Friday, November 01, 2019

அப்போஸ்தலருடைய நடபடிகள்

தெயோப்பிலுவே<Theophilus>,  இயேசுவானவர்<Jesus>  தாம்  தெரிந்துகொண்ட  அப்போஸ்தலருக்குப்  பரிசுத்தஆவியினாலே  கட்டளையிட்ட  பின்பு,  {Acts  1:1}

 

அவர்  எடுத்துக்கொள்ளப்பட்ட  நாள்வரைக்கும்  செய்யவும்  உபதேசிக்கவும்  தொடங்கின  எல்லாவற்றையுங்குறித்து,  முதலாம்  பிரபந்தத்தை  உண்டுபண்ணினேன்.  {Acts  1:2}

 

அவர்  பாடுபட்டபின்பு,  நாற்பது  நாளளவும்  அப்போஸ்தலருக்குத்  தரிசனமாகி,  தேவனுடைய  ராஜ்யத்துக்குரியவைகளை  அவர்களுடனே  பேசி,  அநேகம்  தெளிவான  திருஷ்டாந்தங்களினாலே  அவர்களுக்குத்  தம்மை  உயிரோடிருக்கிறவராகக்  காண்பித்தார்.  {Acts  1:3}

 

அன்றியும்,  அவர்  அவர்களுடனே  கூடிவந்திருக்கும்போது,  அவர்களை  நோக்கி:  யோவான்<John>  ஜலத்தினாலே  ஞானஸ்நானங்  கொடுத்தான்;  நீங்கள்  சில  நாளுக்குள்ளே  பரிசுத்தஆவியினாலே  ஞானஸ்நானம்  பெறுவீர்கள்.  {Acts  1:4}

 

ஆகையால்  நீங்கள்  எருசலேமை<Jerusalem>  விட்டுப்  போகாமல்  என்னிடத்தில்  கேள்விப்பட்ட  பிதாவின்  வாக்குத்தத்தம்  நிறைவேறக்  காத்திருங்கள்  என்று  கட்டளையிட்டார்.  {Acts  1:5}

 

அப்பொழுது  கூடிவந்திருந்தவர்கள்  அவரை  நோக்கி:  ஆண்டவரே,  இக்காலத்திலா  ராஜ்யத்தை  இஸ்ரவேலுக்குத்<Israel>  திரும்பக்  கொடுப்பீர்  என்று  கேட்டார்கள்.  {Acts  1:6}

 

அதற்கு  அவர்:  பிதாவானவர்  தம்முடைய  ஆதீனத்திலே  வைத்திருக்கிற  காலங்களையும்  வேளைகளையும்  அறிகிறது  உங்களுக்கு  அடுத்ததல்ல.  {Acts  1:7}

 

பரிசுத்தஆவி  உங்களிடத்தில்  வரும்போது  நீங்கள்  பெலனடைந்து,  எருசலேமிலும்<Jerusalem>,  யூதேயா<Judaea>  முழுவதிலும்,  சமாரியாவிலும்<Samaria>,  பூமியின்  கடைசிபரியந்தமும்,  எனக்குச்  சாட்சிகளாயிருப்பீர்கள்  என்றார்.  {Acts  1:8}

 

இவைகளை  அவர்  சொன்னபின்பு,  அவர்கள்  பார்த்துக்கொண்டிருக்கையில்,  உயர  எடுத்துக்கொள்ளப்பட்டார்;  அவர்கள்  கண்களுக்கு  மறைவாக  ஒரு  மேகம்  அவரை  எடுத்துக்கொண்டது.  {Acts  1:9}

 

அவர்  போகிறபோது  அவர்கள்  வானத்தை  அண்ணாந்து  பார்த்துக்கொண்டிருக்கையில்,  இதோ,  வெண்மையான  வஸ்திரந்தரித்தவர்கள்  இரண்டுபேர்  அவர்களருகே  நின்று:  {Acts  1:10}

 

கலிலேயராகிய<Galilee>  மனுஷரே,  நீங்கள்  ஏன்  வானத்தை  அண்ணாந்துபார்த்து  நிற்கிறீர்கள்?  உங்களிடத்தினின்று  வானத்துக்கு  எடுத்துக்கொள்ளப்பட்ட  இந்த  இயேசுவானவர்<Jesus>  எப்படி  உங்கள்  கண்களுக்கு  முன்பாக  வானத்துக்கு  எழுந்தருளிப்போனாரோ,  அப்படியே  மறுபடியும்  வருவார்  என்றார்கள்.  {Acts  1:11}

 

அப்பொழுது  அவர்கள்  எருசலேமுக்குச்<Jerusalem>  சமீபமாய்  ஒரு  ஓய்வுநாள்  பிரயாண  தூரத்திலிருக்கிற  ஒலிவமலை<Olivet>  என்னப்பட்ட  மலையிலிருந்து  எருசலேமுக்குத்<Jerusalem>  திரும்பிப்போனார்கள்.  {Acts  1:12}

 

அவர்கள்  அங்கே  வந்தபோது  மேல்வீட்டில்  ஏறினார்கள்;  அதில்  பேதுருவும்<Peter>,  யாக்கோபும்<James>,  யோவானும்<John>,  அந்திரேயாவும்<Andrew>,  பிலிப்பும்<Philip>,  தோமாவும்<Thomas>,  பற்தொலொமேயும்<Bartholomew>,  மத்தேயும்<Matthew>,  அல்பேயுவின்<Alphaeus>  குமாரனாகிய  யாக்கோபும்<James>,  செலோத்தே<Zelotes>  என்னப்பட்ட  சீமோனும்<Simon>,  யாக்கோபின்<James>  சகோதரனாகிய  யூதாவும்<Judas>  தங்கியிருந்தார்கள்.  {Acts  1:13}

 

அங்கே  இவர்களெல்லாரும்,  ஸ்திரீகளோடும்  இயேசுவின்<Jesus>  தாயாகிய  மரியாளோடும்<Mary>,  அவருடைய  சகோதரரோடுங்கூட  ஒருமனப்பட்டு,  ஜெபத்திலும்  வேண்டுதலிலும்  தரித்திருந்தார்கள்.  {Acts  1:14}

 

அந்நாட்களிலே,  சீஷர்களில்  ஏறக்குறைய  நூற்றிருபதுபேர்  கூடியிருந்தபோது,  அவர்கள்  நடுவிலே  பேதுரு<Peter>  எழுந்து  நின்று:  {Acts  1:15}

 

சகோதரரே,  இயேசுவைப்<Jesus>  பிடித்தவர்களுக்கு  வழிகாட்டின  யூதாசைக்குறித்துப்<Judas>  பரிசுத்தஆவி  தாவீதின்<David>  வாக்கினால்  முன்  சொன்ன  வேதவாக்கியம்  நிறைவேற  வேண்டியதாயிருந்தது.  {Acts  1:16}

 

அவன்  எங்களில்  ஒருவனாக  எண்ணப்பட்டு,  இந்த  ஊழியத்திலே  பங்கு  பெற்றவனாயிருந்தான்.  {Acts  1:17}

 

அநீதத்தின்  கூலியினால்  அவன்  ஒரு  நிலத்தைச்  சம்பாதித்து,  தலைகீழாக  விழுந்தான்;  அவன்  வயிறுவெடித்து,  குடல்களெல்லாம்  சரிந்துபோயிற்று.  {Acts  1:18}

 

இது  எருசலேமிலுள்ள<Jerusalem>  குடிகள்  யாவருக்கும்  தெரிந்திருக்கிறது;  அதினாலே  அந்த  நிலம்  அவர்களுடைய  பாஷையிலே  இரத்தநிலம்<The  field  of  blood>  என்று  அர்த்தங்கொள்ளும்  அக்கெல்தமா<Aceldama>  என்னப்பட்டிருக்கிறது.  {Acts  1:19}

 

சங்கீத  புஸ்தகத்திலே:  அவனுடைய  வாசஸ்தலம்  பாழாகக்கடவது,  ஒருவனும்  அதில்  வாசம்பண்ணாதிருப்பானாக  என்றும்;  அவனுடைய  கண்காணிப்பை  வேறொருவன்  பெறக்கடவன்  என்றும்  எழுதியிருக்கிறது.  {Acts  1:20}

 

ஆதலால்,  யோவான்<John>  ஞானஸ்நானங்கொடுத்த  நாள்முதற்கொண்டு,  கர்த்தராகிய  இயேசுவானவர்<Jesus>  நம்மிடத்திலிருந்து  உயர  எடுத்துக்கொள்ளப்பட்ட  நாள்வரைக்கும்,  {Acts  1:21}

 

அவர்  நம்மிடத்தில்  சஞ்சரித்திருந்த  காலங்களிலெல்லாம்  எங்களுடனேகூட  இருந்த  மனுஷர்களில்  ஒருவன்  அவர்  உயிரோடெழுந்ததைக்குறித்து,  எங்களுடனேகூடச்  சாட்சியாக  ஏற்படுத்தப்படவேண்டும்  என்றான்.  {Acts  1:22}

 

அப்பொழுது  அவர்கள்  யுஸ்து<Justus>  என்னும்  மறுநாமமுள்ள  பர்சபா<Barsabas>  என்னப்பட்ட  யோசேப்பும்<Joseph>  மத்தியாவும்<Matthias>  ஆகிய  இவ்விரண்டுபேரையும்  நிறுத்தி:  {Acts  1:23}

 

எல்லாருடைய  இருதயங்களையும்  அறிந்திருக்கிற  கர்த்தாவே,  யூதாஸ்<Judas>  என்பவன்  தனக்குரிய  இடத்துக்குப்  போகும்படி  இழந்துபோன  இந்த  ஊழியத்திலும்  இந்த  அப்போஸ்தலப்பட்டத்திலும்  பங்கு  பெறுவதற்காக,  {Acts  1:24}

 

இவ்விரண்டு  பேரில்  தேவரீர்  தெரிந்துகொண்டவனை  எங்களுக்குக்  காண்பித்தருளும்  என்று  ஜெபம்பண்ணி;  {Acts  1:25}

 

பின்பு,  அவர்களைக்குறித்துச்  சீட்டுப்போட்டார்கள்;  சீட்டு  மத்தியாவின்பேருக்கு<Matthias>  விழுந்தது;  அப்பொழுது  அவன்  பதினொரு  அப்போஸ்தலருடனே  சேர்த்துக்கொள்ளப்பட்டான்.  {Acts  1:26}

 

பெந்தெகொஸ்தே  என்னும்  நாள்  வந்தபோது,  அவர்களெல்லாரும்  ஒருமனப்பட்டு  ஓரிடத்திலே  வந்திருந்தார்கள்.  {Acts  2:1}

 

அப்பொழுது  பலத்த  காற்று  அடிக்கிற  முழக்கம்போல,  வானத்திலிருந்து  சடிதியாய்  ஒரு  முழக்கமுண்டாகி,  அவர்கள்  உட்கார்ந்திருந்த  வீடு  முழுவதையும்  நிரப்பிற்று.  {Acts  2:2}

 

அல்லாமலும்  அக்கினிமயமான  நாவுகள்போலப்  பிரிந்திருக்கும்  நாவுகள்  அவர்களுக்குக்  காணப்பட்டு,  அவர்கள்  ஒவ்வொருவர்மேலும்  வந்து  அமர்ந்தது.  {Acts  2:3}

 

அவர்களெல்லாரும்  பரிசுத்தஆவியினாலே  நிரப்பப்பட்டு,  ஆவியானவர்  தங்களுக்குத்  தந்தருளின  வரத்தின்படியே  வெவ்வேறு  பாஷைகளிலே  பேசத்தொடங்கினார்கள்.  {Acts  2:4}

 

வானத்தின்கீழிருக்கிற  சகல  தேசத்தாரிலுமிருந்துவந்த  தேவபக்தியுள்ள  யூதர்கள்<Jews>  அப்பொழுது  எருசலேமிலே<Jerusalem>  வாசம்பண்ணினார்கள்.  {Acts  2:5}

 

அந்தச்  சத்தம்  உண்டானபோது,  திரளான  ஜனங்கள்  கூடிவந்து,  தங்கள்  தங்கள்  பாஷையிலே  அவர்கள்  பேசுகிறதை  அவரவர்கள்  கேட்டபடியினாலே  கலக்கமடைந்தார்கள்.  {Acts  2:6}

 

எல்லாரும்  பிரமித்து  ஆச்சரியப்பட்டு,  ஒருவரையொருவர்  பார்த்து:  இதோ,  பேசுகிற  இவர்களெல்லாரும்  கலிலேயரல்லவா<Galilaeans>?  {Acts  2:7}

 

அப்படியிருக்க,  நம்மில்  அவரவர்களுடைய  ஜென்மபாஷைகளிலே  இவர்கள்  பேசக்  கேட்கிறோமே,  இதெப்படி?  {Acts  2:8}

 

பார்த்தரும்<Parthians>,  மேதரும்<Medes>,  எலாமீத்தரும்<Elamites>,  மெசொப்பொத்தாமியா<Mesopotamia>,  யூதேயா<Judaea>,  கப்பத்தோக்கியா<Cappadocia>,  பொந்து<Pontus>,  ஆசியா<Asia>,  பிரிகியா<Phrygia>,  {Acts  2:9}

 

பம்பிலியா<Pamphylia>,  எகிப்து<Egypt>  என்னும்  தேசத்தார்களும்,  சிரேனேபட்டணத்தைச்<Cyrene>  சுற்றியிருக்கிற  லீபியாவின்<Libya>  திசைகளிலே  குடியிருக்கிறவர்களும்,  இங்கே  சஞ்சரிக்கிற  ரோமாபுரியாரும்<Rome>,  யூதரும்<Jews>,  யூதமார்க்கத்தமைந்தவர்களும்,  {Acts  2:10}

 

கிரேத்தரும்<Cretes>,  அரபியருமாகிய<Arabians>  நாம்  நம்முடைய  பாஷைகளிலே  இவர்கள்  தேவனுடைய  மகத்துவங்களைப்  பேசக்கேட்கிறோமே  என்றார்கள்.  {Acts  2:11}

 

எல்லாரும்  பிரமித்துச்  சந்தேகப்பட்டு,  இதென்னமாய்  முடியுமோ  என்று  ஒருவரோடொருவர்  சொல்லிக்கொண்டார்கள்.  {Acts  2:12}

 

மற்றவர்களோ:  இவர்கள்  மதுபானத்தினால்  நிறைந்திருக்கிறார்களென்று  பரியாசம்பண்ணினார்கள்.  {Acts  2:13}

 

அப்பொழுது  பேதுரு<Peter>  பதினொருவரோடுங்கூட  நின்று,  அவர்களை  நோக்கி,  உரத்த  சத்தமாய்:  யூதர்களே<Judaea>,  எருசலேமில்<Jerusalem>  வாசம்பண்ணுகிற  ஜனங்களே,  நீங்களெல்லாரும்  அறிந்துகொள்வீர்களாக,  என்  வார்த்தைகளுக்குச்  செவிகொடுங்கள்.  {Acts  2:14}

 

நீங்கள்  நினைக்கிறபடி  இவர்கள்  வெறிகொண்டவர்களல்ல,  பொழுது  விடிந்து  மூன்றாம்  மணி  வேளையாயிருக்கிறதே.  {Acts  2:15}

 

தீர்க்கதரிசியாகிய  யோவேலினால்<Joel>  உரைக்கப்பட்டபடியே  இது  நடந்தேறுகிறது.  {Acts  2:16}

 

கடைசிநாட்களில்  நான்  மாம்சமான  யாவர்மேலும்  என்  ஆவியை  ஊற்றுவேன்,  அப்பொழுது  உங்கள்  குமாரரும்  உங்கள்  குமாரத்திகளும்  தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்;  உங்கள்  வாலிபர்  தரிசனங்களை  அடைவார்கள்;  உங்கள்  மூப்பர்  சொப்பனங்களைக்  காண்பார்கள்;  {Acts  2:17}

 

என்னுடைய  ஊழியக்காரர்மேலும்,  என்னுடைய  ஊழியக்காரிகள்மேலும்  அந்நாட்களில்  என்  ஆவியை  ஊற்றுவேன்,  அப்பொழுது  அவர்கள்  தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்.  {Acts  2:18}

 

அல்லாமலும்  உயர  வானத்திலே  அற்புதங்களையும்,  தாழப்  பூமியிலே  இரத்தம்,  அக்கினி,  புகைக்காடாகிய  அதிசயங்களையும்  காட்டுவேன்.  {Acts  2:19}

 

கர்த்தருடைய  பெரிதும்  பிரகாசமுமான  நாள்  வருமுன்னே  சூரியன்  இருளாகவும்,  சந்திரன்  இரத்தமாகவும்  மாறும்.  {Acts  2:20}

 

அப்பொழுது  கர்த்தருடைய  நாமத்தைத்  தொழுதுகொள்ளுகிறவனெவனோ  அவன்  இரட்சிக்கப்படுவான்  என்று  தேவன்  உரைத்திருக்கிறார்.  {Acts  2:21}

 

இஸ்ரவேலரே<Israel>,  நான்  சொல்லும்  வார்த்தைகளைக்  கேளுங்கள்;  நீங்கள்  அறிந்திருக்கிறபடி  நசரேயனாகிய<Nazarene>  இயேசுவைக்கொண்டு<Jesus>  தேவன்  உங்களுக்குள்ளே  பலத்த  செய்கைகளையும்,  அற்புதங்களையும்,  அடையாளங்களையும்  நடப்பித்து,  அவைகளினாலே  அவரை  உங்களுக்கு  வெளிப்படுத்தினார்.  {Acts  2:22}

 

அப்படியிருந்தும்,  தேவன்  நிர்ணயித்திருந்த  ஆலோசனையின்படியேயும்,  அவருடைய  முன்னறிவின்படியேயும்  ஒப்புக்கொடுக்கப்பட்ட  அந்த  இயேசுவை<Jesus>  நீங்கள்  பிடித்து,  அக்கிரமக்காரருடைய  கைகளினாலே  சிலுவையில்  ஆணியடித்துக்  கொலைசெய்தீர்கள்.  {Acts  2:23}

 

தேவன்  அவருடைய  மரண  உபாதிகளின்  கட்டை  அவிழ்த்து,  அவரை  எழுப்பினார்;  அவர்  மரணத்தினால்  கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.  {Acts  2:24}

 

அவரைக்குறித்துத்  தாவீது<David>:  கர்த்தரை  எப்பொழுதும்  எனக்கு  முன்பாக  நிறுத்தி  நோக்கிக்கொண்டிருக்கிறேன்;  நான்  அசைக்கப்படாதபடி  அவர்  என்  வலதுபாரிசத்திலே  இருக்கிறார்;  {Acts  2:25}

 

அதினாலே  என்  இருதயம்  மகிழ்ந்தது,  என்  நாவு  களிகூர்ந்தது,  என்  மாம்சமும்  நம்பிக்கையோடே  தங்கியிருக்கும்;  {Acts  2:26}

 

என்  ஆத்துமாவைப்  பாதாளத்தில்  விடீர்,  உம்முடைய  பரிசுத்தர்  அழிவைக்காணவொட்டீர்;  {Acts  2:27}

 

ஜீவமார்க்கங்களை  எனக்குத்  தெரியப்படுத்தினீர்;  உம்முடைய  சந்நிதானத்திலே  என்னைச்  சந்தோஷத்தினால்  நிரப்புவீர்  என்று  சொல்லுகிறான்.  {Acts  2:28}

 

சகோதரரே,  கோத்திரத்தலைவனாகிய  தாவீதைக்குறித்து<David>  நான்  உங்களுடனே  தைரியமாய்ப்  பேசுகிறதற்கு  இடங்கொடுங்கள்;  அவன்  மரணமடைந்து  அடக்கம்பண்ணப்பட்டான்;  அவனுடைய  கல்லறை  இந்நாள்வரைக்கும்  நம்மிடத்திலிருக்கிறது.  {Acts  2:29}

 

அவன்  தீர்க்கதரிசியாயிருந்து:  உன்  சிங்காசனத்தில்  வீற்றிருக்க  மாம்சத்தின்படி  உன்  சந்ததியிலே  கிறிஸ்துவை<Christ>  எழும்பப்பண்ணுவேன்  என்று  தேவன்  தனக்குச்  சத்தியம்பண்ணினதை  அறிந்தபடியால்,  {Acts  2:30}

 

அவன்  கிறிஸ்துவினுடைய<Christ>  ஆத்துமா  பாதாளத்திலே  விடப்படுவதில்லையென்றும்,  அவருடைய  மாம்சம்  அழிவைக்  காண்பதில்லையென்றும்  முன்னறிந்து,  அவர்  உயிர்த்தெழுதலைக்குறித்து  இப்படிச்  சொன்னான்.  {Acts  2:31}

 

இந்த  இயேசுவைத்<Jesus>  தேவன்  எழுப்பினார்;  இதற்கு  நாங்களெல்லாரும்  சாட்சிகளாயிருக்கிறோம்.  {Acts  2:32}

 

அவர்  தேவனுடைய  வலதுகரத்தினாலே  உயர்த்தப்பட்டு,  பிதா  அருளிய  வாக்குத்தத்தத்தின்படி  பரிசுத்தஆவியைப்  பெற்று,  நீங்கள்  இப்பொழுது  காண்கிறதும்  கேட்கிறதுமாகிய  இதைப்  பொழிந்தருளினார்.  {Acts  2:33}

 

தாவீது<David>  பரலோகத்திற்கு  எழுந்து  போகவில்லையே.  நான்  உம்முடைய  சத்துருக்களை  உமக்குப்  பாதபடியாக்கிப்  போடும்வரைக்கும்,  {Acts  2:34}

 

நீர்  என்  வலதுபாரிசத்தில்  உட்காருமென்று  கர்த்தர்  என்  ஆண்டவருடனே  சொன்னார்  என்று  அவனே  சொல்லியிருக்கிறான்.  {Acts  2:35}

 

ஆகையினால்,  நீங்கள்  சிலுவையில்  அறைந்த  இந்த  இயேசுவையே<Jesus>  தேவன்  ஆண்டவரும்  கிறிஸ்துவுமாக்கினாரென்று<Christ>  இஸ்ரவேல்<Israel>  குடும்பத்தார்  யாவரும்  நிச்சயமாய்  அறியக்கடவர்கள்  என்றான்.  {Acts  2:36}

 

இதை  அவர்கள்  கேட்டபொழுது,  இருதயத்திலே  குத்தப்பட்டவர்களாகி,  பேதுருவையும்<Peter>  மற்ற  அப்போஸ்தலரையும்  பார்த்து:  சகோதரரே,  நாங்கள்  என்னசெய்யவேண்டும்  என்றார்கள்.  {Acts  2:37}

 

பேதுரு<Peter>  அவர்களை  நோக்கி:  நீங்கள்  மனந்திரும்பி,  ஒவ்வொருவரும்  பாவமன்னிப்புக்கென்று  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  நாமத்தினாலே  ஞானஸ்நானம்  பெற்றுக்கொள்ளுங்கள்,  அப்பொழுது  பரிசுத்தஆவியின்  வரத்தைப்  பெறுவீர்கள்.  {Acts  2:38}

 

வாக்குத்தத்தமானது  உங்களுக்கும்,  உங்கள்  பிள்ளைகளுக்கும்,  நம்முடைய  தேவனாகிய  கர்த்தர்  வரவழைக்கும்  தூரத்திலுள்ள  யாவருக்கும்  உண்டாயிருக்கிறது  என்று  சொல்லி;  {Acts  2:39}

 

இன்னும்  அநேக  வார்த்தைகளாலும்  சாட்சிகூறி,  மாறுபாடுள்ள  இந்தச்  சந்ததியை  விட்டு  விலகி  உங்களை  இரட்சித்துக்கொள்ளுங்கள்  என்றும்  புத்திசொன்னான்.  {Acts  2:40}

 

அவனுடைய  வார்த்தையைச்  சந்தோஷமாய்  ஏற்றுக்கொண்டவர்கள்  ஞானஸ்நானம்  பெற்றார்கள்.  அன்றையத்தினம்  ஏறக்குறைய  மூவாயிரம்பேர்  சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.  {Acts  2:41}

 

அவர்கள்  அப்போஸ்தலருடைய  உபதேசத்திலும்,  அந்நியோந்நியத்திலும்,  அப்பம்  பிட்குதலிலும்,  ஜெபம்பண்ணுதலிலும்  உறுதியாய்த்  தரித்திருந்தார்கள்.  {Acts  2:42}

 

எல்லாருக்கும்  பயமுண்டாயிற்று.  அப்போஸ்தலர்களாலே  அநேக  அற்புதங்களும்  அடையாளங்களும்  செய்யப்பட்டது.  {Acts  2:43}

 

விசுவாசிகளெல்லாரும்  ஒருமித்திருந்து,  சகலத்தையும்  பொதுவாய்  வைத்து  அநுபவித்தார்கள்.  {Acts  2:44}

 

காணியாட்சிகளையும்  ஆஸ்திகளையும்  விற்று,  ஒவ்வொருவனுக்கும்  தேவையானதற்குத்தக்கதாக  அவைகளில்  எல்லாருக்கும்  பகிர்ந்துகொடுத்தார்கள்.  {Acts  2:45}

 

அவர்கள்  ஒருமனப்பட்டவர்களாய்த்  தேவாலயத்திலே  அநுதினமும்  தரித்திருந்து,  வீடுகள்தோறும்  அப்பம்பிட்டு  மகிழ்ச்சியோடும்  கபடமில்லாத  இருதயத்தோடும்  போஜனம்பண்ணி,  {Acts  2:46}

 

தேவனைத்  துதித்து,  ஜனங்களெல்லாரிடத்திலும்  தயவுபெற்றிருந்தார்கள்.  இரட்சிக்கப்படுகிறவர்களைக்  கர்த்தர்  அநுதினமும்  சபையிலே  சேர்த்துக்கொண்டு  வந்தார்.  {Acts  2:47}

 

ஜெபவேளையாகிய  ஒன்பதாம்மணி  நேரத்திலே  பேதுருவும்<Peter>  யோவானும்<John>  தேவாலயத்துக்குப்  போனார்கள்.  {Acts  3:1}

 

அப்பொழுது  தன்  தாயின்  வயிற்றிலிருந்து  சப்பாணியாய்ப்  பிறந்த  ஒரு  மனுஷனைச்  சுமந்துகொண்டுவந்தார்கள்;  தேவாலயத்திலே  பிரவேசிக்கிறவர்களிடத்தில்  பிச்சைகேட்கும்படி,  நாடோறும்  அவனை  அலங்கார  வாசல்  என்னப்பட்ட  தேவாலய  வாசலண்டையிலே  வைப்பார்கள்.  {Acts  3:2}

 

தேவாலயத்திலே  பிரவேசிக்கப்போகிற  பேதுருவையும்<Peter>  யோவானையும்<John>  அவன்  கண்டு  பிச்சைகேட்டான்.  {Acts  3:3}

 

பேதுருவும்<Peter>  யோவானும்<John>  அவனை  உற்றுப்பார்த்து:  எங்களை  நோக்கிப்பார்  என்றார்கள்.  {Acts  3:4}

 

அவன்  அவர்களிடத்தில்  ஏதாகிலும்  கிடைக்குமென்று  எண்ணி,  அவர்களை  நோக்கிப்பார்த்தான்.  {Acts  3:5}

 

அப்பொழுது  பேதுரு<Peter>:  வெள்ளியும்  பொன்னும்  என்னிடத்திலில்லை;  என்னிடத்திலுள்ளதை  உனக்குத்  தருகிறேன்;  நசரேயனாகிய<Nazarene>  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  நாமத்தினாலே  நீ  எழுந்து  நட  என்று  சொல்லி;  {Acts  3:6}

 

வலதுகையினால்  அவனைப்  பிடித்துத்  தூக்கிவிட்டான்;  உடனே  அவனுடைய  கால்களும்  கரடுகளும்  பெலன்கொண்டது.  {Acts  3:7}

 

அவன்  குதித்தெழுந்து  நின்று  நடந்தான்;  நடந்து,  குதித்து,  தேவனைத்  துதித்துக்கொண்டு,  அவர்களுடனேகூடத்  தேவாலயத்திற்குள்  பிரவேசித்தான்.  {Acts  3:8}

 

அவன்  நடக்கிறதையும்,  தேவனைத்  துதிக்கிறதையும்,  ஜனங்களெல்லாரும்  கண்டு:  {Acts  3:9}

 

தேவாலயத்தின்  அலங்கார  வாசலண்டையிலே  பிச்சைகேட்க  உட்கார்ந்திருந்தவன்  இவன்தான்  என்று  அறிந்து,  அவனுக்குச்  சம்பவித்ததைக்குறித்து  மிகவும்  ஆச்சரியப்பட்டுப்  பிரமித்தார்கள்.  {Acts  3:10}

 

குணமாக்கப்பட்ட  சப்பாணி  பேதுருவையும்<Peter>  யோவானையும்<John>  பற்றிக்கொண்டிருக்கையில்,  ஜனங்களெல்லாரும்  பிரமித்து,  சாலொமோன்<Solomon>  மண்டபம்  என்னப்பட்ட  மண்டபத்திலே  அவர்களிடத்திற்கு  ஓடிவந்தார்கள்.  {Acts  3:11}

 

பேதுரு<Peter>  அதைக்  கண்டு  ஜனங்களை  நோக்கி:  இஸ்ரவேலரே<Israel>,  இதைக்குறித்து  நீங்கள்  ஆச்சரியப்படுகிறதென்ன?  நாங்கள்  எங்கள்  சுயசக்தியினாலாவது,  எங்கள்  சுயபக்தியினாலாவது,  இவனை  நடக்கப்பண்ணினோமென்று  நீங்கள்  எங்களை  நோக்கிப்  பார்க்கிறதென்ன?  {Acts  3:12}

 

ஆபிரகாம்<Abraham>  ஈசாக்கு<Isaac>  யாக்கோபு<Jacob>  என்பவர்களுடைய  தேவனாகிய  நம்முடைய  பிதாக்களின்  தேவன்  தம்முடைய  பிள்ளையாகிய  இயேசுவை<Jesus>  மகிமைப்படுத்தினார்;  அவரை  நீங்கள்  ஒப்புக்கொடுத்தீர்கள்;  பிலாத்து<Pilate>  அவரை  விடுதலையாக்கத்  தீர்மானித்தபோது,  அவனுக்குமுன்பாக  அவரை  மறுதலித்தீர்கள்.  {Acts  3:13}

 

பரிசுத்தமும்  நீதியுமுள்ளவரை  நீங்கள்  மறுதலித்து,  கொலைபாதகனை  உங்களுக்காக  விடுதலைபண்ணவேண்டுமென்று  கேட்டு,  {Acts  3:14}

 

ஜீவாதிபதியைக்  கொலைசெய்தீர்கள்;  அவரைத்  தேவன்  மரித்தோரிலிருந்தெழுப்பினார்;  அதற்கு  நாங்கள்  சாட்சிகளாயிருக்கிறோம்.  {Acts  3:15}

 

அவருடைய  நாமத்தைப்பற்றும்  விசுவாசத்தினாலே  அவருடைய  நாமமே  நீங்கள்  பார்த்து  அறிந்திருக்கிற  இவனைப்  பெலப்படுத்தினது;  அவரால்  உண்டாகிய  விசுவாசமே  உங்களெல்லாருக்கும்  முன்பாக,  இந்தச்  சர்வாங்க  சுகத்தை  இவனுக்குக்  கொடுத்தது.  {Acts  3:16}

 

சகோதரரே,  நீங்களும்  உங்கள்  அதிகாரிகளும்  அறியாமையினாலே  இதைச்செய்தீர்களென்று  அறிந்திருக்கிறேன்.  {Acts  3:17}

 

கிறிஸ்து<Christ>  பாடுபடவேண்டுமென்று  தேவன்  தம்முடைய  தீர்க்கதரிசிகளெல்லாருடைய  வாக்கினாலும்  முன்னறிவித்தவைகளை  இவ்விதமாய்  நிறைவேற்றினார்.  {Acts  3:18}

 

ஆனபடியினாலே  கர்த்தருடைய  சந்நிதானத்திலிருந்து  இளைப்பாறுதலின்  காலங்கள்  வரும்படிக்கும்,  முன்னே  குறிக்கப்பட்ட  இயேசுகிறிஸ்துவை<Jesus  Christ>  அவர்  உங்களிடத்தில்  அனுப்பும்படிக்கும்,  {Acts  3:19}

 

உங்கள்  பாவங்கள்  நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு  நீங்கள்  மனந்திரும்பிக்  குணப்படுங்கள்.  {Acts  3:20}

 

உலகத்தோற்றமுதல்  தேவன்  தம்முடைய  பரிசுத்த  தீர்க்கதரிசிகளெல்லாருடைய  வாக்கினாலும்  உரைத்தவைகள்  எல்லாம்  நிறைவேறித்  தீருங்காலங்கள்  வருமளவும்  பரலோகம்  அவரை  ஏற்றுக்கொள்ளவேண்டும்.  {Acts  3:21}

 

மோசே<Moses>  பிதாக்களை  நோக்கி:  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  என்னைப்போல  ஒரு  தீர்க்கதரிசியை  உங்களுக்காக  உங்கள்  சகோதரரிலிருந்து  எழும்பப்பண்ணுவார்;  அவர்  உங்களுக்குச்சொல்லும்  எல்லாவற்றிலும்  அவருக்குச்  செவிகொடுப்பீர்களாக.  {Acts  3:22}

 

அந்தத்  தீர்க்கதரிசியின்  சொற்கேளாதவனெவனோ,  அவன்  ஜனத்திலிராதபடிக்கு  நிர்மூலமாக்கப்படுவான்  என்றான்.  {Acts  3:23}

 

சாமுவேல்<Samuel>  முதற்கொண்டு,  எத்தனைபேர்  தீர்க்கதரிசனம்  உரைத்தார்களோ,  அத்தனைபேரும்  இந்த  நாட்களை  முன்னறிவித்தார்கள்.  {Acts  3:24}

 

நீங்கள்  அந்தத்  தீர்க்கதரிசிகளுக்குப்  புத்திரராயிருக்கிறீர்கள்;  உன்  சந்ததியினாலே  பூமியிலுள்ள  வம்சங்களெல்லாம்  ஆசீர்வதிக்கப்படும்  என்று  தேவன்  ஆபிரகாமுக்குச்<Abraham>  சொல்லி,  நம்முடைய  முன்னோர்களோடே  பண்ணின  உடன்படிக்கைக்கும்  புத்திரராயிருக்கிறீர்கள்.  {Acts  3:25}

 

அவர்  உங்களெல்லாரையும்  உங்கள்  பொல்லாங்குகளிலிருந்து  விலக்கி,  உங்களை  ஆசீர்வதிக்கும்படி  தேவன்  தம்முடைய  பிள்ளையாகிய  இயேசுவை<Jesus>  எழுப்பி,  முதலாவது  உங்களிடத்திற்கே  அவரை  அனுப்பினார்  என்றான்.  {Acts  3:26}

 

அவர்கள்  ஜனங்களுடனே  பேசிக்கொண்டிருக்கையில்,  ஆசாரியர்களும்  தேவாலயத்துச்  சேனைத்தலைவனும்  சதுசேயரும்<Sadducees>  அவர்களிடத்தில்  வந்து,  {Acts  4:1}

 

அவர்கள்  ஜனங்களுக்கு  உபதேசிக்கிறதினாலும்,  இயேசுவை<Jesus>  முன்னிட்டு,  மரித்தோரிலிருந்து  உயிர்த்தெழுதலைப்  பிரசங்கிக்கிறதினாலும்,  சினங்கொண்டு,  {Acts  4:2}

 

அவர்களைப்  பிடித்து,  சாயங்காலமாயிருந்தபடியினால்,  மறுநாள்வரைக்கும்  காவலில்  வைத்தார்கள்.  {Acts  4:3}

 

வசனத்தைக்  கேட்டவர்களில்  அநேகர்  விசுவாசித்தார்கள்;  அவர்கள்  தொகை  ஏறக்குறைய  ஐயாயிரமாயிருந்தது.  {Acts  4:4}

 

மறுநாளிலே  ஜனங்களுடைய  அதிகாரிகளும்  மூப்பரும்  வேதபாரகரும்,  {Acts  4:5}

 

பிரதான  ஆசாரியனாகிய  அன்னாவும்<Annas>,  காய்பாவும்<Caiaphas>,  யோவானும்<John>,  அலெக்சந்தரும்<Alexander>,  பிரதான  ஆசாரியருடைய  குடும்பத்தார்  யாவரும்  எருசலேமிலே<Jerusalem>  கூட்டங்கூடி,  {Acts  4:6}

 

அவர்களை  நடுவே  நிறுத்தி:  நீங்கள்  எந்த  வல்லமையினாலே,  எந்த  நாமத்தினாலே,  இதைச்  செய்தீர்கள்  என்று  கேட்டார்கள்.  {Acts  4:7}

 

அப்பொழுது  பேதுரு<Peter>  பரிசுத்தஆவியினாலே  நிறைந்து,  அவர்களை  நோக்கி:  ஜனத்தின்  அதிகாரிகளே,  இஸ்ரவேலின்<Israel>  மூப்பர்களே,  {Acts  4:8}

 

பிணியாளியாயிருந்த  இந்த  மனுஷனுக்குச்  செய்யப்பட்ட  உபகாரத்தைக்குறித்து  எதினாலே  இவன்  ஆரோக்கியமானானென்று  நீங்கள்  இன்று  எங்களிடத்தில்  விசாரித்துக்கேட்டால்,  {Acts  4:9}

 

உங்களால்  சிலுவையில்  அறையப்பட்டவரும்,  தேவனால்  மரித்தோரிலிருந்து  எழுப்பப்பட்டவருமாயிருக்கிற  நசரேயனாகிய<Nazarene>  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  நாமத்தினாலேயே  இவன்  உங்களுக்கு  முன்பாகச்  சொஸ்தமாய்  நிற்கிறானென்று  உங்களெல்லாருக்கும்,  இஸ்ரவேல்<Israel>  ஜனங்களெல்லாருக்கும்  தெரிந்திருக்கக்கடவது.  {Acts  4:10}

 

வீடுகட்டுகிறவர்களாகிய  உங்களால்  அற்பமாய்  எண்ணப்பட்ட  அவரே  மூலைக்குத்  தலைக்கல்லானவர்.  {Acts  4:11}

 

அவராலேயன்றி  வேறொருவராலும்  இரட்சிப்பு  இல்லை;  நாம்  இரட்சிக்கப்படும்படிக்கு  வானத்தின்  கீழெங்கும்,  மனுஷர்களுக்குள்ளே  அவருடைய  நாமமேயல்லாமல்  வேறொரு  நாமம்  கட்டளையிடப்படவும்  இல்லை  என்றான்.  {Acts  4:12}

 

பேதுருவும்<Peter>  யோவானும்<John>  பேசுகிற  தைரியத்தை  அவர்கள்  கண்டு,  அவர்கள்  படிப்பறியாதவர்களென்றும்  பேதைமையுள்ளவர்களென்றும்  அறிந்தபடியினால்  ஆச்சரியப்பட்டு,  அவர்கள்  இயேசுவுடனேகூட<Jesus>  இருந்தவர்களென்றும்  அறிந்துகொண்டார்கள்.  {Acts  4:13}

 

சொஸ்தமாக்கப்பட்ட  மனுஷன்  அவர்கள்  அருகே  நிற்கிறதைக்  கண்டபடியால்,  எதிர்பேச  அவர்களுக்கு  இடமில்லாதிருந்தது.  {Acts  4:14}

 

அப்பொழுது  அவர்களை  ஆலோசனைச்  சங்கத்தைவிட்டு  வெளியே  போகும்படி  கட்டளையிட்டு,  தங்களுக்குள்ளே  யோசனைபண்ணிக்கொண்டு:  {Acts  4:15}

 

இந்த  மனுஷரை  நாம்  என்ன  செய்யலாம்?  எருசலேமில்<Jerusalem>  வாசம்பண்ணுகிற  எல்லாருக்கும்  தெரிந்திருக்கிறபடி  வெளியரங்கமான  அற்புதம்  இவர்களால்  செய்யப்பட்டதே,  அதை  நாம்  இல்லையென்று  சொல்லக்கூடாது.  {Acts  4:16}

 

ஆகிலும்  இது  அதிகமாய்  ஜனத்துக்குள்ளே  பரம்பாதபடிக்கு,  இதுமுதல்  ஒருவரோடும்  இந்த  நாமத்தைக்குறித்துப்  பேசக்கூடாதென்று,  அவர்களை  உறுதியாய்ப்  பயமுறுத்தவேண்டுமென்று  சொல்லிக்கொண்டு,  {Acts  4:17}

 

அவர்களை  அழைத்து:  இயேசுவின்<Jesus>  நாமத்தைக்குறித்து  எவ்வளவும்  பேசவும்  போதிக்கவும்  கூடாதென்று  அவர்களுக்குக்  கட்டளையிட்டார்கள்.  {Acts  4:18}

 

பேதுருவும்<Peter>  யோவானும்<John>  அவர்களுக்குப்  பிரதியுத்தரமாக:  தேவனுக்குச்  செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும்  உங்களுக்குச்  செவிகொடுக்கிறது  தேவனுக்கு  முன்பாக  நியாயமாயிருக்குமோ  என்று  நீங்களே  நிதானித்துப்பாருங்கள்.  {Acts  4:19}

 

நாங்கள்  கண்டவைகளையும்  கேட்டவைகளையும்  பேசாமலிருக்கக்கூடாதே  என்றார்கள்.  {Acts  4:20}

 

நடந்த  சங்கதிகளைக்குறித்து  எல்லாரும்  தேவனை  மகிமைப்படுத்தினபடியால்,  ஜனங்களுக்குப்  பயந்து  அவர்களைத்  தண்டிக்க  வகையொன்றுங்காணாமல்,  அவர்களைப்  பயமுறுத்தி  விட்டுவிட்டார்கள்.  {Acts  4:21}

 

அற்புதமாய்ச்  சொஸ்தமாக்கப்பட்ட  மனுஷன்  நாற்பது  வயதுக்கு  மேற்பட்டவனாயிருந்தான்.  {Acts  4:22}

 

அவர்கள்  விடுதலையாக்கப்பட்டபின்பு,  தங்களைச்  சேர்ந்தவர்களிடத்தில்  வந்து,  பிரதான  ஆசாரியர்களும்  மூப்பர்களும்  தங்களுக்குச்  சொன்ன  யாவையும்  அறிவித்தார்கள்.  {Acts  4:23}

 

அவர்கள்  அதைக்  கேட்டு,  ஒருமனப்பட்டுத்  தேவனை  நோக்கிச்  சத்தமிட்டு:  கர்த்தாவே,  நீர்  வானத்தையும்  பூமியையும்  சமுத்திரத்தையும்  அவைகளிலுள்ள  யாவற்றையும்  உண்டாக்கின  தேவனாயிருக்கிறீர்.  {Acts  4:24}

 

புறஜாதிகள்  கொந்தளித்து,  ஜனங்கள்  விருதா  காரியங்களைச்  சிந்திப்பானேன்  என்றும்,  {Acts  4:25}

 

கர்த்தருக்கு  விரோதமாகவும்  அவருடைய  கிறிஸ்துவுக்கு<Christ>  விரோதமாகவும்  பூமியின்  ராஜாக்கள்  எழும்பி  நின்று,  அதிகாரிகள்  ஏகமாய்க்  கூட்டங்கூடினார்கள்  என்றும்  தேவரீர்  உம்முடைய  தாசனாகிய  தாவீதின்<David>  வாக்கினால்  உரைத்தீரே.  {Acts  4:26}

 

அந்தப்படி  உம்முடைய  கரமும்  உம்முடைய  ஆலோசனையும்  முன்குறித்தவைகள்  யாவையும்  செய்யும்படி,  {Acts  4:27}

 

ஏரோதும்<Herod>  பொந்தியுபிலாத்தும்<Pontius  Pilate>,  புறஜாதிகளோடும்  இஸ்ரவேல்<Israel>  ஜனங்களோடுங்கூட,  நீர்  அபிஷேகம்பண்ணின  உம்முடைய  பரிசுத்த  பிள்ளையாகிய  இயேசுவுக்கு<Jesus>  விரோதமாய்,  மெய்யாகவே  கூட்டங்கூடினார்கள்.  {Acts  4:28}

 

இப்பொழுதும்,  கர்த்தாவே,  அவர்கள்  பயமுறுத்தல்களைத்  தேவரீர்  கவனித்து,  {Acts  4:29}

 

உம்முடைய  பரிசுத்த  பிள்ளையாகிய  இயேசுவின்<Jesus>  நாமத்தினாலே  அடையாளங்களும்  அற்புதங்களும்  நடக்கும்படி  செய்து,  பிணியாளிகளைக்  குணமாக்கும்படி  உம்முடைய  கரத்தை  நீட்டி,  உம்முடைய  ஊழியக்காரர்  உம்முடைய  வசனத்தை  முழு  தைரியத்தோடும்  சொல்லும்படி  அவர்களுக்கு  அநுக்கிரகஞ்செய்தருளும்  என்றார்கள்.  {Acts  4:30}

 

அவர்கள்  ஜெபம்பண்ணினபோது,  அவர்கள்  கூடியிருந்த  இடம்  அசைந்தது.  அவர்களெல்லாரும்  பரிசுத்தஆவியினால்  நிரப்பப்பட்டு,  தேவவசனத்தைத்  தைரியமாய்ச்  சொன்னார்கள்.  {Acts  4:31}

 

விசுவாசிகளாகிய  திரளான  கூட்டத்தார்  ஒரே  இருதயமும்  ஒரே  மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள்.  ஒருவனாகிலும்  தனக்குள்ளவைகளில்  ஒன்றையும்  தன்னுடையதென்று  சொல்லவில்லை;  சகலமும்  அவர்களுக்குப்  பொதுவாயிருந்தது.  {Acts  4:32}

 

கர்த்தராகிய  இயேசுவின்<Jesus>  உயிர்த்தெழுதலைக்குறித்து  அப்போஸ்தலர்கள்  மிகுந்த  பலமாய்ச்  சாட்சிகொடுத்தார்கள்;  அவர்களெல்லார்மேலும்  பூரண  கிருபை  உண்டாயிருந்தது.  {Acts  4:33}

 

நிலங்களையும்  வீடுகளையும்  உடையவர்கள்  அவைகளை  விற்று,  விற்கப்பட்டவைகளின்  கிரயத்தைக்  கொண்டுவந்து,  {Acts  4:34}

 

அப்போஸ்தலருடைய  பாதத்திலே  வைத்தார்கள்.  அவனவனுக்குத்  தேவையானதற்குத்தக்கதாய்ப்  பகிர்ந்துகொடுக்கப்பட்டது;  அவர்களில்  ஒருவனுக்கும்  ஒன்றும்  குறைவாயிருந்ததில்லை.  {Acts  4:35}

 

சீப்புருதீவானும்<Cyprus>  லேவியனும்<Levite>  அப்போஸ்தலராலே  ஆறுதலின்  மகன்<The  son  of  consolation>  என்று  அர்த்தங்கொள்ளும்  பர்னபா<Barnabas>  என்னும்  மறுபேர்பெற்றவனுமாகிய  யோசே<Joses>  என்பவன்,  {Acts  4:36}

 

தனக்கு  உண்டாயிருந்த  நிலத்தைவிற்று,  அதின்  கிரயத்தைக்  கொண்டுவந்து,  அப்போஸ்தலருடைய  பாதத்திலே  வைத்தான்.  {Acts  4:37}

 

அனனியா<Ananias>  என்னும்  பேருள்ள  ஒருவனும்,  அவனுடைய  மனைவியாகிய  சப்பீராளும்<Sapphira>  தங்கள்  காணியாட்சியை  விற்றார்கள்.  {Acts  5:1}

 

தன்  மனைவி  அறிய  அவன்  கிரயத்திலே  ஒரு  பங்கை  வஞ்சித்துவைத்து,  ஒரு  பங்கைக்  கொண்டுவந்து,  அப்போஸ்தலருடைய  பாதத்திலே  வைத்தான்.  {Acts  5:2}

 

பேதுரு<Peter>  அவனை  நோக்கி:  அனனியாவே<Ananias>,  நிலத்தின்  கிரயத்தில்  ஒரு  பங்கை  வஞ்சித்துவைத்து,  பரிசுத்தஆவியினிடத்தில்  பொய்சொல்லும்படி,  சாத்தான்  உன்  இருதயத்தை  நிரப்பினதென்ன?  {Acts  5:3}

 

அதை  விற்கும்  முன்னே  அது  உன்னுடையதாயிருக்கவில்லையோ?  அதை  விற்றபின்பும்  அதின்  கிரயம்  உன்  வசத்திலிருக்கவில்லையோ?  நீ  உன்  இருதயத்திலே  இப்படிப்பட்ட  எண்ணங்கொண்டதென்ன?  நீ  மனுஷரிடத்தில்  அல்ல,  தேவனிடத்தில்  பொய்சொன்னாய்  என்றான்.  {Acts  5:4}

 

அனனியா<Ananias>  இந்த  வார்த்தைகளைக்  கேட்கவே,  விழுந்து  ஜீவனை  விட்டான்.  இவைகளைக்  கேள்விப்பட்ட  யாவருக்கும்  மிகுந்த  பயமுண்டாயிற்று.  {Acts  5:5}

 

வாலிபர்  எழுந்து,  அவனைச்  சீலையில்  சுற்றி,  வெளியே  எடுத்துக்கொண்டுபோய்,  அடக்கம்பண்ணினார்கள்.  {Acts  5:6}

 

ஏறக்குறைய  மூன்று  மணி  நேரத்துக்குப்பின்பு,  அவனுடைய  மனைவி  நடந்ததை  அறியாமல்,  உள்ளே  வந்தாள்.  {Acts  5:7}

 

பேதுரு<Peter>  அவளை  நோக்கி:  நிலத்தை  இவ்வளவுக்குத்தானா  விற்றீர்கள்,  எனக்குச்  சொல்  என்றான்.  அவள்:  ஆம்,  இவ்வளவுக்குத்தான்  என்றாள்.  {Acts  5:8}

 

பேதுரு<Peter>  அவளை  நோக்கி:  கர்த்தருடைய  ஆவியைச்  சோதிக்கிறதற்கு  நீங்கள்  ஒருமனப்பட்டதென்ன?  இதோ,  உன்  புருஷனை  அடக்கம்பண்ணினவர்களுடைய  கால்கள்  வாசற்படியிலே  வந்திருக்கிறது,  உன்னையும்  வெளியே  கொண்டுபோவார்கள்  என்றான்.  {Acts  5:9}

 

உடனே  அவள்  அவனுடைய  பாதத்தில்  விழுந்து  ஜீவனை  விட்டாள்.  வாலிபர்  உள்ளே  வந்து,  அவள்  மரித்துப்போனதைக்  கண்டு,  அவளை  வெளியே  எடுத்துக்கொண்டுபோய்,  அவளுடைய  புருஷனண்டையிலே  அடக்கம்பண்ணினார்கள்.  {Acts  5:10}

 

சபையாரெல்லாருக்கும்,  இவைகளைக்  கேள்விப்பட்ட  மற்ற  யாவருக்கும்,  மிகுந்த  பயமுண்டாயிற்று.  {Acts  5:11}

 

அப்போஸ்தலருடைய  கைகளினாலே  அநேக  அடையாளங்களும்  அற்புதங்களும்  ஜனங்களுக்குள்ளே  செய்யப்பட்டது.  எல்லாரும்  ஒருமனப்பட்டுச்  சாலொமோனுடைய<Solomon>  மண்டபத்தில்  இருந்தார்கள்.  {Acts  5:12}

 

மற்றவர்களில்  ஒருவரும்  அவர்களுடனே  சேரத்  துணியவில்லை.  ஆகிலும்  ஜனங்கள்  அவர்களை  மேன்மைப்படுத்தினார்கள்.  {Acts  5:13}

 

திரளான  புருஷர்களும்  ஸ்திரீகளும்  விசுவாசமுள்ளவர்களாகிக்  கர்த்தரிடமாக  அதிகமதிகமாய்ச்  சேர்க்கப்பட்டார்கள்.  {Acts  5:14}

 

பிணியாளிகளைப்  படுக்கைகளின்  மேலும்  கட்டில்களின்மேலும்  கிடத்தி,  பேதுரு<Peter>  நடந்துபோகையில்  அவனுடைய  நிழலாகிலும்  அவர்களில்  சிலர்மேல்  படும்படிக்கு,  அவர்களை  வெளியே  வீதிகளில்  கொண்டுவந்து  வைத்தார்கள்.  {Acts  5:15}

 

சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து  திரளான  ஜனங்கள்  பிணியாளிகளையும்  அசுத்த  ஆவிகளால்  வாதிக்கப்பட்டவர்களையும்  எருசலேமுக்குக்<Jerusalem>  கொண்டுவந்தார்கள்;  அவர்களெல்லாரும்  குணமாக்கப்பட்டார்கள்.  {Acts  5:16}

 

அப்பொழுது  பிரதான  ஆசாரியனும்  அவனுடனேகூட  இருந்த  சதுசேய<Sadducees>  சமயத்தாரனைவரும்  எழும்பி,  பொறாமையினால்  நிறைந்து,  {Acts  5:17}

 

அப்போஸ்தலர்களைப்  பிடித்து,  பொதுவான  சிறைச்சாலையிலே  வைத்தார்கள்.  {Acts  5:18}

 

கர்த்தருடைய  தூதன்  இராத்திரியிலே  சிறைச்சாலையின்  கதவுகளைத்  திறந்து,  அவர்களை  வெளியே  கொண்டுவந்து:  {Acts  5:19}

 

நீங்கள்  போய்,  தேவாலயத்திலே  நின்று,  இந்த  ஜீவவார்த்தைகள்  எல்லாவற்றையும்  ஜனங்களுக்குச்  சொல்லுங்கள்  என்றான்.  {Acts  5:20}

 

அவர்கள்  அதைக்கேட்டு,  அதிகாலமே  தேவாலயத்தில்  பிரவேசித்துப்  போதகம்பண்ணினார்கள்.  பிரதான  ஆசாரியனும்  அவனுடனேகூட  இருந்தவர்களும்  வந்து,  ஆலோசனைச்  சங்கத்தாரையும்  இஸ்ரவேல்<Israel>  புத்திரரின்  மூப்பரெல்லாரையும்  வரவழைத்து,  அப்போஸ்தலர்களைக்  கொண்டுவரும்படி  சிறைச்சாலைக்குச்  சேவகரை  அனுப்பினார்கள்.  {Acts  5:21}

 

சேவகர்  போய்,  சிறைச்சாலையிலே  அவர்களைக்  காணாமல்,  திரும்பிவந்து:  {Acts  5:22}

 

சிறைச்சாலை  மிகுந்த  பத்திரமாய்ப்  பூட்டப்பட்டிருக்கவும்,  காவற்காரர்  வெளியே  கதவுகளுக்குமுன்  நிற்கவும்  கண்டோம்;  திறந்தபொழுதோ  உள்ளே  ஒருவரையும்  காணோம்  என்று  அறிவித்தார்கள்.  {Acts  5:23}

 

இந்தச்  செய்தியை  ஆசாரியனும்  தேவாலயத்தைக்  காக்கிற  சேனைத்தலைவனும்  பிரதான  ஆசாரியர்களும்  கேட்டபொழுது,  இதென்னமாய்  முடியுமோ  என்று,  அவர்களைக்குறித்துக்  கலக்கமடைந்தார்கள்.  {Acts  5:24}

 

அப்பொழுது  ஒருவன்  வந்து:  இதோ,  நீங்கள்  காவலில்  வைத்த  மனுஷர்  தேவாலயத்திலே  நின்று  ஜனங்களுக்குப்  போதகம்பண்ணுகிறார்கள்  என்று  அவர்களுக்கு  அறிவித்தான்.  {Acts  5:25}

 

உடனே  சேனைத்தலைவன்  சேவகரோடேகூடப்  போய்,  ஜனங்கள்  கல்லெறிவார்களென்று  பயந்ததினால்,  பலவந்தம்பண்ணாமல்  அவர்களை  அழைத்துக்கொண்டுவந்தான்.  {Acts  5:26}

 

அப்படி  அவர்களை  அழைத்துக்கொண்டுவந்து,  ஆலோசனைச்  சங்கத்துக்கு  முன்பாக  நிறுத்தினார்கள்.  அப்பொழுது  பிரதான  ஆசாரியன்  அவர்களை  நோக்கி:  {Acts  5:27}

 

நீங்கள்  அந்த  நாமத்தைக்குறித்துப்  போதகம்பண்ணக்கூடாதென்று  நாங்கள்  உங்களுக்கு  உறுதியாய்க்  கட்டளையிடவில்லையா?  அப்படியிருந்தும்,  இதோ,  எருசலேமை<Jerusalem>  உங்கள்  போதகத்தினாலே  நிரப்பி,  அந்த  மனுஷனுடைய  இரத்தப்பழியை  எங்கள்மேல்  சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள்  என்று  சொன்னான்.  {Acts  5:28}

 

அதற்குப்  பேதுருவும்<Peter>  மற்ற  அப்போஸ்தலரும்:  மனுஷருக்குக்  கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும்  தேவனுக்குக்  கீழ்ப்படிகிறதே  அவசியமாயிருக்கிறது.  {Acts  5:29}

 

நீங்கள்  மரத்திலே  தூக்கிக்  கொலைசெய்த  இயேசுவை<Jesus>  நம்முடைய  பிதாக்களின்  தேவன்  எழுப்பி,  {Acts  5:30}

 

இஸ்ரவேலுக்கு<Israel>  மனந்திரும்புதலையும்  பாவமன்னிப்பையும்  அருளுகிறதற்காக,  அவரை  அதிபதியாகவும்  இரட்சகராகவும்  தமது  வலதுகரத்தினாலே  உயர்த்தினார்.  {Acts  5:31}

 

இந்தச்  சங்கதிகளைக்குறித்து  நாங்கள்  அவருக்குச்  சாட்சிகளாயிருக்கிறோம்;  தேவன்  தமக்குக்  கீழ்ப்படிகிறவர்களுக்குத்  தந்தருளின  பரிசுத்தஆவியும்  சாட்சி  என்றார்கள்.  {Acts  5:32}

 

அதை  அவர்கள்  கேட்டபொழுது,  மூர்க்கமடைந்து,  அவர்களைக்  கொலைசெய்யும்படிக்கு  யோசனைபண்ணினார்கள்.  {Acts  5:33}

 

அப்பொழுது  சகல  ஜனங்களாலும்  கனம்பெற்ற  நியாயசாஸ்திரியாகிய  கமாலியேல்<Gamaliel>  என்னும்  பேர்கொண்ட  ஒரு  பரிசேயன்<Pharisee>  ஆலோசனைச்  சங்கத்தில்  எழுந்திருந்து,  அப்போஸ்தலரைச்  சற்றுநேரம்  வெளியே  கொண்டுபோகச்சொல்லி,  {Acts  5:34}

 

சங்கத்தாரை  நோக்கி:  இஸ்ரவேலரே<Israel>,  இந்த  மனுஷருக்கு  நீங்கள்  செய்யப்போகிறதைக்குறித்து  எச்சரிக்கையாயிருங்கள்.  {Acts  5:35}

 

ஏனென்றால்  இந்நாட்களுக்கு  முன்னே  தெயுதாஸ்<Theudas>  என்பவன்  எழும்பி,  தன்னை  ஒரு  பெரியவனாகப்  பாராட்டினான்;  ஏறக்குறைய  நானூறுபேர்  அவனைச்  சேர்ந்தார்கள்;  அவன்  மடிந்துபோனான்;  அவனை  நம்பின  அனைவரும்  சிதறி,  அவமாய்ப்போனார்கள்.  {Acts  5:36}

 

அவனுக்குப்பின்பு,  குடிமதிப்பின்  நாட்களிலே,  கலிலேயனாகிய<Galilee>  யூதாஸ்<Judas>  என்பவன்  எழும்பி,  தன்னைப்  பின்பற்றும்படி  அநேக  ஜனங்களை  இழுத்தான்;  அவனும்  அழிந்துபோனான்;  அவனை  நம்பியிருந்த  அனைவரும்  சிதறடிக்கப்பட்டார்கள்.  {Acts  5:37}

 

இப்பொழுது  நான்  உங்களுக்குச்  சொல்லுகிறதென்னவென்றால்,  இந்த  மனுஷருக்கு  ஒன்றுஞ்செய்யாமல்  இவர்களை  விட்டுவிடுங்கள்.  இந்த  யோசனையும்  இந்தக்  கிரியையும்  மனுஷரால்  உண்டாயிருந்ததானால்  ஒழிந்துபோம்;  {Acts  5:38}

 

தேவனால்  உண்டாயிருந்ததேயானால்,  அதை  ஒழித்துவிட  உங்களால்  கூடாது;  தேவனோடே  போர்செய்கிறவர்களாய்க்  காணப்படாதபடிக்குப்  பாருங்கள்  என்றான்.  {Acts  5:39}

 

அப்பொழுது  அவர்கள்  அவனுடைய  யோசனைக்கு  உடன்பட்டு,  அப்போஸ்தலரை  வரவழைத்து,  அடித்து,  இயேசுவின்<Jesus>  நாமத்தைக்குறித்துப்  பேசக்கூடாதென்று  கட்டளையிட்டு,  அவர்களை  விடுதலையாக்கினார்கள்.  {Acts  5:40}

 

அவருடைய  நாமத்துக்காகத்  தாங்கள்  அவமானமடைவதற்குப்  பாத்திரராக  எண்ணப்பட்டபடியினால்,  சந்தோஷமாய்  ஆலோசனைச்  சங்கத்தைவிட்டுப்  புறப்பட்டுப்போய்,  {Acts  5:41}

 

தினந்தோறும்  தேவாலயத்திலேயும்  வீடுகளிலேயும்  இடைவிடாமல்  உபதேசம்பண்ணி,  இயேசுவே<Jesus>  கிறிஸ்துவென்று<Christ>  பிரசங்கித்தார்கள்.  {Acts  5:42}

 

அந்நாட்களிலே,  சீஷர்கள்  பெருகினபோது,  கிரேக்கரானவர்கள்<Grecians>,  தங்கள்  விதவைகள்  அன்றாடக  விசாரணையில்  திட்டமாய்  விசாரிக்கப்படவில்லையென்று,  எபிரெயருக்கு<Hebrews>  விரோதமாய்  முறுமுறுத்தார்கள்.  {Acts  6:1}

 

அப்பொழுது  பன்னிருவரும்  சீஷர்  கூட்டத்தை  வரவழைத்து:  நாங்கள்  தேவவசனத்தைப்  போதியாமல்,  பந்திவிசாரணைசெய்வது  தகுதியல்ல.  {Acts  6:2}

 

ஆதலால்  சகோதரரே,  பரிசுத்தஆவியும்  ஞானமும்  நிறைந்து,  நற்சாட்சி  பெற்றிருக்கிற  ஏழுபேரை  உங்களில்  தெரிந்துகொள்ளுங்கள்;  அவர்களை  இந்த  வேலைக்காக  ஏற்படுத்துவோம்.  {Acts  6:3}

 

நாங்களோ  ஜெபம்பண்ணுவதிலும்  தேவவசனத்தைப்  போதிக்கிற  ஊழியத்திலும்  இடைவிடாமல்  தரித்திருப்போம்  என்றார்கள்.  {Acts  6:4}

 

இந்த  யோசனை  சபையாரெல்லாருக்கும்  பிரியமாயிருந்தது.  அப்பொழுது  விசுவாசமும்  பரிசுத்தஆவியும்  நிறைந்தவனாகிய  ஸ்தேவானையும்<Stephen>,  பிலிப்பையும்<Philip>,  பிரொகோரையும்<Prochorus>,  நிக்கானோரையும்<Nicanor>,  தீமோனையும்<Timon>,  பர்மெனாவையும்<Parmenas>,  யூதமார்க்கத்தமைந்தவனான  அந்தியோகியா<Antioch>  பட்டணத்தானாகிய  நிக்கொலாவையும்<Nicolas>  தெரிந்துகொண்டு,  {Acts  6:5}

 

அவர்களை  அப்போஸ்தலருக்குமுன்பாக  நிறுத்தினார்கள்.  இவர்கள்  ஜெபம்பண்ணி,  அவர்கள்மேல்  கைகளை  வைத்தார்கள்.  {Acts  6:6}

 

தேவவசனம்  விருத்தியடைந்தது;  சீஷருடைய  தொகை  எருசலேமில்<Jerusalem>  மிகவும்  பெருகிற்று;  ஆசாரியர்களில்  அநேகரும்  விசுவாசத்துக்குக்  கீழ்ப்படிந்தார்கள்.  {Acts  6:7}

 

ஸ்தேவான்<Stephen>  விசுவாசத்தினாலும்  வல்லமையினாலும்  நிறைந்தவனாய்  ஜனங்களுக்குள்ளே  பெரிய  அற்புதங்களையும்  அடையாளங்களையும்  செய்தான்.  {Acts  6:8}

 

அப்பொழுது  லிபர்த்தீனர்<Libertines>  என்னப்பட்டவர்களின்  ஆலயத்தைச்  சேர்ந்தவர்களிலும்,  சிரேனே<Cyrenians>  பட்டணத்தாரிலும்,  அலெக்சந்திரியா<Alexandrians>  பட்டணத்தாரிலும்,  சிலிசியா<Cilicia>  நாட்டாரிலும்,  ஆசியா<Asia>  தேசத்தாரிலும்  சிலர்  எழும்பி,  ஸ்தேவானுடனே<Stephen>  தர்க்கம்பண்ணினார்கள்.  {Acts  6:9}

 

அவன்  பேசின  ஞானத்தையும்  ஆவியையும்  எதிர்த்துநிற்க  அவர்களால்  கூடாமற்போயிற்று.  {Acts  6:10}

 

அப்பொழுது  அவர்கள்:  மோசேக்கும்<Moses>  தேவனுக்கும்  விரோதமாக  இவன்  தூஷண  வார்த்தைகளைப்  பேசக்கேட்டோம்  என்று  சொல்லும்படியாக  மனுஷரை  ஏற்படுத்தி;  {Acts  6:11}

 

ஜனங்களையும்  மூப்பரையும்  வேதபாரகரையும்  எழுப்பிவிட்டு;  அவன்மேல்  பாய்ந்து,  அவனைப்  பிடித்து,  ஆலோசனைச்  சங்கத்தாருக்கு  முன்பாக  இழுத்துக்கொண்டுபோய்;  {Acts  6:12}

 

பொய்ச்சாட்சிகளையும்  நிறுத்தினார்கள்.  இவர்கள்:  இந்த  மனுஷன்  இந்தப்  பரிசுத்த  ஸ்தலத்துக்கும்  வேதப்பிரமாணத்துக்கும்  விரோதமாகத்  தூஷண  வார்த்தைகளை  ஓயாமற்  பேசுகிறான்;  {Acts  6:13}

 

எப்படியென்றால்,  நசரேயனாகிய<Nazarene>  அந்த  இயேசு<Jesus>  இந்த  ஸ்தலத்தை  அழித்துப்போட்டு,  மோசே<Moses>  நமக்குக்  கொடுத்த  முறைமைகளை  மாற்றுவானென்று  இவன்  சொல்லக்கேட்டோம்  என்றார்கள்.  {Acts  6:14}

 

ஆலோசனைச்  சங்கத்தில்  உட்கார்ந்திருந்த  அனைவரும்  அவன்மேல்  கண்ணோக்கமாயிருந்து,  அவன்  முகம்  தேவதூதன்  முகம்போலிருக்கக்  கண்டார்கள்.  {Acts  6:15}

 

பிரதான  ஆசாரியன்  அவனை  நோக்கி:  காரியம்  இப்படியாயிருக்கிறது  என்று  கேட்டான்.  {Acts  7:1}

 

அதற்கு  அவன்:  சகோதரரே,  பிதாக்களே,  கேளுங்கள்.  நம்முடைய  பிதாவாகிய  ஆபிரகாம்<Abraham>  காரானூரிலே<Charran>  குடியிருக்கிறதற்கு  முன்னமே  மெசொப்பொத்தாமியா<Mesopotamia>  நாட்டிலே  இருக்கும்போது  மகிமையின்  தேவன்  அவனுக்குத்  தரிசனமாகி:  {Acts  7:2}

 

நீ  உன்  தேசத்தையும்  உன்  இனத்தையும்  விட்டுப்  புறப்பட்டு,  நான்  உனக்குக்  காண்பிக்கும்  தேசத்துக்கு  வா  என்றார்.  {Acts  7:3}

 

அப்பொழுது  அவன்  கல்தேயர்<Chaldaeans>  தேசத்தைவிட்டுப்  புறப்பட்டு,  காரானூரிலே<Charran>  வாசம்பண்ணினான்.  அவனுடைய  தகப்பன்  மரித்தபின்பு,  அவ்விடத்தை  விட்டு  நீங்கள்  இப்பொழுது  குடியிருக்கிற  இத்தேசத்திற்கு  அவனை  அழைத்துக்கொண்டுவந்து  குடியிருக்கும்படி  செய்தார்.  {Acts  7:4}

 

இதிலே  ஒரு  அடி  நிலத்தையாகிலும்  அவனுடைய  கையாட்சிக்குக்  கொடாமலிருக்கையில்,  அவனுக்குப்  பிள்ளையில்லாதிருக்கும்போது:  உனக்கும்  உனக்குப்  பின்வரும்  உன்  சந்ததிக்கும்  இதைச்  சுதந்தரமாகத்  தருவேன்  என்று  அவனுக்கு  வாக்குத்தத்தம்பண்ணினார்.  {Acts  7:5}

 

அந்தப்படி  தேவன்  அவனை  நோக்கி:  உன்  சந்ததியார்  அந்நிய  தேசத்தில்  சஞ்சரிப்பார்கள்;  அத்தேசத்தார்  அவர்களை  அடிமைகளாக்கி,  நானூறு  வருஷம்  துன்பப்படுத்துவார்கள்.  {Acts  7:6}

 

அவர்களை  அடிமைப்படுத்தும்  ஜனத்தையோ  நான்  ஆக்கினைக்குட்படுத்துவேன்.  அதற்குப்பின்பு  அவர்கள்  புறப்பட்டுவந்து  இவ்விடத்திலே  எனக்கு  ஆராதனை  செய்வார்கள்  என்றார்.  {Acts  7:7}

 

மேலும்  விருத்தசேதன  உடன்படிக்கையையும்  அவனுக்கு  ஏற்படுத்தினார்.  அந்தப்படியே  அவன்  ஈசாக்கைப்<Isaac>  பெற்றபோது,  எட்டாம்  நாளிலே  அவனை  விருத்தசேதனம்பண்ணினான்.  ஈசாக்கு<Isaac>  யாக்கோபையும்<Jacob>,  யாக்கோபு<Jacob>  பன்னிரண்டு  கோத்திரப்பிதாக்களையும்  பெற்றார்கள்.  {Acts  7:8}

 

அந்தக்  கோத்திரப்பிதாக்கள்  பொறாமைகொண்டு  யோசேப்பை<Joseph>  எகிப்துக்குக்<Egypt>  கொண்டுபோகும்படியாக  விற்றுப்போட்டார்கள்.  {Acts  7:9}

 

தேவனோ  அவனுடனேகூட  இருந்து,  எல்லா  உபத்திரவங்களினின்றும்  அவனை  விடுவித்து,  எகிப்தின்<Egypt>  ராஜாவாகிய  பார்வோன்<Pharaoh>  சமுகத்திலே  அவனுக்குக்  கிருபையையும்  ஞானத்தையும்  அருளினார்;  அந்த  ராஜா  அவனை  எகிப்துதேசத்திற்கும்<Egypt>  தன்  வீடனைத்திற்கும்  அதிகாரியாக  ஏற்படுத்தினான்.  {Acts  7:10}

 

பின்பு  எகிப்து<Egypt>  கானான்<Chanaan>  என்னும்  தேசங்களிலெங்கும்  பஞ்சமும்  மிகுந்த  வருத்தமும்  உண்டாகி,  நம்முடைய  பிதாக்களுக்கு  ஆகாரம்  கிடையாமற்போயிற்று.  {Acts  7:11}

 

அப்பொழுது  எகிப்திலே<Egypt>  தானியம்  உண்டென்று  யாக்கோபு<Jacob>  கேள்விப்பட்டு,  நம்முடைய  பிதாக்களை  முதலாந்தரம்  அனுப்பினான்.  {Acts  7:12}

 

இரண்டாந்தரம்  யோசேப்பு<Joseph>  தன்னுடைய  சகோதரருக்குத்  தன்னைத்  தெரியப்படுத்தினான்.  யோசேப்புடைய<Joseph>  வம்சமும்  பார்வோனுக்குத்<Pharaoh>  தெரியவந்தது.  {Acts  7:13}

 

பின்பு  யோசேப்பு<Joseph>,  தன்னுடைய  தகப்பன்  யாக்கோபும்<Jacob>  தன்னுடைய  இனத்தார்  யாவருமாகிய,  எழுபத்தைந்துபேரை  அழைக்க  அனுப்பினான்.  {Acts  7:14}

 

அந்தப்படி  யாக்கோபு<Jacob>  எகிப்துக்குப்<Egypt>  போனான்.  அவனும்  நம்முடைய  பிதாக்களும்  மரித்து,  {Acts  7:15}

 

அங்கேயிருந்து  சீகேமுக்குக்<Sychem>  கொண்டுவரப்பட்டு,  ஆபிரகாம்<Abraham>  சீகேமின்<Sychem>  தகப்பனாகிய  ஏமோருடைய<Emmor>  சந்ததியாரிடத்தில்  ரொக்கக்கிரயத்துக்கு  வாங்கியிருந்த  கல்லறையில்  வைக்கப்பட்டார்கள்.  {Acts  7:16}

 

ஆபிரகாமுக்குத்<Abraham>  தேவன்  ஆணையிட்டு  அருளின  வாக்குத்தத்தம்  நிறைவேறுங்காலம்  சமீபித்தபோது,  {Acts  7:17}

 

யோசேப்பை<Joseph>  அறியாத  வேறொரு  ராஜா  தோன்றின  காலமளவும்,  ஜனங்கள்  எகிப்திலே<Egypt>  பலுகிப்  பெருகினார்கள்.  {Acts  7:18}

 

அவன்  நம்முடைய  ஜனங்களை  வஞ்சனையாய்  நடப்பித்து,  நம்முடைய  பிதாக்களின்  குழந்தைகள்  உயிரோடிராதபடிக்கு  அவர்கள்  அவைகளை  வெளியே  போட்டுவிடும்படி  செய்து,  அவர்களை  உபத்திரவப்படுத்தினான்.  {Acts  7:19}

 

அக்காலத்திலே  மோசே<Moses>  பிறந்து,  திவ்விய  சவுந்தரியமுள்ளவனாயிருந்து,  மூன்று  மாதமளவும்  தன்  தகப்பன்  வீட்டிலே  வளர்க்கப்பட்டான்.  {Acts  7:20}

 

அவன்  வெளியே  போட்டுவிடப்பட்டபோது,  பார்வோனுடைய<Pharaoh>  குமாரத்தி  அவனை  எடுத்துத்  தனக்குப்  பிள்ளையாக  வளர்த்தாள்.  {Acts  7:21}

 

மோசே<Moses>  எகிப்தியருடைய<Egyptians>  சகல  சாஸ்திரங்களிலும்  கற்பிக்கப்பட்டு,  வாக்கிலும்  செய்கையிலும்  வல்லவனானான்.  {Acts  7:22}

 

அவனுக்கு  நாற்பது  வயதானபோது,  இஸ்ரவேல்<Israel>  புத்திரராகிய  தன்னுடைய  சகோதரரைக்  கண்டு  சந்திக்கும்படி  அவனுடைய  இருதயத்தில்  எண்ணமுண்டாயிற்று.  {Acts  7:23}

 

அப்பொழுது  அவர்களில்  ஒருவன்  அநியாயமாய்  நடத்தப்படுகிறதை  அவன்  கண்டு,  அவனுக்குத்  துணைநின்று,  எகிப்தியனை<Egyptian>  வெட்டி,  துன்பப்பட்டவனுக்கு  நியாயஞ்செய்தான்.  {Acts  7:24}

 

தன்னுடைய  கையினாலே  தேவன்  தங்களுக்கு  இரட்சிப்பைத்  தருவாரென்பதைத்  தன்னுடைய  சகோதரர்  அறிந்துகொள்வார்களென்று  அவன்  நினைத்தான்;  அவர்களோ  அதை  அறியவில்லை.  {Acts  7:25}

 

மறுநாளிலே  சண்டைபண்ணிகொண்டிருக்கிற  இரண்டுபேருக்கு  அவன்  எதிர்ப்பட்டு:  மனுஷரே,  நீங்கள்  சகோதரராயிருக்கிறீர்கள்:  ஒருவருக்கொருவர்  அநியாயஞ்செய்கிறதென்ன  என்று,  அவர்களைச்  சமாதானப்படுத்தும்படி  பேசினான்.  {Acts  7:26}

 

பிறனுக்கு  அநியாயஞ்செய்தவன்  அவனைப்  பிடித்துத்  தள்ளி:  எங்கள்மேல்  அதிகாரியாகவும்  நியாயாதிபதியாகவும்  உன்னை  ஏற்படுத்தினவன்  யார்?  {Acts  7:27}

 

நேற்று  நீ  அந்த  எகிப்தியனைக்<Egyptian>  கொன்றதுபோல  என்னையும்  கொன்றுபோட  மனதாயிருக்கிறாயோ  என்றான்.  {Acts  7:28}

 

இந்த  வார்த்தையினிமித்தம்  மோசே<Moses>  ஓடிப்போய்,  மீதியான்<Madian>  தேசத்திலே  சஞ்சரித்துக்கொண்டிருந்தான்;  அங்கே  இருக்கும்போது  அவனுக்கு  இரண்டு  குமாரர்கள்  பிறந்தார்கள்.  {Acts  7:29}

 

நாற்பது  வருஷம்  சென்றபின்பு,  சீனாய்மலையின்<Sina>  வனாந்தரத்திலே  கர்த்தருடைய  தூதனானவர்  முட்செடி  எரிகிற  அக்கினிஜுவாலையிலே  அவனுக்குத்  தரிசனமானார்.  {Acts  7:30}

 

மோசே<Moses>  அந்தத்  தரிசனத்தைக்  கண்டு,  அதிசயப்பட்டு,  அதை  உற்றுப்பார்க்கும்படி  சமீபித்துவருகையில்:  {Acts  7:31}

 

நான்  ஆபிரகாமின்<Abraham>  தேவனும்  ஈசாக்கின்<Isaac>  தேவனும்  யாக்கோபின்<Jacob>  தேவனுமாகிய  உன்  பிதாக்களுடைய  தேவனாயிருக்கிறேன்  என்று  கர்த்தர்  திருவுளம்பற்றின  சத்தம்  அவனுக்கு  உண்டாயிற்று.  அப்பொழுது  மோசே<Moses>  நடுக்கமடைந்து,  உற்றுப்பார்க்கத்  துணியாமலிருந்தான்.  {Acts  7:32}

 

பின்னும்  கர்த்தர்  அவனை  நோக்கி:  உன்  பாதங்களிலிருக்கிற  பாதரட்சைகளைக்  கழற்றிப்போடு;  நீ  நிற்கிற  இடம்  பரிசுத்த  பூமியாயிருக்கிறது.  {Acts  7:33}

 

எகிப்திலிருக்கிற<Egypt>  என்  ஜனத்தின்  உபத்திரவத்தை  நான்  பார்க்கவே  பார்த்து,  அவர்கள்  பெருமூச்சைக்கேட்டு,  அவர்களை  விடுவிக்கும்படி  இறங்கினேன்;  ஆகையால்,  நீ  வா,  நான்  உன்னை  எகிப்திற்கு<Egypt>  அனுப்புவேன்  என்றார்.  {Acts  7:34}

 

உன்னை  அதிகாரியாகவும்  நியாயாதிபதியாகவும்  ஏற்படுத்தினவன்  யார்  என்று  சொல்லி  அவர்கள்  மறுதலித்திருந்த  இந்த  மோசேயைத்தானே<Moses>  தேவன்,  முட்செடியில்  அவனுக்குத்  தரிசனமான  தூதனாலே,  தலைவனாகவும்  மீட்பனாகவும்  அனுப்பினார்.  {Acts  7:35}

 

இவனே  அவர்களை  அங்கேயிருந்து  அழைத்துக்கொண்டுவந்து,  எகிப்து<Egypt>  தேசத்திலேயும்  சிவந்த  சமுத்திரத்திலேயும்<Red  sea>,  நாற்பது  வருஷகாலமாய்  வனாந்தரத்திலேயும்,  அற்புதங்களையும்  அடையாளங்களையும்  செய்தான்.  {Acts  7:36}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரரை  நோக்கி:  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  உங்கள்  சகோதரரிலிருந்து  என்னைப்போல  ஒரு  தீர்க்கதரிசியை  உங்களுக்காக  எழும்பப்பண்ணுவார்,  அவருக்குச்  செவிகொடுப்பீர்களாக  என்று  சொன்னவன்  இந்த  மோசேயே<Moses>.  {Acts  7:37}

 

சீனாய்மலையில்<Sina>  தன்னுடனே  பேசின  தூதனோடும்  நம்முடைய  பிதாக்களோடுங்கூட  வனாந்தரத்திலே  சபைக்குள்ளிருந்தவனும்,  நமக்குக்  கொடுக்கும்படி  ஜீவவாக்கியங்களைப்  பெற்றவனும்  இவனே.  {Acts  7:38}

 

இவனுக்கு  நம்முடைய  பிதாக்கள்  கீழ்ப்படிய  மனதாயிராமல்,  இவனைத்  தள்ளிவிட்டு,  தங்கள்  இருதயங்களில்  எகிப்துக்குத்<Egypt>  திரும்பி,  {Acts  7:39}

 

ஆரோனை<Aaron>  நோக்கி:  எகிப்துதேசத்திலிருந்து<Egypt>  எங்களை  அழைத்துக்கொண்டுவந்த  அந்த  மோசேக்கு<Moses>  என்ன  சம்பவித்ததோ  அறியோம்;  ஆதலால்  எங்களுக்கு  முன்செல்லும்  தெய்வங்களை  எங்களுக்கு  உண்டுபண்ணும்  என்று  சொல்லி;  {Acts  7:40}

 

அந்நாட்களில்  ஒரு  கன்றுக்குட்டியை  உண்டுபண்ணி,  அந்த  விக்கிரகத்திற்குப்  பலியிட்டு,  தங்கள்  கையின்  கிரியைகளில்  களிகூர்ந்தார்கள்.  {Acts  7:41}

 

அப்பொழுது  தேவன்  அவர்களை  விட்டு  விலகி,  வானசேனைக்கு  ஆராதனைசெய்ய  அவர்களை  ஒப்புக்கொடுத்தார்.  அதைக்குறித்து:  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரே,  நீங்கள்  வனாந்தரத்திலிருந்த  நாற்பது  வருஷம்வரையில்  காணிக்கைகளையும்  பலிகளையும்  எனக்குச்  செலுத்தினீர்களோ  என்றும்,  {Acts  7:42}

 

பணிந்துகொள்ளும்படி  நீங்கள்  உண்டாக்கின  சொரூபங்களாகிய  மோளோகினுடைய<Moloch>  கூடாரத்தையும்,  உங்கள்  தேவனாகிய  ரெம்பான்<Remphan>  என்னும்  நட்சத்திர  சொரூபத்தையும்  சுமந்தீர்களே;  ஆகையால்  உங்களைப்  பாபிலோனுக்கு<Babylon>  அப்புறத்திலே  குடிபோகப்பண்ணுவேன்  என்றும்,  தீர்க்கதரிசிகளின்  புஸ்தகத்தில்  எழுதியிருக்கிறதே.  {Acts  7:43}

 

மேலும்  நீ  பார்த்த  மாதிரியின்படியே  சாட்சியின்  கூடாரத்தை  உண்டுபண்ணுவாயாக  என்று  மோசேயுடனே<Moses>  பேசினவர்  கட்டளையிட்ட  பிரகாரமாக,  அந்தக்  கூடாரம்  வனாந்தரத்திலே  நம்முடைய  பிதாக்களோடு  இருந்தது.  {Acts  7:44}

 

மேலும்,  யோசுவாவுடனேகூட<Joshua// Jesus>  நம்முடைய  பிதாக்கள்  அதைப்  பெற்றுக்கொண்டு,  தேவன்  அவர்களுக்கு  முன்பாகத்  துரத்திவிட்ட  புறஜாதிகளுடைய  தேசத்தை  அவர்கள்  கட்டிக்கொள்ளுகையில்,  அதை  அந்தத்  தேசத்தில்  கொண்டுவந்து,  தாவீதின்<David>  நாள்வரைக்கும்  வைத்திருந்தார்கள்.  {Acts  7:45}

 

இவன்  தேவனிடத்தில்  தயவு  பெற்றபடியினால்,  யாக்கோபின்<Jacob>  தேவனுக்கு  ஒரு  வாசஸ்தலத்தைத்  தான்  கட்டவேண்டுமென்று  விண்ணப்பம்பண்ணினான்.  {Acts  7:46}

 

சாலொமோனோ<Solomon>  அவருக்கு  ஆலயத்தைக்  கட்டினான்.  {Acts  7:47}

 

ஆகிலும்  உன்னதமானவர்  கைகளினால்  செய்யப்பட்ட  ஆலயங்களில்  வாசமாயிரார்.  {Acts  7:48}

 

வானம்  எனக்குச்  சிங்காசனமும்  பூமி  எனக்குப்  பாதபடியுமாயிருக்கிறது;  எனக்காக  நீங்கள்  எப்படிப்பட்ட  வீட்டைக்  கட்டுவீர்கள்;  நான்  தங்கியிருக்கத்தக்க  ஸ்தலம்  எது;  {Acts  7:49}

 

இவைகள்  எல்லாவற்றையும்  என்னுடைய  கரம்  உண்டாக்கவில்லையா  என்று  கர்த்தர்  உரைக்கிறார்  என்று  தீர்க்கதரிசி  சொல்லியிருக்கிறானே.  {Acts  7:50}

 

வணங்காக்  கழுத்துள்ளவர்களே,  இருதயத்திலும்  செவிகளிலும்  விருத்தசேதனம்  பெறாதவர்களே,  உங்கள்  பிதாக்களைப்போல  நீங்களும்  பரிசுத்தஆவிக்கு  எப்பொழுதும்  எதிர்த்துநிற்கிறீர்கள்.  {Acts  7:51}

 

தீர்க்கதரிசிகளில்  யாரை  உங்கள்  பிதாக்கள்  துன்பப்படுத்தாமலிருந்தார்கள்?  நீதிபரருடைய  வருகையை  முன்னறிவித்தவர்களையும்  அவர்கள்  கொலைசெய்தார்கள்.  இப்பொழுது  நீங்கள்  அவருக்குத்  துரோகிகளும்  அவரைக்  கொலைசெய்த  பாதகருமாயிருக்கிறீர்கள்.  {Acts  7:52}

 

தேவதூதரைக்கொண்டு  நீங்கள்  நியாயப்பிரமாணத்தைப்  பெற்றிருந்தும்,  அதைக்  கைக்கொள்ளாமற்போனீர்கள்  என்றான்.  {Acts  7:53}

 

இவைகளை  அவர்கள்  கேட்டபொழுது,  மூர்க்கமடைந்து,  அவனைப்  பார்த்துப்  பல்லைக்  கடித்தார்கள்.  {Acts  7:54}

 

அவன்  பரிசுத்தஆவியினாலே  நிறைந்தவனாய்,  வானத்தை  அண்ணாந்துபார்த்து,  தேவனுடைய  மகிமையையும்,  தேவனுடைய  வலதுபாரிசத்தில்  இயேசுவானவர்<Jesus>  நிற்கிறதையும்  கண்டு:  {Acts  7:55}

 

அதோ  வானங்கள்  திறந்திருக்கிறதையும்,  மனுஷகுமாரன்  தேவனுடைய  வலதுபாரிசத்தில்  நிற்கிறதையும்  காண்கிறேன்  என்றான்.  {Acts  7:56}

 

அப்பொழுது  அவர்கள்  உரத்தசத்தமாய்க்  கூக்குரலிட்டுத்  தங்கள்  காதுகளை  அடைத்துக்கொண்டு,  ஒருமனப்பட்டு  அவன்மேல்  பாய்ந்து,  {Acts  7:57}

 

அவனை  நகரத்துக்குப்  புறம்பே  தள்ளி,  அவனைக்  கல்லெறிந்தார்கள்.  சாட்சிக்காரர்  தங்கள்  வஸ்திரங்களைக்  கழற்றி,  சவுல்<Saul>  என்னப்பட்ட  ஒரு  வாலிபனுடைய  பாதத்தினருகே  வைத்தார்கள்.  {Acts  7:58}

 

அப்பொழுது:  கர்த்தராகிய  இயேசுவே<Jesus>,  என்  ஆவியை  ஏற்றுக்கொள்ளும்  என்று  ஸ்தேவான்<Stephen>  தொழுதுகொள்ளுகையில்,  அவனைக்  கல்லெறிந்தார்கள்.  {Acts  7:59}

 

அவனோ,  முழங்காற்படியிட்டு:  ஆண்டவரே,  இவர்கள்மேல்  இந்தப்  பாவத்தைச்  சுமத்தாதிரும்  என்று  மிகுந்த  சத்தமிட்டுச்  சொன்னான்.  இப்படிச்  சொல்லி,  நித்திரையடைந்தான்.  {Acts  7:60}

 

அவனைக்  கொலைசெய்கிறதற்குச்  சவுலும்<Saul>  சம்மதித்திருந்தான்.  அக்காலத்திலே  எருசலேமிலுள்ள<Jerusalem>  சபைக்கு  மிகுந்த  துன்பம்  உண்டாயிற்று.  அப்போஸ்தலர்தவிர,  மற்ற  யாவரும்  யூதேயா<Judaea>  சமாரியா<Samaria>  தேசங்களில்  சிதறப்பட்டுப்போனார்கள்.  {Acts  8:1}

 

தேவபக்தியுள்ள  மனுஷர்  ஸ்தேவானை<Stephen>  எடுத்து  அடக்கம்பண்ணி,  அவனுக்காக  மிகவும்  துக்கங்கொண்டாடினார்கள்.  {Acts  8:2}

 

சவுல்<Saul>  வீடுகள்தோறும்  நுழைந்து,  புருஷரையும்  ஸ்திரீகளையும்  இழுத்துக்கொண்டுபோய்,  காவலில்  போடுவித்து,  சபையைப்  பாழாக்கிக்கொண்டிருந்தான்.  {Acts  8:3}

 

சிதறிப்போனவர்கள்  எங்குந்திரிந்து,  சுவிசேஷவசனத்தைப்  பிரசங்கித்தார்கள்.  {Acts  8:4}

 

அப்பொழுது  பிலிப்பென்பவன்<Philip>  சமாரியாவிலுள்ள<Samaria>  ஒரு  பட்டணத்திற்குப்  போய்,  அங்குள்ளவர்களுக்குக்  கிறிஸ்துவைக்குறித்துப்<Christ>  பிரசங்கித்தான்.  {Acts  8:5}

 

பிலிப்பு<Philip>  செய்த  அதிசயங்களை  ஜனங்கள்  கேள்விப்பட்டுக்  கண்டு,  அவனால்  சொல்லப்பட்டவைகளை  ஒருமனப்பட்டுக்  கவனித்தார்கள்.  {Acts  8:6}

 

அநேகரிலிருந்த  அசுத்தஆவிகள்  மிகுந்த  சத்தத்தோடே  கூப்பிட்டு  அவர்களை  விட்டுப்  புறப்பட்டது.  அநேகந்  திமிர்வாதக்காரரும்  சப்பாணிகளும்  குணமாக்கப்பட்டார்கள்.  {Acts  8:7}

 

அந்தப்  பட்டணத்திலே  மிகுந்த  சந்தோஷம்  உண்டாயிற்று.  {Acts  8:8}

 

சீமோன்<Simon>  என்று  பேர்கொண்ட  ஒரு  மனுஷன்  அந்தப்  பட்டணத்திலே  மாயவித்தைக்காரனாயிருந்து,  தன்னை  ஒரு  பெரியவனென்று  சொல்லி,  சமாரியாநாட்டு<Samaria>  ஜனங்களைப்  பிரமிக்கப்பண்ணிக்கொண்டிருந்தான்.  {Acts  8:9}

 

தேவனுடைய  பெரிதான  சக்தி  இவன்தான்  என்று  எண்ணி,  சிறியோர்  பெரியோர்  யாவரும்  அவனுக்குச்  செவிகொடுத்துவந்தார்கள்.  {Acts  8:10}

 

அவன்  அநேக  காலமாய்த்  தன்னுடைய  மாயவித்தைகளினாலே  அவர்களைப்  பிரமிக்கப்பண்ணினதினால்  அவனை  மதித்துவந்தார்கள்.  {Acts  8:11}

 

தேவனுடைய  ராஜ்யத்துக்கும்  இயேசுகிறிஸ்துவினுடைய<Jesus  Christ>  நாமத்துக்கும்  ஏற்றவைகளைக்குறித்து,  பிலிப்பு<Philip>  பிரசங்கித்ததை  அவர்கள்  விசுவாசித்தபோது,  புருஷரும்  ஸ்திரீகளும்  ஞானஸ்நானம்  பெற்றார்கள்.  {Acts  8:12}

 

அப்பொழுது  சீமோனும்<Simon>  விசுவாசித்து  ஞானஸ்நானம்  பெற்று,  பிலிப்பைப்<Philip>  பற்றிக்கொண்டு,  அவனால்  நடந்த  அடையாளங்களையும்  பெரிய  அற்புதங்களையும்  கண்டு  பிரமித்தான்.  {Acts  8:13}

 

சமாரியர்<Samaria>  தேவவசனத்தை  ஏற்றுக்கொண்டதை  எருசலேமிலுள்ள<Jerusalem>  அப்போஸ்தலர்கள்  கேள்விப்பட்டு,  பேதுருவையும்<Peter>  யோவானையும்<John>  அவர்களிடத்திற்கு  அனுப்பினார்கள்.  {Acts  8:14}

 

இவர்கள்  வந்தபொழுது  அவர்களில்  ஒருவனும்  பரிசுத்தஆவியைப்  பெறாமல்  கர்த்தராகிய  இயேசுவின்<Jesus>  நாமத்தினாலே  ஞானஸ்நானத்தை  மாத்திரம்  பெற்றிருந்தவர்களாகக்  கண்டு,  {Acts  8:15}

 

அவர்கள்  பரிசுத்தஆவியைப்  பெற்றுக்கொள்ளும்படி  அவர்களுக்காக  ஜெபம்பண்ணி,  {Acts  8:16}

 

அவர்கள்மேல்  கைகளை  வைத்தார்கள்,  அப்பொழுது  அவர்கள்  பரிசுத்தஆவியைப்  பெற்றார்கள்.  {Acts  8:17}

 

அப்போஸ்தலர்  தங்கள்  கைகளை  அவர்கள்மேல்  வைத்ததினால்  பரிசுத்தஆவி  தந்தருளப்படுகிறதைச்  சீமோன்<Simon>  கண்டபோது,  அவர்களிடத்தில்  பணத்தைக்  கொண்டுவந்து:  {Acts  8:18}

 

நான்  எவன்மேல்  என்  கைகளை  வைக்கிறேனோ,  அவன்  பரிசுத்தஆவியைப்  பெறத்தக்கதாக  எனக்கும்  இந்த  அதிகாரத்தைக்  கொடுக்கவேண்டும்  என்றான்.  {Acts  8:19}

 

பேதுரு<Peter>  அவனை  நோக்கி:  தேவனுடைய  வரத்தைப்  பணத்தினாலே  சம்பாதித்துக்கொள்ளலாமென்று  நீ  நினைத்தபடியால்  உன்  பணம்  உன்னோடேகூட  நாசமாய்ப்  போகக்கடவது.  {Acts  8:20}

 

உன்  இருதயம்  தேவனுக்குமுன்பாகச்  செம்மையாயிராதபடியால்,  இந்த  விஷயத்திலே  உனக்குப்  பங்குமில்லை  பாகமுமில்லை.  {Acts  8:21}

 

ஆகையால்  நீ  உன்  துர்க்குணத்தை  விட்டு  மனந்திரும்பி,  தேவனை  நோக்கி  வேண்டிக்கொள்;  ஒருவேளை  உன்  இருதயத்தின்  எண்ணம்  உனக்கு  மன்னிக்கப்படலாம்.  {Acts  8:22}

 

நீ  கசப்பான  பிச்சிலும்  பாவக்கட்டிலும்  அகப்பட்டிருக்கிறதாகக்  காண்கிறேன்  என்றான்.  {Acts  8:23}

 

அதற்குச்  சீமோன்<Simon>:  நீங்கள்  சொன்ன  காரியங்களில்  ஒன்றும்  எனக்கு  நேரிடாதபடிக்கு,  எனக்காகக்  கர்த்தரை  வேண்டிக்கொள்ளுங்கள்  என்றான்.  {Acts  8:24}

 

இவ்விதமாய்  அவர்கள்  கர்த்தருடைய  வசனத்தைச்  சாட்சியாய்  அறிவித்துச்  சொன்னபின்பு,  சமாரியருடைய<Samaritans>  அநேக  கிராமங்களில்  சுவிசேஷத்தைப்  பிரசங்கித்து,  எருசலேமுக்குத்<Jerusalem>  திரும்பி  வந்தார்கள்.  {Acts  8:25}

 

பின்பு  கர்த்தருடைய  தூதன்  பிலிப்பை<Philip>  நோக்கி:  நீ  எழுந்து,  தெற்குமுகமாய்  எருசலேமிலிருந்து<Jerusalem>  காசா<Gaza>  பட்டணத்துக்குப்  போகிற  வனாந்தரமார்க்கமாய்ப்  போ  என்றான்.  {Acts  8:26}

 

அந்தப்படி  அவன்  எழுந்துபோனான்.  அப்பொழுது  எத்தியோப்பியருடைய<Ethiopia>  ராஜஸ்திரீயாகிய  கந்தாகே<Candace>  என்பவளுக்கு  மந்திரியும்  அவளுடைய  பொக்கிஷமெல்லாவற்றிற்கும்  தலைவனுமாயிருந்த  எத்தியோப்பியனாகிய<Ethiopians>  ஒருவன்  பணிந்துகொள்ளும்படி  எருசலேமுக்கு<Jerusalem>  வந்திருந்து;  {Acts  8:27}

 

ஊருக்குத்  திரும்பிப்போகும்போது,  தன்  இரதத்திலே  உட்கார்ந்து,  ஏசாயா<Esaias>  தீர்க்கதரிசியின்  ஆகமத்தை  வாசித்துக்கொண்டிருந்தான்.  {Acts  8:28}

 

ஆவியானவர்:  நீ  போய்,  அந்த  இரதத்துடனே  சேர்ந்துகொள்  என்று  பிலிப்புடனே<Philip>  சொன்னார்.  {Acts  8:29}

 

அப்பொழுது  பிலிப்பு<Philip>  ஓடிப்போய்ச்சேர்ந்து,  அவன்  ஏசாயா<Esaias>  தீர்க்கதரிசியின்  ஆகமத்தை  வாசிக்கிறதைக்  கேட்டு:  நீர்  வாசிக்கிறவைகளின்  கருத்து  உமக்குத்  தெரியுமா  என்றான்.  {Acts  8:30}

 

அதற்கு  அவன்:  ஒருவன்  எனக்குத்  தெரிவிக்காவிட்டால்  அது  எனக்கு  எப்படித்  தெரியும்  என்று  சொல்லி;  பிலிப்பு<Philip>  ஏறி,  தன்னோடே  உட்காரும்படி  அவனை  வேண்டிக்கொண்டான்.  {Acts  8:31}

 

அவன்  வாசித்த  வேதவாக்கியம்  என்னவென்றால்:  அவர்  ஒரு  ஆட்டைப்போல  அடிக்கப்படுவதற்குக்  கொண்டு  போகப்பட்டார்;  மயிர்கத்தரிக்கிறவனுக்கு  முன்பாகச்  சத்தமிடாதிருக்கிற  ஆட்டுக்குட்டியைப்போல  அவர்  தமது  வாயைத்  திறவாதிருந்தார்.  {Acts  8:32}

 

அவர்  தம்மைத்  தாழ்த்தினபோது  அவருடைய  நியாயம்  எடுத்துப்போடப்பட்டது;  அவருடைய  ஜீவன்  பூமியிலிருந்து  எடுபட்டுப்போயிற்று;  அவருடைய  வம்சத்தை  யாராலே  சொல்லிமுடியும்  என்பதே.  {Acts  8:33}

 

மந்திரி  பிலிப்பை<Philip>  நோக்கி:  தீர்க்கதரிசி  யாரைக்குறித்து  இதைச்  சொல்லுகிறார்?  தம்மைக்குறித்தோ,  வேறொருவரைக்குறித்தோ?  எனக்குச்  சொல்லவேண்டும்  என்று  கேட்டுக்கொண்டான்.  {Acts  8:34}

 

அப்பொழுது  பிலிப்பு<Philip>  பேசத்தொடங்கி,  இந்த  வேதவாக்கியத்தை  முன்னிட்டு  இயேசுவைக்குறித்து<Jesus>  அவனுக்குப்  பிரசங்கித்தான்.  {Acts  8:35}

 

இவ்விதமாய்  அவர்கள்  வழிநடந்துபோகையில்,  தண்ணீருள்ள  ஓரிடத்திற்கு  வந்தார்கள்.  அப்பொழுது  மந்திரி:  இதோ,  தண்ணீர்  இருக்கிறதே,  நான்  ஞானஸ்நானம்  பெறுகிறதற்குத்  தடையென்ன  என்றான்.  {Acts  8:36}

 

அதற்குப்  பிலிப்பு<Philip>:  நீர்  முழு  இருதயத்தோடும்  விசுவாசித்தால்  தடையில்லையென்றான்.  அப்பொழுது  அவன்:  இயேசுகிறிஸ்துவைத்<Jesus  Christ>  தேவனுடைய  குமாரனென்று  விசுவாசிக்கிறேன்  என்று  சொல்லி;  {Acts  8:37}

 

இரதத்தை  நிறுத்தச்சொன்னான்.  அப்பொழுது  பிலிப்பும்<Philip>  மந்திரியும்  ஆகிய  இருவரும்  தண்ணீரில்  இறங்கினார்கள்;  பிலிப்பு<Philip>  அவனுக்கு  ஞானஸ்நானங்  கொடுத்தான்.  {Acts  8:38}

 

அவர்கள்  தண்ணீரிலிருந்து  கரையேறினபொழுது,  கர்த்தருடைய  ஆவியானவர்  பிலிப்பைக்<Philip>  கொண்டுபோய்விட்டார்.  மந்திரி  அப்புறம்  அவனைக்  காணாமல்,  சந்தோஷத்தோடே  தன்  வழியே  போனான்.  {Acts  8:39}

 

பிலிப்பு<Philip>  ஆசோத்திலே<Azotus>  காணப்பட்டு,  அவ்விடத்திலிருந்து  பிரயாணம்பண்ணி,  செசரியாவுக்கு<Caesarea>  வருகிறவரையில்  சகல  பட்டணங்களிலும்  சுவிசேஷத்தைப்  பிரசங்கித்துக்கொண்டுவந்தான்.  {Acts  8:40}

 

சவுல்<Saul>  என்பவன்  இன்னுங்  கர்த்தருடைய  சீஷரைப்  பயமுறுத்திக்  கொலைசெய்யும்படி  சீறிப்  பிரதான  ஆசாரியரிடத்திற்குப்  போய்;  {Acts  9:1}

 

இந்த  மார்க்கத்தாராகிய  புருஷரையாகிலும்  ஸ்திரீகளையாகிலும்  தான்  கண்டுபிடித்தால்,  அவர்களைக்  கட்டி  எருசலேமுக்குக்<Jerusalem>  கொண்டுவரும்படி,  தமஸ்குவிலுள்ள<Damascus>  ஜெபஆலயங்களுக்கு  நிருபங்களைக்  கேட்டு  வாங்கினான்.  {Acts  9:2}

 

அவன்  பிரயாணமாய்ப்  போய்,  தமஸ்குவுக்குச்<Damascus>  சமீபித்தபோது,  சடிதியிலே  வானத்திலிருந்து  ஒரு  ஒளி  அவனைச்  சுற்றிப்  பிரகாசித்தது;  {Acts  9:3}

 

அவன்  தரையிலே  விழுந்தான்.  அப்பொழுது:  சவுலே<Saul>,  சவுலே<Saul>,  நீ  என்னை  ஏன்  துன்பப்படுத்துகிறாய்  என்று  தன்னுடனே  சொல்லுகிற  ஒரு  சத்தத்தைக்  கேட்டான்.  {Acts  9:4}

 

அதற்கு  அவன்:  ஆண்டவரே,  நீர்  யார்,  என்றான்.  அதற்குக்  கர்த்தர்:  நீ  துன்பப்படுத்துகிற  இயேசு<Jesus>  நானே;  முள்ளில்  உதைக்கிறது  உனக்குக்  கடினமாம்  என்றார்.  {Acts  9:5}

 

அவன்  நடுங்கித்  திகைத்து:  ஆண்டவரே,  நான்  என்ன  செய்யச்  சித்தமாயிருக்கிறீர்  என்றான்.  அதற்குக்  கர்த்தர்:  நீ  எழுந்து,  பட்டணத்துக்குள்ளே  போ,  நீ  செய்யவேண்டியது  அங்கே  உனக்குச்  சொல்லப்படும்  என்றார்.  {Acts  9:6}

 

அவனுடனேகூடப்  பிரயாணம்பண்ணின  மனுஷர்கள்  சத்தத்தைக்  கேட்டும்  ஒருவரையுங்  காணாமல்  பிரமித்து  நின்றார்கள்.  {Acts  9:7}

 

சவுல்<Saul>  தரையிலிருந்தெழுந்து,  தன்  கண்களைத்  திறந்தபோது  ஒருவரையுங்  காணவில்லை.  அப்பொழுது  கைலாகு  கொடுத்து,  அவனைத்  தமஸ்குவுக்குக்<Damascus>  கூட்டிக்கொண்டுபோனார்கள்.  {Acts  9:8}

 

அவன்  மூன்று  நாள்  பார்வையில்லாதவனாய்ப்  புசியாமலும்  குடியாமலும்  இருந்தான்.  {Acts  9:9}

 

தமஸ்குவிலே<Damascus>  அனனியா<Ananias>  என்னும்  பேருள்ள  ஒரு  சீஷன்  இருந்தான்.  அவனுக்குக்  கர்த்தர்  தரிசனமாகி:  அனனியாவே<Ananias>,  என்றார்.  அவன்:  ஆண்டவரே,  இதோ,  அடியேன்  என்றான்.  {Acts  9:10}

 

அப்பொழுது  கர்த்தர்:  நீ  எழுந்து  நேர்த்தெருவு<Straight>  என்னப்பட்ட  தெருவுக்குப்போய்,  யூதாவின்<Judas>  வீட்டிலே  தர்சுபட்டணத்தானாகிய<Tarsus>  சவுல்<Saul>  என்னும்  பேருள்ள  ஒருவனைத்  தேடு;  அவன்  இப்பொழுது  ஜெபம்பண்ணுகிறான்;  {Acts  9:11}

 

அனனியா<Ananias>  என்னும்  பேருள்ள  ஒரு  மனுஷன்  தன்னிடத்தில்  வரவும்,  தான்  பார்வையடையும்படி  தன்மேல்  கைவைக்கவும்  தரிசனங்கண்டான்  என்றார்.  {Acts  9:12}

 

அதற்கு  அனனியா<Ananias>:  ஆண்டவரே,  இந்த  மனுஷன்  எருசலேமிலுள்ள<Jerusalem>  உம்முடைய  பரிசுத்தவான்களுக்கு  எத்தனையோ  பொல்லாங்குகளைச்  செய்தானென்று  அவனைக்குறித்து  அநேகரால்  கேள்விப்பட்டிருக்கிறேன்.  {Acts  9:13}

 

இங்கேயும்  உம்முடைய  நாமத்தைத்  தொழுதுகொள்ளுகிற  யாவரையுங்  கட்டும்படி  அவன்  பிரதான  ஆசாரியர்களால்  அதிகாரம்  பெற்றிருக்கிறானே  என்றான்.  {Acts  9:14}

 

அதற்குக்  கர்த்தர்:  நீ  போ;  அவன்  புறஜாதிகளுக்கும்  ராஜாக்களுக்கும்  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்கும்  என்னுடைய  நாமத்தை  அறிவிக்கிறதற்காக  நான்  தெரிந்துகொண்ட  பாத்திரமாயிருக்கிறான்.  {Acts  9:15}

 

அவன்  என்னுடைய  நாமத்தினிமித்தம்  எவ்வளவாய்ப்  பாடுபடவேண்டுமென்பதை  நான்  அவனுக்குக்  காண்பிப்பேன்  என்றார்.  {Acts  9:16}

 

அப்பொழுது  அனனியா<Ananias>  போய்,  வீட்டுக்குள்  பிரவேசித்து,  அவன்மேல்  கையை  வைத்து:  சகோதரனாகிய  சவுலே<Saul>,  நீ  வந்தவழியிலே  உனக்குத்  தரிசனமான  இயேசுவாகிய<Jesus>  கர்த்தர்,  நீ  பார்வையடையும்படிக்கும்  பரிசுத்தஆவியினாலே  நிரப்பப்படும்படிக்கும்  என்னை  அனுப்பினார்  என்றான்.  {Acts  9:17}

 

உடனே  அவன்  கண்களிலிருந்து  மீன்  செதிள்கள்  போன்றவைகள்  விழுந்தது.  அவன்  பார்வையடைந்து,  எழுந்திருந்து,  ஞானஸ்நானம்  பெற்றான்.  {Acts  9:18}

 

பின்பு  அவன்  போஜனம்பண்ணிப்  பலப்பட்டான்.  சவுல்<Saul>  தமஸ்குவிலுள்ள<Damascus>  சீஷருடனே  சிலநாள்  இருந்து,  {Acts  9:19}

 

தாமதமின்றி,  கிறிஸ்து<Christ>  தேவனுடைய  குமாரனென்று  ஆலயங்களிலே  பிரசங்கித்தான்.  {Acts  9:20}

 

கேட்டவர்களெல்லாரும்  ஆச்சரியப்பட்டு:  எருசலேமில்<Jerusalem>  இந்த  நாமத்தைத்  தொழுதுகொள்ளுகிறவர்களை  நாசமாக்கி,  இங்கேயும்  அப்படிப்பட்டவர்களைக்  கட்டிப்  பிரதான  ஆசாரியர்களிடத்திற்குக்  கொண்டுபோகும்படி  வந்தவன்  இவனல்லவா  என்றார்கள்.  {Acts  9:21}

 

சவுல்<Saul>  அதிகமாகத்  திடன்கொண்டு,  இவரே  கிறிஸ்துவென்று<Christ>  திருஷ்டாந்தப்படுத்தி,  தமஸ்குவில்<Damascus>  குடியிருக்கிற  யூதர்களைக்<Jews>  கலங்கப்பண்ணினான்.  {Acts  9:22}

 

அநேகநாள்  சென்றபின்பு,  யூதர்கள்<Jews>  அவனைக்  கொலைசெய்யும்படி  ஆலோசனை  பண்ணினார்கள்.  {Acts  9:23}

 

அவர்களுடைய  யோசனை  சவுலுக்குத்<Saul>  தெரியவந்தது.  அவனைக்  கொலைசெய்யும்படி  அவர்கள்  இரவும்  பகலும்  கோட்டைவாசல்களைக்  காத்துக்கொண்டிருந்தார்கள்.  {Acts  9:24}

 

சீஷர்கள்  இராத்திரியிலே  அவனைக்  கூட்டிக்கொண்டுபோய்,  ஒரு  கூடையிலே  வைத்து,  மதில்வழியாய்  இறக்கிவிட்டார்கள்.  {Acts  9:25}

 

சவுல்<Saul>  எருசலேமுக்கு<Jerusalem>  வந்து,  சீஷருடனே  சேர்ந்துகொள்ளப்  பார்த்தான்;  அவர்கள்  அவனைச்  சீஷனென்று  நம்பாமல்  எல்லாரும்  அவனுக்குப்  பயந்திருந்தார்கள்.  {Acts  9:26}

 

அப்பொழுது  பர்னபா<Barnabas>  என்பவன்  அவனைச்  சேர்த்துக்கொண்டு,  அப்போஸ்தலரிடத்தில்  அழைத்துக்கொண்டுபோய்,  வழியிலே  அவன்  கர்த்தரைக்  கண்ட  விதத்தையும்,  அவர்  அவனுடனே  பேசினதையும்,  தமஸ்குவில்<Damascus>  அவன்  இயேசுவின்<Jesus>  நாமத்தினாலே  தைரியமாய்ப்  பிரசங்கித்ததையும்  அவர்களுக்கு  விவரித்துச்  சொன்னான்.  {Acts  9:27}

 

அதன்பின்பு  அவன்  எருசலேமிலே<Jerusalem>  அவர்களிடத்தில்  போக்கும்  வரத்துமாயிருந்து;  {Acts  9:28}

 

கர்த்தராகிய  இயேசுவின்<Jesus>  நாமத்தினாலே  தைரியமாய்ப்  பிரசங்கித்து,  கிரேக்கருடனே<Grecians>  பேசித்  தர்க்கித்தான்;  அவர்களோ  அவனைக்  கொலைசெய்ய  எத்தனம்பண்ணினார்கள்.  {Acts  9:29}

 

சகோதரர்  அதை  அறிந்து,  அவனைச்  செசரியாவுக்கு<Caesarea>  அழைத்துக்கொண்டுபோய்,  தர்சுவுக்கு<Tarsus>  அனுப்பிவிட்டார்கள்.  {Acts  9:30}

 

அப்பொழுது  யூதேயா<Judaea>  கலிலேயா<Galilee>  சமாரியா<Samaria>  நாடுகளிலெங்கும்  சபைகள்  சமாதானம்  பெற்று,  பக்திவிருத்தியடைந்து,  கர்த்தருக்குப்  பயப்படுகிற  பயத்தோடும்,  பரிசுத்தஆவியின்  ஆறுதலோடும்  நடந்து  பெருகின.  {Acts  9:31}

 

பேதுரு<Peter>  போய்  எல்லாரையும்  சந்தித்துவருகையில்,  அவன்  லித்தா<Lydda>  ஊரிலே  குடியிருக்கிற  பரிசுத்தவான்களிடத்திற்கும்  போனான்.  {Acts  9:32}

 

அங்கே  எட்டு  வருஷமாய்க்  கட்டிலின்மேல்  திமிர்வாதமுள்ளவனாய்க்  கிடந்த  ஐனேயா<Aeneas>  என்னும்  பேருள்ள  ஒரு  மனுஷனைக்  கண்டான்.  {Acts  9:33}

 

பேதுரு<Peter>  அவனைப்  பார்த்து:  ஐனேயாவே<Aeneas>,  இயேசுகிறிஸ்து<Jesus  Christ>  உன்னைக்  குணமாக்குகிறார்;  நீ  எழுந்து,  உன்  படுக்கையை  நீயே  போட்டுக்கொள்  என்றான்.  உடனே  அவன்  எழுந்திருந்தான்.  {Acts  9:34}

 

லித்தாவிலும்<Lydda>  சாரோனிலும்<Saron>  குடியிருந்தவர்களெல்லாரும்  அவனைக்  கண்டு,  கர்த்தரிடத்தில்  திரும்பினார்கள்.  {Acts  9:35}

 

யோப்பா<Joppa>  பட்டணத்தில்  கிரேக்குப்பாஷையிலே<Greek>  தொற்காள்<Dorcas>  என்று  அர்த்தங்கொள்ளும்  தபீத்தாள்<Tabitha>  என்னும்  பேருடைய  ஒரு  சீஷி  இருந்தாள்;  அவள்  நற்கிரியைகளையும்  தருமங்களையும்  மிகுதியாய்ச்  செய்துகொண்டுவந்தாள்.  {Acts  9:36}

 

அந்நாட்களில்  அவள்  வியாதிப்பட்டு  மரணமடைந்தாள்.  அவளைக்  குளிப்பாட்டி,  மேல்வீட்டிலே  கிடத்திவைத்தார்கள்.  {Acts  9:37}

 

யோப்பா<Joppa>  பட்டணம்  லித்தா<Lydda>  ஊருக்குச்  சமீபமானபடியினாலே,  பேதுரு<Peter>  அவ்விடத்தில்  இருக்கிறானென்று  சீஷர்கள்  கேள்விப்பட்டு,  தாமதமில்லாமல்  தங்களிடத்தில்  வரவேண்டுமென்று  சொல்லும்படி  இரண்டு  மனுஷரை  அவனிடத்திற்கு  அனுப்பினார்கள்.  {Acts  9:38}

 

பேதுரு<Peter>  எழுந்து,  அவர்களுடனே  கூடப்போனான்.  அவன்  போய்ச்  சேர்ந்தபொழுது,  அவர்கள்  அவனை  மேல்வீட்டுக்கு  அழைத்துக்கொண்டு  போனார்கள்.  அப்பொழுது  விதவைகளெல்லாரும்  அழுது,  தொற்காள்<Dorcas>  தங்களுடனேகூட  இருக்கையில்  செய்திருந்த  அங்கிகளையும்  வஸ்திரங்களையும்  காண்பித்து,  அவனைச்  சூழ்ந்துநின்றார்கள்.  {Acts  9:39}

 

பேதுரு<Peter>  எல்லாரையும்  வெளியே  போகச்செய்து,  முழங்காற்படியிட்டு  ஜெபம்பண்ணி,  பிரேதத்தின்  புறமாய்த்  திரும்பி:  தபீத்தாளே<Tabitha>,  எழுந்திரு  என்றான்.  அப்பொழுது  அவள்  தன்  கண்களைத்  திறந்து,  பேதுருவைப்<Peter>  பார்த்து  உட்கார்ந்தாள்.  {Acts  9:40}

 

அவன்  அவளுக்குக்  கைகொடுத்து,  அவளை  எழுந்திருக்கப்பண்ணி,  பரிசுத்தவான்களையும்  விதவைகளையும்  அழைத்து,  அவளை  உயிருள்ளவளாக  அவர்களுக்கு  முன்  நிறுத்தினான்.  {Acts  9:41}

 

இது  யோப்பா<Joppa>  பட்டணம்  எங்கும்  தெரியவந்தது.  அப்பொழுது  அநேகர்  கர்த்தரிடத்தில்  விசுவாசமுள்ளவர்களானார்கள்.  {Acts  9:42}

 

பின்பு  அவன்  யோப்பா<Joppa>  பட்டணத்திலே  தோல்  பதனிடுகிறவனாகிய  சீமோன்<Simon>  என்னும்  ஒருவனிடத்தில்  அநேகநாள்  தங்கியிருந்தான்.  {Acts  9:43}

 

இத்தாலியா<Italian>  பட்டாளம்  என்னப்பட்ட  பட்டாளத்திலே  நூற்றுக்கு  அதிபதியாகிய  கொர்நேலியு<Cornelius>  என்னும்  பேர்கொண்ட  ஒரு  மனுஷன்  செசரியா<Caesarea>  பட்டணத்திலே  இருந்தான்.  {Acts  10:1}

 

அவன்  தேவபக்தியுள்ளவனும்  தன்வீட்டாரனைவரோடும்  தேவனுக்குப்  பயந்தவனுமாயிருந்து,  ஜனங்களுக்கு  மிகுந்த  தருமங்களைச்  செய்து,  எப்பொழுதும்  தேவனை  நோக்கி  ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான்.  {Acts  10:2}

 

பகலில்  ஏறக்குறைய  ஒன்பதாம்மணி  நேரத்திலே  தேவனுடைய  தூதன்  தன்னிடத்தில்  வரவும்,  கொர்நேலியுவே<Cornelius>,  என்று  அழைக்கவும்  பிரத்தியட்சமாய்த்  தரிசனங்கண்டு,  {Acts  10:3}

 

அவனை  உற்றுப்பார்த்து,  பயந்து:  ஆண்டவரே,  என்ன  என்றான்.  அப்பொழுது  அவன்:  உன்  ஜெபங்களும்  உன்  தருமங்களும்  தேவனுக்கு  நினைப்பூட்டுதலாக  அவர்  சந்நிதியில்  வந்தெட்டியிருக்கிறது.  {Acts  10:4}

 

இப்பொழுது  நீ  யோப்பா<Joppa>  பட்டணத்துக்கு  மனுஷரை  அனுப்பி,  பேதுரு<Peter>  என்று  மறுபேர்கொண்ட  சீமோனை<Simon>  அழைப்பி.  {Acts  10:5}

 

அவன்  தோல்  பதனிடுகிறவனாகிய  சீமோன்<Simon>  என்னும்  ஒருவனிடத்திலே  தங்கியிருக்கிறான்;  அவனுடைய  வீடு  கடலோரத்திலிருக்கிறது.  நீ  செய்யவேண்டியதை  அவன்  உனக்குச்  சொல்லுவான்  என்றான்.  {Acts  10:6}

 

கொர்நேலியு<Cornelius>  தன்னுடனே  பேசின  தேவதூதன்  போனபின்பு,  தன்  வீட்டு  மனுஷரில்  இரண்டுபேரையும்  தன்னிடத்தில்  சேவிக்கிற  போர்ச்சேவகரில்  தேவபக்தியுள்ள  ஒருவனையும்  அழைத்து,  {Acts  10:7}

 

எல்லாவற்றையும்  அவர்களுக்கு  விவரித்துச்  சொல்லி,  அவர்களை  யோப்பா<Joppa>  பட்டணத்துக்கு  அனுப்பினான்.  {Acts  10:8}

 

மறுநாளிலே  அவர்கள்  பிரயாணப்பட்டு,  அந்தப்  பட்டணத்துக்குச்  சமீபித்து  வருகையில்,  பேதுரு<Peter>  ஆறாம்மணி  நேரத்திலே  ஜெபம்பண்ணும்படி  மேல்வீட்டில்  ஏறினான்.  {Acts  10:9}

 

அவன்  மிகுந்த  பசியடைந்து  சாப்பிட  மனதாயிருந்தான்;  அதற்கு  அவர்கள்  ஆயத்தம்பண்ணுகையில்,  அவன்  ஞானதிருஷ்டியடைந்து,  {Acts  10:10}

 

வானம்  திறந்திருக்கிறதாகவும்,  நாலுமுனைகளும்  கட்டப்பட்ட  பெரிய  துப்பட்டியைப்போல  ஒருவிதமான  கூடு  தன்னிடத்தில்  இறங்கித்  தரையில்  விடப்பட்டிருக்கிறதாகவும்,  {Acts  10:11}

 

அதிலே  பூமியிலுள்ள  சகலவிதமான  நாலுகால்  ஜீவன்களும்,  காட்டுமிருகங்களும்,  ஊரும்  பிராணிகளும்,  ஆகாயத்துப்  பறவைகளும்  இருக்கிறதாகவும்  கண்டான்.  {Acts  10:12}

 

அல்லாமலும்:  பேதுருவே<Peter>,  எழுந்திரு,  அடித்துப்  புசி  என்று  அவனுக்குச்  சொல்லும்  ஒரு  சத்தம்  உண்டாயிற்று.  {Acts  10:13}

 

அதற்குப்  பேதுரு<Peter>:  அப்படியல்ல,  ஆண்டவரே,  தீட்டும்  அசுத்தமுமாயிருக்கிற  யாதொன்றையும்  நான்  ஒருக்காலும்  புசித்ததில்லை  என்றான்.  {Acts  10:14}

 

அப்பொழுது:  தேவன்  சுத்தமாக்கினவைகளை  நீ  தீட்டாக  எண்ணாதே  என்று  இரண்டாந்தரமும்  சத்தம்  அவனுக்கு  உண்டாயிற்று.  {Acts  10:15}

 

மூன்றாந்தரமும்  அப்படியே  உண்டாயிற்று.  பின்பு  அந்தக்  கூடு  திரும்ப  வானத்துக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டது.  {Acts  10:16}

 

அப்பொழுது  பேதுரு<Peter>,  தான்  கண்ட  தரிசனத்தைக்குறித்துத்  தனக்குள்ளே  சந்தேகப்படுகையில்,  இதோ,  கொர்நேலியுவினால்<Cornelius>  அனுப்பப்பட்ட  மனுஷர்கள்  சீமோனுடைய<Simon>  வீட்டை  விசாரித்துக்கொண்டு  வாசற்படியிலே  வந்து  நின்று:  {Acts  10:17}

 

பேதுரு<Peter>  என்று  மறுபேர்கொண்ட  சீமோன்<Simon>  இங்கே  தங்கியிருக்கிறாரா  என்று  கேட்டார்கள்.  {Acts  10:18}

 

பேதுரு<Peter>  அந்தத்  தரிசனத்தைக்  குறித்துச்  சிந்தனை  பண்ணிக்கொண்டிருக்கையில்,  ஆவியானவர்:  இதோ,  மூன்று  மனுஷர்  உன்னைத்  தேடுகிறார்கள்.  {Acts  10:19}

 

நீ  எழுந்து,  இறங்கி,  ஒன்றுக்குஞ்  சந்தேகப்படாமல்,  அவர்களுடனே  கூடப்போ;  நானே  அவர்களை  அனுப்பினேன்  என்று  அவனுக்குச்  சொன்னார்.  {Acts  10:20}

 

அப்பொழுது  பேதுரு<Peter>  கொர்நேலியுவினால்<Cornelius>  தன்னிடத்தில்  அனுப்பப்பட்ட  மனுஷரிடத்திற்கு  இறங்கிப்போய்:  இதோ,  நீங்கள்  தேடுகிறவன்  நான்தான்,  நீங்கள்  வந்திருக்கிற  காரியம்  என்ன  என்றான்.  {Acts  10:21}

 

அதற்கு  அவர்கள்:  நீதிமானும்,  தேவனுக்குப்  பயப்படுகிறவரும்,  யூதஜனங்களெல்லாராலும்<Jews>  நல்லவரென்று  சாட்சி  பெற்றவருமாகிய  கொர்நேலியு<Cornelius>  என்னும்  நூற்றுக்கு  அதிபதி  உம்மைத்  தம்முடைய  வீட்டுக்கு  அழைப்பித்து,  உம்மால்  சொல்லப்படும்  வார்த்தைகளைக்  கேட்கும்படி  பரிசுத்த  தூதனாலே  தேவயத்தனமாய்க்  கட்டளைபெற்றார்  என்றார்கள்.  {Acts  10:22}

 

அப்பொழுது  பேதுரு<Peter>  அவர்களை  உள்ளே  அழைத்து,  அவர்களுக்கு  உபசாரஞ்செய்து,  மறுநாளிலே  அவர்களுடனேகூடப்  புறப்பட்டான்;  யோப்பா<Joppa>  பட்டணத்தாராகிய  சகோதரரில்  சிலரும்  அவனுடனேகூடப்  போனார்கள்.  {Acts  10:23}

 

மறுநாளிலே  செசரியா<Caesarea>  பட்டணத்தில்  பிரவேசித்தார்கள்.  கொர்நேலியு<Cornelius>  தன்  உறவின்முறையாரையும்  தன்னுடைய  விசேஷித்த  சிநேகிதரையும்  கூடவரவழைத்து,  அவர்களுக்காகக்  காத்திருந்தான்.  {Acts  10:24}

 

பேதுரு<Peter>  உள்ளே  பிரவேசிக்கிறபொழுது,  கொர்நேலியு<Cornelius>  அவனுக்கு  எதிர்கொண்டுபோய்,  அவன்  பாதத்தில்  விழுந்து,  பணிந்துகொண்டான்.  {Acts  10:25}

 

பேதுரு<Peter>  அவனைத்  தூக்கியெடுத்து:  எழுந்திரும்,  நானும்  ஒரு  மனுஷன்தான்  என்றான்.  {Acts  10:26}

 

அவனுடனே  பேசிக்கொண்டு,  உள்ளே  போய்,  அநேகர்  கூடிவந்திருக்கிறதைக்  கண்டு,  {Acts  10:27}

 

அவர்களை  நோக்கி:  அந்நிய  ஜாதியானோடே  கலந்து  அவனிடத்தில்  போக்குவரவாயிருப்பது  யூதனானவனுக்கு<Jew>  விலக்கப்பட்டிருக்கிறதென்று  நீங்கள்  அறிந்திருக்கிறீர்கள்;  அப்படியிருந்தும்,  எந்த  மனுஷனையும்  தீட்டுள்ளவனென்றும்  அசுத்தனென்றும்  நான்  சொல்லாதபடிக்கு  தேவன்  எனக்குக்  காண்பித்திருக்கிறார்.  {Acts  10:28}

 

ஆகையால்  நீங்கள்  என்னை  அழைப்பித்தபோது  நான்  எதிர்பேசாமல்  வந்தேன்.  இப்போதும்  என்ன  காரியத்துக்காக  என்னை  அழைப்பித்தீர்கள்  என்று  கேட்கிறேன்  என்றான்.  {Acts  10:29}

 

அதற்குக்  கொர்நேலியு<Cornelius>:  நாலு  நாளைக்கு  முன்னே  இந்நேரத்திலே  நான்  உபவாசித்து,  ஒன்பதாம்மணி  நேரத்தில்  என்  வீட்டிலே  ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தேன்;  அப்பொழுது  பிரகாசமுள்ள  வஸ்திரந்தரித்த  மனுஷன்  ஒருவன்  எனக்கு  முன்பாக  நின்று:  {Acts  10:30}

 

கொர்நேலியுவே<Cornelius>,  உன்  ஜெபம்  கேட்கப்பட்டது,  உன்  தானதருமங்கள்  தேவசந்நிதியில்  நினைத்தருளப்பட்டது.  {Acts  10:31}

 

யோப்பா<Joppa>  பட்டணத்துக்கு  ஆள்  அனுப்பி,  பேதுரு<Peter>  என்று  மறுபேர்கொண்ட  சீமோனை<Simon>  வரவழைப்பாயாக,  அவன்  கடலோரத்திலே  தோல்பதனிடுகிறவனாகிய  சீமோனுடைய<Simon>  வீட்டிலே  தங்கியிருக்கிறான்;  அவன்  வந்து  உன்னிடத்தில்  பேசுவான்  என்றார்.  {Acts  10:32}

 

அந்தப்படியே  நான்  உடனே  உம்மிடத்திற்கு  ஆள்  அனுப்பினேன்;  நீர்  வந்தது  நல்ல  காரியம்;  தேவனாலே  உமக்குக்  கட்டளையிடப்பட்ட  யாவையும்  கேட்கும்படிக்கு  நாங்கள்  எல்லாரும்  இப்பொழுது  இங்கே  தேவசமுகத்தில்  கூடியிருக்கிறோம்  என்றான்.  {Acts  10:33}

 

அப்பொழுது  பேதுரு<Peter>  பேசத்தொடங்கி:  தேவன்  பட்சபாதமுள்ளவரல்ல  என்றும்,  {Acts  10:34}

 

எந்த  ஜனத்திலாயினும்  அவருக்குப்  பயந்திருந்து  நீதியைச்  செய்கிறவன்  எவனோ  அவனே  அவருக்கு  உகந்தவன்  என்றும்  நிச்சயமாய்  அறிந்திருக்கிறேன்.  {Acts  10:35}

 

எல்லாருக்கும்  கர்த்தராயிருக்கிற  இயேசுகிறிஸ்துவைக்கொண்டு<Jesus  Christ>  அவர்  சமாதானத்தைச்  சுவிசேஷமாய்க்  கூறி,  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்கு  அனுப்பின  வார்த்தையை  அறிந்திருக்கிறீர்களே.  {Acts  10:36}

 

யோவான்<John>  ஞானஸ்நானத்தைக்குறித்துப்  பிரசங்கித்தபின்பு,  கலிலேயா<Galilee>  நாடு  முதற்கொண்டு  யூதேயா<Judaea>  தேசமெங்கும்  நடந்த  சங்கதி  இதுவே.  {Acts  10:37}

 

நசரேயனாகிய<Nazarene>  இயேசுவைத்<Jesus>  தேவன்  பரிசுத்தஆவியினாலும்  வல்லமையினாலும்  அபிஷேகம்பண்ணினார்;  தேவன்  அவருடனேகூட  இருந்தபடியினாலே  அவர்  நன்மைசெய்கிறவராயும்  பிசாசின்  வல்லமையில்  அகப்பட்ட  யாவரையும்  குணமாக்குகிறவராயும்  சுற்றித்திரிந்தார்.  {Acts  10:38}

 

யூதருடைய<Jews>  தேசத்திலும்  எருசலேமிலும்<Jerusalem>  அவர்  செய்தவைகளெல்லாவற்றிற்கும்  நாங்கள்  சாட்சிகளாயிருக்கிறோம்.  அவரை  மரத்திலே  தூக்கிக்  கொலைசெய்தார்கள்.  {Acts  10:39}

 

மூன்றாம்  நாளிலே  தேவன்  அவரை  எழுப்பிப்  பிரத்தியட்சமாய்க்  காணும்படி  செய்தார்.  {Acts  10:40}

 

ஆயினும்  எல்லா  ஜனங்களுக்கும்  பிரத்தியட்சமாகும்படி  செய்யாமல்,  அவர்  மரித்தோரிலிருந்து  எழுந்தபின்பு  அவரோடே  புசித்துக்  குடித்தவர்களும்  தேவனால்  முன்பு  நியமிக்கப்பட்ட  சாட்சிகளுமாகிய  எங்களுக்கே  பிரத்தியட்சமாகும்படி  செய்தார்.  {Acts  10:41}

 

அன்றியும்  அவரே  உயிரோடிருக்கிறவர்களுக்கும்  மரித்தோர்களுக்கும்  தேவனால்  ஏற்படுத்தப்பட்ட  நியாயாதிபதியென்று  ஜனங்களுக்குப்  பிரசங்கிக்கவும்,  சாட்சியாக  ஒப்புவிக்கவும்,  அவர்  எங்களுக்குக்  கட்டளையிட்டார்.  {Acts  10:42}

 

அவரை  விசுவாசிக்கிறவன்  எவனோ  அவன்  அவருடைய  நாமத்தினாலே  பாவமன்னிப்பைப்  பெறுவானென்று  தீர்க்கதரிசிகளெல்லாரும்  அவரைக்குறித்தே  சாட்சிகொடுக்கிறார்கள்  என்றான்.  {Acts  10:43}

 

இந்த  வார்த்தைகளைப்  பேதுரு<Peter>  பேசிக்கொண்டிருக்கையில்  வசனத்தைக்கேட்டவர்கள்  யாவர்மேலும்  பரிசுத்த  ஆவியானவர்  இறங்கினார்.  {Acts  10:44}

 

அவர்கள்  பல  பாஷைகளைப்  பேசுகிறதையும்,  தேவனைப்  புகழுகிறதையும்,  {Acts  10:45}

 

பேதுருவோடேகூட<Peter>  வந்திருந்த  விருத்தசேதனமுள்ள  விசுவாசிகள்  கேட்கும்போது,  பரிசுத்தஆவியின்  வரம்  புறஜாதிகள்மேலும்  பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப்  பிரமித்தார்கள்.  {Acts  10:46}

 

அப்பொழுது  பேதுரு<Peter>:  நம்மைப்போலப்  பரிசுத்தஆவியைப்  பெற்ற  இவர்களும்  ஞானஸ்நானம்  பெறாதபடிக்கு  எவனாகிலும்  தண்ணீரை  விலக்கலாமா  என்று  சொல்லி,  {Acts  10:47}

 

கர்த்தருடைய  நாமத்தினாலே  அவர்களுக்கு  ஞானஸ்நானங்கொடுக்கும்படி  கட்டளையிட்டான்.  அப்பொழுது  சிலநாள்  அங்கே  தங்கும்படி  அவனை  வேண்டிக்கொண்டார்கள்.  {Acts  10:48}

 

புறஜாதியாரும்  தேவவசனத்தை  ஏற்றுக்கொண்டார்களென்று  யூதேயாவிலிருக்கிற<Judaea>  அப்போஸ்தலரும்  சகோதரரும்  கேள்விப்பட்டார்கள்.  {Acts  11:1}

 

பேதுரு<Peter>  எருசலேமுக்குத்<Jerusalem>  திரும்பிவந்தபோது,  விருத்தசேதனமுள்ளவர்கள்  அவனை  நோக்கி:  {Acts  11:2}

 

விருத்தசேதனமில்லாத  மனுஷரிடத்தில்  நீர்  போய்,  அவர்களோடே  போஜனம்பண்ணினீர்  என்று,  அவனோடே  வாக்குவாதம்பண்ணினார்கள்.  {Acts  11:3}

 

அதற்குப்  பேதுரு<Peter>  காரியத்தை  முதலிலிருந்து  வரிசையாய்  அவர்களுக்கு  விவரிக்கத்  தொடங்கி:  {Acts  11:4}

 

நான்  யோப்பா<Joppa>  பட்டணத்தில்  ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தபோது  ஞானதிருஷ்டியடைந்து,  ஒரு  தரிசனத்தைக்கண்டேன்;  அதென்னவென்றால்,  நாலு  முனைகளும்  கட்டப்பட்ட  பெரிய  துப்பட்டியைப்போல  ஒரு  கூடு  வானத்திலிருந்து  என்னிடத்தில்  இறங்கிவந்தது.  {Acts  11:5}

 

அதிலே  நான்  உற்றுப்பார்த்துக்  கவனிக்கிறபோது,  பூமியிலுள்ள  நாலுகால்  ஜீவன்களையும்,  காட்டுமிருகங்களையும்,  ஊரும்  பிராணிகளையும்,  ஆகாயத்துப்  பறவைகளையும்  கண்டேன்.  {Acts  11:6}

 

அல்லாமலும்:  பேதுருவே<Peter>,  எழுந்திரு,  அடித்துப்  புசி  என்று  என்னுடனே  சொல்லுகிற  சத்தத்தையும்  கேட்டேன்.  {Acts  11:7}

 

அதற்கு  நான்:  ஆண்டவரே,  அப்படியல்ல,  தீட்டும்  அசுத்தமுமாயிருக்கிற  யாதொன்றும்  ஒருக்காலும்  என்  வாய்க்குள்ளே  போனதில்லை  என்றேன்.  {Acts  11:8}

 

இரண்டாந்தரமும்  வானத்திலிருந்து  சத்தம்  உண்டாகி:  தேவன்  சுத்தமாக்கினவைகளை  நீ  தீட்டாக  எண்ணாதேயென்று  மறுமொழி  சொல்லிற்று.  {Acts  11:9}

 

இப்படி  மூன்றுதரம்  சம்பவித்த  பின்பு,  எல்லாம்  வானத்திற்குத்  திரும்ப  எடுத்துக்கொள்ளப்பட்டது.  {Acts  11:10}

 

உடனே  செசரியாவிலிருந்து<Caesarea>  என்னிடத்திற்கு  அனுப்பப்பட்ட  மூன்று  மனுஷர்  நான்  இருந்த  வீட்டுக்குமுன்னே  வந்து  நின்றார்கள்.  {Acts  11:11}

 

நான்  ஒன்றுக்கும்  சந்தேகப்படாமல்  அவர்களோடேகூடப்  போகும்படி  ஆவியானவர்  எனக்குக்  கட்டளையிட்டார்.  சகோதரராகிய  இந்த  ஆறுபேரும்  என்னோடேகூட  வந்தார்கள்;  அந்த  மனுஷனுடைய  வீட்டுக்குள்  பிரவேசித்தோம்.  {Acts  11:12}

 

அவனோ  தன்  வீட்டிலே  ஒரு  தேவதூதன்  நிற்கிறதைக்  கண்டதாகவும்,  யோப்பா<Joppa>  பட்டணத்திலிருக்கிற  பேதுரு<Peter>  என்று  மறுபேர்கொண்ட  சீமோனை<Simon>  அழைக்கும்படிக்கு  மனுஷரை  அவ்விடத்திற்கு  அனுப்பு;  {Acts  11:13}

 

நீயும்  உன்  வீட்டாரனைவரும்  இரட்சிக்கப்படுவதற்கேதுவான  வார்த்தைகளை  அவன்  உனக்குச்  சொல்லுவான்  என்று  அந்தத்  தூதன்  தனக்குச்  சொன்னதாகவும்  எங்களுக்கு  அறிவித்தான்.  {Acts  11:14}

 

நான்  பேசத்தொடங்கினபோது,  பரிசுத்த  ஆவியானவர்  ஆதியிலே  நம்மேல்  இறங்கினதுபோலவே,  அவர்கள்மேலும்  இறங்கினார்.  {Acts  11:15}

 

யோவான்<John>  ஜலத்தினாலே  ஞானஸ்நானங்  கொடுத்தான்,  நீங்களோ  பரிசுத்த  ஆவியினாலே  ஞானஸ்நானம்  பெறுவீர்கள்  என்று  கர்த்தர்  சொன்ன  வார்த்தையை  அப்பொழுது  நினைவுகூர்ந்தேன்.  {Acts  11:16}

 

ஆதலால்  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவை<Jesus  Christ>  விசுவாசித்திருக்கிற  நமக்குத்  தேவன்  வரத்தை  அநுக்கிரகம்பண்ணினதுபோல  அவர்களுக்கும்  அந்த  வரத்தையே  அநுக்கிரகம்பண்ணியிருக்கும்போது  தேவனைத்  தடுக்கிறதற்கு  நான்  எம்மாத்திரம்  என்றான்.  {Acts  11:17}

 

இவைகளை  அவர்கள்  கேட்டபொழுது  அமர்ந்திருந்து:  அப்படியானால்  ஜீவனுக்கேதுவான  மனந்திரும்புதலைத்  தேவன்  புறஜாதியாருக்கும்  அருளிச்செய்தார்  என்று  சொல்லி,  தேவனை  மகிமைப்படுத்தினார்கள்.  {Acts  11:18}

 

ஸ்தேவான்<Stephen>  நிமித்தமாய்  எழும்பின  உபத்திரவத்தினாலே  சிதறப்பட்டவர்கள்  சுவிசேஷ  வசனத்தை  யூதர்களுக்கேயன்றி<Jews>  மற்ற  ஒருவருக்கும்  அறிவியாமல்,  பெனிக்கேநாடு<Phenice>,  சீப்புருதீவு<Cyprus>,  அந்தியோகியா<Antioch>  பட்டணம்வரைக்கும்  சுற்றித்திரிந்தார்கள்.  {Acts  11:19}

 

அவர்களில்  சீப்புருதீவாரும்<Cyprus>  சிரேனே<Cyrene>  பட்டணத்தாருமாகிய  சிலர்  அந்தியோகியா<Antioch>  பட்டணத்துக்கு  வந்து,  கிரேக்கருடனே<Grecians>  பேசிக்  கர்த்தராகிய  இயேசுவைக்குறித்துப்<Jesus>  பிரசங்கித்தார்கள்.  {Acts  11:20}

 

கர்த்தருடைய  கரம்  அவர்களோடே  இருந்தது;  அநேக  ஜனங்கள்  விசுவாசிகளாகி,  கர்த்தரிடத்தில்  திரும்பினார்கள்.  {Acts  11:21}

 

எருசலேமிலுள்ள<Jerusalem>  சபையார்  இந்தக்  காரியங்களைக்குறித்துக்  கேள்விப்பட்டபோது,  அந்தியோகியாவரைக்கும்<Antioch>  போகும்படிக்குப்  பர்னபாவை<Barnabas>  அனுப்பினார்கள்.  {Acts  11:22}

 

அவன்  போய்ச்  சேர்ந்து,  தேவனுடைய  கிருபையைக்  கண்டபோது,  சந்தோஷப்பட்டு,  கர்த்தரிடத்தில்  மனநிர்ணயமாய்  நிலைத்திருக்கும்படி  எல்லாருக்கும்  புத்திசொன்னான்.  {Acts  11:23}

 

அவன்  நல்லவனும்,  பரிசுத்தஆவியினாலும்  விசுவாசத்தினாலும்  நிறைந்தவனுமாயிருந்தான்;  அநேக  ஜனங்கள்  கர்த்தரிடமாய்ச்  சேர்க்கப்பட்டார்கள்.  {Acts  11:24}

 

பின்பு  பர்னபா<Barnabas>  சவுலைத்<Saul>  தேடும்படி,  தர்சுவுக்குப்<Tarsus>  புறப்பட்டுப்போய்,  அவனைக்கண்டு,  அந்தியோகியாவுக்கு<Antioch>  அழைத்துக்கொண்டுவந்தான்.  {Acts  11:25}

 

அவர்கள்  ஒரு  வருஷகாலமாய்ச்  சபையோடே  கூடியிருந்து,  அநேக  ஜனங்களுக்கு  உபதேசம்பண்ணினார்கள்.  முதல்  முதல்  அந்தியோகியாவிலே<Antioch>  சீஷர்களுக்குக்  கிறிஸ்தவர்கள்<Christians>  என்கிற  பேர்  வழங்கிற்று.  {Acts  11:26}

 

அந்நாட்களிலே  எருசலேமிலிருந்து<Jerusalem>  சில  தீர்க்கதரிசிகள்  அந்தியோகியாவுக்கு<Antioch>  வந்தார்கள்.  {Acts  11:27}

 

அவர்களில்  ஒருவனாகிய  அகபு<Agabus>  என்பவன்  எழுந்து,  உலகமெங்கும்  கொடிய  பஞ்சம்  உண்டாகும்  என்று  ஆவியானவராலே  அறிவித்தான்;  அது  அப்படியே  கிலவுதியு  ராயனுடைய<Claudius  Caesar>  நாட்களிலே  உண்டாயிற்று.  {Acts  11:28}

 

அப்பொழுது  சீஷரில்  அவரவர்  தங்கள்  தங்கள்  திராணிக்குத்தக்கதாக  யூதேயாவில்<Judaea>  குடியிருக்கிற  சகோதரருக்கு  உதவியாகப்  பணஞ்  சேகரித்து  அனுப்பவேண்டுமென்று  தீர்மானம்பண்ணினார்கள்.  {Acts  11:29}

 

அப்படியே  அவர்கள்  சேகரித்து,  பர்னபா<Barnabas>  சவுல்<Saul>  என்பவர்களுடைய  கையிலே  கொடுத்து,  மூப்பரிடத்திற்கு  அனுப்பினார்கள்.  {Acts  11:30}

 

அக்காலத்திலே  ஏரோதுராஜா<Herod>  சபையிலே  சிலரைத்  துன்பப்படுத்தத்தொடங்கி;  {Acts  12:1}

 

யோவானுடைய<John>  சகோதரனாகிய  யாக்கோபைப்<James>  பட்டயத்தினாலே  கொலைசெய்தான்.  {Acts  12:2}

 

அது  யூதருக்குப்<Jews>  பிரியமாயிருக்கிறதென்று  அவன்  கண்டு,  பேதுருவையும்<Peter>  பிடிக்கத்தொடர்ந்தான்.  அப்பொழுது  புளிப்பில்லாத  அப்பப்பண்டிகை  நாட்களாயிருந்தது.  {Acts  12:3}

 

அவனைப்  பிடித்துச்  சிறைச்சாலையிலே  வைத்து,  பஸ்காபண்டிகைக்குப்  பின்பு  ஜனங்களுக்கு  முன்பாக  அவனை  வெளியே  கொண்டுவரலாமென்று  எண்ணி,  அவனைக்  காக்கும்படி  வகுப்புக்கு  நான்கு  போர்ச்சேவகராக  ஏற்படுத்திய  நான்கு  வகுப்புகளின்  வசமாக  ஒப்புவித்தான்.  {Acts  12:4}

 

அப்படியே  பேதுரு<Peter>  சிறைச்சாலையிலே  காக்கப்பட்டிருக்கையில்  சபையார்  அவனுக்காகத்  தேவனை  நோக்கி  ஊக்கத்தோடே  ஜெபம்பண்ணினார்கள்.  {Acts  12:5}

 

ஏரோது<Herod>  அவனை  வெளியே  கொண்டுவரும்படி  குறித்திருந்த  நாளுக்கு  முந்தின  நாள்  இராத்திரியிலே,  பேதுரு<Peter>  இரண்டு  சங்கிலிகளினாலே  கட்டப்பட்டு,  இரண்டு  சேவகர்  நடுவே  நித்திரைபண்ணிக்கொண்டிருந்தான்;  காவற்காரரும்  கதவுக்கு  முன்னிருந்து  சிறைச்சாலையைக்  காத்துக்கொண்டிருந்தார்கள்.  {Acts  12:6}

 

அப்பொழுது  கர்த்தருடைய  தூதன்  அங்கே  வந்து  நின்றான்;  அறையிலே  வெளிச்சம்  பிரகாசித்தது.  அவன்  பேதுருவை<Peter>  விலாவிலே  தட்டி,  சீக்கிரமாய்  எழுந்திரு  என்று  அவனை  எழுப்பினான்.  உடனே  சங்கிலிகள்  அவன்  கைகளிலிருந்து  விழுந்தது.  {Acts  12:7}

 

தூதன்  அவனை  நோக்கி:  உன்  அரையைக்  கட்டி,  உன்  பாதரட்சைகளைத்  தொடுத்துக்கொள்  என்றான்.  அவன்  அந்தப்படியே  செய்தான்.  தூதன்  பின்னும்  அவனை  நோக்கி:  உன்  வஸ்திரத்தைப்  போர்த்துக்கொண்டு  என்  பின்னே  வா  என்றான்.  {Acts  12:8}

 

அந்தப்படியே  அவன்  புறப்பட்டு  அவனுக்குப்  பின்சென்று,  தூதனால்  செய்யப்பட்டது  மெய்யென்று  அறியாமல்,  தான்  ஒரு  தரிசனங்காண்கிறதாக  நினைத்தான்.  {Acts  12:9}

 

அவர்கள்  முதலாங்காவலையும்  இரண்டாங்காவலையும்  கடந்து,  நகரத்திற்குப்போகிற  இருப்புக்கதவண்டையிலே  வந்தபோது  அது  தானாய்  அவர்களுக்குத்  திறவுண்டது;  அதின்  வழியாய்  அவர்கள்  புறப்பட்டு  ஒரு  வீதி  நெடுக  நடந்துபோனார்கள்;  உடனே  தூதன்  அவனை  விட்டுப்போய்விட்டான்.  {Acts  12:10}

 

பேதுருவுக்குத்<Peter>  தெளிவு  வந்தபோது:  ஏரோதின்<Herod>  கைக்கும்  யூதஜனங்களின்<Jews>  எண்ணங்களுக்கும்  என்னை  விடுதலையாக்கும்படிக்குக்  கர்த்தர்  தம்முடைய  தூதனை  அனுப்பினாரென்று  நான்  இப்பொழுது  மெய்யாய்  அறிந்திருக்கிறேன்  என்றான்.  {Acts  12:11}

 

அவன்  இப்படி  நிச்சயித்துக்கொண்டு,  மாற்கு<Mark>  என்னும்  பேர்கொண்ட  யோவானுடைய<John>  தாயாகிய  மரியாள்<Mary>  வீட்டுக்கு  வந்தான்;  அங்கே  அநேகர்  கூடி  ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.  {Acts  12:12}

 

பேதுரு<Peter>  வாசற்கதவைத்  தட்டினபோது  ரோதை<Rhoda>  என்னும்  பேர்கொண்ட  ஒரு  பெண்  ஒற்றுக்கேட்க  வந்தாள்.  {Acts  12:13}

 

அவள்  பேதுருவின்<Peter>  சத்தத்தை  அறிந்து  சந்தோஷத்தினால்  கதவைத்  திறவாமல்,  உள்ளேயோடி,  பேதுரு<Peter>  வாசலுக்குமுன்னே  நிற்கிறார்  என்று  அறிவித்தாள்.  {Acts  12:14}

 

அவர்கள்:  நீ  பிதற்றுகிறாய்  என்றார்கள்.  அவளோ  அவர்தானென்று  உறுதியாய்ச்  சாதித்தாள்.  அப்பொழுது  அவர்கள்:  அவருடைய  தூதனாயிருக்கலாம்  என்றார்கள்.  {Acts  12:15}

 

பேதுரு<Peter>  பின்னும்  தட்டிக்கொண்டிருந்தான்.  அவர்கள்  திறந்தபோது  அவனைக்  கண்டு  பிரமித்தார்கள்.  {Acts  12:16}

 

அவர்கள்  பேசாமலிருக்கும்படி  அவன்  கையமர்த்தி,  கர்த்தர்  தன்னைக்  காவலிலிருந்து  விடுதலையாக்கின  விதத்தை  அவர்களுக்கு  விவரித்து,  இந்தச்  செய்தியை  யாக்கோபுக்கும்<James>  சகோதரருக்கும்  அறிவியுங்கள்  என்று  சொல்லி;  புறப்பட்டு,  வேறொரு  இடத்திற்குப்  போனான்.  {Acts  12:17}

 

பொழுது  விடிந்தபின்பு  பேதுருவைக்குறித்துச்<Peter>  சேவகருக்குள்ளே  உண்டான  கலக்கம்  கொஞ்சமல்ல.  {Acts  12:18}

 

ஏரோது<Herod>  அவனைத்  தேடிக்  காணாமற்போனபோது,  காவற்காரரை  விசாரணைசெய்து,  அவர்களைக்  கொலைசெய்யும்படி  கட்டளையிட்டு,  பின்பு  யூதேயாதேசத்தை<Judaea>  விட்டுச்  செசரியா<Caesarea>  பட்டணத்துக்குப்போய்,  அங்கே  வாசம்பண்ணினான்.  {Acts  12:19}

 

அக்காலத்திலே  ஏரோது<Herod>  தீரியர்பேரிலும்<Tyre>  சீதோனியர்பேரிலும்<Sidon>  மிகவுங்  கோபமாயிருந்தான்.  தங்கள்  தேசம்  ராஜாவின்  தேசத்தினால்  போஷிக்கப்பட்டபடியினால்,  அவர்கள்  ஒருமனப்பட்டு,  அவனிடத்தில்  வந்து,  ராஜாவின்  வீட்டு  விசாரணைக்காரனாகிய  பிலாஸ்துவைத்<Blastus>  தங்கள்  வசமாக்கிச்  சமாதானம்  கேட்டுக்கொண்டார்கள்.  {Acts  12:20}

 

குறித்தநாளிலே,  ஏரோது<Herod>  ராஜவஸ்திரம்  தரித்துக்கொண்டு,  சிங்காசனத்தின்மேல்  உட்கார்ந்து,  அவர்களுக்குப்  பிரசங்கம்பண்ணினான்.  {Acts  12:21}

 

அப்பொழுது  ஜனங்கள்  இது  மனுஷசத்தமல்ல,  இது  தேவசத்தம்  என்று  ஆர்ப்பரித்தார்கள்.  {Acts  12:22}

 

அவன்  தேவனுக்கு  மகிமையைச்  செலுத்தாதபடியினால்  உடனே  கர்த்தருடைய  தூதன்  அவனை  அடித்தான்;  அவன்  புழுப்புழுத்து  இறந்தான்.  {Acts  12:23}

 

தேவவசனம்  வளர்ந்து  பெருகிற்று.  {Acts  12:24}

 

பர்னபாவும்<Barnabas>  சவுலும்<Saul>  தர்ம  ஊழியத்தை  நிறைவேற்றினபின்பு  மாற்கு<Mark>  என்னும்  மறுபேர்கொண்ட  யோவானைக்<John>  கூட்டிக்கொண்டு  எருசலேமைவிட்டுத்<Jerusalem>  திரும்பிவந்தார்கள்.  {Acts  12:25}

 

அந்தியோகியா<Antioch>  பட்டணத்திலுள்ள  சபையிலே  பர்னபாவும்<Barnabas>,  நீகர்<Niger>  என்னப்பட்ட  சிமியோனும்<Simeon>,  சிரேனே<Cyrene>  ஊரானாகிய  லூகியும்<Lucius>,  காற்பங்கு  தேசாதிபதியாகிய  ஏரோதுடனேகூட<Herod>  வளர்க்கப்பட்ட  மனாயீனும்<Manaen>,  சவுலும்<Saul>,  தீர்க்கதரிசிகளாயும்  போதகர்களாயும்  இருந்தார்கள்.  {Acts  13:1}

 

அவர்கள்  கர்த்தருக்கு  ஆராதனைசெய்து,  உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது:  பர்னபாவையும்<Barnabas>  சவுலையும்<Saul>  நான்  அழைத்த  ஊழியத்துக்காக  அவர்களைப்  பிரித்துவிடுங்கள்  என்று  பரிசுத்தஆவியானவர்  திருவுளம்பற்றினார்.  {Acts  13:2}

 

அப்பொழுது  உபவாசித்து  ஜெபம்பண்ணி,  அவர்கள்மேல்  கைகளை  வைத்து,  அவர்களை  அனுப்பினார்கள்.  {Acts  13:3}

 

அப்படியே  அவர்கள்  பரிசுத்தஆவியினால்  அனுப்பப்பட்டுச்  செலூக்கியாபட்டணத்துக்கு<Seleucia>  வந்து,  கப்பல்  ஏறி,  அங்கிருந்து  சீப்புருதீவுக்குப்<Cyprus>  போனார்கள்.  {Acts  13:4}

 

சாலமி<Salamis>  பட்டணத்தில்  வந்தபோது  அவர்கள்  யூதருடைய<Jews>  ஜெபஆலயங்களில்  தேவவசனத்தைப்  பிரசங்கித்தார்கள்.  யோவானும்<John>  அவர்களுக்கு  உதவிக்காரனாயிருந்தான்.  {Acts  13:5}

 

அவர்கள்  பாப்போ<Paphos>  பட்டணம்வரைக்கும்  தீவைக்  கடந்துவந்தபோது,  பர்யேசு<Barjesus>  என்னும்  பேர்கொண்ட  மாயவித்தைக்காரனும்  கள்ளத்  தீர்க்கதரிசியுமான  ஒரு  யூதனைக்<Jew>  கண்டார்கள்.  {Acts  13:6}

 

அவன்  விவேகமுள்ள  மனுஷனாகிய  செர்கியுபவுல்<Sergius  Paulus>  என்னும்  அதிபதியுடனேகூட  இருந்தான்.  அந்த  அதிபதி  பர்னபாவையும்<Barnabas>  சவுலையும்<Saul>  அழைப்பித்து,  அவர்களிடத்தில்  தேவவசனத்தைக்  கேட்க  ஆசையாயிருந்தான்.  {Acts  13:7}

 

மாயவித்தைக்காரன்  என்று  அர்த்தங்கொள்ளும்  பேரையுடைய  அந்த  எலிமா<Elymas>  என்பவன்  அதிபதியை  விசுவாசத்தினின்று  திருப்பும்படி  வகைதேடி,  அவர்களோடு  எதிர்த்துநின்றான்.  {Acts  13:8}

 

அப்பொழுது  பவுல்<Paul>  என்று  சொல்லப்பட்ட  சவுல்<Saul>  பரிசுத்தஆவியினால்  நிறைந்தவனாய்  அவனை  உற்றுப்பார்த்து:  {Acts  13:9}

 

எல்லாக்  கபடமும்  எல்லாப்  பொல்லாங்கும்  நிறைந்தவனே,  பிசாசின்  மகனே,  நீதிக்கெல்லாம்  பகைஞனே,  கர்த்தருடைய  செம்மையான  வழிகளைப்  புரட்டுவதில்  ஓயமாட்டாயோ?  {Acts  13:10}

 

இதோ,  இப்பொழுதே,  கர்த்தருடைய  கை  உன்மேல்  வந்திருக்கிறது,  சிலகாலம்  சூரியனைக்  காணாமல்  நீ  குருடனாயிருப்பாய்  என்றான்.  உடனே  மந்தாரமும்  இருளும்  அவன்மேல்  விழுந்தது;  அவன்  தடுமாறி,  கைலாகு  கொடுக்கிறவர்களைத்  தேடினான்.  {Acts  13:11}

 

அப்பொழுது  அதிபதி  சம்பவித்ததைக்  கண்டு,  கர்த்தருடைய  உபதேசத்தைக்குறித்து  அதிசயப்பட்டு,  விசுவாசித்தான்.  {Acts  13:12}

 

பின்பு  பவுலும்<Paul>  அவனைச்  சேர்ந்தவர்களும்  பாப்போ<Paphos>  பட்டணத்தைவிட்டுக்  கப்பல்  ஏறிப்  பம்பிலியாவிலிருக்கும்<Pamphylia>  பெர்கே<Perga>  பட்டணத்துக்கு  வந்தார்கள்.  யோவான்<John>  அவர்களை  விட்டுப்  பிரிந்து,  எருசலேமுக்குத்<Jerusalem>  திரும்பிப்போனான்.  {Acts  13:13}

 

அவர்கள்  பெர்கே<Perga>  பட்டணத்தை  விட்டுப்  புறப்பட்டு,  பிசீதியா<Pisidia>  நாட்டிலுள்ள  அந்தியோகியாவுக்கு<Antioch>  வந்து,  ஓய்வுநாளிலே  ஜெபஆலயத்தில்  பிரவேசித்து,  உட்கார்ந்தார்கள்.  {Acts  13:14}

 

நியாயப்பிரமாணமும்  தீர்க்கதரிசன  ஆகமமும்  வாசித்துமுடிந்தபின்பு:  சகோதரரே,  நீங்கள்  ஜனங்களுக்குப்  புத்திசொல்ல  விரும்பினால்  சொல்லுங்கள்  என்று  சொல்லும்படி  ஜெபஆலயத்தலைவர்கள்  அவர்களிடத்தில்  ஆள்  அனுப்பினார்கள்.  {Acts  13:15}

 

அப்பொழுது  பவுல்<Paul>  எழுந்திருந்து,  கையமர்த்தி:  இஸ்ரவேலரே<Israel>,  தேவனுக்குப்  பயந்து  நடக்கிற  சகல  ஜனங்களே,  கேளுங்கள்.  {Acts  13:16}

 

இஸ்ரவேலராகிய<Israel>  இந்த  ஜனத்தினுடைய  தேவன்  நம்முடைய  பிதாக்களைத்  தெரிந்துகொண்டு,  எகிப்து<Egypt>  தேசத்தில்  அவர்கள்  பரதேசிகளாய்ச்  சஞ்சரித்தபோது  ஜனங்களை  உயர்த்தி,  தமது  புயபலத்தினாலே  அதிலிருந்து  அவர்களைப்  புறப்படப்பண்ணி,  {Acts  13:17}

 

நாற்பது  வருஷகாலமாய்  வனாந்தரத்தில்  அவர்களை  ஆதரித்து,  {Acts  13:18}

 

கானான்<Chanaan>  தேசத்தில்  ஏழு  ஜாதிகளை  அழித்து,  அவர்களுடைய  தேசத்தை  இவர்களுக்குச்  சுதந்தரமாகப்  பங்கிட்டுக்கொடுத்து,  {Acts  13:19}

 

பின்பு  ஏறக்குறைய  நானூற்றைம்பது  வருஷகாலமாய்  சாமுவேல்<Samuel>  தீர்க்கதரிசிவரைக்கும்  அவர்களுக்கு  நியாயாதிபதிகளை  ஏற்படுத்திவந்தார்.  {Acts  13:20}

 

அதுமுதல்  தங்களுக்கு  ஒரு  ராஜா  வேண்டுமென்று  கேட்டுக்கொண்டார்கள்;  அப்படியே  தேவன்  பென்யமீன்<Benjamin>  கோத்திரத்தானாகிய  கீசுடைய<Cis>  குமாரனான  சவுலை<Saul>  நாற்பது  வருஷகாலமாய்  அவர்களுக்குக்  கொடுத்தார்.  {Acts  13:21}

 

பின்பு  அவர்  அவனைத்  தள்ளி,  தாவீதை<David>  அவர்களுக்கு  ராஜாவாக  ஏற்படுத்தி,  ஈசாயின்<Jesse>  குமாரனாகிய  தாவீதை<David>  என்  இருதயத்துக்கு  ஏற்றவனாகக்  கண்டேன்;  எனக்குச்  சித்தமானவைகளையெல்லாம்  அவன்  செய்வான்  என்று  அவனைக்குறித்துச்  சாட்சியுங்  கொடுத்தார்.  {Acts  13:22}

 

அவனுடைய  சந்ததியிலே  தேவன்  தமது  வாக்குத்தத்தத்தின்படியே  இஸ்ரவேலுக்கு<Israel>  இரட்சகராக  இயேசுவை<Jesus>  எழும்பப்பண்ணினார்.  {Acts  13:23}

 

இவர்  வெளிப்படுவதற்குமுன்னே  மனந்திரும்புதலுக்கேற்ற  ஞானஸ்நானத்தைக்குறித்து  யோவான்<John>  இஸ்ரவேலர்<Israel>  யாவருக்கும்  பிரசங்கித்தான்.  {Acts  13:24}

 

யோவான்<John>  தன்  பணிவிடை  ஓட்டத்தை  நிறைவேற்றுகிறபோது:  நீங்கள்  என்னை  யார்  என்று  நினைக்கிறீர்கள்,  நான்  அவர்  அல்ல,  இதோ,  எனக்குப்பின்  ஒருவர்  வருகிறார்,  அவருடைய  பாதரட்சையை  அவிழ்க்கிறதற்கும்  நான்  பாத்திரன்  அல்ல  என்றான்.  {Acts  13:25}

 

சகோதரரே,  ஆபிரகாமின்<Abraham>  சந்ததியில்  பிறந்தவர்களே,  தேவனுக்குப்  பயந்து  நடக்கிறவர்களே,  இந்த  இரட்சிப்பின்  வசனம்  உங்களுக்கு  அனுப்பப்பட்டிருக்கிறது.  {Acts  13:26}

 

எருசலேமில்<Jerusalem>  குடியிருக்கிறவர்களும்  அவர்கள்  அதிகாரிகளும்  அவரை  அறியாமலும்,  ஓய்வுநாள்தோறும்  வாசிக்கப்படுகிற  தீர்க்கதரிசிகளின்  வாக்கியங்களை  அறியாமலும்,  அவரை  ஆக்கினைக்குள்ளாகத்  தீர்த்ததினால்  அந்த  வாக்கியங்களை  நிறைவேற்றினார்கள்.  {Acts  13:27}

 

மரணத்திற்கு  ஏதுவானதொன்றும்  அவரிடத்தில்  காணாதிருந்தும்,  அவரைக்  கொலைசெய்யும்படிக்குப்  பிலாத்துவை<Pilate>  வேண்டிக்கொண்டார்கள்.  {Acts  13:28}

 

அவரைக்குறித்து  எழுதியிருக்கிறவைகள்  யாவையும்  அவர்கள்  நிறைவேற்றினபின்பு,  அவரை  மரத்திலிருந்து  இறக்கி,  கல்லறையிலே  வைத்தார்கள்.  {Acts  13:29}

 

தேவனோ  அவரை  மரித்தோரிலிருந்து  எழுப்பினார்.  {Acts  13:30}

 

தம்முடனேகூடக்  கலிலேயாவிலிருந்து<Galilee>  எருசலேமுக்குப்<Jerusalem>  போனவர்களுக்கு  அவர்  அநேகநாள்  தரிசனமானார்;  அவர்களே  ஜனங்களுக்கு  முன்பாக  அவருக்குச்  சாட்சிகளாயிருக்கிறார்கள்.  {Acts  13:31}

 

நீர்  என்னுடைய  குமாரன்,  இன்று  நான்  உம்மை  ஜெநிப்பித்தேன்  என்று  இரண்டாம்  சங்கீதத்தில்  எழுதியிருக்கிறபடியே,  {Acts  13:32}

 

இயேசுவை<Jesus>  எழுப்பினதினாலே  தேவன்  நம்முடைய  பிதாக்களுக்கு  அருளிச்செய்த  வாக்குத்தத்தத்தை  அவர்களுடைய  பிள்ளைகளாகிய  நமக்கு  நிறைவேற்றினார்  என்று  நாங்களும்  உங்களுக்குச்  சுவிசேஷமாய்  அறிவிக்கிறோம்.  {Acts  13:33}

 

இனி  அவர்  அழிவுக்குட்படாதபடிக்கு  அவரை  மரித்தோரிலிருந்து  எழுப்பினார்  என்பதைக்குறித்து:  தாவீதுக்கு<David>  அருளின  நிச்சயமான  கிருபைகளை  உங்களுக்குக்  கட்டளையிடுவேன்  என்று  திருவுளம்பற்றினார்.  {Acts  13:34}

 

அன்றியும்,  உம்முடைய  பரிசுத்தர்  அழிவைக்  காணவொட்டீர்  என்று  வேறொரு  சங்கீதத்தில்  சொல்லியிருக்கிறது.  {Acts  13:35}

 

தாவீது<David>  தன்  காலத்திலே  தேவனுடைய  சித்தத்தின்படி  அவருக்கு  ஊழியஞ்செய்தபின்பு  நித்திரையடைந்து,  தன்  பிதாக்களிடத்திலே  சேர்க்கப்பட்டு,  அழிவைக்  கண்டான்.  {Acts  13:36}

 

தேவனால்  எழுப்பப்பட்டவரோ  அழிவைக்  காணவில்லை.  {Acts  13:37}

 

ஆதலால்  சகோதரரே,  இவர்  மூலமாய்  உங்களுக்குப்  பாவமன்னிப்பு  உண்டாகும்  என்று  அறிவிக்கப்படுகிறதென்றும்,  {Acts  13:38}

 

மோசேயின்<Moses>  நியாயப்பிரமாணத்தினாலே  நீங்கள்  எவைகளினின்று  விடுதலையாகி  நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்ததோ,  விசுவாசிக்கிறவன்  எவனும்  அவைகளினின்று  இவராலே  விடுதலையாகி  நீதிமானாக்கப்படுகிறான்  என்றும்  உங்களுக்குத்  தெரிந்திருக்கக்கடவது.  {Acts  13:39}

 

அன்றியும்,  தீர்க்கதரிசிகளின்  புஸ்தகத்திலே:  {Acts  13:40}

 

அசட்டைக்காரரே,  பாருங்கள்,  பிரமித்து  அழிந்துபோங்கள்!  உங்கள்  நாட்களில்  ஒரு  கிரியையை  நான்  நடப்பிப்பேன்,  ஒருவன்  அதை  உங்களுக்கு  விவரித்துச்  சொன்னாலும்  நீங்கள்  விசுவாசிக்கமாட்டீர்கள்  என்று  சொல்லியிருக்கிறபடி,  உங்களுக்கு  நேரிடாதபடிக்கு  எச்சரிக்கையாயிருங்கள்  என்றான்.  {Acts  13:41}

 

அவர்கள்  யூதருடைய<Jews>  ஜெபஆலயத்திலிருந்து  புறப்படுகையில்,  அடுத்த  ஓய்வுநாளிலே  இந்த  வசனங்களைத்  தங்களுக்குச்  சொல்லவேண்டும்  என்று  புறஜாதியார்  வேண்டிக்கொண்டார்கள்.  {Acts  13:42}

 

ஜெபஆலயத்தில்  கூடின  சபை  கலைந்துபோனபின்பு,  யூதரிலும்<Jews>  யூதமார்க்கத்தமைந்த  பக்தியுள்ளவர்களிலும்  அநேகர்  பவுலையும்<Paul>  பர்னபாவையும்<Barnabas>  பின்பற்றினார்கள்.  அவர்களுடனே  இவர்கள்  பேசி,  தேவனுடைய  கிருபையிலே  நிலைகொண்டிருக்கும்படி  அவர்களுக்குப்  புத்திசொன்னார்கள்.  {Acts  13:43}

 

அடுத்த  ஓய்வுநாளிலே  கொஞ்சங்குறையப்  பட்டணத்தாரனைவரும்  தேவவசனத்தைக்  கேட்கும்படி  கூடிவந்தார்கள்.  {Acts  13:44}

 

யூதர்கள்<Jews>  ஜனக்கூட்டங்களைக்  கண்டபோது  பொறாமையினால்  நிறைந்து,  பவுலினால்<Paul>  சொல்லப்பட்டவைகளுக்கு  எதிரிடையாய்ப்  பேசி,  விரோதித்துத்  தூஷித்தார்கள்.  {Acts  13:45}

 

அப்பொழுது  பவுலும்<Paul>  பர்னபாவும்<Barnabas>  தைரியங்கொண்டு  அவர்களை  நோக்கி:  முதலாவது  உங்களுக்கே  தேவவசனத்தைச்  சொல்லவேண்டியதாயிருந்தது;  நீங்களோ  அதைத்  தள்ளி,  உங்களை  நித்தியஜீவனுக்கு  அபாத்திரராகத்  தீர்த்துக்  கொள்ளுகிறபடியினால்,  இதோ,  நாங்கள்  புறஜாதியாரிடத்தில்  போகிறோம்.  {Acts  13:46}

 

நீர்  பூமியின்  கடைசிபரியந்தமும்  இரட்சிப்பாயிருக்கும்படி  உம்மை  ஜாதிகளுக்கு  ஒளியாக  வைத்தேன்  என்கிற  வேதவாக்கியத்தின்படி  கர்த்தர்  எங்களுக்குக்  கட்டளையிட்டிருக்கிறபடியினால்  இப்படிச்  செய்கிறோம்  என்றார்கள்.  {Acts  13:47}

 

புறஜாதியார்  அதைக்  கேட்டுச்  சந்தோஷப்பட்டு,  கர்த்தருடைய  வசனத்தை  மகிமைப்படுத்தினார்கள்.  நித்திய  ஜீவனுக்கு  நியமிக்கப்பட்டவர்கள்  எவர்களோ  அவர்கள்  விசுவாசித்தார்கள்.  {Acts  13:48}

 

கர்த்தருடைய  வசனம்  அத்தேசமெங்கும்  பிரசித்தமாயிற்று.  {Acts  13:49}

 

யூதர்கள்<Jews>  பக்தியும்  கனமுமுள்ள  ஸ்திரீகளையும்  பட்டணத்து  முதலாளிகளையும்  எடுத்துவிட்டு,  பவுலையும்<Paul>  பர்னபாவையும்<Barnabas>  துன்பப்படுத்தும்படி  செய்து,  தங்கள்  எல்லைகளுக்குப்  புறம்பாக  அவர்களைத்  துரத்திவிட்டார்கள்.  {Acts  13:50}

 

இவர்கள்  தங்கள்  கால்களில்  படிந்த  தூசியை  அவர்களுக்கு  எதிராக  உதறிப்போட்டு,  இக்கோனியா<Iconium>  பட்டணத்துக்குப்  போனார்கள்.  {Acts  13:51}

 

சீஷர்கள்  சந்தோஷத்தினாலும்  பரிசுத்த  ஆவியினாலும்  நிரப்பப்பட்டார்கள்.  {Acts  13:52}

 

இக்கோனியா<Iconium>  பட்டணத்திலே  அவர்கள்  இருவரும்  யூதருடைய<Jews>  ஜெபஆலயத்தில்  பிரவேசித்து,  யூதரிலும்<Jews>  கிரேக்கரிலும்<Greeks>  திரளான  ஜனங்கள்  விசுவாசிக்கத்தக்கதாகப்  பிரசங்கித்தார்கள்.  {Acts  14:1}

 

விசுவாசியாத  யூதர்கள்<Jews>  சகோதரருக்கு  விரோதமாகப்  புறஜாதியாருடைய  மனதை  எழுப்பிவிட்டு,  பகையுண்டாக்கினார்கள்.  {Acts  14:2}

 

அவர்கள்  அங்கே  அநேகநாள்  சஞ்சரித்துக்  கர்த்தரை  முன்னிட்டுத்  தைரியமுள்ளவர்களாய்ப்  போதகம்பண்ணினார்கள்;  அவர்  தமது  கிருபையுள்ள  வசனத்திற்குச்  சாட்சியாக  அடையாளங்களும்  அற்புதங்களும்  அவர்கள்  கைகளால்  செய்யப்படும்படி  அநுக்கிரகம்பண்ணினார்.  {Acts  14:3}

 

பட்டணத்து  ஜனங்கள்  பிரிந்து,  சிலர்  யூதரையும்<Jews>  சிலர்  அப்போஸ்தலரையும்  சேர்ந்துகொண்டார்கள்.  {Acts  14:4}

 

இவர்களை  அவமானப்படுத்தவும்  கல்லெறியவும்  வேண்டுமென்று,  புறஜாதியாரும்  யூதரும்<Jews>  அவர்கள்  அதிகாரிகளும்  அமளிபண்ணுகையில்,  {Acts  14:5}

 

இவர்கள்  அதை  அறிந்து,  லிக்கவோனியா<Lycaonia>  நாட்டிலுள்ள  பட்டணங்களாகிய  லீஸ்திராவுக்கும்<Lystra>  தெர்பைக்கும்<Derbe>  அவைகளின்  சுற்றுப்புறங்களுக்கும்  ஓடிப்போய்;  {Acts  14:6}

 

அங்கே  சுவிசேஷத்தைப்  பிரசங்கம்  பண்ணினார்கள்.  {Acts  14:7}

 

லீஸ்திராவிலே<Lystra>  ஒருவன்  தன்  தாயின்  வயிற்றிலிருந்து  பிறந்ததுமுதல்  சப்பாணியாயிருந்து,  ஒருபோதும்  நடவாமல்,  கால்கள்  வழங்காதவனாய்  உட்கார்ந்து,  {Acts  14:8}

 

பவுல்<Paul>  பேசுகிறதைக்  கேட்டுக்கொண்டிருந்தான்.  அவனைப்  பவுல்<Paul>  உற்றுப்பார்த்து,  இரட்சிப்புக்கேற்ற  விசுவாசம்  அவனுக்கு  உண்டென்று  கண்டு:  {Acts  14:9}

 

நீ  எழுந்து  காலூன்றி  நிமிர்ந்து  நில்  என்று  உரத்த  சத்தத்தோடே  சொன்னான்.  உடனே  அவன்  குதித்தெழுந்து  நடந்தான்.  {Acts  14:10}

 

பவுல்<Paul>  செய்ததை  ஜனங்கள்  கண்டு,  தேவர்கள்  மனுஷரூபமெடுத்து  நம்மிடத்தில்  இறங்கிவந்திருக்கிறார்கள்  என்று  லிக்கவோனியா<Lycaonia>  பாஷையிலே  சத்தமிட்டுச்  சொல்லி,  {Acts  14:11}

 

பர்னபாவை<Barnabas>  யூப்பித்தர்<Jupiter>  என்றும்,  பவுல்<Paul>  பிரசங்கத்தை  நடத்தினவனானபடியினால்  அவனை  மெர்க்கூரி<Mercurius>  என்றும்  சொன்னார்கள்.  {Acts  14:12}

 

அல்லாமலும்  பட்டணத்துக்கு  முன்னே  இருந்த  யூப்பித்தருடைய<Jupiter>  கோவில்  பூஜாசாரி  எருதுகளையும்  பூமாலைகளையும்  வாசலண்டையிலே  கொண்டுவந்து,  ஜனங்களோடேகூட  அவர்களுக்குப்  பலியிட  மனதாயிருந்தான்.  {Acts  14:13}

 

அப்போஸ்தலராகிய  பர்னபாவும்<Barnabas>  பவுலும்<Paul>  அதைக்  கேட்டபொழுது,  தங்கள்  வஸ்திரங்களைக்  கிழித்துக்கொண்டு,  கூட்டத்துக்குள்ளே  ஓடி,  உரத்த  சத்தமாய்:  {Acts  14:14}

 

மனுஷரே,  ஏன்  இப்படிச்  செய்கிறீர்கள்?  நாங்களும்  உங்களைப்போலப்  பாடுள்ள  மனுஷர்தானே;  நீங்கள்  இந்த  வீணான  தேவர்களைவிட்டு,  வானத்தையும்  பூமியையும்  சமுத்திரத்தையும்  அவைகளிலுள்ள  யாவற்றையும்  உண்டாக்கின  ஜீவனுள்ள  தேவனிடத்திற்குத்  திரும்பவேண்டுமென்று  உங்களுக்குப்  பிரசங்கிக்கிறோம்.  {Acts  14:15}

 

சென்ற  காலங்களில்  அவர்  சகல  ஜனங்களையும்  தங்கள்  தங்கள்  வழிகளிலே  நடக்கவிட்டிருந்தும்,  {Acts  14:16}

 

அவர்  நன்மை  செய்துவந்து,  வானத்திலிருந்து  மழைகளையும்  செழிப்புள்ள  காலங்களையும்  நமக்குத்  தந்து,  ஆகாரத்தினாலும்  சந்தோஷத்தினாலும்  நம்முடைய  இருதயங்களை  நிரப்பி,  இவ்விதமாய்  அவர்  தம்மைக்குறித்துச்  சாட்சி  விளங்கப்பண்ணாதிருந்ததில்லை  என்றார்கள்.  {Acts  14:17}

 

இப்படி  அவர்கள்  சொல்லியும்  தங்களுக்கு  ஜனங்கள்  பலியிடாதபடிக்கு  அவர்களை  அமர்த்துகிறது  அரிதாயிருந்தது.  {Acts  14:18}

 

பின்பு  அந்தியோகியாவிலும்<Antioch>  இக்கோனியாவிலுமிருந்து<Iconium>  சில  யூதர்கள்<Jews>  வந்து,  ஜனங்களுக்குப்  போதனைசெய்து,  பவுலைக்<Paul>  கல்லெறிந்து,  அவன்  மரித்துப்போனானென்று  எண்ணி,  அவனைப்  பட்டணத்துக்கு  வெளியிலே  இழுத்துக்கொண்டு  போனார்கள்.  {Acts  14:19}

 

சீஷர்கள்  அவனைச்  சூழ்ந்துநிற்கையில்,  அவன்  எழுந்து,  பட்டணத்திற்குள்  பிரவேசித்தான்.  மறுநாளில்  பர்னபாவுடனேகூடத்<Barnabas>  தெர்பைக்குப்<Derbe>  புறப்பட்டுப்போனான்.  {Acts  14:20}

 

அந்தப்  பட்டணத்தில்  அவர்கள்  சுவிசேஷத்தைப்  பிரசங்கித்து,  அநேகரைச்  சீஷராக்கினபின்பு,  லீஸ்திராவுக்கும்<Lystra>  இக்கோனியாவுக்கும்<Iconium>  அந்தியோகியாவுக்கும்<Antioch>  திரும்பிவந்து,  {Acts  14:21}

 

சீஷருடைய  மனதைத்  திடப்படுத்தி,  விசுவாசத்திலே  நிலைத்திருக்கும்படி  அவர்களுக்குப்  புத்திசொல்லி,  நாம்  அநேக  உபத்திரவங்களின்  வழியாய்த்  தேவனுடைய  ராஜ்யத்தில்  பிரவேசிக்கவேண்டுமென்று  சொன்னார்கள்.  {Acts  14:22}

 

அல்லாமலும்  அந்தந்தச்  சபைகளில்  அவர்களுக்கு  மூப்பர்களை  ஏற்படுத்தி  வைத்து,  உபவாசித்து  ஜெபம்பண்ணி,  அவர்கள்  விசுவாசித்துப்  பற்றிக்கொண்ட  கர்த்தருக்கு  அவர்களை  ஒப்புவித்தார்கள்.  {Acts  14:23}

 

பின்பு  பிசீதியாநாட்டைக்<Pisidia>  கடந்து,  பம்பிலியா<Pamphylia>  நாட்டிற்கு  வந்து,  {Acts  14:24}

 

பெர்கே<Perga>  ஊரில்  வசனத்தைப்  பிரசங்கித்து,  அத்தலியா<Attalia>  பட்டணத்திற்குப்  போனார்கள்.  {Acts  14:25}

 

அங்கே  கப்பல்  ஏறி,  தாங்கள்  நிறைவேற்றின  கிரியைக்காகத்  தேவனுடைய  கிருபைக்கு  ஒப்புவிக்கப்பட்டுப்  புறப்பட்டு  அந்தியோகியாவுக்கு<Antioch>  வந்தார்கள்.  {Acts  14:26}

 

அவர்கள்  அங்கே  சேர்ந்தபொழுது  சபையைக்  கூடிவரச்செய்து,  தேவன்  தங்களைக்கொண்டு  செய்தவைகளையும்,  அவர்  புறஜாதிகளுக்கு  விசுவாசத்தின்  கதவைத்திறந்ததையும்  அறிவித்து,  {Acts  14:27}

 

அங்கே  சீஷருடனேகூட  அநேகநாள்  சஞ்சரித்திருந்தார்கள்.  {Acts  14:28}

 

சிலர்  யூதேயாவிலிருந்து<Judaea>  வந்து:  நீங்கள்  மோசேயினுடைய<Moses>  முறைமையின்படியே  விருத்தசேதனமடையாவிட்டால்,  இரட்சிக்கப்படமாட்டீர்கள்  என்று  சகோதரருக்குப்  போதகம்பண்ணினார்கள்.  {Acts  15:1}

 

அதினாலே  அவர்களுக்கும்  பவுல்<Paul>  பர்னபா<Barnabas>  என்பவர்களுக்கும்  மிகுந்த  வாக்குவாதமும்  தர்க்கமும்  உண்டானபோது,  அந்த  விஷயத்தினிமித்தம்  பவுலும்<Paul>  பர்னபாவும்<Barnabas>  அவர்களைச்  சேர்ந்த  வேறு  சிலரும்  எருசலேமிலிருக்கிற<Jerusalem>  அப்போஸ்தலரிடத்திற்கும்  மூப்பரிடத்திற்கும்  போகவேண்டுமென்று  தீர்மானித்தார்கள்.  {Acts  15:2}

 

அந்தப்படி  அவர்கள்  சபையாரால்  வழிவிட்டனுப்பப்பட்டு,  பெனிக்கே<Phenice>  சமாரியா<Samaria>  நாடுகளின்  வழியாய்ப்  போய்,  புறஜாதியார்  மனந்திரும்பின  செய்தியை  அறிவித்து,  சகோதரர்  எல்லாருக்கும்  மிகுந்த  சந்தோஷத்தை  உண்டாக்கினார்கள்.  {Acts  15:3}

 

அவர்கள்  எருசலேமுக்கு<Jerusalem>  வந்து,  சபையாராலும்  அப்போஸ்தலராலும்  மூப்பராலும்  ஏற்றுக்கொள்ளப்பட்டபோது,  தேவன்  தங்களைக்கொண்டு  செய்தவைகளையெல்லாம்  அறிவித்தார்கள்.  {Acts  15:4}

 

அப்பொழுது  பரிசேய<Pharisees>  சமயத்தாரில்  விசுவாசிகளான  சிலர்  எழுந்து,  அவர்களை  விருத்தசேதனம்பண்ணுகிறதும்  மோசேயின்<Moses>  நியாயப்பிரமாணத்தைக்  கைக்கொள்ளும்படி  அவர்களுக்குக்  கற்பிக்கிறதும்  அவசியம்  என்றார்கள்.  {Acts  15:5}

 

அப்போஸ்தலரும்  மூப்பரும்  இந்தக்  காரியத்தைக்  குறித்து  ஆலோசனைபண்ணும்படி  கூடினார்கள்.  {Acts  15:6}

 

மிகுந்த  தர்க்கம்  உண்டானபோது,  பேதுரு<Peter>  எழுந்து,  அவர்களை  நோக்கி:  சகோதரரே,  நீங்கள்  அறிந்திருக்கிறபடி  புறஜாதியார்  என்னுடைய  வாயினாலே  சுவிசேஷ  வசனத்தைக்  கேட்டு  விசுவாசிக்கும்படி  தேவன்  அநேக  நாட்களுக்கு  முன்னே  உங்களில்  ஒருவனாகிய  என்னைத்  தெரிந்துகொண்டார்.  {Acts  15:7}

 

இருதயங்களை  அறிந்திருக்கிற  தேவன்  நமக்குப்  பரிசுத்தஆவியைத்  தந்தருளினதுபோல  அவர்களுக்கும்  தந்தருளி,  அவர்களைக்குறித்துச்  சாட்சிகொடுத்தார்;  {Acts  15:8}

 

விசுவாசத்தினாலே  அவர்கள்  இருதயங்களை  அவர்  சுத்தமாக்கி,  நமக்கும்  அவர்களுக்கும்  யாதொரு  வித்தியாசமுமிராதபடி  செய்தார்.  {Acts  15:9}

 

இப்படியிருக்க,  நம்முடைய  பிதாக்களாலும்  நம்மாலும்  சுமக்கக்கூடாதிருந்த  நுகத்தடியைச்  சீஷர்  கழுத்தின்மேல்  சுமத்துவதினால்,  நீங்கள்  தேவனைச்  சோதிப்பானேன்?  {Acts  15:10}

 

கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  கிருபையினாலே  அவர்கள்  இரட்சிக்கப்படுகிறது  எப்படியோ,  அப்படியே  நாமும்  இரட்சிக்கப்படுவோமென்று  நம்பியிருக்கிறோமே  என்றான்.  {Acts  15:11}

 

அப்பொழுது  கூடிவந்திருந்த  யாவரும்  அமைந்திருந்து,  பர்னபாவும்<Barnabas>  பவுலும்<Paul>  தங்களைக்கொண்டு  தேவன்  புறஜாதிகளுக்குள்ளே  செய்த  அடையாளங்கள்  அற்புதங்கள்  யாவையும்  விவரித்துச்  சொல்லக்கேட்டார்கள்.  {Acts  15:12}

 

அவர்கள்  பேசி  முடிந்தபின்பு,  யாக்கோபு<James>  அவர்களை  நோக்கி:  சகோதரரே,  எனக்குச்  செவிகொடுங்கள்.  {Acts  15:13}

 

தேவன்  புறஜாதிகளினின்று  தமது  நாமத்திற்காக  ஒரு  ஜனத்தைத்  தெரிந்துகொள்ளும்படி  முதல்முதல்  அவர்களுக்குக்  கடாட்சித்தருளின  விதத்தைச்  சிமியோன்<Simeon>  விவரித்துச்  சொன்னாரே.  {Acts  15:14}

 

அதற்குத்  தீர்க்கதரிசிகளுடைய  வாக்கியங்களும்  ஒத்திருக்கிறது.  {Acts  15:15}

 

எப்படியெனில்,  மற்ற  மனுஷரும்,  என்னுடைய  நாமந்தரிக்கப்படும்  சகல  ஜாதிகளும்,  கர்த்தரைத்  தேடும்படிக்கு,  {Acts  15:16}

 

நான்  இதற்குப்பின்பு  திரும்பிவந்து,  விழுந்துபோன  தாவீதின்<David>  கூடாரத்தை  மறுபடியும்  எடுப்பித்து,  அதிலே  பழுதாய்ப்போனவைகளை  மறுபடியும்  சீர்ப்படுத்தி,  அதைச்  செவ்வையாக  நிறுத்துவேன்  என்று  இவைகளையெல்லாஞ்  செய்கிற  கர்த்தர்  சொல்லுகிறார்  என்று  எழுதியிருக்கிறது.  {Acts  15:17}

 

உலகத்தோற்றமுதல்  தேவனுக்குத்  தம்முடைய  கிரியைகளெல்லாம்  தெரிந்திருக்கிறது.  {Acts  15:18}

 

ஆதலால்  புறஜாதிகளில்  தேவனிடத்தில்  திரும்புகிறவர்களைக்  கலங்கப்பண்ணலாகாதென்றும்,  {Acts  15:19}

 

விக்கிரகங்களுக்குப்  படைத்த  அசுசியானவைகளுக்கும்,  வேசித்தனத்திற்கும்,  நெருக்குண்டு  செத்ததிற்கும்,  இரத்தத்திற்கும்,  விலகியிருக்கும்படி  அவர்களுக்கு  நாம்  எழுதவேண்டுமென்றும்  நான்  தீர்மானிக்கிறேன்.  {Acts  15:20}

 

மோசேயின்<Moses>  ஆகமங்கள்  ஓய்வுநாள்தோறும்  ஜெபஆலயங்களில்  வாசிக்கப்பட்டு  வருகிறபடியால்,  பூர்வகாலந்தொடங்கிச்  சகல  பட்டணங்களிலும்  அந்த  ஆகமங்களைப்  பிரசங்கிக்கிறவர்களும்  உண்டே  என்றான்.  {Acts  15:21}

 

அப்பொழுது  தங்களில்  சிலரைத்  தெரிந்துகொண்டு  பவுலோடும்<Paul>  பர்னபாவோடும்<Barnabas>  அந்தியோகியாவுக்கு<Antioch>  அனுப்புகிறது  அப்போஸ்தலருக்கும்  மூப்பருக்கும்  சபையாரெல்லாருக்கும்  நலமாகக்கண்டது.  அவர்கள்  யாரென்றால்,  சகோதரரில்  விசேஷித்தவர்களாகிய  பர்சபா<Barsabas>  என்று  மறுபேர்கொண்ட  யூதாவும்<Judas>  சீலாவுமே<Silas>.  {Acts  15:22}

 

இவர்கள்  கையில்  அவர்கள்  எழுதிக்கொடுத்தனுப்பின  நிருபமாவது:  அப்போஸ்தலரும்  மூப்பரும்  சகோதரருமாகிய  நாங்கள்  அந்தியோகியாவிலும்<Antioch>  சீரியாவிலும்<Syria>  சிலிசியாவிலும்<Cilicia>  இருக்கும்  புறஜாதியாராகிய  சகோதரருக்கு  வாழ்த்துதல்  சொல்லி  எழுதிய  நிருபம்  என்னவென்றால்:  {Acts  15:23}

 

எங்களால்  கட்டளைபெறாத  சிலர்  எங்களிடத்திலிருந்து  புறப்பட்டு,  நீங்கள்  விருத்தசேதனமடைய  வேண்டுமென்றும்,  நியாயப்பிரமாணத்தைக்  கைக்கொள்ளவேண்டுமென்றும்  சொல்லி,  இப்படிப்பட்ட  வார்த்தைகளால்  உங்களைக்  கலக்கி,  உங்கள்  ஆத்துமாக்களைப்  புரட்டினார்கள்  என்று  நாங்கள்  கேள்விப்பட்டபடியினாலே,  {Acts  15:24}

 

நம்முடைய  கர்த்தராகிய  இயேசு  கிறிஸ்துவின்<Jesus  Christ>  நாமத்திற்காகத்  தங்கள்  பிராணனையும்  ஒப்புக்கொடுக்கத்  துணிந்தவர்களும்  எங்களுக்குப்  பிரியமானவர்களுமாயிருக்கிற  பர்னபா<Barnabas>  பவுல்<Paul>  என்பவர்களோடுங்கூட,  {Acts  15:25}

 

எங்களால்  தெரிந்துகொள்ளப்பட்ட  சில  மனுஷரை  உங்களிடத்திற்கு  அனுப்புகிறது  ஒருமனப்பட்டுக்  கூடின  எங்களுக்கு  நலமாகக்  கண்டது.  {Acts  15:26}

 

அந்தப்படியே  யூதாவையும்<Judas>  சீலாவையும்<Silas>  அனுப்பியிருக்கிறோம்.  அவர்களும்  இவைகளை  வாய்மொழியாக  உங்களுக்கு  அறிவிப்பார்கள்.  {Acts  15:27}

 

எவையெனில்,  விக்கிரகங்களுக்குப்  படைத்தவைகளுக்கும்,  இரத்தத்திற்கும்,  நெருக்குண்டு  செத்ததிற்கும்,  வேசித்தனத்திற்கும்,  நீங்கள்  விலகியிருக்கவேண்டுமென்பதே.  {Acts  15:28}

 

அவசியமான  இவைகளையல்லாமல்  பாரமான  வேறொன்றையும்  உங்கள்மேல்  சுமத்தாமலிருப்பது  பரிசுத்தஆவிக்கும்  எங்களுக்கும்  நலமாகக்  கண்டது;  இவைகளுக்கு  விலகி  நீங்கள்  உங்களைக்  காத்துக்கொள்வது  நலமாயிருக்கும்.  சுகமாயிருப்பீர்களாக  என்று  எழுதினார்கள்.  {Acts  15:29}

 

அவர்கள்  அனுப்பிவிடப்பட்டு,  அந்தியோகியாவுக்கு<Antioch>  வந்து,  சபையைக்  கூடிவரச்செய்து,  நிருபத்தை  ஒப்புவித்தார்கள்.  {Acts  15:30}

 

அதை  அவர்கள்  வாசித்து,  அதனாலுண்டாகிய  ஆறுதலுக்காகச்  சந்தோஷப்பட்டார்கள்.  {Acts  15:31}

 

யூதா<Judas>  சீலா<Silas>  என்பவர்களும்  தீர்க்கதரிசிகளாயிருந்தபடியினாலே  அநேக  வார்த்தைகளினால்  சகோதரருக்குப்  புத்திசொல்லி,  அவர்களைத்  திடப்படுத்தி;  {Acts  15:32}

 

சிலகாலம்  அங்கேயிருந்து,  பின்பு  சகோதரரால்  சமாதானத்தோடே  அப்போஸ்தலரிடத்திற்கு  அனுப்பிவிடப்பட்டார்கள்.  {Acts  15:33}

 

ஆகிலும்  சீலாவுக்கு<Silas>  அங்கே  தரித்திருக்கிறது  நலமாய்க்  கண்டது.  {Acts  15:34}

 

பவுலும்<Paul>  பர்னபாவும்<Barnabas>  அந்தியோகியாவிலே<Antioch>  சஞ்சரித்து,  வேறே  அநேகரோடுங்கூடக்  கர்த்தருடைய  வசனத்தை  உபதேசித்துப்  பிரசங்கித்துக்கொண்டிருந்தார்கள்.  {Acts  15:35}

 

சிலநாளைக்குப்பின்பு  பவுல்<Paul>  பர்னபாவை<Barnabas>  நோக்கி:  நாம்  கர்த்தருடைய  வசனத்தை  அறிவித்திருக்கிற  சகல  பட்டணங்களிலுமுள்ள  சகோதரர்கள்  எப்படியிருக்கிறார்களென்று  போய்ப்பார்ப்போம்  வாரும்  என்றான்.  {Acts  15:36}

 

அப்பொழுது  பர்னபா<Barnabas>  என்பவன்  மாற்கு<Mark>  என்னும்  பேர்கொண்ட  யோவானைக்கூட<John>  அழைத்துக்கொண்டு  போகவேண்டும்  என்றான்.  {Acts  15:37}

 

பவுலோ<Paul>:  அவன்  பம்பிலியா<Pamphylia>  நாட்டிலே  நம்மை  விட்டுப்  பிரிந்து  நம்மோடேகூட  ஊழியத்துக்கு  வராததினாலே,  அவனை  அழைத்துக்கொண்டு  போகக்கூடாது  என்றான்.  {Acts  15:38}

 

இதைப்பற்றி  அவர்களுக்குள்ளே  கடுங்கோபமூண்டபடியினால்  அவர்கள்  ஒருவரையொருவர்  விட்டுப்  பிரிந்தார்கள்.  பர்னபா<Barnabas>  மாற்குவைக்<Mark>  கூட்டிக்கொண்டு  கப்பல்  ஏறிச்  சீப்புருதீவுக்குப்<Cyprus>  போனான்.  {Acts  15:39}

 

பவுலோ<Paul>  சீலாவைத்<Silas>  தெரிந்துகொண்டு,  சகோதரராலே  தேவனுடைய  கிருபைக்கு  ஒப்புவிக்கப்பட்டு,  புறப்பட்டு,  {Acts  15:40}

 

சீரியாவிலும்<Syria>  சிலிசியாவிலும்<Cilicia>  திரிந்து,  சபைகளைத்  திடப்படுத்தினான்.  {Acts  15:41}

 

அதன்பின்பு  அவன்  தெர்பைக்கும்<Derbe>  லீஸ்திராவுக்கும்<Lystra>  போனான்.  அங்கே  தீமோத்தேயு<Timotheus>  என்னப்பட்ட  ஒரு  சீஷன்  இருந்தான்;  அவன்  தாய்  விசுவாசமுள்ள  யூதஸ்திரீ<Jewess>,  அவன்  தகப்பன்  கிரேக்கன்<Greek>.  {Acts  16:1}

 

அவன்  லீஸ்திராவிலும்<Lystra>  இக்கோனியாவிலுமுள்ள<Iconium>  சகோதரராலே  நற்சாட்சி  பெற்றவனாயிருந்தான்.  {Acts  16:2}

 

அவனைப்  பவுல்<Paul>  தன்னுடனே  கூட்டிக்கொண்டு  போகவேண்டுமென்று  விரும்பி,  அவனுடைய  தகப்பன்  கிரேக்கன்<Greek>  என்று  அவ்விடங்களிலிருக்கும்  யூதர்களெல்லாரும்<Jews>  அறிந்திருந்தபடியால்,  அவர்கள்  நிமித்தம்  அவனுக்கு  விருத்தசேதனம்பண்ணினான்.  {Acts  16:3}

 

அவர்கள்  பட்டணங்கள்தோறும்  போகையில்,  எருசலேமிலிருக்கும்<Jerusalem>  அப்போஸ்தலராலும்  மூப்பராலும்  விதிக்கப்பட்ட  சட்டங்களைக்  கைக்கொள்ளும்படி  அவர்களுக்கு  ஒப்புவித்தார்கள்.  {Acts  16:4}

 

அதினாலே  சபைகள்  விசுவாசத்தில்  ஸ்திரப்பட்டு,  நாளுக்குநாள்  பெருகின.  {Acts  16:5}

 

அவர்கள்  பிரிகியா<Phrygia>  கலாத்தியா<Galatia>  நாடுகளைக்  கடந்துபோனபோது,  ஆசியாவிலே<Asia>  வசனத்தைச்  சொல்லாதபடிக்குப்  பரிசுத்தஆவியினாலே  தடைபண்ணப்பட்டு,  {Acts  16:6}

 

மீசியா<Mysia>  தேசமட்டும்  வந்து,  பித்தினியா<Bithynia>  நாட்டுக்குப்  போகப்  பிரயத்தனம்  பண்ணினார்கள்;  ஆவியானவரோ  அவர்களைப்  போகவொட்டாதிருந்தார்.  {Acts  16:7}

 

அப்பொழுது  அவர்கள்  மீசியா<Mysia>  பக்கமாய்ப்  போய்,  துரோவாவுக்கு<Troas>  வந்தார்கள்.  {Acts  16:8}

 

அங்கே  இராத்திரியிலே  பவுலுக்கு<Paul>  ஒரு  தரிசனம்  உண்டாயிற்று;  அதென்னவெனில்,  மக்கெதோனியா<Macedonia>  தேசத்தான்  ஒருவன்  வந்துநின்று:  நீர்  மக்கெதோனியாவுக்கு<Macedonia>  வந்து  எங்களுக்கு  உதவிசெய்ய  வேண்டுமென்று  தன்னை  வேண்டிக்கொண்டதாக  இருந்தது.  {Acts  16:9}

 

அந்தத்  தரிசனத்தை  அவன்  கண்டபோது,  அவர்களுக்குச்  சுவிசேஷத்தை  அறிவிக்கும்படி  கர்த்தர்  எங்களை  அழைத்தாரென்று  நாங்கள்  நிச்சயித்துக்கொண்டு,  உடனே  மக்கெதோனியாவுக்குப்<Macedonia>  புறப்பட்டுப்போகப்  பிரயத்தனம்பண்ணி,  {Acts  16:10}

 

துரோவாவில்<Troas>  கப்பல்  ஏறி,  சாமோத்திராக்கே<Samothracia>  தீவுக்கும்,  மறுநாளிலே  நெயாப்போலி<Neapolis>  பட்டணத்துக்கும்  நேராய்  ஓடி,  {Acts  16:11}

 

அங்கேயிருந்து  மக்கெதோனியா<Macedonia>  தேசத்து  நாடுகளில்  ஒன்றிற்குத்  தலைமையானதும்  ரோமர்<Romans>  குடியேறினதுமான  பிலிப்பி<Philippi>  பட்டணத்துக்கு  வந்து,  அந்தப்  பட்டணத்திலே  சிலநாள்  தங்கியிருந்தோம்.  {Acts  16:12}

 

ஓய்வுநாளில்  நாங்கள்  பட்டணத்துக்கு  வெளியே  போய்,  ஆற்றினருகே  வழக்கமாய்  ஜெபம்பண்ணுகிற  இடத்தில்  உட்கார்ந்து,  அங்கே  கூடிவந்த  ஸ்திரீகளுக்கு  உபதேசித்தோம்.  {Acts  16:13}

 

அப்பொழுது  தியத்தீரா<Thyatira>  ஊராளும்  இரத்தாம்பரம்  விற்கிறவளும்  தேவனை  வணங்குகிறவளுமாகிய  லீதியாள்<Lydia>  என்னும்  பேருள்ள  ஒரு  ஸ்திரீ  கேட்டுக்கொண்டிருந்தாள்;  பவுல்<Paul>  சொல்லியவைகளைக்  கவனிக்கும்படி  கர்த்தர்  அவள்  இருதயத்தைத்  திறந்தருளினார்.  {Acts  16:14}

 

அவளும்  அவள்  வீட்டாரும்  ஞானஸ்நானம்  பெற்றபின்பு,  அவள்  எங்களை  நோக்கி:  நீங்கள்  என்னைக்  கர்த்தரிடத்தில்  விசுவாசமுள்ளவளென்று  எண்ணினால்,  என்  வீட்டிலே  வந்து  தங்கியிருங்கள்  என்று  எங்களை  வருந்திக்  கேட்டுக்கொண்டாள்.  {Acts  16:15}

 

நாங்கள்  ஜெபம்பண்ணுகிற  இடத்துக்குப்  போகையில்  குறிசொல்ல  ஏவுகிற  ஆவியைக்கொண்டிருந்து,  குறிசொல்லுகிறதினால்  தன்  எஜமான்களுக்கு  மிகுந்த  ஆதாயத்தை  உண்டாக்கின  ஒரு  பெண்  எங்களுக்கு  எதிர்ப்பட்டாள்.  {Acts  16:16}

 

அவள்  பவுலையும்<Paul>  எங்களையும்  பின்தொடர்ந்து  வந்து:  இந்த  மனுஷர்  உன்னதமான  தேவனுடைய  ஊழியக்காரர்,  இரட்சிப்பின்  வழியை  நமக்கு  அறிவிக்கிறவர்கள்  என்று  சத்தமிட்டாள்.  {Acts  16:17}

 

இப்படி  அநேகநாள்  செய்துகொண்டுவந்தாள்.  பவுல்<Paul>  சினங்கொண்டு,  திரும்பிப்பார்த்து:  நீ  இவளை  விட்டுப்  புறப்படும்படி  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  நாமத்தினாலே  உனக்குக்  கட்டளையிடுகிறேன்  என்று  அந்த  ஆவியுடனே  சொன்னான்;  அந்நேரமே  அது  புறப்பட்டுப்போயிற்று.  {Acts  16:18}

 

அவளுடைய  எஜமான்கள்  தங்கள்  ஆதாயத்து  நம்பிக்கை  அற்றுப்போயிற்றென்று  கண்டு,  பவுலையும்<Paul>  சீலாவையும்<Silas>  பிடித்து,  சந்தைவெளியிலுள்ள  அதிகாரிகளிடத்தில்  இழுத்துக்கொண்டு  போனார்கள்.  {Acts  16:19}

 

அவர்களை  அதிகாரிகளிடத்தில்  ஒப்புவித்து:  யூதர்களாகிய<Jews>  இந்த  மனுஷர்  நம்முடைய  பட்டணத்தில்  கலகம்பண்ணி,  {Acts  16:20}

 

ரோமராகிய<Romans>  நாம்  ஏற்றுக்கொள்ளவும்  அநுசரிக்கவும்  தகாத  முறைமைகளைப்  போதிக்கிறார்கள்  என்றார்கள்.  {Acts  16:21}

 

அப்பொழுது  ஜனங்கள்  கூட்டங்கூடி,  அவர்களுக்கு  விரோதமாய்  எழும்பினார்கள்.  அதிகாரிகள்  அவர்கள்  வஸ்திரங்களைக்  கிழித்துப்போடவும்,  அவர்களை  அடிக்கவும்  சொல்லி;  {Acts  16:22}

 

அவர்களை  அநேக  அடி  அடித்தபின்பு,  சிறைச்சாலையிலே  வைத்து  அவர்களைப்  பத்திரமாய்க்  காக்கும்படி  சிறைச்சாலைக்காரனுக்குக்  கட்டளையிட்டார்கள்.  {Acts  16:23}

 

அவன்  இப்படிப்பட்ட  கட்டளையைப்  பெற்று,  அவர்களை  உட்காவலறையிலே  அடைத்து,  அவர்கள்  கால்களைத்  தொழுமரத்தில்  மாட்டிவைத்தான்.  {Acts  16:24}

 

நடுராத்திரியிலே  பவுலும்<Paul>  சீலாவும்<Silas>  ஜெபம்பண்ணி,  தேவனைத்  துதித்துப்  பாடினார்கள்;  காவலில்  வைக்கப்பட்டவர்கள்  அதைக்  கேட்டுக்கொண்டிருந்தார்கள்.  {Acts  16:25}

 

சடிதியிலே  சிறைச்சாலையின்  அஸ்திபாரங்கள்  அசையும்படியாகப்  பூமி  மிகவும்  அதிர்ந்தது;  உடனே  கதவுகளெல்லாம்  திறவுண்டது;  எல்லாருடைய  கட்டுகளும்  கழன்றுபோயிற்று.  {Acts  16:26}

 

சிறைச்சாலைக்காரன்  நித்திரை  தெளிந்து,  சிறைச்சாலையின்  கதவுகள்  திறந்திருக்கிறதைக்  கண்டு,  கட்டுண்டவர்கள்  ஓடிப்போனார்களென்று  எண்ணி,  பட்டயத்தை  உருவித்  தன்னைக்  கொலைசெய்து  கொள்ளப்போனான்.  {Acts  16:27}

 

பவுல்<Paul>  மிகுந்த  சத்தமிட்டு:  நீ  உனக்குக்  கெடுதி  ஒன்றுஞ்  செய்துகொள்ளாதே;  நாங்கள்  எல்லாரும்  இங்கேதான்  இருக்கிறோம்  என்றான்.  {Acts  16:28}

 

அப்பொழுது  அவன்  தீபங்களைக்  கொண்டுவரச்சொல்லி,  உள்ளே  ஓடி,  நடுநடுங்கி,  பவுலுக்கும்<Paul>  சீலாவுக்கும்<Silas>  முன்பாக  விழுந்து,  {Acts  16:29}

 

அவர்களை  வெளியே  அழைத்துவந்து:  ஆண்டவன்மாரே,  இரட்சிக்கப்படுவதற்கு  நான்  என்ன  செய்யவேண்டும்  என்றான்.  {Acts  16:30}

 

அதற்கு  அவர்கள்:  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவை<Jesus  Christ>  விசுவாசி,  அப்பொழுது  நீயும்  உன்  வீட்டாரும்  இரட்சிக்கப்படுவீர்கள்  என்று  சொல்லி,  {Acts  16:31}

 

அவனுக்கும்  அவன்  வீட்டிலிருந்த  யாவருக்கும்  கர்த்தருடைய  வசனத்தைப்  போதித்தார்கள்.  {Acts  16:32}

 

மேலும்  இராத்திரியில்  அந்நேரத்திலேதானே  அவன்  அவர்களை  அழைத்துக்கொண்டுபோய்,  அவர்களுடைய  காயங்களைக்  கழுவினான்.  அவனும்  அவனுடையவர்கள்  அனைவரும்  உடனே  ஞானஸ்நானம்  பெற்றார்கள்.  {Acts  16:33}

 

பின்பு  அவன்  அவர்களைத்  தன்  வீட்டிற்குக்  கூட்டிக்கொண்டுபோய்,  அவர்களுக்குப்  போஜனங்கொடுத்து,  தன்  வீட்டார்  அனைவரோடுங்கூடத்  தேவனிடத்தில்  விசுவாசமுள்ளவனாகி  மனமகிழ்ச்சியாயிருந்தான்.  {Acts  16:34}

 

பொழுது  விடிந்தபின்பு:  அந்த  மனுஷரை  விட்டுவிடுங்கள்  என்று  சொல்ல  அதிகாரிகள்  சேவகர்களை  அனுப்பினார்கள்.  {Acts  16:35}

 

சிறைச்சாலைக்காரன்  பவுலுக்கு<Paul>  இந்த  வார்த்தைகளை  அறிவித்து:  உங்களை  விடுதலையாக்கும்படிக்கு  அதிகாரிகள்  கட்டளை  அனுப்பினார்கள்;  ஆகையால்  நீங்கள்  இப்பொழுது  புறப்பட்டுச்  சமாதானத்துடனே  போங்கள்  என்றான்.  {Acts  16:36}

 

அதற்குப்  பவுல்<Paul>:  ரோமராகிய<Romans>  எங்களை  அவர்கள்  நியாயம்  விசாரியாமல்,  வெளியரங்கமாய்  அடித்து,  சிறைச்சாலையிலே  போட்டார்கள்;  இப்பொழுது  இரகசியமாய்  எங்களை  விடுதலையாக்குகிறார்களோ?  அப்படியல்ல,  அவர்களே  வந்து,  எங்களை  வெளியே  அழைத்து  அனுப்பி  விடட்டும்  என்றான்.  {Acts  16:37}

 

சேவகர்  இந்த  வார்த்தைகளை  அதிகாரிகளுக்கு  அறிவித்தார்கள்.  ரோமராயிருக்கிறார்களென்று<Romans>  அவர்கள்  கேட்டபொழுது  பயந்துவந்து,  {Acts  16:38}

 

அவர்களுடனே  தயவாய்ப்  பேசி,  அவர்களை  வெளியே  அழைத்துக்கொண்டுபோய்,  பட்டணத்தை  விட்டுப்  புறப்பட்டுப்போகும்படி  கேட்டுக்கொண்டார்கள்.  {Acts  16:39}

 

அந்தப்படி  அவர்கள்  சிறைச்சாலையிலிருந்து  புறப்பட்டு  லீதியாளிடத்திற்குப்போய்<Lydia>,  சகோதரரைக்  கண்டு,  அவர்களுக்கு  ஆறுதல்  சொல்லிப்  போய்விட்டார்கள்.  {Acts  16:40}

 

அவர்கள்  அம்பிபோலி<Amphipolis>  பட்டணத்தையும்  அப்பொலோனியா<Apollonia>  பட்டணத்தையும்  கடந்து,  தெசலோனிக்கே<Thessalonica>  பட்டணத்துக்கு  வந்தார்கள்;  அங்கே  யூதருக்கு<Jews>  ஒரு  ஜெபஆலயம்  இருந்தது.  {Acts  17:1}

 

பவுல்<Paul>  தன்  வழக்கத்தின்படியே  அவர்களிடத்தில்  போய்,  மூன்று  ஓய்வுநாட்களில்  வேதவாக்கியங்களின்  நியாயங்களை  எடுத்து  அவர்களுடனே  சம்பாஷித்து,  {Acts  17:2}

 

கிறிஸ்து<Christ>  பாடுபடவும்  மரித்தோரிலிருந்து  எழுந்திருக்கவும்  வேண்டியதென்றும்,  நான்  உங்களுக்கு  அறிவிக்கிற  இந்த  இயேசுவே<Jesus>  கிறிஸ்து<Christ>  என்றும்  காண்பித்து,  திருஷ்டாந்தப்படுத்தினான்.  {Acts  17:3}

 

அவர்களில்  சிலரும்,  பக்தியுள்ள  கிரேக்கரில்<Greeks>  திரளான  ஜனங்களும்,  கனம்பொருந்திய  ஸ்திரீகளில்  அநேகரும்  விசுவாசித்து,  பவுலையும்<Paul>  சீலாவையும்<Silas>  சேர்ந்து  கொண்டார்கள்.  {Acts  17:4}

 

விசுவாசியாத  யூதர்கள்<Jews>  வைராக்கியங்கொண்டு  வீணராகிய  சில  பொல்லாதவர்களைச்  சேர்த்துக்கொண்டு,  கூட்டங்கூடி,  பட்டணத்தில்  அமளியுண்டாக்கி,  யாசோனுடைய<Jason>  வீட்டை  வளைந்துகொண்டு,  அவர்களைப்  பட்டணத்தாருக்கு  முன்பாக  இழுத்துக்கொண்டுவர  வகைதேடினார்கள்.  {Acts  17:5}

 

அவர்களைக்  காணாமல்,  யாசோனையும்<Jason>  சில  சகோதரரையும்  பட்டணத்து  அதிகாரிகளிடத்தில்  இழுத்துக்கொண்டுவந்து:  உலகத்தைக்  கலக்குகிறவர்கள்  இங்கேயும்  வந்திருக்கிறார்கள்.  {Acts  17:6}

 

இவர்களை  யாசோன்<Jason>  ஏற்றுக்கொண்டான்.  இவர்களெல்லாரும்  இயேசு<Jesus>  என்னும்  வேறொருவனை  ராஜா  என்று  சொல்லி,  இராயனுடைய<Caesar>  கட்டளைகளுக்கு  விரோதமாகச்  செய்கிறார்களென்று  கூக்குரலிட்டு,  {Acts  17:7}

 

இவைகளைக்  கேட்டுக்கொண்டிருந்த  ஜனங்களையும்  பட்டணத்து  அதிகாரிகளையும்  கலங்கப்பண்ணினார்கள்.  {Acts  17:8}

 

பின்பு  அவர்கள்  யாசோனிடத்திலும்<Jason>  மற்றவர்களிடத்திலும்  ஜாமீன்  வாங்கிக்கொண்டு,  அவர்களை  விட்டுவிட்டார்கள்.  {Acts  17:9}

 

உடனே  சகோதரர்  இராத்திரிகாலத்திலே  பவுலையும்<Paul>  சீலாவையும்<Silas>  பெரோயா<Berea>  பட்டணத்துக்கு  அனுப்பிவிட்டார்கள்;  அவர்கள்  அங்கே  சேர்ந்து,  யூதருடைய<Jews>  ஜெபஆலயத்திற்குப்  போனார்கள்.  {Acts  17:10}

 

அந்தப்  பட்டணத்தார்  மனோவாஞ்சையாய்  வசனத்தை  ஏற்றுக்கொண்டு,  காரியங்கள்  இப்படியிருக்கிறதா  என்று  தினந்தோறும்  வேதவாக்கியங்களை  ஆராய்ந்துபார்த்ததினால்,  தெசலோனிக்கேயில்<Thessalonica>  உள்ளவர்களைப்பார்க்கிலும்  நற்குணசாலிகளாயிருந்தார்கள்.  {Acts  17:11}

 

அதனால்  அவர்களில்  அநேகம்பேரும்  கனம்பொருந்திய  கிரேக்கரில்<Greeks>  அநேக  ஸ்திரீகளும்  புருஷர்களும்  விசுவாசித்தார்கள்.  {Acts  17:12}

 

பெரோயாவிலும்<Berea>  தேவவசனம்  பவுலினால்<Paul>  அறிவிக்கப்படுகிறதென்று  தெசலோனிக்கேயரான<Thessalonica>  யூதர்கள்<Jews>  அறிந்தபோது,  அங்கேயும்  வந்து,  ஜனங்களைக்  கிளப்பிவிட்டார்கள்.  {Acts  17:13}

 

உடனே  சகோதரர்  பவுலைச்<Paul>  சமுத்திரவழியாய்ப்  போக  அனுப்பிவிட்டார்கள்.  சீலாவும்<Silas>  தீமோத்தேயும்<Timotheus>  அங்கே  தங்கியிருந்தார்கள்.  {Acts  17:14}

 

பவுலை<Paul>  வழிநடத்தினவர்கள்  அவனை  அத்தேனே<Athens>  பட்டணம்வரைக்கும்  அழைத்துக்கொண்டுபோய்;  அங்கே  சீலாவும்<Silas>  தீமோத்தேயும்<Timotheus>  அதிசீக்கிரமாகத்  தன்னிடத்திற்கு  வரும்படி  அவர்களுக்குச்  சொல்லக்  கட்டளை  பெற்றுக்கொண்டு  புறப்பட்டுப்போனார்கள்.  {Acts  17:15}

 

அத்தேனே<Athens>  பட்டணத்தில்  பவுல்<Paul>  அவர்களுக்காகக்  காத்துக்கொண்டிருக்கையில்,  அந்தப்  பட்டணம்  விக்கிரகங்களால்  நிறைந்திருக்கிறதைக்  கண்டு,  தன்  ஆவியில்  மிகுந்த  வைராக்கியமடைந்து,  {Acts  17:16}

 

ஜெபஆலயத்தில்  யூதரோடும்<Jews>,  பக்தியுள்ளவர்களோடும்,  சந்தைவெளியில்  எதிர்ப்பட்டவர்களோடும்  தினந்தோறும்  சம்பாஷணைபண்ணினான்.  {Acts  17:17}

 

அப்பொழுது  எப்பிக்கூரரும்<Epicureans>  ஸ்தோயிக்கருமான<Stoicks>  ஞானிகளில்  சிலர்  அவனுடனே  வாக்குவாதம்பண்ணினார்கள்.  சிலர்:  இந்த  வாயாடி  என்ன  பேசப்போகிறான்  என்றார்கள்.  சிலர்:  இவன்  அந்நிய  தேவதைகளை  அறிவிக்கிறவனாகக்  காண்கிறது  என்றார்கள்.  அவன்  இயேசுவையும்<Jesus>  உயிர்த்தெழுதலையும்  அவர்களுக்குப்  பிரசங்கித்தபடியினாலே  அப்படிச்  சொன்னார்கள்.  {Acts  17:18}

 

அவர்கள்  அவனை  மார்ஸ்<Mars>  மேடைக்கு  அழைத்துக்கொண்டுபோய்:  நீ  சொல்லுகிற  புதிதான  உபதேசம்  இன்னதென்று  நாங்கள்  அறியலாமா?  {Acts  17:19}

 

நூதனமான  காரியங்களை  எங்கள்  காதுகள்  கேட்கப்பண்ணுகிறாய்;  அவைகளின்  கருத்து  இன்னதென்று  அறிய  மனதாயிருக்கிறோம்  என்றார்கள்.  {Acts  17:20}

 

அந்த  அத்தேனே<Athenians>  பட்டணத்தாரெல்லாரும்,  அங்கே  தங்குகிற  அந்நியரும்,  நவமான  காரியங்களைச்  சொல்லுகிறதிலும்  கேட்கிறதிலுமேயொழிய  வேறொன்றிலும்  பொழுதுபோக்குகிறதில்லை.  {Acts  17:21}

 

அப்பொழுது  பவுல்<Paul>  மார்ஸ்<Mars>  மேடையின்  நடுவிலே  நின்று:  அத்தேனரே<Athens>,  எந்த  விஷயத்திலும்  நீங்கள்  மிகுந்த  தேவதாபக்தியுள்ளவர்களென்று  காண்கிறேன்.  {Acts  17:22}

 

எப்படியென்றால்,  நான்  சுற்றித்திரிந்து,  உங்கள்  ஆராதனைக்குரியவைகளைக்  கவனித்துப்  பார்த்தபொழுது,  அறியப்படாத  தேவனுக்கு<TO  THE  UNKNOWN  GOD>  என்று  எழுதியிருக்கிற  ஒரு  பலிபீடத்தைக்  கண்டேன்;  நீங்கள்  அறியாமல்  ஆராதிக்கிற  அவரையே  நான்  உங்களுக்கு  அறிவிக்கிறேன்.  {Acts  17:23}

 

உலகத்தையும்  அதிலுள்ள  யாவற்றையும்  உண்டாக்கின  தேவனானவர்  வானத்திற்கும்  பூமிக்கும்  ஆண்டவராயிருக்கிறபடியால்  கைகளினால்  கட்டப்பட்ட  கோவில்களில்  அவர்  வாசம்பண்ணுகிறதில்லை.  {Acts  17:24}

 

எல்லாருக்கும்  ஜீவனையும்  சுவாசத்தையும்  சகலத்தையும்  கொடுக்கிற  அவர்,  தமக்கு  யாதொன்று  தேவையானதுபோல,  மனுஷர்  கைகளால்  பணிவிடைகொள்ளுகிறதுமில்லை.  {Acts  17:25}

 

மனுஷஜாதியான  சகல  ஜனங்களையும்  அவர்  ஒரே  இரத்தத்தினாலே  தோன்றப்பண்ணி,  பூமியின்மீதெங்கும்  குடியிருக்கச்செய்து,  முன்  தீர்மானிக்கப்பட்ட  காலங்களையும்  அவர்கள்  குடியிருப்பின்  எல்லைகளையும்  குறித்திருக்கிறார்;  {Acts  17:26}

 

கர்த்தராகிய  தம்மை  அவர்கள்  தடவியாகிலும்  கண்டுபிடிக்கத்தக்கதாகத்  தம்மைத்  தேடும்படிக்கு  அப்படிச்  செய்தார்;  அவர்  நம்மில்  ஒருவருக்கும்  தூரமானவரல்லவே.  {Acts  17:27}

 

ஏனெனில்  அவருக்குள்  நாம்  பிழைக்கிறோம்,  அசைகிறோம்,  இருக்கிறோம்;  அப்படியே  உங்கள்  புலவர்களிலும்  சிலர்,  நாம்  அவருடைய  சந்ததியார்  என்று  சொல்லியிருக்கிறார்கள்.  {Acts  17:28}

 

நாம்  தேவனுடைய  சந்ததியாராயிருக்க,  மனுஷருடைய  சித்திரவேலையினாலும்  யுக்தியினாலும்  உருவாக்கின  பொன்,  வெள்ளி,  கல்  இவைகளுக்குத்  தெய்வம்  ஒப்பாயிருக்குமென்று  நாம்  நினைக்கலாகாது.  {Acts  17:29}

 

அறியாமையுள்ள  காலங்களைத்  தேவன்  காணாதவர்போலிருந்தார்;  இப்பொழுதோ  மனந்திரும்பவேண்டுமென்று  எங்குமுள்ள  மனுஷரெல்லாருக்கும்  கட்டளையிடுகிறார்.  {Acts  17:30}

 

மேலும்  ஒரு  நாளைக்  குறித்திருக்கிறார்;  அதிலே  அவர்  தாம்  நியமித்த  மனுஷனைக்கொண்டு,  பூலோகத்தை  நீதியாய்  நியாயந்தீர்ப்பார்;  அந்த  மனுஷனை  மரித்தோரிலிருந்து  எழுப்பினதினாலே  அதின்  நிச்சயத்தை  எல்லாருக்கும்  விளங்கப்பண்ணினார்  என்றான்.  {Acts  17:31}

 

மரித்தோரின்  உயிர்த்தெழுதலைக்குறித்து  அவர்கள்  கேட்டபொழுது,  சிலர்  இகழ்ந்தார்கள்.  சிலர்:  நீ  சொல்லுகிறதை  இன்னொருவேளை  கேட்போம்  என்றார்கள்.  {Acts  17:32}

 

இப்படியிருக்க,  பவுல்<Paul>  அவர்களை  விட்டுப்  போய்விட்டான்.  {Acts  17:33}

 

சிலர்  அவனைப்  பற்றிக்கொண்டு,  விசுவாசிகளானார்கள்.  அவர்களில்  மார்ஸ்மேடையின்<Mars>  நியாயாதிபதிகளில்  ஒருவனாகிய  தியொனீசியு<Dionysius>  என்பவனும்,  தாமரி<Damaris>  என்னும்  பேருள்ள  ஒரு  ஸ்திரீயும்,  இவர்களுடனே  வேறு  சிலரும்  இருந்தார்கள்.  {Acts  17:34}

 

அதன்பின்பு  பவுல்<Paul>  அத்தேனே<Athens>  பட்டணத்தை  விட்டு,  கொரிந்து<Corinth>  பட்டணத்துக்கு  வந்து;  {Acts  18:1}

 

யூதரெல்லாரும்<Jews>  ரோமாபுரியை<Rome>  விட்டுப்  போகும்படி  கிலவுதியுராயன்<Claudius Caesar>  கட்டளையிட்டபடியினாலே,  இத்தாலியாவிலிருந்து<Italy>  புதிதாய்  வந்திருந்த  பொந்துதேசத்தானாகிய<Pontus>  ஆக்கில்லா<Aquila>  என்னும்  நாமமுள்ள  ஒரு  யூதனையும்<Jew>  அவன்  மனைவியாகிய  பிரிஸ்கில்லாளையும்<Priscilla>  அங்கே  கண்டு,  அவர்களிடத்திற்குப்  போனான்.  {Acts  18:2}

 

அவர்கள்  கூடாரம்பண்ணுகிற  தொழிலாளிகளாயிருந்தார்கள்;  தானும்  அந்தத்  தொழில்  செய்கிறவனானபடியினாலே  அவர்களிடத்தில்  தங்கி,  வேலைசெய்துகொண்டு  வந்தான்.  {Acts  18:3}

 

ஓய்வுநாள்தோறும்  அவன்  ஜெபஆலயத்திலே  சம்பாஷணைபண்ணி,  யூதருக்கும்<Jews>  கிரேக்கருக்கும்<Greeks>  புத்திசொன்னான்.  {Acts  18:4}

 

மக்கெதோனியாவிலிருந்து<Macedonia>  சீலாவும்<Silas>  தீமோத்தேயும்<Timotheus>  வந்தபோது,  பவுல்<Paul>  ஆவியில்  வைராக்கியங்கொண்டு,  இயேசுவே<Jesus>  கிறிஸ்து<Christ>  என்று  யூதருக்குத்<Jews>  திருஷ்டாந்தப்படுத்தினான்.  {Acts  18:5}

 

அவர்கள்  எதிர்த்துநின்று  தூஷித்தபோது,  அவன்  தன்  வஸ்திரங்களை  உதறி:  உங்கள்  இரத்தப்பழி  உங்கள்  தலையின்மேல்  இருக்கும்;  நான்  சுத்தமாயிருக்கிறேன்;  இதுமுதல்  புறஜாதியாரிடத்திற்குப்  போகிறேனென்று  அவர்களுடனே  சொல்லி,  {Acts  18:6}

 

அவ்விடத்தைவிட்டு,  தேவனை  வணங்குகிறவனாகிய  யுஸ்து<Justus>  என்னும்  பேருள்ள  ஒருவனுடைய  வீட்டிற்கு  வந்தான்;  அவன்  வீடு  ஜெபஆலயத்திற்கு  அடுத்ததாயிருந்தது.  {Acts  18:7}

 

ஜெபஆலயத்தலைவனாகிய  கிறிஸ்பு<Crispus>  என்பவன்  தன்  வீட்டார்  அனைவரோடும்  கர்த்தரிடத்தில்  விசுவாசமுள்ளவனானான்.  கொரிந்தியரில்<Corinthians>  அநேகரும்  சுவிசேஷத்தைக்  கேட்டு,  விசுவாசித்து,  ஞானஸ்நானம்  பெற்றார்கள்.  {Acts  18:8}

 

இராத்திரியிலே  கர்த்தர்  பவுலுக்குத்<Paul>  தரிசனமாகி:  நீ  பயப்படாமல்  பேசு,  மவுனமாயிராதே;  {Acts  18:9}

 

நான்  உன்னுடனேகூட  இருக்கிறேன்,  உனக்குத்  தீங்குசெய்யும்படி  ஒருவனும்  உன்மேல்  கைபோடுவதில்லை;  இந்தப்  பட்டணத்தில்  எனக்கு  அநேக  ஜனங்கள்  உண்டு  என்றார்.  {Acts  18:10}

 

அவன்  ஒரு  வருஷமும்  ஆறு  மாதமும்  அங்கே  தங்கி,  தேவவசனத்தை  அவர்களுக்குள்ளே  உபதேசம்பண்ணிக்கொண்டுவந்தான்.  {Acts  18:11}

 

கல்லியோன்<Gallio>  என்பவன்  அகாயா<Achaia>  நாட்டிற்கு  அதிபதியானபோது,  யூதர்கள்<Jews>  ஒருமனப்பட்டு,  பவுலுக்கு<Paul>  விரோதமாய்  எழும்பி,  அவனை  நியாயாசனத்துக்கு  முன்பாகக்  கொண்டுபோய்:  {Acts  18:12}

 

இவன்  வேதப்பிரமாணத்துக்கு  விகற்பமாய்த்  தேவனைச்  சேவிக்கும்படி  மனுஷருக்குப்  போதிக்கிறான்  என்றார்கள்.  {Acts  18:13}

 

பவுல்<Paul>  பேசுவதற்கு  எத்தனப்படுகையில்,  கல்லியோன்<Gallio>  யூதரை<Jews>  நோக்கி:  யூதர்களே<Jews>,  இது  ஒரு  அநியாயமாய்,  அல்லது  பொல்லாத  நடக்கையாயிருக்குமேயானால்  நான்  உங்களுக்குப்  பொறுமையாய்ச்  செவிகொடுப்பது  நியாயமாயிருக்கும்.  {Acts  18:14}

 

இது  சொற்களுக்கும்,  நாமங்களுக்கும்,  உங்கள்  வேதத்துக்கும்  அடுத்த  தர்க்கமானபடியினாலே,  இப்படிப்பட்டவைகளைக்குறித்து  விசாரணைசெய்ய  எனக்கு  மனதில்லை,  நீங்களே  பார்த்துக்கொள்ளுங்கள்  என்று  சொல்லி,  {Acts  18:15}

 

அவர்களை  நியாயாசனத்தினின்று  துரத்திவிட்டான்.  {Acts  18:16}

 

அப்பொழுது  கிரேக்கரெல்லாரும்<Greeks>  ஜெபஆலயத்தலைவனாகிய  சொஸ்தேனேயைப்<Sosthenes>  பிடித்து,  நியாயாசனத்துக்கு  முன்பாக  அடித்தார்கள்.  இவைகளில்  ஒன்றையுங்குறித்துக்  கல்லியோன்<Gallio>  கவலைப்படவில்லை.  {Acts  18:17}

 

பவுல்<Paul>  அநேகநாள்  அங்கே  தரித்திருந்தபின்பு,  சகோதரரிடத்தில்  உத்தரவு  பெற்றுக்கொண்டு,  தனக்கு  ஒரு  பிரார்த்தனை  உண்டாயிருந்தபடியினால்  கெங்கிரேயா<Cenchrea>  பட்டணத்தில்  தலைச்சவரம்  பண்ணிக்கொண்டு,  சீரியாதேசத்துக்குப்<Syria>  போகக்  கப்பல்  ஏறினான்.  பிரிஸ்கில்லாளும்<Priscilla>  ஆக்கில்லாவும்<Aquila>  அவனுடனே  கூடப்போனார்கள்.  {Acts  18:18}

 

அவன்  எபேசுபட்டணத்துக்கு<Ephesus>  வந்தபோது,  அங்கே  அவர்களை  விட்டு  நீங்கி,  ஜெபஆலயத்தில்  பிரவேசித்து,  யூதருடனே<Jews>  சம்பாஷணைபண்ணினான்.  {Acts  18:19}

 

அவன்  இன்னுஞ்  சிலகாலம்  தங்களுடனே  இருக்கவேண்டுமென்று  அவர்கள்  கேட்டுக்கொண்டபோது,  அவன்  சம்மதியாமல்,  {Acts  18:20}

 

வருகிற  பண்டிகையிலே  எப்படியாயினும்  நான்  எருசலேமில்<Jerusalem>  இருக்கவேண்டும்,  தேவனுக்குச்  சித்தமானால்  திரும்பி  உங்களிடத்திற்கு  வருவேனென்று  சொல்லி,  அவர்களிடத்தில்  உத்தரவு  பெற்றுக்கொண்டு,  கப்பல்  ஏறி,  எபேசுவை<Ephesus>  விட்டுப்  புறப்பட்டு,  {Acts  18:21}

 

செசரியா<Caesarea>  பட்டணத்துக்கு  வந்து,  எருசலேமுக்குப்<Jerusalem>  போய்,  சபையைச்  சந்தித்து,  அந்தியோகியாவுக்குப்<Antioch>  போனான்.  {Acts  18:22}

 

அங்கே  சிலகாலம்  சஞ்சரித்தபின்பு,  புறப்பட்டு,  கிரமமாய்க்  கலாத்தியா<Galatia>  நாட்டிலேயும்  பிரிகியா<Phrygia>  நாட்டிலேயும்  சுற்றித்திரிந்து,  சீஷரெல்லாரையும்  திடப்படுத்தினான்.  {Acts  18:23}

 

அப்பொழுது  அலெக்சந்திரியா<Alexandria>  பட்டணத்தில்  பிறந்தவனும்  சாதுரியவானும்  வேதாகமங்களில்  வல்லவனுமான  அப்பொல்லோ<Apollos>  என்னும்  பேர்கொண்ட  ஒரு  யூதன்<Jew>  எபேசுபட்டணத்துக்கு<Ephesus>  வந்தான்.  {Acts  18:24}

 

அவன்  கர்த்தருடைய  மார்க்கத்திலே  உபதேசிக்கப்பட்டு,  யோவான்<John>  கொடுத்த  ஸ்நானத்தைமாத்திரம்  அறிந்தவனாயிருந்து,  ஆவியில்  அனலுள்ளவனாய்க்  கர்த்தருக்கு  அடுத்தவைகளைத்  திட்டமாய்ப்  போதகம்பண்ணிக்கொண்டுவந்தான்.  {Acts  18:25}

 

அவன்  ஜெபஆலயத்தில்  தைரியமாய்ப்  பேசத்தொடங்கினபோது  ஆக்கில்லாவும்<Aquila>  பிரிஸ்கில்லாளும்<Priscilla>  அவன்  பேசுகிறதைக்  கேட்டு,  அவனைச்  சேர்த்துக்கொண்டு,  தேவனுடைய  மார்க்கத்தை  அதிக  திட்டமாய்  அவனுக்கு  விவரித்துக்காண்பித்தார்கள்.  {Acts  18:26}

 

பின்பு  அவன்  அகாயா<Achaia>  நாட்டிற்குப்  போகவேண்டுமென்றிருக்கையில்,  சீஷர்கள்  அவனை  ஏற்றுக்கொள்ளும்படி  சகோதரர்  அவர்களுக்கு  எழுதினார்கள்.  {Acts  18:27}

 

அவன்  அங்கே  வந்தபின்பு  வெளியரங்கமாக  யூதர்களுடனே<Jews>  பலமாய்த்  தர்க்கம்பண்ணி,  இயேசுவே<Jesus>  கிறிஸ்து<Christ>  என்று  வேதவாக்கியங்களைக்கொண்டு  திருஷ்டாந்தப்படுத்தினபடியால்,  கிருபையினாலே  விசுவாசிகளானவர்களுக்கு  மிகவும்  உதவியாயிருந்தான்.  {Acts  18:28}

 

அப்பொல்லோ<Apollos>  என்பவன்  கொரிந்து<Corinth>  பட்டணத்திலே  இருக்கையில்,  பவுல்<Paul>  மேடான  தேசங்கள்  வழியாய்ப்  போய்,  எபேசுவுக்கு<Ephesus>  வந்தான்;  அங்கே  சில  சீஷரைக்  கண்டு:  {Acts  19:1}

 

நீங்கள்  விசுவாசிகளானபோது,  பரிசுத்தஆவியைப்  பெற்றீர்களா  என்று  கேட்டான்.  அதற்கு  அவர்கள்:  பரிசுத்தஆவி  உண்டென்பதை  நாங்கள்  கேள்விப்படவே  இல்லை  என்றார்கள்.  {Acts  19:2}

 

அப்பொழுது  அவன்:  அப்படியானால்  நீங்கள்  எந்த  ஞானஸ்நானம்  பெற்றீர்கள்  என்றான்.  அதற்கு  அவர்கள்:  யோவான்<John>  கொடுத்த  ஞானஸ்நானம்  பெற்றோம்  என்றார்கள்.  {Acts  19:3}

 

அப்பொழுது  பவுல்<Paul>:  யோவான்<John>  தனக்குப்பின்  வருகிறவராகிய  கிறிஸ்து  இயேசுவில்<Christ  Jesus>  விசுவாசிகளாயிருக்கவேண்டும்  என்று  ஜனங்களுக்குச்  சொல்லி,  மனந்திரும்புதலுக்கு  ஏற்ற  ஞானஸ்நானத்தைக்  கொடுத்தானே  என்றான்.  {Acts  19:4}

 

அதைக்  கேட்டபோது  அவர்கள்  கர்த்தராகிய  இயேசுவின்<Jesus>  நாமத்தினாலே  ஞானஸ்நானம்  பெற்றார்கள்.  {Acts  19:5}

 

அல்லாமலும்  பவுல்<Paul>  அவர்கள்மேல்  கைகளை  வைத்தபோது,  பரிசுத்தஆவி  அவர்கள்மேல்  வந்தார்;  அப்பொழுது  அவர்கள்  அந்நியபாஷைகளைப்  பேசித்  தீர்க்கதரிசனஞ்  சொன்னார்கள்.  {Acts  19:6}

 

அந்த  மனுஷரெல்லாரும்  ஏறக்குறையப்  பன்னிரண்டுபேராயிருந்தார்கள்.  {Acts  19:7}

 

பின்பு  பவுல்<Paul>  ஜெபஆலயத்தில்  பிரவேசித்து,  தைரியமாய்ப்  பிரசங்கித்து,  மூன்று  மாதமளவும்  தேவனுடைய  ராஜ்யத்துக்கடுத்தவைகளைக்குறித்துச்  சம்பாஷணைபண்ணி,  புத்திசொல்லிக்கொண்டு  வந்தான்.  {Acts  19:8}

 

சிலர்  கடினப்பட்டு  அவிசுவாசிகளாகிக்  கூட்டத்திற்கு  முன்பாக  இந்த  மார்க்கத்தை  நிந்தித்தபோது,  அவன்  அவர்களை  விட்டு  விலகி,  சீஷரை  அவர்களிலிருந்து  பிரித்துக்கொண்டு,  திறன்னு<Tyrannus>  என்னும்  ஒருவனுடைய  வித்தியாசாலையிலே  அநுதினமும்  சம்பாஷித்துக்கொண்டுவந்தான்.  {Acts  19:9}

 

இரண்டு  வருஷகாலம்  இப்படி  நடந்ததினாலே  ஆசியாவில்<Asia>  குடியிருந்த  யூதரும்<Jews>  கிரேக்கருமாகிய<Greeks>  எல்லாரும்  கர்த்தராகிய  இயேசுவின்<Jesus>  வசனத்தைக்  கேட்டார்கள்.  {Acts  19:10}

 

பவுலின்<Paul>  கைகளினாலே  தேவன்  விசேஷித்த  அற்புதங்களைச்  செய்தருளினார்.  {Acts  19:11}

 

அவனுடைய  சரீரத்திலிருந்து  உறுமால்களையும்  கச்சைகளையும்  கொண்டுவந்து,  வியாதிக்காரர்மேல்  போட  வியாதிகள்  அவர்களைவிட்டு  நீங்கிப்போயின;  பொல்லாத  ஆவிகளும்  அவர்களைவிட்டுப்  புறப்பட்டன.  {Acts  19:12}

 

அப்பொழுது  தேசாந்தரிகளாய்த்  திரிகிற  மந்திரவாதிகளாகிய  யூதரில்<Jews>  சிலர்  பொல்லாத  ஆவிகள்  பிடித்திருந்தவர்கள்மேல்  கர்த்தராகிய  இயேசுவின்<Jesus>  நாமத்தைச்  சொல்லத்  துணிந்து:  பவுல்<Paul>  பிரசங்கிக்கிற  இயேசுவின்பேரில்<Jesus>  ஆணையிட்டு  உங்களுக்குக்  கட்டளையிடுகிறோம்  என்றார்கள்.  {Acts  19:13}

 

பிரதான  ஆசாரியனாகிய  ஸ்கேவா<Sceva>  என்னும்  ஓர்  யூதனுடைய<Jew>  குமாரர்  ஏழுபேர்  இப்படிச்  செய்தார்கள்.  {Acts  19:14}

 

பொல்லாத  ஆவி  அவர்களை  நோக்கி:  இயேசுவை<Jesus>  அறிவேன்,  பவுலையும்<Paul>  அறிவேன்,  நீங்கள்  யார்  என்று  சொல்லி,  {Acts  19:15}

 

பொல்லாத  ஆவியையுடைய  மனுஷன்  அவர்கள்மேல்  பாய்ந்து,  பலாத்காரம்பண்ணி,  அவர்களை  மேற்கொள்ள,  அவர்கள்  நிருவாணிகளும்  காயப்பட்டவர்களுமாகி  அந்த  வீட்டை  விட்டு  ஓடிப்போனார்கள்.  {Acts  19:16}

 

இது  எபேசுவிலே<Ephesus>  குடியிருந்த  யூதர்<Jews>  கிரேக்கர்<Greeks>  அனைவருக்கும்  தெரியவந்தபோது,  அவர்களெல்லாரும்  பயமடைந்தார்கள்;  கர்த்தராகிய  இயேசுவின்<Jesus>  நாமம்  மகிமைப்பட்டது.  {Acts  19:17}

 

விசுவாசித்தவர்களில்  அநேகர்  வந்து,  தங்கள்  செய்கைகளை  வெளிப்படுத்தி  அறிக்கையிட்டார்கள்.  {Acts  19:18}

 

மாயவித்தைக்காரராயிருந்தவர்களில்  அநேகர்  தங்கள்  புஸ்தகங்களைக்  கொண்டுவந்து,  எல்லாருக்கு  முன்பாகச்  சுட்டெரித்தார்கள்;  அவைகளின்  கிரயத்தைத்  தொகைபார்த்து,  ஐம்பதினாயிரம்  வெள்ளிக்காசாகக்  கண்டார்கள்.  {Acts  19:19}

 

இவ்வளவு  பலமாய்க்  கர்த்தருடைய  வசனம்  விருத்தியடைந்து  மேற்கொண்டது.  {Acts  19:20}

 

இவைகள்  முடிந்தபின்பு,  பவுல்<Paul>  மக்கெதோனியா<Macedonia>  அகாயா<Achaia>  என்னும்  நாடுகளில்  சுற்றிநடந்து,  எருசலேமுக்குப்போகும்படி<Jerusalem>  ஆவியில்  நிருணயம்பண்ணிக்கொண்டு:  நான்  அங்கே  போனபின்பு  ரோமாபுரியையும்<Rome>  பார்க்கவேண்டியதென்று  சொல்லி,  {Acts  19:21}

 

தனக்கு  உதவிசெய்தவர்களில்  இரண்டுபேராகிய  தீமோத்தேயுவையும்<Timotheus>  எரஸ்துவையும்<Erastus>  மக்கெதோனியாவுக்கு<Macedonia>  அனுப்பிவிட்டு;  தான்  பின்னுஞ்  சிலகாலம்  ஆசியாவிலே<Asia>  தங்கினான்.  {Acts  19:22}

 

அக்காலத்திலே  இந்த  மார்க்கத்தைக்குறித்துப்  பெரிய  கலகம்  உண்டாயிற்று.  {Acts  19:23}

 

எப்படியென்றால்,  தெமேத்திரியு<Demetrius>  என்னும்  பேர்கொண்ட  ஒரு  தட்டான்  தியானாளின்<Diana>  கோவிலைப்போல  வெள்ளியினால்  சிறிய  கோவில்களைச்  செய்து,  தொழிலாளிகளுக்கு  மிகுந்த  ஆதாயம்  வருவித்துக்கொண்டிருந்தான்.  {Acts  19:24}

 

இவர்களையும்  இப்படிப்பட்ட  தொழில்செய்கிற  மற்ற  வேலையாட்களையும்  அவன்  கூடிவரச்செய்து:  மனுஷர்களே,  இந்தத்  தொழிலினால்  நமக்கு  நல்ல  பிழைப்பு  உண்டாயிருக்கிறதென்று  அறிவீர்கள்.  {Acts  19:25}

 

இப்படியிருக்க,  கைகளினால்  செய்யப்பட்ட  தேவர்கள்  தேவர்களல்லவென்று  இந்தப்  பவுல்<Paul>  என்பவன்  சொல்லி,  எபேசுவிலேமாத்திரமல்ல<Ephesus>,  கொஞ்சங்குறைய  ஆசியா<Asia>  எங்கும்  அநேக  ஜனங்களுக்குப்  போதித்து,  அவர்களை  வசப்படுத்திக்கொண்டான்  என்று  நீங்கள்  கண்டும்  கேட்டும்  இருக்கிறீர்கள்.  {Acts  19:26}

 

இதனால்  நம்முடைய  தொழில்  அற்றுப்போகும்படியான  அபாயம்  நேரிட்டிருக்கிறதுமல்லாமல்,  மகா  தேவியாகிய  தியானாளுடைய<Diana>  கோவில்  எண்ணமற்றுப்  போகிறதற்கும்,  ஆசியா<Asia>  முழுமையும்  பூச்சக்கரமும்  சேவிக்கிற  அவளுடைய  மகத்துவம்  அழிந்துபோகிறதற்கும்  ஏதுவாயிருக்கிறது  என்றான்.  {Acts  19:27}

 

அவர்கள்  இதைக்  கேட்டு,  கோபத்தால்  நிறைந்து:  எபேசியருடைய<Ephesians>  தியானாளே<Diana>  பெரியவள்  என்று  சத்தமிட்டார்கள்.  {Acts  19:28}

 

பட்டணம்  முழுவதும்  கலகத்தினால்  நிறைந்தது.  பவுலுக்கு<Paul>  வழித்துணையாய்  வந்த  மக்கெதோனியராகிய<Macedonia>  காயுவையும்<Gaius>  அரிஸ்தர்க்குவையும்<Aristarchus>  அவர்கள்  இழுத்துக்கொண்டு,  ஒருமனப்பட்டு  அரங்கசாலைக்குப்  பாய்ந்தோடினார்கள்.  {Acts  19:29}

 

பவுல்<Paul>  கூட்டத்துக்குள்ளே  போக  மனதாயிருந்தபோது,  சீஷர்கள்  அவனைப்  போகவிடவில்லை.  {Acts  19:30}

 

ஆசியாநாட்டுத்<Asia>  தலைவரில்  அவனுக்குச்  சிநேகிதராயிருந்த  சிலரும்  அவனிடத்திற்கு  ஆள்  அனுப்பி,  அரங்கசாலைக்குள்  போகவேண்டாம்  என்று  எச்சரித்தார்கள்.  {Acts  19:31}

 

கூட்டத்தில்  அமளியுண்டாகி,  சிலர்  இப்படியும்  சிலர்  அப்படியுமாகப்  பேசினார்கள்;  தாங்கள்  கூடிவந்த  காரணம்  இன்னதென்று  அநேகருக்குத்  தெரியாதிருந்தது.  {Acts  19:32}

 

அப்பொழுது  யூதர்கள்<Jews>  அலெக்சந்தர்<Alexander>  என்பவனை  முன்னிற்கத்  தள்ளுகையில்,  கூட்டத்திலே  சிலர்  அவனை  முன்னே  இழுத்துவிட்டார்கள்.  அலெக்சந்தர்<Alexander>  கையமர்த்தி,  ஜனங்களுக்கு  உத்தரவுசொல்ல  மனதாயிருந்தான்.  {Acts  19:33}

 

அவன்  யூதனென்று<Jew>  அவர்கள்  அறிந்தபோது,  எபேசியருடைய<Ephesians>  தியானாளே<Diana>  பெரியவள்  என்று  இரண்டுமணி  நேரமளவும்  எல்லாரும்  ஏகமாய்ச்  சத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள்.  {Acts  19:34}

 

பட்டணத்துச்  சம்பிரதியானவன்  ஜனங்களை  அமர்த்தி:  எபேசியரே<Ephesus>,  எபேசியருடைய<Ephesians>  பட்டணம்  மகா  தேவியாகிய  தியானாளுக்கும்<Diana>  வானத்திலிருந்து  விழுந்த  சிலைக்கும்  கோவிற்பரிசாரகியாயிருக்கிறதை  அறியாதவன்  உண்டோ?  {Acts  19:35}

 

இது  எதிர்பேசப்படாத  காரியமாகையால்,  நீங்கள்  ஒன்றும்  பதறிச்செய்யாமல்  அமர்ந்திருக்கவேண்டும்.  {Acts  19:36}

 

இந்த  மனுஷரை  இங்கே  கொண்டுவந்தீர்கள்;  இவர்கள்  கோவிற்கொள்ளைக்காரருமல்ல,  உங்கள்  தேவியைத்  தூஷிக்கிறவர்களுமல்ல.  {Acts  19:37}

 

தெமேத்திரியுக்கும்<Demetrius>  அவனைச்  சேர்ந்த  தொழிலாளிகளுக்கும்  ஒருவன்மேல்  ஒருகாரியம்  உண்டாயிருந்தால்,  நியாயம்  விசாரிக்கிற  நாட்களுண்டு,  தேசாதிபதிகளும்  இருக்கிறார்கள்;  ஒருவர்பேரிலொருவர்  வழக்காடிக்கொள்ளட்டும்.  {Acts  19:38}

 

நீங்கள்  வேறே  யாதொரு  காரியத்தைக்குறித்து  விசாரிக்கவேண்டியதானால்,  அது  நியாயசங்கத்திலே  தீர்க்கப்படும்.  {Acts  19:39}

 

இன்றைக்கு  உண்டான  கலகத்தைக்குறித்து  நாம்  உத்தரவுசொல்லுகிறதற்கு  ஏதுவில்லாதபடியால்,  இந்தக்  கலகத்தைக்குறித்து  நாங்கள்  விசாரிக்கப்படும்போது,  குற்றவாளிகளாகிறதற்கு  ஏதுவாயிருப்போமே  என்று  சொல்லி,  {Acts  19:40}

 

பின்பு  கூட்டத்தை  அனுப்பிவிட்டான்.  {Acts  19:41}

 

கலகம்  அமர்ந்தபின்பு,  பவுல்<Paul>  சீஷரைத்  தன்னிடத்திற்கு  வரவழைத்து,  வினவிக்கொண்டு,  மக்கெதோனியாவுக்குப்<Macedonia>  போகப்  புறப்பட்டான்.  {Acts  20:1}

 

அவன்  அந்தத்  திசைகளிலே  சுற்றி  நடந்து,  சீஷர்களுக்கு  வெகுவாய்ப்  புத்திசொல்லி,  கிரேக்கு<Greece>  தேசத்திலே  சேர்ந்தான்.  {Acts  20:2}

 

அங்கே  மூன்றுமாதம்  சஞ்சரித்தபின்பு,  அவன்  கப்பல்  ஏறி,  சீரியாதேசத்துக்குப்போக<Syria>  மனதாயிருந்தபோது,  யூதர்கள்<Jews>  அவனுக்குத்  தீமைசெய்யும்படி  இரகசியமான  யோசனைகொண்டிருந்தபடியால்,  மக்கெதோனியா<Macedonia>  தேசத்தின்  வழியாய்த்  திரும்பிப்போகத்  தீர்மானம்  பண்ணினான்.  {Acts  20:3}

 

பெரோயா<Berea>  ஊரானாகிய  சோபத்தரும்<Sopater>,  தெசலோனிக்கேயரில்<Thessalonians>  அரிஸ்தர்க்கும்<Aristarchus>,  செக்குந்தும்<Secundus>,  தெர்பையானாகிய<Derbe>  காயுவும்<Gaius>,  தீமோத்தேயும்<Timotheus>,  ஆசியா<Asia>  நாட்டாராகிய  தீகிக்கும்<Tychicus>  துரோப்பீமும்<Trophimus>,  ஆசியாநாடுவரைக்கும்<Asia>  அவனுக்கு  வழித்துணையாய்  வந்தார்கள்.  {Acts  20:4}

 

இவர்கள்  முன்னாகப்  போய்,  துரோவாபட்டணத்திலே<Troas>  எங்களுக்காகக்  காத்திருந்தார்கள்.  {Acts  20:5}

 

புளிப்பில்லாத  அப்பப்பண்டிகை  நாட்களுக்குப்பின்பு  நாங்கள்  கப்பல்  ஏறிப்  பிலிப்பிபட்டணத்தை<Philippi>  விட்டு  ஐந்து  நாளைக்குள்ளே  துரோவாபட்டணத்துக்கு<Troas>  அவர்களிடத்தில்  வந்து,  அங்கே  ஏழுநாள்  தங்கியிருந்தோம்.  {Acts  20:6}

 

வாரத்தின்  முதல்நாளிலே,  அப்பம்  பிட்கும்படி  சீஷர்கள்  கூடிவந்திருக்கையில்,  பவுல்<Paul>  மறுநாளிலே  புறப்படவேண்டுமென்றிருந்து,  அவர்களுடனே  சம்பாஷித்து,  நடுராத்திரிமட்டும்  பிரசங்கித்தான்.  {Acts  20:7}

 

அவர்கள்  கூடியிருந்த  மேல்வீட்டிலே  அநேக  விளக்குகள்  வைத்திருந்தது.  {Acts  20:8}

 

அப்பொழுது  ஐத்திகு<Eutychus>  என்னும்  பேர்கொண்ட  ஒரு  வாலிபன்  ஜன்னலில்  உட்கார்ந்திருந்து,  பவுல்<Paul>  நெடுநேரம்  பிரசங்கம்  பண்ணிக்கொண்டிருக்கையில்,  மிகுந்த  தூக்கமடைந்து,  நித்திரைமயக்கத்தினால்  சாய்ந்து,  மூன்றாம்  மெத்தையிலிருந்து  கீழே  விழுந்து,  மரித்தவனாய்  எடுக்கப்பட்டான்.  {Acts  20:9}

 

உடனே  பவுல்<Paul>  இறங்கிப்போய்,  அவன்மேல்  விழுந்து,  அவனை  அணைத்துக்கொண்டு:  கலங்காதிருங்கள்,  இவன்  உயிர்  இவனுக்குள்  இருக்கிறது  என்றான்.  {Acts  20:10}

 

பின்பு  ஏறிப்போய்,  அப்பம்  பிட்டுப்  புசித்து,  விடியற்காலமளவும்  வெகுநேரம்  பேசிக்கொண்டிருந்து,  பின்பு  புறப்பட்டான்.  {Acts  20:11}

 

அந்த  வாலிபனை  அவர்கள்  உயிருள்ளவனாகக்  கூட்டிக்கொண்டுவந்து,  மிகுந்த  ஆறுதலடைந்தார்கள்.  {Acts  20:12}

 

பவுல்<Paul>  ஆசோபட்டணம்வரைக்கும்<Assos>  கரைவழியாய்ப்  போக  மனதாயிருந்தபடியால்,  அவன்  திட்டம்பண்ணியிருந்தபடியே,  நாங்கள்  கப்பல்  ஏறி,  அந்தப்  பட்டணத்தில்  அவனை  ஏற்றிக்கொள்ளும்படி  முன்னாக  அங்கே  போயிருந்தோம்.  {Acts  20:13}

 

அவன்  ஆசோபட்டணத்திலே<Assos>  எங்களைக்  கண்டபோது,  நாங்கள்  அவனை  ஏற்றிக்கொண்டு,  மித்திலேனே<Mitylene>  பட்டணத்துக்கு  வந்தோம்.  {Acts  20:14}

 

அவ்விடம்விட்டு,  மறுநாளிலே  கீயுதீவுக்கு<Chios>  எதிராக  வந்து,  {Acts  20:15}

 

பவுல்<Paul>  கூடுமானால்  பெந்தெகொஸ்தே  பண்டிகைநாளிலே  எருசலேமிலிருக்கவேண்டுமென்று<Jerusalem>  தீவிரப்பட்டதினிமித்தம்,  தான்  ஆசியாவிலே<Asia>  காலம்போக்காதபடிக்கு,  எபேசு<Ephesus>  பட்டணத்தைக்  கடந்து  போகவேண்டுமென்று  தீர்மானித்ததினால்,  மறுநாளிலே  சாமுதீவு<Samos>  பிடித்து,  துரோகில்லியோன்<Trogyllium>  ஊர்த்துறையிலே  தங்கி,  மறுநாள்  மிலேத்துபட்டணத்துக்கு<Miletus>  வந்தோம்.  {Acts  20:16}

 

மிலேத்துவிலிருந்து<Miletus>  அவன்  எபேசுவுக்கு<Ephesus>  ஆள்  அனுப்பி,  சபையின்  மூப்பரை  வரவழைத்தான்.  {Acts  20:17}

 

அவர்கள்  தன்னிடத்தில்  வந்து  சேர்ந்தபொழுது,  அவன்  அவர்களை  நோக்கி:  நான்  ஆசியாநாட்டில்<Asia>  வந்த  முதல்நாள்  தொடங்கி  எல்லாக்  காலங்களிலும்  உங்களுடனே  இன்னவிதமாய்  இருந்தேன்  என்பதை  நீங்கள்  அறிந்திருக்கிறீர்கள்.  {Acts  20:18}

 

வெகு  மனத்தாழ்மையோடும்,  மிகுந்த  கண்ணீரோடும்,  யூதருடைய<Jews>  தீமையான  யோசனைகளால்  எனக்கு  நேரிட்ட  சோதனைகளோடும்,  நான்  கர்த்தரைச்  சேவித்தேன்.  {Acts  20:19}

 

பிரயோஜனமானவைகளில்  ஒன்றையும்  நான்  உங்களுக்கு  மறைத்துவைக்காமல்,  வெளியரங்கமாக  வீடுகள்தோறும்  உங்களுக்குப்  பிரசங்கித்து,  உபதேசம்பண்ணி,  {Acts  20:20}

 

தேவனிடத்திற்கு  மனந்திரும்புவதைக்குறித்தும்,  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவை<Jesus  Christ>  விசுவாசிப்பதைக்குறித்தும்,  நான்  யூதருக்கும்<Jews> கிரேக்கருக்கும்<Greeks>  சாட்சியாக  அறிவித்தேன்.  {Acts  20:21}

 

இப்பொழுதும்  நான்  ஆவியிலே  கட்டுண்டவனாய்  எருசலேமுக்குப்<Jerusalem>  போகிறேன்;  அங்கே  எனக்கு  நேரிடுங்காரியங்களை  நான்  அறியேன்.  {Acts  20:22}

 

கட்டுகளும்  உபத்திரவங்களும்  எனக்கு  வைத்திருக்கிறதென்று  பரிசுத்தஆவியானவர்  பட்டணந்தோறும்  தெரிவிக்கிறதைமாத்திரம்  அறிந்திருக்கிறேன்.  {Acts  20:23}

 

ஆகிலும்  அவைகளில்  ஒன்றையுங்குறித்துக்  கவலைப்படேன்;  என்  பிராணனையும்  நான்  அருமையாக  எண்ணேன்;  என்  ஓட்டத்தைச்  சந்தோஷத்தோடே  முடிக்கவும்,  தேவனுடைய  கிருபையின்  சுவிசேஷத்தைப்  பிரசங்கம்பண்ணும்படிக்கு  நான்  கர்த்தராகிய  இயேசுவினிடத்தில்<Jesus>  பெற்ற  ஊழியத்தை  நிறைவேற்றவுமே  விரும்புகிறேன்.  {Acts  20:24}

 

இதோ,  நான்  உங்களுக்குள்ளே  சஞ்சரித்து,  தேவனுடைய  ராஜ்யத்தைக்  குறித்துப்  பிரசங்கம்பண்ணினதைக்  கேட்டவர்களாகிய  நீங்களெல்லாரும்  இனி  என்  முகத்தைப்  பார்க்கமாட்டீர்களென்று  அறிந்திருக்கிறேன்.  {Acts  20:25}

 

தேவனுடைய  ஆலோசனையில்  ஒன்றையும்  நான்  மறைத்துவைக்காமல்,  எல்லாவற்றையும்  உங்களுக்கு  அறிவித்தபடியினாலே,  {Acts  20:26}

 

எல்லாருடைய  இரத்தப்பழிக்கும்  நீங்கி  நான்  சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு  உங்களை  இன்றையத்தினம்  சாட்சிகளாக  வைக்கிறேன்.  {Acts  20:27}

 

ஆகையால்,  உங்களைக்குறித்தும்,  தேவன்  தம்முடைய  சுயரத்தத்தினாலே  சம்பாதித்துக்கொண்ட  தமது  சபையை  மேய்ப்பதற்குப்  பரிசுத்தஆவி  உங்களைக்  கண்காணிகளாக  வைத்த  மந்தை  முழுவதையுங்குறித்தும்,  எச்சரிக்கையாயிருங்கள்.  {Acts  20:28}

 

நான்  போனபின்பு  மந்தையைத்  தப்பவிடாத  கொடிதான  ஓநாய்கள்  உங்களுக்குள்ளே  வரும்.  {Acts  20:29}

 

உங்களிலும்  சிலர்  எழும்பி,  சீஷர்களைத்  தங்களிடத்தில்  இழுத்துக்கொள்ளும்படி  மாறுபாடானவைகளைப்  போதிப்பார்களென்று  அறிந்திருக்கிறேன்.  {Acts  20:30}

 

ஆனபடியால்,  நான்  மூன்றுவருஷ  காலமாய்  இரவும்  பகலும்  கண்ணீரோடே  இடைவிடாமல்  அவனவனுக்குப்  புத்திசொல்லிக்கொண்டுவந்ததை  நினைத்து  விழித்திருங்கள்.  {Acts  20:31}

 

இப்பொழுதும்  சகோதரரே,  நீங்கள்  பக்திவிருத்தியடையவும்,  பரிசுத்தமாக்கப்பட்ட  அனைவருக்குள்ளும்  உங்களுக்குச்  சுதந்தரத்தைக்  கொடுக்கவும்  வல்லவராயிருக்கிற  தேவனுக்கும்  அவருடைய  கிருபையுள்ள  வசனத்துக்கும்  உங்களை  ஒப்புக்கொடுக்கிறேன்.  {Acts  20:32}

 

ஒருவனுடைய  வெள்ளியையாகிலும்  பொன்னையாகிலும்  வஸ்திரத்தையாகிலும்  நான்  இச்சிக்கவில்லை.  {Acts  20:33}

 

நீங்கள்  அறிந்திருக்கிறபடி,  எனக்கும்  என்னுடனேகூட  இருந்தவர்களுக்கும்  வேண்டியவைகளுக்காக  இந்தக்  கைகளே  வேலைசெய்தது.  {Acts  20:34}

 

இப்படிப்  பிரயாசப்பட்டு,  பலவீனரைத்  தாங்கவும்,  வாங்குகிறதைப்பார்க்கிலும்  கொடுக்கிறதே  பாக்கியம்  என்று  கர்த்தராகிய  இயேசு<Jesus>  சொன்ன  வார்த்தைகளை  நினைக்கவும்  வேண்டுமென்று  எல்லா  விதத்திலேயும்  உங்களுக்குக்  காண்பித்தேன்  என்றான்.  {Acts  20:35}

 

இவைகளைச்  சொன்னபின்பு,  அவன்  முழங்காற்படியிட்டு,  அவர்களெல்லாரோடுங்கூட  ஜெபம்பண்ணினான்.  {Acts  20:36}

 

அவர்களெல்லாரும்  மிகவும்  அழுது,  என்  முகத்தை  நீங்கள்  இனிப்  பார்க்கமாட்டீர்களென்று  அவன்  சொன்ன  வார்த்தையைக்குறித்து  அதிகமாய்த்  துக்கப்பட்டு,  {Acts  20:37}

 

பவுலின்<Paul>  கழுத்தைக்  கட்டிக்கொண்டு,  அவனை  முத்தஞ்செய்து,  கப்பல்வரைக்கும்  அவனுடனே  கூடப்போனார்கள்.  {Acts  20:38}

 

நாங்கள்  அவர்களை  விட்டுப்  பிரிந்து,  துறைபெயர்ந்தபின்பு,  நேராயோடி,  கோஸ்தீவையும்<Coos>,  மறுநாளில்  ரோதுதீவையும்<Rhodes>  சேர்ந்து,  அவ்விடம்  விட்டுப்  பத்தாரா<Patara>  பட்டணத்துக்கு  வந்து,  {Acts  21:1}

 

அங்கே  பெனிக்கே<Phenicia>  தேசத்திற்குப்போகிற  ஒரு  கப்பலைக்  கண்டு,  அதிலே  ஏறிப்போனோம்.  {Acts  21:2}

 

சீப்புருதீவைக்<Cyprus>  கண்டு,  அதை  இடதுபுறமாக  விட்டு,  சீரியாநாட்டிற்கு<Syria>  ஓடி,  தீருபட்டணத்துறையில்<Tyre>  இறங்கினோம்;  அங்கே  கப்பலின்  சரக்குகளை  இறக்கவேண்டியதாயிருந்தது.  {Acts  21:3}

 

அவ்விடத்திலுள்ள  சீஷரைக்  கண்டுபிடித்து,  அங்கே  ஏழுநாள்  தங்கினோம்.  அவர்கள்  பவுலை<Paul>  நோக்கி:  நீர்  எருசலேமுக்குப்<Jerusalem>  போகவேண்டாம்  என்று  ஆவியின்  ஏவுதலினாலே  சொன்னார்கள்.  {Acts  21:4}

 

அந்த  நாட்கள்  நிறைவேறினபின்பு,  நாங்கள்  புறப்பட்டுப்போகையில்,  அவர்களெல்லாரும்  மனைவிகளோடும்  பிள்ளைகளோடுங்கூடப்  பட்டணத்துக்குப்  புறம்பே  எங்களை  வழிவிட்டனுப்பும்படி  வந்தார்கள்.  அப்பொழுது  கடற்கரையிலே  நாங்கள்  முழங்காற்படியிட்டு  ஜெபம்பண்ணினோம்.  {Acts  21:5}

 

ஒருவரிடத்திலொருவர்  உத்தரவு  பெற்றுக்கொண்டபின்பு,  நாங்கள்  கப்பல்  ஏறினோம்;  அவர்கள்  தங்கள்  வீடுகளுக்குத்  திரும்பிப்போனார்கள்.  {Acts  21:6}

 

நாங்கள்  கப்பல்யாத்திரையை  முடித்து,  தீருபட்டணத்தை<Tyre>  விட்டுப்  பித்தொலோமாய்<Ptolemais>  பட்டணத்துக்கு  வந்து,  சகோதரரை  வினவி,  அவர்களிடத்தில்  ஒருநாள்  தங்கினோம்.  {Acts  21:7}

 

மறுநாளிலே  பவுலைச்<Paul>  சேர்ந்தவர்களாகிய  நாங்கள்  புறப்பட்டுச்  செசரியாபட்டணத்துக்கு<Caesarea>  வந்து,  ஏழுபேரில்  ஒருவனாகிய  பிலிப்பென்னும்<Philip>  சுவிசேஷகனுடைய  வீட்டிலே  பிரவேசித்து,  அவனிடத்தில்  தங்கினோம்.  {Acts  21:8}

 

தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற  கன்னியாஸ்திரீகளாகிய  நாலு  குமாரத்திகள்  அவனுக்கு  இருந்தார்கள்.  {Acts  21:9}

 

நாங்கள்  அநேகநாள்  அங்கே  தங்கியிருக்கையில்,  அகபு<Agabus>  என்னும்  பேர்கொண்ட  ஒரு  தீர்க்கதரிசி  யூதேயாவிலிருந்து<Judaea>  வந்தான்.  {Acts  21:10}

 

அவன்  எங்களிடத்தில்  வந்து,  பவுலினுடைய<Paul>  கச்சையை  எடுத்துத்  தன்  கைகளையும்  கால்களையும்  கட்டிக்கொண்டு:  இந்தக்  கச்சையையுடையவனை  எருசலேமிலுள்ள<Jerusalem>  யூதர்<Jews>  இவ்விதமாய்க்  கட்டிப்  புறஜாதியார்  கைகளில்  ஒப்புக்கொடுப்பார்கள்  என்று  பரிசுத்த  ஆவியானவர்  சொல்லுகிறார்  என்றான்.  {Acts  21:11}

 

இவைகளை  நாங்கள்  கேட்டபொழுது,  எருசலேமுக்குப்<Jerusalem>  போகவேண்டாமென்று,  நாங்களும்  அவ்விடத்தாரும்  அவனை  வேண்டிக்கொண்டோம்.  {Acts  21:12}

 

அதற்குப்  பவுல்<Paul>:  நீங்கள்  அழுது  என்  இருதயத்தை  ஏன்  உடைந்துபோகப்பண்ணுகிறீர்கள்?  எருசலேமில்<Jerusalem>  நான்  கர்த்தராகிய  இயேசுவின்<Jesus>  நாமத்திற்காகக்  கட்டப்படுவதற்குமாத்திரமல்ல,  மரிப்பதற்கும்  ஆயத்தமாயிருக்கிறேன்  என்றான்.  {Acts  21:13}

 

அவன்  சம்மதியாதபடியினாலே,  கர்த்தருடைய  சித்தம்  ஆகக்கடவதென்று  அமர்ந்திருந்தோம்.  {Acts  21:14}

 

அந்த  நாட்களுக்குப்பின்பு  நாங்கள்  பிரயாண  சாமான்களை  ஆயத்தம்பண்ணிக்கொண்டு  எருசலேமுக்குப்<Jerusalem>  போனோம்.  {Acts  21:15}

 

செசரியாபட்டணத்திலுள்ள<Caesarea>  சீஷரில்  சிலர்  எங்களுடனேகூட  வந்ததுமன்றி,  சீப்புருதீவானாகிய<Cyprus>  மினாசோன்<Mnason>  என்னும்  ஒரு  பழைய  சீஷனிடத்திலே  நாங்கள்  தங்கும்படியாக  அவனையும்  தங்களோடே  கூட்டிக்கொண்டு  வந்தார்கள்.  {Acts  21:16}

 

நாங்கள்  எருசலேமுக்கு<Jerusalem>  வந்தபோது,  சகோதரர்  எங்களைச்  சந்தோஷமாய்  ஏற்றுக்கொண்டார்கள்.  {Acts  21:17}

 

மறுநாளிலே  பவுல்<Paul>  எங்களைக்  கூட்டிக்கொண்டு,  யாக்கோபினிடத்திற்குப்<James>  போனான்;  மூப்பரெல்லாரும்  அங்கே  கூடிவந்தார்கள்.  {Acts  21:18}

 

அவர்களை  அவன்  வினவி,  தன்  ஊழியத்தினாலே  தேவன்  புறஜாதிகளிடத்தில்  செய்தவைகளை  ஒவ்வொன்றாய்  விவரித்துச்சொன்னான்.  {Acts  21:19}

 

அதை  அவர்கள்  கேட்டுக்  கர்த்தரை  மகிமைப்படுத்தினார்கள்.  பின்பு  அவர்கள்  அவனை  நோக்கி:  சகோதரனே,  யூதர்களுக்குள்<Jews>  அநேகமாயிரம்பேர்  விசுவாசிகளாயிருக்கிறதைப்  பார்க்கிறீரே,  அவர்களெல்லாரும்  நியாயப்பிரமாணத்துக்காக  வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறார்கள்.  {Acts  21:20}

 

புறஜாதிகளிடத்திலிருக்கிற  யூதரெல்லாரும்<Jews>  தங்கள்  பிள்ளைகளுக்கு  விருத்தசேதனம்  பண்ணவும்,  முறைமைகளின்படி  நடக்கவும்  வேண்டுவதில்லையென்று  நீர்  சொல்லி,  இவ்விதமாய்  அவர்கள்  மோசேயை<Moses>  விட்டுப்  பிரிந்துபோகும்படி  போதிக்கிறீரென்று  இவர்கள்  உம்மைக்குறித்துக்  கேள்விப்பட்டிருக்கிறார்கள்.  {Acts  21:21}

 

இப்பொழுது  செய்யவேண்டியது  என்ன?  நீர்  வந்திருக்கிறீரென்று  இவர்கள்  கேள்விப்பட்டு,  நிச்சயமாகக்  கூட்டங்கூடுவார்கள்.  {Acts  21:22}

 

ஆகையால்  நாங்கள்  உமக்குச்  சொல்லுகிறபடி  நீர்  செய்யவேண்டும்;  அதென்னவென்றால்,  பிரார்த்தனை  பண்ணிக்கொண்டவர்களாகிய  நாலுபேர்  எங்களிடத்தில்  இருக்கிறார்கள்.  {Acts  21:23}

 

அவர்களை  நீர்  சேர்த்துக்கொண்டு,  அவர்களுடனேகூடச்  சுத்திகரிப்பு  செய்துகொண்டு,  அவர்கள்  தலைச்சவரம்பண்ணிக்  கொள்வதற்குச்  செல்லுமானதைச்  செலவுசெய்யும்;  அப்படிச்  செய்தால்  உம்மைக்குறித்துக்  கேள்விப்பட்ட  காரியங்கள்  அபத்தமென்றும்,  நீரும்  நியாயப்பிரமாணத்தைக்  கைக்கொண்டு  நடக்கிறவரென்றும்  எல்லாரும்  அறிந்துகொள்வார்கள்.  {Acts  21:24}

 

விசுவாசிகளான  புறஜாதியார்  இப்படிப்பட்டவைகளைக்  கைக்கொள்ளாமல்,  விக்கிரகங்களுக்குப்  படைத்ததற்கும்,  இரத்தத்திற்கும்,  நெருக்குண்டு  செத்ததிற்கும்,  வேசித்தனத்திற்கும்,  விலகியிருக்கவேண்டுமென்று  நாங்கள்  தீர்மானம்பண்ணி,  அவர்களுக்கு  எழுதியனுப்பினோமே  என்றார்கள்.  {Acts  21:25}

 

அப்பொழுது  பவுல்<Paul>  அந்த  மனுஷரைச்  சேர்த்துக்கொண்டு,  மறுநாளிலே  அவர்களுடனேகூடத்  தானும்  சுத்திகரிப்பு  செய்துகொண்டு,  தேவாலயத்தில்  பிரவேசித்து,  அவர்களில்  ஒவ்வொருவனுக்காகவும்  வேண்டிய  பலிசெலுத்தித்  தீருமளவும்  சுத்திகரிப்பு  நாட்களை  நிறைவேற்றுவேனென்று  அறிவித்தான்.  {Acts  21:26}

 

அந்த  ஏழுநாட்களும்  நிறைவேறி  வருகையில்,  ஆசியாநாட்டிலிருந்து<Asia>  வந்த  யூதர்கள்<Jews>  அவனைத்  தேவாலயத்திலே  கண்டு,  ஜனங்களெல்லாரையும்  எடுத்துவிட்டு,  அவன்மேல்  கைபோட்டு:  {Acts  21:27}

 

இஸ்ரவேலரே<Israel>,  உதவிசெய்யுங்கள்.  நம்முடைய  ஜனத்திற்கும்  வேதப்பிரமாணத்திற்கும்  இந்த  ஸ்தலத்திற்கும்  விரோதமாக  எங்கும்  எல்லாருக்கும்  போதித்துவருகிறவன்  இவன்தான்;  இந்தத்  தேவாலயத்திற்குள்ளே  கிரேக்கரையும்<Greeks>  கூட்டிக்கொண்டுவந்து,  இந்தப்  பரிசுத்த  ஸ்தலத்தைத்  தீட்டுப்படுத்தினான்  என்று  சத்தமிட்டார்கள்.  {Acts  21:28}

 

எபேசியனாகிய<Ephesian>  துரோப்பீமு<Trophimus>  என்பவன்  முன்னே  நகரத்தில்  பவுலுடனேகூட<Paul>  இருக்கிறதைக்  கண்டிருந்தபடியால்,  பவுல்<Paul>  அவனைத்  தேவாலயத்தில்  கூட்டிக்கொண்டு  வந்திருப்பானென்று  நினைத்தார்கள்.  {Acts  21:29}

 

அப்பொழுது  நகரமுழுவதும்  கலக்கமுற்றது;  ஜனங்கள்  கூட்டமாய்  ஓடிவந்து,  பவுலைப்பிடித்து<Paul>,  அவனைத்  தேவாலயத்திற்குப்  புறம்பே  இழுத்துக்கொண்டுபோனார்கள்;  உடனே  கதவுகள்  பூட்டப்பட்டது.  {Acts  21:30}

 

அவர்கள்  அவனைக்  கொலைசெய்ய  எத்தனித்திருக்கையில்,  எருசலேம்<Jerusalem>  முழுவதும்  கலக்கமாயிருக்கிறதென்று  போர்ச்சேவகரின்  சேனாபதிக்குச்  செய்திவந்தது.  {Acts  21:31}

 

உடனே  அவன்  போர்ச்சேவகரையும்  அவர்களுடைய  அதிபதிகளையும்  கூட்டிக்கொண்டு,  அவர்களிடத்திற்கு  ஓடினான்;  சேனாபதியையும்  போர்ச்சேவகரையும்  அவர்கள்  கண்டபோது  பவுலை<Paul>  அடிக்கிறதை  விட்டு  நிறுத்தினார்கள்.  {Acts  21:32}

 

அப்பொழுது  சேனாபதி  கிட்டவந்து  அவனைப்  பிடித்து,  இரண்டு  சங்கிலிகளினாலே  கட்டும்படி  சொல்லி:  இவன்  யார்  என்றும்  என்ன  செய்தான்  என்றும்  விசாரித்தான்.  {Acts  21:33}

 

அதற்கு  ஜனங்கள்  பலவிதமாய்ச்  சத்தமிட்டார்கள்;  சந்தடியினாலே  நிச்சயத்தை  அவன்  அறியக்கூடாமல்,  அவனைக்  கோட்டைக்குள்ளே  கொண்டுபோகும்படி  கட்டளையிட்டான்.  {Acts  21:34}

 

அவன்  படிகள்மேல்  ஏறினபோது  ஜனக்கூட்டம்  திரண்டு  பின்சென்று,  {Acts  21:35}

 

இவனை  அகற்றும்  என்று  உக்கிரமாய்க்  கூப்பிட்டபடியினாலே,  போர்ச்சேவகர்  அவனைத்  தூக்கிக்கொண்டு  போகவேண்டியதாயிருந்தது.  {Acts  21:36}

 

அவர்கள்  பவுலைக்<Paul>  கோட்டைக்குள்ளே  கொண்டுபோகிற  சமயத்தில்,  அவன்  சேனாபதியை  நோக்கி:  நான்  உம்முடனே  ஒரு  வார்த்தை  பேசலாமா  என்றான்.  அதற்கு  அவன்:  உனக்குக்  கிரேக்குபாஷை<Greek>  தெரியுமா?  {Acts  21:37}

 

நீ  இந்த  நாட்களுக்குமுன்னே  கலகமுண்டாக்கி,  நாலாயிரங்  கொலைபாதகரை  வனாந்தரத்திற்குக்  கொண்டுபோன  எகிப்தியன்<Egyptian>  அல்லவா  என்றான்.  {Acts  21:38}

 

அதற்குப்  பவுல்<Paul>:  நான்  சிலிசியா<Cilicia>  நாட்டிலுள்ள  கீர்த்திபெற்ற  தர்சுபட்டணத்து<Tarsus>  யூதன்<Jew>;  ஜனங்களுடனே  பேசும்படி  எனக்கு  உத்தரவாகவேண்டுமென்று  உம்மை  வேண்டிக்கொள்ளுகிறேன்  என்றான்.  {Acts  21:39}

 

உத்தரவானபோது,  பவுல்<Paul>  படிகளின்மேல்  நின்று  ஜனங்களைப்  பார்த்துக்  கையமர்த்தினான்;  மிகுந்த  அமைதலுண்டாயிற்று;  அப்பொழுது  அவன்  எபிரெயு<Hebrew>  பாஷையிலே  பேசத்தொடங்கினான்.  {Acts  21:40}

 

சகோதரரே,  பிதாக்களே,  நான்  இப்பொழுது  உங்களுக்குச்  சொல்லப்போகிற  நியாயங்களுக்குச்  செவிகொடுப்பீர்களாக  என்றான்.  {Acts  22:1}

 

அவன்  எபிரெயு<Hebrew>  பாஷையிலே  தங்களுடனே  பேசுகிறதை  அவர்கள்  கேட்டபொழுது,  அதிக  அமைதலாயிருந்தார்கள்.  அப்பொழுது  அவன்:  {Acts  22:2}

 

நான்  யூதன்<Jew>,  சிலிசியாநாட்டிலுள்ள<Cilicia>  தர்சுபட்டணத்திலே<Tarsus>  பிறந்து,  இந்த  நகரத்திலே  கமாலியேலின்<Gamaliel>  பாதத்தருகே  வளர்ந்து,  முன்னோர்களுடைய  வேதப்பிரமாணத்தின்படியே  திட்டமாய்ப்  போதிக்கப்பட்டு,  இன்றையத்தினம்  நீங்களெல்லாரும்  தேவனைக்குறித்து  வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறதுபோல  நானும்  வைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.  {Acts  22:3}

 

நான்  இந்த  மார்க்கத்தாராகிய  புருஷரையும்  ஸ்திரீகளையும்  கட்டி,  சிறைச்சாலைகளில்  ஒப்புவித்து,  மரணபரியந்தம்  துன்பப்படுத்தினேன்.  {Acts  22:4}

 

அதற்குப்  பிரதான  ஆசாரியரும்  மூப்பர்  யாவரும்  சாட்சிகொடுப்பார்கள்;  அவர்கள்  கையிலே  நான்  சகோதரருக்கு  நிருபங்களை  வாங்கிக்கொண்டு,  தமஸ்குவிலிருக்கிறவர்களும்<Damascus>  தண்டிக்கப்படும்படிக்கு,  அவர்களைக்  கட்டி,  எருசலேமுக்குக்<Jerusalem>  கொண்டுவரும்படி  அவ்விடத்திற்குப்போனேன்.  {Acts  22:5}

 

அப்படி  நான்  பிரயாணப்பட்டுத்  தமஸ்குவுக்குச்<Damascus>  சமீபமானபோது,  மத்தியான  வேளையிலே,  சடிதியாய்  வானத்திலிருந்து  பேரொளி  உண்டாகி,  என்னைச்சுற்றிப்  பிரகாசித்தது.  {Acts  22:6}

 

நான்  தரையிலே  விழுந்தேன்.  அப்பொழுது:  சவுலே<Saul>,  சவுலே<Saul>,  நீ  என்னை  ஏன்  துன்பப்படுத்துகிறாய்  என்று  என்னுடனே  சொல்லுகிற  ஒரு  சத்தத்தைக்  கேட்டேன்.  {Acts  22:7}

 

அதற்கு  நான்:  ஆண்டவரே,  நீர்  யார்  என்றேன்.  அவர்:  நீ  துன்பப்படுத்துகிற  நசரேயனாகிய<Nazarene>  இயேசு<Jesus>  நானே  என்றார்.  {Acts  22:8}

 

என்னுடனேகூட  இருந்தவர்கள்  வெளிச்சத்தைக்  கண்டு,  பயமடைந்தார்கள்;  என்னுடனே  பேசினவருடைய  சத்தத்தையோ  அவர்கள்  கேட்கவில்லை.  {Acts  22:9}

 

அப்பொழுது  நான்:  ஆண்டவரே,  நான்  என்னசெய்யவேண்டும்  என்றேன்.  அதற்குக்  கர்த்தர்:  நீ  எழுந்து,  தமஸ்குவுக்குப்<Damascus>  போ;  நீ  செய்யும்படி  நியமிக்கப்பட்டதெல்லாம்  அங்கே  உனக்குச்  சொல்லப்படும்  என்றார்.  {Acts  22:10}

 

அந்த  ஒளியின்  மகிமையினாலே  நான்  பார்வையற்றுப்போனபடியினால்,  என்னோடிருந்தவர்களால்  கைலாகு  கொடுத்து  வழிநடத்தப்பட்டுத்  தமஸ்குவுக்கு<Damascus>  வந்தேன்.  {Acts  22:11}

 

அப்பொழுது  வேதப்பிரமாணத்தின்படியே  பக்தியுள்ளவனும்,  அங்கே  குடியிருக்கிற  சகல  யூதராலும்<Jews>  நல்லவனென்று  சாட்சிபெற்றவனுமாகிய  அனனியா<Ananias>  என்னும்  ஒருவன்,  {Acts  22:12}

 

என்னிடத்தில்  வந்துநின்று:  சகோதரனாகிய  சவுலே<Saul>,  பார்வையடைவாயாக  என்றான்;  அந்நேரமே  நான்  பார்வையடைந்து,  அவனை  ஏறிட்டுப்பார்த்தேன்.  {Acts  22:13}

 

அப்பொழுது  அவன்:  நம்முடைய  முன்னோர்களின்  தேவனுடைய  திருவுளத்தை  நீ  அறியவும்,  நீதிபரரைத்  தரிசிக்கவும்,  அவருடைய  திருவாய்மொழியைக்  கேட்கவும்,  அவர்  உன்னை  முன்னமே  தெரிந்துகொண்டார்.  {Acts  22:14}

 

நீ  கண்டவைகளையும்  கேட்டவைகளையும்  குறித்துச்  சகல  மனுஷருக்குமுன்பாக  அவருக்குச்  சாட்சியாயிருப்பாய்.  {Acts  22:15}

 

இப்பொழுது  நீ  தாமதிக்கிறதென்ன?  நீ  எழுந்து  கர்த்தருடைய  நாமத்தைத்  தொழுதுகொண்டு,  ஞானஸ்நானம்பெற்று,  உன்  பாவங்கள்  போகக்  கழுவப்படு  என்றான்.  {Acts  22:16}

 

பின்பு  நான்  எருசலேமுக்குத்<Jerusalem>  திரும்பிவந்து,  தேவாலயத்திலே  ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில்,  ஞானதிருஷ்டியடைந்து,  அவரைத்  தரிசித்தேன்.  {Acts  22:17}

 

அவர்  என்னை  நோக்கி:  நீ  என்னைக்குறித்துச்  சொல்லும்  சாட்சியை  இவர்கள்  ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்;  ஆதலால்  நீ  தாமதம்பண்ணாமல்  சீக்கிரமாய்  எருசலேமைவிட்டுப்<Jerusalem>  புறப்பட்டுப்போ  என்றார்.  {Acts  22:18}

 

அதற்கு  நான்:  ஆண்டவரே,  உம்மிடத்தில்  விசுவாசமாயிருக்கிறவர்களை  நான்  காவலில்  வைத்து  ஜெபஆலயங்களிலே  அடித்ததையும்,  {Acts  22:19}

 

உம்முடைய  சாட்சியாகிய  ஸ்தேவானுடைய<Stephen>  இரத்தம்  சிந்தப்படுகிறபோது,  நானும்  அருகே  நின்று,  அவனைக்  கொலைசெய்வதற்குச்  சம்மதித்து,  அவனைக்  கொலைசெய்தவர்களின்  வஸ்திரங்களைக்  காத்துக்கொண்டிருந்ததையும்,  இவர்கள்  அறிந்திருக்கிறார்களே  என்றேன்.  {Acts  22:20}

 

அதற்கு  அவர்:  நீ  போ,  நான்  உன்னைத்  தூரமாய்ப்  புறஜாதிகளிடத்திலே  அனுப்புவேன்  என்று  சொன்னார்  என்றான்.  {Acts  22:21}

 

இந்த  வார்த்தைவரைக்கும்  அவனுக்குச்  செவிகொடுத்தார்கள்.  பின்பு:  இப்படிப்பட்டவனைப்  பூமியிலிருந்து  அகற்றவேண்டும்;  இவன்  உயிரோடிருக்கிறது  நியாயமல்லவென்று  மிகுந்த  சத்தமிட்டுச்  சொன்னார்கள்.  {Acts  22:22}

 

இவ்விதமாய்  அவர்கள்  கூக்குரலிட்டுத்  தங்கள்  மேல்வஸ்திரங்களை  எறிந்துவிட்டு,  ஆகாயத்திலே  புழுதியைத்  தூற்றிக்கொண்டிருக்கையில்,  {Acts  22:23}

 

சேனாபதி  அவனைக்  கோட்டைக்குள்ளே  கொண்டுவரும்படி  கட்டளையிட்டு,  அவர்கள்  அவனுக்கு  விரோதமாய்  இப்படிக்  கூக்குரலிட்ட  முகாந்தரத்தை  அறியும்படிக்கு  அவனைச்  சவுக்கால்  அடித்து  விசாரிக்கச்  சொன்னான்.  {Acts  22:24}

 

அந்தப்படி  அவர்கள்  அவனை  வாரினால்  அழுந்தக்  கட்டும்போது,  பவுல்<Paul>  சமீபமாய்  நின்ற  நூற்றுக்கு  அதிபதியை  நோக்கி:  ரோமனும்<Roman>  நியாயம்  விசாரிக்கப்படாதவனுமாயிருக்கிற  மனுஷனை  அடிக்கிறது  உங்களுக்கு  நியாயமா  என்றான்.  {Acts  22:25}

 

நூற்றுக்கு  அதிபதி  அதைக்கேட்டு,  சேனாபதியினிடத்திற்குப்  போய்,  அதை  அறிவித்து:  நீர்  செய்யப்போகிறதைக்குறித்து  எச்சரிக்கையாயிரும்;  இந்த  மனுஷன்  ரோமன்<Roman>  என்றான்.  {Acts  22:26}

 

அப்பொழுது  சேனாபதி  பவுலினிடத்தில்<Paul>  வந்து:  நீ  ரோமனா<Roman>?  எனக்குச்  சொல்  என்றான்.  அதற்கு  அவன்:  நான்  ரோமன்தான்<Roman>  என்றான்.  {Acts  22:27}

 

சேனாபதி  பிரதியுத்தரமாக:  நான்  மிகுந்த  திரவியத்தினாலே  இந்தச்  சிலாக்கியத்தைச்  சம்பாதித்தேன்  என்றான்.  அதற்குப்  பவுல்<Paul>:  நானோ  இந்தச்  சிலாக்கியத்திற்குரியவனாகப்  பிறந்தேன்  என்றான்.  {Acts  22:28}

 

அவனை  அடித்து  விசாரிக்கும்படி  எத்தனமாயிருந்தவர்கள்  உடனே  அவனை  விட்டுவிட்டார்கள்.  சேனாபதி  அவன்  ரோமனென்று<Roman>  அறிந்து,  அவனைக்  கட்டுவித்ததற்காகப்  பயந்தான்.  {Acts  22:29}

 

பவுலின்மேல்<Paul>  யூதராலே<Jews>  ஏற்படுத்தப்பட்ட  குற்றம்  இன்னதென்று  நிச்சயமாய்  அறிய  விரும்பி,  அவன்  மறுநாளிலே  அவனைக்  கட்டவிழ்த்து,  பிரதான  ஆசாரியரையும்  ஆலோசனைச்  சங்கத்தார்  அனைவரையும்  கூடிவரும்படி  கட்டளையிட்டு,  அவனைக்  கூட்டிக்கொண்டுபோய்,  அவர்களுக்கு  முன்பாக  நிறுத்தினான்.  {Acts  22:30}

 

பவுல்<Paul>  ஆலோசனைச்  சங்கத்தாரை  உற்றுப்பார்த்து:  சகோதரரே,  இந்நாள்வரைக்கும்  எல்லா  விஷயங்களிலும்  நான்  நல்மனச்சாட்சியோடே  தேவனுக்குமுன்பாக  நடந்துவந்தேன்  என்று  சொன்னான்.  {Acts  23:1}

 

அப்பொழுது  பிரதான  ஆசாரியனாகிய  அனனியா<Ananias>  அவனுக்குச்  சமீபமாய்  நின்றவர்களை  நோக்கி:  இவன்  வாயில்  அடியுங்கள்  என்று  கட்டளையிட்டான்.  {Acts  23:2}

 

அப்பொழுது  பவுல்<Paul>  அவனைப்பார்த்து:  வெள்ளையடிக்கப்பட்ட  சுவரே,  தேவன்  உம்மை  அடிப்பார்;  நியாயப்பிரமாணத்தின்படி  என்னை  நியாயம்  விசாரிக்கிறவராய்  உட்கார்ந்திருக்கிற  நீர்  நியாயப்பிரமாணத்திற்கு  விரோதமாய்  என்னை  அடிக்கச்  சொல்லலாமா  என்றான்.  {Acts  23:3}

 

சமீபத்திலே  நின்றவர்கள்:  தேவனுடைய  பிரதானஆசாரியரை  வைகிறாயா  என்றார்கள்.  {Acts  23:4}

 

அதற்குப்  பவுல்<Paul>:  சகோதரரே,  இவர்  பிரதான  ஆசாரியரென்று  எனக்குத்  தெரியாது;  உன்  ஜனத்தின்  அதிபதியைத்  தீது  சொல்லாயாக  என்று  எழுதியிருக்கிறதே  என்றான்.  {Acts  23:5}

 

பின்பு  அவர்களில்,  சதுசேயர்<Sadducees>  ஒரு  பங்கும்  பரிசேயர்<Pharisees>  ஒரு  பங்குமாயிருக்கிறார்களென்று  பவுல்<Paul>  அறிந்து:  சகோதரரே,  நான்  பரிசேயனும்<Pharisee>  பரிசேயனுடைய<Pharisee>  மகனுமாயிருக்கிறேன்.  மரித்தோருடைய  உயிர்த்தெழுதலைப்பற்றிய  நம்பிக்கையைக்குறித்து  நான்  நியாயம்  விசாரிக்கப்படுகிறேன்  என்று  ஆலோசனைச்  சங்கத்திலே  சத்தமிட்டுச்  சொன்னான்.  {Acts  23:6}

 

அவன்  இப்படிச்  சொன்னபோது,  பரிசேயருக்கும்<Pharisees>  சதுசேயருக்கும்<Sadducees>  வாக்குவாதமுண்டாயிற்று;  கூட்டம்  இரண்டாகப்  பிரிந்தது.  {Acts  23:7}

 

என்னத்தினாலென்றால்,  சதுசேயர்<Sadducees>  உயிர்த்தெழுதல்  இல்லையென்றும்,  தேவதூதனும்  ஆவியும்  இல்லையென்றும்  சொல்லுகிறார்கள்.  பரிசேயரோ<Pharisees>  அவ்விரண்டும்  உண்டென்று  ஒப்புக்கொள்ளுகிறார்கள்.  {Acts  23:8}

 

ஆகையால்  மிகுந்த  கூக்குரல்  உண்டாயிற்று.  பரிசேய<Pharisees>  சமயத்தாரான  வேதபாரகரில்  சிலர்  எழுந்து:  இந்த  மனுஷனிடத்தில்  ஒரு  பொல்லாங்கையும்  காணோம்;  ஒரு  ஆவி  அல்லது  ஒரு  தேவதூதன்  இவனுடனே  பேசினதுண்டானால்,  நாம்  தேவனுடனே  போர்செய்வது  தகாது  என்று  வாதாடினார்கள்.  {Acts  23:9}

 

மிகுந்த  கலகம்  உண்டானபோது,  பவுல்<Paul>  அவர்களால்  பீறுண்டுபோவானென்று  சேனாபதி  பயந்து,  போர்ச்சேவகர்  போய்,  அவனை  அவர்கள்  நடுவிலிருந்து  இழுத்துக்  கோட்டைக்குக்  கொண்டுபோகும்படி  கட்டளையிட்டான்.  {Acts  23:10}

 

அன்று  இராத்திரியிலே  கர்த்தர்  பவுலின்<Paul>  அருகே  நின்று:  பவுலே<Paul>,  திடன்கொள்;  நீ  என்னைக்குறித்து  எருசலேமிலே<Jerusalem>  சாட்சிகொடுத்ததுபோல  ரோமாவிலும்<Rome>  சாட்சிகொடுக்கவேண்டும்  என்றார்.  {Acts  23:11}

 

விடியற்காலமானபோது,  யூதரில்<Jews>  சிலர்  ஒருமித்து,  தாங்கள்  பவுலைக்<Paul>  கொலைசெய்யுமளவும்  புசிப்பதுமில்லை  குடிப்பதுமில்லையென்று  சபதம்பண்ணிக்கொண்டார்கள்.  {Acts  23:12}

 

இப்படிக்  கட்டுப்பாடு  பண்ணிக்கொண்டவர்கள்  நாற்பதுபேருக்கு  அதிகமாயிருந்தார்கள்.  {Acts  23:13}

 

அவர்கள்  பிரதானஆசாரியர்களிடத்திலும்  மூப்பர்களிடத்திலும்  போய்:  நாங்கள்  பவுலைக்<Paul>  கொலைசெய்யுமளவும்  ஒன்றும்  புசிப்பதில்லையென்று  உறுதியான  சபதம்  பண்ணிக்கொண்டோம்.  {Acts  23:14}

 

ஆனபடியினால்  நீங்கள்  ஆலோசனைச்  சங்கத்தாரோடே  கூடப்போய்,  அவனுடைய  காரியத்தை  அதிக  திட்டமாய்  விசாரிக்க  மனதுள்ளவர்கள்போலச்  சேனாபதிக்குக்  காண்பித்து,  அவர்  நாளைக்கு  அவனை  உங்களிடத்தில்  கூட்டிக்கொண்டு  வரும்படி  அவரிடத்தில்  கேட்பீர்களாக.  அவன்  கிட்டவருகிறதற்குள்ளே  நாங்கள்  அவனைக்  கொலைசெய்ய  ஆயத்தமாயிருப்போம்  என்றார்கள்.  {Acts  23:15}

 

இந்தச்  சர்ப்பனையைப்  பவுலினுடைய<Paul>  சகோதரியின்  குமாரன்  கேள்விப்பட்டு,  கோட்டைக்குள்ளே  போய்,  பவுலுக்கு<Paul>  அறிவித்தான்.  {Acts  23:16}

 

அப்பொழுது  பவுல்<Paul>  நூற்றுக்கு  அதிபதிகளில்  ஒருவனை  அழைத்து,  இந்த  வாலிபனைச்  சேனாபதியினிடத்திற்குக்  கூட்டிக்கொண்டுபோம்;  அவரிடத்தில்  இவன்  அறிவிக்கவேண்டிய  ஒரு  காரியம்  உண்டு  என்றான்.  {Acts  23:17}

 

அந்தப்படியே  அவன்  இவனைச்  சேனாபதியினிடத்திற்குக்  கூட்டிக்கொண்டுபோய்:  காவலில்  வைக்கப்பட்டிருக்கிற  பவுல்<Paul>  என்னை  அழைத்து,  உமக்கொரு  காரியத்தைச்  சொல்லவேண்டுமென்றிருக்கிற  இந்த  வாலிபனை  உம்மிடத்திற்குக்  கொண்டுபோகும்படி  என்னைக்  கேட்டுக்கொண்டான்  என்றான்.  {Acts  23:18}

 

அப்பொழுது  சேனாபதி  அவனுடைய  கையைப்  பிடித்துத்  தனியே  அழைத்துக்கொண்டுபோய்:  நீ  என்னிடத்தில்  அறிவிக்கவேண்டிய  காரியம்  என்னவென்று  கேட்டான்.  {Acts  23:19}

 

அதற்கு  அவன்:  யூதர்கள்<Jews>  பவுலின்<Paul>  காரியத்தை  அதிக  திட்டமாய்  விசாரிக்க  மனதுள்ளவர்கள்போல,  நீர்  நாளைக்கு  அவனை  ஆலோசனைச்  சங்கத்தாரிடத்தில்  கொண்டுவரும்படி  உம்மை  வேண்டிக்கொள்ள  உடன்பட்டிருக்கிறார்கள்.  {Acts  23:20}

 

நீர்  அவர்களுக்குச்  சம்மதிக்கவேண்டாம்;  அவர்களில்  நாற்பதுபேருக்கு  அதிகமானவர்கள்  அவனைக்  கொலைசெய்யுமளவும்  தாங்கள்  புசிப்பதுமில்லை  குடிப்பதுமில்லையென்று  சபதம்பண்ணிக்கொண்டு,  அவனுக்குப்  பதிவிருந்து,  உம்முடைய  உத்தரவுக்காக  இப்பொழுது  காத்துக்கொண்டு  ஆயத்தமாயிருக்கிறார்கள்  என்றான்.  {Acts  23:21}

 

அப்பொழுது  சேனாபதி:  நீ  இவைகளை  எனக்கு  அறிவித்ததாக  ஒருவருக்குஞ்  சொல்லாதே  என்று  கட்டளையிட்டு,  வாலிபனை  அனுப்பிவிட்டான்.  {Acts  23:22}

 

பின்பு  அவன்  நூற்றுக்கு  அதிபதிகளில்  இரண்டுபேரை  அழைத்து,  செசரியாபட்டணத்திற்குப்<Caesarea>  போகும்படி  இருநூறு  காலாட்களையும்,  எழுபது  குதிரைவீரரையும்,  இருநூறு  ஈட்டிக்காரரையும்,  இராத்திரியில்  மூன்றாம்மணி  வேளையிலே,  ஆயத்தம்பண்ணுங்களென்றும்;  {Acts  23:23}

 

பவுலை<Paul>  ஏற்றி,  தேசாதிபதியாகிய  பேலிக்ஸினிடத்திற்குப்<Felix>  பத்திரமாய்க்  கொண்டுபோகும்படிக்குக்  குதிரைகளை  ஆயத்தப்படுத்துங்களென்றும்  சொன்னதுமன்றி,  {Acts  23:24}

 

ஒரு  நிருபத்தையும்  எழுதினான்;  அதின்  விவரமாவது:  {Acts  23:25}

 

கனம்பொருந்திய  தேசாதிபதியாகிய  பேலிக்ஸ்<Felix>  என்பவருக்குக்  கிலவுதியு  லீசியா<Claudius  Lysias>  வாழ்த்துதல்  சொல்லி  அறிவிக்கிறது  என்னவென்றால்:  {Acts  23:26}

 

இந்த  மனுஷனை  யூதர்<Jews>  பிடித்துக்  கொலைசெய்யப்போகிற  சமயத்தில்,  நான்  போர்ச்சேவகரோடே  கூடப்போய்,  இவன்  ரோமனென்று<Roman>  அறிந்து,  இவனை  விடுவித்தேன்.  {Acts  23:27}

 

அவர்கள்  இவன்மேல்  சாட்டின  குற்றத்தை  நான்  அறியவேண்டுமென்று  இவனை  அவர்கள்  ஆலோசனைச்  சங்கத்துக்குமுன்  கொண்டுபோனேன்.  {Acts  23:28}

 

இவன்  அவர்களுடைய  வேதத்திற்கடுத்த  விஷயங்களைக்குறித்துக்  குற்றஞ்சாட்டப்பட்டவனென்று  விளங்கினதேயல்லாமல்,  மரணத்துக்காவது  விலங்குக்காவது  ஏற்ற  குற்றம்  யாதொன்றும்  இவனிடத்தில்  இல்லையென்று  கண்டறிந்தேன்.  {Acts  23:29}

 

யூதர்கள்<Jews>  இவனுக்கு  விரோதமாய்ச்  சர்ப்பனையான  யோசனை  செய்கிறார்களென்று  எனக்குத்  தெரியவந்தபோது,  உடனே  இவனை  உம்மிடத்திற்கு  அனுப்பினேன்;  குற்றஞ்சாட்டுகிறவர்களும்  இவனுக்கு  விரோதமாய்ச்  சொல்லுகிற  காரியங்களை  உமக்கு  முன்பாக  வந்து  சொல்லும்படி  அவர்களுக்குக்  கட்டளையிட்டேன்.  சுகமாயிருப்பீராக,  என்றெழுதினான்.  {Acts  23:30}

 

போர்ச்சேவகர்  தங்களுக்குக்  கட்டளையிட்டபடியே,  பவுலைக்<Paul>  கூட்டிக்கொண்டு,  இராத்திரியிலே  அந்திப்பத்திரி<Antipatris>  ஊருக்குப்  போய்,  {Acts  23:31}

 

மறுநாளில்  குதிரைவீரரை  அவனுடனேகூடப்  போகும்படி  அனுப்பிவிட்டு,  தாங்கள்  கோட்டைக்குத்  திரும்பினார்கள்.  {Acts  23:32}

 

அவர்கள்  செசரியாபட்டணத்தில்<Caesarea>  சேர்ந்து,  நிருபத்தைத்  தேசாதிபதியினிடத்தில்  கொடுத்து,  பவுலையும்<Paul>  அவன்  முன்பாக  நிறுத்தினார்கள்.  {Acts  23:33}

 

தேசாதிபதி  அதை  வாசித்து:  எந்த  நாட்டானென்று  கேட்டு,  சிலிசியா<Cilicia>  நாட்டானென்று  அறிந்தபோது:  {Acts  23:34}

 

உன்மேல்  குற்றஞ்சாட்டுகிறவர்களும்  வந்திருக்கும்போது  உன்  காரியத்தைத்  திட்டமாய்க்  கேட்பேனென்று  சொல்லி,  ஏரோதின்<Herod>  அரமனையிலே  அவனைக்  காவல்பண்ணும்படி  கட்டளையிட்டான்.  {Acts  23:35}

 

ஐந்துநாளைக்குப்பின்பு  பிரதான  ஆசாரியனாகிய  அனனியா<Ananias>  மூப்பர்களோடும்  தெர்த்துல்லு<Tertullus>  என்னும்  ஒரு  நியாயசாதுரியனோடும்கூடப்  போனான்,  அவர்கள்  பவுலுக்கு<Paul>  விரோதமாய்த்  தேசாதிபதியினிடத்தில்  பிராதுபண்ணினார்கள்.  {Acts  24:1}

 

அவன்  அழைக்கப்பட்டபோது,  தெர்த்துல்லு<Tertullus>  குற்றஞ்சாட்டத்தொடங்கி:  {Acts  24:2}

 

கனம்பொருந்திய  பேலிக்ஸே<Felix>,  உம்மாலே  நாங்கள்  மிகுந்த  சமாதான  சவுக்கியத்தை  அநுபவிக்கிறதையும்,  உம்முடைய  பராமரிப்பினாலே  இந்தத்  தேசத்தாருக்குச்  சிறந்த  நன்மைகள்  நடக்கிறதையும்  நாங்கள்  எப்பொழுதும்  எங்கும்  மிகுந்த  நன்றியறிதலுடனே  அங்கிகாரம்பண்ணுகிறோம்.  {Acts  24:3}

 

உம்மை  நான்  அநேக  வார்த்தைகளினாலே  அலட்டாதபடிக்கு,  நாங்கள்  சுருக்கமாய்ச்  சொல்வதை  நீர்  பொறுமையாய்க்  கேட்கவேண்டுமென்று  பிரார்த்திக்கிறேன்.  {Acts  24:4}

 

என்னவென்றால்,  இந்த  மனுஷன்  கொள்ளைநோயாகவும்,  பூச்சக்கரத்திலுள்ள  சகல  யூதர்களுக்குள்ளும்<Jews>  கலகம்  எழுப்புகிறவனாகவும்,  நசரேயருடைய<Nazarenes>  மதபேதத்துக்கு  முதலாளியாகவும்  இருக்கிறானென்று  கண்டறிந்தோம்.  {Acts  24:5}

 

இவன்  தேவாலயத்தையும்  தீட்டுப்படுத்தப்  பார்த்தான்.  நாங்கள்  இவனைப்பிடித்து  எங்கள்  வேதப்பிரமாணத்தின்படியே  நியாயந்தீர்க்க  மனதாயிருந்தோம்.  {Acts  24:6}

 

அப்பொழுது  சேனாபதியாகிய  லீசியா<Lysias>  வந்து,  மிகுந்த  பலாத்காரமாய்  இவனை  எங்கள்  கைகளிலிருந்து  பறித்துக்கொண்டுபோய்,  {Acts  24:7}

 

இவன்மேல்  குற்றஞ்சாட்டுகிறவர்கள்  உம்மிடத்தில்  வரும்படி  கட்டளையிட்டார்.  இவனிடத்தில்  நீர்  விசாரித்தால்  நாங்கள்  இவன்மேல்  சாட்டுகிற  குற்றங்கள்  யாவையும்  அறிந்துகொள்ளலாம்  என்றான்.  {Acts  24:8}

 

யூதர்களும்<Jews>  அதற்கு  இசைந்து,  இவைகள்  யதார்த்தந்தான்  என்றார்கள்.  {Acts  24:9}

 

பவுல்<Paul>  பேசும்படி  தேசாதிபதி  சைகைகாட்டினபோது,  அவன்  உத்தரவாக:  நீர்  அநேக  வருஷகாலமாய்  இந்தத்  தேசத்தாருக்கு  நியாயாதிபதியாயிருக்கிறீரென்றறிந்து,  நான்  என்  காரியங்களைக்குறித்து  அதிக  தைரியத்துடன்  உத்தரவு  சொல்லுகிறேன்.  {Acts  24:10}

 

நான்  தொழுதுகொள்ளும்படியாக  எருசலேமுக்குப்<Jerusalem>  போனதுமுதல்  இதுவரைக்கும்  பன்னிரண்டு  நாள்மாத்திரம்  ஆயிற்றென்று  நீர்  அறிந்துகொள்ளலாம்.  {Acts  24:11}

 

தேவாலயத்திலே  நான்  ஒருவரிடத்திலாவது  தர்க்கம்பண்ணினதையும்,  நான்  ஜெபஆலயங்களிலாகிலும்  நகரத்திலாகிலும்  ஜனங்களுக்குள்ளே  கலகமெழுப்பினதையும்,  இவர்கள்  கண்டதில்லை.  {Acts  24:12}

 

இப்பொழுது  என்மேல்  சாட்டுகிற  குற்றங்களை  இவர்கள்  ரூபிக்கவுமாட்டார்கள்.  {Acts  24:13}

 

உம்மிடத்தில்  ஒன்றை  ஒத்துக்கொள்ளுகிறேன்;  அதென்னவென்றால்,  இவர்கள்  மதபேதம்  என்று  சொல்லுகிற  மார்க்கத்தின்படியே  எங்கள்  முன்னோர்களின்  தேவனுக்கு  ஆராதனைசெய்து  நியாயப்பிரமாணத்திலேயும்  தீர்க்கதரிசிகள்  புஸ்தகங்களிலேயும்  எழுதியிருக்கிற  எல்லாவற்றையும்  நான்  விசுவாசித்து,  {Acts  24:14}

 

நீதிமான்களும்  அநீதிமான்களுமாகிய  மரித்தோர்  உயிர்த்தெழுந்திருப்பது  உண்டென்று  இவர்கள்  தேவனிடத்தில்  நம்பிக்கைகொண்டிருக்கிறது  போல,  நானும்  நம்பிக்கைகொண்டிருக்கிறேன்.  {Acts  24:15}

 

இதனால்  நான்  தேவனுக்கும்  மனுஷருக்கும்  முன்பாக  எப்பொழுதும்  குற்றமற்ற  மனச்சாட்சியை  உடையவனாயிருக்கப்  பிரயாசப்படுகிறேன்.  {Acts  24:16}

 

அநேக  வருஷங்களுக்குப்  பின்பு  நான்  என்  ஜனத்தாருக்குத்  தர்மப்பணத்தை  ஒப்புவிக்கவும்,  காணிக்கைகளைச்  செலுத்தவும்  வந்தேன்.  {Acts  24:17}

 

அப்பொழுது  கூட்டமில்லாமலும்  அமளியில்லாமலும்  தேவாலயத்திலே  சுத்திகரித்துக்கொண்டவனாயிருக்கையில்,  ஆசியா<Asia>  நாட்டாரான  சில  யூதர்கள்<Jews>  என்னைக்  கண்டார்கள்.  {Acts  24:18}

 

அவர்களுக்கு  என்பேரில்  விரோதமான  காரியம்  ஏதாகிலும்  உண்டாயிருந்தால்,  அவர்களே  இங்கே  வந்து,  உமக்கு  முன்பாகக்  குற்றஞ்சாட்டவேண்டும்.  {Acts  24:19}

 

நான்  ஆலோசனைச்  சங்கத்தாருக்கு  முன்பாக  நின்றபோது  அவர்கள்  யாதொரு  அநியாயத்தை  என்னிடத்தில்  கண்டதுண்டானால்  இவர்களே  அதைச்சொல்லட்டும்.  {Acts  24:20}

 

நான்  அவர்களுக்குள்ளே  நின்றபோது  மரித்தோர்  உயிர்த்தெழுந்திருப்பதைக்குறித்து,  இன்று  உங்களாலே  நியாயந்தீர்க்கப்படுகிறேனென்று  நான்  சொன்ன  ஒரு  சொல்லினிமித்தமேயன்றி  வேறொன்றினிமித்தமும்  குற்றங்காணப்படவில்லை  என்றான்.  {Acts  24:21}

 

இந்த  மார்க்கத்தின்  விஷயங்களை  விவரமாய்  அறிந்திருந்த  பேலிக்ஸ்<Felix>  இவைகளைக்  கேட்டபொழுது:  சேனாபதியாகிய  லீசியா<Lysias>  வரும்போது  உங்கள்  காரியங்களைத்  திட்டமாய்  விசாரிப்பேன்  என்று  சொல்லி;  {Acts  24:22}

 

பவுலைக்<Paul>  காவல்பண்ணவும்,  கண்டிப்பில்லாமல்  நடத்தவும்,  அவனுக்கு  ஊழியஞ்செய்கிறதற்கும்  அவனைக்  கண்டுகொள்ளுகிறதற்கும்  வருகிற  அவனுடைய  மனுஷர்களில்  ஒருவரையும்  தடைசெய்யாதிருக்கவும்  நூற்றுக்கு  அதிபதியானவனுக்குக்  கட்டளையிட்டு,  அவர்களைக்  காத்திருக்கும்படிசெய்தான்.  {Acts  24:23}

 

சில  நாளைக்குப்பின்பு  பேலிக்ஸ்<Felix>  யூதஸ்திரீயாகிய<Jewess>  தன்  மனைவி  துருசில்லாளுடனேகூட<Drusilla>  வந்து,  பவுலை<Paul>  அழைப்பித்து,  கிறிஸ்துவைப்பற்றும்<Christ>  விசுவாசத்தைக்  குறித்து  அவன்  சொல்லக்கேட்டான்.  {Acts  24:24}

 

அவன்,  நீதியையும்,  இச்சையடக்கத்தையும்,  இனிவரும்  நியாயத்தீர்ப்பையும்குறித்துப்  பேசுகையில்,  பேலிக்ஸ்<Felix>  பயமடைந்து:  இப்பொழுது  நீ  போகலாம்,  எனக்குச்  சமயமானபோது  உன்னை  அழைப்பிப்பேன்  என்றான்.  {Acts  24:25}

 

மேலும்,  அவன்  பவுலை<Paul>  விடுதலைபண்ணும்படி  தனக்கு  அவன்  பணங்கொடுப்பானென்று  நம்பிக்கையுள்ளவனாயிருந்தான்;  அதினிமித்தம்  அவன்  அநேகந்தரம்  அவனை  அழைத்து,  அவனுடனே  பேசினான்.  {Acts  24:26}

 

இரண்டு  வருஷம்  சென்றபின்பு  பேலிக்ஸ்<Felix>  என்பவனுக்குப்  பதிலாய்ப்  பொர்க்கியுபெஸ்து<Porcius  Festus>  தேசாதிபதியாக  வந்தான்;  அப்பொழுது  பேலிக்ஸ்<Felix>  யூதருக்குத்<Jews>  தயவுசெய்ய  மனதாய்ப்  பவுலைக்<Paul>  காவலில்  வைத்துவிட்டுப்போனான்.  {Acts  24:27}

 

பெஸ்து<Festus>  என்பவன்  நாட்டிற்கு  அதிபதியாக  வந்து,  மூன்றுநாளானபின்பு,  செசரியாவிலிருந்து<Caesarea>  எருசலேமுக்குப்<Jerusalem>  போனான்.  {Acts  25:1}

 

அப்பொழுது  பிரதான  ஆசாரியனும்  யூதரில்<Jews>  முதன்மையானவர்களும்  அவனிடத்தில்  வந்து,  பவுலுக்கு<Paul>  விரோதமாகப்  பிராதுபண்ணி,  {Acts  25:2}

 

அவனை  வழியிலே  கொன்றுபோடும்படி  சர்ப்பனையான  யோசனையுள்ளவர்களாய்,  தங்கள்மேல்  தயவுசெய்து,  அவனை  எருசலேமுக்கு<Jerusalem>  அழைப்பிக்கவேண்டுமென்று  வேண்டிக்கொண்டார்கள்.  {Acts  25:3}

 

அதற்குப்  பெஸ்து<Festus>  பிரதியுத்தரமாக:  பவுலைச்<Paul>  செசரியாவிலே<Caesarea>  காவல்பண்ணியிருக்கிறதே;  நானும்  சீக்கிரமாக  அங்கே  போகிறேன்.  {Acts  25:4}

 

ஆகையால்  உங்களில்  திறமுள்ளவர்கள்  கூடவந்து,  அந்த  மனுஷனிடத்தில்  குற்றம்  ஏதாகிலும்  உண்டானால்,  அந்தக்  குற்றத்தை  அவன்மேல்  சாட்டட்டும்  என்றான்.  {Acts  25:5}

 

அவன்  அவர்களிடத்திலே  ஏறக்குறைய  பத்துநாள்  சஞ்சரித்து,  பின்பு  செசரியாவுக்குப்<Caesarea>  போய்,  மறுநாளிலே  நியாயாசனத்தில்  உட்கார்ந்து,  பவுலைக்<Paul>  கொண்டுவரும்படி  கட்டளையிட்டான்.  {Acts  25:6}

 

அவன்  வந்தபோது,  எருசலேமிலிருந்துவந்த<Jerusalem>  யூதர்கள்<Jews>  அவனைச்  சூழ்ந்துநின்று,  தங்களால்  ரூபிக்கக்கூடாத  அநேகங்  கொடிய  குற்றங்களை  அவன்மேல்  சாட்டினார்கள்.  {Acts  25:7}

 

அதற்கு  அவன்  உத்தரவாக:  நான்  யூதருடைய<Jews>  வேதப்பிரமாணத்துக்காகிலும்,  தேவாலயத்துக்காகிலும்,  இராயருக்காகிலும்<Caesar>  விரோதமாக  ஒரு  குற்றமும்  செய்யவில்லையென்று  சொன்னான்.  {Acts  25:8}

 

அப்பொழுது  பெஸ்து<Festus>  யூதருக்குத்<Jews>  தயவுசெய்ய  மனதாய்,  பவுலை<Paul>  நோக்கி:  நீ  எருசலேமுக்குப்<Jerusalem>  போய்,  அவ்விடத்திலே  இந்தக்  காரியங்களைக்குறித்து  எனக்கு  முன்பாக  நியாயம்  விசாரிக்கப்பட  உனக்குச்  சம்மதியா  என்றான்.  {Acts  25:9}

 

அதற்குப்  பவுல்<Paul>:  நான்  இராயருடைய<Caesar>  நியாயாசனத்துக்கு  முன்பாக  நிற்கிறேன்;  அதற்கு  முன்பாக  நான்  நியாயம்  விசாரிக்கப்படவேண்டியது;  யூதருக்கு<Jews>  நான்  அநியாயம்  ஒன்றும்  செய்யவில்லை,  அதை  நீரும்  நன்றாய்  அறிந்திருக்கிறீர்.  {Acts  25:10}

 

நான்  அநியாயஞ்செய்து,  மரணத்துக்குப்  பாத்திரமானது  ஏதாகிலும்  நடப்பித்ததுண்டானால்,  நான்  சாகாதபடிக்கு  மனுகேட்கமாட்டேன்.  இவர்கள்  என்மேல்  சாட்டுகிற  குற்றங்கள்  முற்றிலும்  அபத்தமானால்,  அவர்களுக்குத்  தயவுபண்ணும்பொருட்டு  ஒருவரும்  என்னை  அவர்களுக்கு  ஒப்புக்கொடுக்கலாகாது.  இராயருக்கு<Caesar>  அபயமிடுகிறேன்  என்றான்.  {Acts  25:11}

 

அப்பொழுது  பெஸ்து<Festus>  தன்  ஆலோசனைக்காரருடனே  ஆலோசித்து:  நீ  இராயருக்கு<Caesar>  அபயமிட்டாயே;  இராயரிடத்திற்கே<Caesar>  போகக்கடவாயென்று  உத்தரவு  சொன்னான்.  {Acts  25:12}

 

சிலநாள்  சென்றபின்பு,  அகிரிப்பா<Agrippa>  ராஜாவும்  பெர்னீக்கேயாளும்<Bernice>  பெஸ்துவைக்<Festus>  கண்டுகொள்ளும்படி  செசரியாவுக்கு<Caesarea>  வந்தார்கள்.  {Acts  25:13}

 

அவர்கள்  அங்கே  அநேகநாள்  சஞ்சரித்திருக்கையில்,  பெஸ்து<Festus>  பவுலின்<Paul>  சங்கதியை  ராஜாவுக்கு  விவரித்து:  பேலிக்ஸ்<Felix>  காவலில்  வைத்துப்போன  ஒரு  மனுஷன்  இருக்கிறான்.  {Acts  25:14}

 

நான்  எருசலேமில்<Jerusalem>  இருந்தபோது,  பிரதான  ஆசாரியர்களும்  யூதருடைய<Jews>  மூப்பர்களும்  அவனைக்குறித்து  என்னிடத்தில்  பிராதுபண்ணி,  அவனுக்கு  விரோதமாகத்  தீர்ப்புசெய்யவேண்டுமென்று  கேட்டுக்கொண்டார்கள்.  {Acts  25:15}

 

அவர்களுக்கு  நான்  பிரதியுத்தரமாக:  குற்றஞ்சாட்டப்பட்ட  மனுஷன்  குற்றஞ்சாட்டினவர்களுக்கு  முகமுகமாய்  நின்று,  சாட்டின  குற்றத்துக்குத்  தனக்காக  எதிருத்தரவு  சொல்ல  அவனுக்கு  இடங்கிடைக்கிறதற்குமுன்னே,  குற்றஞ்சாட்டினவர்கள்  பட்சமாய்  அவனை  மரணத்திற்கு  ஒப்புக்கொடுக்கிறது  ரோமருக்கு<Romans>  வழக்கமல்ல  என்றேன்.  {Acts  25:16}

 

ஆகையால்  அவர்கள்  இங்கே  கூடிவந்தபோது,  நான்  எவ்வளவும்  தாமதம்பண்ணாமல்,  மறுநாள்  நியாயாசனத்தில்  உட்கார்ந்து,  அந்த  மனுஷனைக்  கொண்டுவரும்படி  கட்டளையிட்டேன்.  {Acts  25:17}

 

அப்பொழுது  குற்றஞ்சாட்டினவர்கள்  வந்துநின்று,  நான்  நினைத்திருந்த  குற்றங்களில்  ஒன்றையும்  அவன்மேல்  சுமத்தாமல்,  {Acts  25:18}

 

தங்களுடைய  மார்க்கத்தைக்குறித்தும்,  மரித்துப்போன  இயேசு<Jesus>  என்னும்  ஒருவன்  உயிரோடிருக்கிறானென்று  பவுல்<Paul>  சாதித்ததைக்குறித்தும்  சில  தர்க்கவிஷயங்களை  அவன்  பேரில்  விரோதமாய்ச்  சொன்னார்கள்.  {Acts  25:19}

 

இப்படிப்பட்ட  தர்க்க  விஷயங்களைக்குறித்து  எனக்குச்  சந்தேகமிருந்தபடியினால்:  நீ  எருசலேமுக்குப்<Jerusalem>  போய்,  அங்கே  இவைகளைக்குறித்து  நியாயம்  விசாரிக்கப்பட  உனக்குச்  சம்மதியா  என்று  கேட்டேன்.  {Acts  25:20}

 

அதற்குப்  பவுல்<Paul>,  தான்  இராயருக்குமுன்பாக<Caesar//Augustus>  நியாயம்  விசாரிக்கப்படும்படிக்கு  நிறுத்திவைக்கப்படவேண்டுமென்று  அபயமிட்டபோது,  நான்  அவனை  இராயனிடத்திற்கு<Caesar>  அனுப்புமளவும்  காவல்பண்ணும்படி  கட்டளையிட்டேன்  என்றான்.  {Acts  25:21}

 

அப்பொழுது  அகிரிப்பா<Agrippa>  பெஸ்துவை<Festus>  நோக்கி:  அந்த  மனுஷன்  சொல்லுகிறதை  நானும்  கேட்க  மனதாயிருக்கிறேன்  என்றான்.  அதற்கு  அவன்:  நாளைக்கு  நீர்  கேட்கலாம்  என்றான்.  {Acts  25:22}

 

மறுநாளிலே  அகிரிப்பாவும்<Agrippa>  பெர்னீக்கேயாளும்<Bernice>  மிகுந்த  ஆடம்பரத்துடனே  வந்து  சேனாபதிகளோடும்  பட்டணத்துப்பிரதான  மனுஷரோடுங்கூட  நியாயஸ்தலத்தில்  பிரவேசித்தார்கள்.  உடனே  பெஸ்துவினுடைய<Festus>  கட்டளையின்படி  பவுல்<Paul>  கொண்டுவரப்பட்டான்.  {Acts  25:23}

 

அப்பொழுது  பெஸ்து<Festus>:  அகிரிப்பா<Agrippa>  ராஜாவே,  எங்களோடேகூட  இவ்விடத்தில்  வந்திருக்கிறவர்களே,  நீங்கள்  காண்கிற  இந்த  மனுஷனைக்குறித்து  யூதஜனங்களெல்லாரும்<Jews>  எருசலேமிலும்<Jerusalem>  இவ்விடத்திலும்  என்னை  வருந்திக்  கேட்டுக்கொண்டு,  இவன்  இனி  உயிரோடிருக்கிறது  தகாதென்று  சொல்லிக்  கூக்குரலிட்டார்கள்.  {Acts  25:24}

 

இவன்  மரணத்துக்குப்  பாத்திரமானதொன்றையும்  செய்யவில்லையென்று  நான்  அறிந்துகொண்டதினாலும்,  இவன்தானே  இராயனுக்கு<Caesar//Augustus>  அபயமிட்டபடியினாலும்,  அவரிடத்தில்  இவனை  அனுப்பும்படி  தீர்மானம்பண்ணினேன்.  {Acts  25:25}

 

இவனைக்குறித்து  ஆண்டவனுக்கு  எழுதுகிறதற்கு  நிச்சயப்பட்ட  காரியமொன்றும்  எனக்கு  விளங்கவில்லை.  காவல்பண்ணப்பட்ட  ஒருவன்  செய்த  குற்றங்களை  எடுத்துக்காட்டாமல்  அனுப்புகிறது  புத்தியீனமான  காரியமென்று  எனக்குத்  தோன்றுகிறபடியினாலே,  {Acts  25:26}

 

இவனை  விசாரித்துக்  கேட்டபின்பு  எழுதத்தக்க  விசேஷம்  ஏதாகிலும்  எனக்கு  விளங்கும்படி,  இவனை  உங்களுக்கு  முன்பாகவும்,  விசேஷமாய்  அகிரிப்பா<Agrippa>  ராஜாவே,  உமக்கு  முன்பாகவும்  கொண்டுவந்தேன்  என்றான்.  {Acts  25:27}

 

அகிரிப்பா<Agrippa>  பவுலை<Paul>  நோக்கி:  நீ  உனக்காகப்  பேச  உனக்கு  உத்தரவாகிறது  என்றான்.  அப்பொழுது  பவுல்<Paul>  கையை  நீட்டி,  தனக்காக  உத்தரவு  சொல்லத்தொடங்கினான்.  {Acts  26:1}

 

அகிரிப்பா<Agrippa>  ராஜாவே,  யூதர்கள்<Jews>  என்மேல்  சாட்டுகிற  சகல  காரியங்களைக்குறித்தும்  நான்  இன்றைக்கு  உமக்கு  முன்பாக  உத்தரவு  சொல்லப்போகிறபடியினாலே  என்னைப்  பாக்கியவான்  என்றெண்ணுகிறேன்.  {Acts  26:2}

 

விசேஷமாய்  நீர்  யூதருடைய<Jews>  சகல  முறைமைகளையும்  தர்க்கங்களையும்  அறிந்தவரானதால்  அப்படி  எண்ணுகிறேன்;  ஆகையால்  நான்  சொல்வதைப்  பொறுமையோடே  கேட்கும்படி  உம்மை  வேண்டிக்கொள்ளுகிறேன்.  {Acts  26:3}

 

நான்  என்  சிறுவயதுமுதற்கொண்டு,  எருசலேமிலே<Jerusalem>  என்  ஜனத்தாருக்குள்ளே  இருந்தபடியால்,  ஆதிமுதல்  நான்  நடந்த  நடக்கையை  யூதரெல்லாரும்<Jews>  அறிந்திருக்கிறார்கள்.  {Acts  26:4}

 

நம்முடைய  மார்க்கத்திலுள்ள  சமயபேதங்களில்  மிகவும்  கண்டிப்பான  சமயத்துக்கு  இசைந்தபடி  பரிசேயனாய்<Pharisee>  நடந்தேனென்று  சாட்சிசொல்ல  அவர்களுக்கு  மனதிருந்தால்  சொல்லலாம்.  {Acts  26:5}

 

தேவன்  நம்முடைய  பிதாக்களுக்கு  அருளிச்செய்த  வாக்குத்தத்தம்  நிறைவேறுமென்கிற  நம்பிக்கைக்காகவே  நான்  இப்பொழுது  நியாயத்தீர்ப்படைகிறவனாய்  நிற்கிறேன்.  {Acts  26:6}

 

இரவும்  பகலும்  இடைவிடாமல்  ஆராதனை  செய்துவருகிற  நம்முடைய  பன்னிரண்டு  கோத்திரத்தாரும்  அந்த  வாக்குத்தத்தம்  நிறைவேறுமென்று  நம்பியிருக்கிறார்கள்.  அகிரிப்பா<Agrippa>  ராஜாவே,  அந்த  நம்பிக்கையினிமித்தமே  யூதர்கள்<Jews>  என்மேல்  குற்றஞ்சாட்டுகிறார்கள்.  {Acts  26:7}

 

தேவன்  மரித்தோரை  எழுப்புகிறது  நம்பப்படாத  காரியமென்று  நீங்கள்  எண்ணுகிறதென்ன?  {Acts  26:8}

 

முன்னே  நானும்  நசரேயனாகிய<Nazarene>  இயேசுவின்<Jesus>  நாமத்திற்கு  விரோதமாய்  அநேக  காரியங்களை  நடப்பிக்கவேண்டுமென்று  நினைத்திருந்தேன்.  {Acts  26:9}

 

அப்படியே  நான்  எருசலேமிலும்<Jerusalem>  செய்தேன்.  நான்  பிரதான  ஆசாரியர்களிடத்தில்  அதிகாரம்  பெற்று,  பரிசுத்தவான்களில்  அநேகரைச்  சிறைச்சாலைகளில்  அடைத்தேன்;  அவர்கள்  கொலைசெய்யப்படுகையில்  நானும்  சம்மதித்திருந்தேன்.  {Acts  26:10}

 

சகல  ஜெபஆலயங்களிலும்  நான்  அவர்களை  அநேகந்தரம்  தண்டித்து,  தேவதூஷணஞ்  சொல்லக்  கட்டாயப்படுத்தினேன்;  அவர்கள்  பேரில்  மூர்க்கவெறி  கொண்டவனாய்  அந்நியபட்டணங்கள்வரைக்கும்  அவர்களைத்  துன்பப்படுத்தினேன்.  {Acts  26:11}

 

இப்படிச்  செய்துவருகையில்,  நான்  பிரதான  ஆசாரியர்களிடத்தில்  அதிகாரமும்  உத்தரவும்  பெற்று,  தமஸ்குவுக்குப்<Damascus>  போகும்போது,  {Acts  26:12}

 

மத்தியான  வேளையில்,  ராஜாவே,  நான்  வழியிலே  சூரியனுடைய  பிரகாசத்திலும்  அதிகமான  ஒளி  வானத்திலிருந்து  என்னையும்  என்னுடனேகூடப்  பிரயாணம்பண்ணினவர்களையும்  சுற்றிப்  பிரகாசிக்கக்கண்டேன்.  {Acts  26:13}

 

நாங்களெல்லாரும்  தரையிலே  விழுந்தபோது:  சவுலே<Saul>,  சவுலே<Saul>,  நீ  ஏன்  என்னைத்  துன்பப்படுத்துகிறாய்?  முள்ளில்  உதைக்கிறது  உனக்குக்  கடினமாம்  என்று  எபிரெயு<Hebrew>  பாஷையிலே  என்னுடனே  சொல்லுகிற  ஒரு  சத்தத்தைக்  கேட்டேன்.  {Acts  26:14}

 

அப்பொழுது  நான்:  ஆண்டவரே,  நீர்  யார்  என்றேன்.  அதற்கு  அவர்:  நீ  துன்பப்படுத்துகிற  இயேசு<Jesus>  நானே.  {Acts  26:15}

 

இப்பொழுது  நீ  எழுந்து,  காலுன்றி  நில்.  நீ  கண்டவைகளையும்  நான்  உனக்குத்  தரிசனமாகிக்  காண்பிக்கப்போகிறவைகளையும்  குறித்து  உன்னை  ஊழியக்காரனாகவும்  சாட்சியாகவும்  ஏற்படுத்துகிறதற்காக  உனக்குத்  தரிசனமானேன்.  {Acts  26:16}

 

உன்  சுயஜனத்தாரிடத்தினின்றும்  அந்நிய  ஜனத்தாரிடத்தினின்றும்  உன்னை  விடுதலையாக்கி,  {Acts  26:17}

 

அவர்கள்  என்னைப்  பற்றும்  விசுவாசத்தினாலே  பாவமன்னிப்பையும்  பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய  சுதந்தரத்தையும்  பெற்றுக்கொள்ளும்படியாக,  அவர்கள்  இருளைவிட்டு  ஒளியினிடத்திற்கும்,  சாத்தானுடைய  அதிகாரத்தைவிட்டுத்  தேவனிடத்திற்கும்  திரும்பும்படிக்கு  நீ  அவர்களுடைய  கண்களைத்  திறக்கும்பொருட்டு,  இப்பொழுது  உன்னை  அவர்களிடத்திற்கு  அனுப்புகிறேன்  என்றார்.  {Acts  26:18}

 

ஆகையால்,  அகிரிப்பா<Agrippa>  ராஜாவே,  நான்  அந்தப்  பரமதரிசனத்துக்குக்  கீழ்ப்படியாதவனாயிருக்கவில்லை.  {Acts  26:19}

 

முன்பு  தமஸ்குவிலும்<Damascus>  எருசலேமிலும்<Jerusalem>  யூதேயா<Judaea>  தேசமெங்குமுள்ளவர்களிடத்திலும்,  பின்பு  புறஜாதியாரிடத்திலும்  நான்  போய்,  அவர்கள்  தேவனிடத்திற்கு  மனந்திரும்பிக்  குணப்படவும்,  மனந்திரும்புதலுக்கேற்ற  கிரியைகளைச்  செய்யவும்  வேண்டுமென்று  அறிவித்தேன்.  {Acts  26:20}

 

இதினிமித்தமே  யூதர்கள்<Jews>  தேவாலயத்திலே  என்னைப்  பிடித்துக்  கொலைசெய்யப்  பிரயத்தனம்பண்ணினார்கள்.  {Acts  26:21}

 

ஆனாலும்  தேவ  அநுக்கிரகம்  பெற்று,  நான்  இந்நாள்வரைக்கும்  சிறியோருக்கும்  பெரியோருக்கும்  சாட்சிகூறி  வருகிறேன்.  {Acts  26:22}

 

தீர்க்கதரிசிகளும்  மோசேயும்<Moses>  முன்னமே  சொல்லியிருந்தபடியே,  கிறிஸ்து<Christ>  பாடுபடவேண்டியதென்றும்,  மரித்தோர்  உயிர்த்தெழுதலில்  அவர்  முதல்வராகி,  சுய  ஜனங்களுக்கும்  அந்நிய  ஜனங்களுக்கும்  ஒளியை  வெளிப்படுத்துகிறவரென்றும்  சொல்லுகிறேனேயன்றி,  வேறொன்றையும்  நான்  சொல்லுகிறதில்லை  என்றான்.  {Acts  26:23}

 

இவ்விதமாய்  அவன்  தனக்காக  உத்தரவு  சொல்லுகையில்,  பெஸ்து<Festus>  உரத்த  சத்தமாய்:  பவுலே<Paul>,  நீ  பிதற்றுகிறாய்,  அதிகக்  கல்வி  உனக்குப்  பயித்தியமுண்டாக்குகிறது  என்றான்.  {Acts  26:24}

 

அதற்கு  அவன்:  கனம்பொருந்திய  பெஸ்துவே<Festus>,  நான்  பயித்தியக்காரனல்ல,  சத்தியமும்  சொஸ்தபுத்தியுமுள்ள  வார்த்தைகளைப்  பேசுகிறேன்.  {Acts  26:25}

 

இந்தச்  சங்கதிகளை  ராஜா  அறிந்திருக்கிறார்;  ஆகையால்  தைரியமாய்  அவருக்கு  முன்பாகப்  பேசுகிறேன்;  இவைகளில்  ஒன்றும்  அவருக்கு  மறைவானதல்லவென்று  எண்ணுகிறேன்;  இது  ஒரு  மூலையிலே  நடந்த  காரியமல்ல.  {Acts  26:26}

 

அகிரிப்பா<Agrippa>  ராஜாவே,  தீர்க்கதரிசிகளை  விசுவாசிக்கிறீரா?  விசுவாசிக்கிறீர்  என்று  அறிவேன்  என்றான்.  {Acts  26:27}

 

அப்பொழுது  அகிரிப்பா<Agrippa>  பவுலை<Paul>  நோக்கி:  நான்  கிறிஸ்தவனாகிறதற்குக்<Christian>  கொஞ்சங்குறைய  நீ  என்னைச்  சம்மதிக்கப்பண்ணுகிறாய்  என்றான்.  {Acts  26:28}

 

அதற்குப்  பவுல்<Paul>:  நீர்  மாத்திரமல்ல,  இன்று  என்  வசனத்தைக்  கேட்கிற  யாவரும்,  கொஞ்சங்குறையமாத்திரம்  அல்ல,  இந்தக்  கட்டுகள்  தவிர,  முழுவதும்  என்னைப்போலாகும்படி  தேவனை  வேண்டிக்கொள்ளுகிறேன்  என்றான்.  {Acts  26:29}

 

இவைகளை  அவன்  சொன்னபோது,  ராஜாவும்  தேசாதிபதியும்  பெர்னீக்கேயாளும்<Bernice>  அவர்களுடனேகூட  உட்கார்ந்திருந்தவர்களும்  எழுந்து,  {Acts  26:30}

 

தனியே  போய்:  இந்த  மனுஷன்  மரணத்துக்காவது  கட்டுகளுக்காவது  பாத்திரமானதொன்றையும்  செய்யவில்லையென்று  தங்களுக்குள்ளே  பேசிக்கொண்டார்கள்.  {Acts  26:31}

 

அகிரிப்பா<Agrippa>  பெஸ்துவை<Festus>  நோக்கி:  இந்த  மனுஷன்  இராயனுக்கு<Caesar>  அபயமிடாதிருந்தானானால்,  இவனை  விடுதலைபண்ணலாகும்  என்றான்.  {Acts  26:32}

 

நாங்கள்  இத்தாலியா<Italy>  தேசத்துக்குக்  கப்பல்  ஏறிப்  போகும்படி  தீர்மானிக்கப்பட்டபோது,  பவுலையும்<Paul>  காவலில்  வைக்கப்பட்டிருந்த  வேறுசிலரையும்  அகுஸ்து<Augustus>  பட்டாளத்தைச்சேர்ந்த  யூலியு<Julius>  என்னும்  பேர்கொண்ட  நூற்றுக்கு  அதிபதியினிடத்தில்  ஒப்புவித்தார்கள்.  {Acts  27:1}

 

அதிரமித்தியம்<Adramyttium>  ஊர்க்கப்பலில்  நாங்கள்  ஏறி,  ஆசியா<Asia>  நாட்டுக்  கரைபிடித்தோடவேண்டுமென்று  நினைத்துப்  புறப்பட்டோம்.  மக்கெதோனியா<Macedonian>  தேசத்துத்  தெசலோனிக்கே<Thessalonica>  பட்டணத்தானாகிய  அரிஸ்தர்க்கு<Aristarchus>  எங்களுடனேகூட  இருந்தான்.  {Acts  27:2}

 

மறுநாள்  சீதோன்<Sidon>  துறைபிடித்தோம்.  யூலியு<Julius>  பவுலைப்<Paul>  பட்சமாய்  நடப்பித்து,  அவன்  தன்  சிநேகிதரிடத்திலே  போய்ப்  பராமரிப்படையும்படிக்கு  உத்தரவு  கொடுத்தான்.  {Acts  27:3}

 

அவ்விடம்விட்டு  நாங்கள்  புறப்பட்டு,  எதிர்காற்றாயிருந்தபடியினால்,  சீப்புருதீவின்<Cyprus>  ஒதுக்கிலே  ஓடினோம்.  {Acts  27:4}

 

பின்பு  சிலிசியா<Cilicia>  பம்பிலியா<Pamphylia>  நாடுகளின்  கடல்வழியாய்  ஓடி,  லீசியா<Lycia>  நாட்டு  மீறாப்பட்டணத்தில்<Myra>  சேர்ந்தோம்.  {Acts  27:5}

 

இத்தாலியாவுக்குப்<Italy>  போகிற  அலெக்சந்திரியாபட்டணத்துக்<Alexandria>  கப்பலை  நூற்றுக்கு  அதிபதி  அங்கே  கண்டு,  எங்களை  அதில்  ஏற்றினான்.  {Acts  27:6}

 

காற்று  எங்களைத்  தடுத்தபடியினாலே,  நாங்கள்  அநேகநாள்  மெதுவாய்ச்  சென்று,  வருத்தத்தோடே  கினீதுபட்டணத்திற்கு<Cnidus>  எதிரே  வந்து,  சல்மோனே<Salmone>  ஊருக்கு  எதிராய்க்  கிரேத்தாதீவின்<Crete>  ஒதுக்கில்  ஓடினோம்.  {Acts  27:7}

 

அதை  வருத்தத்தோடே  கடந்து,  நல்ல  துறைமுகம்  என்னப்பட்ட  ஒரு  இடத்திற்கு  வந்தோம்;  லசேயபட்டணம்<Lasea>  அதற்குச்  சமீபமாயிருந்தது.  {Acts  27:8}

 

வெகுகாலம்  சென்று,  உபவாசநாளும்  கழிந்துபோனபடியினாலே,  இனிக்  கப்பல்யாத்திரை  செய்கிறது  மோசத்திற்கு  ஏதுவாயிருக்குமென்று,  பவுல்<Paul>  அவர்களை  நோக்கி:  {Acts  27:9}

 

மனுஷரே,  இந்த  யாத்திரையினாலே  சரக்குக்கும்  கப்பலுக்கும்  மாத்திரமல்ல,  நம்முடைய  ஜீவனுக்கும்  வருத்தமும்  மிகுந்த  சேதமும்  உண்டாயிருக்குமென்று  காண்கிறேன்  என்று  சொல்லி,  அவர்களை  எச்சரித்தான்.  {Acts  27:10}

 

நூற்றுக்கு  அதிபதி  பவுலினால்<Paul>  சொல்லப்பட்டவைகளைப்  பார்க்கிலும்  மாலுமியையும்  கப்பல்  எஜமானையும்  அதிகமாய்  நம்பினான்.  {Acts  27:11}

 

அந்தத்  துறைமுகம்  மழைகாலத்திலே  தங்குவதற்கு  வசதியாயிராதபடியினால்,  அவ்விடத்தை  விட்டுத்  தென்மேற்கையும்  வடமேற்கையும்  நோக்கியிருக்கும்  கிரேத்தாதீவிலுள்ள<Crete>  துறைமுகமாகிய  பேனிக்ஸ்<Phenice>  என்னும்  இடத்தில்  சேரக்கூடுமானால்  சேர்ந்து,  மழைகாலத்தில்  தங்கும்படி  அநேகம்பேர்  ஆலோசனை  சொன்னார்கள்.  {Acts  27:12}

 

தென்றல்  மெதுவாயடித்தபடியால்,  தாங்கள்  கோரினது  கைகூடிவந்ததென்று  எண்ணி,  அவ்விடம்விட்டுப்  பெயர்ந்து  கிரேத்தாதீவுக்கு<Crete>  அருகாக  ஓடினார்கள்.  {Acts  27:13}

 

கொஞ்சநேரத்துக்குள்ளே  யூரோக்கிலிதோன்<Euroclydon>  என்னுங்  கடுங்காற்று  அதில்  மோதிற்று.  {Acts  27:14}

 

கப்பல்  அதில்  அகப்பட்டுக்கொண்டு,  காற்றுக்கு  எதிர்த்துப்போகக்கூடாதபடியினால்  காற்றின்  போக்கிலே  கொண்டுபோகப்பட்டோம்.  {Acts  27:15}

 

அப்படிக்  கிலவுதா<Clauda>  என்னப்பட்ட  ஒரு  சின்ன  தீவின்  ஒதுக்கிலே  ஓடுகையில்  வெகு  வருத்தத்தோடே  படவை  வசப்படுத்தினோம்.  {Acts  27:16}

 

அதை  அவர்கள்  தூக்கியெடுத்தபின்பு,  பல  உபாயங்கள்  செய்து,  கப்பலைச்சுற்றிக்  கட்டி,  சொரிமணலிலே  விழுவோமென்று  பயந்து,  பாய்களை  இறக்கி,  இவ்விதமாய்க்  கொண்டுபோகப்பட்டார்கள்.  {Acts  27:17}

 

மேலும்  பெருங்காற்று  மழையில்  நாங்கள்  மிகவும்  அடிபட்டபடியினால்,  மறுநாளில்  சில  சரக்குகளைக்  கடலில்  எறிந்தார்கள்.  {Acts  27:18}

 

மூன்றாம்  நாளிலே  கப்பலின்  தளவாடங்களை  எங்கள்  கைகளினாலே  எடுத்து  எறிந்தோம்.  {Acts  27:19}

 

அநேகநாளாய்ச்  சூரியனாவது  நட்சத்திரங்களாவது  காணப்படாமல்,  மிகுந்த  பெருங்காற்றுமழையும்  அடித்துக்  கொண்டிருந்தபடியினால்,  இனி  தப்பிப்  பிழைப்போமென்னும்  நம்பிக்கை  முழுமையும்  அற்றுப்போயிற்று.  {Acts  27:20}

 

அநேகநாள்  அவர்கள்  போஜனம்பண்ணாமல்  இருந்தபோது,  பவுல்<Paul>  அவர்கள்  நடுவிலே  நின்று:  மனுஷரே,  இந்த  வருத்தமும்  சேதமும்  வராதபடிக்கு  என்  சொல்லைக்கேட்டு,  கிரேத்தாதீவை<Crete>  விட்டுப்புறப்படாமல்  இருக்கவேண்டியதாயிருந்தது.  {Acts  27:21}

 

ஆகிலும்,  திடமனதாயிருங்களென்று  இப்பொழுது  உங்களுக்குத்  தைரியஞ்சொல்லுகிறேன்.  கப்பற்சேதமேயல்லாமல்  உங்களில்  ஒருவனுக்கும்  பிராணச்சேதம்  வராது.  {Acts  27:22}

 

ஏனென்றால்,  என்னை  ஆட்கொண்டவரும்  நான்  சேவிக்கிறவருமான  தேவனுடைய  தூதனானவன்  இந்த  இராத்திரியிலே  என்னிடத்தில்  வந்துநின்று:  {Acts  27:23}

 

பவுலே<Paul>,  பயப்படாதே,  நீ  இராயனுக்கு<Caesar>  முன்பாக  நிற்கவேண்டும்.  இதோ,  உன்னுடனேகூட  யாத்திரைபண்ணுகிற  யாவரையும்  தேவன்  உனக்குத்  தயவுபண்ணினார்  என்றான்.  {Acts  27:24}

 

ஆனபடியினால்  மனுஷரே,  திடமனதாயிருங்கள்.  எனக்குச்  சொல்லப்பட்ட  பிரகாரமாகவே  நடக்கும்  என்று  தேவனிடத்தில்  நம்பிக்கையாயிருக்கிறேன்.  {Acts  27:25}

 

ஆயினும்  நாம்  ஒரு  தீவிலே  விழவேண்டியதாயிருக்கும்  என்றான்.  {Acts  27:26}

 

பதினாலாம்  இராத்திரியானபோது,  நாங்கள்  ஆதிரியாக்<Adria>  கடலிலே  அலைவுபட்டு  ஓடுகையில்,  நடுஜாமத்திலே  கப்பலாட்களுக்கு  ஒரு  கரை  கிட்டிவருகிறதாகத்  தோன்றிற்று.  {Acts  27:27}

 

உடனே  அவர்கள்  விழுதுவிட்டு  இருபது  பாகமென்று  கண்டார்கள்;  சற்றப்புறம்  போனபொழுது,  மறுபடியும்  விழுது  விட்டுப்  பதினைந்து  பாகமென்று  கண்டார்கள்.  {Acts  27:28}

 

பாறையிடங்களில்  விழுவோமென்று  பயந்து,  பின்னணியத்திலிருந்து  நாலு  நங்கூரங்களைப்போட்டு,  பொழுது  எப்போது  விடியுமோ  என்றிருந்தார்கள்.  {Acts  27:29}

 

அப்பொழுது  கப்பலாட்கள்  கப்பலை  விட்டோடிப்போக  வகைதேடி,  முன்னணியத்திலிருந்து  நங்கூரங்களைப்  போடப்போகிற  பாவனையாய்ப்  படவைக்  கடலில்  இறக்குகையில்,  {Acts  27:30}

 

பவுல்<Paul>  நூற்றுக்கு  அதிபதியையும்  சேவகரையும்  நோக்கி:  இவர்கள்  கப்பலில்  இராவிட்டால்  நீங்கள்  தப்பிப்  பிழைக்கமாட்டீர்கள்  என்றான்.  {Acts  27:31}

 

அப்பொழுது,  போர்ச்சேவகர்  படவின்  கயிறுகளை  அறுத்து,  அதைத்  தாழவிழவிட்டார்கள்.  {Acts  27:32}

 

பொழுது  விடிகையில்  எல்லாரும்  போஜனம்பண்ணும்படி  பவுல்<Paul>  அவர்களுக்குத்  தைரியஞ்சொல்லி:  நீங்கள்  இன்று  பதினாலுநாளாய்  ஒன்றும்  சாப்பிடாமல்  பட்டினியாயிருக்கிறீர்கள்.  {Acts  27:33}

 

ஆகையால்  போஜனம்பண்ணும்படி  உங்களை  வேண்டிக்கொள்ளுகிறேன்,  நீங்கள்  தப்பிப்  பிழைப்பதற்கு  அது  உதவியாயிருக்கும்;  உங்கள்  தலையிலிருந்து  ஒரு  மயிரும்  விழாது  என்றான்.  {Acts  27:34}

 

இப்படிச்  சொல்லி,  அப்பத்தை  எடுத்து,  எல்லாருக்குமுன்பாகவும்  தேவனை  ஸ்தோத்திரித்து,  அதைப்  பிட்டுப்  புசிக்கத்தொடங்கினான்.  {Acts  27:35}

 

அப்பொழுது  எல்லாரும்  திடமனப்பட்டுப்  புசித்தார்கள்.  {Acts  27:36}

 

கப்பலில்  இருநூற்றெழுபத்தாறு  பேர்  இருந்தோம்.  {Acts  27:37}

 

திருப்தியாகப்  புசித்தபின்பு  அவர்கள்  கோதுமையைக்  கடலிலே  எறிந்து,  கப்பலை  இலகுவாக்கினார்கள்.  {Acts  27:38}

 

பொழுது  விடிந்தபின்பு,  இன்னபூமியென்று  அறியாதிருந்தார்கள்.  அப்பொழுது  சமமான  கரையுள்ள  ஒரு  துறைமுகம்  அவர்களுக்குத்  தென்பட்டது;  கூடுமானால்  அதற்குள்  கப்பலையோட்ட  யோசனையாயிருந்து,  {Acts  27:39}

 

நங்கூரங்களை  அறுத்துக்  கடலிலே  விட்டுவிட்டு,  சுக்கான்களுடைய  கட்டுகளைத்  தளரவிட்டு,  பெரும்பாயைக்  காற்றுமுகமாய்  விரித்து,  கரைக்கு  நேராய்  ஓடி,  {Acts  27:40}

 

இருபுறமும்  கடல்  மோதிய  ஒரு  இடத்திலே  கப்பலைத்  தட்டவைத்தார்கள்;  முன்னணியம்  ஊன்றி  அசையாமலிருந்தது,  பின்னணியம்  அலைகளுடைய  பலத்தினால்  உடைந்துபோயிற்று.  {Acts  27:41}

 

அப்பொழுது  காவல்பண்ணப்பட்டவர்களில்  ஒருவனும்  நீந்தி  ஓடிப்போகாதபடிக்கு  அவர்களைக்  கொன்றுபோடவேண்டுமென்று  போர்ச்சேவகர்  யோசனையாயிருந்தார்கள்.  {Acts  27:42}

 

நூற்றுக்கு  அதிபதி  பவுலைக்<Paul>  காப்பாற்ற  மனதாயிருந்து,  அவர்களுடைய  யோசனையைத்  தடுத்து,  நீந்தத்தக்கவர்கள்  முந்திக்  கடலில்  விழுந்து  கரையேறவும்,  {Acts  27:43}

 

மற்றவர்களில்  சிலர்  பலகைகள்மேலும்,  சிலர்  கப்பல்  துண்டுகள்மேலும்  போய்க்  கரையேறவும்  கட்டளையிட்டான்;  இவ்விதமாய்  எல்லாரும்  தப்பிக்  கரைசேர்ந்தார்கள்.  {Acts  27:44}

 

நாங்கள்  தப்பிக்  கரைசேர்ந்தபின்பு,  அந்தத்  தீவின்பேர்  மெலித்தா<Melita>  என்று  அறிந்தோம்.  {Acts  28:1}

 

அந்நியராகிய  அந்தத்  தீவார்  எங்களுக்குப்  பாராட்டின  அன்பு  கொஞ்சமல்ல.  அந்த  வேளையிலே  பிடித்திருந்த  மழைக்காகவும்  குளிருக்காகவும்  அவர்கள்  நெருப்பை  மூட்டி,  எங்கள்  அனைவரையும்  சேர்த்துக்கொண்டார்கள்.  {Acts  28:2}

 

பவுல்<Paul>  சில  விறகுகளை  வாரி  அந்த  நெருப்பின்மேல்  போடுகையில்,  ஒரு  விரியன்பாம்பு  அனலுறைத்துப்  புறப்பட்டு  அவனுடைய  கையைக்  கவ்விக்கொண்டது.  {Acts  28:3}

 

விஷப்பூச்சி  அவன்  கையிலே  தொங்குகிறதை  அந்நியராகிய  அந்தத்  தீவார்  கண்டபோது,  இந்த  மனுஷன்  கொலைபாதகன்,  இதற்குச்  சந்தேகமில்லை;  இவன்  சமுத்திரத்துக்குத்  தப்பிவந்தும்,  பழியானது  இவனைப்  பிழைக்கவொட்டவில்லையென்று  தங்களுக்குள்ளே  சொல்லிக்கொண்டார்கள்.  {Acts  28:4}

 

அவன்  அந்தப்  பூச்சியைத்  தீயிலே  உதறிப்போட்டு,  ஒரு  தீங்கும்  அடையாதிருந்தான்.  {Acts  28:5}

 

அவனுக்கு  வீக்கங்கண்டு,  அல்லது  அவன்  சடிதியாய்  விழுந்து  சாவானென்று  அவர்கள்  பார்த்துக்கொண்டிருந்தார்கள்;  நெடுநேரமாய்ப்  பார்த்துக்கொண்டிருந்தும்,  ஒரு  சேதமும்  அவனுக்கு  வராததைக்  கண்டபோது,  வேறு  சிந்தையாகி,  இவன்  தேவனென்று  சொல்லிக்கொண்டார்கள்.  {Acts  28:6}

 

தீவுக்கு  முதலாளியாகிய  புபிலியு<Publius>  என்னும்  பேர்கொண்டவனுடைய  நிலங்கள்  அந்த  இடத்திற்குச்  சமீபமாயிருந்தது;  அவன்  எங்களை  ஏற்றுக்கொண்டு,  மூன்றுநாள்  பட்சமாய்  விசாரித்தான்.  {Acts  28:7}

 

புபிலியுவினுடைய<Publius>  தகப்பன்  ஜுரத்தினாலும்  இரத்தபேதியினாலும்  வருத்தப்பட்டுக்  கிடந்தான்;  பவுல்<Paul>  அவனிடத்திற்குப்  போய்  ஜெபம்பண்ணி,  அவன்மேல்  கைகளை  வைத்து,  அவனைக்  குணமாக்கினான்.  {Acts  28:8}

 

இது  நடந்தபின்பு,  தீவிலே  இருந்த  மற்ற  வியாதிக்காரரும்  வந்து,  குணமாக்கப்பட்டார்கள்.  {Acts  28:9}

 

அவர்கள்  எங்களுக்கு  அநேக  மரியாதை  செய்து,  நாங்கள்  கப்பல்  ஏறிப்போகிறபோது  எங்களுக்குத்  தேவையானவைகளை  ஏற்றினார்கள்.  {Acts  28:10}

 

மூன்றுமாதம்  சென்றபின்பு,  அந்தத்  தீவிலே  மழைகாலத்திற்குத்  தங்கியிருந்த  மிதுனம்  என்னும்  அடையாளமுடைய  அலெக்சந்திரியாபட்டணத்துக்<Alexandria>  கப்பலிலே  நாங்கள்  ஏறிப்  புறப்பட்டு,  {Acts  28:11}

 

சீரகூசா<Syracuse>  பட்டணத்தைச்  சேர்ந்து,  அங்கே  மூன்றுநாள்  தங்கினோம்.  {Acts  28:12}

 

அவ்விடம்விட்டுச்  சுற்றியோடி,  ரேகியுதுறைமுகத்துக்கு<Rhegium>  வந்து  சேர்ந்தோம்.  மறுநாளில்  தென்றற்  காற்றெடுக்கையில்  புறப்பட்டு,  இரண்டாம்  நாள்  புத்தேயோலிபட்டணத்திற்கு<Puteoli>  வந்து,  {Acts  28:13}

 

அங்கே  சகோதரரைக்  கண்டோம்;  அவர்கள்  எங்களை  ஏழுநாள்  தங்களிடத்தில்  இருக்கும்படி  வேண்டிக்கொண்டார்கள்;  அந்தப்படி  நாங்கள்  இருந்து,  பின்பு  ரோமாபுரிக்குப்<Rome>  போனோம்.  {Acts  28:14}

 

அவ்விடத்திலுள்ள  சகோதரர்கள்  நாங்கள்  வருகிற  செய்தியைக்  கேள்விப்பட்டு,  சிலர்  அப்பியுபுரம்வரைக்கும்<Appii  forum>,  சிலர்  மூன்று  சத்திரம்வரைக்கும்<The  three  taverns>,  எங்களுக்கு  எதிர்கொண்டுவந்தார்கள்;  அவர்களைப்  பவுல்<Paul>  கண்டு,  தேவனை  ஸ்தோத்திரித்துத்  தைரியமடைந்தான்.  {Acts  28:15}

 

நாங்கள்  ரோமாபுரியில்<Rome>  சேர்ந்தபோது,  நூற்றுக்கு  அதிபதி  தன்  காவலிலிருந்தவர்களைச்  சேனாபதியினிடத்தில்  ஒப்புக்கொடுத்தான்;  அப்பொழுது  பவுல்<Paul>  தன்னைக்  காத்திருக்கிற  சேவகனுடனே  தனித்துக்  குடியிருக்கும்படி  உத்தரவு  பெற்றுக்கொண்டான்.  {Acts  28:16}

 

மூன்றுநாளைக்குப்பின்பு,  பவுல்<Paul>  யூதரில்<Jews>  பிரதானமானவர்களை  வரவழைத்தான்;  அவர்கள்  கூடிவந்திருந்தபோது,  அவன்  அவர்களை  நோக்கி:  சகோதரரே,  நம்முடைய  ஜனங்களுக்கும்  நம்முடைய  முன்னோர்களின்  முறைமைகளுக்கும்  விரோதமானதொன்றையும்  நான்  செய்யாமலிருந்தும்,  கட்டப்பட்டவனாக  எருசலேமிலிருந்து<Jerusalem>  ரோமர்<Romans>  கைகளில்  ஒப்புக்கொடுக்கப்பட்டேன்.  {Acts  28:17}

 

அவர்கள்  என்னை  நியாயம்  விசாரித்தபோது  மரணத்துக்கேதுவான  குற்றம்  ஒன்றும்  என்னிடத்தில்  காணாதபடியினால்,  என்னை  விடுதலையாக்க  மனதாயிருந்தார்கள்.  {Acts  28:18}

 

யூதர்கள்<Jews>  அதற்கு  எதிர்பேசினபோது,  நான்  இராயனுக்கு<Caesar>  அபயமிடவேண்டியதாயிருந்தது;  ஆயினும்  என்  ஜனத்தார்மேல்  யாதொரு  குற்றஞ்  சாட்டவேண்டுமென்று  நான்  அப்படிச்  செய்யவில்லை.  {Acts  28:19}

 

இந்தக்  காரியத்தினிமித்தமே  உங்களைக்  காணவும்  உங்களுடனே  பேசவும்  உங்களை  அழைப்பித்தேன்.  இஸ்ரவேலுடைய<Israel>  நம்பிக்கைக்காகவே  இந்தச்  சங்கிலியால்  கட்டப்பட்டிருக்கிறேன்  என்றான்.  {Acts  28:20}

 

அதற்கு  அவர்கள்:  உன்னைக்குறித்து  யூதேயாவிலிருந்து<Judaea>  எங்களுக்குக்  காகிதம்  வரவுமில்லை,  வந்த  சகோதரரில்  ஒருவனும்  உன்பேரில்  ஒரு  பொல்லாங்கை  அறிவித்ததுமில்லை,  அதைப்பற்றிப்  பேசினதுமில்லை.  {Acts  28:21}

 

எங்கும்  இந்த  மதபேதத்துக்கு  விரோதமாய்ப்  பேசுகிறதாக  நாங்கள்  அறிந்திருக்கிறபடியால்,  இதைக்குறித்து  உன்னுடைய  அபிப்பிராயம்  என்னவென்று  கேட்டறிய  விரும்புகிறோம்  என்றார்கள்.  {Acts  28:22}

 

அதற்காக  அவர்கள்  ஒரு  நாளைக்குறித்து,  அநேகம்பேர்  அவன்  தங்கியிருந்த  வீட்டிற்கு  அவனிடத்தில்  வந்தார்கள்.  அவன்  காலமே  தொடங்கிச்  சாயங்காலமட்டும்  மோசேயின்<Moses>  நியாயப்பிரமாணத்திலும்  தீர்க்கதரிசிகளின்  ஆகமங்களிலும்  இருந்து  இயேசுவுக்கடுத்த<Jesus>  விசேஷங்களை  அவர்களுக்குப்  போதித்து,  தேவனுடைய  ராஜ்யத்தைக்  குறித்துச்  சாட்சிகொடுத்து  விஸ்தரித்துப்  பேசினான்.  {Acts  28:23}

 

அவன்  சொன்னவைகளைச்  சிலர்  விசுவாசித்தார்கள்,  சிலர்  விசுவாசியாதிருந்தார்கள்.  {Acts  28:24}

 

இப்படி  அவர்கள்  ஒருவரோடொருவர்  ஒவ்வாமலிருந்து,  புறப்பட்டுப்போகையில்,  பவுல்<Paul>  அவர்களுக்குச்  சொன்ன  வாக்கியமாவது:  {Acts  28:25}

 

நீங்கள்  காதாரக்கேட்டும்  உணராதிருப்பீர்கள்,  கண்ணாரக்கண்டும்  பாராதிருப்பீர்கள்.  {Acts  28:26}

 

இவர்கள்  கண்களினால்  காணாமலும்,  காதுகளினால்  கேளாமலும்,  இருதயத்தினால்  உணர்ந்து  குணப்படாமலும்,  நான்  இவர்களை  ஆரோக்கியமாக்காமலும்  இருக்கும்படிக்கு,  இந்த  ஜனத்தின்  இருதயம்  கொழுத்திருக்கிறது;  காதுகளினால்  மந்தமாய்க்  கேட்டுத்  தங்கள்  கண்களை  மூடிக்கொண்டார்கள்  என்று  இந்த  ஜனத்தினிடத்தில்  போய்ச்  சொல்லு  என்பதைப்  பரிசுத்தஆவி  ஏசாயா<Esaias>  தீர்க்கதரிசியைக்கொண்டு  நம்முடைய  பிதாக்களுடனே  நன்றாய்ச்  சொல்லியிருக்கிறார்.  {Acts  28:27}

 

ஆதலால்  தேவனுடைய  இரட்சிப்பு  புறஜாதியாருக்கு  அனுப்பப்பட்டிருக்கிறதென்றும்,  அவர்கள்  அதற்குச்  செவிகொடுப்பார்களென்றும்  உங்களுக்குத்  தெரிந்திருக்கக்கடவது  என்றான்.  {Acts  28:28}

 

இப்படி  அவன்  சொன்னபின்பு,  யூதர்கள்<Jews>  தங்களுக்குள்ளே  மிகவும்  தர்க்கம்  பண்ணிக்கொண்டு,  போய்விட்டார்கள்.  {Acts  28:29}

 

பின்பு  பவுல்<Paul>  தனக்காக  வாடகைக்கு  வாங்கியிருந்த  வீட்டிலே  இரண்டு  வருஷமுழுதும்  தங்கி,  தன்னிடத்தில்  வந்த  யாவரையும்  ஏற்றுக்கொண்டு,  {Acts  28:30}

 

மிகுந்த  தைரியத்துடனே  தடையில்லாமல்,  தேவனுடைய  ராஜ்யத்தைக்  குறித்துப்  பிரசங்கித்து,  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவைப்பற்றிய<Jesus  Christ>  விசேஷங்களை  உபதேசித்துக்கொண்டிருந்தான்.  {Acts  28:31}

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!