Saturday, November 05, 2016

Leaviyaraagamam 20 | லேவியராகமம் 20 | Leviticus 20

கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (லேவியராகமம்  20:1)

karththar  moaseayai  noakki:  (leaviyaraagamam  20:1)

பின்னும்  நீ  இஸ்ரவேல்  புத்திரரோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  இஸ்ரவேல்  புத்திரரிலும்  இஸ்ரவேலில்  வாசம்பண்ணுகிற  அந்நியர்களிலும்  எவனாகிலும்  தன்  சந்ததியில்  ஒரு  பிள்ளையை  மோளேகுக்குக்  கொடுத்தால்,  அவன்  கொலைசெய்யப்படவேண்டும்;  தேசத்தின்  ஜனங்கள்  அவன்மேல்  கல்லெறியவேண்டும்.  (லேவியராகமம்  20:2)

pinnum  nee  israveal  puththiraroadea  sollavea'ndiyathu  ennaven’raal:  israveal  puththirarilum  isravealil  vaasampa'n'nugi’ra  anniyarga'lilum  evanaagilum  than  santhathiyil  oru  pi'l'laiyai  moa'leagukkuk  koduththaal,  avan  kolaiseyyappadavea'ndum;  theasaththin  janangga'l  avanmeal  kalle’riyavea'ndum.  (leaviyaraagamam  20:2)

அவன்  என்  பரிசுத்த  ஸ்தலத்தைத்  தீட்டுப்படுத்தி,  என்  பரிசுத்த  நாமத்தைப்  பரிசுத்தக்  குலைச்சலாக்கும்படிக்கு,  தன்  சந்ததியில்  ஒரு  பிள்ளையை  மோளேகுக்குக்  கொடுத்ததினாலே,  நான்  அப்படிப்பட்டவனுக்கு  விரோதமாக  எதிர்த்துநின்று,  அவனைத்  தன்  ஜனத்தில்  இராதபடிக்கு  அறுப்புண்டு  போகப்பண்ணுவேன்.  (லேவியராகமம்  20:3)

avan  en  parisuththa  sthalaththaith  theettuppaduththi,  en  parisuththa  naamaththaip  parisuththak  kulaichchalaakkumpadikku,  than  santhathiyil  oru  pi'l'laiyai  moa'leagukkuk  koduththathinaalea,  naan  appadippattavanukku  viroathamaaga  ethirththunin’ru,  avanaith  than  janaththil  iraathapadikku  a’ruppu'ndu  poagappa'n'nuvean.  (leaviyaraagamam  20:3)

அவன்  தன்  சந்ததியில்  ஒரு  பிள்ளையை  மோளேகுக்குக்  கொடுக்கும்போது,  தேசத்தின்  ஜனங்கள்  அவனைக்  கொலைசெய்யாதபடிக்குக்  கண்சாடையாயிருந்தால்,  (லேவியராகமம்  20:4)

avan  than  santhathiyil  oru  pi'l'laiyai  moa'leagukkuk  kodukkumpoathu,  theasaththin  janangga'l  avanaik  kolaiseyyaathapadikkuk  ka'nsaadaiyaayirunthaal,  (leaviyaraagamam  20:4)

நான்  அந்த  மனிதனுக்கும்  அவன்  குடும்பத்துக்கும்  விரோதமாக  எதிர்த்துநின்று,  அவனையும்,  அவன்  பிறகே  மோளேகை  விபசாரமார்க்கமாய்ப்  பின்பற்றின  யாவரையும்,  தங்கள்  ஜனத்தில்  இராதபடிக்கு  அறுப்புண்டுபோகப்பண்ணுவேன்.  (லேவியராகமம்  20:5)

naan  antha  manithanukkum  avan  kudumbaththukkum  viroathamaaga  ethirththunin’ru,  avanaiyum,  avan  pi’ragea  moa'leagai  vibasaaramaarkkamaayp  pinpat’rina  yaavaraiyum,  thangga'l  janaththil  iraathapadikku  a’ruppu'ndupoagappa'n'nuvean.  (leaviyaraagamam  20:5)

அஞ்சனம்  பார்க்கிறவர்களையும்  குறிசொல்லுகிறவர்களையும்  பின்தொடர்ந்து  சோரம்போக  எந்த  ஆத்துமா  அவர்களை  நாடுகிறானோ,  அந்த  ஆத்துமாவுக்கு  விரோதமாக  எதிர்த்துநின்று,  அவனைத்  தன்  ஜனத்தில்  இராதபடிக்கு  அறுப்புண்டுபோகப்பண்ணுவேன்.  (லேவியராகமம்  20:6)

agnchanam  paarkki’ravarga'laiyum  ku’risollugi’ravarga'laiyum  pinthodarnthu  soarampoaga  entha  aaththumaa  avarga'lai  naadugi’raanoa,  antha  aaththumaavukku  viroathamaaga  ethirththunin’ru,  avanaith  than  janaththil  iraathapadikku  a’ruppu'ndupoagappa'n'nuvean.  (leaviyaraagamam  20:6)

ஆதலால்  நீங்கள்  உங்களைப்  பரிசுத்தப்படுத்திப்  பரிசுத்தராயிருங்கள்;  நான்  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்.  (லேவியராகமம்  20:7)

aathalaal  neengga'l  ungga'laip  parisuththappaduththip  parisuththaraayirungga'l;  naan  ungga'l  theavanaagiya  karththar.  (leaviyaraagamam  20:7)

என்  கட்டளைகளைக்  கைக்கொண்டு  நடவுங்கள்;  நான்  உங்களைப்  பரிசுத்தமாக்குகிற  கர்த்தர்.  (லேவியராகமம்  20:8)

en  katta'laiga'laik  kaikko'ndu  nadavungga'l;  naan  ungga'laip  parisuththamaakkugi’ra  karththar.  (leaviyaraagamam  20:8)

தன்  தகப்பனையாவது  தன்  தாயையாவது  சபிக்கிற  எவனும்  கொலைசெய்யப்படக்கடவன்;  அவன்  தன்  தகப்பனையும்  தன்  தாயையும்  சபித்தான்,  அவன்  இரத்தப்பழி  அவன்மேல்  இருப்பதாக.  (லேவியராகமம்  20:9)

than  thagappanaiyaavathu  than  thaayaiyaavathu  sabikki’ra  evanum  kolaiseyyappadakkadavan;  avan  than  thagappanaiyum  than  thaayaiyum  sabiththaan,  avan  iraththappazhi  avanmeal  iruppathaaga.  (leaviyaraagamam  20:9)

ஒருவன்  பிறனுடைய  மனைவியோடே  விபசாரம்  செய்தால்,  பிறன்  மனைவியோடே  விபசாரம்  செய்த  அந்த  விபசாரனும்  அந்த  விபசாரியும்  கொலைசெய்யப்படக்கடவர்கள்.  (லேவியராகமம்  20:10)

oruvan  pi’ranudaiya  manaiviyoadea  vibasaaram  seythaal,  pi’ran  manaiviyoadea  vibasaaram  seytha  antha  vibasaaranum  antha  vibasaariyum  kolaiseyyappadakkadavarga'l.  (leaviyaraagamam  20:10)

தன்  தகப்பன்  மனைவியோடே  சயனிக்கிறவன்  தன்  தகப்பனை  நிர்வாணமாக்கினபடியால்,  இருவரும்  கொலைசெய்யப்படக்கடவர்கள்;  அவர்கள்  இரத்தப்பழி  அவர்கள்மேல்  இருப்பதாக.  (லேவியராகமம்  20:11)

than  thagappan  manaiviyoadea  sayanikki’ravan  than  thagappanai  nirvaa'namaakkinapadiyaal,  iruvarum  kolaiseyyappadakkadavarga'l;  avarga'l  iraththappazhi  avarga'lmeal  iruppathaaga.  (leaviyaraagamam  20:11)

ஒருவன்  தன்  மருமகளோடே  சயனித்தால்,  இருவரும்  கொலைசெய்யப்படக்கடவர்கள்;  அருவருப்பான  தாறுமாறு  பண்ணினார்கள்;  அவர்கள்  இரத்தப்பழி  அவர்கள்மேல்  இருப்பதாக.  (லேவியராகமம்  20:12)

oruvan  than  marumaga'loadea  sayaniththaal,  iruvarum  kolaiseyyappadakkadavarga'l;  aruvaruppaana  thaa’rumaa’ru  pa'n'ninaarga'l;  avarga'l  iraththappazhi  avarga'lmeal  iruppathaaga.  (leaviyaraagamam  20:12)

ஒருவன்  பெண்ணோடே  சம்யோகம்  பண்ணுகிறதுபோல  ஆணோடே  சம்யோகம்பண்ணினால்,  அருவருப்பான  காரியம்  செய்த  அவ்விருவரும்  கொலைசெய்யப்படக்கடவர்கள்;  அவர்கள்  இரத்தப்பழி  அவர்கள்மேல்  இருப்பதாக.  (லேவியராகமம்  20:13)

oruvan  pe'n'noadea  samyoagam  pa'n'nugi’rathupoala  aa'noadea  samyoagampa'n'ninaal,  aruvaruppaana  kaariyam  seytha  avviruvarum  kolaiseyyappadakkadavarga'l;  avarga'l  iraththappazhi  avarga'lmeal  iruppathaaga.  (leaviyaraagamam  20:13)

ஒருவன்  ஒரு  ஸ்திரீயையும்  அவள்  தாயையும்  படைத்தால்,  அது  முறைகேடு;  இவ்வித  முறைகேடு  உங்களுக்குள்  இராதபடிக்கு,  அவனையும்  அவர்களையும்  அக்கினியில்  சுட்டெரிக்கவேண்டும்.  (லேவியராகமம்  20:14)

oruvan  oru  sthireeyaiyum  ava'l  thaayaiyum  padaiththaal,  athu  mu’raikeadu;  ivvitha  mu’raikeadu  ungga'lukku'l  iraathapadikku,  avanaiyum  avarga'laiyum  akkiniyil  sutterikkavea'ndum.  (leaviyaraagamam  20:14)

ஒருவன்  மிருகத்தோடே  புணர்ந்தால்,  அவன்  கொலைசெய்யப்படக்கடவன்;  அந்த  மிருகத்தையும்  கொல்லக்கடவீர்கள்.  (லேவியராகமம்  20:15)

oruvan  mirugaththoadea  pu'narnthaal,  avan  kolaiseyyappadakkadavan;  antha  mirugaththaiyum  kollakkadaveerga'l.  (leaviyaraagamam  20:15)

ஒரு  ஸ்திரீ  யாதொரு  மிருகத்தோடே  சேர்ந்து  சயனித்தால்,  அந்த  ஸ்திரீயையும்  அந்த  மிருகத்தையும்  கொல்லக்கடவாய்;  இருஜீவனும்  கொலைசெய்யப்படவேண்டும்;  அவைகளின்  இரத்தப்பழி  அவைகளின்மேல்  இருப்பதாக.  (லேவியராகமம்  20:16)

oru  sthiree  yaathoru  mirugaththoadea  searnthu  sayaniththaal,  antha  sthireeyaiyum  antha  mirugaththaiyum  kollakkadavaay;  irujeevanum  kolaiseyyappadavea'ndum;  avaiga'lin  iraththappazhi  avaiga'linmeal  iruppathaaga.  (leaviyaraagamam  20:16)

ஒருவன்  தன்  தகப்பனுக்காவது  தன்  தாய்க்காவது  குமாரத்தியாயிருக்கிற  தன்  சகோதரியைச்  சேர்த்துக்கொண்டு,  அவன்  அவளுடைய  நிர்வாணத்தையும்,  அவள்  அவனுடைய  நிர்வாணத்தையும்  பார்த்தால்,  அது  பாதகம்;  அவர்கள்  தங்கள்  ஜனங்களின்  கண்களுக்கு  முன்பாக  அறுப்புண்டு  போகக்கடவர்கள்;  அவன்  தன்  சகோதரியை  நிர்வாணப்படுத்தினான்;  அவன்  தன்  அக்கிரமத்தைச்  சுமப்பான்.  (லேவியராகமம்  20:17)

oruvan  than  thagappanukkaavathu  than  thaaykkaavathu  kumaaraththiyaayirukki’ra  than  sagoathariyaich  searththukko'ndu,  avan  ava'ludaiya  nirvaa'naththaiyum,  ava'l  avanudaiya  nirvaa'naththaiyum  paarththaal,  athu  paathagam;  avarga'l  thangga'l  janangga'lin  ka'nga'lukku  munbaaga  a’ruppu'ndu  poagakkadavarga'l;  avan  than  sagoathariyai  nirvaa'nappaduththinaan;  avan  than  akkiramaththaich  sumappaan.  (leaviyaraagamam  20:17)

ஒருவன்  சூதகஸ்திரீயோடே  சயனித்து,  அவளை  நிர்வாணமாக்கினால்,  அவன்  அவளுடைய  உதிர  ஊற்றைத்  திறந்து,  அவளும்  தன்  உதிர  ஊற்றை  வெளிப்படுத்தினபடியால்,  இருவரும்  தங்கள்  ஜனத்தில்  இராதபடிக்கு  அறுப்புண்டுபோகவேண்டும்.  (லேவியராகமம்  20:18)

oruvan  soothagasthireeyoadea  sayaniththu,  ava'lai  nirvaa'namaakkinaal,  avan  ava'ludaiya  uthira  oot’raith  thi’ranthu,  ava'lum  than  uthira  oot’rai  ve'lippaduththinapadiyaal,  iruvarum  thangga'l  janaththil  iraathapadikku  a’ruppu'ndupoagavea'ndum.  (leaviyaraagamam  20:18)

உன்  தாயினுடைய  சகோதரியையும்  உன்  தகப்பனுடைய  சகோதரியையும்  நிர்வாணமாக்காயாக,  அப்படிப்பட்டவன்  தன்  நெருங்கிய  இனத்தை  அவமானமாக்கினான்;  அவர்கள்  தங்கள்  அக்கிரமத்தைச்  சுமப்பார்கள்.  (லேவியராகமம்  20:19)

un  thaayinudaiya  sagoathariyaiyum  un  thagappanudaiya  sagoathariyaiyum  nirvaa'namaakkaayaaga,  appadippattavan  than  nerunggiya  inaththai  avamaanamaakkinaan;  avarga'l  thangga'l  akkiramaththaich  sumappaarga'l.  (leaviyaraagamam  20:19)

ஒருவன்  தன்  தகப்பனின்  சகோதரனுடைய  மனைவியோடே  சயனித்தால்,  அவன்  தன்  தகப்பனின்  சகோதரனை  நிர்வாணமாக்கினான்;  அவர்கள்  தங்கள்  பாவத்தைச்  சுமப்பார்கள்,  சந்தானமில்லாமல்  சாவார்கள்.  (லேவியராகமம்  20:20)

oruvan  than  thagappanin  sagoatharanudaiya  manaiviyoadea  sayaniththaal,  avan  than  thagappanin  sagoatharanai  nirvaa'namaakkinaan;  avarga'l  thangga'l  paavaththaich  sumappaarga'l,  santhaanamillaamal  saavaarga'l.  (leaviyaraagamam  20:20)

ஒருவன்  தன்  சகோதரன்  மனைவியை  விவாகம்பண்ணினால்,  அது  அசுத்தம்;  தன்  சகோதரனை  நிர்வாணமாக்கினான்,  அவர்கள்  சந்தானமற்றிருப்பார்கள்.  (லேவியராகமம்  20:21)

oruvan  than  sagoatharan  manaiviyai  vivaagampa'n'ninaal,  athu  asuththam;  than  sagoatharanai  nirvaa'namaakkinaan,  avarga'l  santhaanamat’riruppaarga'l.  (leaviyaraagamam  20:21)

ஆகையால்  நீங்கள்  குடியிருப்பதற்காக  நான்  உங்களைக்  கொண்டுபோகிற  தேசம்  உங்களைக்  கக்கிப்போடாதபடிக்கு,  நீங்கள்  என்  கட்டளைகள்  யாவையும்  என்னுடைய  நியாயங்கள்  யாவையும்  கைக்கொண்டு  நடவுங்கள்.  (லேவியராகமம்  20:22)

aagaiyaal  neengga'l  kudiyiruppatha’rkaaga  naan  ungga'laik  ko'ndupoagi’ra  theasam  ungga'laik  kakkippoadaathapadikku,  neengga'l  en  katta'laiga'l  yaavaiyum  ennudaiya  niyaayangga'l  yaavaiyum  kaikko'ndu  nadavungga'l.  (leaviyaraagamam  20:22)

நான்  உங்களுக்கு  முன்பாகத்  துரத்திவிடுகிற  ஜனத்தினுடைய  வழிபாடுகளில்  நடவாதிருங்கள்;  அவர்கள்  இப்படிப்பட்ட  காரியங்களையெல்லாம்  செய்தபடியால்  நான்  அவர்களை  அரோசித்தேன்.  (லேவியராகமம்  20:23)

naan  ungga'lukku  munbaagath  thuraththividugi’ra  janaththinudaiya  vazhipaaduga'lil  nadavaathirungga'l;  avarga'l  ippadippatta  kaariyangga'laiyellaam  seythapadiyaal  naan  avarga'lai  aroasiththean.  (leaviyaraagamam  20:23)

நீங்கள்  அவர்கள்  தேசத்தைச்  சுதந்தரிப்பீர்கள்  என்று  உங்களோடே  சொன்னேன்;  பாலும்  தேனும்  ஓடுகிற  அந்த  தேசத்தை  உங்களுக்குச்  சுதந்தரமாகக்  கொடுப்பேன்;  உங்களை  மற்ற  ஜனங்களைவிட்டுப்  பிரித்தெடுத்த  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  நானே.  (லேவியராகமம்  20:24)

neengga'l  avarga'l  theasaththaich  suthantharippeerga'l  en’ru  ungga'loadea  sonnean;  paalum  theanum  oadugi’ra  antha  theasaththai  ungga'lukkuch  suthantharamaagak  koduppean;  ungga'lai  mat’ra  janangga'laivittup  piriththeduththa  ungga'l  theavanaagiya  karththar  naanea.  (leaviyaraagamam  20:24)

ஆகையால்  சுத்தமான  மிருகங்களுக்கும்  அசுத்தமான  மிருகங்களுக்கும்,  சுத்தமான  பறவைகளுக்கும்  அசுத்தமான  பறவைகளுக்கும்  நீங்கள்  வித்தியாசம்பண்ணி,  நான்  உங்களுக்குத்  தீட்டாக  எண்ணச்சொல்லி  விலக்கின  மிருகங்களாலும்  பறவைகளாலும்  தரையிலே  ஊருகிற  யாதொரு  பிராணிகளாலும்  உங்களை  அருவருப்பாக்காதிருப்பீர்களாக.  (லேவியராகமம்  20:25)

aagaiyaal  suththamaana  mirugangga'lukkum  asuththamaana  mirugangga'lukkum,  suththamaana  pa’ravaiga'lukkum  asuththamaana  pa’ravaiga'lukkum  neengga'l  viththiyaasampa'n'ni,  naan  ungga'lukkuth  theettaaga  e'n'nachsolli  vilakkina  mirugangga'laalum  pa’ravaiga'laalum  tharaiyilea  oorugi’ra  yaathoru  piraa'niga'laalum  ungga'lai  aruvaruppaakkaathiruppeerga'laaga.  (leaviyaraagamam  20:25)

கர்த்தராகிய  நான்  பரிசுத்தராயிருக்கிறபடியினாலே  நீங்களும்  எனக்கேற்ற  பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக;  நீங்கள்  என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு,  உங்களை  மற்ற  ஜனங்களைவிட்டுப்  பிரித்தெடுத்தேன்.  (லேவியராகமம்  20:26)

karththaraagiya  naan  parisuththaraayirukki’rapadiyinaalea  neengga'lum  enakkeat’ra  parisuththavaanga'laayiruppeerga'laaga;  neengga'l  ennudaiyavarga'laayirukkumpadikku,  ungga'lai  mat’ra  janangga'laivittup  piriththeduththean.  (leaviyaraagamam  20:26)

அஞ்சனம்பார்க்கிறவர்களும்  குறிசொல்லுகிறவர்களுமாயிருக்கிற  புருஷனாகிலும்  ஸ்திரீயாகிலும்  கொலைசெய்யப்படவேண்டும்;  அவர்கள்மேல்  கல்லெறிவார்களாக;  அவர்கள்  இரத்தப்பழி  அவர்கள்மேல்  இருக்கக்கடவது  என்று  சொல்  என்றார்.  (லேவியராகமம்  20:27)

agnchanampaarkki’ravarga'lum  ku’risollugi’ravarga'lumaayirukki’ra  purushanaagilum  sthireeyaagilum  kolaiseyyappadavea'ndum;  avarga'lmeal  kalle’rivaarga'laaga;  avarga'l  iraththappazhi  avarga'lmeal  irukkakkadavathu  en’ru  sol  en’raar.  (leaviyaraagamam  20:27)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!