Tuesday, August 16, 2016

Niyaayaathibathiga'l 9 | நியாயாதிபதிகள் 9 | Judges 9

யெருபாகாலின்  குமாரன்  அபிமெலேக்கு  சீகேமிலிருக்கிற  தன்  தாயின்  சகோதரரிடத்திற்குப்  போய்,  அவர்களையும்  தன்  தாயின்  தகப்பனுடைய  வம்சமான  அனைவரையும்  நோக்கி:  (நியாயாதிபதிகள்  9:1)

yerubaagaalin  kumaaran  abimeleakku  seekeamilirukki’ra  than  thaayin  sagoathararidaththi’rkup  poay,  avarga'laiyum  than  thaayin  thagappanudaiya  vamsamaana  anaivaraiyum  noakki:  (niyaayaathibathiga’l  9:1)

யெருபாகாலின்  குமாரர்  எழுபதுபேராகிய  எல்லாரும்  உங்களை  ஆளுவது  உங்களுக்கு  நல்லதோ,  ஒருவன்மாத்திரம்  உங்களை  ஆளுவது  உங்களுக்கு  நல்லதோ  என்று  நீங்கள்  சீகேமிலிருக்கிற  சகல  பெரிய  மனுஷரின்  காதுகளும்  கேட்கப்  பேசுங்கள்;  நான்  உங்கள்  எலும்பும்  உங்கள்  மாம்சமுமானவன்  என்று  நினைத்துக்கொள்ளுங்கள்  என்றான்.  (நியாயாதிபதிகள்  9:2)

yerubaagaalin  kumaarar  ezhubathupearaagiya  ellaarum  ungga'lai  aa'luvathu  ungga'lukku  nallathoa,  oruvanmaaththiram  ungga'lai  aa'luvathu  ungga'lukku  nallathoa  en’ru  neengga'l  seekeamilirukki’ra  sagala  periya  manusharin  kaathuga'lum  keadkap  peasungga'l;  naan  ungga'l  elumbum  ungga'l  maamsamumaanavan  en’ru  ninaiththukko'l'lungga'l  en’raan.  (niyaayaathibathiga’l  9:2)

அப்படியே  அவன்  தாயின்  சகோதரர்  சீகேமிலிருக்கிற  சகல  பெரிய  மனுஷரின்  காதுகளும்  கேட்க  இந்த  வார்த்தைகளையெல்லாம்  அவனுக்காகப்  பேசினார்கள்;  அப்பொழுது:  அவன்  நம்முடைய  சகோதரன்  என்று  அவர்கள்  சொன்னதினால்,  அவர்கள்  இருதயம்  அபிமெலேக்கைப்  பின்பற்றச்  சாய்ந்தது.  (நியாயாதிபதிகள்  9:3)

appadiyea  avan  thaayin  sagoatharar  seekeamilirukki’ra  sagala  periya  manusharin  kaathuga'lum  keadka  intha  vaarththaiga'laiyellaam  avanukkaagap  peasinaarga'l;  appozhuthu:  avan  nammudaiya  sagoatharan  en’ru  avarga'l  sonnathinaal,  avarga'l  iruthayam  abimeleakkaip  pinpat’rach  saaynthathu.  (niyaayaathibathiga’l  9:3)

அவர்கள்  பாகால்  பேரீத்தின்  கோவிலிலிருந்து  எழுபது  வெள்ளிக்காசை  எடுத்து  அவனுக்குக்  கொடுத்தார்கள்;  அவைகளால்  அபிமெலேக்கு  வீணரும்  போக்கிரிகளுமான  மனுஷரைச்  சேவகத்தில்  வைத்தான்;  அவர்கள்  அவனைப்  பின்பற்றினார்கள்.  (நியாயாதிபதிகள்  9:4)

avarga'l  baagaal  beareeththin  koavililirunthu  ezhubathu  ve'l'likkaasai  eduththu  avanukkuk  koduththaarga'l;  avaiga'laal  abimeleakku  vee'narum  poakkiriga'lumaana  manusharaich  seavagaththil  vaiththaan;  avarga'l  avanaip  pinpat’rinaarga'l.  (niyaayaathibathiga’l  9:4)

அவன்  ஒப்ராவிலிருக்கிற  தன்  தகப்பன்  வீட்டிற்குப்போய்,  யெருபாகாலின்  குமாரராகிய  தன்  சகோதரர்  எழுபது  பேரையும்  ஒரே  கல்லின்மேல்  கொலைசெய்தான்;  ஆனாலும்  யெருபாகாலின்  இளைய  குமாரனாகிய  யோதாம்  ஒளித்திருந்தபடியினால்  அவன்  தப்பினான்.  (நியாயாதிபதிகள்  9:5)

avan  opraavilirukki’ra  than  thagappan  veetti’rkuppoay,  yerubaagaalin  kumaararaagiya  than  sagoatharar  ezhubathu  pearaiyum  orea  kallinmeal  kolaiseythaan;  aanaalum  yerubaagaalin  i'laiya  kumaaranaagiya  yoathaam  o'liththirunthapadiyinaal  avan  thappinaan.  (niyaayaathibathiga’l  9:5)

பின்பு  சீகேமிலிருக்கிற  சகல  பெரிய  மனுஷரும்,  மில்லோவின்  குடும்பத்தாரனைவரும்  கூடிக்கொண்டுபோய்,  சீகேமிலிருக்கிற  உயர்ந்த  கர்வாலிமரத்தண்டையிலே  அபிமெலேக்கை  ராஜாவாக்கினார்கள்.  (நியாயாதிபதிகள்  9:6)

pinbu  seekeamilirukki’ra  sagala  periya  manusharum,  milloavin  kudumbaththaaranaivarum  koodikko'ndupoay,  seekeamilirukki’ra  uyarntha  karvaalimaraththa'ndaiyilea  abimeleakkai  raajaavaakkinaarga'l.  (niyaayaathibathiga’l  9:6)

இது  யோதாமுக்கு  அறிவிக்கப்பட்டபோது,  அவன்  போய்,  கெரிசீம்  மலையின்  உச்சியில்  ஏறிநின்று,  உரத்தசத்தமிட்டுக்  கூப்பிட்டு,  அவர்களை  நோக்கி:  சீகேமின்  பெரிய  மனுஷரே,  தேவன்  உங்களுக்குச்  செவிகொடுக்கும்படி  நீங்கள்  எனக்குச்  செவிகொடுங்கள்.  (நியாயாதிபதிகள்  9:7)

ithu  yoathaamukku  a’rivikkappattapoathu,  avan  poay,  keriseem  malaiyin  uchchiyil  ea’rinin’ru,  uraththasaththamittuk  kooppittu,  avarga'lai  noakki:  seekeamin  periya  manusharea,  theavan  ungga'lukkuch  sevikodukkumpadi  neengga'l  enakkuch  sevikodungga'l.  (niyaayaathibathiga’l  9:7)

விருட்சங்கள்  தங்களுக்கு  ஒரு  ராஜாவை  அபிஷேகம்பண்ணும்படி  போய்,  ஒலிவமரத்தைப்  பார்த்து:  நீ  எங்களுக்கு  ராஜாவாயிரு  என்றது.  (நியாயாதிபதிகள்  9:8)

virudchangga'l  thangga'lukku  oru  raajaavai  abisheagampa'n'numpadi  poay,  olivamaraththaip  paarththu:  nee  engga'lukku  raajaavaayiru  en’rathu.  (niyaayaathibathiga’l  9:8)

அதற்கு  ஒலிவமரம்:  தேவர்களும்  மனுஷரும்  புகழுகிற  என்னிலுள்ள  என்  கொழுமையை  நான்  விட்டு,  மரங்களை  அரசாளப்போவேனோ  என்றது.  (நியாயாதிபதிகள்  9:9)

atha’rku  olivamaram:  theavarga'lum  manusharum  pugazhugi’ra  ennilu'l'la  en  kozhumaiyai  naan  vittu,  marangga'lai  arasaa'lappoaveanoa  en’rathu.  (niyaayaathibathiga’l  9:9)

அப்பொழுது  மரங்கள்  அத்திமரத்தைப்  பார்த்து:  நீ  வந்து,  எங்களுக்கு  ராஜாவாயிரு  என்றது.  (நியாயாதிபதிகள்  9:10)

appozhuthu  marangga'l  aththimaraththaip  paarththu:  nee  vanthu,  engga'lukku  raajaavaayiru  en’rathu.  (niyaayaathibathiga’l  9:10)

அதற்கு  அத்திமரம்:  நான்  என்  மதுரத்தையும்  என்  நற்கனியையும்  விட்டு,  மரங்களை  அரசாளப்போவேனோ  என்றது.  (நியாயாதிபதிகள்  9:11)

atha’rku  aththimaram:  naan  en  mathuraththaiyum  en  na’rkaniyaiyum  vittu,  marangga'lai  arasaa'lappoaveanoa  en’rathu.  (niyaayaathibathiga’l  9:11)

அப்பொழுது  மரங்கள்  திராட்சசெடியைப்  பார்த்து:  நீ  வந்து,  எங்களுக்கு  ராஜாவாயிரு  என்றது.  (நியாயாதிபதிகள்  9:12)

appozhuthu  marangga'l  thiraadchasediyaip  paarththu:  nee  vanthu,  engga'lukku  raajaavaayiru  en’rathu.  (niyaayaathibathiga’l  9:12)

அதற்குத்  திராட்சச்செடி:  தேவர்களையும்  மனுஷரையும்  மகிழப்பண்ணும்  என்  ரசத்தை  நான்  விட்டு  மரங்களை  அரசாளப்போவேனோ  என்றது.  (நியாயாதிபதிகள்  9:13)

atha’rkuth  thiraadchachsedi:  theavarga'laiyum  manusharaiyum  magizhappa'n'num  en  rasaththai  naan  vittu  marangga'lai  arasaa'lappoaveanoa  en’rathu.  (niyaayaathibathiga’l  9:13)

அப்பொழுது  மரங்களெல்லாம்  முட்செடியைப்  பார்த்து:  நீ  வந்து,  எங்களுக்கு  ராஜாவாயிரு  என்றது.  (நியாயாதிபதிகள்  9:14)

appozhuthu  marangga'lellaam  mudchediyaip  paarththu:  nee  vanthu,  engga'lukku  raajaavaayiru  en’rathu.  (niyaayaathibathiga’l  9:14)

அதற்கு  முட்செடியானது  மரங்களைப்  பார்த்து:  நீங்கள்  என்னை  உங்களுக்கு  ராஜாவாக  அபிஷேகம்பண்ணுகிறது  மெய்யானால்,  என்  நிழலிலே  வந்தடையுங்கள்;  இல்லாவிட்டால்  முட்செடியிலிருந்து  அக்கினி  புறப்பட்டு  லீபனோனின்  கேதுருமரங்களைப்  பட்சிக்கக்கடவது  என்றது.  (நியாயாதிபதிகள்  9:15)

atha’rku  mudchediyaanathu  marangga'laip  paarththu:  neengga'l  ennai  ungga'lukku  raajaavaaga  abisheagampa'n'nugi’rathu  meyyaanaal,  en  nizhalilea  vanthadaiyungga'l;  illaavittaal  mudchediyilirunthu  akkini  pu’rappattu  leebanoanin  keathurumarangga'laip  padchikkakkadavathu  en’rathu.  (niyaayaathibathiga’l  9:15)

என்  தகப்பன்  உங்களுக்காக  யுத்தம்பண்ணி,  தன்  ஜீவனை  எண்ணாமற்போய்,  உங்களை  மீதியானியரின்  கையினின்று  இரட்சித்தார்.  (நியாயாதிபதிகள்  9:16)

en  thagappan  ungga'lukkaaga  yuththampa'n'ni,  than  jeevanai  e'n'naama’rpoay,  ungga'lai  meethiyaaniyarin  kaiyinin’ru  iradchiththaar.  (niyaayaathibathiga’l  9:16)

நீங்களோ  இன்று  என்  தகப்பனுடைய  குடும்பத்துக்கு  விரோதமாய்  எழும்பி,  அவருடைய  குமாரரான  எழுபதுபேரையும்  ஒரே  கல்லின்மேல்  கொலைசெய்து,  அவருடைய  வேலைக்காரியின்  மகனாகிய  அபிமெலேக்கு  உங்கள்  சகோதரனானபடியினால்,  அவனைச்  சீகேம்  பட்டணத்தாருக்கு  ராஜாவாக்கினீர்கள்.  (நியாயாதிபதிகள்  9:17)

neengga'loa  in’ru  en  thagappanudaiya  kudumbaththukku  viroathamaay  ezhumbi,  avarudaiya  kumaararaana  ezhubathupearaiyum  orea  kallinmeal  kolaiseythu,  avarudaiya  vealaikkaariyin  maganaagiya  abimeleakku  ungga'l  sagoatharanaanapadiyinaal,  avanaich  seekeam  patta'naththaarukku  raajaavaakkineerga'l.  (niyaayaathibathiga’l  9:17)

இப்போதும்  நீங்கள்  அவனை  ராஜாவாக்கின  செய்கை  உண்மையும்  உத்தமமுமான  செய்கையாயிருக்குமானால்,  (நியாயாதிபதிகள்  9:18)

ippoathum  neengga'l  avanai  raajaavaakkina  seygai  u'nmaiyum  uththamamumaana  seygaiyaayirukkumaanaal,  (niyaayaathibathiga’l  9:18)

நீங்கள்  யெருபாகாலையும்  அவர்  குடும்பத்தாரையும்  நன்மையாக  நடத்தி,  அவர்  கைகளின்  செய்கைக்குத்தக்கதை  அவருக்குச்  செய்து,  இப்படி  இந்நாளில்  அவரையும்  அவர்  குடும்பத்தாரையும்  நடத்தினது  உண்மையும்  உத்தமுமாயிருக்குமானால்,  அபிமெலேக்கின்மேல்  நீங்களும்  சந்தோஷமாயிருங்கள்;  உங்கள்மேல்  அவனும்  சந்தோஷமாயிருக்கட்டும்.  (நியாயாதிபதிகள்  9:19)

neengga'l  yerubaagaalaiyum  avar  kudumbaththaaraiyum  nanmaiyaaga  nadaththi,  avar  kaiga'lin  seygaikkuththakkathai  avarukkuch  seythu,  ippadi  innaa'lil  avaraiyum  avar  kudumbaththaaraiyum  nadaththinathu  u'nmaiyum  uththamumaayirukkumaanaal,  abimeleakkinmeal  neengga'lum  santhoashamaayirungga'l;  ungga'lmeal  avanum  santhoashamaayirukkattum.  (niyaayaathibathiga’l  9:19)

இல்லாவிட்டால்  அபிமெலேக்கிலிருந்து  அக்கினி  புறப்பட்டு,  சீகேம்  பட்டணத்தாரையும்,  மில்லோவின்  குடும்பத்தாரையும்  பட்சிக்கவும்,  சீகேம்  பட்டணத்தாரிலும்  மில்லோவின்  குடும்பத்தாரிலுமிருந்து  அக்கினி  புறப்பட்டு,  அபிமெலேக்கைப்  பட்சிக்கவும்கடவது  என்று  யோதாம்  சொல்லி,  (நியாயாதிபதிகள்  9:20)

illaavittaal  abimeleakkilirunthu  akkini  pu’rappattu,  seekeam  patta'naththaaraiyum,  milloavin  kudumbaththaaraiyum  padchikkavum,  seekeam  patta'naththaarilum  milloavin  kudumbaththaarilumirunthu  akkini  pu’rappattu,  abimeleakkaip  padchikkavumkadavathu  en’ru  yoathaam  solli,  (niyaayaathibathiga’l  9:20)

தன்  சகோதரனாகிய  அபிமெலேக்குக்குப்  பயந்து,  தப்பியோடி,  பேயேருக்குப்  போய்,  அங்கே  குடியிருந்தான்.  (நியாயாதிபதிகள்  9:21)

than  sagoatharanaagiya  abimeleakkukkup  bayanthu,  thappiyoadi,  beayearukkup  poay,  anggea  kudiyirunthaan.  (niyaayaathibathiga’l  9:21)

அபிமெலேக்கு  இஸ்ரவேலை  மூன்று  வருஷம்  அரசாண்டபின்பு,  (நியாயாதிபதிகள்  9:22)

abimeleakku  isravealai  moon’ru  varusham  arasaa'ndapinbu,  (niyaayaathibathiga’l  9:22)

அபிமெலேக்குக்கும்  சீகேமின்  பெரிய  மனுஷருக்கும்  நடுவே  பொல்லாப்பு  உண்டாக்கும்  ஆவியைத்  தேவன்  வரப்பண்ணினார்.  (நியாயாதிபதிகள்  9:23)

abimeleakkukkum  seekeamin  periya  manusharukkum  naduvea  pollaappu  u'ndaakkum  aaviyaith  theavan  varappa'n'ninaar.  (niyaayaathibathiga’l  9:23)

யெருபாகாலின்  எழுபது  குமாரருக்குச்  செய்யப்பட்ட  கொடுமை  வந்து  பலித்து,  அவர்களுடைய  இரத்தப்பழி  அவர்களைக்  கொன்ற  அவர்களுடைய  சகோதரனாகிய  அபிமெலேக்கின்மேலும்,  தன்  சகோதரரைக்  கொல்ல  அவன்  கைகளைத்  திடப்படுத்தின  சீகேம்  மனுஷர்  மேலும்  சுமரும்படியாகச்  சீகேமின்  பெரிய  மனுஷர்  அபிமெலேக்குக்கு  இரண்டகம்பண்ணினார்கள்.  (நியாயாதிபதிகள்  9:24)

yerubaagaalin  ezhubathu  kumaararukkuch  seyyappatta  kodumai  vanthu  paliththu,  avarga'ludaiya  iraththappazhi  avarga'laik  kon’ra  avarga'ludaiya  sagoatharanaagiya  abimeleakkinmealum,  than  sagoathararaik  kolla  avan  kaiga'laith  thidappaduththina  seekeam  manushar  mealum  sumarumpadiyaagach  seekeamin  periya  manushar  abimeleakkukku  ira'ndagampa'n'ninaarga'l.  (niyaayaathibathiga’l  9:24)

சீகேமின்  மனுஷர்  மலைகளின்  உச்சியில்  அவனுக்குப்  பதிவிருக்கிறவர்களை  வைத்தார்கள்;  அவர்கள்  தங்கள்  அருகே  வழிநடந்துபோகிற  யாவரையும்  கொள்ளையிட்டார்கள்;  அது  அபிமெலேக்குக்கு  அறிவிக்கப்பட்டது.  (நியாயாதிபதிகள்  9:25)

seekeamin  manushar  malaiga'lin  uchchiyil  avanukkup  pathivirukki’ravarga'lai  vaiththaarga'l;  avarga'l  thangga'l  arugea  vazhinadanthupoagi’ra  yaavaraiyum  ko'l'laiyittaarga'l;  athu  abimeleakkukku  a’rivikkappattathu.  (niyaayaathibathiga’l  9:25)

ஏபேதின்  குமாரனாகிய  காகால்  தன்  சகோதரரோடே  சீகேமுக்குள்  போனான்;  சீகேமின்  பெரிய  மனுஷர்  அவனை  நம்பி,  (நியாயாதிபதிகள்  9:26)

eabeathin  kumaaranaagiya  kaagaal  than  sagoathararoadea  seekeamukku'l  poanaan;  seekeamin  periya  manushar  avanai  nambi,  (niyaayaathibathiga’l  9:26)

வெளியே  புறப்பட்டு,  தங்கள்  திராட்சத்தோட்டங்களின்  பழங்களை  அறுத்து,  ஆலையாட்டி,  ஆடிப்பாடி,  தங்கள்  தேவனின்  வீட்டிற்குள்  போய்,  புசித்துக்  குடித்து,  அபிமெலேக்கை  சபித்தார்கள்.  (நியாயாதிபதிகள்  9:27)

ve'liyea  pu’rappattu,  thangga'l  thiraadchaththoattangga'lin  pazhangga'lai  a’ruththu,  aalaiyaatti,  aadippaadi,  thangga'l  theavanin  veetti’rku'l  poay,  pusiththuk  kudiththu,  abimeleakkai  sabiththaarga'l.  (niyaayaathibathiga’l  9:27)

அப்பொழுது  ஏபேதின்  குமாரனாகிய  காகால்:  அபிமெலேக்கு  யார்?  சீகேம்  யார்?  நாம்  அவனைச்  சேவிக்கவேண்டியதென்ன?  அவன்  யெருபாகாலின்  மகன்  அல்லவா?  சேபூல்  அவனுடைய  காரியக்காரன்  அல்லவா?  சீகேமின்  தகப்பனாகிய  ஏமோரின்  மனுஷரையே  சேவியுங்கள்;  அவனை  நாங்கள்  சேவிப்பானேன்?  (நியாயாதிபதிகள்  9:28)

appozhuthu  eabeathin  kumaaranaagiya  kaagaal:  abimeleakku  yaar?  seekeam  yaar?  naam  avanaich  seavikkavea'ndiyathenna?  avan  yerubaagaalin  magan  allavaa?  seabool  avanudaiya  kaariyakkaaran  allavaa?  seekeamin  thagappanaagiya  eamoarin  manusharaiyea  seaviyungga'l;  avanai  naangga'l  seavippaanean?  (niyaayaathibathiga’l  9:28)

இந்த  ஜனங்கள்மாத்திரம்  என்  கைக்குள்  இருக்கட்டும்;  நான்  அபிமெலேக்கைத்  துரத்திவிடுவேன்  என்றான்.  உன்  சேனையைப்  பெருகப்பண்ணிப்  புறப்பட்டுவா  என்று,  அவன்  அபிமெலேக்குக்குச்  சொல்லியனுப்பினான்.  (நியாயாதிபதிகள்  9:29)

intha  janangga'lmaaththiram  en  kaikku'l  irukkattum;  naan  abimeleakkaith  thuraththividuvean  en’raan.  un  seanaiyaip  perugappa'n'nip  pu’rappattuvaa  en’ru,  avan  abimeleakkukkuch  solliyanuppinaan.  (niyaayaathibathiga’l  9:29)

பட்டணத்தின்  அதிகாரியாகிய  சேபூல்  ஏபேதின்  குமாரனாகிய  காகாலின்  வார்த்தைகளைக்  கேட்டபோது,  கோபமூண்டு,  (நியாயாதிபதிகள்  9:30)

patta'naththin  athigaariyaagiya  seabool  eabeathin  kumaaranaagiya  kaagaalin  vaarththaiga'laik  keattapoathu,  koabamoo'ndu,  (niyaayaathibathiga’l  9:30)

இரகசியமாய்  அபிமெலேக்கினிடத்துக்கு  ஆட்களை  அனுப்பி:  இதோ,  ஏபேதின்  குமாரனாகிய  காகாலும்  அவனுடைய  சகோதரரும்  சீகேமுக்கு  வந்திருக்கிறார்கள்;  பட்டணத்தை  உமக்கு  விரோதமாக  எழுப்புகிறார்கள்.  (நியாயாதிபதிகள்  9:31)

iragasiyamaay  abimeleakkinidaththukku  aadka'lai  anuppi:  ithoa,  eabeathin  kumaaranaagiya  kaagaalum  avanudaiya  sagoathararum  seekeamukku  vanthirukki’raarga'l;  patta'naththai  umakku  viroathamaaga  ezhuppugi’raarga'l.  (niyaayaathibathiga’l  9:31)

ஆகையால்  நீர்  உம்மோடிருக்கும்  ஜனங்களோடேகூட  இரவில்  எழுந்துவந்து  வெளியிலே  பதிவிருந்து,  (நியாயாதிபதிகள்  9:32)

aagaiyaal  neer  ummoadirukkum  janangga'loadeakooda  iravil  ezhunthuvanthu  ve'liyilea  pathivirunthu,  (niyaayaathibathiga’l  9:32)

காலமே  சூரியன்  உதிக்கையில்  எழும்பி,  பட்டணத்தின்மேல்  விழுந்து,  அவனும்  அவனோடிருக்கிற  ஜனங்களும்  உமக்கு  எதிரே  புறப்படும்போது,  உம்முடைய  கைக்கு  நேரிடுகிறபடி  அவனுக்குச்  செய்யும்  என்று  சொல்லியனுப்பினான்.  (நியாயாதிபதிகள்  9:33)

kaalamea  sooriyan  uthikkaiyil  ezhumbi,  patta'naththinmeal  vizhunthu,  avanum  avanoadirukki’ra  janangga'lum  umakku  ethirea  pu’rappadumpoathu,  ummudaiya  kaikku  nearidugi’rapadi  avanukkuch  seyyum  en’ru  solliyanuppinaan.  (niyaayaathibathiga’l  9:33)

அப்படியே  அபிமெலேக்கும்,  அவனோடிருந்த  சகல  ஜனங்களும்,  இரவில்  எழுந்துபோய்,  சீகேமுக்கு  விரோதமாக  நாலு  படையாகப்  பதிவிருந்தார்கள்.  (நியாயாதிபதிகள்  9:34)

appadiyea  abimeleakkum,  avanoadiruntha  sagala  janangga'lum,  iravil  ezhunthupoay,  seekeamukku  viroathamaaga  naalu  padaiyaagap  pathivirunthaarga'l.  (niyaayaathibathiga’l  9:34)

ஏபேதின்  குமாரன்  காகால்  புறப்பட்டு,  பட்டணத்தின்  ஒலிமுகவாசலில்  நின்றான்;  அப்பொழுது  பதிவிருந்த  அபிமெலேக்கு  தன்னோடிருக்கிற  ஜனங்களோடேகூட  எழும்பிவந்தான்.  (நியாயாதிபதிகள்  9:35)

eabeathin  kumaaran  kaagaal  pu’rappattu,  patta'naththin  olimugavaasalil  nin’raan;  appozhuthu  pathiviruntha  abimeleakku  thannoadirukki’ra  janangga'loadeakooda  ezhumbivanthaan.  (niyaayaathibathiga’l  9:35)

காகால்  அந்த  ஜனங்களைக்  கண்டு:  இதோ,  மலைகளின்  உச்சிகளிலிருந்து  ஜனங்கள்  இறங்கிவருகிறார்கள்  என்று  சேபூலோடே  சொன்னான்.  அதற்குச்  சேபூல்:  நீ  மலைகளின்  நிழலைக்  கண்டு,  மனுஷர்  என்று  நினைக்கிறாய்  என்றான்.  (நியாயாதிபதிகள்  9:36)

kaagaal  antha  janangga'laik  ka'ndu:  ithoa,  malaiga'lin  uchchiga'lilirunthu  janangga'l  i’ranggivarugi’raarga'l  en’ru  seabooloadea  sonnaan.  atha’rkuch  seabool:  nee  malaiga'lin  nizhalaik  ka'ndu,  manushar  en’ru  ninaikki’raay  en’raan.  (niyaayaathibathiga’l  9:36)

காகாலோ  திரும்பவும்:  இதோ,  ஜனங்கள்  தேசத்தின்  மேட்டிலிருந்து  இறங்கிவந்து,  ஒரு  படை  மெயொனெனீமின்  கர்வாலிமரத்தின்  வழியாய்  வருகிறது  என்றான்.  (நியாயாதிபதிகள்  9:37)

kaagaaloa  thirumbavum:  ithoa,  janangga'l  theasaththin  meattilirunthu  i’ranggivanthu,  oru  padai  meyoneneemin  karvaalimaraththin  vazhiyaay  varugi’rathu  en’raan.  (niyaayaathibathiga’l  9:37)

அதற்குச்  சேபூல்:  அபிமெலேக்கை  நாம்  சேவிக்கிறதற்கு  அவன்  யார்  என்று  நீ  சொன்ன  உன்  வாய்  இப்பொழுது  எங்கே?  நீ  நிந்தித்த  ஜனங்கள்  அவர்கள்  அல்லவா?  இப்பொழுது  நீ  புறப்பட்டு,  அவர்களோடே  யுத்தம்பண்ணு  என்றான்.  (நியாயாதிபதிகள்  9:38)

atha’rkuch  seabool:  abimeleakkai  naam  seavikki’ratha’rku  avan  yaar  en’ru  nee  sonna  un  vaay  ippozhuthu  enggea?  nee  ninthiththa  janangga'l  avarga'l  allavaa?  ippozhuthu  nee  pu’rappattu,  avarga'loadea  yuththampa'n'nu  en’raan.  (niyaayaathibathiga’l  9:38)

அப்பொழுது  காகால்  சீகேமின்  மனுஷருக்கு  முன்பாகப்  புறப்பட்டுப்போய்,  அபிமெலேக்கோடே  யுத்தம்பண்ணினான்.  (நியாயாதிபதிகள்  9:39)

appozhuthu  kaagaal  seekeamin  manusharukku  munbaagap  pu’rappattuppoay,  abimeleakkoadea  yuththampa'n'ninaan.  (niyaayaathibathiga’l  9:39)

அபிமெலேக்கு  அவனைத்  துரத்த,  அவன்  அவனுக்கு  முன்பாக  ஓடினான்;  பட்டணவாசல்மட்டும்  அநேகர்  வெட்டுண்டு  விழுந்தார்கள்.  (நியாயாதிபதிகள்  9:40)

abimeleakku  avanaith  thuraththa,  avan  avanukku  munbaaga  oadinaan;  patta'navaasalmattum  aneagar  vettu'ndu  vizhunthaarga'l.  (niyaayaathibathiga’l  9:40)

அபிமெலேக்கு  அருமாவில்  இருந்துவிட்டான்;  சேபூல்  காகாலையும்  அவன்  சகோதரரையும்  சீகேமிலே  குடியிராதபடிக்குத்  துரத்திவிட்டான்.  (நியாயாதிபதிகள்  9:41)

abimeleakku  arumaavil  irunthuvittaan;  seabool  kaagaalaiyum  avan  sagoathararaiyum  seekeamilea  kudiyiraathapadikkuth  thuraththivittaan.  (niyaayaathibathiga’l  9:41)

மறுநாளிலே  ஜனங்கள்  வெளியிலே  வயலுக்குப்  போனார்கள்;  அது  அபிமெலேக்குக்கு  அறிவிக்கப்பட்டபோது,  (நியாயாதிபதிகள்  9:42)

ma’runaa'lilea  janangga'l  ve'liyilea  vayalukkup  poanaarga'l;  athu  abimeleakkukku  a’rivikkappattapoathu,  (niyaayaathibathiga’l  9:42)

அவன்  ஜனங்களைக்  கூட்டிக்கொண்டு,  அவர்களை  மூன்று  படையாக  வகுத்து,  வெளியிலே  பதிவிருந்து,  அந்த  ஜனங்கள்  பட்டணத்திலிருந்து  புறப்பட்டு  வருகிறதைக்  கண்டு,  அவர்கள்மேல்  எழும்பி,  அவர்களை  வெட்டினான்.  (நியாயாதிபதிகள்  9:43)

avan  janangga'laik  koottikko'ndu,  avarga'lai  moon’ru  padaiyaaga  vaguththu,  ve'liyilea  pathivirunthu,  antha  janangga'l  patta'naththilirunthu  pu’rappattu  varugi’rathaik  ka'ndu,  avarga'lmeal  ezhumbi,  avarga'lai  vettinaan.  (niyaayaathibathiga’l  9:43)

அபிமெலேக்கும்  அவனோடிருந்த  படையும்  பாய்ந்துவந்து,  பட்டணத்தின்  ஒலிமுகவாசலில்  நின்றார்கள்;  மற்ற  இரண்டு  படைகளோ  வெளியிலிருக்கிற  யாவர்மேலும்  விழுந்து,  அவர்களை  வெட்டினார்கள்.  (நியாயாதிபதிகள்  9:44)

abimeleakkum  avanoadiruntha  padaiyum  paaynthuvanthu,  patta'naththin  olimugavaasalil  nin’raarga'l;  mat’ra  ira'ndu  padaiga'loa  ve'liyilirukki’ra  yaavarmealum  vizhunthu,  avarga'lai  vettinaarga'l.  (niyaayaathibathiga’l  9:44)

அபிமெலேக்கு  அந்நாள்  முழுதும்  பட்டணத்தின்மேல்  யுத்தம்பண்ணி,  பட்டணத்தைப்  பிடித்து,  அதிலிருந்த  ஜனங்களைக்  கொன்று,  பட்டணத்தை  இடித்து  விட்டு,  அதில்  உப்பு  விதைத்தான்.  (நியாயாதிபதிகள்  9:45)

abimeleakku  annaa'l  muzhuthum  patta'naththinmeal  yuththampa'n'ni,  patta'naththaip  pidiththu,  athiliruntha  janangga'laik  kon’ru,  patta'naththai  idiththu  vittu,  athil  uppu  vithaiththaan.  (niyaayaathibathiga’l  9:45)

அதைச்  சீகேம்  துருக்கத்து  மனுஷர்  எல்லாரும்  கேள்விப்பட்டபோது,  அவர்கள்  பேரீத்  தேவனுடைய  கோவில்  அரணுக்குள்  பிரவேசித்தார்கள்.  (நியாயாதிபதிகள்  9:46)

athaich  seekeam  thurukkaththu  manushar  ellaarum  kea'lvippattapoathu,  avarga'l  beareeth  theavanudaiya  koavil  ara'nukku'l  piraveasiththaarga'l.  (niyaayaathibathiga’l  9:46)

சீகேம்  துருக்கத்து  மனுஷர்  எல்லாரும்  அங்கே  கூடியிருக்கிறது  அபிமெலேக்குக்கு  அறிவிக்கப்பட்டபோது,  (நியாயாதிபதிகள்  9:47)

seekeam  thurukkaththu  manushar  ellaarum  anggea  koodiyirukki’rathu  abimeleakkukku  a’rivikkappattapoathu,  (niyaayaathibathiga’l  9:47)

அபிமெலேக்கு  தன்னோடிருந்த  எல்லா  ஜனங்களோடுங்கூடச்  சல்மோன்  மலையில்  ஏறி,  தன்  கையிலே  கோடரியைப்  பிடித்து,  ஒரு  மரத்தின்  கொம்பை  வெட்டி,  அதை  எடுத்து,  தன்  தோளின்மேல்  போட்டுக்கொண்டு,  தன்னோடிருந்த  ஜனங்களை  நோக்கி:  நான்  என்ன  செய்கிறேன்  என்று  பார்க்கிறீர்களே,  நீங்களும்  தீவிரமாய்  என்னைப்போலச்  செய்யுங்கள்  என்றான்.  (நியாயாதிபதிகள்  9:48)

abimeleakku  thannoadiruntha  ellaa  janangga'loadungkoodach  salmoan  malaiyil  ea’ri,  than  kaiyilea  koadariyaip  pidiththu,  oru  maraththin  kombai  vetti,  athai  eduththu,  than  thoa'linmeal  poattukko'ndu,  thannoadiruntha  janangga'lai  noakki:  naan  enna  seygi’rean  en’ru  paarkki’reerga'lea,  neengga'lum  theeviramaay  ennaippoalach  seyyungga'l  en’raan.  (niyaayaathibathiga’l  9:48)

அப்படியே  சகல  ஜனங்களும்  அவரவர்  ஒவ்வொரு  கொம்பை  வெட்டி,  அபிமெலேக்குக்குப்  பின்சென்று,  அவைகளை  அந்த  அரணுக்கு  அருகே  போட்டு,  அக்கினி  கொளுத்தி  அந்த  அரணைச்  சுட்டுப்போட்டார்கள்;  அதினால்  புருஷரும்  ஸ்திரீகளும்  ஏறக்குறைய  ஆயிரம்பேராகிய  சீகேம்  துருக்கத்து  மனுஷர்  எல்லாரும்  செத்தார்கள்.  (நியாயாதிபதிகள்  9:49)

appadiyea  sagala  janangga'lum  avaravar  ovvoru  kombai  vetti,  abimeleakkukkup  pinsen’ru,  avaiga'lai  antha  ara'nukku  arugea  poattu,  akkini  ko'luththi  antha  ara'naich  suttuppoattaarga'l;  athinaal  purusharum  sthireega'lum  ea’rakku’raiya  aayirampearaagiya  seekeam  thurukkaththu  manushar  ellaarum  seththaarga'l.  (niyaayaathibathiga’l  9:49)

பின்பு  அபிமெலேக்கு  தேபேசுக்குப்போய்,  அதற்கு  விரோதமாய்ப்  பாளயமிறங்கி,  அதைப்  பிடித்தான்.  (நியாயாதிபதிகள்  9:50)

pinbu  abimeleakku  theabeasukkuppoay,  atha’rku  viroathamaayp  paa'layami’ranggi,  athaip  pidiththaan.  (niyaayaathibathiga’l  9:50)

அந்தப்  பட்டணத்தின்  நடுவே  பலத்த  துருக்கம்  இருந்தது;  அங்கே  சகல  புருஷரும்  ஸ்திரீகளும்  பட்டணத்து  மனுஷர்  அனைவரும்  ஓடிப்  புகுந்து,  கதவைப்  பூட்டிக்கொண்டு,  துருக்கத்தின்மேல்  ஏறினார்கள்.  (நியாயாதிபதிகள்  9:51)

anthap  patta'naththin  naduvea  balaththa  thurukkam  irunthathu;  anggea  sagala  purusharum  sthireega'lum  patta'naththu  manushar  anaivarum  oadip  pugunthu,  kathavaip  poottikko'ndu,  thurukkaththinmeal  ea’rinaarga'l.  (niyaayaathibathiga’l  9:51)

அபிமெலேக்கு  அந்தத்  துருக்கம்மட்டும்  வந்து,  அதின்மேல்  யுத்தம்பண்ணி,  துருக்கத்தின்  கதவைச்  சுட்டெரித்துப்  போடும்படிக்கு,  அதின்  கிட்டச்  சேர்ந்தான்.  (நியாயாதிபதிகள்  9:52)

abimeleakku  anthath  thurukkammattum  vanthu,  athinmeal  yuththampa'n'ni,  thurukkaththin  kathavaich  sutteriththup  poadumpadikku,  athin  kittach  searnthaan.  (niyaayaathibathiga’l  9:52)

அப்பொழுது  ஒரு  ஸ்திரீ  ஒரு  ஏந்திரக்கல்லின்  துண்டை  அபிமெலேக்குடைய  தலையின்மேல்  போட்டாள்;  அது  அவன்  மண்டையை  உடைத்தது.  (நியாயாதிபதிகள்  9:53)

appozhuthu  oru  sthiree  oru  eanthirakkallin  thu'ndai  abimeleakkudaiya  thalaiyinmeal  poattaa'l;  athu  avan  ma'ndaiyai  udaiththathu.  (niyaayaathibathiga’l  9:53)

உடனே  அவன்  தன்  ஆயுததாரியாகிய  வேலைக்காரனைக்  கூப்பிட்டு:  ஒரு  ஸ்திரீ  என்னைக்  கொன்றாள்  என்று  என்னைக்குறித்துச்  சொல்லாதபடிக்கு,  நீ  உன்  பட்டயத்தை  உருவி,  என்னைக்  கொன்றுபோடு  என்று  அவனோடே  சொன்னான்;  அப்படியே  அவன்  வேலைக்காரன்  அவனை  உருவக்  குத்தினான்,  அவன்  செத்துப்போனான்.  (நியாயாதிபதிகள்  9:54)

udanea  avan  than  aayuthathaariyaagiya  vealaikkaaranaik  kooppittu:  oru  sthiree  ennaik  kon’raa'l  en’ru  ennaikku’riththuch  sollaathapadikku,  nee  un  pattayaththai  uruvi,  ennaik  kon’rupoadu  en’ru  avanoadea  sonnaan;  appadiyea  avan  vealaikkaaran  avanai  uruvak  kuththinaan,  avan  seththuppoanaan.  (niyaayaathibathiga’l  9:54)

அபிமெலேக்குச்  செத்துப்போனதை  இஸ்ரவேல்  மனுஷர்  கண்டபோது,  அவர்கள்  தங்கள்தங்கள்  இடங்களுக்குப்  போய்விட்டார்கள்.  (நியாயாதிபதிகள்  9:55)

abimeleakkuch  seththuppoanathai  israveal  manushar  ka'ndapoathu,  avarga'l  thangga'lthangga'l  idangga'lukkup  poayvittaarga'l.  (niyaayaathibathiga’l  9:55)

இப்படியே  அபிமெலேக்கு  தன்னுடைய  எழுபது  சகோதரரைக்  கொலைசெய்ததினால்,  தன்  தகப்பனுக்குச்  செய்த  பொல்லாப்பை  தேவன்  அவன்மேல்  திரும்பும்படி  செய்தார்.  (நியாயாதிபதிகள்  9:56)

ippadiyea  abimeleakku  thannudaiya  ezhubathu  sagoathararaik  kolaiseythathinaal,  than  thagappanukkuch  seytha  pollaappai  theavan  avanmeal  thirumbumpadi  seythaar.  (niyaayaathibathiga’l  9:56)

சீகேம்  மனுஷர்  செய்த  எல்லாப்  பொல்லாப்பையும்  தேவன்  அவர்கள்  தலையின்மேல்  திரும்பும்படி  செய்தார்;  யெருபாகாலின்  குமாரன்  யோதாமின்  சாபம்  அவர்களுக்குப்  பலித்தது.  (நியாயாதிபதிகள்  9:57)

seekeam  manushar  seytha  ellaap  pollaappaiyum  theavan  avarga'l  thalaiyinmeal  thirumbumpadi  seythaar;  yerubaagaalin  kumaaran  yoathaamin  saabam  avarga'lukkup  paliththathu.  (niyaayaathibathiga’l  9:57)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!