அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோசபாத்
ராஜாவாகி, இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப்
பலப்பட்டான். (2நாளாகமம் 17:1)
avan sthaanaththilea avan kumaaranaagiya yoasapaath raajaavaagi, isravealukku
viroathamaayp balappattaan. (2naa’laagamam 17:1)
அவன் யூதாவின் அரணான பட்டணங்களிலெல்லாம் இராணுவத்தையும், யூதா தேசத்திலும், தன் தகப்பனாகிய ஆசா பிடித்த எப்பிராயீமின்
பட்டணங்களிலும் தாணையங்களையும் வைத்தான்.
(2நாளாகமம் 17:2)
avan yoothaavin
ara'naana patta'nangga'lilellaam iraa'nuvaththaiyum, yoothaa
theasaththilum, than thagappanaagiya aasaa pidiththa
eppiraayeemin patta'nangga'lilum thaa'naiyangga'laiyum vaiththaan.
(2naa’laagamam 17:2)
கர்த்தர்
யோசபாத்தோடிருந்தார்; அவன் பாகால்களைத்
தேடாமல், தன் தகப்பனாகிய
தாவீது முன்நாட்களில் நடந்த வழிகளில் நடந்து,
(2நாளாகமம் 17:3)
karththar yoasapaaththoadirunthaar; avan baagaalga'laith theadaamal,
than thagappanaagiya thaaveethu munnaadka'lil
nadantha vazhiga'lil nadanthu, (2naa’laagamam 17:3)
தன் தகப்பனுடைய தேவனைத்
தேடி, இஸ்ரவேலுடைய செய்கையின்படி
நடவாமல், அவருடைய கற்பனைகளின்படி நடந்துகொண்டான். (2நாளாகமம்
17:4)
than thagappanudaiya theavanaith
theadi, isravealudaiya seygaiyinpadi nadavaamal, avarudaiya
ka’rpanaiga'linpadi nadanthuko'ndaan. (2naa’laagamam 17:4)
ஆகையால்
கர்த்தர் அவன் கையில்
ராஜ்யபாரத்தைத் திடப்படுத்தினார்; யூதா கோத்திரத்தார் எல்லாரும்
யோசபாத்துக்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்; அவனுக்கு
ஐசுவரியமும் கனமும் மிகுதியாயிருந்தது. (2நாளாகமம்
17:5)
aagaiyaal karththar avan kaiyil raajyabaaraththaith thidappaduththinaar; yoothaa
koaththiraththaar ellaarum yoasapaaththukkuk kaa'nikkaiga'laik ko'nduvanthaarga'l; avanukku
aisuvariyamum kanamum
miguthiyaayirunthathu. (2naa’laagamam 17:5)
கர்த்தருடைய
வழிகளில் அவன் இருதயம்
உற்சாகங்கொண்டது; அவன் மேடைகளையும்
விக்கிரகத் தோப்புகளையும் யூதாவை
விட்டகற்றினான். (2நாளாகமம் 17:6)
karththarudaiya vazhiga'lil avan iruthayam u’rchaagangko'ndathu; avan meadaiga'laiyum vikkiragath thoappuga'laiyum yoothaavai vittagat’rinaan. (2naa’laagamam 17:6)
அவன் அரசாண்ட மூன்றாம்
வருஷத்தில் யூதாவின் பட்டணங்களிலே
உபதேசம்பண்ணும்படிக்கு, அவன் தன் பிரபுக்களாகிய பென்னாயிலையும், ஒபதியாவையும்,
சகரியாவையும், நெதனெயேலையும், மிகாயாவையும்,
(2நாளாகமம் 17:7)
avan arasaa'nda moon’raam varushaththil
yoothaavin patta'nangga'lilea ubatheasampa'n'numpadikku,
avan than pirabukka'laagiya bennaayilaiyum,
obathiyaavaiyum, sagariyaavaiyum, nethaneyealaiyum, mikaayaavaiyum, (2naa’laagamam 17:7)
இவர்களோடேகூடச் செமாயா,
நெதனியா, செபதியா, ஆசகேல்,
செமிரமோத், யோனத்தான், அதோனியா,
தொபியா, தோபத்தோனியா என்னும்
லேவியரையும், இவர்களோடேகூட ஆசாரியரான
எலிஷமாவையும், யோராமையும் அனுப்பினான்.
(2நாளாகமம் 17:8)
ivarga'loadeakoodach semaayaa, nethaniyaa, sebathiyaa, aasakeal, semiramoath, yoanaththaan,
athoaniyaa, thobiyaa, thoabaththoaniyaa ennum leaviyaraiyum, ivarga'loadeakooda aasaariyaraana elishamaavaiyum, yoaraamaiyum
anuppinaan. (2naa’laagamam 17:8)
இவர்கள்
யூதாவிலே உபதேசித்து, கர்த்தருடைய
வேத புஸ்தகத்தை வைத்துக்கொண்டு, யூதாவின்
பட்டணங்களிலெல்லாம் திரிந்து ஜனங்களுக்குப்
போதித்தார்கள். (2நாளாகமம் 17:9)
ivarga'l yoothaavilea ubatheasiththu, karththarudaiya veatha
pusthagaththai vaiththukko'ndu, yoothaavin
patta'nangga'lilellaam thirinthu
janangga'lukkup poathiththaarga'l. (2naa’laagamam 17:9)
யூதாவைச்
சுற்றியிருக்கிற தேசங்களுடைய ராஜ்யங்களின்மேலெல்லாம் கர்த்தரால்
உண்டான பயங்கரம் வந்ததினால்,
யோசபாத்தோடு யுத்தம்பண்ணாதிருந்தார்கள். (2நாளாகமம்
17:10)
yoothaavaich sut’riyirukki’ra theasangga'ludaiya raajyangga'linmealellaam karththaraal
u'ndaana bayanggaram vanthathinaal, yoasapaaththoadu yuththampa'n'naathirunthaarga'l. (2naa’laagamam 17:10)
பெலிஸ்தரிலும்
சிலர் யோசபாத்துக்குப் பகுதிப்பணத்தோடேகூடக் காணிக்கைகளையும் கொண்டுவந்தார்கள்; அரபியரும்
அவனுக்கு ஏழாயிரத்து எழுநூறு
ஆட்டுக்கடாக்களையும், ஏழாயிரத்து எழுநூறு
வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்தார்கள். (2நாளாகமம்
17:11)
pelistharilum silar yoasapaaththukkup paguthippa'naththoadeakoodak kaa'nikkaiga'laiyum ko'nduvanthaarga'l; arabiyarum avanukku
eazhaayiraththu ezhunoo’ru aattukkadaakka'laiyum,
eazhaayiraththu ezhunoo’ru ve'l'laattukkadaakka'laiyum
ko'nduvanthaarga'l. (2naa’laagamam 17:11)
இப்படியே
யோசபாத் வரவர மிகவும்
பெரியவனாகி, யூதாவிலே கோட்டைகளையும், ரஸ்துக்களை
வைக்கும் பட்டணங்களையும் கட்டினான்.
(2நாளாகமம் 17:12)
ippadiyea yoasapaath varavara
migavum
periyavanaagi, yoothaavilea
koattaiga'laiyum, rasthukka'lai
vaikkum patta'nangga'laiyum kattinaan. (2naa’laagamam 17:12)
யூதாவின்
பட்டணங்களில் அவன் பெரிய வேலைகளை நடத்தினான்;
எருசலேமிலே பராக்கிரமசாலிகளான சேவகர்
அவனுக்கு இருந்தார்கள். (2நாளாகமம்
17:13)
yoothaavin patta'nangga'lil avan periya
vealaiga'lai nadaththinaan; erusaleamilea baraakkiramasaaliga'laana seavagar avanukku irunthaarga'l. (2naa’laagamam 17:13)
தங்கள்
பிதாக்களுடைய வம்சங்களின்படி அவர்களுடைய
இலக்கமாவது: யூதாவிலே ஆயிரத்துக்கு
அதிபதிகளில் அத்னா தலைமையானவன்;
அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் மூன்றுலட்சம்பேர் இருந்தார்கள்.
(2நாளாகமம் 17:14)
thangga'l pithaakka'ludaiya vamsangga'linpadi avarga'ludaiya ilakkamaavathu: yoothaavilea
aayiraththukku athibathiga'lil athnaa
thalaimaiyaanavan; avanidaththilea baraakkiramasaaliga'l moon’ruladchampear irunthaarga'l. (2naa’laagamam 17:14)
அவனுக்கு
உதவியாக யோகனான் என்னும்
சேனாபதியிருந்தான்; அவனிடத்திலே இரண்டுலட்சத்து எண்பதினாயிரம்பேர் இருந்தார்கள்.
(2நாளாகமம் 17:15)
avanukku uthaviyaaga yoaganaan ennum seanaabathiyirunthaan; avanidaththilea ira'nduladchaththu e'nbathinaayirampear irunthaarga'l. (2naa’laagamam 17:15)
அவனுக்கு
உதவியாகக் கர்த்தருக்குத் தன்னை உற்சாகமாய் ஒப்புக்கொடுத்த சிக்ரியின்
குமாரனாகிய அமசியா இருந்தான்;
அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் இரண்டுலட்சம்பேர் இருந்தார்கள்.
(2நாளாகமம் 17:16)
avanukku uthaviyaagak karththarukkuth thannai
u’rchaagamaay oppukkoduththa sikriyin kumaaranaagiya amasiyaa irunthaan;
avanidaththilea baraakkiramasaaliga'l ira'nduladchampear irunthaarga'l. (2naa’laagamam 17:16)
பென்யமீனிலே
எலியாதா என்னும் பராக்கிரமசாலி
இருந்தான்; அவனிடத்திலே வில்லும்
கேடகமும் பிடிக்கிறவர்கள் இரண்டுலட்சம்பேர் இருந்தார்கள்.
(2நாளாகமம் 17:17)
benyameenilea eliyaathaa
ennum baraakkiramasaali irunthaan; avanidaththilea villum
keadagamum pidikki’ravarga'l ira'nduladchampear irunthaarga'l. (2naa’laagamam 17:17)
அவனுக்கு
உதவியாக யோசபாத் இருந்தான்;
அவனிடத்திலே சேவகத்திற்கு ஆயுதபாணிகள்
லட்சத்து எண்பதினாயிரம்பேர் இருந்தார்கள்.
(2நாளாகமம் 17:18)
avanukku uthaviyaaga yoasabaath irunthaan;
avanidaththilea
seavagaththi’rku aayuthabaa'niga'l ladchaththu e'nbathinaayirampear irunthaarga'l. (2naa’laagamam 17:18)
ராஜா யூதா எங்குமுள்ள
அரணான பட்டணங்களில் வைத்தவர்களைத்தவிர இவர்களே
ராஜாவைச் சேவித்தவர்கள். (2நாளாகமம்
17:19)
raajaa yoothaa
enggumu'l'la ara'naana
patta'nangga'lil vaiththavarga'laiththavira ivarga'lea raajaavaich seaviththavarga'l. (2naa’laagamam 17:19)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!