன்னை  அசட்டைபண்ண  இடங்கொடாதிருப்பாயாக.  {Titus  2:15}

 

துரைத்தனங்களுக்கும்  அதிகாரங்களுக்கும்  கீழ்ப்படிந்து  அடங்கியிருக்கவும்,  சகலவிதமான  நற்கிரியைகளையும்  செய்ய  ஆயத்தமாயிருக்கவும்,  {Titus  3:1}

 

ஒருவனையும்  தூஷியாமலும்,  சண்டை  பண்ணாமலும்,  பொறுமையுள்ளவர்களாய்  எல்லா  மனுஷருக்கும்  சாந்தகுணத்தைக்  காண்பிக்கவும்  அவர்களுக்கு  நினைப்பூட்டு.  {Titus  3:2}

 

ஏனெனில்,  முற்காலத்திலே  நாமும்  புத்தியீனரும்,  கீழ்ப்படியாதவர்களும்,  வழிதப்பி  நடக்கிறவர்களும்,  பலவித  இச்சைகளுக்கும்  இன்பங்களுக்கும்  அடிமைப்பட்டவர்களும்,  துர்க்குணத்தோடும்  பொறாமையோடும்  ஜீவனம்பண்ணுகிறவர்களும்,  பகைக்கப்படத்தக்கவர்களும்,  ஒருவரையொருவர்  பகைக்கிறவர்களுமாயிருந்தோம்.  {Titus  3:3}

 

நம்முடைய  இரட்சகராகிய  தேவனுடைய  தயையும்  மனுஷர்மேலுள்ள  அன்பும்  பிரசன்னமானபோது,  {Titus  3:4}

 

நாம்  செய்த  நீதியின்  கிரியைகளினிமித்தம்  அவர்  நம்மை  இரட்சியாமல்,  தமது  இரக்கத்தின்படியே,  மறுஜென்ம  முழுக்கினாலும்,  பரிசுத்த  ஆவியினுடைய  புதிதாக்குதலினாலும்  நம்மை  இரட்சித்தார்.  {Titus  3:5}

 

தமது  கிருபையினாலே  நாம்  நீதிமான்களாக்கப்பட்டு,  நித்திய  ஜீவனுண்டாகும்  என்கிற  நம்பிக்கையின்படி  சுதந்தரராகத்தக்கதாக,  {Titus  3:6}

 

அவர்  நமது  இரட்சகராகிய  இயேசுகிறிஸ்து<Jesus  Christ>  மூலமாய்,  அந்தப்  பரிசுத்தஆவியை  நம்மேல்  சம்பூரணமாய்ப்  பொழிந்தருளினார்.  {Titus  3:7}

 

இந்த  வார்த்தை  உண்மையுள்ளது;  தேவனிடத்தில்  விசுவாசமானவர்கள்  நற்கிரியைகளைச்  செய்ய  ஜாக்கிரதையாயிருக்கும்படி  நீ  இவைகளைக்குறித்துத்  திட்டமாய்ப்  போதிக்கவேண்டுமென்று  விரும்புகிறேன்;  இவைகளே  நன்மையும்  மனுஷருக்குப்  பிரயோஜனமுமானவைகள்.  {Titus  3:8}

 

புத்தியீனமான  தர்க்கங்களையும்,  வம்சவரலாறுகளையும்,  சண்டைகளையும்,  நியாயப்பிரமாணத்தைக்குறித்து  உண்டாகிற  வாக்குவாதங்களையும்  விட்டு  விலகு;  அவைகள்  அப்பிரயோஜனமும்  வீணுமாயிருக்கும்.  {Titus  3:9}

 

வேதப்புரட்டனாயிருக்கிற  ஒருவனுக்கு  நீ  இரண்டொருதரம்  புத்தி  சொன்னபின்பு  அவனைவிட்டு  விலகு.  {Titus  3:10}

 

அப்படிப்பட்டவன்  நிலைதவறி,  தன்னிலேதானே  ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப்  பாவஞ்செய்கிறவனென்று  அறிந்திருக்கிறாயே.  {Titus  3:11}

 

நான்  அர்த்தெமாவையாவது<Artemas>  தீகிக்குவையாவது<Tychicus>  உன்னிடத்தில்  அனுப்பும்போது  நீ  நிக்கொப்போலிக்கு<Nicopolis>  என்னிடத்தில்  வர  ஜாக்கிரதைப்படு;  மாரிகாலத்திலே  அங்கே  தங்கும்படி  தீர்மானித்திருக்கிறேன்.  {Titus  3:12}

 

நியாயசாஸ்திரியாகிய  சேனாவுக்கும்<Zenas>  அப்பொல்லோவுக்கும்<Apollos>  ஒரு  குறைவுமில்லாதபடிக்கு  அவர்களை  ஜாக்கிரதையாய்  விசாரித்து  வழிவிட்டனுப்பு.  {Titus  3:13}

 

நம்முடையவர்களும்  கனியற்றவர்களாயிராதபடி  குறைவுகளை  நீக்குகிறதற்கேதுவாக  நற்கிரியைகளைச்  செய்யப்பழகட்டும்.  {Titus  3:14}

 

என்னோடிருக்கிற  யாவரும்  உனக்கு  வாழ்த்துதல்  சொல்லுகிறார்கள்.  விசுவாசத்திலே  நம்மைச்  சிநேகிக்கிறவர்களுக்கு  வாழ்த்துதல்  சொல்லு.  கிருபையானது  உங்களனைவரோடுங்கூட  இருப்பதாக.  ஆமென்.  {Titus  3:15}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!