Monday, November 07, 2016

E'n'naagamam 34 | எண்ணாகமம் 34 | Numbers 34

கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (எண்ணாகமம்  34:1)

karththar  moaseayai  noakki:  (e’n’naagamam  34:1)

நீ  இஸ்ரவேல்  புத்திரருக்குக்  கட்டளையிட்டுச்  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  கானான்தேசம்  அதின்  எல்லைகள்  உட்பட  உங்களுக்குச்  சுதந்தரமாகக்  கிடைக்கப்போகிறது;  நீங்கள்  கானான்தேசத்தில்  சேரும்போது,  (எண்ணாகமம்  34:2)

nee  israveal  puththirarukkuk  katta'laiyittuch  sollavea'ndiyathu  ennaven’raal:  kaanaantheasam  athin  ellaiga'l  udpada  ungga'lukkuch  suthantharamaagak  kidaikkappoagi’rathu;  neengga'l  kaanaantheasaththil  searumpoathu,  (e’n’naagamam  34:2)

உங்கள்  தென்புறம்  சீன்வனாந்தரம்  தொடங்கி  ஏதோம்  தேசத்தின்  ஓரமட்டும்  இருக்கும்;  கிழக்கே  இருக்கிற  உப்புக்கடலின்  கடைசி  தொடங்கி  உங்கள்  தென்  எல்லையாயிருக்கும்.  (எண்ணாகமம்  34:3)

ungga'l  thenpu’ram  seenvanaantharam  thodanggi  eathoam  theasaththin  oaramattum  irukkum;  kizhakkea  irukki’ra  uppukkadalin  kadaisi  thodanggi  ungga'l  then  ellaiyaayirukkum.  (e’n’naagamam  34:3)

உங்கள்  எல்லை  தெற்கிலிருந்து  அக்கராபீம்  மேடுகளைச்  சுற்றி,  சீன்வனாந்தரம்வரையில்  போய்,  தெற்கிலே  காதேஸ்பர்னேயாவுக்கும்,  அங்கேயிருந்து  ஆத்சார்  அதாருக்கும்,  அங்கேயிருந்து  அஸ்மோனாவுக்கும்  போய்,  (எண்ணாகமம்  34:4)

ungga'l  ellai  the’rkilirunthu  akkaraabeem  meaduga'laich  sut’ri,  seenvanaantharamvaraiyil  poay,  the’rkilea  kaatheasbarneayaavukkum,  anggeayirunthu  aathsaar  athaarukkum,  anggeayirunthu  asmoanaavukkum  poay,  (e’n’naagamam  34:4)

அஸ்மோனாவிலிருந்து  எகிப்தின்  நதிவரைக்கும்  சுற்றிப்போய்க்  கடலில்  முடியும்.  (எண்ணாகமம்  34:5)

asmoanaavilirunthu  egipthin  nathivaraikkum  sut’rippoayk  kadalil  mudiyum.  (e’n’naagamam  34:5)

மேற்றிசைக்குப்  பெருங்கடலே  உங்களுக்கு  எல்லை;  அதுவே  உங்களுக்கு  மேற்புறத்து  எல்லையாயிருக்கும்.  (எண்ணாகமம்  34:6)

meat’risaikkup  perungkadalea  ungga'lukku  ellai;  athuvea  ungga'lukku  mea’rpu’raththu  ellaiyaayirukkum.  (e’n’naagamam  34:6)

உங்களுக்கு  வடதிசை  எல்லை  பெருங்கடல்  தொடங்கி,  ஓர்  என்னும்  மலையை  உங்களுக்குக்  குறிப்பாக  வைத்து,  (எண்ணாகமம்  34:7)

ungga'lukku  vadathisai  ellai  perungkadal  thodanggi,  oar  ennum  malaiyai  ungga'lukkuk  ku’rippaaga  vaiththu,  (e’n’naagamam  34:7)

ஓர்  என்னும்  மலை  தொடங்கி,  ஆமாத்திற்குப்  போகிற  வழியைக்  குறிப்பாக  வைத்து,  அங்கேயிருந்து  அந்த  எல்லை  சேதாத்திற்குப்  போய்,  (எண்ணாகமம்  34:8)

oar  ennum  malai  thodanggi,  aamaaththi’rkup  poagi’ra  vazhiyaik  ku’rippaaga  vaiththu,  anggeayirunthu  antha  ellai  seathaaththi’rkup  poay,  (e’n’naagamam  34:8)

அங்கேயிருந்து  அது  சிப்ரோனுக்குப்போய்,  ஆத்சார்  ஏனானிலே  முடியும்;  அதுவே  உங்களுக்கு  வடபுறத்து  எல்லையாயிருக்கும்.  (எண்ணாகமம்  34:9)

anggeayirunthu  athu  siproanukkuppoay,  aathsaar  eanaanilea  mudiyum;  athuvea  ungga'lukku  vadapu’raththu  ellaiyaayirukkum.  (e’n’naagamam  34:9)

உங்களுக்குக்  கீழ்த்திசை  எல்லைக்கு  ஆத்சார்  ஏனானிலிருந்து  சேப்பாமைக்  குறிப்பாக  வைத்து,  (எண்ணாகமம்  34:10)

ungga'lukkuk  keezhththisai  ellaikku  aathsaar  eanaanilirunthu  seappaamaik  ku’rippaaga  vaiththu,  (e’n’naagamam  34:10)

சேப்பாமிலிருந்து  எல்லையானது  ஆயினுக்குக்  கிழக்கிலுள்ள  ரிப்லாபரியந்தமும்,  அங்கேயிருந்து  கின்னரேத்  கடல்பரியந்தமும்  அதின்  கீழ்க்கரையோரமாய்,  (எண்ணாகமம்  34:11)

seappaamilirunthu  ellaiyaanathu  aayinukkuk  kizhakkilu'l'la  riblaapariyanthamum,  anggeayirunthu  kinnareath  kadalpariyanthamum  athin  keezhkkaraiyoaramaay,  (e’n’naagamam  34:11)

அங்கேயிருந்து  யோர்தான்பரியந்தமும்  போய்,  உப்புக்கடலில்  முடியும்;  இந்தச்  சுற்றெல்லைகளையுடைய  தேசமே  உங்களுக்குரிய  தேசம்  என்று  சொல்  என்றார்.  (எண்ணாகமம்  34:12)

anggeayirunthu  yoarthaanpariyanthamum  poay,  uppukkadalil  mudiyum;  inthach  sut’rellaiga'laiyudaiya  theasamea  ungga'lukkuriya  theasam  en’ru  sol  en’raar.  (e’n’naagamam  34:12)

அப்பொழுது  மோசே  இஸ்ரவேல்  புத்திரரை  நோக்கி:  ஒன்பதரைக்  கோத்திரத்தாருக்குக்  கொடுக்கும்படி  கர்த்தர்  கட்டளையிட்டதும்,  நீங்கள்  சீட்டுப்போட்டுச்  சுதந்தரித்துக்கொள்ளவேண்டியதுமான  தேசம்  இதுவே.  (எண்ணாகமம்  34:13)

appozhuthu  moasea  israveal  puththirarai  noakki:  onbatharaik  koaththiraththaarukkuk  kodukkumpadi  karththar  katta'laiyittathum,  neengga'l  seettuppoattuch  suthanthariththukko'l'lavea'ndiyathumaana  theasam  ithuvea.  (e’n’naagamam  34:13)

ரூபன்  புத்திரர்  தங்கள்  பிதாக்களுடைய  வம்சத்தின்படியும்,  காத்  புத்திரர்  தங்கள்  பிதாக்களுடைய  வம்சத்தின்படியும்,  தங்கள்  சுதந்தரத்தைப்  பெற்றுக்கொண்டதும்  அல்லாமல்,  மனாசேயின்  பாதிக்  கோத்திரத்தாரும்  தங்கள்  சுதந்தரத்தைப்  பெற்றுக்கொண்டார்கள்.  (எண்ணாகமம்  34:14)

rooban  puththirar  thangga'l  pithaakka'ludaiya  vamsaththinpadiyum,  kaath  puththirar  thangga'l  pithaakka'ludaiya  vamsaththinpadiyum,  thangga'l  suthantharaththaip  pet’rukko'ndathum  allaamal,  manaaseayin  paathik  koaththiraththaarum  thangga'l  suthantharaththaip  pet’rukko'ndaarga'l.  (e’n’naagamam  34:14)

இந்த  இரண்டரைக்  கோத்திரத்தாரும்  சூரியோதய  திசையாகிய  கிழக்கே  எரிகோவின்  அருகேயுள்ள  யோர்தானுக்கு  இப்புறத்திலே  தங்கள்  சுதந்தரத்தைப்  பெற்றுக்கொண்டார்கள்  என்றான்.  (எண்ணாகமம்  34:15)

intha  ira'ndaraik  koaththiraththaarum  sooriyoathaya  thisaiyaagiya  kizhakkea  erigoavin  arugeayu'l'la  yoarthaanukku  ippu’raththilea  thangga'l  suthantharaththaip  pet’rukko'ndaarga'l  en’raan.  (e’n’naagamam  34:15)

மேலும்  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (எண்ணாகமம்  34:16)

mealum  karththar  moaseayai  noakki:  (e’n’naagamam  34:16)

உங்களுக்கு  தேசத்தைப்  பங்கிட்டுக்கொடுக்கும்  மனிதரின்  நாமங்களாவன:  ஆசாரியனாகிய  எலெயாசாரும்,  நூனின்  குமாரனாகிய  யோசுவாவுமே.  (எண்ணாகமம்  34:17)

ungga'lukku  theasaththaip  panggittukkodukkum  manitharin  naamangga'laavana:  aasaariyanaagiya  eleyaasaarum,  noonin  kumaaranaagiya  yoasuvaavumea.  (e’n’naagamam  34:17)

அன்றியும்,  தேசத்தைப்  பங்கிடும்படி  ஒவ்வொரு  கோத்திரத்தில்  ஒவ்வொரு  தலைவனையும்  தெரிந்துகொள்ளுங்கள்.  (எண்ணாகமம்  34:18)

an’riyum,  theasaththaip  panggidumpadi  ovvoru  koaththiraththil  ovvoru  thalaivanaiyum  therinthuko'l'lungga'l.  (e’n’naagamam  34:18)

அந்த  மனிதருடைய  நாமங்களாவன:  யூதா  கோத்திரத்துக்கு  எப்புன்னேயின்  குமாரனாகிய  காலேபும்,  (எண்ணாகமம்  34:19)

antha  manitharudaiya  naamangga'laavana:  yoothaa  koaththiraththukku  eppunneayin  kumaaranaagiya  kaaleabum,  (e’n’naagamam  34:19)

சிமியோன்  புத்திரரின்  கோத்திரத்துக்கு  அம்மியூதின்  குமாரனாகிய  சாமுவேலும்,  (எண்ணாகமம்  34:20)

simiyoan  puththirarin  koaththiraththukku  ammiyoothin  kumaaranaagiya  saamuvealum,  (e’n’naagamam  34:20)

பென்யமீன்  கோத்திரத்துக்குக்  கிஸ்லோனின்  குமாரனாகிய  எலிதாதும்,  (எண்ணாகமம்  34:21)

benyameen  koaththiraththukkuk  kisloanin  kumaaranaagiya  elithaathum,  (e’n’naagamam  34:21)

தாண்  புத்திரரின்  கோத்திரத்துக்கு  யொக்லியின்  குமாரனாகிய  புக்கி  என்னும்  பிரபுவும்,  (எண்ணாகமம்  34:22)

thaa'n  puththirarin  koaththiraththukku  yokliyin  kumaaranaagiya  bukki  ennum  pirabuvum,  (e’n’naagamam  34:22)

யோசேப்பின்  குமாரனாகிய  மனாசே  புத்திரரின்  கோத்திரத்துக்கு  எபோதின்  குமாரனாகிய  அன்னியேல்  என்னும்  பிரபுவும்,  (எண்ணாகமம்  34:23)

yoaseappin  kumaaranaagiya  manaasea  puththirarin  koaththiraththukku  epoathin  kumaaranaagiya  anniyeal  ennum  pirabuvum,  (e’n’naagamam  34:23)

எப்பிராயீம்  புத்திரரின்  கோத்திரத்துக்குச்  சிப்தானின்  குமாரனாகிய  கேமுவேல்  என்னும்  பிரபுவும்,  (எண்ணாகமம்  34:24)

eppiraayeem  puththirarin  koaththiraththukkuch  sipthaanin  kumaaranaagiya  keamuveal  ennum  pirabuvum,  (e’n’naagamam  34:24)

செபுலோன்  புத்திரரின்  கோத்திரத்துக்குப்  பர்னாகின்  குமாரனாகிய  எலிசாப்பான்  என்னும்  பிரபுவும்,  (எண்ணாகமம்  34:25)

sebuloan  puththirarin  koaththiraththukkup  parnaakin  kumaaranaagiya  elisaappaan  ennum  pirabuvum,  (e’n’naagamam  34:25)

இசக்கார்  புத்திரரின்  கோத்திரத்துக்கு  ஆசானின்  குமாரனாகிய  பல்த்தியேல்  என்னும்  பிரபுவும்,  (எண்ணாகமம்  34:26)

isakkaar  puththirarin  koaththiraththukku  aasaanin  kumaaranaagiya  palththiyeal  ennum  pirabuvum,  (e’n’naagamam  34:26)

ஆசேர்  புத்திரரின்  கோத்திரத்துக்குச்  செலோமியின்  குமாரனாகிய  அகியூத்  என்னும்  பிரபுவும்,  (எண்ணாகமம்  34:27)

aasear  puththirarin  koaththiraththukkuch  seloamiyin  kumaaranaagiya  agiyooth  ennum  pirabuvum,  (e’n’naagamam  34:27)

நப்தலி  புத்திரரின்  கோத்திரத்துக்கு  அம்மியூதின்  குமாரனாகிய  பெதாக்கேல்  என்னும்  பிரபுவுமே  என்றார்.  (எண்ணாகமம்  34:28)

napthali  puththirarin  koaththiraththukku  ammiyoothin  kumaaranaagiya  pethaakkeal  ennum  pirabuvumea  en’raar.  (e’n’naagamam  34:28)

கானான்தேசத்திலே  இஸ்ரவேல்  புத்திரருக்குச்  சுதந்தரங்களைப்  பங்கிட்டுக்  கொடுக்கிறதற்குக்  கர்த்தர்  கட்டளையிட்டவர்கள்  இவர்களே.  (எண்ணாகமம்  34:29)

kaanaantheasaththilea  israveal  puththirarukkuch  suthantharangga'laip  panggittuk  kodukki’ratha’rkuk  karththar  katta'laiyittavarga'l  ivarga'lea.  (e’n’naagamam  34:29)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!