இப்போது கூப்பிடும்,
உமக்கு உத்தரவு கொடுப்பார்
உண்டோ பார்ப்போம்? பரிசுத்தவான்களில் யாரை நோக்கிப் பார்ப்பீர்?
(யோபு 5:1)
ippoathu kooppidum,
umakku uththaravu koduppaar
u'ndoa paarppoam? parisuththavaanga'lil yaarai noakkip
paarppeer? (yoabu 5:1)
கோபம் நிர்மூடனைக்
கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும்.
(யோபு 5:2)
koabam nirmoodanaik kollum;
po’raamai
buththiyillaathavanai athampa'n'num. (yoabu
5:2)
நிர்மூடன் ஒருவன்
வேரூன்றுகிறதை நான் கண்டு உடனே அவன் வாசஸ்தலத்தைச் சபித்தேன்.
(யோபு 5:3)
nirmoodan oruvan
vearoon’rugi’rathai naan ka'ndu udanea
avan vaasasthalaththaich sabiththean. (yoabu
5:3)
அவன் பிள்ளைகள்
இரட்சிப்புக்குத் தூரமாகி, தப்புவிப்பாரில்லாமல், வாசலிலே
நொறுக்கப்பட்டார்கள். (யோபு 5:4)
avan pi'l'laiga'l iradchippukkuth thooramaagi, thappuvippaarillaamal, vaasalilea no’rukkappattaarga'l. (yoabu
5:4)
பசித்தவன் அவன் விளைச்சலை முட்செடிகளுக்குள்ளுமிருந்து பறித்துத்
தின்றான்; பறிகாரன் அவன் ஆஸ்தியை விழுங்கினான்.
(யோபு 5:5)
pasiththavan avan vi'laichchalai mudchediga'lukku'l'lumirunthu
pa’riththuth thin’raan; pa’rikaaran avan aasthiyai vizhungginaan. (yoabu
5:5)
தீங்கு புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை; வருத்தம்
மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை. (யோபு 5:6)
theenggu puzhuthiyilirunthu u'ndaagi’rathumillai; varuththam
ma'n'nilirunthu mu'laikki’rathumillai. (yoabu 5:6)
அக்கினிப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, மனுஷன்
வருத்தம் அநுபவிக்கப் பிறந்திருக்கிறான். (யோபு 5:7)
akkinippo’riga'l mealea pa’rakki’rathupoala, manushan varuththam
anubavikkap pi’ranthirukki’raan. (yoabu 5:7)
ஆனாலும் நான் தேவனை நாடி, என் நியாயத்தைத்
தேவனிடத்தில் ஒப்புவிப்பேன். (யோபு 5:8)
aanaalum naan theavanai naadi,
en niyaayaththaith theavanidaththil oppuvippean.
(yoabu 5:8)
ஆராய்ந்து முடியாத
பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத
அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
(யோபு 5:9)
aaraaynthu mudiyaatha
periya kaariyangga'laiyum, e'n'nimudiyaatha athisayangga'laiyum avar seygi’raar. (yoabu 5:9)
தாழ்ந்தவர்களை உயரத்தில்
வைத்து, துக்கிக்கிறவர்களை இரட்சித்து
உயர்த்துகிறார். (யோபு 5:10)
thaazhnthavarga'lai uyaraththil vaiththu,
thukkikki’ravarga'lai iradchiththu uyarththugi’raar. (yoabu
5:10)
அவர் பூமியின்மேல்
மழையை வருஷிக்கப்பண்ணி, வெளிநிலங்களின்மேல் தண்ணீர்களை
வருவிக்கிறார். (யோபு 5:11)
avar boomiyinmeal mazhaiyai
varushikkappa'n'ni, ve'linilangga'linmeal tha'n'neerga'lai varuvikki’raar. (yoabu 5:11)
தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முடிய நடத்தக்கூடாதபடிக்கு, அவர்களுடைய
உபாயங்களை அவர் அபத்தமாக்குகிறார். (யோபு 5:12)
thanthirakkaararin kaiga'l kaariyaththai
mudiya nadaththakkoodaathapadikku, avarga'ludaiya ubaayangga'lai avar abaththamaakkugi’raar. (yoabu 5:12)
அவர் ஞானிகளை
அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்;
திரியாவரக்காரரின் ஆலோசனை கவிழ்க்கப்படும். (யோபு 5:13)
avar gnaaniga'lai avarga'ludaiya thanthiraththilea pidikki’raar; thiriyaavarakkaararin aaloasanai kavizhkkappadum. (yoabu
5:13)
அவர்கள் பகற்காலத்திலே
அந்தகாரத்துக்குள்ளாகி, மத்தியான வேளையிலே
இரவில் தடவுகிறதுபோலத் தடவித்
திரிகிறார்கள். (யோபு 5:14)
avarga'l paga’rkaalaththilea
anthagaaraththukku'l'laagi, maththiyaana vea'laiyilea
iravil thadavugi’rathupoalath
thadavith thirigi’raarga'l. (yoabu
5:14)
ஆனாலும் எளியவனை
அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்துக்கும், பெலவானின்
கைக்கும் விலக்கி இரட்சிக்கிறார். (யோபு 5:15)
aanaalum e'liyavanai
avarga'l
vaayilirukki’ra pattayaththukkum, belavaanin kaikkum
vilakki iradchikki’raar. (yoabu
5:15)
அதினால் தரித்திரனுக்கு நம்பிக்கை
உண்டு; தீமையானது தன் வாயை மூடும்.
(யோபு 5:16)
athinaal thariththiranukku nambikkai u'ndu;
theemaiyaanathu than vaayai
moodum. (yoabu 5:16)
இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன்
பாக்கியவான்; ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை
அற்பமாக எண்ணாதிரும். (யோபு 5:17)
ithoa, theavan
tha'ndikki’ra manushan
baakkiyavaan; aagaiyaal sarvavallavarudaiya
sidchaiyai a’rpamaaga e'n'naathirum. (yoabu
5:17)
அவர் காயப்படுத்திக் காயங்கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய
கை ஆற்றுகிறது. (யோபு 5:18)
avar kaayappaduththik kaayangkattugi’raar; avar adikki’raar, avarudaiya kai aat’rugi’rathu. (yoabu 5:18)
ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை நீங்கலாக்குவார்; ஏழாவதிலும்
பொல்லாப்பு உம்மைத் தொடாது.
(யோபு 5:19)
aa’ru ikkattuga'lukku ummai neenggalaakkuvaar; eazhaavathilum pollaappu
ummaith thodaathu. (yoabu
5:19)
பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்துக்கும், யுத்தத்திலே
பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கி
மீட்பார். (யோபு 5:20)
pagnchakaalaththilea
avar ummai mara'naththukkum, yuththaththilea pattayaththin vettukkum vilakki
meedpaar. (yoabu 5:20)
நாவின் சவுக்குக்கும்
மறைக்கப்படுவீர்; பாழாக்குதல் வரும்போதும்
பயப்படாமலிருப்பீர். (யோபு 5:21)
naavin savukkukkum ma’raikkappaduveer; paazhaakkuthal varumpoathum
bayappadaamaliruppeer. (yoabu
5:21)
பாழாக்குதலையும் பஞ்சத்தையும்
பார்த்து நகைப்பீர்; காட்டுமிருகங்களுக்கும் பயப்படாமலிருப்பீர். (யோபு 5:22)
paazhaakkuthalaiyum pagnchaththaiyum paarththu
nagaippeer; kaattumirugangga'lukkum bayappadaamaliruppeer. (yoabu
5:22)
வெளியின் கல்லுகளோடும்
உமக்கு உடன்படிக்கையிருக்கும்; வெளியின்
மிருகங்களும் உம்மோடே சமாதானமாயிருக்கும். (யோபு 5:23)
ve'liyin kalluga'loadum umakku
udanpadikkaiyirukkum; ve'liyin mirugangga'lum ummoadea
samaathaanamaayirukkum. (yoabu
5:23)
உம்முடைய கூடாரம்
சமாதானத்தோடிருக்கக் காண்பீர்; உம்முடைய
வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக்
காணமாட்டீர். (யோபு 5:24)
ummudaiya koodaaram samaathaanaththoadirukkak kaa'nbeer; ummudaiya
vaasasthalaththai visaarikkumpoathu ku’raivaik kaa'namaatteer. (yoabu
5:24)
உம்முடைய சந்தானம்
பெருகி, உம்முடைய சந்ததியார்
பூமியின் பூண்டுகளைப்போல இருப்பார்கள்
என்பதை அறிந்துகொள்வீர். (யோபு 5:25)
ummudaiya santhaanam perugi, ummudaiya santhathiyaar boomiyin poo'nduga'laippoala iruppaarga'l enbathai a’rinthuko'lveer. (yoabu
5:25)
தானியம் ஏற்றகாலத்திலே
அம்பாரத்தில் சேருகிறதுபோல, முதிர்வயதிலே
கல்லறையில் சேருவீர். (யோபு 5:26)
thaaniyam eat’rakaalaththilea ambaaraththil searugi’rathupoala, muthirvayathilea kalla’raiyil searuveer. (yoabu
5:26)
இதோ, நாங்கள்
ஆராய்ந்து அறிந்தது இதுதான்;
காரியம் இப்படியிருக்கிறது; இதை நீர் கேட்டு
உமக்கு நன்மையுண்டாக அறிந்துகொள்ளும் என்றான்.
(யோபு 5:27)
ithoa, naangga'l aaraaynthu
a’rinthathu ithuthaan;
kaariyam ippadiyirukki’rathu; ithai neer keattu umakku nanmaiyu'ndaaga a’rinthuko'l'lum en’raan. (yoabu
5:27)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!