யோனத்தான்நிமித்தம் என்னால்
தயவுபெறத்தக்கவன் எவனாவது சவுலின்
வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா என்று தாவீது
கேட்டான். (2சாமுவேல் 9:1)
yoanaththaannimiththam ennaal
thayavupe’raththakkavan evanaavathu savulin
veettaaril innum meethiyaayirukki’ravan u'ndaa en’ru thaaveethu
keattaan.
(2saamuveal 9:1)
அப்பொழுது சவுலின்
வீட்டு வேலைக்காரனாகிய சீபா என்னும் பேருள்ளவனைத்
தாவீதினிடத்தில் அழைத்துவந்தார்கள்; ராஜா அவனைப் பார்த்து:
நீதானா சீபா என்று கேட்டான்; அவன் அடியேன்தான் என்றான்.
(2சாமுவேல் 9:2)
appozhuthu savulin
veettu
vealaikkaaranaagiya seebaa ennum pearu'l'lavanaith thaaveethinidaththil azhaiththuvanthaarga'l; raajaa
avanaip paarththu: neethaanaa seebaa
en’ru
keattaan;
avan adiyeanthaan en’raan. (2saamuveal
9:2)
அப்பொழுது ராஜா: தேவன்நிமித்தம் நான் சவுலின் குடும்பத்தாருக்குத் தயைசெய்யும்படி அவன் வீட்டாரில் யாதொருவன்
இன்னும் மீதியாய் இருக்கிறானா
என்று கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து:
இன்னும் யோனத்தானுக்கு இரண்டு
கால்களும் முடமான ஒரு குமாரன் இருக்கிறான்
என்றான். (2சாமுவேல் 9:3)
appozhuthu raajaa: theavannimiththam naan savulin
kudumbaththaarukkuth thayaiseyyumpadi avan veettaaril yaathoruvan innum meethiyaay irukki’raanaa en’ru keattatha’rku, seebaa
raajaavaip paarththu: innum yoanaththaanukku ira'ndu
kaalga'lum mudamaana
oru kumaaran irukki’raan en’raan. (2saamuveal
9:3)
அவன் எங்கே என்று ராஜா கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து:
இதோ, அவன் லோதேபாரிலே
அம்மியேலின் குமாரனாகிய மாகீரின்
வீட்டில் இருக்கிறான் என்றான்.
(2சாமுவேல் 9:4)
avan enggea en’ru raajaa keattatha’rku, seebaa
raajaavaip paarththu: ithoa,
avan loatheabaarilea ammiyealin kumaaranaagiya maakeerin veettil irukki’raan en’raan. (2saamuveal 9:4)
அப்பொழுது தாவீதுராஜா
அவனை லோதேபாரிலிருக்கிற அம்மியேலின்
குமாரனாகிய மாகீரின் வீட்டிலிருந்து அழைப்பித்தான். (2சாமுவேல்
9:5)
appozhuthu thaaveethuraajaa avanai
loatheabaarilirukki’ra ammiyealin kumaaranaagiya maakeerin veettilirunthu azhaippiththaan. (2saamuveal
9:5)
சவுலின் குமாரனாகிய
யோனத்தானின் மகன் மேவிபோசேத்
தாவீதினிடத்தில் வந்தபோது, முகங்குப்புற
விழுந்து வணங்கினான்; அப்பொழுது
தாவீது: மேவிபோசேத்தே என்றான்;
அவன்: இதோ, அடியேன்
என்றான். (2சாமுவேல் 9:6)
savulin kumaaranaagiya yoanaththaanin magan meaviboaseath thaaveethinidaththil vanthapoathu,
mugangkuppu’ra vizhunthu
va'nangginaan; appozhuthu
thaaveethu: meaviboaseaththea en’raan; avan: ithoa,
adiyean en’raan. (2saamuveal 9:6)
தாவீது அவனைப்
பார்த்து: நீ பயப்படாதே;
உன் தகப்பனாகிய யோனத்தான்நிமித்தம் நான் நிச்சயமாய் உனக்குத்
தயைசெய்து, உன் தகப்பனாகிய
சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத்
திரும்பக் கொடுப்பேன்; நீ என் பந்தியில்
நித்தம் அப்பம் புசிப்பாய்
என்றான். (2சாமுவேல் 9:7)
thaaveethu avanaip paarththu:
nee bayappadaathea; un thagappanaagiya yoanaththaannimiththam naan nichchayamaay unakkuth thayaiseythu, un thagappanaagiya savulin nilangga'laiyellaam unakkuth
thirumbak
koduppean; nee en panthiyil niththam
appam pusippaay en’raan. (2saamuveal
9:7)
அப்பொழுது அவன் வணங்கி: செத்த நாயைப்போலிருக்கிற என்னை நீர் நோக்கிப்பார்க்கிறதற்கு, உமது அடியான் எம்மாத்திரம்
என்றான். (2சாமுவேல் 9:8)
appozhuthu avan va'nanggi: seththa naayaippoalirukki’ra ennai neer noakkippaarkki’ratha’rku, umathu adiyaan
emmaaththiram en’raan. (2saamuveal 9:8)
ராஜா சவுலின்
வேலைக்காரனாகிய சீபாவை அழைப்பித்து,
அவனை நோக்கி: சவுலுக்கும்
அவர் வீட்டார் எல்லாருக்கும்
இருந்த யாவையும் உன் எஜமானுடைய குமாரனுக்குக்
கொடுத்தேன். (2சாமுவேல் 9:9)
raajaa savulin
vealaikkaaranaagiya seebaavai azhaippiththu, avanai
noakki: savulukkum avar veettaar ellaarukkum iruntha
yaavaiyum un ejamaanudaiya
kumaaranukkuk koduththean. (2saamuveal
9:9)
ஆகையால் நீ உன் குமாரரையும்
உன் வேலைக்காரரையும் கூட்டிக்கொண்டு, உன் எஜமானுடைய குமாரன்
புசிக்க அப்பம் உண்டாயிருக்கும்படி, அந்த நிலத்தைப் பயிரிட்டு,
அதின் பலனைச் சேர்ப்பாயாக;
உன் எஜமானுடைய குமாரன்
மேவிபோசேத் நித்தம் என் பந்தியிலே அப்பம்
புசிப்பான் என்றான்; சீபாவுக்குப்
பதினைந்து குமாரரும் இருபது
வேலைக்காரரும் இருந்தார்கள். (2சாமுவேல்
9:10)
aagaiyaal nee un kumaararaiyum
un vealaikkaararaiyum koottikko'ndu, un ejamaanudaiya kumaaran
pusikka
appam u'ndaayirukkumpadi, antha nilaththaip payirittu, athin palanaich searppaayaaga; un ejamaanudaiya kumaaran
meaviboaseath niththam
en panthiyilea appam pusippaan en’raan; seebaavukkup pathinainthu
kumaararum irubathu vealaikkaararum irunthaarga'l. (2saamuveal
9:10)
சீபா, ராஜாவை
நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் தமது அடியானுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் உமது அடியானாகிய நான் செய்வேன் என்றான்.
ராஜகுமாரரில் ஒருவனைப்போல, மேவிபோசேத்
என் பந்தியிலே அசனம் பண்ணுவான் என்று ராஜா சொன்னான்.
(2சாமுவேல் 9:11)
seebaa, raajaavai noakki:
raajaavaagiya en aa'ndavan thamathu
adiyaanukkuk katta'laiyittapadiyellaam umathu
adiyaanaagiya naan seyvean
en’raan.
raajakumaararil oruvanaippoala, meaviboaseath en panthiyilea asanam pa'n'nuvaan
en’ru
raajaa sonnaan. (2saamuveal
9:11)
மேவிபோசேத்திற்கு மீகா என்னும் பேருள்ள
சிறுவனாகிய ஒரு குமாரன்
இருந்தான், சீபாவின் வீட்டிலே
குடியிருந்த யாவரும் மேவிபோசேத்திற்கு வேலைக்காரராயிருந்தார்கள். (2சாமுவேல்
9:12)
meaviboaseaththi’rku meekaa ennum pearu'l'la
si’ruvanaagiya oru kumaaran
irunthaan, seebaavin veettilea kudiyiruntha
yaavarum meaviboaseaththi’rku vealaikkaararaayirunthaarga'l. (2saamuveal 9:12)
மேவிபோசேத் ராஜாவின்
பந்தியில் நித்தம் அசனம்பண்ணுகிறவனாயிருந்தபடியினால், எருசலேமிலே
குடியிருந்தான்; அவனுக்கு இரண்டு
காலும் முடமாயிருந்தது. (2சாமுவேல்
9:13)
meaviboaseath raajaavin
panthiyil niththam asanampa'n'nugi’ravanaayirunthapadiyinaal, erusaleamilea kudiyirunthaan; avanukku
ira'ndu kaalum mudamaayirunthathu. (2saamuveal
9:13)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!