பின்பு
கர்த்தர் மோசேயை நோக்கி:
ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்களில்
ஒருவனும் தன் ஜனத்தாரில்
இறந்துபோன யாதொருவருக்காகத் தங்களைத்
தீட்டுப்படுத்தலாகாதென்று அவர்களோடே சொல். (லேவியராகமம் 21:1)
pinbu karththar moaseayai noakki:
aaroanin kumaararaagiya aasaariyarga'lil oruvanum
than janaththaaril i’ranthupoana yaathoruvarukkaagath thangga'laith theettuppaduththalaagaathen’ru avarga'loadea sol. (leaviyaraagamam 21:1)
தன் தாயும், தன் தகப்பனும், தன் குமாரனும், தன் குமாரத்தியும், தன் சகோதரனும், (லேவியராகமம்
21:2)
than thaayum,
than thagappanum, than kumaaranum, than kumaaraththiyum, than sagoatharanum, (leaviyaraagamam 21:2)
புருஷனுக்கு
வாழ்க்கைப்படாமல் தன்னிடத்திலிருக்கிற கன்னியாஸ்திரீயான தன் சகோதரியுமாகிய தனக்கு
நெருங்கின இனமான இவர்களுடைய
சாவுக்காகத் தீட்டுப்படலாம். (லேவியராகமம்
21:3)
purushanukku vaazhkkaippadaamal thannidaththilirukki’ra kanniyaasthireeyaana than sagoathariyumaagiya thanakku
nerunggina inamaana
ivarga'ludaiya saavukkaagath theettuppadalaam. (leaviyaraagamam 21:3)
தன் ஜனத்தாரில் பெரியவனாகிய
அவன் வேறொருவருக்காகவும் தன்னைப்
பரிசுத்தக்குலைச்சலாக்கித் தீட்டுப்படுத்தலாகாது. (லேவியராகமம்
21:4)
than janaththaaril
periyavanaagiya avan vea’roruvarukkaagavum thannaip
parisuththakkulaichchalaakkith theettuppaduththalaagaathu. (leaviyaraagamam 21:4)
அவர்கள்
தங்கள் தலையை மொட்டையடிக்காமலும், தங்கள்
தாடியின் ஓரங்களைச் சிரைத்துப்போடாமலும், தங்கள்
தேகத்தைக் கீறிக்கொள்ளாமலும் இருப்பார்களாக. (லேவியராகமம்
21:5)
avarga'l thangga'l thalaiyai mottaiyadikkaamalum, thangga'l thaadiyin
oarangga'laich
siraiththuppoadaamalum, thangga'l theagaththaik kee’rikko'l'laamalum iruppaarga'laaga. (leaviyaraagamam 21:5)
தங்கள்
தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக்
குலைச்சலாக்காமல் அவருக்கேற்ற பரிசுத்தராயிருப்பார்களாக; அவர்கள்
கர்த்தரின் தகனபலிகளையும் தங்கள்
தேவனுடைய அப்பத்தையும் செலுத்துகிறவர்களாதலால் பரிசுத்தராயிருக்கவேண்டும். (லேவியராகமம்
21:6)
thangga'l theavanudaiya naamaththaip
parisuththak kulaichchalaakkaamal avarukkeat’ra parisuththaraayiruppaarga'laaga; avarga'l karththarin
thaganabaliga'laiyum thangga'l theavanudaiya appaththaiyum seluththugi’ravarga'laathalaal parisuththaraayirukkavea'ndum. (leaviyaraagamam 21:6)
அவர்கள்
தங்கள் தேவனுக்குப் பரிசுத்தமானவர்கள், ஆகையால்
வேசியையாகிலும் கற்புக்குலைந்தவளையாகிலும் விவாகம்பண்ணார்களாக; தன் புருஷனாலே தள்ளப்பட்ட
ஸ்திரீயையும் விவாகம்பண்ணார்களாக. (லேவியராகமம்
21:7)
avarga'l thangga'l theavanukkup parisuththamaanavarga'l, aagaiyaal veasiyaiyaagilum ka’rpukkulainthava'laiyaagilum vivaagampa'n'naarga'laaga; than purushanaalea
tha'l'lappatta sthireeyaiyum
vivaagampa'n'naarga'laaga. (leaviyaraagamam 21:7)
அவன் தேவனுடைய அப்பத்தைச்
செலுத்துகிறபடியால் நீ அவனைப்
பரிசுத்தப்படுத்தவேண்டும்; உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தராகிய
நான் பரிசுத்தராயிருக்கிறபடியால், அவனும்
உனக்கு முன்பாகப் பரிசுத்தனாயிருப்பானாக. (லேவியராகமம்
21:8)
avan theavanudaiya
appaththaich seluththugi’rapadiyaal nee avanaip parisuththappaduththavea'ndum; ungga'laip parisuththamaakkugi’ra karththaraagiya naan parisuththaraayirukki’rapadiyaal, avanum unakku
munbaagap
parisuththanaayiruppaanaaga. (leaviyaraagamam 21:8)
ஆசாரியனுடைய
குமாரத்தி வேசித்தனம்பண்ணி, தன்னைப்
பரிசுத்தக் குலைச்சலாக்கினால், அவள் தன் தகப்பனையும்
பரிசுத்தக் குலைச்சலாக்குகிறாள்; அவள் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவள். (லேவியராகமம்
21:9)
aasaariyanudaiya kumaaraththi veasiththanampa'n'ni, thannaip
parisuththak kulaichchalaakkinaal, ava'l than thagappanaiyum parisuththak kulaichchalaakkugi’raa'l; ava'l akkiniyilea sutterikkappadakkadava'l. (leaviyaraagamam 21:9)
தன் சகோதரருக்குள்ளே பிரதான
ஆசாரியனாக தன் சிரசில்
அபிஷேகதைலம் வார்க்கப்பட்டவனும், அவனுக்குரிய
வஸ்திரங்களைத் தரிக்கும்படி பிரதிஷ்டைபண்ணப்பட்டவனுமாயிருக்கிறவன் எவனோ, அவன் தன் பாகையை எடுக்காமலும்,
தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்ளாமலும், (லேவியராகமம்
21:10)
than
sagoathararukku'l'lea pirathaana
aasaariyanaaga than sirasil abisheagathailam vaarkkappattavanum, avanukkuriya vasthirangga'laith tharikkumpadi
pirathishdaipa'n'nappattavanumaayirukki’ravan evanoa, avan than paagaiyai edukkaamalum,
than vasthirangga'laik kizhiththukko'l'laamalum, (leaviyaraagamam 21:10)
பிரேதம்
கிடக்கும் இடத்தில் போகாமலும்,
தன் தகப்பனுக்காகவும் தன் தாய்க்காகவும் தன்னைத்
தீட்டுப்படுத்திக்கொள்ளாமலும், (லேவியராகமம் 21:11)
pireatham kidakkum
idaththil poagaamalum, than thagappanukkaagavum than thaaykkaagavum thannaith
theettuppaduththikko'l'laamalum, (leaviyaraagamam 21:11)
பரிசுத்த
ஸ்தலத்திலிருந்து புறப்படாமலும், தன் தேவனுடைய பரிசுத்த
ஸ்தலத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும் இருப்பானாக;
அவனுடைய தேவனின் அபிஷேகதைலம்
என்னும் கிரீடம் அவன்மேல்
இருக்கிறதே; நான் கர்த்தர்.
(லேவியராகமம் 21:12)
parisuththa sthalaththilirunthu pu’rappadaamalum, than theavanudaiya parisuththa sthalaththaip
parisuththak kulaichchalaakkaamalum iruppaanaaga; avanudaiya
theavanin abisheagathailam ennum kireedam avanmeal
irukki’rathea; naan karththar. (leaviyaraagamam 21:12)
கன்னிகையாயிருக்கிற பெண்ணை
அவன் விவாகம்பண்ணவேண்டும். (லேவியராகமம்
21:13)
kannigaiyaayirukki’ra pe'n'nai
avan vivaagampa'n'navea'ndum. (leaviyaraagamam 21:13)
விதவையையானாலும் தள்ளப்பட்டவளையானாலும் கற்புகுலைந்தவளையானாலும் வேசியையானாலும் விவாகம்பண்ணாமல், தன் ஜனங்களுக்குள்ளே ஒரு கன்னிகையை விவாகம்பண்ணக்கடவன். (லேவியராகமம்
21:14)
vithavaiyaiyaanaalum tha'l'lappattava'laiyaanaalum ka’rpukulainthava'laiyaanaalum veasiyaiyaanaalum vivaagampa'n'naamal, than janangga'lukku'l'lea oru kannigaiyai vivaagampa'n'nakkadavan. (leaviyaraagamam 21:14)
அவன் தன் வித்தைத்
தன் ஜனங்களுக்குள்ளே பரிசுத்தக்
குலைச்சலாக்காமல் இருப்பானாக; நான் அவனைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்
என்று சொல் என்றார்.
(லேவியராகமம் 21:15)
avan than viththaith than janangga'lukku'l'lea parisuththak kulaichchalaakkaamal
iruppaanaaga; naan avanaip parisuththamaakkugi’ra karththar en’ru sol en’raar. (leaviyaraagamam 21:15)
பின்னும்
கர்த்தர் மோசேயை நோக்கி:
(லேவியராகமம் 21:16)
pinnum karththar
moaseayai
noakki: (leaviyaraagamam 21:16)
நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்:
உன் சந்ததியாருக்குள்ளே அங்கவீனமுள்ளவன் தலைமுறைதோறும்
தேவனுடைய அப்பத்தைச் செலுத்தும்படி
சேரலாகாது. (லேவியராகமம் 21:17)
nee aaroanoadea sollavea'ndiyathu ennaven’raal: un santhathiyaarukku'l'lea anggaveenamu'l'lavan thalaimu’raithoa’rum theavanudaiya appaththaich seluththumpadi searalaagaathu. (leaviyaraagamam 21:17)
அங்கவீனமுள்ள
ஒருவனும் அணுகலாகாது; குருடனானாலும், சப்பாணியானாலும், குறுகின
அல்லது நீண்ட அவயவமுள்ளவனானாலும், (லேவியராகமம்
21:18)
anggaveenamu'l'la oruvanum a'nugalaagaathu; kurudanaanaalum,
sappaa'niyaanaalum, ku’rugina allathu
nee'nda avayavamu'l'lavanaanaalum, (leaviyaraagamam 21:18)
காலொடிந்தவனானாலும், கையொடிந்தவனானாலும், (லேவியராகமம்
21:19)
kaalodinthavanaanaalum, kaiyodinthavanaanaalum, (leaviyaraagamam 21:19)
கூனனானாலும்,
குள்ளனானாலும், பூவிழுந்த கண்ணனானாலும்,
சொறியனானாலும், அசறுள்ளவனானாலும், விதை நசுங்கினவனானாலும் அணுகலாகாது.
(லேவியராகமம் 21:20)
koonanaanaalum, ku'l'lanaanaalum, poovizhuntha
ka'n'nanaanaalum, so’riyanaanaalum, asa’ru'l'lavanaanaalum, vithai
nasungginavanaanaalum a'nugalaagaathu. (leaviyaraagamam 21:20)
ஆசாரியனாகிய
ஆரோனின் சந்ததியாரில் அங்கவீனமுள்ள
ஒருவனும் கர்த்தரின் தகனபலிகளைச்
செலுத்தச் சேரலாகாது; அவன் அங்கவீனமுள்ளவனாகையால், அவன் தேவனுடைய அப்பத்தைச்
செலுத்தச் சேரலாகாது. (லேவியராகமம்
21:21)
aasaariyanaagiya aaroanin santhathiyaaril anggaveenamu'l'la oruvanum
karththarin thaganabaliga'laich seluththach searalaagaathu; avan anggaveenamu'l'lavanaagaiyaal, avan theavanudaiya appaththaich seluththach searalaagaathu. (leaviyaraagamam 21:21)
அவன் தன் தேவனுடைய
அப்பமாகிய மகா பரிசுத்தமானவைகளிலும் மற்ற பரிசுத்தமானவைகளிலும் புசிக்கலாம்.
(லேவியராகமம் 21:22)
avan than theavanudaiya appamaagiya mahaa parisuththamaanavaiga'lilum mat’ra parisuththamaanavaiga'lilum pusikkalaam. (leaviyaraagamam 21:22)
ஆனாலும்
அவன் அங்கவீனமுள்ளவனாகையால், அவன் என் பரிசுத்த
ஸ்தலங்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடிக்குத் திரைக்குள்ளே
போகாமலும் பலிபீடத்தண்டையில் சேராமலும்
இருப்பானாக; நான் அவர்களைப்
பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.
(லேவியராகமம் 21:23)
aanaalum avan anggaveenamu'l'lavanaagaiyaal, avan en parisuththa sthalangga'laip parisuththak kulaichchalaakkaathapadikkuth thiraikku'l'lea poagaamalum balipeedaththa'ndaiyil
searaamalum iruppaanaaga; naan avarga'laip parisuththamaakkugi’ra karththar
en’ru sol
en’raar.
(leaviyaraagamam 21:23)
மோசே இவைகளை ஆரோனோடும்
அவன் குமாரரோடும் இஸ்ரவேல்
புத்திரர் அனைவரோடும் சொன்னான்.
(லேவியராகமம் 21:24)
moasea ivaiga'lai aaroanoadum avan kumaararoadum israveal
puththirar anaivaroadum sonnaan. (leaviyaraagamam 21:24)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!