யோசேப்பின் குமாரனுடைய
வம்சத்தாரில் மனாசேயின் குமாரனாகிய
மாகீருக்குப் பிறந்த கீலேயாத்தின்
வம்ச பிதாக்களான தலைவர்
சேர்ந்து, மோசேக்கும் இஸ்ரவேல்
புத்திரருடைய பிதாக்களில் தலைவராகிய
பிரபுக்களுக்கும் முன்பாக வந்து,
அவர்களை நோக்கி: (எண்ணாகமம்
36:1)
yoaseappin kumaaranudaiya vamsaththaaril manaaseayin kumaaranaagiya maakeerukkup pi’rantha keeleayaaththin vamsa pithaakka'laana thalaivar searnthu, moaseakkum israveal
puththirarudaiya pithaakka'lil thalaivaraagiya pirabukka'lukkum munbaaga vanthu,
avarga'lai noakki:
(e’n’naagamam 36:1)
சீட்டுப்போட்டு, தேசத்தை
இஸ்ரவேல் புத்திரருக்குச் சுதந்தரமாகக்
கொடுக்கும்படி எங்கள் ஆண்டவனுக்குக்
கர்த்தர் கட்டளையிட்டாரே; அன்றியும்,
எங்கள் சகோதரனாகிய செலொப்பியாத்தின் சுதந்தரத்தை
அவன் குமாரத்திகளுக்குக் கொடுக்கவேண்டும் என்றும்
எங்கள் ஆண்டவனுக்குக் கர்த்தராலே
கட்டளையிடப்பட்டதே. (எண்ணாகமம் 36:2)
seettuppoattu, theasaththai israveal
puththirarukkuch suthantharamaagak kodukkumpadi
engga'l
aa'ndavanukkuk karththar katta'laiyittaarea; an’riyum, engga'l sagoatharanaagiya
seloppiyaaththin
suthantharaththai avan kumaaraththiga'lukkuk kodukkavea'ndum en’rum engga'l aa'ndavanukkuk karththaraalea katta'laiyidappattathea. (e’n’naagamam 36:2)
இப்படியிருக்க, இவர்கள்
இஸ்ரவேல் புத்திரருடைய வேறொரு
கோத்திரத்தின் புத்திரருக்கு மனைவிகளானால்,
அந்தக் குமாரத்திகளுடைய சுதந்தரம்
எங்கள் பிதாக்களுடைய சுதந்தரத்திலிருந்து நீங்கி,
அவர்கள் உட்படுகிற கோத்திரத்தின்
சுதந்தரத்தோடே சேர்ந்துபோகும்; இப்படி எங்கள் சுதந்தரத்துக்குச் சீட்டினால்
விழுந்த பங்கில் இராமல்
அற்றுப்போகுமே. (எண்ணாகமம் 36:3)
ippadiyirukka,
ivarga'l
israveal puththirarudaiya vea’roru koaththiraththin puththirarukku manaiviga'laanaal, anthak
kumaaraththiga'ludaiya suthantharam engga'l pithaakka'ludaiya suthantharaththilirunthu neenggi, avarga'l udpadugi’ra koaththiraththin suthantharaththoadea searnthupoagum; ippadi engga'l suthantharaththukkuch seettinaal vizhuntha
panggil
iraamal at’ruppoagumea. (e’n’naagamam 36:3)
இஸ்ரவேல் புத்திரருக்கு
யூபிலி வருஷம் வந்தாலும்,
அவர்களுடைய சுதந்தரம் அவர்கள்
உட்பட்டுப்போன கோத்திரத்தின் சுதந்தரத்தோடே
சேர்ந்துபோகும்; இப்படி எங்கள்
பிதாக்களுடைய கோத்திரத்தின் சுதந்தரத்திலிருந்து அது நீங்கிப்போகுமே என்றார்கள்.
(எண்ணாகமம் 36:4)
israveal puththirarukku yoobili varusham
vanthaalum, avarga'ludaiya suthantharam avarga'l udpattuppoana koaththiraththin suthantharaththoadea searnthupoagum; ippadi engga'l pithaakka'ludaiya koaththiraththin suthantharaththilirunthu athu neenggippoagumea en’raarga'l. (e’n’naagamam 36:4)
அப்பொழுது மோசே கர்த்தருடைய கட்டளையின்படியே இஸ்ரவேல்
புத்திரரை நோக்கி: யோசேப்பு
புத்திரரின் கோத்திரத்தார் சொல்லுகிறது
சரியே. (எண்ணாகமம் 36:5)
appozhuthu moasea karththarudaiya katta'laiyinpadiyea israveal
puththirarai noakki: yoaseappu puththirarin
koaththiraththaar sollugi’rathu
sariyea. (e’n’naagamam
36:5)
கர்த்தர் செலொப்பியாத்தின் குமாரத்திகளைக்குறித்த காரியத்தில்
கட்டளையிடுகிறதாவது: அவர்கள் தங்களுக்கு
இஷ்டமானவர்களை விவாகஞ்செய்யலாம்; ஆனாலும்,
தங்கள் பிதாவின் கோத்திர
வம்சத்தாரில்மாத்திரம் அவர்கள் விவாகஞ்செய்யவேண்டும். (எண்ணாகமம்
36:6)
karththar seloppiyaaththin kumaaraththiga'laikku’riththa kaariyaththil katta'laiyidugi’rathaavathu:
avarga'l
thangga'lukku ishdamaanavarga'lai vivaagagnseyyalaam; aanaalum, thangga'l pithaavin
koaththira vamsaththaarilmaaththiram
avarga'l
vivaagagnseyyavea'ndum. (e’n’naagamam
36:6)
இப்படியே இஸ்ரவேல்
புத்திரரின் சுதந்தரம் ஒரு கோத்திரத்தைவிட்டு, வேறு கோத்திரத்துக்குப் போகாதிருக்கும்; இஸ்ரவேல்
புத்திரர் அவரவர் தங்கள்தங்கள்
பிதாக்களுடைய கோத்திரத்தின் சுதந்தரத்திலே
நிலைகொண்டிருக்க வேண்டும். (எண்ணாகமம்
36:7)
ippadiyea israveal puththirarin suthantharam oru koaththiraththaivittu, vea’ru koaththiraththukkup poagaathirukkum; israveal
puththirar avaravar thangga'lthangga'l pithaakka'ludaiya koaththiraththin suthantharaththilea nilaiko'ndirukka vea'ndum.
(e’n’naagamam 36:7)
இஸ்ரவேல் புத்திரர்
அவரவர் தங்கள்தங்கள் பிதாக்களின்
சுதந்தரத்தை அநுபவிக்கும்படி, இஸ்ரவேல்
புத்திரருடைய ஒரு கோத்திரத்திலே
சுதந்தரம் அடைந்திருக்கிற எந்தக்
குமாரத்தியும் தன் பிதாவின்
கோத்திர வம்சத்தாரில் ஒருவனுக்கு
மனைவியாகவேண்டும். (எண்ணாகமம் 36:8)
israveal puththirar avaravar
thangga'lthangga'l pithaakka'lin suthantharaththai anubavikkumpadi, israveal
puththirarudaiya oru koaththiraththilea suthantharam adainthirukki’ra enthak
kumaaraththiyum than pithaavin
koaththira vamsaththaaril oruvanukku manaiviyaagavea'ndum. (e’n’naagamam
36:8)
சுதந்தரமானது ஒரு கோத்திரத்தைவிட்டு வேறொரு
கோத்திரத்தைச் சேரக்கூடாது; இஸ்ரவேல்
புத்திரருடைய ஒவ்வொரு கோத்திரமும்
தன்தன் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார் என்றான்.
(எண்ணாகமம் 36:9)
suthantharamaanathu
oru koaththiraththaivittu vea’roru koaththiraththaich searakkoodaathu; israveal
puththirarudaiya ovvoru koaththiramum
thanthan suthantharaththilea nilaiko'ndirukkavea'ndum en’ru katta'laiyittirukki’raar en’raan. (e’n’naagamam
36:9)
கர்த்தர் மோசேக்குக்
கட்டளையிட்டபடியே செலொப்பியாத்தின் குமாரத்திகள்
செய்தார்கள். (எண்ணாகமம் 36:10)
karththar moaseakkuk katta'laiyittapadiyea seloppiyaaththin kumaaraththiga'l
seythaarga'l. (e’n’naagamam 36:10)
செலொப்பியாத்தின் குமாரத்திகளாகிய மக்லாள்
திர்சாள் ஒக்லாள் மில்காள்
நோவாள் என்பவர்கள் தங்கள்
பிதாவின் சகோதரருடைய புத்திரரை
விவாகம்பண்ணினார்கள்; அவர்கள் யோசேப்பின்
குமாரனாகிய மனாசே புத்திரரின்
வம்சத்தாரை விவாகம்பண்ணினபடியால், (எண்ணாகமம்
36:11)
seloppiyaaththin
kumaaraththiga'laagiya maklaa'l thirsaa'l oklaa'l milkaa'l noavaa'l
enbavarga'l thangga'l pithaavin sagoathararudaiya puththirarai
vivaagampa'n'ninaarga'l; avarga'l yoaseappin kumaaranaagiya manaasea puththirarin vamsaththaarai vivaagampa'n'ninapadiyaal, (e’n’naagamam
36:11)
அவர்களுடைய சுதந்தரம்
அவர்கள் பிதாவின் வம்சமான
கோத்திரத்தோடே இருந்தது. (எண்ணாகமம்
36:12)
avarga'ludaiya suthantharam avarga'l pithaavin
vamsamaana koaththiraththoadea irunthathu.
(e’n’naagamam 36:12)
எரிகோவின் அருகே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள மோவாபின்
சமனான வெளிகளில் கர்த்தர்
மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்கு
விதித்த கட்டளைகளும் நியாயங்களும்
இவைகளே. (எண்ணாகமம் 36:13)
erigoavin arugea yoarthaanukku
ippu’raththilu'l'la moavaabin samanaana ve'liga'lil karththar
moaseayaikko'ndu israveal
puththirarukku vithiththa katta'laiga'lum niyaayangga'lum ivaiga'lea. (e’n’naagamam 36:13)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!