ஆசா அரசாண்ட முப்பத்தாறாம்
வருஷத்திலே, இஸ்ரவேலின் ராஜாவாகிய
பாஷா யூதாவுக்கு விரோதமாய்
வந்து, ஒருவரும் யூதாவின்
ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்கும்
வரத்துமாயிராதபடிக்கு ராமாவைக் கட்டினான்.
(2நாளாகமம் 16:1)
aasaa arasaa'nda muppaththaa’raam varushaththilea, isravealin
raajaavaagiya baashaa yoothaavukku
viroathamaay vanthu, oruvarum
yoothaavin raajaavaagiya aasaavinidaththil
poakkum varaththumaayiraathapadikku raamaavaik
kattinaan. (2naa’laagamam 16:1)
அப்பொழுது
ஆசா கர்த்தருடைய ஆலயத்திலும்
ராஜாவின் அரமனையிலுமுள்ள பொக்கிஷங்களிலுள்ள வெள்ளியும்
பொன்னும் எடுத்து, தமஸ்குவில்
வாசம்பண்ணுகிற பென்னாதாத் என்னும்
சீரியாவின் ராஜாவினிடத்துக்கு அனுப்பி:
(2நாளாகமம் 16:2)
appozhuthu aasaa karththarudaiya aalayaththilum raajaavin
aramanaiyilumu'l'la pokkishangga'lilu'l'la ve'l'liyum ponnum
eduththu, thamaskuvil vaasampa'n'nugi’ra bennaathaath ennum seeriyaavin raajaavinidaththukku anuppi:
(2naa’laagamam 16:2)
எனக்கும்
உமக்கும், என் தகப்பனுக்கும்
உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை
உண்டே; இதோ, வெள்ளியும்
பொன்னும் உமக்கு அனுப்பினேன்;
இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா என்னைவிட்டு விலகிப்போகும்படிக்கு நீர் வந்து, அவனோடு
செய்த உடன்படிக்கையைத் தள்ளிப்போடும்
என்று சொல்லி அனுப்பினான்.
(2நாளாகமம் 16:3)
enakkum umakkum,
en thagappanukkum ummudaiya
thagappanukkum udanpadikkai
u'ndea; ithoa, ve'l'liyum
ponnum umakku anuppinean;
isravealin raajaavaagiya baashaa ennaivittu vilagippoagumpadikku neer vanthu, avanoadu seytha
udanpadikkaiyaith tha'l'lippoadum en’ru solli
anuppinaan. (2naa’laagamam 16:3)
பென்னாதாத்
ராஜாவாகிய ஆசாவுக்குச் செவிகொடுத்து,
தனக்கு உண்டான சேனாபதிகளை
இஸ்ரவேலின் பட்டணங்களுக்கு விரோதமாக
அனுப்பினான்; அவர்கள் ஈயோனையும்,
தாணையும், ஆபேல்மாயீமையும், நப்தலி
பட்டணங்களின் எல்லாப் பண்டகசாலைகளையும் முறிய அடித்தார்கள். (2நாளாகமம்
16:4)
bennaathaath raajaavaagiya aasaavukkuch sevikoduththu, thanakku
u'ndaana seanaabathiga'lai isravealin
patta'nangga'lukku viroathamaaga anuppinaan;
avarga'l
eeyoanaiyum, thaa'naiyum, aabealmaayeemaiyum, napthali
patta'nangga'lin ellaap
pa'ndagasaalaiga'laiyum mu’riya adiththaarga'l. (2naa’laagamam 16:4)
இதைப் பாஷா கேட்டபோது,
ராமாவைக் கட்டுகிறதை நிறுத்தி,
தன் வேலையைவிட்டு ஒழிந்தான்.
(2நாளாகமம் 16:5)
ithaip baashaa keattapoathu, raamaavaik
kattugi’rathai ni’ruththi, than vealaiyaivittu ozhinthaan. (2naa’laagamam 16:5)
அப்பொழுது
ராஜாவாகிய ஆசா யூதா அனைத்தையுங் கூட்டிக்கொண்டுபோய், பாஷா கட்டின ராமாவின்
கற்களையும் அதின் மரங்களையும்
எடுத்துவந்து, அவைகளால் கேபாவையும்
மிஸ்பாவையும் கட்டினான். (2நாளாகமம்
16:6)
appozhuthu raajaavaagiya aasaa yoothaa
anaiththaiyung koottikko'ndupoay,
baashaa
kattina
raamaavin ka’rka'laiyum athin marangga'laiyum eduththuvanthu, avaiga'laal keabaavaiyum mispaavaiyum
kattinaan. (2naa’laagamam 16:6)
அக்காலத்திலே
ஞானதிருஷ்டிக்காரனாகிய அனானி யூதாவின்
ராஜாவாகிய ஆசாவினிடத்தில் வந்து,
அவனை நோக்கி: நீர் உம்முடைய தேவனாகிய
கர்த்தரைச் சார்ந்துகொள்ளாமல், சீரியாவின்
ராஜாவைச் சார்ந்துகொண்டபடியினால், சீரியா
ராஜாவின் இராணுவம் உமது கைக்குத் தப்பிப்போயிற்று. (2நாளாகமம்
16:7)
akkaalaththilea gnaanathirushdikkaaranaagiya anaani yoothaavin
raajaavaagiya aasaavinidaththil vanthu,
avanai noakki: neer ummudaiya theavanaagiya karththaraich saarnthuko'l'laamal, seeriyaavin raajaavaich saarnthuko'ndapadiyinaal, seeriyaa raajaavin
iraa'nuvam umathu kaikkuth
thappippoayit’ru. (2naa’laagamam 16:7)
மிகவும்
ஏராளமான இரதங்களும் குதிரைவீரருமுள்ள எத்தியோப்பியரும் லூபியரும்
மகா சேனையாயிருந்தார்கள் அல்லவா?
நீர் கர்த்தரைச் சார்ந்துகொண்டபோதோவெனில், அவர்களை
உமது கையில் ஒப்புக்கொடுத்தாரே. (2நாளாகமம்
16:8)
migavum earaa'lamaana irathangga'lum kuthiraiveerarumu'l'la eththiyoappiyarum loobiyarum mahaa seanaiyaayirunthaarga'l allavaa? neer karththaraich saarnthuko'ndapoathoavenil, avarga'lai umathu
kaiyil oppukkoduththaarea. (2naa’laagamam 16:8)
தம்மைப்பற்றி
உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய
வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய
கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர்; ஆகையால்
இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள்
நேரிடும் என்றான். (2நாளாகமம்
16:9)
thammaippat’ri uththama iruthayaththoadirukki’ravarga'lukkuth thammudaiya vallamaiyai
vi'langgappa'n'numpadi, karththarudaiya ka'nga'l boomiyenggum ulaavikko'ndirukki’rathu; intha vishayaththil
mathiyillaathavaraayiruntheer; aagaiyaal ithumutha’rko'ndu umakku yuththangga'l nearidum
en’raan.
(2naa’laagamam 16:9)
அதினிமித்தம்
ஆசா ஞானதிருஷ்டிக்காரன்மேல் சினந்து
கடுங்கோபங்கொண்டு அவனைக் காவலறையிலே
வைத்தான்; இதல்லாமலும் அக்காலத்தில்
ஜனங்களுக்குள் சிலரைக் கொடூரமாய்
நடப்பித்தான். (2நாளாகமம் 16:10)
athinimiththam aasaa gnaanathirushdikkaaranmeal sinanthu kadungkoabangko'ndu avanaik
kaavala’raiyilea vaiththaan;
ithallaamalum akkaalaththil janangga'lukku'l silaraik kodooramaay
nadappiththaan. (2naa’laagamam 16:10)
ஆசாவின்
ஆதியோடந்தமான நடபடிகளெல்லாம் யூதாவையும்
இஸ்ரவேலையும் சேர்ந்த ராஜாக்களின்
புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது. (2நாளாகமம்
16:11)
aasaavin aathiyoadanthamaana nadapadiga'lellaam yoothaavaiyum
isravealaiyum
searntha raajaakka'lin pusthagaththil ezhuthiyirukki’rathu. (2naa’laagamam 16:11)
ஆசா அரசாண்ட முப்பத்தொன்பதாம் வருஷத்திலே
தன் கால்களில் வியாதிகண்டு,
அவன் நோவு மிகவும்
உக்கிரமாயிருந்தது; அவன் தன் வியாதியிலும் கர்த்தரை
அல்ல, பரிகாரிகளையே தேடினான்.
(2நாளாகமம் 16:12)
aasaa arasaa'nda muppaththonbathaam varushaththilea than kaalga'lil viyaathika'ndu, avan noavu migavum ukkiramaayirunthathu; avan than viyaathiyilum
karththarai alla, parigaariga'laiyea theadinaan. (2naa’laagamam 16:12)
ஆசா தான் அரசாண்ட
நாற்பத்தோராம் வருஷத்தில் மரித்து,
தன் பிதாக்களோடே நித்திரையடைந்தான். (2நாளாகமம்
16:13)
aasaa thaan arasaa'nda naa’rpaththoaraam varushaththil
mariththu, than pithaakka'loadea niththiraiyadainthaan. (2naa’laagamam 16:13)
தைலக்காரரால்
செய்யப்பட்ட கந்தவர்க்கங்களினாலும் பரிமளங்களினாலும் நிறைந்த
ஒரு மெத்தையின்மேல் அவனை வளர்த்தி, அவனுக்காக
வெகு திரளான கந்தவர்க்கங்களைக் கொளுத்தின
பின்பு, அவன் தாவீதின்
நகரத்தில் தனக்கு வெட்டிவைத்திருந்த அவனுடைய
கல்லறையிலே, அவனை அடக்கம்பண்ணினார்கள். (2நாளாகமம்
16:14)
thailakkaararaal seyyappatta kanthavarkkangga'linaalum parima'langga'linaalum ni’raintha oru meththaiyinmeal avanai
va'larththi, avanukkaaga vegu thira'laana kanthavarkkangga'laik ko'luththina
pinbu,
avan thaaveethin nagaraththil thanakku
vettivaiththiruntha avanudaiya
kalla’raiyilea, avanai
adakkampa'n'ninaarga'l. (2naa’laagamam 16:14)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!