கர்த்தர்
மோசேயை நோக்கி: (எண்ணாகமம்
28:1)
karththar moaseayai noakki:
(e’n’naagamam 28:1)
எனக்குச்
சுகந்தவாசனையாக, தகனபலிகளுக்கு அடுத்த
காணிக்கையையும் அப்பத்தையும், குறித்தகாலத்தில் எனக்குச்
செலுத்தும்படிக்குக் கவனமாயிருக்கக்கடவீர்கள் என்று நீ இஸ்ரவேல்
புத்திரருக்குக் கட்டளையிடு. (எண்ணாகமம்
28:2)
enakkuch suganthavaasanaiyaaga, thaganabaliga'lukku aduththa kaa'nikkaiyaiyum appaththaiyum, ku’riththakaalaththil enakkuch seluththumpadikkuk kavanamaayirukkakkadaveerga'l en’ru nee israveal
puththirarukkuk katta'laiyidu. (e’n’naagamam 28:2)
மேலும்
நீ அவர்களை நோக்கி:
நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய தகனபலி
என்னவென்றால்: நித்திய சர்வாங்க
தகனபலியாக நாடோறும் ஒரு வயதான பழுதற்ற
இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும். (எண்ணாகமம்
28:3)
mealum nee avarga'lai noakki: neengga'l karththarukkuch
seluththavea'ndiya thaganabali ennaven’raal: niththiya
sarvaangga thaganabaliyaaga naadoa’rum oru vayathaana
pazhuthat’ra ira'ndu
aattukkuttiga'laip baliyidavea'ndum. (e’n’naagamam
28:3)
காலையில்
ஒரு ஆட்டுக்குட்டியையும், மாலையில்
ஒரு ஆட்டுக்குட்டியையும் பலியிட்டு,
(எண்ணாகமம் 28:4)
kaalaiyil oru aattukkuttiyaiyum, maalaiyil
oru aattukkuttiyaiyum baliyittu, (e’n’naagamam
28:4)
போஜனபலியாக
ஒரு மரக்காலிலே பத்தில்
ஒரு பங்கானதும் இடித்துப்
பிழிந்த காற்படி எண்ணெயிலே
பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும்
செலுத்தக்கடவீர்கள். (எண்ணாகமம் 28:5)
poajanabaliyaaga oru marakkaalilea paththil
oru panggaanathum idiththup
pizhintha kaa’rpadi e'n'neyilea pisainthathumaagiya melliya maavaiyum seluththakkadaveerga'l. (e’n’naagamam 28:5)
இது சீனாய் மலையிலே
கட்டளையிடப்பட்ட நித்திய சர்வாங்க
தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த
வாசனைக்கான தகனபலி. (எண்ணாகமம்
28:6)
ithu
seenaay malaiyilea
katta'laiyidappatta niththiya sarvaangga thaganabali; ithu karththarukkuch
sugantha vaasanaikkaana thaganabali. (e’n’naagamam 28:6)
காற்படி
திராட்சரசம் ஒரு ஆட்டுக்குட்டிக்கு அடுத்த
பானபலி; பரிசுத்த ஸ்தலத்திலே
கர்த்தருக்கு அந்த இரசம் பானபலியாக வார்க்கப்படக்கடவது. (எண்ணாகமம்
28:7)
kaa’rpadi thiraadcharasam oru aattukkuttikku aduththa
baanabali; parisuththa sthalaththilea karththarukku
antha irasam baanabaliyaaga vaarkkappadakkadavathu. (e’n’naagamam
28:7)
காலையின்
போஜனபலிக்கும் அதின் பானபலிக்கும்
ஒப்பாகவே மாலையில் மற்ற ஆட்டுக்குட்டியையும் கர்த்தருக்குச் சுகந்த
வாசனையான தகனபலியாகச் செலுத்தக்கடவீர்கள். (எண்ணாகமம்
28:8)
kaalaiyin poajanabalikkum athin baanabalikkum oppaagavea maalaiyil
mat’ra
aattukkuttiyaiyum karththarukkuch
sugantha vaasanaiyaana thaganabaliyaagach seluththakkadaveerga'l. (e’n’naagamam 28:8)
ஓய்வுநாளிலோ
போஜனபலிக்காக ஒரு வயதான பழுதற்ற இரண்டு
ஆட்டுக்குட்டிகளையும், பத்தில் இரண்டு
பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான
மெல்லிய மாவையும், அதின் பானபலியையும் செலுத்தக்கடவீர்கள். (எண்ணாகமம்
28:9)
oayvunaa'liloa poajanabalikkaaga oru vayathaana
pazhuthat’ra ira'ndu
aattukkuttiga'laiyum, paththil
ira'ndu panggaanathum e'n'neyilea pisainthathumaana melliya
maavaiyum, athin baanabaliyaiyum seluththakkadaveerga'l. (e’n’naagamam 28:9)
நித்தமும்
செலுத்தும் சர்வாங்க தகனபலியும்
அதின் பானபலியும் அன்றி ஒவ்வொரு ஓய்வுநாளிலும்
இந்தச் சர்வாங்க தகனபலியும்
செலுத்தப்படவேண்டும். (எண்ணாகமம் 28:10)
niththamum
seluththum
sarvaangga thaganabaliyum athin baanabaliyum an’ri ovvoru
oayvunaa'lilum inthach sarvaangga thaganabaliyum seluththappadavea'ndum. (e’n’naagamam
28:10)
உங்கள்
மாதப்பிறப்புகளில் நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்க
தகனபலியாக இரண்டு காளைகளையும்,
ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற
ஏழு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தக்கடவீர்கள். (எண்ணாகமம்
28:11)
ungga'l maathappi’rappuga'lil neengga'l karththarukkuch
sarvaangga thaganabaliyaaga ira'ndu kaa'laiga'laiyum, oru aattukkadaavaiyum,
oru vayathaana pazhuthat’ra eazhu aattukkuttiga'laiyum seluththakkadaveerga'l. (e’n’naagamam 28:11)
போஜனபலியாக
ஒவ்வொரு காளைக்குப் பத்தில்
மூன்றுபங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான
மெல்லிய மாவையும், போஜனபலியாக
ஒரு ஆட்டுக்கடாவுக்குப் பத்தில்
இரண்டு பங்கானதும் எண்ணெயிலே
பிசைந்ததுமான மாவையும், (எண்ணாகமம்
28:12)
poajanabaliyaaga ovvoru
kaa'laikkup paththil moon’rupanggaanathum e'n'neyilea pisainthathumaana melliya
maavaiyum, poajanabaliyaaga oru aattukkadaavukkup
paththil ira'ndu panggaanathum e'n'neyilea
pisainthathumaana maavaiyum,
(e’n’naagamam 28:12)
போஜனபலியாக
ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்குப் பத்தில்
ஒரு பங்கானதும் எண்ணெயிலே
பிசைந்ததுமான மாவையும் கர்த்தருக்குச் சுகந்த
வாசனையான சர்வாங்க தகனபலியாகச்
செலுத்தக்கடவீர்கள். (எண்ணாகமம் 28:13)
poajanabaliyaaga ovvoru
aattukkuttikkup paththil
oru panggaanathum e'n'neyilea
pisainthathumaana maavaiyum
karththarukkuch sugantha vaasanaiyaana sarvaangga thaganabaliyaagach seluththakkadaveerga'l. (e’n’naagamam 28:13)
அவைகளுக்கேற்ற
பானபலிகள் திராட்சரசத்தில் காளைக்கு
அரைப்படியும், ஆட்டுக்கடாவுக்குப் படியில்
மூன்றில் ஒரு பங்கும்,
ஆட்டுக்குட்டிக்குக் காற்படி ரசமுமாயிருக்கவேண்டும்; இது வருஷ முழுவதும்
மாதந்தோறும் செலுத்தப்படவேண்டிய சர்வாங்க
தகனபலி. (எண்ணாகமம் 28:14)
avaiga'lukkeat’ra baanabaliga'l thiraadcharasaththil kaa'laikku araippadiyum,
aattukkadaavukkup padiyil
moon’ril
oru panggum, aattukkuttikkuk kaa’rpadi rasamumaayirukkavea'ndum; ithu varusha muzhuvathum
maathanthoa’rum seluththappadavea'ndiya sarvaangga thaganabali. (e’n’naagamam
28:14)
நித்தமும்
இடப்படும் சர்வாங்க தகனபலியும்
அதின் பானபலியும் அன்றி,
பாவநிவாரணபலியாகக் கர்த்தருக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவும் செலுத்தப்படவேண்டும். (எண்ணாகமம்
28:15)
niththamum idappadum sarvaangga thaganabaliyum athin baanabaliyum an’ri, paavanivaara'nabaliyaagak karththarukku
oru ve'l'laattukkadaavum seluththappadavea'ndum. (e’n’naagamam
28:15)
முதலாம்
மாதம் பதினாலாம் தேதி கர்த்தருக்கு உரிய பஸ்கா. (எண்ணாகமம்
28:16)
muthalaam maatham
pathinaalaam theathi karththarukku
uriya paskaa. (e’n’naagamam
28:16)
அந்த மாதம் பதினைந்தாம்
தேதி பண்டிகைநாள்; ஏழுநாளளவும்
புளிப்பில்லாத அப்பம் புசிக்கவேண்டும். (எண்ணாகமம்
28:17)
antha maatham
pathinainthaam theathi pa'ndigainaa'l; eazhunaa'la'lavum pu'lippillaatha appam pusikkavea'ndum. (e’n’naagamam 28:17)
முதலாம்
நாளிலே பரிசுத்த சபை கூடுதல் இருக்கவேண்டும்; அன்றைத்தினம்
சாதாரணமான யாதொரு வேலையும்
செய்யலாகாது. (எண்ணாகமம் 28:18)
muthalaam naa'lilea
parisuththa sabai
kooduthal irukkavea'ndum; an’raiththinam
saathaara'namaana yaathoru
vealaiyum seyyalaagaathu. (e’n’naagamam
28:18)
அப்பொழுது
நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்க
தகனபலியாக இரண்டு காளைகளையும்,
ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற
ஏழு ஆட்டுக்குட்டிகளையும், (எண்ணாகமம்
28:19)
appozhuthu neengga'l karththarukkuch
sarvaangga thaganabaliyaaga ira'ndu kaa'laiga'laiyum, oru aattukkadaavaiyum,
oru vayathaana pazhuthat’ra eazhu aattukkuttiga'laiyum, (e’n’naagamam
28:19)
அவைகளுக்கேற்ற
போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த
மெல்லிய மாவிலே காளைக்காகப்
பத்தில் மூன்று பங்கையும்,
ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு
பங்கையும், (எண்ணாகமம் 28:20)
avaiga'lukkeat’ra poajanabaliyaaga e'n'neyilea pisaintha melliya
maavilea kaa'laikkaagap paththil moon’ru panggaiyum, aattukkadaavukkaagap paththil ira'ndu
panggaiyum, (e’n’naagamam
28:20)
ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில்
ஒரு பங்கையும், (எண்ணாகமம்
28:21)
eazhu aattukkuttiga'lil ovvon’ri’rkaagap paththil
oru panggaiyum, (e’n’naagamam
28:21)
உங்கள்
பாவநிவிர்த்திக்கென்று பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள். (எண்ணாகமம்
28:22)
ungga'l paavanivirththikken’ru paavanivaara'nabaliyaaga oru ve'l'laattukkadaavaiyum seluththakkadaveerga'l. (e’n’naagamam 28:22)
காலையிலே
நித்தமும் செலுத்தும் சர்வாங்க
தகனபலியையும் அன்றி இவைகளையும்
செலுத்தக்கடவீர்கள். (எண்ணாகமம் 28:23)
kaalaiyilea niththamum seluththum sarvaangga thaganabaliyaiyum an’ri ivaiga'laiyum seluththakkadaveerga'l. (e’n’naagamam 28:23)
இந்தப்பிரகாரம் ஏழுநாளளவும்
நாடோறும் கர்த்தருக்குச் சுகந்த
வாசனையான தகனபலி செலுத்தக்கடவீர்கள்; நித்தமும்
செலுத்தப்படும் சர்வாங்க தகனபலியையும்
அதின் பானபலியையும் அன்றி,
இதையும் செலுத்தவேண்டும். (எண்ணாகமம்
28:24)
inthappiragaaram eazhunaa'la'lavum naadoa’rum karththarukkuch
sugantha vaasanaiyaana thaganabali seluththakkadaveerga'l; niththamum
seluththappadum
sarvaangga thaganabaliyaiyum athin baanabaliyaiyum an’ri, ithaiyum seluththavea'ndum. (e’n’naagamam
28:24)
ஏழாம் நாளிலே பரிசுத்த
சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான யாதொரு
வேலையும் செய்யலாகாது. (எண்ணாகமம்
28:25)
eazhaam naa'lilea
parisuththa sabaikooduthal irukkavea'ndum; athil saathaara'namaana yaathoru
vealaiyum seyyalaagaathu. (e’n’naagamam
28:25)
அந்த வாரங்களுக்குப்பின் நீங்கள்
கர்த்தருக்குப் புதிய போஜனபலியாக
முதற்கனிகளைச் செலுத்தும் பண்டிகை
நாளிலும் பரிசுத்த சபைகூடுதல்
இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான
யாதொரு வேலையும் செய்யலாகாது.
(எண்ணாகமம் 28:26)
antha vaarangga'lukkuppin neengga'l karththarukkup puthiya
poajanabaliyaaga mutha’rkaniga'laich seluththum pa'ndigai naa'lilum
parisuththa sabaikooduthal irukkavea'ndum; athil saathaara'namaana yaathoru
vealaiyum seyyalaagaathu. (e’n’naagamam
28:26)
அப்பொழுது
நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த
வாசனையான சர்வாங்க தகனபலியாக
இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான ஏழு ஆட்டுக்குட்டிகளையும், (எண்ணாகமம்
28:27)
appozhuthu neengga'l karththarukkuch
sugantha vaasanaiyaana sarvaangga thaganabaliyaaga ira'ndu kaa'laiga'laiyum, oru aattukkadaavaiyum,
oru vayathaana eazhu aattukkuttiga'laiyum, (e’n’naagamam
28:27)
அவைகளின்
போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த
மெல்லிய மாவில் ஒரு காளைக்காகப் பத்தில்
மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில்
இரண்டு பங்கையும், (எண்ணாகமம்
28:28)
avaiga'lin poajanabaliyaaga e'n'neyilea
pisaintha
melliya maavil oru kaa'laikkaagap paththil moon’ru panggaiyum, antha oru aattukkadaavukkaagap paththil ira'ndu
panggaiyum, (e’n’naagamam
28:28)
ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில்
ஒரு பங்கையும், (எண்ணாகமம்
28:29)
eazhu aattukkuttiga'lil ovvon’ri’rkaagap paththil
oru panggaiyum, (e’n’naagamam
28:29)
உங்களுக்காகப்
பாவநிவிர்த்தி செய்யும்படிக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள். (எண்ணாகமம்
28:30)
ungga'lukkaagap paavanivirththi seyyumpadikku oru ve'l'laattukkadaavaiyum seluththakkadaveerga'l. (e’n’naagamam 28:30)
நித்திய
சர்வாங்க தகனபலியையும் அதின் போஜனபலியையும் அதின் பானபலியையும் அன்றி,
இவைகளையும் செலுத்தக்கடவீர்கள்; இவைகள்
பழுதற்றவைகளாயிருக்கவேண்டும். (எண்ணாகமம் 28:31)
niththiya
sarvaangga thaganabaliyaiyum athin poajanabaliyaiyum athin baanabaliyaiyum an’ri, ivaiga'laiyum seluththakkadaveerga'l; ivaiga'l pazhuthat’ravaiga'laayirukkavea'ndum. (e’n’naagamam
28:31)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!