Saturday, May 21, 2016

Appoasthalar 22 | அப்போஸ்தலருடைய நடபடிகள் 22 | Acts 22


சகோதரரே,  பிதாக்களே,  நான்  இப்பொழுது  உங்களுக்குச்  சொல்லப்போகிற  நியாயங்களுக்குச்  செவிகொடுப்பீர்களாக  என்றான்.  (அப்போஸ்தலர்  22:1)

sagoathararea,  pithaakka'lea,  naan  ippozhuthu  ungga'lukkuch  sollappoagi’ra  niyaayangga'lukkuch  sevikoduppeerga'laaga  en’raan.  (appoasthalar  22:1)

அவன்  எபிரெயு  பாஷையிலே  தங்களுடனே  பேசுகிறதை  அவர்கள்  கேட்டபொழுது,  அதிக  அமைதலாயிருந்தார்கள்.  அப்பொழுது  அவன்:  (அப்போஸ்தலர்  22:2)

avan  ebireyu  baashaiyilea  thangga'ludanea  peasugi’rathai  avarga'l  keattapozhuthu,  athiga  amaithalaayirunthaarga'l.  appozhuthu  avan:  (appoasthalar  22:2)

நான்  யூதன்,  சிலிசியாநாட்டிலுள்ள  தர்சுபட்டணத்திலே  பிறந்து,  இந்த  நகரத்திலே  கமாலியேலின்  பாதத்தருகே  வளர்ந்து,  முன்னோர்களுடைய  வேதப்பிரமாணத்தின்படியே  திட்டமாய்ப்  போதிக்கப்பட்டு,  இன்றையத்தினம்  நீங்களெல்லாரும்  தேவனைக்குறித்து  வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறதுபோல  நானும்  வைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.  (அப்போஸ்தலர்  22:3)

naan  yoothan,  silisiyaanaattilu'l'la  tharsupatta'naththilea  pi’ranthu,  intha  nagaraththilea  kamaaliyealin  paathaththarugea  va'larnthu,  munnoarga'ludaiya  veathappiramaa'naththinpadiyea  thittamaayp  poathikkappattu,  in’raiyaththinam  neengga'lellaarum  theavanaikku’riththu  vairaakkiyamu'l'lavarga'laayirukki’rathupoala  naanum  vairaakkiyamu'l'lavanaayirunthean.  (appoasthalar  22:3)

நான்  இந்த  மார்க்கத்தாராகிய  புருஷரையும்  ஸ்திரீகளையும்  கட்டி,  சிறைச்சாலைகளில்  ஒப்புவித்து,  மரணபரியந்தம்  துன்பப்படுத்தினேன்.  (அப்போஸ்தலர்  22:4)

naan  intha  maarkkaththaaraagiya  purusharaiyum  sthireega'laiyum  katti,  si’raichsaalaiga'lil  oppuviththu,  mara'napariyantham  thunbappaduththinean.  (appoasthalar  22:4)

அதற்குப்  பிரதான  ஆசாரியரும்  மூப்பர்  யாவரும்  சாட்சிகொடுப்பார்கள்;  அவர்கள்  கையிலே  நான்  சகோதரருக்கு  நிருபங்களை  வாங்கிக்கொண்டு,  தமஸ்குவிலிருக்கிறவர்களும்  தண்டிக்கப்படும்படிக்கு,  அவர்களைக்  கட்டி,  எருசலேமுக்குக்  கொண்டுவரும்படி  அவ்விடத்திற்குப்போனேன்.  (அப்போஸ்தலர்  22:5)

atha’rkup  pirathaana  aasaariyarum  mooppar  yaavarum  saadchikoduppaarga'l;  avarga'l  kaiyilea  naan  sagoathararukku  nirubangga'lai  vaanggikko'ndu,  thamaskuvilirukki’ravarga'lum  tha'ndikkappadumpadikku,  avarga'laik  katti,  erusaleamukkuk  ko'nduvarumpadi  avvidaththi’rkuppoanean.  (appoasthalar  22:5)

அப்படி  நான்  பிரயாணப்பட்டுத்  தமஸ்குவுக்குச்  சமீபமானபோது,  மத்தியான  வேளையிலே,  சடிதியாய்  வானத்திலிருந்து  பேரொளி  உண்டாகி,  என்னைச்சுற்றிப்  பிரகாசித்தது.  (அப்போஸ்தலர்  22:6)

appadi  naan  pirayaa'nappattuth  thamaskuvukkuch  sameebamaanapoathu,  maththiyaana  vea'laiyilea,  sadithiyaay  vaanaththilirunthu  pearo'li  u'ndaagi,  ennaichsut’rip  piragaasiththathu.  (appoasthalar  22:6)

நான்  தரையிலே  விழுந்தேன்.  அப்பொழுது:  சவுலே,  சவுலே,  நீ  என்னை  ஏன்  துன்பப்படுத்துகிறாய்  என்று  என்னுடனே  சொல்லுகிற  ஒரு  சத்தத்தைக்  கேட்டேன்.  (அப்போஸ்தலர்  22:7)

naan  tharaiyilea  vizhunthean.  appozhuthu:  savulea,  savulea,  nee  ennai  ean  thunbappaduththugi’raay  en’ru  ennudanea  sollugi’ra  oru  saththaththaik  keattean.  (appoasthalar  22:7)

அதற்கு  நான்:  ஆண்டவரே,  நீர்  யார்  என்றேன்.  அவர்:  நீ  துன்பப்படுத்துகிற  நசரேயனாகிய  இயேசு  நானே  என்றார்.  (அப்போஸ்தலர்  22:8)

atha’rku  naan:  aa'ndavarea,  neer  yaar  en’rean.  avar:  nee  thunbappaduththugi’ra  nasareayanaagiya  iyeasu  naanea  en’raar.  (appoasthalar  22:8)

என்னுடனேகூட  இருந்தவர்கள்  வெளிச்சத்தைக்  கண்டு,  பயமடைந்தார்கள்;  என்னுடனே  பேசினவருடைய  சத்தத்தையோ  அவர்கள்  கேட்கவில்லை.  (அப்போஸ்தலர்  22:9)

ennudaneakooda  irunthavarga'l  ve'lichchaththaik  ka'ndu,  bayamadainthaarga'l;  ennudanea  peasinavarudaiya  saththaththaiyoa  avarga'l  keadkavillai.  (appoasthalar  22:9)

அப்பொழுது  நான்:  ஆண்டவரே,  நான்  என்னசெய்யவேண்டும்  என்றேன்.  அதற்குக்  கர்த்தர்:  நீ  எழுந்து,  தமஸ்குவுக்குப்  போ;  நீ  செய்யும்படி  நியமிக்கப்பட்டதெல்லாம்  அங்கே  உனக்குச்  சொல்லப்படும்  என்றார்.  (அப்போஸ்தலர்  22:10)

appozhuthu  naan:  aa'ndavarea,  naan  ennaseyyavea'ndum  en’rean.  atha’rkuk  karththar:  nee  ezhunthu,  thamaskuvukkup  poa;  nee  seyyumpadi  niyamikkappattathellaam  anggea  unakkuch  sollappadum  en’raar.  (appoasthalar  22:10)

அந்த  ஒளியின்  மகிமையினாலே  நான்  பார்வையற்றுப்போனபடியினால்,  என்னோடிருந்தவர்களால்  கைலாகு  கொடுத்து  வழிநடத்தப்பட்டுத்  தமஸ்குவுக்கு  வந்தேன்.  (அப்போஸ்தலர்  22:11)

antha  o'liyin  magimaiyinaalea  naan  paarvaiyat’ruppoanapadiyinaal,  ennoadirunthavarga'laal  kailaagu  koduththu  vazhinadaththappattuth  thamaskuvukku  vanthean.  (appoasthalar  22:11)

அப்பொழுது  வேதப்பிரமாணத்தின்படியே  பக்தியுள்ளவனும்,  அங்கே  குடியிருக்கிற  சகல  யூதராலும்  நல்லவனென்று  சாட்சிபெற்றவனுமாகிய  அனனியா  என்னும்  ஒருவன்,  (அப்போஸ்தலர்  22:12)

appozhuthu  veathappiramaa'naththinpadiyea  bakthiyu'l'lavanum,  anggea  kudiyirukki’ra  sagala  yootharaalum  nallavanen’ru  saadchipet’ravanumaagiya  ananiyaa  ennum  oruvan,  (appoasthalar  22:12)

என்னிடத்தில்  வந்துநின்று:  சகோதரனாகிய  சவுலே,  பார்வையடைவாயாக  என்றான்;  அந்நேரமே  நான்  பார்வையடைந்து,  அவனை  ஏறிட்டுப்பார்த்தேன்.  (அப்போஸ்தலர்  22:13)

ennidaththil  vanthunin’ru:  sagoatharanaagiya  savulea,  paarvaiyadaivaayaaga  en’raan;  annearamea  naan  paarvaiyadainthu,  avanai  ea’rittuppaarththean.  (appoasthalar  22:13)

அப்பொழுது  அவன்:  நம்முடைய  முன்னோர்களின்  தேவனுடைய  திருவுளத்தை  நீ  அறியவும்,  நீதிபரரைத்  தரிசிக்கவும்,  அவருடைய  திருவாய்மொழியைக்  கேட்கவும்,  அவர்  உன்னை  முன்னமே  தெரிந்துகொண்டார்.  (அப்போஸ்தலர்  22:14)

appozhuthu  avan:  nammudaiya  munnoarga'lin  theavanudaiya  thiruvu'laththai  nee  a’riyavum,  neethipararaith  tharisikkavum,  avarudaiya  thiruvaaymozhiyaik  keadkavum,  avar  unnai  munnamea  therinthuko'ndaar.  (appoasthalar  22:14)

நீ  கண்டவைகளையும்  கேட்டவைகளையும்  குறித்துச்  சகல  மனுஷருக்குமுன்பாக  அவருக்குச்  சாட்சியாயிருப்பாய்.  (அப்போஸ்தலர்  22:15)

nee  ka'ndavaiga'laiyum  keattavaiga'laiyum  ku’riththuch  sagala  manusharukkumunbaaga  avarukkuch  saadchiyaayiruppaay.  (appoasthalar  22:15)

இப்பொழுது  நீ  தாமதிக்கிறதென்ன?  நீ  எழுந்து  கர்த்தருடைய  நாமத்தைத்  தொழுதுகொண்டு,  ஞானஸ்நானம்பெற்று,  உன்  பாவங்கள்  போகக்  கழுவப்படு  என்றான்.  (அப்போஸ்தலர்  22:16)

ippozhuthu  nee  thaamathikki’rathenna?  nee  ezhunthu  karththarudaiya  naamaththaith  thozhuthuko'ndu,  gnaanasnaanampet’ru,  un  paavangga'l  poagak  kazhuvappadu  en’raan.  (appoasthalar  22:16)

பின்பு  நான்  எருசலேமுக்குத்  திரும்பிவந்து,  தேவாலயத்திலே  ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில்,  ஞானதிருஷ்டியடைந்து,  அவரைத்  தரிசித்தேன்.  (அப்போஸ்தலர்  22:17)

pinbu  naan  erusaleamukkuth  thirumbivanthu,  theavaalayaththilea  jebampa'n'nikko'ndirukkaiyil,  gnaanathirushdiyadainthu,  avaraith  tharisiththean.  (appoasthalar  22:17)

அவர்  என்னை  நோக்கி:  நீ  என்னைக்குறித்துச்  சொல்லும்  சாட்சியை  இவர்கள்  ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்;  ஆதலால்  நீ  தாமதம்பண்ணாமல்  சீக்கிரமாய்  எருசலேமைவிட்டுப்  புறப்பட்டுப்போ  என்றார்.  (அப்போஸ்தலர்  22:18)

avar  ennai  noakki:  nee  ennaikku’riththuch  sollum  saadchiyai  ivarga'l  eat’rukko'l'lamaattaarga'l;  aathalaal  nee  thaamathampa'n'naamal  seekkiramaay  erusaleamaivittup  pu’rappattuppoa  en’raar.  (appoasthalar  22:18)

அதற்கு  நான்:  ஆண்டவரே,  உம்மிடத்தில்  விசுவாசமாயிருக்கிறவர்களை  நான்  காவலில்  வைத்து  ஜெபஆலயங்களிலே  அடித்ததையும்,  (அப்போஸ்தலர்  22:19)

atha’rku  naan:  aa'ndavarea,  ummidaththil  visuvaasamaayirukki’ravarga'lai  naan  kaavalil  vaiththu  jebaaalayangga'lilea  adiththathaiyum,  (appoasthalar  22:19)

உம்முடைய  சாட்சியாகிய  ஸ்தேவானுடைய  இரத்தம்  சிந்தப்படுகிறபோது,  நானும்  அருகே  நின்று,  அவனைக்  கொலைசெய்வதற்குச்  சம்மதித்து,  அவனைக்  கொலைசெய்தவர்களின்  வஸ்திரங்களைக்  காத்துக்கொண்டிருந்ததையும்,  இவர்கள்  அறிந்திருக்கிறார்களே  என்றேன்.  (அப்போஸ்தலர்  22:20)

ummudaiya  saadchiyaagiya  stheavaanudaiya  iraththam  sinthappadugi’rapoathu,  naanum  arugea  nin’ru,  avanaik  kolaiseyvatha’rkuch  sammathiththu,  avanaik  kolaiseythavarga'lin  vasthirangga'laik  kaaththukko'ndirunthathaiyum,  ivarga'l  a’rinthirukki’raarga'lea  en’rean.  (appoasthalar  22:20)

அதற்கு  அவர்:  நீ  போ,  நான்  உன்னைத்  தூரமாய்ப்  புறஜாதிகளிடத்திலே  அனுப்புவேன்  என்று  சொன்னார்  என்றான்.  (அப்போஸ்தலர்  22:21)

atha’rku  avar:  nee  poa,  naan  unnaith  thooramaayp  pu’rajaathiga'lidaththilea  anuppuvean  en’ru  sonnaar  en’raan.  (appoasthalar  22:21)

இந்த  வார்த்தைவரைக்கும்  அவனுக்குச்  செவிகொடுத்தார்கள்.  பின்பு:  இப்படிப்பட்டவனைப்  பூமியிலிருந்து  அகற்றவேண்டும்;  இவன்  உயிரோடிருக்கிறது  நியாயமல்லவென்று  மிகுந்த  சத்தமிட்டுச்  சொன்னார்கள்.  (அப்போஸ்தலர்  22:22)

intha  vaarththaivaraikkum  avanukkuch  sevikoduththaarga'l.  pinbu:  ippadippattavanaip  boomiyilirunthu  agat’ravea'ndum;  ivan  uyiroadirukki’rathu  niyaayamallaven’ru  miguntha  saththamittuch  sonnaarga'l.  (appoasthalar  22:22)

இவ்விதமாய்  அவர்கள்  கூக்குரலிட்டுத்  தங்கள்  மேல்வஸ்திரங்களை  எறிந்துவிட்டு,  ஆகாயத்திலே  புழுதியைத்  தூற்றிக்கொண்டிருக்கையில்,  (அப்போஸ்தலர்  22:23)

ivvithamaay  avarga'l  kookkuralittuth  thangga'l  mealvasthirangga'lai  e’rinthuvittu,  aagaayaththilea  puzhuthiyaith  thoot’rikko'ndirukkaiyil,  (appoasthalar  22:23)

சேனாபதி  அவனைக்  கோட்டைக்குள்ளே  கொண்டுவரும்படி  கட்டளையிட்டு,  அவர்கள்  அவனுக்கு  விரோதமாய்  இப்படிக்  கூக்குரலிட்ட  முகாந்தரத்தை  அறியும்படிக்கு  அவனைச்  சவுக்கால்  அடித்து  விசாரிக்கச்  சொன்னான்.  (அப்போஸ்தலர்  22:24)

seanaabathi  avanaik  koattaikku'l'lea  ko'nduvarumpadi  katta'laiyittu,  avarga'l  avanukku  viroathamaay  ippadik  kookkuralitta  mugaantharaththai  a’riyumpadikku  avanaich  savukkaal  adiththu  visaarikkach  sonnaan.  (appoasthalar  22:24)

அந்தப்படி  அவர்கள்  அவனை  வாரினால்  அழுந்தக்  கட்டும்போது,  பவுல்  சமீபமாய்  நின்ற  நூற்றுக்கு  அதிபதியை  நோக்கி:  ரோமனும்  நியாயம்  விசாரிக்கப்படாதவனுமாயிருக்கிற  மனுஷனை  அடிக்கிறது  உங்களுக்கு  நியாயமா  என்றான்.  (அப்போஸ்தலர்  22:25)

anthappadi  avarga'l  avanai  vaarinaal  azhunthak  kattumpoathu,  pavul  sameebamaay  nin’ra  noot’rukku  athibathiyai  noakki:  roamanum  niyaayam  visaarikkappadaathavanumaayirukki’ra  manushanai  adikki’rathu  ungga'lukku  niyaayamaa  en’raan.  (appoasthalar  22:25)

நூற்றுக்கு  அதிபதி  அதைக்கேட்டு,  சேனாபதியினிடத்திற்குப்  போய்,  அதை  அறிவித்து:  நீர்  செய்யப்போகிறதைக்குறித்து  எச்சரிக்கையாயிரும்;  இந்த  மனுஷன்  ரோமன்  என்றான்.  (அப்போஸ்தலர்  22:26)

noot’rukku  athibathi  athaikkeattu,  seanaabathiyinidaththi’rkup  poay,  athai  a’riviththu:  neer  seyyappoagi’rathaikku’riththu  echcharikkaiyaayirum;  intha  manushan  roaman  en’raan.  (appoasthalar  22:26)

அப்பொழுது  சேனாபதி  பவுலினிடத்தில்  வந்து:  நீ  ரோமனா?  எனக்குச்  சொல்  என்றான்.  அதற்கு  அவன்:  நான்  ரோமன்தான்  என்றான்.  (அப்போஸ்தலர்  22:27)

appozhuthu  seanaabathi  pavulinidaththil  vanthu:  nee  roamanaa?  enakkuch  sol  en’raan.  atha’rku  avan:  naan  roamanthaan  en’raan.  (appoasthalar  22:27)

சேனாபதி  பிரதியுத்தரமாக:  நான்  மிகுந்த  திரவியத்தினாலே  இந்தச்  சிலாக்கியத்தைச்  சம்பாதித்தேன்  என்றான்.  அதற்குப்  பவுல்:  நானோ  இந்தச்  சிலாக்கியத்திற்குரியவனாகப்  பிறந்தேன்  என்றான்.  (அப்போஸ்தலர்  22:28)

seanaabathi  pirathiyuththaramaaga:  naan  miguntha  thiraviyaththinaalea  inthach  silaakkiyaththaich  sambaathiththean  en’raan.  atha’rkup  pavul:  naanoa  inthach  silaakkiyaththi’rkuriyavanaagap  pi’ranthean  en’raan.  (appoasthalar  22:28)

அவனை  அடித்து  விசாரிக்கும்படி  எத்தனமாயிருந்தவர்கள்  உடனே  அவனை  விட்டுவிட்டார்கள்.  சேனாபதி  அவன்  ரோமனென்று  அறிந்து,  அவனைக்  கட்டுவித்ததற்காகப்  பயந்தான்.  (அப்போஸ்தலர்  22:29)

avanai  adiththu  visaarikkumpadi  eththanamaayirunthavarga'l  udanea  avanai  vittuvittaarga'l.  seanaabathi  avan  roamanen’ru  a’rinthu,  avanaik  kattuviththatha’rkaagap  bayanthaan.  (appoasthalar  22:29)

பவுலின்மேல்  யூதராலே  ஏற்படுத்தப்பட்ட  குற்றம்  இன்னதென்று  நிச்சயமாய்  அறிய  விரும்பி,  அவன்  மறுநாளிலே  அவனைக்  கட்டவிழ்த்து,  பிரதான  ஆசாரியரையும்  ஆலோசனைச்  சங்கத்தார்  அனைவரையும்  கூடிவரும்படி  கட்டளையிட்டு,  அவனைக்  கூட்டிக்கொண்டுபோய்,  அவர்களுக்கு  முன்பாக  நிறுத்தினான்.  (அப்போஸ்தலர்  22:30)

pavulinmeal  yootharaalea  ea’rpaduththappatta  kut’ram  innathen’ru  nichchayamaay  a’riya  virumbi,  avan  ma’runaa'lilea  avanaik  kattavizhththu,  pirathaana  aasaariyaraiyum  aaloasanaich  sanggaththaar  anaivaraiyum  koodivarumpadi  katta'laiyittu,  avanaik  koottikko'ndupoay,  avarga'lukku  munbaaga  ni’ruththinaan.  (appoasthalar  22:30)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!