Monday, October 31, 2016

Eseakkiyeal 43 | எசேக்கியேல் 43 | Ezekiel 43

பின்பு  அவர்  என்னைக்  கீழ்த்திசைக்கு  எதிர்  வாசலாகிய  வாசலுக்கு  அழைத்துக்கொண்டுபோனார்.  (எசேக்கியேல்  43:1)

pinbu  avar  ennaik  keezhththisaikku  ethir  vaasalaagiya  vaasalukku  azhaiththukko'ndupoanaar.  (eseakkiyeal  43:1)

இதோ,  இஸ்ரவேலின்  தேவனுடைய  மகிமை  கீழ்த்திசையிலிருந்து  வந்தது;  அவருடைய  சத்தம்  பெருவெள்ளத்தின்  இரைச்சலைப்போல  இருந்தது;  அவருடைய  மகிமையினால்  பூமி  பிரகாசித்தது.  (எசேக்கியேல்  43:2)

ithoa,  isravealin  theavanudaiya  magimai  keezhththisaiyilirunthu  vanthathu;  avarudaiya  saththam  peruve'l'laththin  iraichchalaippoala  irunthathu;  avarudaiya  magimaiyinaal  boomi  piragaasiththathu.  (eseakkiyeal  43:2)

நான்  கண்ட  இந்தத்  தரிசனம்  நகரத்தை  அழிக்கவந்தபோது  கண்ட  தரிசனம்போல  இருந்தது;  இந்தத்  தரிசனங்கள்  கேபார்  நதியண்டையிலே  நான்  கண்டிருந்த  தரிசனத்தைப்போலும்  இருந்தது;  நான்  முகங்குப்புற  விழுந்தேன்.  (எசேக்கியேல்  43:3)

naan  ka'nda  inthath  tharisanam  nagaraththai  azhikkavanthapoathu  ka'nda  tharisanampoala  irunthathu;  inthath  tharisanangga'l  keabaar  nathiya'ndaiyilea  naan  ka'ndiruntha  tharisanaththaippoalum  irunthathu;  naan  mugangkuppu’ra  vizhunthean.  (eseakkiyeal  43:3)

கர்த்தருடைய  மகிமை  கீழ்த்திசைக்கு  எதிரான  வாசல்வழியாய்  ஆலயத்துக்குள்  பிரவேசித்தது.  (எசேக்கியேல்  43:4)

karththarudaiya  magimai  keezhththisaikku  ethiraana  vaasalvazhiyaay  aalayaththukku'l  piraveasiththathu.  (eseakkiyeal  43:4)

அப்பொழுது  ஆவி  என்னை  எடுத்து,  உட்பிராகாரத்திலே  கொண்டுபோய்விட்டது;  இதோ,  கர்த்தருடைய  மகிமை  ஆலயத்தை  நிரப்பிற்று.  (எசேக்கியேல்  43:5)

appozhuthu  aavi  ennai  eduththu,  udpiraagaaraththilea  ko'ndupoayvittathu;  ithoa,  karththarudaiya  magimai  aalayaththai  nirappit’ru.  (eseakkiyeal  43:5)

அவர்  ஆலயத்திலிருந்து  என்னோடே  பேசுகிறதைக்  கேட்டேன்;  அந்தப்  புருஷன்  என்னண்டையில்  நின்றிருந்தார்.  (எசேக்கியேல்  43:6)

avar  aalayaththilirunthu  ennoadea  peasugi’rathaik  keattean;  anthap  purushan  enna'ndaiyil  nin’rirunthaar.  (eseakkiyeal  43:6)

அவர்  என்னை  நோக்கி:  மனுபுத்திரனே,  இது  நான்  இஸ்ரவேல்  புத்திரரின்  நடுவே  என்றென்றைக்கும்  வாசம்பண்ணும்  என்  சிங்காசனமும்  என்  பாதபீடத்தின்  ஸ்தானமுமாயிருக்கிறது;  இனி  இஸ்ரவேல்  வம்சத்தாரும்  அவர்களுடைய  ராஜாக்களும்  என்  பரிசுத்த  நாமத்தைத்  தங்கள்  மேடைகளில்  தங்கள்  வேசித்தனத்தினாலும்  தங்கள்  ராஜாக்களின்  பிரேதங்களினாலும்  தீட்டுப்படுத்துவதில்லை.  (எசேக்கியேல்  43:7)

avar  ennai  noakki:  manupuththiranea,  ithu  naan  israveal  puththirarin  naduvea  en’ren’raikkum  vaasampa'n'num  en  singgaasanamum  en  paathapeedaththin  sthaanamumaayirukki’rathu;  ini  israveal  vamsaththaarum  avarga'ludaiya  raajaakka'lum  en  parisuththa  naamaththaith  thangga'l  meadaiga'lil  thangga'l  veasiththanaththinaalum  thangga'l  raajaakka'lin  pireathangga'linaalum  theettuppaduththuvathillai.  (eseakkiyeal  43:7)

அவர்கள்  எனக்கும்  தங்களுக்கும்  நடுவே  ஒரு  சுவர்  இருக்கும்படி,  தங்கள்  வாசற்படியை  என்  வாசற்படியண்டையிலும்,  தங்கள்  வாசல்நிலைகளை  என்  வாசல்  நிலைகளண்டையிலும்  சேர்த்து,  என்  பரிசுத்த  நாமத்தைத்  தாங்கள்  செய்த  அருவருப்புகளினால்  தீட்டுப்படுத்தினார்கள்;  ஆகையால்  என்  கோபத்திலே  அவர்களை  நாசமாக்கினேன்.  (எசேக்கியேல்  43:8)

avarga'l  enakkum  thangga'lukkum  naduvea  oru  suvar  irukkumpadi,  thangga'l  vaasa’rpadiyai  en  vaasa’rpadiya'ndaiyilum,  thangga'l  vaasalnilaiga'lai  en  vaasal  nilaiga'la'ndaiyilum  searththu,  en  parisuththa  naamaththaith  thaangga'l  seytha  aruvaruppuga'linaal  theettuppaduththinaarga'l;  aagaiyaal  en  koabaththilea  avarga'lai  naasamaakkinean.  (eseakkiyeal  43:8)

இப்பொழுதும்  அவர்கள்  தங்கள்  வேசித்தனத்தையும்  தங்கள்  ராஜாக்களின்  பிரேதங்களையும்  என்  சமுகத்தினின்று  அகற்றினால்  நான்  என்றென்றைக்கும்  அவர்கள்  நடுவே  வாசமாயிருப்பேன்.  (எசேக்கியேல்  43:9)

ippozhuthum  avarga'l  thangga'l  veasiththanaththaiyum  thangga'l  raajaakka'lin  pireathangga'laiyum  en  samugaththinin’ru  agat’rinaal  naan  en’ren’raikkum  avarga'l  naduvea  vaasamaayiruppean.  (eseakkiyeal  43:9)

மனுபுத்திரனே,  இஸ்ரவேல்  வம்சத்தார்  தங்கள்  அக்கிரமங்களினிமித்தம்  வெட்கப்படும்படிக்கு,  நீ  அவர்களுக்கு  இந்த  ஆலயத்தைக்  காண்பி;  அதின்  அளவை  அளக்கக்கடவர்கள்.  (எசேக்கியேல்  43:10)

manupuththiranea,  israveal  vamsaththaar  thangga'l  akkiramangga'linimiththam  vedkappadumpadikku,  nee  avarga'lukku  intha  aalayaththaik  kaa'nbi;  athin  a'lavai  a'lakkakkadavarga'l.  (eseakkiyeal  43:10)

அவர்கள்  செய்த  எல்லாவற்றினிமித்தமும்  வெட்கப்பட்டால்,  அப்பொழுது  இந்த  ஆலயத்தின்  ரூபத்தையும்,  அதின்  அளவையும்,  அதின்  முன்  வாசல்களையும்,  அதின்  பின்  வாசல்களையும்,  அதின்  எல்லா  ஒழுங்குகளையும்,  அதின்  எல்லாக்  கட்டளைகளையும்,  அதின்  எல்லா  நியமங்களையும்,  அதின்  எல்லாச்  சட்டங்களையும்  அவர்களுக்குத்  தெரியப்படுத்தி,  அவர்கள்  அதினுடைய  எல்லா  ஒழுங்குகளையும்,  அதினுடைய  எல்லா  முறைமைகளையும்  கைக்கொண்டு,  அவைகளின்படி  செய்யும்படிக்கு  அதை  அவர்கள்  கண்களுக்கு  முன்பாக  எழுதிவை.  (எசேக்கியேல்  43:11)

avarga'l  seytha  ellaavat’rinimiththamum  vedkappattaal,  appozhuthu  intha  aalayaththin  roobaththaiyum,  athin  a'lavaiyum,  athin  mun  vaasalga'laiyum,  athin  pin  vaasalga'laiyum,  athin  ellaa  ozhungguga'laiyum,  athin  ellaak  katta'laiga'laiyum,  athin  ellaa  niyamangga'laiyum,  athin  ellaach  sattangga'laiyum  avarga'lukkuth  theriyappaduththi,  avarga'l  athinudaiya  ellaa  ozhungguga'laiyum,  athinudaiya  ellaa  mu’raimaiga'laiyum  kaikko'ndu,  avaiga'linpadi  seyyumpadikku  athai  avarga'l  ka'nga'lukku  munbaaga  ezhuthivai.  (eseakkiyeal  43:11)

ஆலயத்தினுடைய  பிரமாணம்  என்னவென்றால்:  மலையுச்சியின்மேல்  சுற்றிலும்  அதின்  எல்லையெங்கும்  மிகவும்  பரிசுத்தமாயிருக்கும்;  இதுவே  ஆலயத்தினுடைய  பிரமாணம்.  (எசேக்கியேல்  43:12)

aalayaththinudaiya  piramaa'nam  ennaven’raal:  malaiyuchchiyinmeal  sut’rilum  athin  ellaiyenggum  migavum  parisuththamaayirukkum;  ithuvea  aalayaththinudaiya  piramaa'nam.  (eseakkiyeal  43:12)

முழங்களின்படி  அளக்கும்  பலிபீடத்தின்  அளவுகளாவன:  ஒரு  கை  முழமும்  நாலு  விரற்கடையும்  கொண்டது  ஒரு  முழமாகும்;  அதின்படி  சுற்றாதாரம்,  ஒரு  முழ  உயரமும்,  ஒரு  முழ  அகலமும்,  அதின்  ஓரத்தைச்  சுற்றிலுமுள்ள  விளிம்பு  ஒரு  ஜாணுமாயிருக்கும்;  இது  பலிபீடத்தின்  மேற்புறம்.  (எசேக்கியேல்  43:13)

muzhangga'linpadi  a'lakkum  balipeedaththin  a'lavuga'laavana:  oru  kai  muzhamum  naalu  vira’rkadaiyum  ko'ndathu  oru  muzhamaagum;  athinpadi  sut’raathaaram,  oru  muzha  uyaramum,  oru  muzha  agalamum,  athin  oaraththaich  sut’rilumu'l'la  vi'limbu  oru  jaa'numaayirukkum;  ithu  balipeedaththin  mea’rpu’ram.  (eseakkiyeal  43:13)

தரையில்  இருக்கிற  ஆதாரந்துவக்கிக்  கீழ்நிலைமட்டும்  இரண்டுமுழமும்,  அகலம்  ஒரு  முழமும்,  சின்ன  நிலைதுவக்கிப்  பெரிய  நிலைமட்டும்  நாலு  முழமும்,  அகலம்  ஒரு  முழமுமாயிருக்கும்.  (எசேக்கியேல்  43:14)

tharaiyil  irukki’ra  aathaaranthuvakkik  keezhnilaimattum  ira'ndumuzhamum,  agalam  oru  muzhamum,  sinna  nilaithuvakkip  periya  nilaimattum  naalu  muzhamum,  agalam  oru  muzhamumaayirukkum.  (eseakkiyeal  43:14)

பலிபீடத்தின்  சிகரம்  நாலு  முழ  உயரமாயிருக்கும்;  பலிபீடத்தின்  சிகரத்துக்குமேலே  நாலு  கொம்புகள்  இருக்கும்.  (எசேக்கியேல்  43:15)

balipeedaththin  sigaram  naalu  muzha  uyaramaayirukkum;  balipeedaththin  sigaraththukkumealea  naalu  kombuga'l  irukkum.  (eseakkiyeal  43:15)

பலிபீடத்தின்  சிகரம்  பன்னிரண்டு  முழ  நீளமும்,  பன்னிரண்டு  முழ  அகலமும்  தன்  நாலு  பக்கங்களிலும்  நாற்சதுரமுமாயிருக்கும்.  (எசேக்கியேல்  43:16)

balipeedaththin  sigaram  pannira'ndu  muzha  nee'lamum,  pannira'ndu  muzha  agalamum  than  naalu  pakkangga'lilum  naa’rsathuramumaayirukkum.  (eseakkiyeal  43:16)

அதின்  நாலு  பக்கங்களிலுள்ள  சட்டத்தின்  நீளம்  பதிநாலு  முழமும்,  அகலம்  பதிநாலு  முழமும்,  அதைச்  சுற்றிலுமிருக்கிற  விளிம்பு  அரை  முழமும்,  அதற்கு  ஆதாரமானது  சுற்றிலும்  ஒரு  முழமுமாயிருக்கும்;  அதின்  படிகள்  கிழக்குக்கு  எதிராயிருக்கும்  என்றார்.  (எசேக்கியேல்  43:17)

athin  naalu  pakkangga'lilu'l'la  sattaththin  nee'lam  pathinaalu  muzhamum,  agalam  pathinaalu  muzhamum,  athaich  sut’rilumirukki’ra  vi'limbu  arai  muzhamum,  atha’rku  aathaaramaanathu  sut’rilum  oru  muzhamumaayirukkum;  athin  padiga'l  kizhakkukku  ethiraayirukkum  en’raar.  (eseakkiyeal  43:17)

பின்னும்  அவர்  என்னை  நோக்கி:  மனுபுத்திரனே,  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்:  பலிபீடத்தை  உண்டுபண்ணும்  நாளிலே  அதின்மேல்  தகனபலியிடுகிறதற்கும்  அதின்மேல்  இரத்தம்  தெளிக்கிறதற்குமான  கட்டளைகளாவன:  (எசேக்கியேல்  43:18)

pinnum  avar  ennai  noakki:  manupuththiranea,  karththaraagiya  aa'ndavar  uraikki’rathu  ennaven’raal:  balipeedaththai  u'ndupa'n'num  naa'lilea  athinmeal  thaganabaliyidugi’ratha’rkum  athinmeal  iraththam  the'likki’ratha’rkumaana  katta'laiga'laavana:  (eseakkiyeal  43:18)

எனக்கு  ஆராதனை  செய்கிறதற்கு  என்னிடத்தில்  சேருகிற  சாதோக்கின்  வம்சத்தாரான  லேவி  கோத்திரத்தாராகிய  ஆசாரியர்களுக்கு  நீ  பாவநிவாரணபலியாக  ஒரு  இளங்காளையைக்  கொடுப்பாயாக  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (எசேக்கியேல்  43:19)

enakku  aaraathanai  seygi’ratha’rku  ennidaththil  searugi’ra  saathoakkin  vamsaththaaraana  leavi  koaththiraththaaraagiya  aasaariyarga'lukku  nee  paavanivaara'nabaliyaaga  oru  i'langkaa'laiyaik  koduppaayaaga  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (eseakkiyeal  43:19)

அதின்  இரத்தத்தில்  கொஞ்சம்  எடுத்து,  அதின்  நாலு  கொம்புகளிலும்,  சட்டத்தின்  நாலு  கோடிகளிலும்,  சுற்றியிருக்கிற  விளிம்பிலும்  பூசி  பாவநிவிர்த்திசெய்து,  அதைச்  சுத்திகரித்து,  (எசேக்கியேல்  43:20)

athin  iraththaththil  kogncham  eduththu,  athin  naalu  kombuga'lilum,  sattaththin  naalu  koadiga'lilum,  sut’riyirukki’ra  vi'limbilum  poosi  paavanivirththiseythu,  athaich  suththigariththu,  (eseakkiyeal  43:20)

பின்பு  பாவநிவாரணத்தின்  காளையைக்  கொண்டுபோய்,  அதை  ஆலயத்திலே  பரிசுத்த  ஸ்தலத்துக்குப்  புறம்பாகக்  குறிக்கப்பட்ட  இடத்திலே  சுட்டெரிக்கவேண்டும்.  (எசேக்கியேல்  43:21)

pinbu  paavanivaara'naththin  kaa'laiyaik  ko'ndupoay,  athai  aalayaththilea  parisuththa  sthalaththukkup  pu’rambaagak  ku’rikkappatta  idaththilea  sutterikkavea'ndum.  (eseakkiyeal  43:21)

இரண்டாம்  நாளிலே  பழுதற்ற  ஒரு  வெள்ளாட்டுக்கடாவைப்  பாவநிவாரணத்துக்காகப்  பலியிடுவாயாக;  அவர்கள்  இளங்காளையினாலே  பலிபீடத்தைச்  சுத்திசெய்ததுபோலப்  பாவநிவாரணஞ்  செய்யவேண்டும்.  (எசேக்கியேல்  43:22)

ira'ndaam  naa'lilea  pazhuthat’ra  oru  ve'l'laattukkadaavaip  paavanivaara'naththukkaagap  baliyiduvaayaaga;  avarga'l  i'langkaa'laiyinaalea  balipeedaththaich  suththiseythathupoalap  paavanivaara'nagn  seyyavea'ndum.  (eseakkiyeal  43:22)

நீ  பாவநிவாரணத்தை  முடித்தபின்பு,  பழுதற்ற  ஒரு  இளங்காளையையும்,  பழுதற்ற  ஒரு  ஆட்டுக்கடாவையும்  மந்தையிலிருந்தெடுத்துப்  பலியிடுவாயாக.  (எசேக்கியேல்  43:23)

nee  paavanivaara'naththai  mudiththapinbu,  pazhuthat’ra  oru  i'langkaa'laiyaiyum,  pazhuthat’ra  oru  aattukkadaavaiyum  manthaiyiliruntheduththup  baliyiduvaayaaga.  (eseakkiyeal  43:23)

அவைகளைக்  கர்த்தருடைய  சந்நிதியில்  பலியிடுவாயாக;  ஆசாரியர்கள்  அவைகளின்மேல்  உப்புதூவி,  அவைகளைக்  கர்த்தருக்குத்  தகனபலியாக  இடக்கடவர்கள்.  (எசேக்கியேல்  43:24)

avaiga'laik  karththarudaiya  sannithiyil  baliyiduvaayaaga;  aasaariyarga'l  avaiga'linmeal  upputhoovi,  avaiga'laik  karththarukkuth  thaganabaliyaaga  idakkadavarga'l.  (eseakkiyeal  43:24)

ஏழுநாள்வரைக்கும்  தினந்தினம்  பாவநிவாரணத்துக்காக  ஒரு  வெள்ளாட்டுக்கடாவைப்  படைப்பாயாக;  பழுதற்றவைகளான  இளங்காளையையும்  மந்தையிலிருந்தெடுத்த  ஆட்டுக்கடாவையும்  படைப்பார்களாக.  (எசேக்கியேல்  43:25)

eazhunaa'lvaraikkum  thinanthinam  paavanivaara'naththukkaaga  oru  ve'l'laattukkadaavaip  padaippaayaaga;  pazhuthat’ravaiga'laana  i'langkaa'laiyaiyum  manthaiyiliruntheduththa  aattukkadaavaiyum  padaippaarga'laaga.  (eseakkiyeal  43:25)

ஏழுநாள்வரைக்கும்  பலிபீடத்தைப்  பாவநிவிர்த்திசெய்து,  அதைச்  சுத்திகரித்து,  பிரதிஷ்டைபண்ணக்கடவர்கள்.  (எசேக்கியேல்  43:26)

eazhunaa'lvaraikkum  balipeedaththaip  paavanivirththiseythu,  athaich  suththigariththu,  pirathishdaipa'n'nakkadavarga'l.  (eseakkiyeal  43:26)

அந்நாட்கள்  முடிந்தபின்பு,  எட்டாம்  நாள்முதல்  ஆசாரியர்கள்  பலிபீடத்தின்மேல்  உங்கள்  தகனபலிகளையும்  உங்கள்  ஸ்தோத்திரபலிகளையும்  படைப்பார்களாக;  அப்பொழுது  உங்களை  அங்கீகரிப்பேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (எசேக்கியேல்  43:27)

annaadka'l  mudinthapinbu,  ettaam  naa'lmuthal  aasaariyarga'l  balipeedaththinmeal  ungga'l  thaganabaliga'laiyum  ungga'l  sthoaththirabaliga'laiyum  padaippaarga'laaga;  appozhuthu  ungga'lai  anggeegarippean  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (eseakkiyeal  43:27)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!