Tuesday, August 16, 2016

Niyaayaathibathiga'l 10 | நியாயாதிபதிகள் 10 | Judges 10

அபிமெலேக்குக்குப்பின்பு,  தோதோவின்  மகனாகிய  பூவாவின்  குமாரன்  தோலா  என்னும்  இசக்கார்  கோத்திரத்தான்  இஸ்ரவேலை  இரட்சிக்க  எழும்பினான்;  அவன்  எப்பிராயீம்  மலைத்தேசத்து  ஊராகிய  சாமீரிலே  குடியிருந்தான்.  (நியாயாதிபதிகள்  10:1)

abimeleakkukkuppinbu,  thoathoavin  maganaagiya  poovaavin  kumaaran  thoalaa  ennum  isakkaar  koaththiraththaan  isravealai  iradchikka  ezhumbinaan;  avan  eppiraayeem  malaiththeasaththu  ooraagiya  saameerilea  kudiyirunthaan.  (niyaayaathibathiga’l  10:1)

அவன்  இஸ்ரவேலை  இருபத்துமூன்று  வருஷம்  நியாயம்  விசாரித்து,  பின்பு  மரித்து,  சாமீரிலே  அடக்கம்பண்ணப்பட்டான்.  (நியாயாதிபதிகள்  10:2)

avan  isravealai  irubaththumoon’ru  varusham  niyaayam  visaariththu,  pinbu  mariththu,  saameerilea  adakkampa'n'nappattaan.  (niyaayaathibathiga’l  10:2)

அவனுக்குப்பின்பு,  கீலேயாத்தியனான  யாவீர்  எழும்பி,  இஸ்ரவேலை  இருபத்திரண்டு  வருஷம்  நியாயம்  விசாரித்தான்.  (நியாயாதிபதிகள்  10:3)

avanukkuppinbu,  keeleayaaththiyanaana  yaaveer  ezhumbi,  isravealai  irubaththira'ndu  varusham  niyaayam  visaariththaan.  (niyaayaathibathiga’l  10:3)

முப்பது  கழுதைக்குட்டிகளின்மேல்  ஏறும்  முப்பது  குமாரர்  அவனுக்கு  இருந்தார்கள்;  அவர்களுக்கு  முப்பது  ஊர்களும்  இருந்தது;  கீலேயாத்  தேசத்திலிருக்கிற  அவைகளுக்கு  இந்நாள்வரைக்கும்  யாவீரின்  கிராமங்களென்கிற  பேர்  இருக்கிறது.  (நியாயாதிபதிகள்  10:4)

muppathu  kazhuthaikkuttiga'linmeal  ea’rum  muppathu  kumaarar  avanukku  irunthaarga'l;  avarga'lukku  muppathu  oorga'lum  irunthathu;  keeleayaath  theasaththilirukki’ra  avaiga'lukku  innaa'lvaraikkum  yaaveerin  kiraamangga'lengi’ra  pear  irukki’rathu.  (niyaayaathibathiga’l  10:4)

யாவீர்  மரித்து,  காமோனிலே  அடக்கம்பண்ணப்பட்டான்.  (நியாயாதிபதிகள்  10:5)

yaaveer  mariththu,  kaamoanilea  adakkampa'n'nappattaan.  (niyaayaathibathiga’l  10:5)

இஸ்ரவேல்  புத்திரர்,  மறுபடியும்  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்புச்  செய்து,  கர்த்தரைச்  சேவியாமல்  அவரை  விட்டுப்  போய்,  பாகால்களையும்,  அஸ்தரோத்தையும்,  சீரியாவின்  தேவர்களையும்,  சீதோனின்  தேவர்களையும்,  மோவாபின்  தேவர்களையும்,  அம்மோன்  புத்திரரின்  தேவர்களையும்,  பெலிஸ்தரின்  தேவர்களையும்  சேவித்தார்கள்.  (நியாயாதிபதிகள்  10:6)

israveal  puththirar,  ma’rupadiyum  karththarin  paarvaikkup  pollaappuch  seythu,  karththaraich  seaviyaamal  avarai  vittup  poay,  baagaalga'laiyum,  astharoaththaiyum,  seeriyaavin  theavarga'laiyum,  seethoanin  theavarga'laiyum,  moavaabin  theavarga'laiyum,  ammoan  puththirarin  theavarga'laiyum,  pelistharin  theavarga'laiyum  seaviththaarga'l.  (niyaayaathibathiga’l  10:6)

அப்பொழுது  கர்த்தர்  இஸ்ரவேலின்மேல்  கோபமூண்டு,  அவர்களைப்  பெலிஸ்தர்  கையிலும்,  அம்மோன்  புத்திரர்  கையிலும்  விற்றுப்போட்டார்.  (நியாயாதிபதிகள்  10:7)

appozhuthu  karththar  isravealinmeal  koabamoo'ndu,  avarga'laip  pelisthar  kaiyilum,  ammoan  puththirar  kaiyilum  vit’ruppoattaar.  (niyaayaathibathiga’l  10:7)

அவர்கள்  அந்த  வருஷம்  முதற்கொண்டு  பதினெட்டு  வருஷமாய்  யோர்தானுக்கு  அப்பாலே  கீலேயாத்திலுள்ள  எமோரியரின்  தேசத்தில்  இருக்கிற  இஸ்ரவேல்  புத்திரரையெல்லாம்  நெருக்கி  ஒடுக்கினார்கள்.  (நியாயாதிபதிகள்  10:8)

avarga'l  antha  varusham  mutha’rko'ndu  pathinettu  varushamaay  yoarthaanukku  appaalea  keeleayaaththilu'l'la  emoariyarin  theasaththil  irukki’ra  israveal  puththiraraiyellaam  nerukki  odukkinaarga'l.  (niyaayaathibathiga’l  10:8)

அம்மோன்  புத்திரர்  யூதாவின்மேலும்,  பென்யமீன்மேலும்,  எப்பிராயீம்  குடும்பத்தார்மேலும்  யுத்தம்பண்ண  யோர்தானைக்  கடந்துவந்தார்கள்;  இஸ்ரவேலர்  மிகவும்  நெருக்கப்பட்டார்கள்.  (நியாயாதிபதிகள்  10:9)

ammoan  puththirar  yoothaavinmealum,  benyameenmealum,  eppiraayeem  kudumbaththaarmealum  yuththampa'n'na  yoarthaanaik  kadanthuvanthaarga'l;  isravealar  migavum  nerukkappattaarga'l.  (niyaayaathibathiga’l  10:9)

அப்பொழுது  இஸ்ரவேல்  புத்திரர்  கர்த்தரை  நோக்கி  முறையிட்டு:  உமக்கு  விரோதமாகப்  பாவஞ்செய்தோம்;  நாங்கள்  எங்கள்  தேவனைவிட்டு,  பாகால்களைச்  சேவித்தோம்  என்றார்கள்.  (நியாயாதிபதிகள்  10:10)

appozhuthu  israveal  puththirar  karththarai  noakki  mu’raiyittu:  umakku  viroathamaagap  paavagnseythoam;  naangga'l  engga'l  theavanaivittu,  baagaalga'laich  seaviththoam  en’raarga'l.  (niyaayaathibathiga’l  10:10)

கர்த்தர்  இஸ்ரவேல்  புத்திரரை  நோக்கி:  எகிப்தியரும்,  எமோரியரும்,  அம்மோன்  புத்திரரும்,  பெலிஸ்தியரும்,  (நியாயாதிபதிகள்  10:11)

karththar  israveal  puththirarai  noakki:  egipthiyarum,  emoariyarum,  ammoan  puththirarum,  pelisthiyarum,  (niyaayaathibathiga’l  10:11)

சீதோனியரும்,  அமலேக்கியரும்,  மாகோனியரும்,  உங்களை  ஒடுக்கும்  சமயங்களில்,  நீங்கள்  என்னை  நோக்கி  முறையிட்டபோது,  நான்  உங்களை  அவர்கள்  கைக்கு  நீங்கலாக்கி  இரட்சிக்கவில்லையா?  (நியாயாதிபதிகள்  10:12)

seethoaniyarum,  amaleakkiyarum,  maagoaniyarum,  ungga'lai  odukkum  samayangga'lil,  neengga'l  ennai  noakki  mu’raiyittapoathu,  naan  ungga'lai  avarga'l  kaikku  neenggalaakki  iradchikkavillaiyaa?  (niyaayaathibathiga’l  10:12)

அப்படியிருந்தும்  நீங்கள்  என்னைவிட்டு,  அந்நிய  தேவர்களைச்  சேவித்தீர்கள்;  ஆகையால்  இனி  உங்களை  இரட்சியேன்.  (நியாயாதிபதிகள்  10:13)

appadiyirunthum  neengga'l  ennaivittu,  anniya  theavarga'laich  seaviththeerga'l;  aagaiyaal  ini  ungga'lai  iradchiyean.  (niyaayaathibathiga’l  10:13)

நீங்கள்  போய்,  உங்களுக்காகத்  தெரிந்துகொண்ட  தேவர்களை  நோக்கி  முறையிடுங்கள்;  அவைகள்  உங்கள்  ஆபத்தின்  காலத்தில்  உங்களை  இரட்சிக்கட்டும்  என்றார்.  (நியாயாதிபதிகள்  10:14)

neengga'l  poay,  ungga'lukkaagath  therinthuko'nda  theavarga'lai  noakki  mu’raiyidungga'l;  avaiga'l  ungga'l  aabaththin  kaalaththil  ungga'lai  iradchikkattum  en’raar.  (niyaayaathibathiga’l  10:14)

இஸ்ரவேல்  புத்திரர்  கர்த்தரை  நோக்கி:  பாவஞ்செய்தோம்,  தேவரீர்  உம்முடைய  பார்வைக்கு  நலமானதை  எங்களுக்குச்  செய்யும்;  இன்றைக்குமாத்திரம்  எங்களை  இரட்சித்தருளும்  என்று  சொல்லி,  (நியாயாதிபதிகள்  10:15)

israveal  puththirar  karththarai  noakki:  paavagnseythoam,  theavareer  ummudaiya  paarvaikku  nalamaanathai  engga'lukkuch  seyyum;  in’raikkumaaththiram  engga'lai  iradchiththaru'lum  en’ru  solli,  (niyaayaathibathiga’l  10:15)

அந்நிய  தேவர்களைத்  தங்கள்  நடுவிலிருந்து  விலக்கிவிட்டு,  கர்த்தருக்கு  ஆராதனை  செய்தார்கள்;  அப்பொழுது  அவர்  இஸ்ரவேலின்  வருத்தத்தைப்  பார்த்து  மனதுருகினார்.  (நியாயாதிபதிகள்  10:16)

anniya  theavarga'laith  thangga'l  naduvilirunthu  vilakkivittu,  karththarukku  aaraathanai  seythaarga'l;  appozhuthu  avar  isravealin  varuththaththaip  paarththu  manathuruginaar.  (niyaayaathibathiga’l  10:16)

அம்மோன்  புத்திரர்  கூட்டங்கூடி,  கீலேயாத்திலே  பாளயமிறங்கினார்கள்;  இஸ்ரவேல்  புத்திரரும்  கூடிக்கொண்டு,  மிஸ்பாவிலே  பாளயமிறங்கினார்கள்.  (நியாயாதிபதிகள்  10:17)

ammoan  puththirar  koottangkoodi,  keeleayaaththilea  paa'layami’rangginaarga'l;  israveal  puththirarum  koodikko'ndu,  mispaavilea  paa'layami’rangginaarga'l.  (niyaayaathibathiga’l  10:17)

அப்பொழுது  கீலேயாத்தின்  ஜனங்களும்  பிரபுக்களும்  ஒருவரையொருவர்  நோக்கி:  அம்மோன்  புத்திரர்மேல்  முந்தி  யுத்தம்பண்ணப்போகிற  மனுஷன்  யார்?  அவனே  கீலேயாத்தின்  குடிகளுக்கெல்லாம்  தலைவனாயிருப்பான்  என்றார்கள்.  (நியாயாதிபதிகள்  10:18)

appozhuthu  keeleayaaththin  janangga'lum  pirabukka'lum  oruvaraiyoruvar  noakki:  ammoan  puththirarmeal  munthi  yuththampa'n'nappoagi’ra  manushan  yaar?  avanea  keeleayaaththin  kudiga'lukkellaam  thalaivanaayiruppaan  en’raarga'l.  (niyaayaathibathiga’l  10:18)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!