அதன்பின்பு
அம்மோன் புத்திரரின் ராஜா மரித்துப்போனான்; அவன் குமாரனாகிய ஆனூன் அவன் பட்டத்திற்கு
ராஜாவானான். (2சாமுவேல் 10:1)
athanpinbu ammoan puththirarin
raajaa mariththuppoanaan; avan kumaaranaagiya aanoon avan pattaththi’rku raajaavaanaan. (2saamuveal
10:1)
அப்பொழுது
தாவீது: ஆனூனின் தகப்பனாகிய
நாகாஸ் எனக்குத் தயைசெய்ததுபோல, அவன் குமாரனாகிய இவனுக்கு
நான் தயைசெய்வேன் என்று சொல்லி, அவன் தகப்பனுக்காக அவனுக்கு
ஆறுதல் சொல்ல, தன் ஊழியக்காரரை அனுப்பினான்;
தாவீதின் ஊழியக்காரர் அம்மோன்
புத்திரரின் தேசத்திலே வந்தபோது,
(2சாமுவேல் 10:2)
appozhuthu thaaveethu:
aanoonin thagappanaagiya naagaas enakkuth
thayaiseythathupoala, avan kumaaranaagiya ivanukku naan thayaiseyvean en’ru solli,
avan thagappanukkaaga avanukku aa’ruthal solla, than oozhiyakkaararai anuppinaan;
thaaveethin oozhiyakkaarar ammoan
puththirarin theasaththilea vanthapoathu, (2saamuveal
10:2)
அம்மோன்
புத்திரரின் பிரபுக்கள் தங்கள்
ஆண்டவனாகிய ஆனூனைப் பார்த்து:
தாவீது ஆறுதல் சொல்லுகிறவர்களை உம்மிடத்தில்
அனுப்பினது, உம்முடைய தகப்பனைக்
கனம்பண்ணுகிறதாய் உமக்குத் தோன்றுகிறதோ?
இந்தப் பட்டணத்தை ஆராய்ந்து,
உளவுபார்த்து, அதைக் கவிழ்த்துப்போட அல்லவோ
தாவீது தன் ஊழியக்காரரை
உம்மிடத்திற்கு அனுப்பினான் என்றார்கள்.
(2சாமுவேல் 10:3)
ammoan puththirarin
pirabukka'l thangga'l aa'ndavanaagiya aanoonaip
paarththu: thaaveethu aa’ruthal sollugi’ravarga'lai ummidaththil
anuppinathu, ummudaiya thagappanaik kanampa'n'nugi’rathaay umakkuth
thoan’rugi’rathoa? inthap
patta'naththai aaraaynthu,
u'lavupaarththu, athaik kavizhththuppoada allavoa
thaaveethu than oozhiyakkaararai ummidaththi’rku anuppinaan
en’raarga'l. (2saamuveal
10:3)
அப்பொழுது
ஆனூன்: தாவீதின் ஊழியக்காரரைப்
பிடித்து, அவர்களுடைய ஒருபக்கத்துத்
தாடியைச் சிரைத்து, அவர்களுடைய
வஸ்திரங்களை இருப்பிடமட்டும் வைத்துவிட்டு,
மற்றப்பாதியைக் கத்தரித்துப்போட்டு, அவர்களை
அனுப்பிவிட்டான். (2சாமுவேல் 10:4)
appozhuthu aanoon:
thaaveethin oozhiyakkaararaip pidiththu,
avarga'ludaiya orupakkaththuth thaadiyaich siraiththu, avarga'ludaiya vasthirangga'lai iruppidamattum vaiththuvittu, mat’rappaathiyaik kaththariththuppoattu, avarga'lai anuppivittaan. (2saamuveal
10:4)
அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, ராஜா, அந்த மனுஷர்
மிகவும் வெட்கப் பட்டபடியினால், அவர்களுக்கு
எதிராக ஆட்களை அனுப்பி,
உங்கள் தாடி வளருமட்டும்
நீங்கள் எரிகோவிலிருந்து, பிற்பாடு
வாருங்கள் என்று சொல்லச்சொன்னான். (2சாமுவேல்
10:5)
athu thaaveethukku
a’rivikkappattapoathu, raajaa,
antha manushar migavum vedkap
pattapadiyinaal, avarga'lukku ethiraaga aadka'lai
anuppi, ungga'l thaadi va'larumattum neengga'l erigoavilirunthu, pi’rpaadu vaarungga'l en’ru sollachsonnaan. (2saamuveal 10:5)
அம்மோன்
புத்திரர் தாங்கள் தாவீதுக்கு
அருவருப்பானதைக் கண்டபோது, ஸ்தானாபதிகளை
அனுப்பி, பெத்ரேகோப் தேசத்துச்
சீரியரிலும், சோபாவிலிருக்கிற சீரியரிலும்
இருபதினாயிரம் காலாட்களையும், மாக்காதேசத்து
ராஜாவினிடத்தில் ஆயிரம்பேரையும், இஷ்தோபிலிருக்கிற பன்னீராயிரம்பேரையும், கூலிப்படையாக
அழைப்பித்தார்கள். (2சாமுவேல் 10:6)
ammoan puththirar
thaangga'l thaaveethukku
aruvaruppaanathaik ka'ndapoathu, sthaanaabathiga'lai anuppi, bethreakoab theasaththuch seeriyarilum, soabaavilirukki’ra
seeriyarilum irubathinaayiram kaalaadka'laiyum, maakkaatheasaththu raajaavinidaththil aayirampearaiyum, ishthoabilirukki’ra panneeraayirampearaiyum, koolippadaiyaaga azhaippiththaarga'l. (2saamuveal
10:6)
அதைத் தாவீது கேள்விப்பட்டபோது, யோவாபையும்
பராக்கிரமசாலிகளாகிய சமஸ்த இராணுவத்தையும் அனுப்பினான்.
(2சாமுவேல் 10:7)
athaith thaaveethu
kea'lvippattapoathu, yoavaabaiyum baraakkiramasaaliga'laagiya samastha iraa'nuvaththaiyum anuppinaan.
(2saamuveal 10:7)
அம்மோன்
புத்திரர் புறப்பட்டு, ஒலிமுகவாசலண்டையிலே போர்செய்ய
அணிவகுத்து நின்றார்கள்; ஆனாலும்
சோபாவிலும் ரேகோபிலுமிருந்துவந்த சீரியரும்,
இஷ்தோபிலும் மாக்காவிலுமிருந்து வந்த மனுஷரும், வெளியிலே
பிரத்தியேகமாயிருந்தார்கள். (2சாமுவேல் 10:8)
ammoan puththirar
pu’rappattu, olimugavaasala'ndaiyilea poarseyya a'nivaguththu nin’raarga'l; aanaalum soabaavilum reagoabilumirunthuvantha
seeriyarum, ishthoabilum maakkaavilumirunthu vantha
manusharum, ve'liyilea piraththiyeagamaayirunthaarga'l. (2saamuveal 10:8)
யோவாபோ
இராணுவங்களின் படைமுகம் தனக்கு
முன்னும் பின்னும் இருக்கிறதைக்
காண்கையில், அவன் இஸ்ரவேலிலே
தெரிந்துகொள்ளப்பட்ட எல்லா இராணுவங்களிலும் ஒரு பங்கைப் பிரித்தெடுத்து, அதைச் சீரியருக்கு எதிராக
அணிவகுத்து நிறுத்தி, (2சாமுவேல்
10:9)
yoavaaboa iraa'nuvangga'lin padaimugam thanakku munnum
pinnum irukki’rathaik kaa'ngaiyil, avan isravealilea
therinthuko'l'lappatta ellaa iraa'nuvangga'lilum oru panggaip piriththeduththu, athaich seeriyarukku ethiraaga a'nivaguththu ni’ruththi, (2saamuveal
10:9)
மற்ற ஜனத்தை அம்மோன்
புத்திரருக்கு எதிராக அணிவகுத்து
நிறுத்தும்படி தன் சகோதரனாகிய
அபிசாயினிடத்தில் ஒப்புவித்து: (2சாமுவேல்
10:10)
mat’ra janaththai ammoan
puththirarukku ethiraaga a'nivaguththu ni’ruththumpadi than
sagoatharanaagiya abisaayinidaththil
oppuviththu: (2saamuveal 10:10)
சீரியர்
கைமிஞ்சுகிறதாயிருந்தால் நீ எனக்கு
உதவிசெய்யவேண்டும்; அம்மோன் புத்திரர்
கை மிஞ்சுகிறதாயிருந்தால் நான் உனக்கு உதவிசெய்ய
வருவேன். (2சாமுவேல் 10:11)
seeriyar kaimignchugi’rathaayirunthaal nee enakku uthaviseyyavea'ndum; ammoan
puththirar kai mignchugi’rathaayirunthaal naan unakku uthaviseyya varuvean.
(2saamuveal 10:11)
தைரியமாயிரு;
நம்முடைய ஜனத்திற்காகவும், நம்முடைய
தேவனுடைய பட்டணங்களுக்காகவும் சவுரியத்தைக்
காட்டுவோம்; கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச்
செய்வாராக என்றான். (2சாமுவேல்
10:12)
thairiyamaayiru; nammudaiya
janaththi’rkaagavum, nammudaiya
theavanudaiya patta'nangga'lukkaagavum savuriyaththaik kaattuvoam; karththar
thamathu paarvaikku nalamaanathaich
seyvaaraaga en’raan. (2saamuveal 10:12)
யோவாபும்
அவனோடிருந்த ஜனமும் சீரியர்மேல்
யுத்தம்பண்ணக் கிட்டினார்கள்; அவர்கள்
அவனுக்கு முன்பாக முறிந்தோடினார்கள். (2சாமுவேல்
10:13)
yoavaabum avanoadiruntha janamum seeriyarmeal yuththampa'n'nak kittinaarga'l; avarga'l avanukku munbaaga mu’rinthoadinaarga'l. (2saamuveal 10:13)
சீரியர்
முறிந்தோடுகிறதை அம்மோன் புத்திரர்
கண்டபோது, அவர்களும் அபிசாயிக்கு
முன்பாக முறிந்தோடிப் பட்டணத்திற்குள் புகுந்தார்கள்; அப்பொழுது
யோவாப் அம்மோன் புத்திரரை
விட்டுத் திரும்பி எருசலேமுக்கு
வந்தான். (2சாமுவேல் 10:14)
seeriyar mu’rinthoadugi’rathai ammoan puththirar
ka'ndapoathu, avarga'lum abisaayikku munbaaga mu’rinthoadip patta'naththi’rku'l pugunthaarga'l; appozhuthu yoavaab ammoan
puththirarai vittuth thirumbi erusaleamukku vanthaan. (2saamuveal
10:14)
தாங்கள்
இஸ்ரவேலுக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டதைச் சீரியர்
கண்டபோது, ஒருமிக்கக் கூடினார்கள்.
(2சாமுவேல் 10:15)
thaangga'l isravealukku munbaaga mu’riya adikkappattathaich seeriyar ka'ndapoathu,
orumikkak koodinaarga'l. (2saamuveal 10:15)
ஆதாரேசர்
நதிக்கு அப்பாலிருந்த சீரியரையும்
அழைத்தனுப்பினான்; அவர்கள் ஏலாமுக்கு
வந்தார்கள்; ஆதாரேசருடைய படைத்தலைவனாகிய சோபாக்
அவர்களுக்கு முன்னாலே சென்றான்.
(2சாமுவேல் 10:16)
aathaareasar nathikku appaaliruntha seeriyaraiyum azhaiththanuppinaan; avarga'l ealaamukku
vanthaarga'l; aathaareasarudaiya padaiththalaivanaagiya
soabaak avarga'lukku munnaalea sen’raan. (2saamuveal
10:16)
அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் இஸ்ரவேலையெல்லாம் கூட்டிக்கொண்டு, யோர்தானைக்
கடந்து, ஏலாமுக்குப் போனான்;
சீரியர் தாவீதுக்கு எதிராக
இராணுவங்களை அணிவகுத்து நின்றார்கள்;
அவனோடு யுத்தம்பண்ணுகிறபோது, (2சாமுவேல்
10:17)
athu thaaveethukku
a’rivikkappattapoathu, avan isravealaiyellaam koottikko'ndu, yoarthaanaik
kadanthu, ealaamukkup poanaan; seeriyar thaaveethukku
ethiraaga
iraa'nuvangga'lai a'nivaguththu nin’raarga'l; avanoadu yuththampa'n'nugi’rapoathu, (2saamuveal
10:17)
சீரியர்
இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தாவீது
சீரியரில் எழுநூறு இரதவீரரையும்
நாற்பதினாயிரம் குதிரைவீரரையும் கொன்று,
அவர்களுடைய படைத்தலைவனாகிய சோபாகையும்
சாகும்படி வெட்டிப்போட்டான். (2சாமுவேல்
10:18)
seeriyar isravealukku
munbaaga
mu’rinthoadinaarga'l; thaaveethu seeriyaril ezhunoo’ru irathaveeraraiyum naa’rpathinaayiram kuthiraiveeraraiyum kon’ru, avarga'ludaiya padaiththalaivanaagiya
soabaakaiyum saagumpadi vettippoattaan. (2saamuveal 10:18)
அப்பொழுது
ஆதாரேசரைச் சேவிக்கிற சகல ராஜாக்களும் தாங்கள்
இஸ்ரவேலுக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டதைக் கண்டு,
இஸ்ரவேலரோடே சமாதானம்பண்ணி, அவர்களைச்
சேவித்தார்கள். அப்புறம் அம்மோன்
புத்திரருக்கு உதவிசெய்யச் சீரியர்
பயப்பட்டார்கள். (2சாமுவேல் 10:19)
appozhuthu aathaareasaraich seavikki’ra
sagala raajaakka'lum
thaangga'l isravealukku
munbaaga
mu’riya
adikkappattathaik ka'ndu,
isravealaroadea samaathaanampa'n'ni, avarga'laich seaviththaarga'l. appu’ram ammoan
puththirarukku uthaviseyyach seeriyar bayappattaarga'l. (2saamuveal
10:19)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!