எபேசு சபையின்
தூதனுக்கு நீ எழுதவேண்டியது
என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய
வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே
உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது; (வெளிப்படுத்தின விசேஷம்
2:1)
ebeasu sabaiyin thoothanukku
nee ezhuthavea'ndiyathu ennavenil:
eazhu nadchaththirangga'laith thammudaiya valathukaraththil eanthikko'ndu, eazhu pon kuththuvi'lakkuga'lin maththiyilea
ulaavikko'ndirukki’ravar sollugi’rathaavathu;
(ve’lippaduththina viseasham 2:1)
உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை
அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப்
பொய்யரென்று கண்டறிந்ததையும்; (வெளிப்படுத்தின விசேஷம்
2:2)
un kiriyaiga'laiyum, un pirayaasaththaiyum, un po’rumaiyaiyum, nee pollaathavarga'laich sagikkakkoodaamalirukki’rathaiyum, appoasthalarallaathavarga'l thangga'lai appoasthalaren’ru sollugi’rathai nee soathiththu avarga'laip poyyaren’ru ka'nda’rinthathaiyum; (ve’lippaduththina viseasham
2:2)
நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல்
பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன். (வெளிப்படுத்தின விசேஷம்
2:3)
nee sagiththukko'ndirukki’rathaiyum, po’rumaiyaayirukki’rathaiyum, en naamaththinimiththam i'laippadaiyaamal pirayaasappattathaiyum a’rinthirukki’rean. (ve’lippaduththina viseasham
2:3)
ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த
அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக்
குறை உண்டு. (வெளிப்படுத்தின விசேஷம்
2:4)
aanaalum, nee aathiyil ko'ndiruntha
anbai
vittaay
en’ru
unpearil enakkuk ku’rai u'ndu.
(ve’lippaduththina viseasham 2:4)
ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து,
மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக;
இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய்
உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன். (வெளிப்படுத்தின விசேஷம்
2:5)
aagaiyaal, nee inna nilaimaiyilirunthu vizhunthaayenbathai ninaiththu,
mananthirumbi, aathiyil seytha
kiriyaiga'laich
seyvaayaaga; illaavittaal naan seekkiramaay unnidaththil
vanthu, nee mananthirumbaathapadchaththil, un vi'lakkuththa'ndai athanidaththinin’ru neekkividuvean. (ve’lippaduththina viseasham
2:5)
நான் வெறுக்கிற
நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை
நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு. (வெளிப்படுத்தின விசேஷம்
2:6)
naan ve’rukki’ra nikkolaay mathastharin
kiriyaiga'lai neeyum
ve’rukki’raay, ithu unnidaththilu'ndu. (ve’lippaduththina viseasham
2:6)
ஆவியானவர் சபைகளுக்குச்
சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்;
ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய
பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப்
புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது. (வெளிப்படுத்தின விசேஷம்
2:7)
aaviyaanavar sabaiga'lukkuch sollugi’rathaik kaathu'l'lavan keadkakkadavan; jeyangko'l'lugi’ravanevanoa avanukkuth
theavanudaiya paratheesin maththiyilirukki’ra jeevavirudchaththin kaniyaip pusikkakkoduppean en’rezhuthu. (ve’lippaduththina viseasham
2:7)
சிமிர்னா சபையின்
தூதனுக்கு நீ எழுதவேண்டியது
என்னவெனில்: முந்தினவரும் பிந்தினவரும்,
மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது; (வெளிப்படுத்தின விசேஷம்
2:8)
simirnaa sabaiyin thoothanukku
nee ezhuthavea'ndiyathu ennavenil:
munthinavarum pinthinavarum, mariththirunthu pizhaiththavarumaanavar sollugi’rathaavathu;
(ve’lippaduththina viseasham 2:8)
உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற
தரித்திரத்தையும், தங்களை யூதரென்று
சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய
கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும்
அறிந்திருக்கிறேன். (வெளிப்படுத்தின விசேஷம்
2:9)
un kiriyaiga'laiyum, un ubaththiravaththaiyum,
nee aisuvariyamu'l'lavanaayirunthum unakkirukki’ra thariththiraththaiyum, thangga'lai yootharen’ru solliyum yootharaayiraamal saaththaanudaiya koottamaayirukki’ravarga'l seyyum thoosha'naththaiyum a’rinthirukki’rean. (ve’lippaduththina viseasham
2:9)
நீ படப்போகிற
பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே;
இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன்
உங்களில் சிலரைக் காவலில்
போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும்
நீ மரணபரியந்தம் உண்மையாயிரு,
அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத்
தருவேன். (வெளிப்படுத்தின விசேஷம்
2:10)
nee padappoagi’ra paaduga'laikku’riththu evva'lavum bayappadaathea; ithoa,
neengga'l soathikkappadumporuttaagap pisaasaanavan ungga'lil silaraik kaavalil
poaduvaan; paththunaa'l ubaththiravappaduveerga'l. aagilum nee mara'napariyantham u'nmaiyaayiru, appozhuthu
jeevakireedaththai unakkuth tharuvean.
(ve’lippaduththina viseasham 2:10)
ஆவியானவர் சபைகளுக்குச்
சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்;
ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால்
சேதப்படுவதில்லை என்றெழுது. (வெளிப்படுத்தின விசேஷம்
2:11)
aaviyaanavar sabaiga'lukkuch sollugi’rathaik kaathu'l'lavan keadkakkadavan; jeyangko'l'lugi’ravan ira'ndaam
mara'naththinaal seathappaduvathillai en’rezhuthu. (ve’lippaduththina viseasham
2:11)
பெர்கமு சபையின்
தூதனுக்கு நீ எழுதவேண்டியது
என்னவெனில்: இருபுறமும் கருக்குள்ள
பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது; (வெளிப்படுத்தின விசேஷம்
2:12)
pergamu sabaiyin thoothanukku
nee ezhuthavea'ndiyathu ennavenil:
irupu’ramum karukku'l'la
pattayaththai udaiyavar sollugi’rathaavathu; (ve’lippaduththina viseasham
2:12)
உன் கிரியைகளையும், சாத்தானுடைய
சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தைப்
பற்றிக்கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே
உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள
சாட்சியான அந்திப்பா என்பவன்
கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப்
பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன். (வெளிப்படுத்தின விசேஷம்
2:13)
un kiriyaiga'laiyum,
saaththaanudaiya
singgaasanamirukki’ra idaththil
nee kudiyirukki’rathaiyum, nee en naamaththaip pat’rikko'ndirukki’rathaiyum, saaththaan kudiko'ndirukki’ra idaththilea
ungga'lukku'l'lea enakku
u'nmaiyu'l'la saadchiyaana anthippaa
enbavan
kollappatta naadka'lilum
ennaip pat’rum visuvaasaththai nee ma’ruthaliyaamalirunthathaiyum a’rinthirukki’rean. (ve’lippaduththina viseasham
2:13)
ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில்
எனக்குக் குறை உண்டு;
விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான
இடறலை இஸ்ரவேல் புத்திரர்
முன்பாகப் போடும்படி பாலாக்
என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய
போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு. (வெளிப்படுத்தின விசேஷம்
2:14)
aagilum, sila
kaariyangga'laikku’riththu unpearil enakkuk
ku’rai
u'ndu; vikkiragangga'lukkup padaiththavaiga'laip pusippatha’rkum veasiththanampa'n'nuvatha’rkum eathuvaana
ida’ralai
israveal puththirar munbaagap poadumpadi
baalaak
enbavanukkup poathanaiseytha bileayaamudaiya poathagaththaik kaikko'l'lugi’ravarga'l unnidaththilu'ndu. (ve’lippaduththina viseasham
2:14)
அப்படியே நிக்கொலாய்
மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன்.
(வெளிப்படுத்தின விசேஷம் 2:15)
appadiyea nikkolaay
mathastharudaiya poathagaththaik kaikko'l'lugi’ravarga'lum unnidaththilu'ndu; athai naan ve’rukki’rean. (ve’lippaduththina viseasham
2:15)
நீ மனந்திரும்பு,
இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய்
உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால்
அவர்களோடே யுத்தம்பண்ணுவேன். (வெளிப்படுத்தின விசேஷம்
2:16)
nee mananthirumbu, illaavittaal naan seekkiramaay unnidaththil
vanthu, en vaayin
pattayaththaal avarga'loadea yuththampa'n'nuvean. (ve’lippaduththina viseasham
2:16)
ஆவியானவர் சபைகளுக்குச்
சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்;
ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான
மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு
வெண்மையான குறிக்கல்லையும், அந்தக்
கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும்
அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும்
கொடுப்பேன் என்றெழுது. (வெளிப்படுத்தின விசேஷம்
2:17)
aaviyaanavar sabaiga'lukkuch sollugi’rathaik kaathu'l'lavan keadkakkadavan; jeyangko'l'lugi’ravanukku naan ma’raivaana mannaavaip pusikkakkoduththu, avanukku
ve'nmaiyaana ku’rikkallaiyum, anthak kallinmeal
ezhuthappattathum athaip
pe’rugi’ravaneayan’ri vea’roruvanum a’riyakkoodaathathumaagiya puthiya
naamaththaiyum koduppean en’rezhuthu. (ve’lippaduththina viseasham
2:17)
தியத்தீரா சபையின்
தூதனுக்கு நீ எழுதவேண்டியது
என்னவெனில்: அக்கினிஜுவாலை போன்ற கண்களும், பிரகாசமான
வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன்
சொல்லுகிறதாவது; (வெளிப்படுத்தின விசேஷம்
2:18)
thiyaththeeraa sabaiyin thoothanukku
nee ezhuthavea'ndiyathu ennavenil:
akkinijuvaalai poan’ra ka'nga'lum, piragaasamaana ve'ngalampoan’ra paathangga'lumu'l'la theavakumaaran sollugi’rathaavathu; (ve’lippaduththina viseasham
2:18)
உன் கிரியைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு
செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன். (வெளிப்படுத்தின விசேஷம்
2:19)
un kiriyaiga'laiyum, un anbaiyum, un oozhiyaththaiyum, un visuvaasaththaiyum, un po’rumaiyaiyum, nee munbu seytha kiriyaiga'lilum pinbu seytha kiriyaiga'l athigamaayirukki’rathaiyum a’rinthirukki’rean. (ve’lippaduththina viseasham
2:19)
ஆகிலும், உன் பேரில் எனக்குக்
குறை உண்டு; என்னவெனில்,
தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற
யேசபேல் என்னும் ஸ்திரீயானவள்
என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப்
புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து,
அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய். (வெளிப்படுத்தின விசேஷம்
2:20)
aagilum, un pearil
enakkuk ku’rai u'ndu; ennavenil,
thannaith theerkkatharisiyen’ru sollugi’ra yeasabeal ennum sthireeyaanava'l ennudaiya
oozhiyakkaarar veasiththanampa'n'navum
vikkiragangga'lukkup padaiththavaiga'laip pusikkavum avarga'lukkup poathiththu,
avarga'lai vagnchikkumpadi nee ava'lukku idangkodukki’raay. (ve’lippaduththina viseasham
2:20)
அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத்
தவணைகொடுத்தேன்; தன் வேசிமார்க்கத்தை விட்டு
மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை. (வெளிப்படுத்தின விசேஷம்
2:21)
ava'l mananthirumbumpadiyaay ava'lukkuth
thava'naikoduththean; than veasimaarkkaththai vittu mananthirumba ava'lukku
viruppamillai. (ve’lippaduththina viseasham
2:21)
இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே
விபசாரஞ்செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும்
மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி,
(வெளிப்படுத்தின விசேஷம் 2:22)
ithoa, naan ava'laik kattilkidaiyaakki, ava'ludanea
vibasaaragnseythavarga'l thangga'ludaiya kiriyaiga'laivittu mananthirumbaavittaal avarga'laiyum miguntha ubaththiravaththilea
tha'l'li, (ve’lippaduththina viseasham
2:22)
அவளுடைய பிள்ளைகளையும்
கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது
நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச்
சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும்
உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள்
கிரியைகளின்படியே பலனளிப்பேன். (வெளிப்படுத்தின விசேஷம்
2:23)
ava'ludaiya pi'l'laiga'laiyum kollavea
kolluvean; appozhuthu naanea
u'l'linthiriyangga'laiyum iruthayangga'laiyum aaraaygi’ravaren’ru ellaach sabaiga'lum a’rinthuko'l'lum; an’riyum ungga'lil ovvoruvanukkum ungga'l kiriyaiga'linpadiyea palana'lippean. (ve’lippaduththina viseasham
2:23)
தியத்தீராவிலே இந்தப்
போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தானுடைய
ஆழங்கள் என்று அவர்கள்
சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை
அறிந்துகொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு
நான் சொல்லுகிறதாவது; உங்கள்மேல்
வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன். (வெளிப்படுத்தின விசேஷம்
2:24)
thiyaththeeraavilea inthap
poathagaththaip pat’rikko'l'laamalum,
saaththaanudaiya aazhangga'l en’ru avarga'l sollugi’raarga'lea, antha aazhangga'lai a’rinthuko'l'laamalumirukki’ra mat’ravarga'laagiya ungga'lukku naan sollugi’rathaavathu; ungga'lmeal vea’roru baaraththaiyum
sumaththamaattean. (ve’lippaduththina viseasham
2:24)
உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள். (வெளிப்படுத்தின விசேஷம்
2:25)
ungga'lukku'l'lathai
naan varuma'lavum pat’rikko'ndirungga'l. (ve’lippaduththina viseasham
2:25)
ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு,
நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம்
பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம்
கொடுப்பேன். (வெளிப்படுத்தின விசேஷம்
2:26)
jeyangko'ndu mudivupariyantham en kiriyaiga'laik kaikko'l'lugi’ravanevanoa avanukku, naan en pithaavinidaththil athigaaram pet’rathupoala, jaathiga'lmeal athigaaram koduppean.
(ve’lippaduththina viseasham 2:26)
அவன் இருப்புக்கோலால் அவர்களை
ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள். (வெளிப்படுத்தின விசேஷம்
2:27)
avan iruppukkoalaal avarga'lai aa'luvaan;
avarga'l
ma'npaa'ndangga'laippoala no’rukkappaduvaarga'l. (ve’lippaduththina viseasham
2:27)
விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக்
கொடுப்பேன். (வெளிப்படுத்தின விசேஷம்
2:28)
vidive'l'li nadchaththiraththaiyum avanukkuk
koduppean. (ve’lippaduththina viseasham
2:28)
ஆவியானவர் சபைகளுக்குச்
சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்
என்றெழுது. (வெளிப்படுத்தின விசேஷம்
2:29)
aaviyaanavar sabaiga'lukkuch sollugi’rathaik kaathu'l'lavan keadkakkadavan en’rezhuthu. (ve’lippaduththina viseasham
2:29)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!