Saturday, May 21, 2016

Appoasthalar 23 | அப்போஸ்தலருடைய நடபடிகள் 23 | Acts 23

பவுல்  ஆலோசனைச்  சங்கத்தாரை  உற்றுப்பார்த்து:  சகோதரரே,  இந்நாள்வரைக்கும்  எல்லா  விஷயங்களிலும்  நான்  நல்மனச்சாட்சியோடே  தேவனுக்குமுன்பாக  நடந்துவந்தேன்  என்று  சொன்னான்.  (அப்போஸ்தலர்  23:1)

pavul  aaloasanaich  sanggaththaarai  ut’ruppaarththu:  sagoathararea,  innaa'lvaraikkum  ellaa  vishayangga'lilum  naan  nalmanachsaadchiyoadea  theavanukkumunbaaga  nadanthuvanthean  en’ru  sonnaan.  (appoasthalar  23:1)

அப்பொழுது  பிரதான  ஆசாரியனாகிய  அனனியா  அவனுக்குச்  சமீபமாய்  நின்றவர்களை  நோக்கி:  இவன்  வாயில்  அடியுங்கள்  என்று  கட்டளையிட்டான்.  (அப்போஸ்தலர்  23:2)

appozhuthu  pirathaana  aasaariyanaagiya  ananiyaa  avanukkuch  sameebamaay  nin’ravarga'lai  noakki:  ivan  vaayil  adiyungga'l  en’ru  katta'laiyittaan.  (appoasthalar  23:2)

அப்பொழுது  பவுல்  அவனைப்பார்த்து:  வெள்ளையடிக்கப்பட்ட  சுவரே,  தேவன்  உம்மை  அடிப்பார்;  நியாயப்பிரமாணத்தின்படி  என்னை  நியாயம்  விசாரிக்கிறவராய்  உட்கார்ந்திருக்கிற  நீர்  நியாயப்பிரமாணத்திற்கு  விரோதமாய்  என்னை  அடிக்கச்  சொல்லலாமா  என்றான்.  (அப்போஸ்தலர்  23:3)

appozhuthu  pavul  avanaippaarththu:  ve'l'laiyadikkappatta  suvarea,  theavan  ummai  adippaar;  niyaayappiramaa'naththinpadi  ennai  niyaayam  visaarikki’ravaraay  udkaarnthirukki’ra  neer  niyaayappiramaa'naththi’rku  viroathamaay  ennai  adikkach  sollalaamaa  en’raan.  (appoasthalar  23:3)

சமீபத்திலே  நின்றவர்கள்:  தேவனுடைய  பிரதானஆசாரியரை  வைகிறாயா  என்றார்கள்.  (அப்போஸ்தலர்  23:4)

sameebaththilea  nin’ravarga'l:  theavanudaiya  pirathaanaaasaariyarai  vaigi’raayaa  en’raarga'l.  (appoasthalar  23:4)

அதற்குப்  பவுல்:  சகோதரரே,  இவர்  பிரதான  ஆசாரியரென்று  எனக்குத்  தெரியாது;  உன்  ஜனத்தின்  அதிபதியைத்  தீது  சொல்லாயாக  என்று  எழுதியிருக்கிறதே  என்றான்.  (அப்போஸ்தலர்  23:5)

atha’rkup  pavul:  sagoathararea,  ivar  pirathaana  aasaariyaren’ru  enakkuth  theriyaathu;  un  janaththin  athibathiyaith  theethu  sollaayaaga  en’ru  ezhuthiyirukki’rathea  en’raan.  (appoasthalar  23:5)

பின்பு  அவர்களில்,  சதுசேயர்  ஒரு  பங்கும்  பரிசேயர்  ஒரு  பங்குமாயிருக்கிறார்களென்று  பவுல்  அறிந்து:  சகோதரரே,  நான்  பரிசேயனும்  பரிசேயனுடைய  மகனுமாயிருக்கிறேன்.  மரித்தோருடைய  உயிர்த்தெழுதலைப்பற்றிய  நம்பிக்கையைக்குறித்து  நான்  நியாயம்  விசாரிக்கப்படுகிறேன்  என்று  ஆலோசனைச்  சங்கத்திலே  சத்தமிட்டுச்  சொன்னான்.  (அப்போஸ்தலர்  23:6)

pinbu  avarga'lil,  sathuseayar  oru  panggum  pariseayar  oru  panggumaayirukki’raarga'len’ru  pavul  a’rinthu:  sagoathararea,  naan  pariseayanum  pariseayanudaiya  maganumaayirukki’rean.  mariththoarudaiya  uyirththezhuthalaippat’riya  nambikkaiyaikku’riththu  naan  niyaayam  visaarikkappadugi’rean  en’ru  aaloasanaich  sanggaththilea  saththamittuch  sonnaan.  (appoasthalar  23:6)

அவன்  இப்படிச்  சொன்னபோது,  பரிசேயருக்கும்  சதுசேயருக்கும்  வாக்குவாதமுண்டாயிற்று;  கூட்டம்  இரண்டாகப்  பிரிந்தது.  (அப்போஸ்தலர்  23:7)

avan  ippadich  sonnapoathu,  pariseayarukkum  sathuseayarukkum  vaakkuvaathamu'ndaayit’ru;  koottam  ira'ndaagap  pirinthathu.  (appoasthalar  23:7)

என்னத்தினாலென்றால்,  சதுசேயர்  உயிர்த்தெழுதல்  இல்லையென்றும்,  தேவதூதனும்  ஆவியும்  இல்லையென்றும்  சொல்லுகிறார்கள்.  பரிசேயரோ  அவ்விரண்டும்  உண்டென்று  ஒப்புக்கொள்ளுகிறார்கள்.  (அப்போஸ்தலர்  23:8)

ennaththinaalen’raal,  sathuseayar  uyirththezhuthal  illaiyen’rum,  theavathoothanum  aaviyum  illaiyen’rum  sollugi’raarga'l.  pariseayaroa  avvira'ndum  u'nden’ru  oppukko'l'lugi’raarga'l.  (appoasthalar  23:8)

ஆகையால்  மிகுந்த  கூக்குரல்  உண்டாயிற்று.  பரிசேய  சமயத்தாரான  வேதபாரகரில்  சிலர்  எழுந்து:  இந்த  மனுஷனிடத்தில்  ஒரு  பொல்லாங்கையும்  காணோம்;  ஒரு  ஆவி  அல்லது  ஒரு  தேவதூதன்  இவனுடனே  பேசினதுண்டானால்,  நாம்  தேவனுடனே  போர்செய்வது  தகாது  என்று  வாதாடினார்கள்.  (அப்போஸ்தலர்  23:9)

aagaiyaal  miguntha  kookkural  u'ndaayit’ru.  pariseaya  samayaththaaraana  veathapaaragaril  silar  ezhunthu:  intha  manushanidaththil  oru  pollaanggaiyum  kaa'noam;  oru  aavi  allathu  oru  theavathoothan  ivanudanea  peasinathu'ndaanaal,  naam  theavanudanea  poarseyvathu  thagaathu  en’ru  vaathaadinaarga'l.  (appoasthalar  23:9)

மிகுந்த  கலகம்  உண்டானபோது,  பவுல்  அவர்களால்  பீறுண்டுபோவானென்று  சேனாபதி  பயந்து,  போர்ச்சேவகர்  போய்,  அவனை  அவர்கள்  நடுவிலிருந்து  இழுத்துக்  கோட்டைக்குக்  கொண்டுபோகும்படி  கட்டளையிட்டான்.  (அப்போஸ்தலர்  23:10)

miguntha  kalagam  u'ndaanapoathu,  pavul  avarga'laal  pee’ru'ndupoavaanen’ru  seanaabathi  bayanthu,  poarchseavagar  poay,  avanai  avarga'l  naduvilirunthu  izhuththuk  koattaikkuk  ko'ndupoagumpadi  katta'laiyittaan.  (appoasthalar  23:10)

அன்று  இராத்திரியிலே  கர்த்தர்  பவுலின்  அருகே  நின்று:  பவுலே,  திடன்கொள்;  நீ  என்னைக்குறித்து  எருசலேமிலே  சாட்சிகொடுத்ததுபோல  ரோமாவிலும்  சாட்சிகொடுக்கவேண்டும்  என்றார்.  (அப்போஸ்தலர்  23:11)

an’ru  iraaththiriyilea  karththar  pavulin  arugea  nin’ru:  pavulea,  thidanko'l;  nee  ennaikku’riththu  erusaleamilea  saadchikoduththathupoala  roamaavilum  saadchikodukkavea'ndum  en’raar.  (appoasthalar  23:11)

விடியற்காலமானபோது,  யூதரில்  சிலர்  ஒருமித்து,  தாங்கள்  பவுலைக்  கொலைசெய்யுமளவும்  புசிப்பதுமில்லை  குடிப்பதுமில்லையென்று  சபதம்பண்ணிக்கொண்டார்கள்.  (அப்போஸ்தலர்  23:12)

vidiya’rkaalamaanapoathu,  yootharil  silar  orumiththu,  thaangga'l  pavulaik  kolaiseyyuma'lavum  pusippathumillai  kudippathumillaiyen’ru  sabathampa'n'nikko'ndaarga'l.  (appoasthalar  23:12)

இப்படிக்  கட்டுப்பாடு  பண்ணிக்கொண்டவர்கள்  நாற்பதுபேருக்கு  அதிகமாயிருந்தார்கள்.  (அப்போஸ்தலர்  23:13)

ippadik  kattuppaadu  pa'n'nikko'ndavarga'l  naa’rpathupearukku  athigamaayirunthaarga'l.  (appoasthalar  23:13)

அவர்கள்  பிரதானஆசாரியர்களிடத்திலும்  மூப்பர்களிடத்திலும்  போய்:  நாங்கள்  பவுலைக்  கொலைசெய்யுமளவும்  ஒன்றும்  புசிப்பதில்லையென்று  உறுதியான  சபதம்  பண்ணிக்கொண்டோம்.  (அப்போஸ்தலர்  23:14)

avarga'l  pirathaanaaasaariyarga'lidaththilum  moopparga'lidaththilum  poay:  naangga'l  pavulaik  kolaiseyyuma'lavum  on’rum  pusippathillaiyen’ru  u’ruthiyaana  sabatham  pa'n'nikko'ndoam.  (appoasthalar  23:14)

ஆனபடியினால்  நீங்கள்  ஆலோசனைச்  சங்கத்தாரோடே  கூடப்போய்,  அவனுடைய  காரியத்தை  அதிக  திட்டமாய்  விசாரிக்க  மனதுள்ளவர்கள்போலச்  சேனாபதிக்குக்  காண்பித்து,  அவர்  நாளைக்கு  அவனை  உங்களிடத்தில்  கூட்டிக்கொண்டு  வரும்படி  அவரிடத்தில்  கேட்பீர்களாக.  அவன்  கிட்டவருகிறதற்குள்ளே  நாங்கள்  அவனைக்  கொலைசெய்ய  ஆயத்தமாயிருப்போம்  என்றார்கள்.  (அப்போஸ்தலர்  23:15)

aanapadiyinaal  neengga'l  aaloasanaich  sanggaththaaroadea  koodappoay,  avanudaiya  kaariyaththai  athiga  thittamaay  visaarikka  manathu'l'lavarga'lpoalach  seanaabathikkuk  kaa'nbiththu,  avar  naa'laikku  avanai  ungga'lidaththil  koottikko'ndu  varumpadi  avaridaththil  keadpeerga'laaga.  avan  kittavarugi’ratha’rku'l'lea  naangga'l  avanaik  kolaiseyya  aayaththamaayiruppoam  en’raarga'l.  (appoasthalar  23:15)

இந்தச்  சர்ப்பனையைப்  பவுலினுடைய  சகோதரியின்  குமாரன்  கேள்விப்பட்டு,  கோட்டைக்குள்ளே  போய்,  பவுலுக்கு  அறிவித்தான்.  (அப்போஸ்தலர்  23:16)

inthach  sarppanaiyaip  pavulinudaiya  sagoathariyin  kumaaran  kea'lvippattu,  koattaikku'l'lea  poay,  pavulukku  a’riviththaan.  (appoasthalar  23:16)

அப்பொழுது  பவுல்  நூற்றுக்கு  அதிபதிகளில்  ஒருவனை  அழைத்து,  இந்த  வாலிபனைச்  சேனாபதியினிடத்திற்குக்  கூட்டிக்கொண்டுபோம்;  அவரிடத்தில்  இவன்  அறிவிக்கவேண்டிய  ஒரு  காரியம்  உண்டு  என்றான்.  (அப்போஸ்தலர்  23:17)

appozhuthu  pavul  noot’rukku  athibathiga'lil  oruvanai  azhaiththu,  intha  vaalibanaich  seanaabathiyinidaththi’rkuk  koottikko'ndupoam;  avaridaththil  ivan  a’rivikkavea'ndiya  oru  kaariyam  u'ndu  en’raan.  (appoasthalar  23:17)

அந்தப்படியே  அவன்  இவனைச்  சேனாபதியினிடத்திற்குக்  கூட்டிக்கொண்டுபோய்:  காவலில்  வைக்கப்பட்டிருக்கிற  பவுல்  என்னை  அழைத்து,  உமக்கொரு  காரியத்தைச்  சொல்லவேண்டுமென்றிருக்கிற  இந்த  வாலிபனை  உம்மிடத்திற்குக்  கொண்டுபோகும்படி  என்னைக்  கேட்டுக்கொண்டான்  என்றான்.  (அப்போஸ்தலர்  23:18)

anthappadiyea  avan  ivanaich  seanaabathiyinidaththi’rkuk  koottikko'ndupoay:  kaavalil  vaikkappattirukki’ra  pavul  ennai  azhaiththu,  umakkoru  kaariyaththaich  sollavea'ndumen’rirukki’ra  intha  vaalibanai  ummidaththi’rkuk  ko'ndupoagumpadi  ennaik  keattukko'ndaan  en’raan.  (appoasthalar  23:18)

அப்பொழுது  சேனாபதி  அவனுடைய  கையைப்  பிடித்துத்  தனியே  அழைத்துக்கொண்டுபோய்:  நீ  என்னிடத்தில்  அறிவிக்கவேண்டிய  காரியம்  என்னவென்று  கேட்டான்.  (அப்போஸ்தலர்  23:19)

appozhuthu  seanaabathi  avanudaiya  kaiyaip  pidiththuth  thaniyea  azhaiththukko'ndupoay:  nee  ennidaththil  a’rivikkavea'ndiya  kaariyam  ennaven’ru  keattaan.  (appoasthalar  23:19)

அதற்கு  அவன்:  யூதர்கள்  பவுலின்  காரியத்தை  அதிக  திட்டமாய்  விசாரிக்க  மனதுள்ளவர்கள்போல,  நீர்  நாளைக்கு  அவனை  ஆலோசனைச்  சங்கத்தாரிடத்தில்  கொண்டுவரும்படி  உம்மை  வேண்டிக்கொள்ள  உடன்பட்டிருக்கிறார்கள்.  (அப்போஸ்தலர்  23:20)

atha’rku  avan:  yootharga'l  pavulin  kaariyaththai  athiga  thittamaay  visaarikka  manathu'l'lavarga'lpoala,  neer  naa'laikku  avanai  aaloasanaich  sanggaththaaridaththil  ko'nduvarumpadi  ummai  vea'ndikko'l'la  udanpattirukki’raarga'l.  (appoasthalar  23:20)

நீர்  அவர்களுக்குச்  சம்மதிக்கவேண்டாம்;  அவர்களில்  நாற்பதுபேருக்கு  அதிகமானவர்கள்  அவனைக்  கொலைசெய்யுமளவும்  தாங்கள்  புசிப்பதுமில்லை  குடிப்பதுமில்லையென்று  சபதம்பண்ணிக்கொண்டு,  அவனுக்குப்  பதிவிருந்து,  உம்முடைய  உத்தரவுக்காக  இப்பொழுது  காத்துக்கொண்டு  ஆயத்தமாயிருக்கிறார்கள்  என்றான்.  (அப்போஸ்தலர்  23:21)

neer  avarga'lukkuch  sammathikkavea'ndaam;  avarga'lil  naa’rpathupearukku  athigamaanavarga'l  avanaik  kolaiseyyuma'lavum  thaangga'l  pusippathumillai  kudippathumillaiyen’ru  sabathampa'n'nikko'ndu,  avanukkup  pathivirunthu,  ummudaiya  uththaravukkaaga  ippozhuthu  kaaththukko'ndu  aayaththamaayirukki’raarga'l  en’raan.  (appoasthalar  23:21)

அப்பொழுது  சேனாபதி:  நீ  இவைகளை  எனக்கு  அறிவித்ததாக  ஒருவருக்குஞ்  சொல்லாதே  என்று  கட்டளையிட்டு,  வாலிபனை  அனுப்பிவிட்டான்.  (அப்போஸ்தலர்  23:22)

appozhuthu  seanaabathi:  nee  ivaiga'lai  enakku  a’riviththathaaga  oruvarukkugn  sollaathea  en’ru  katta'laiyittu,  vaalibanai  anuppivittaan.  (appoasthalar  23:22)

பின்பு  அவன்  நூற்றுக்கு  அதிபதிகளில்  இரண்டுபேரை  அழைத்து,  செசரியாபட்டணத்திற்குப்  போகும்படி  இருநூறு  காலாட்களையும்,  எழுபது  குதிரைவீரரையும்,  இருநூறு  ஈட்டிக்காரரையும்,  இராத்திரியில்  மூன்றாம்மணி  வேளையிலே,  ஆயத்தம்பண்ணுங்களென்றும்;  (அப்போஸ்தலர்  23:23)

pinbu  avan  noot’rukku  athibathiga'lil  ira'ndupearai  azhaiththu,  sesariyaapatta'naththi’rkup  poagumpadi  irunoo’ru  kaalaadka'laiyum,  ezhubathu  kuthiraiveeraraiyum,  irunoo’ru  eettikkaararaiyum,  iraaththiriyil  moon’raamma'ni  vea'laiyilea,  aayaththampa'n'nungga'len’rum;  (appoasthalar  23:23)

பவுலை  ஏற்றி,  தேசாதிபதியாகிய  பேலிக்ஸினிடத்திற்குப்  பத்திரமாய்க்  கொண்டுபோகும்படிக்குக்  குதிரைகளை  ஆயத்தப்படுத்துங்களென்றும்  சொன்னதுமன்றி,  (அப்போஸ்தலர்  23:24)

pavulai  eat’ri,  theasaathibathiyaagiya  pealiksinidaththi’rkup  paththiramaayk  ko'ndupoagumpadikkuk  kuthiraiga'lai  aayaththappaduththungga'len’rum  sonnathuman’ri,  (appoasthalar  23:24)

ஒரு  நிருபத்தையும்  எழுதினான்;  அதின்  விவரமாவது:  (அப்போஸ்தலர்  23:25)

oru  nirubaththaiyum  ezhuthinaan;  athin  vivaramaavathu:  (appoasthalar  23:25)

கனம்பொருந்திய  தேசாதிபதியாகிய  பேலிக்ஸ்  என்பவருக்குக்  கிலவுதியு  லீசியா  வாழ்த்துதல்  சொல்லி  அறிவிக்கிறது  என்னவென்றால்:  (அப்போஸ்தலர்  23:26)

kanamporunthiya  theasaathibathiyaagiya  pealiks  enbavarukkuk  kilavuthiyu  leesiyaa  vaazhththuthal  solli  a’rivikki’rathu  ennaven’raal:  (appoasthalar  23:26)

இந்த  மனுஷனை  யூதர்  பிடித்துக்  கொலைசெய்யப்போகிற  சமயத்தில்,  நான்  போர்ச்சேவகரோடே  கூடப்போய்,  இவன்  ரோமனென்று  அறிந்து,  இவனை  விடுவித்தேன்.  (அப்போஸ்தலர்  23:27)

intha  manushanai  yoothar  pidiththuk  kolaiseyyappoagi’ra  samayaththil,  naan  poarchseavagaroadea  koodappoay,  ivan  roamanen’ru  a’rinthu,  ivanai  viduviththean.  (appoasthalar  23:27)

அவர்கள்  இவன்மேல்  சாட்டின  குற்றத்தை  நான்  அறியவேண்டுமென்று  இவனை  அவர்கள்  ஆலோசனைச்  சங்கத்துக்குமுன்  கொண்டுபோனேன்.  (அப்போஸ்தலர்  23:28)

avarga'l  ivanmeal  saattina  kut’raththai  naan  a’riyavea'ndumen’ru  ivanai  avarga'l  aaloasanaich  sanggaththukkumun  ko'ndupoanean.  (appoasthalar  23:28)

இவன்  அவர்களுடைய  வேதத்திற்கடுத்த  விஷயங்களைக்குறித்துக்  குற்றஞ்சாட்டப்பட்டவனென்று  விளங்கினதேயல்லாமல்,  மரணத்துக்காவது  விலங்குக்காவது  ஏற்ற  குற்றம்  யாதொன்றும்  இவனிடத்தில்  இல்லையென்று  கண்டறிந்தேன்.  (அப்போஸ்தலர்  23:29)

ivan  avarga'ludaiya  veathaththi’rkaduththa  vishayangga'laikku’riththuk  kut’ragnsaattappattavanen’ru  vi'langginatheayallaamal,  mara'naththukkaavathu  vilanggukkaavathu  eat’ra  kut’ram  yaathon’rum  ivanidaththil  illaiyen’ru  ka'nda’rinthean.  (appoasthalar  23:29)

யூதர்கள்  இவனுக்கு  விரோதமாய்ச்  சர்ப்பனையான  யோசனை  செய்கிறார்களென்று  எனக்குத்  தெரியவந்தபோது,  உடனே  இவனை  உம்மிடத்திற்கு  அனுப்பினேன்;  குற்றஞ்சாட்டுகிறவர்களும்  இவனுக்கு  விரோதமாய்ச்  சொல்லுகிற  காரியங்களை  உமக்கு  முன்பாக  வந்து  சொல்லும்படி  அவர்களுக்குக்  கட்டளையிட்டேன்.  சுகமாயிருப்பீராக,  என்றெழுதினான்.  (அப்போஸ்தலர்  23:30)

yootharga'l  ivanukku  viroathamaaych  sarppanaiyaana  yoasanai  seygi’raarga'len’ru  enakkuth  theriyavanthapoathu,  udanea  ivanai  ummidaththi’rku  anuppinean;  kut’ragnsaattugi’ravarga'lum  ivanukku  viroathamaaych  sollugi’ra  kaariyangga'lai  umakku  munbaaga  vanthu  sollumpadi  avarga'lukkuk  katta'laiyittean.  sugamaayiruppeeraaga,  en’rezhuthinaan.  (appoasthalar  23:30)

போர்ச்சேவகர்  தங்களுக்குக்  கட்டளையிட்டபடியே,  பவுலைக்  கூட்டிக்கொண்டு,  இராத்திரியிலே  அந்திப்பத்திரி  ஊருக்குப்  போய்,  (அப்போஸ்தலர்  23:31)

poarchseavagar  thangga'lukkuk  katta'laiyittapadiyea,  pavulaik  koottikko'ndu,  iraaththiriyilea  anthippaththiri  oorukkup  poay,  (appoasthalar  23:31)

மறுநாளில்  குதிரைவீரரை  அவனுடனேகூடப்  போகும்படி  அனுப்பிவிட்டு,  தாங்கள்  கோட்டைக்குத்  திரும்பினார்கள்.  (அப்போஸ்தலர்  23:32)

ma’runaa'lil  kuthiraiveerarai  avanudaneakoodap  poagumpadi  anuppivittu,  thaangga'l  koattaikkuth  thirumbinaarga'l.  (appoasthalar  23:32)

அவர்கள்  செசரியாபட்டணத்தில்  சேர்ந்து,  நிருபத்தைத்  தேசாதிபதியினிடத்தில்  கொடுத்து,  பவுலையும்  அவன்  முன்பாக  நிறுத்தினார்கள்.  (அப்போஸ்தலர்  23:33)

avarga'l  sesariyaapatta'naththil  searnthu,  nirubaththaith  theasaathibathiyinidaththil  koduththu,  pavulaiyum  avan  munbaaga  ni’ruththinaarga'l.  (appoasthalar  23:33)

தேசாதிபதி  அதை  வாசித்து:  எந்த  நாட்டானென்று  கேட்டு,  சிலிசியா  நாட்டானென்று  அறிந்தபோது:  (அப்போஸ்தலர்  23:34)

theasaathibathi  athai  vaasiththu:  entha  naattaanen’ru  keattu,  silisiyaa  naattaanen’ru  a’rinthapoathu:  (appoasthalar  23:34)

உன்மேல்  குற்றஞ்சாட்டுகிறவர்களும்  வந்திருக்கும்போது  உன்  காரியத்தைத்  திட்டமாய்க்  கேட்பேனென்று  சொல்லி,  ஏரோதின்  அரமனையிலே  அவனைக்  காவல்பண்ணும்படி  கட்டளையிட்டான்.  (அப்போஸ்தலர்  23:35)

unmeal  kut’ragnsaattugi’ravarga'lum  vanthirukkumpoathu  un  kaariyaththaith  thittamaayk  keadpeanen’ru  solli,  earoathin  aramanaiyilea  avanaik  kaavalpa'n'numpadi  katta'laiyittaan.  (appoasthalar  23:35)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!