Friday, May 13, 2016

Yoavaan 11 | யோவான் 11 | John 11


மரியாளும்  அவள்  சகோதரியாகிய  மார்த்தாளும்  இருந்த  பெத்தானியா  கிராமத்திலுள்ளவனாகிய  லாசரு  என்னும்  ஒருவன்  வியாதிப்பட்டிருந்தான்.  (யோவான்  11:1)

mariyaa'lum  ava'l  sagoathariyaagiya  maarththaa'lum  iruntha  beththaaniyaa  kiraamaththilu'l'lavanaagiya  laasaru  ennum  oruvan  viyaathippattirunthaan.  (yoavaan  11:1)

கர்த்தருக்குப்  பரிமளதைலம்  பூசி,  தன்  தலைமயிரால்  அவருடைய  பாதங்களைத்  துடைத்தவள்  அந்த  மரியாளே;  அவளுடைய  சகோதரனாகிய  லாசரு  வியாதியாயிருந்தான்.  (யோவான்  11:2)

karththarukkup  parima'lathailam  poosi,  than  thalaimayiraal  avarudaiya  paathangga'laith  thudaiththava'l  antha  mariyaa'lea;  ava'ludaiya  sagoatharanaagiya  laasaru  viyaathiyaayirunthaan.  (yoavaan  11:2)

அப்பொழுது  அவனுடைய  சகோதரிகள்:  ஆண்டவரே,  நீர்  சிநேகிக்கிறவன்  வியாதியாயிருக்கிறான்  என்று  சொல்ல,  அவரிடத்திற்கு  ஆள்  அனுப்பினார்கள்.  (யோவான்  11:3)

appozhuthu  avanudaiya  sagoathariga'l:  aa'ndavarea,  neer  sineagikki’ravan  viyaathiyaayirukki’raan  en’ru  solla,  avaridaththi’rku  aa'l  anuppinaarga'l.  (yoavaan  11:3)

இயேசு  அதைக்  கேட்டபொழுது:  இந்த  வியாதி  மரணத்துக்கு  ஏதுவாயிராமல்  தேவனுடைய  மகிமை  விளங்குவதற்கு  ஏதுவாயிருக்கிறது;  தேவனுடைய  குமாரனும்  அதினால்  மகிமைப்படுவார்  என்றார்.  (யோவான்  11:4)

iyeasu  athaik  keattapozhuthu:  intha  viyaathi  mara'naththukku  eathuvaayiraamal  theavanudaiya  magimai  vi'langguvatha’rku  eathuvaayirukki’rathu;  theavanudaiya  kumaaranum  athinaal  magimaippaduvaar  en’raar.  (yoavaan  11:4)

இயேசு  மார்த்தாளிடத்திலும்  அவளுடைய  சகோதரியினிடத்திலும்  லாசருவினிடத்திலும்  அன்பாயிருந்தார்.  (யோவான்  11:5)

iyeasu  maarththaa'lidaththilum  ava'ludaiya  sagoathariyinidaththilum  laasaruvinidaththilum  anbaayirunthaar.  (yoavaan  11:5)

அவன்  வியாதியாயிருக்கிறதாக  அவர்  கேள்விப்பட்டபொழுது,  தாம்  இருந்த  இடத்திலே  பின்னும்  இரண்டுநாள்  தங்கினார்.  (யோவான்  11:6)

avan  viyaathiyaayirukki’rathaaga  avar  kea'lvippattapozhuthu,  thaam  iruntha  idaththilea  pinnum  ira'ndunaa'l  thangginaar.  (yoavaan  11:6)

அதன்பின்பு  அவர்  தம்முடைய  சீஷரை  நோக்கி:  நாம்  மறுபடியும்  யூதேயாவுக்குப்  போவோம்  வாருங்கள்  என்றார்.  (யோவான்  11:7)

athanpinbu  avar  thammudaiya  seesharai  noakki:  naam  ma’rupadiyum  yootheayaavukkup  poavoam  vaarungga'l  en’raar.  (yoavaan  11:7)

அதற்குச்  சீஷர்கள்:  ரபீ,  இப்பொழுதுதான்  யூதர்  உம்மைக்  கல்லெறியத்  தேடினார்களே,  மறுபடியும்  நீர்  அவ்விடத்திற்குப்  போகலாமா  என்றார்கள்.  (யோவான்  11:8)

atha’rkuch  seesharga'l:  rabee,  ippozhuthuthaan  yoothar  ummaik  kalle’riyath  theadinaarga'lea,  ma’rupadiyum  neer  avvidaththi’rkup  poagalaamaa  en’raarga'l.  (yoavaan  11:8)

இயேசு  பிரதியுத்தரமாக:  பகலுக்குப்  பன்னிரண்டு  மணிநேரம்  இல்லையா?  ஒருவன்  பகலிலே  நடந்தால்  அவன்  இந்த  உலகத்தின்  வெளிச்சத்தைக்  காண்கிறபடியினால்  இடறமாட்டான்.  (யோவான்  11:9)

iyeasu  pirathiyuththaramaaga:  pagalukkup  pannira'ndu  ma'ninearam  illaiyaa?  oruvan  pagalilea  nadanthaal  avan  intha  ulagaththin  ve'lichchaththaik  kaa'ngi’rapadiyinaal  ida’ramaattaan.  (yoavaan  11:9)

ஒருவன்  இரவிலே  நடந்தால்  தன்னிடத்தில்  வெளிச்சம்  இல்லாதபடியினால்  இடறுவான்  என்றார்.  (யோவான்  11:10)

oruvan  iravilea  nadanthaal  thannidaththil  ve'lichcham  illaathapadiyinaal  ida’ruvaan  en’raar.  (yoavaan  11:10)

இவைகளை  அவர்  சொல்லியபின்பு  அவர்களை  நோக்கி:  நம்முடைய  சிநேகிதனாகிய  லாசரு  நித்திரையடைந்திருக்கிறான்,  நான்  அவனை  எழுப்பப்போகிறேன்  என்றார்.  (யோவான்  11:11)

ivaiga'lai  avar  solliyapinbu  avarga'lai  noakki:  nammudaiya  sineagithanaagiya  laasaru  niththiraiyadainthirukki’raan,  naan  avanai  ezhuppappoagi’rean  en’raar.  (yoavaan  11:11)

அதற்கு  அவருடைய  சீஷர்கள்:  ஆண்டவரே,  நித்திரையடைந்திருந்தால்  சுகமடைவான்  என்றார்கள்.  (யோவான்  11:12)

atha’rku  avarudaiya  seesharga'l:  aa'ndavarea,  niththiraiyadainthirunthaal  sugamadaivaan  en’raarga'l.  (yoavaan  11:12)

இயேசுவானவர்  அவனுடைய  மரணத்தைக்குறித்து  அப்படிச்  சொன்னார்;  அவர்களோ  நித்திரைசெய்து  இளைப்பாறுகிறதைக்குறித்துச்  சொன்னாரென்று  நினைத்தார்கள்.  (யோவான்  11:13)

iyeasuvaanavar  avanudaiya  mara'naththaikku’riththu  appadich  sonnaar;  avarga'loa  niththiraiseythu  i'laippaa’rugi’rathaikku’riththuch  sonnaaren’ru  ninaiththaarga'l.  (yoavaan  11:13)

அப்பொழுது  இயேசு  அவர்களை  நோக்கி:  லாசரு  மரித்துப்போனான்  என்று  வெளிப்படையாய்ச்  சொல்லி;  (யோவான்  11:14)

appozhuthu  iyeasu  avarga'lai  noakki:  laasaru  mariththuppoanaan  en’ru  ve'lippadaiyaaych  solli;  (yoavaan  11:14)

நான்  அங்கே  இராததினால்  நீங்கள்  விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு  ஏதுவுண்டென்று  உங்கள்நிமித்தம்  சந்தோஷப்படுகிறேன்;  இப்பொழுது  அவனிடத்திற்குப்  போவோம்  வாருங்கள்  என்றார்.  (யோவான்  11:15)

naan  anggea  iraathathinaal  neengga'l  visuvaasamu'l'lavarga'laagi’ratha’rku  eathuvu'nden’ru  ungga'lnimiththam  santhoashappadugi’rean;  ippozhuthu  avanidaththi’rkup  poavoam  vaarungga'l  en’raar.  (yoavaan  11:15)

அப்பொழுது  திதிமு  என்னப்பட்ட  தோமா  மற்றச்  சீஷர்களை  நோக்கி:  அவரோடேகூட  மரிக்கும்படி  நாமும்  போவோம்  வாருங்கள்  என்றான்.  (யோவான்  11:16)

appozhuthu  thithimu  ennappatta  thoamaa  mat’rach  seesharga'lai  noakki:  avaroadeakooda  marikkumpadi  naamum  poavoam  vaarungga'l  en’raan.  (yoavaan  11:16)

இயேசு  வந்தபோது  அவன்  கல்லறையில்  வைக்கப்பட்டு  நாலுநாளாயிற்றென்று  கண்டார்.  (யோவான்  11:17)

iyeasu  vanthapoathu  avan  kalla’raiyil  vaikkappattu  naalunaa'laayit’ren’ru  ka'ndaar.  (yoavaan  11:17)

பெத்தானியா  ஊர்  எருசலேமுக்குச்  சமீபமாய்  ஏறக்குறைய  இரண்டுமைல்  தூரத்திலிருந்தது.  (யோவான்  11:18)

beththaaniyaa  oor  erusaleamukkuch  sameebamaay  ea’rakku’raiya  ira'ndumail  thooraththilirunthathu.  (yoavaan  11:18)

யூதரில்  அநேகர்  மார்த்தாள்  மரியாள்  என்பவர்களுடைய  சகோதரனைக்  குறித்து  அவர்களுக்கு  ஆறுதல்  சொல்லும்படி  அவர்களிடத்தில்  வந்திருந்தார்கள்.  (யோவான்  11:19)

yootharil  aneagar  maarththaa'l  mariyaa'l  enbavarga'ludaiya  sagoatharanaik  ku’riththu  avarga'lukku  aa’ruthal  sollumpadi  avarga'lidaththil  vanthirunthaarga'l.  (yoavaan  11:19)

இயேசு  வருகிறார்  என்று  மார்த்தாள்  கேள்விப்பட்டபோது,  அவருக்கு  எதிர்கொண்டுபோனாள்;  மரியாளோ  வீட்டிலே  உட்கார்ந்திருந்தாள்.  (யோவான்  11:20)

iyeasu  varugi’raar  en’ru  maarththaa'l  kea'lvippattapoathu,  avarukku  ethirko'ndupoanaa'l;  mariyaa'loa  veettilea  udkaarnthirunthaa'l.  (yoavaan  11:20)

மார்த்தாள்  இயேசுவினிடத்தில்  வந்து:  ஆண்டவரே,  நீர்  இங்கேயிருந்தீரானால்  என்  சகோதரன்  மரிக்கமாட்டான்.  (யோவான்  11:21)

maarththaa'l  iyeasuvinidaththil  vanthu:  aa'ndavarea,  neer  inggeayiruntheeraanaal  en  sagoatharan  marikkamaattaan.  (yoavaan  11:21)

இப்பொழுதும்  நீர்  தேவனிடத்தில்  கேட்டுக்கொள்ளுவதெதுவோ  அதைத்  தேவன்  உமக்குத்  தந்தருளுவாரென்று  அறிந்திருக்கிறேன்  என்றாள்.  (யோவான்  11:22)

ippozhuthum  neer  theavanidaththil  keattukko'l'luvathethuvoa  athaith  theavan  umakkuth  thantharu'luvaaren’ru  a’rinthirukki’rean  en’raa'l.  (yoavaan  11:22)

இயேசு  அவளை  நோக்கி:  உன்  சகோதரன்  உயிர்த்தெழுந்திருப்பான்  என்றார்.  (யோவான்  11:23)

iyeasu  ava'lai  noakki:  un  sagoatharan  uyirththezhunthiruppaan  en’raar.  (yoavaan  11:23)

அதற்கு  மார்த்தாள்:  உயிர்த்தெழுதல்  நடக்கும்  கடைசிநாளிலே  அவனும்  உயிர்த்தெழுந்திருப்பான்  என்று  அறிந்திருக்கிறேன்  என்றாள்.  (யோவான்  11:24)

atha’rku  maarththaa'l:  uyirththezhuthal  nadakkum  kadaisinaa'lilea  avanum  uyirththezhunthiruppaan  en’ru  a’rinthirukki’rean  en’raa'l.  (yoavaan  11:24)

இயேசு  அவளை  நோக்கி:  நானே  உயிர்த்தெழுதலும்  ஜீவனுமாயிருக்கிறேன்,  என்னை  விசுவாசிக்கிறவன்  மரித்தாலும்  பிழைப்பான்;  (யோவான்  11:25)

iyeasu  ava'lai  noakki:  naanea  uyirththezhuthalum  jeevanumaayirukki’rean,  ennai  visuvaasikki’ravan  mariththaalum  pizhaippaan;  (yoavaan  11:25)

உயிரோடிருந்து  என்னை  விசுவாசிக்கிறவனெவனும்  என்றென்றைக்கும்  மரியாமலும்  இருப்பான்;  இதை  விசுவாசிக்கிறாயா  என்றார்.  (யோவான்  11:26)

uyiroadirunthu  ennai  visuvaasikki’ravanevanum  en’ren’raikkum  mariyaamalum  iruppaan;  ithai  visuvaasikki’raayaa  en’raar.  (yoavaan  11:26)

அதற்கு  அவள்:  ஆம்,  ஆண்டவரே,  நீர்  உலகத்தில்  வருகிறவரான  தேவகுமாரனாகிய  கிறிஸ்து  என்று  நான்  விசுவாசிக்கிறேன்  என்றாள்.  (யோவான்  11:27)

atha’rku  ava'l:  aam,  aa'ndavarea,  neer  ulagaththil  varugi’ravaraana  theavakumaaranaagiya  ki’risthu  en’ru  naan  visuvaasikki’rean  en’raa'l.  (yoavaan  11:27)

இவைகளைச்  சொன்னபின்பு,  அவள்போய்,  தன்  சகோதரியாகிய  மரியாளை  இரகசியமாய்  அழைத்து:  போதகர்  வந்திருக்கிறார்,  உன்னை  அழைக்கிறார்  என்றாள்.  (யோவான்  11:28)

ivaiga'laich  sonnapinbu,  ava'lpoay,  than  sagoathariyaagiya  mariyaa'lai  iragasiyamaay  azhaiththu:  poathagar  vanthirukki’raar,  unnai  azhaikki’raar  en’raa'l.  (yoavaan  11:28)

அவள்  அதைக்  கேட்டவுடனே,  சீக்கிரமாய்  எழுந்து,  அவரிடத்தில்  வந்தாள்.  (யோவான்  11:29)

ava'l  athaik  keattavudanea,  seekkiramaay  ezhunthu,  avaridaththil  vanthaa'l.  (yoavaan  11:29)

இயேசு  இன்னும்  கிராமத்துக்குள்  வராமல்,  மார்த்தாள்  தம்மைச்  சந்தித்த  இடத்திலே  இருந்தார்.  (யோவான்  11:30)

iyeasu  innum  kiraamaththukku'l  varaamal,  maarththaa'l  thammaich  santhiththa  idaththilea  irunthaar.  (yoavaan  11:30)

அப்பொழுது,  வீட்டிலே  அவளுடனேகூட  இருந்து  அவளுக்கு  ஆறுதல்  சொல்லிக்கொண்டிருந்த  யூதர்கள்,  மரியாள்  சீக்கிரமாய்  எழுந்துபோகிறதைக்  கண்டு:  அவள்  கல்லறையினிடத்தில்  அழுகிறதற்குப்  போகிறாள்  என்று  சொல்லி,  அவளுக்குப்  பின்னே  போனார்கள்.  (யோவான்  11:31)

appozhuthu,  veettilea  ava'ludaneakooda  irunthu  ava'lukku  aa’ruthal  sollikko'ndiruntha  yootharga'l,  mariyaa'l  seekkiramaay  ezhunthupoagi’rathaik  ka'ndu:  ava'l  kalla’raiyinidaththil  azhugi’ratha’rkup  poagi’raa'l  en’ru  solli,  ava'lukkup  pinnea  poanaarga'l.  (yoavaan  11:31)

இயேசு  இருந்த  இடத்தில்  மரியாள்  வந்து,  அவரைக்  கண்டவுடனே,  அவர்  பாதத்தில்  விழுந்து:  ஆண்டவரே,  நீர்  இங்கே  இருந்தீரானால்  என்  சகோதரன்  மரிக்கமாட்டான்  என்றாள்.  (யோவான்  11:32)

iyeasu  iruntha  idaththil  mariyaa'l  vanthu,  avaraik  ka'ndavudanea,  avar  paathaththil  vizhunthu:  aa'ndavarea,  neer  inggea  iruntheeraanaal  en  sagoatharan  marikkamaattaan  en’raa'l.  (yoavaan  11:32)

அவள்  அழுகிறதையும்  அவளோடேகூட  வந்த  யூதர்கள்  அழுகிறதையும்  இயேசு  கண்டபோது  ஆவியிலே  கலங்கித்  துயரமடைந்து:  (யோவான்  11:33)

ava'l  azhugi’rathaiyum  ava'loadeakooda  vantha  yootharga'l  azhugi’rathaiyum  iyeasu  ka'ndapoathu  aaviyilea  kalanggith  thuyaramadainthu:  (yoavaan  11:33)

அவனை  எங்கே  வைத்தீர்கள்  என்றார்.  ஆண்டவரே,  வந்து  பாரும்  என்றார்கள்.  (யோவான்  11:34)

avanai  enggea  vaiththeerga'l  en’raar.  aa'ndavarea,  vanthu  paarum  en’raarga'l.  (yoavaan  11:34)

இயேசு  கண்ணீர்  விட்டார்.  (யோவான்  11:35)

iyeasu  ka'n'neer  vittaar.  (yoavaan  11:35)

அப்பொழுது  யூதர்கள்:  இதோ,  இவர்  அவனை  எவ்வளவாய்ச்  சிநேகித்தார்  என்றார்கள்!  (யோவான்  11:36)

appozhuthu  yootharga'l:  ithoa,  ivar  avanai  evva'lavaaych  sineagiththaar  en’raarga'l!  (yoavaan  11:36)

அவர்களில்  சிலர்:  குருடனுடைய  கண்களைத்  திறந்த  இவர்,  இவனைச்  சாகாமலிருக்கப்பண்ணவும்  கூடாதா  என்றார்கள்.  (யோவான்  11:37)

avarga'lil  silar:  kurudanudaiya  ka'nga'laith  thi’rantha  ivar,  ivanaich  saagaamalirukkappa'n'navum  koodaathaa  en’raarga'l.  (yoavaan  11:37)

அப்பொழுது  இயேசு  மறுபடியும்  தமக்குள்ளே  கலங்கிக்  கல்லறையினிடத்திற்கு  வந்தார்.  அது  ஒரு  குகையாயிருந்தது;  அதின்மேல்  ஒரு  கல்  வைக்கப்பட்டிருந்தது.  (யோவான்  11:38)

appozhuthu  iyeasu  ma’rupadiyum  thamakku'l'lea  kalanggik  kalla’raiyinidaththi’rku  vanthaar.  athu  oru  kugaiyaayirunthathu;  athinmeal  oru  kal  vaikkappattirunthathu.  (yoavaan  11:38)

இயேசு:  கல்லை  எடுத்துப்போடுங்கள்  என்றார்.  மரித்தவனுடைய  சகோதரியாகிய  மார்த்தாள்  அவரை  நோக்கி:  ஆண்டவரே,  இப்பொழுது  நாறுமே,  நாலுநாளாயிற்றே  என்றாள்.  (யோவான்  11:39)

iyeasu:  kallai  eduththuppoadungga'l  en’raar.  mariththavanudaiya  sagoathariyaagiya  maarththaa'l  avarai  noakki:  aa'ndavarea,  ippozhuthu  naa’rumea,  naalunaa'laayit’rea  en’raa'l.  (yoavaan  11:39)

இயேசு  அவளை  நோக்கி:  நீ  விசுவாசித்தால்  தேவனுடைய  மகிமையைக்  காண்பாய்  என்று  நான்  உனக்குச்  சொல்லவில்லையா  என்றார்.  (யோவான்  11:40)

iyeasu  ava'lai  noakki:  nee  visuvaasiththaal  theavanudaiya  magimaiyaik  kaa'nbaay  en’ru  naan  unakkuch  sollavillaiyaa  en’raar.  (yoavaan  11:40)

அப்பொழுது  மரித்தவன்  வைக்கப்பட்ட  இடத்திலிருந்த  கல்லை  எடுத்துப்போட்டார்கள்.  இயேசு  தம்முடைய  கண்களை  ஏறெடுத்து:  பிதாவே,  நீர்  எனக்குச்  செவிகொடுத்தபடியினால்  உம்மை  ஸ்தோத்திரிக்கிறேன்.  (யோவான்  11:41)

appozhuthu  mariththavan  vaikkappatta  idaththiliruntha  kallai  eduththuppoattaarga'l.  iyeasu  thammudaiya  ka'nga'lai  ea’reduththu:  pithaavea,  neer  enakkuch  sevikoduththapadiyinaal  ummai  sthoaththirikki’rean.  (yoavaan  11:41)

நீர்  எப்பொழுதும்  எனக்குச்  செவிகொடுக்கிறீர்  என்று  நான்  அறிந்திருக்கிறேன்;  ஆனாலும்  நீர்  என்னை  அனுப்பினதைச்  சூழ்ந்துநிற்கும்  ஜனங்கள்  விசுவாசிக்கும்படியாக  அவர்கள்  நிமித்தம்  இதைச்  சொன்னேன்  என்றார்.  (யோவான்  11:42)

neer  eppozhuthum  enakkuch  sevikodukki’reer  en’ru  naan  a’rinthirukki’rean;  aanaalum  neer  ennai  anuppinathaich  soozhnthuni’rkum  janangga'l  visuvaasikkumpadiyaaga  avarga'l  nimiththam  ithaich  sonnean  en’raar.  (yoavaan  11:42)

இவைகளைச்  சொன்னபின்பு:  லாசருவே,  வெளியே  வா  என்று,  உரத்த  சத்தமாய்க்  கூப்பிட்டார்.  (யோவான்  11:43)

ivaiga'laich  sonnapinbu:  laasaruvea,  ve'liyea  vaa  en’ru,  uraththa  saththamaayk  kooppittaar.  (yoavaan  11:43)

அப்பொழுது,  மரித்தவன்  வெளியே  வந்தான்.  அவன்  கால்களும்  கைகளும்  பிரேதச்  சீலைகளினால்  கட்டப்பட்டிருந்தது,  அவன்  முகமும்  சீலையால்  சுற்றப்பட்டிருந்தது.  இயேசு  அவர்களை  நோக்கி:  இவனைக்  கட்டவிழ்த்துவிடுங்கள்  என்றார்.  (யோவான்  11:44)

appozhuthu,  mariththavan  ve'liyea  vanthaan.  avan  kaalga'lum  kaiga'lum  pireathach  seelaiga'linaal  kattappattirunthathu,  avan  mugamum  seelaiyaal  sut’rappattirunthathu.  iyeasu  avarga'lai  noakki:  ivanaik  kattavizhththuvidungga'l  en’raar.  (yoavaan  11:44)

அப்பொழுது  மரியாளிடத்தில்  வந்திருந்து,  இயேசு  செய்தவைகளைக்  கண்டவர்களாகிய  யூதர்களில்  அநேகர்  அவரிடத்தில்  விசுவாசமுள்ளவர்களானார்கள்.  (யோவான்  11:45)

appozhuthu  mariyaa'lidaththil  vanthirunthu,  iyeasu  seythavaiga'laik  ka'ndavarga'laagiya  yootharga'lil  aneagar  avaridaththil  visuvaasamu'l'lavarga'laanaarga'l.  (yoavaan  11:45)

அவர்களில்  சிலர்  பரிசேயரிடத்தில்  போய்,  இயேசு  செய்தவைகளை  அவர்களுக்கு  அறிவித்தார்கள்.  (யோவான்  11:46)

avarga'lil  silar  pariseayaridaththil  poay,  iyeasu  seythavaiga'lai  avarga'lukku  a’riviththaarga'l.  (yoavaan  11:46)

அப்பொழுது  பிரதான  ஆசாரியரும்  பரிசேயரும்  ஆலோசனைச்  சங்கத்தைக்  கூடிவரச்செய்து,  நாம்  என்னசெய்கிறது?  இந்த  மனுஷன்  அநேக  அற்புதங்களைச்  செய்கிறானே.  (யோவான்  11:47)

appozhuthu  pirathaana  aasaariyarum  pariseayarum  aaloasanaich  sanggaththaik  koodivarachseythu,  naam  ennaseygi’rathu?  intha  manushan  aneaga  a’rputhangga'laich  seygi’raanea.  (yoavaan  11:47)

நாம்  இவனை  இப்படி  விட்டுவிட்டால்,  எல்லாரும்  இவனை  விசுவாசிப்பார்கள்;  அப்பொழுது  ரோமர்  வந்து  நம்முடைய  ஸ்தானத்தையும்  ஜனத்தையும்  அழித்துப்  போடுவார்களே  என்றார்கள்.  (யோவான்  11:48)

naam  ivanai  ippadi  vittuvittaal,  ellaarum  ivanai  visuvaasippaarga'l;  appozhuthu  roamar  vanthu  nammudaiya  sthaanaththaiyum  janaththaiyum  azhiththup  poaduvaarga'lea  en’raarga'l.  (yoavaan  11:48)

அப்பொழுது  அவர்களில்  ஒருவனும்  அந்த  வருஷத்துப்  பிரதான  ஆசாரியனுமாகிய  காய்பா  என்பவன்  அவர்களை  நோக்கி:  உங்களுக்கு  ஒன்றுந்  தெரியாது;  (யோவான்  11:49)

appozhuthu  avarga'lil  oruvanum  antha  varushaththup  pirathaana  aasaariyanumaagiya  kaaypaa  enbavan  avarga'lai  noakki:  ungga'lukku  on’run  theriyaathu;  (yoavaan  11:49)

ஜனங்களெல்லாரும்  கெட்டுப்போகாதபடிக்கு  ஒரே  மனுஷன்  ஜனங்களுக்காக  மரிப்பது  நமக்கு  நலமாயிருக்குமென்று  நீங்கள்  சிந்தியாமலிருக்கிறீர்கள்  என்றான்.  (யோவான்  11:50)

janangga'lellaarum  kettuppoagaathapadikku  orea  manushan  janangga'lukkaaga  marippathu  namakku  nalamaayirukkumen’ru  neengga'l  sinthiyaamalirukki’reerga'l  en’raan.  (yoavaan  11:50)

இதை  அவன்  சுயமாய்ச்  சொல்லாமல்,  அந்த  வருஷத்துப்  பிரதான  ஆசாரியனானபடியினாலே  இயேசு  யூதஜனங்களுக்காக  மரிக்கப்போகிறாரென்றும்,  (யோவான்  11:51)

ithai  avan  suyamaaych  sollaamal,  antha  varushaththup  pirathaana  aasaariyanaanapadiyinaalea  iyeasu  yoothajanangga'lukkaaga  marikkappoagi’raaren’rum,  (yoavaan  11:51)

அந்த  ஜனங்களுக்காகமாத்திரமல்ல,  சிதறியிருக்கிற  தேவனுடைய  பிள்ளைகளை  ஒன்றாகச்  சேர்க்கிறதற்காகவும்  மரிக்கப்போகிறாரென்றும்,  தீர்க்கதரிசனமாய்ச்  சொன்னான்.  (யோவான்  11:52)

antha  janangga'lukkaagamaaththiramalla,  sitha’riyirukki’ra  theavanudaiya  pi'l'laiga'lai  on’raagach  searkki’ratha’rkaagavum  marikkappoagi’raaren’rum,  theerkkatharisanamaaych  sonnaan.  (yoavaan  11:52)

அந்நாள்முதல்  அவரைக்  கொலைசெய்யும்படிக்கு  ஆலோசனைபண்ணினார்கள்.  (யோவான்  11:53)

annaa'lmuthal  avaraik  kolaiseyyumpadikku  aaloasanaipa'n'ninaarga'l.  (yoavaan  11:53)

ஆகையால்  இயேசு  அதன்பின்பு  வெளியரங்கமாய்  யூதருக்குள்ளே  சஞ்சரியாமல்,  அவ்விடம்விட்டு  வனாந்தரத்துக்குச்  சமீபமான  இடமாகிய  எப்பிராயீம்  என்னப்பட்ட  ஊருக்குப்போய்,  அங்கே  தம்முடைய  சீஷருடனேகூடத்  தங்கியிருந்தார்.  (யோவான்  11:54)

aagaiyaal  iyeasu  athanpinbu  ve'liyaranggamaay  yootharukku'l'lea  sagnchariyaamal,  avvidamvittu  vanaantharaththukkuch  sameebamaana  idamaagiya  eppiraayeem  ennappatta  oorukkuppoay,  anggea  thammudaiya  seesharudaneakoodath  thanggiyirunthaar.  (yoavaan  11:54)

யூதருடைய  பஸ்காபண்டிகை  சமீபமாயிருந்தது.  அதற்கு  முன்னே  அநேகர்  தங்களைச்  சுத்திகரித்துக்கொள்ளும்பொருட்டு  நாட்டிலிருந்து  எருசலேமுக்குப்  போனார்கள்.  (யோவான்  11:55)

yootharudaiya  paskaapa'ndigai  sameebamaayirunthathu.  atha’rku  munnea  aneagar  thangga'laich  suththigariththukko'l'lumporuttu  naattilirunthu  erusaleamukkup  poanaarga'l.  (yoavaan  11:55)

அங்கே  அவர்கள்  இயேசுவைத்  தேடிக்கொண்டு  தேவாலயத்தில்  நிற்கையில்,  ஒருவரையொருவர்  நோக்கி:  உங்களுக்  கெப்படித்  தோன்றுகிறது,  அவர்  பண்டிகைக்கு  வரமாட்டாரோ  என்று  பேசிக்கொண்டார்கள்.  (யோவான்  11:56)

anggea  avarga'l  iyeasuvaith  theadikko'ndu  theavaalayaththil  ni’rkaiyil,  oruvaraiyoruvar  noakki:  ungga'luk  keppadith  thoan’rugi’rathu,  avar  pa'ndigaikku  varamaattaaroa  en’ru  peasikko'ndaarga'l.  (yoavaan  11:56)

பிரதான  ஆசாரியரும்  பரிசேயரும்  அவரைப்  பிடிக்கும்படி  யோசித்து,  அவர்  இருக்கிற  இடத்தை  எவனாவது  அறிந்திருந்தால்,  அதை  அறிவிக்கவேண்டுமென்று  கட்டளையிட்டிருந்தார்கள்.  (யோவான்  11:57)

pirathaana  aasaariyarum  pariseayarum  avaraip  pidikkumpadi  yoasiththu,  avar  irukki’ra  idaththai  evanaavathu  a’rinthirunthaal,  athai  a’rivikkavea'ndumen’ru  katta'laiyittirunthaarga'l.  (yoavaan  11:57)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!